வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பேராசிரியர் சி.இலக்குவனார், எல்.முருகராசு, தினமலர்

 

பேராசிரியர் சி.இலக்குவனார், தினமலர்



latest tamil news




பேராசிரியர் சி.இலக்குவனார்



தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.

இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் – இரத்தினம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் முதுகலை பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்தேர்ந்தவர்.

தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அண்ணாதுரை முதல் அமைச்சராக போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.

எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள்.
திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம் – தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும்.
தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களை எழுதியுள்ளார்.

சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியர், திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.தமிழாசிரியராக, விரிவுரையா ளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர்.


latest tamil news

திருவாரூரில் தமிழாசிரியராய் பணி யாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி .தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கருணாநதி குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழு(அகாடமிக் கவுன்சில் ) உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர்க்குழு செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் இருமுறை சிறைவாசத்தை அனுபவித்தவர்.

தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத் திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக் கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.

இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேட்டில் நடுநிலைப் பள்ளி உள்ளது.

‘தமிழகத்தின் உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை, தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட இலக்குவனார் இறந்த நாள் இன்று. (3.9.1973)

தமிழர் வரலாற்றிலும் , வாழ்விலும் என்று வாழ்வார்.

-எல்.முருகராசு.

 

அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598

501) முச்சக்கர வண்டி Tricycle
502) முடி திருத்தல் Haircut
503) முடிமூடிக் குரங்கு Gorilla
504) முடியிலித் துன்னெலி Naked Mole Rat
505) முட்டை அடுக்கடை Slamwich
506) முதலை Gavial
507) முதுகுப் பை Backpack
508) முதுகுப் பை Backpack
509) முப்பருவ அறை Three Season Room
510) மும்மடலி Trilobite
511) மும்மடிச் சோளம் Nachos
512) முரட்டுத் தோலி Pachyderm
513) முரல் ஒலி Buzzing sound
514) முரல் பறவை Hummingbird
515) முள்ளி Cardoon
516) முற்ற அரங்கம் Patio Room
517) முற்ற நாற்காலி Patio Chair
518) முன்பள்ளி Pre school
519) மூ மா Dinosaur
520) மூக்கொழுகல் Snot
521) மூச்சுத்தடை Suffocate
522) மூடுந்து Van
523) மூட்டை முடிச்சு Bag and baggage
524) மூன்றாம்கண் Cyborg Eye
525) மெய்ம்மைக் காட்சி Reality Show
526) மேசை வரிப்பந்தாட்டம் Ping Pong
527) மேசை விளக்கு Table Lamp
528) மேடைக் கோற்பந்தாட்டம் Pool Game
529) மை எழுதி Pen
530) யாழி Guitar
531) வகிர் கரடி Raccoon
532) வகிர் கரடி Raccoon
533) வங்கி Ypokatastim
534) வடி குட்டை Cesspool
535) வடிகால் Drain
536) வட்ட இரம்பம் Circular Saw
537) வட்டகை / உருளிப்பட்டை Tire
538) வட்டை மீன் Crappie
539) வருடு நாற்காலி Massage Chair
540) வரை சுதை Crayon
541) வரை தடி Ruler
542) வலவன் Pilot
543) வல்லமை படைஞர் Power Ranger
544) வல்லுந்து Jeep
545) வழங்கூர்தி Delicery Vehicle
546) வழி வழி Heres
547) வளி வாட்டி Gas Grill
548) வளிப்பதனி Air Conditioner
549) வளிம உருண்டை(விளக்கு) Plasma Globe
550) வளிம வளைய (விளக்கு) Plasma Orb
551) வளிம விளக்கு Plasma Light
552) வளிமக் குழல் (விளக்கு) Plasma Tube
553) வளிமக் கவிகை (விளக்கு) Plasma Dome
554) வளிமக் கோள (விளக்கு) plasma sphere
555) வளிமப் பந்து (விளக்கு) Plasma Ball
556) வளிமம் Gas
557) வளை தித்தி Candycane
558) வளை வெதுப்பி Bagel
559) வளைகோலாட்டம் Hockey
560) வாடகையூர்தி Taxi
561) வாட்டு கலன் Toaster
562) வாய்ப்பு நல அறை Convenience Room
563) வாருகோல் Rake
564) வார்ப்பட்டை Belt
565) வாலிலி chimpanzee
566) வானூர்தி / பறத்தூர்தி Flying Vehicle
567) வானூர்திக் குழு Aerosynodo
568) வான்முகம் Aerodrom
569) விக்கல் Hiccup
570) விசிறி Fan
571) விசைப்படகு , இயந்திரப்படகு, வேகப்படகு Motorboat/Speedboat/Powerboat
572) விண் ஓடம் Spaceship
573) விண்ணுடை Spacesuit
574) வியப்புக் குறி Exclamation Point
575) விரலளவுப் பொரியல் Finger chips
576) விரல் முறிப்பு / நொடிப்பு / சொடுக்கு Snapping
577) விரைவு உணா fast food
578) விரைவு மானி Speedo metre
579) விலங்குத் தோல் / அதள் Leather
580) விழியாடி Contact Lens
581) விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி/ வி.ப.ஊ. Sport utility vehicle/SUV
582) விறல்மிகு சிறுமியர் Powerpuffgirls
583) விற்பனை Vend
584) வீர தீரப்படம் Adventure Film
585) வெண்தேநீர் White tea
586) வெதிர்ப்பு Tourette syndrome
587) வெதுப்பம் / வெதுப்பி Bread
588) வெந்நீர்க்கலன் Water Heater
589) வெந்நீர்த் தொட்டி Hot Tub
590) வெப்ப மானி Thermometer
591) வெப்பச் சீராக்கி Thermostat
592) வெளவாலன் Batman
593) வெளி உயிரி Ultimate Alien
594) வெளி சூடேற்றி space heater
595) வெள்ளி Venus
596) வெள்ளெலி Hamster
597) வெள்ளையம் Nickel
598) வெறிநாய்க்கடி நோய் Rabies

இலக்குவனார் திருவள்ளுவன்

 

வியாழன், 3 செப்டம்பர், 2020

குவிகம் இணையவழி அளவளாவல் 06/09/2020: “என் ‘சிறு’கதை”

 அகரமுதல

ஆவணி 21, 2051 / ஞாயிற்றுக் கிழமை / 06.9.2020

மாலை 6.30

குவிகம் அளவளாவல்

‘இலலித கானங்கள்’  புத்தக அறிமுகம்:  இரேவதி சிரீதரன்

கூட்ட எண் : 837 8350 2060

கடவுக்குறி : 234074

 

சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள், அமீரகம்: நகைச்சுவை நிகழ்வு 04.09.2020

 அகரமுதல


ஆவணி 19, 2051 / 04-09-2020, வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 5:00 – 6:30  (அமீரகம்)

         மாலை    6:30 – 8:00 (இந்தியா)

சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரகம்:

நகைச்சுவை நிகழ்வு

சிறப்பு உரை:

நகைச்சுவைப்  பேரரசு மதிப்புறு முனைவர்  இராமநாதன்

ஆனந்தச் சிரிப்பு .. ஆரோக்கிய வாழ்வு

கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவு செய்து கொள்ளவும்.

https://us02web.zoom.us/webinar/register/WN_D25Xd0N_T66ipmqChcHE9A

குறியீடு : Webinar ID: 874 5392 9346

இது ஒரு நகைச்சவை நிகழ்ச்சி, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திf; கொள்ளுங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த நிகழ்ச்சியைத் தெரியப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்..

– சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்  அமைப்பு  /
JMC Alumni UAE Chapter

புதன், 2 செப்டம்பர், 2020

உ.த.ஆ.நிறுவனத்தின் முந்நிகழ்வுகள் : 02 – 04.09.20

 


உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சித்துறை ஆகியனவே கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தும்பொழுது தமிழின் நிலை குறித்துக் கவலைப்படாமல் வேறு என்ன செய்வது?

அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500

401) பனிப்புயல் Blizzard
402) பனிமாசு / மூடுபனி Mist
403) பனியேடு/பனிக்கூழ் Icecream
404) பனியேட்டு வண்டி Icecream truck
405) பாசிகம் Chlorine
406) பாய்மரப் படகு Sailboat
407) பார ஊர்தி fork hoist
408) பார வண்டி forklift truck
409) பாலடை உறை Quesadilla
410) பாலேடு / குழைமம் Cream
411) பால் கலம் Milk jug
412) பால் பெட்டி Milk carton
413) பால் வீதி Galaxy
414) பாவனம் Meme
415) பாறை உலவி Europa
416) பாற்கட்டி அராவி Cheese Grater
417) பி.ஒ.நி :பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனம் BBC:British Broadcasting Corporation
418) பிசை இனியம் Doughnut / Donut
419) பிரமகற்ப எண் 1,00,00,00,00,00,00,00,00,00,000
420) பிறர் சார்பில் வாழ்பவர், நாடோடி Hobo
421) பீற்றுக் குழல் Squirt Gun
422) புத்தாட்டர் Newbie
423) புல் வெட்டி Lawn mower
424) புற வெளி Outer space
425) பூச்சாண்டி Bogeyman
426) பெருங்குத்துப் பை/ மற்பை Heavy Bag /Punching Bag
427) பெருஞ் சீட்டாட்டம் Grand Slamwich
428) பெருநாய் Bulldog
429) பெருமங்கல மெழுகு Birthday Cake Candle
430) பெரும் பறவை Bigbird
431) பெருவிருப்பக் கட்டாய மனப்பிறழ்வு obsessive compulsive disorder
432) பெற்றிடம் Store checkout
433) பொதியுந்து Pickup Truck
434) பொதுக் கழிப்பிடம் Publicrestroom
435) பொய்ப் பல் Denture
436) பொய்ப் பல் Denture
437) பொழுது போக்கு மையம் Entertainment Center
438) பேணல் கரடி Care Bear
439) பேரடியன் > பேரடிக் குரங்கன் Bigfoot
440) பேராயிரம் Million
441) பேருந்து Bus
442) பேருந்து Bus
443) போதை மயக்கத்தில் வண்டி இயக்குதல் OWI:Operating while intoxicated
444) போதை மயக்கத்தின் பொழுது வண்டி ஓட்டுதல் DWI: driving while intoxicated
445) போதைத் தாக்கத்தில் ஓட்டுதல் DUI : driving under the influence of drugs or alcohol
446) போதைத்தாக்கத்தில் வண்டி இயக்குதல் OVI: operating [a] vehicle under the influence of alcohol or drugs
447) பைம்மா Kangaroo
448) பையெலி Beaver
449) ம(திரையிட மறுப்பு.) R(Refusal to certify).
450) மகிழுந்து Car
451) மஞ்சள் தேநீர் Turmeric Tea
452) மடி கணிணி Laptop
453) மட்டக் குதிரை Pony
454) மத எதிர் கொள்கை Heresy
455) மதியிறுக்கம் Autistic Spectrum Disorder
456) மதுவக ஊழியர் Bartender
457) மந்திர விரிப்பு Magic Carpet
458) மரவட்டை Millipede(wood louse)
459) மருந்தூசி Injection Needle , Hypodermic Needle
460) மலங்குச் சிறுமி Eel Girl
461) மலரி Blossom
462) மழிப்பி Razor
463) மனஉளைச்சல் Frustration
464) மனித உருவேற்றப்பட்ட நாய் Anthropomorphic Dog
465) மனையாள் கவர்வு Wife Being Stoled
466) மனைவணிக முகவர் Estate Agent
467) மாச்சுருள் Macaroni
468) மாத்தேறல் / தோப்பி beer
469) மாந்திரன் Cyborg
470) மாழை Metal
471) மாழை உணர்த்தி Metal detector
472) மாற்றத்தக்க உந்து Convertible car
473) மாற்றுப்பாலினர் Transsexual/Transgender
474) மிடா Casket
475) மிதி இழுவை Cycle Rickshaw
476) மிதி படகு Boatercycle
477) மிதிகை /விசையுருளி Scooter
478) மிதியம் Motorcycle/Motorbike
479) மிதியூர்தி Auto Rickshaw
480) மின் கட்டுப்பாடு Brownout
481) மின் கலப்பி Electric mixer
482) மின் சமைப்பி Crockpot
483) மின் தட்டளை Electrical outlet/ receptacle/ socket
484) மின் தொடர் Power Lines
485) மின் யாழி Electric guitar
486) மின்மாற்றிகள் Transformers
487) மின்னம்மி Electric Mixer Grinder
488) மின்னாக்ககம் Power plant
489) மின்னாக்கி Electric generator
490) மின்னியல் நாட்டிய இசை EDM / Electronic dance music
491) மின்னுந்து Electric car
492) மின்னேணி Elevator
493) மீ நாயகன் Super hero
494) மீ மாந்தன் Superman
495) மீட்பு ஊர்தி Recovery vehicle
496) மீட்புந்து Wrecker
497) மீளொலி யாழி Resonator guitar
498) மீன் தொட்டி Fish Tank
499) முகப்பு விளக்கு Head light
500) முகவாய்க்கட்டை Chin / Jaw

 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400

 

301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder
302) தாள் பிடிப்பி Paper Clip
303) தாள் வானூர்தி/ தாள் அம்பு Paper Plane, Paper Aeroplane( Uk), Paper Airplane (Us), Paper Glider, Paper Dart
304) தானி இசைப்பெட்டி Jukebox
305) தானியங்கி உந்து Robotic Car
306) திசைகாட்டி Compass
307) திணைப்படம் Map
308) தித்தியன் (>தித்தி மனிதன்) Candyman
309) திரி இடியப்பம் Spaghetto
310) திருட்டு எச்சரிக்கை யொலி burglar alarm
311) திருட்டுத் தடுப்பொலி Store Exit Antitheft Alarm
312) திருமண உரையர் Wedding Speakers
313) திருமறை Bible
314) திரைக்கூடங்கள் Studio
315) திறப்பி Can Opener/ Tin Opener
316) திறவுகோல் Key
317) தீ அணைப்பு வண்டி Fire engine
318) தீங்கில்லாக் கழலைகள் Benign Tumours
319) தீயணைப்புத் தெளிப்பி Fire Sprinkler
320) துணி உலர்த்தி Clothes Dryer
321) துணிமணி அடுக்கம் Clothing Rack
322) துமி ஓவியம் Spray Painting
323) துன்பியல் திரைப்படம் Disaster Film
324) துன்பியல் திரைப்படம் Disaster Film
325) துன்னெலி great mole rat
326) தூக்கம் / குறட்டை Zzzz
327) தூக்கி ஊர்தி Forklift
328) தூக்கு வண்டி Bucket Truck, Boom Truck
329) தூசுறிஞ்சி Vacuum Cleaner
330) தூய்மையாக்கிகள் Cleaning Agents
331) தூறல்தாரை Shower
332) தொடரி Train
333) தொடுகறிகள் Dishes
334) தொற்றல் Contagious
335) தேய்ப்பிச் சூடேற்றி Iron box heater
336) தேய்ப்புத்தூள் Dishwasher Detergent
337) தோட்ட அறை Garden Room
338) தோட்டக் காப்பகம் Garden Conservatory
339) தோணி Ferry
340) தோறணை Posh
341) தோறணையர் Posh Peopl
342) தோல் வெடிப்பு நோய் Pellagra
343) நகரக அகராதி Urban Dictionary
344) நகர் படி
345) நகர்த்தி computer mouse
346) நடைச்சட்டம் Rollate
347) நடைபாதை / பக்கப் பாதை Sidewalk
348) நடைபேசி Walkie Talkie
349) நம் ஒளியலை You Tube
350) நன்றி தெரிவித்தல் நாள் Thanksgiving day
351) நன்னீர் மீன் Trout
352) நாடா Ribbon
353) நாடாப் புழு Tapeworm
354) நிகழமைவுக் காட்சி Reality Television Show
355) நிகழ்மை Probability
356) நிரப்ப உணவு Taco
357) நிலத்தடித் தொடரி / சுரங்கப்பாதை Subway
358) நிலாச்சோறு Potluck
359) நிறுத்தறை Parking Garage
360) நிறுத்திடம் Parking Lot/Car Park/Car Lot
361) நீர்த்துள்ளுந்து Water Scooter
362) நீர்நாய் Otter
363) நீலப்பறவை Bluebird
364) நீளுருளைப் பொரியல் French fries
365) நெகிழிப் பை Plastic bag
366) நெடுஞ்சாலைகள் highways and expressways
367) நெற்று அவரை Vanilla
368) நொப்பு audio
369) நொறுமா Biscuits/cookies
370) நேர்ச்சி Accident
371) நேர்ப்புப்பக்கம் Random page

372) நொறுவை(த் தீனி) Snacks
373) பசுந்தேநீர் Green tea
374) படர்வு Creep
375) படிப் பொறி Photocopier
376) பண்டகப் பெற்றிடம் Store Checkout
377) பண்டி station Wagon
378) பண்ணை farm
379) பதினகவை Teenage
380) பதினகவையர் Teenager
381) பதுமம் 10,00,00,00,00,00,000
382) பந்தய ஊர்தி Race car
383) பந்தய ஊர்தி Race car
384) பரத எண் 10,00,00,00,00,00,00,00,00,00,00,000
385) பரவிசை Pop Music
386) பரிசுப் பொதி Gift Parcel
387) பலகணி Window
388) பலதலை கொடூரி many headed monster(< Latin mōnstrum)
389) பல் துரப்பணம் Dental Drill
390) பழுதுகால வண்டி Breakdown truck
391) பழைய உந்து old car
392) பளுவை ஊர்தி fork truck
393) பள்ளிப்பேருந்து School bus
394) பறக்கும் உந்து Flying car
395) பறக்கும் பூச்சி flying insect
396) பறத்தூர்தி Flying vehicle
397) பறிதல் farting
398) பற்றவைப்பி Lighter
399) பனிச் சறுக்கு வண்டி Sledge/sleigh
400) பனிநில ஊர்தி Snowmobile

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300

201) குழி யாட்ட ஊர்தி Golf Cart
202) குளியலறை வடிகுழி/ குழிசி > குளியல் குழிசி Bathroom Sink
203) குளிர்காலத் தோட்டம் Winter Garden
204) குளிர்ப்பி Air conditioner
205) குளுமைக் கண்ணாடி Cooling Glass
206) குறளன்/குறளி Midgets
207) குறிக்கோல் Marker
208) குறிப்பலகை Dartboard
209) குறும்பி Earwax/Cerumen
210) குறை வுணா Junk Food
211) குறைத் துடிப்பு நோய் Bradycardia
212) கூம்பு தித்தி Candycorn
213) கொட்டு வண்டி Dump Truck
214) கொதிசாறு Soup
215) கொத்திறைச்சி Sausage
216) கேட்புதவிப்பொறி(கேட்பி) Hearingaid
217) கேளிக்கைப் பூங்கா Amusement park
218) கேளிக்கைப் பூங்கா Amusement park
219) கோளுதிரி Asteroid
220) கை உலர்த்தி Hand Dryer
221) கை விலங்கு Handcuff
222) கை விளக்கு Torch Light
223) கைக் கணிணி Tablet Computer
224) சகடி Shopping Cart
225) சக்கரக் கைவண்டி Wheelbarrow
226) சங்கஎண் 1,00,00,00,00,00,00,000
227) சப்பை வட்டை Flat tire
228) சமனி Bulldozer
229) சமையல் மேசை Kitchen Table
230) சம்மட்டி Hammer
231) சரடு அல்லது கயிறு/இழை String
232) சலவைத்தூள் Laundry Detergent
233) சலவைப் பொறி Washing Machine
234) சறுக்கு உருளை Rollerskate
235) சறுக்குமிதி Skateboard
236) சாக்கடை நீர் Sewer Water
237) சாக்கடைப் புழை Manhole
238) சாணக்குவியல் Cock
239) சாலப்பள்ளிப்பேருந்து The Magic School Bus
240) சாலை கடக்குமிடம்/குறுக்கு நடைபாதை Crosswalk
241) சிதை பொருள் Decaying Matter
242) சிப்பம் /பொதிவு Pack
243) சிலந்தியன் Spiderman
244) சிறு சுமையூர்தி Jitney
245) சிறு பார வண்டி Semi truck
246) சிறுமலை Little Rock
247) சிறுமை Junk
248) சீமை ஆல் Oak Tree
249) சுட்டுரை Twitter
250) சுமை Luggage
251) சுமை ஏற்றி Lift Truck
252) சுருங்கை Tunnel
253) சுவரொட்டி Wallpaper
254) சுவை நீர் Syrup
255) சுழல் விளக்கு/சுழல்வொளிர்வு Strobe Light
256) சுழற் கதவு Revolving Door
257) சூடேற்றி Heater
258) சூட்டடுப்பு Oven
259) சூரல் Fern
260) சூரியக் குடும்பம் Solar System
261) சூரியக்கொட்டாரம் Sun Porch
262) சூரியமாடம் Solarium
263) செஞ்சிறுமரம் Dogwood < dagwood)tree
264) செஞ்சுருள் நொறுவை Red Spicy Cheetos
265) செந்தசைக்கனி Raspberry
266) செந்நெல்லி Cranberry
267) செப்பு, வெண்கலம் Copper And Bronze
268) செம்புற்றுப் பழம் Strawberry
269) செம்மரம் Redwood
270) செம்மூக்குக் கலைமான் / செம்மூக்கி Red Nosed Reindeer
271) செவி ஒலிப்பி Headphone
272) செவிச்செருகி Earplug
273) செவ்வணில் Chipmunk
274) செவ்வண்மி Phobos
275) செவ்விசை யாழி Classical guitar
276) செவ்வை Correctness
277) செழுமிசை யாழி Folk guitar
278) சேண்மக் கோள் Neptune
279) சேண்மியம் Pluto
280) சேலாப்பழம் Cherry
281) சோளப் பொறிப்பி Popcorn Popper
282) சோளம் corn
283) தசைக்கனி Berry
284) தடைப்பி Brake
285) தட்டிசை Hip Hop
286) தண்கலன் Refrigerator
287) தண்ணீர்ப்பூசணி Watermelon
288) தந்தையர் நாள் Father’s Day
289) தலைக்கவசம் Helmet
290) தவிட்டி மா Brownie
291) தளம் சூடேற்றி Space Heater
292) தள்ளாட்ட நடை Toddle
293) தள்ளாட்டத்தில் வண்டி ஓட்டுதல் DWI Driving while impaired
294) தள்ளுபெட்டி Trolley Suitcase
295) தனிப்பயன் தோணி Personal Watercraft/PWC,
296) தனிப்பாதை drive way or drive in
297) தனியறை Florida Room
298) தன்னெடுப்பு விருந்து Buffet
299) தாரை வானூர்தி Jet Aircraft
300) தாவு நடைக்கோல் Kolon

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

அன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


ன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200

101) ஒடுக்கப்படுதல் Repression
102) ஒட்டி Sticker
103) ஒட்டுயிரி Parasite
104) ஒதுக்கறை Closet
105) ஒப்பனை அறை Toilet Room
106) ஒப்பனை அறை Toilet Room
107) ஒருக்கம் Sameness
108) ஒலிப்பிக் கடிகாரம் Alarm Clock
109) ஒலிப்பிக் கடிகாரம் Alarm Clock
110) ஒல்லியன் Slenderman
111) ஒவ்வாமை Allergy
112) ஒவ்வாமை குறுமி Dwarf planet Eris
113) ஒளி யூடாப் பொருள் Opaque Object
114) ஒளி விலகல்/கதிர்ச்சிதர்வு Refraction
115) ஒளியூடிப் பொருள் Transparent object
116) ஒளிர் விளக்கு Flashlight
117) ஒற்றைக் கொம்பன் Unicorn
118) ஓங்கில் / கடற்பன்றி Dolphin
119) ஓடு Tile
120) ஓநாய் மனிதன் Werewolve
121) ஓய்வறை Rest Room
122) கசகசம் Opio
123) கடமான் Moose
124) கடல் வானூர்தி Seaplane
125) கடற்கோழி Penguin
126) கடனட்டை Credit Card
127) கடுகதி High Speed
128) கடை Obsovare
129) கட்டுகுழிக் குழாய் Sump Pump
130) கணக்கி Calculator
131) கணப்பு Fireplace
132) கணிணி விசைப்பலகை Computer Keyboard
133) கண்காணி Episcopus
134) கதிரவன் மாடம் Sun Parlor
135) கதிராடி sun glass
136) கதிரொளிக் கூரை Sunroof
137) கதிரொளிக் கூரை Sunroof
138) கபி Ape
139) கராஅம் Alligator
140) கரி அடுப்பு வாட்டி Charcoal Grill
141) கரிக்கோல் Pencil
142) கரு விளக்கு Black Light
143) கருங்குழி Black Hole
144) கருந்தேநீர் Black tea
145) கரும்பறவை Blackbird
146) கருவாய் துழாவுதல் cunnilingus
147) கலப்பி Blender
148) கலப்பிசை Blues Music
149) கலவை வண்டி Cement Truck
150) கலன் வண்டி Tank Truck
151) கல்யானை Rhinoceros
152) கவை Busy
153) கழுவு நீர்மம் Dishwashing Liquid
154) கழுவு பொறி Pressure Washer
155) களை வெட்டி Weed Eater
156) கறி அப்பம் Hamburger
157) கறித்துண்டம் Steak
158) கற்ப எண் Trillion
159) கற்பனைத் தீவிற்கான சண்டை BFDI: Battle for Dream Island
160) கற்பித உயிரி Cryptid
161) கனமாழை இசை Heavy Metal music
162) காசாளர் Cashier
163) காணாட்டம் Video Game
164) கார நறுமண உணவு Spices And Spicy Food
165) காரச்சோமாரி Hot Dog
166) காலணி Papoutsi
167) காலணிப் பெட்டி Shoebox
168) காலுறை Stockings
169) கால் வருடி Foot Massager
170) காவல் ஊர்தி Police Car
171) காழநீராக்கி Coffee Maker
172) காழநீர் Coffee
173) காழ் அரவை Coffee Grinder
174) காற்று ventus
175) காற்று ஒலி்ப்பான் Air Horn
176) காற்றுப் பை Air Bag
177) கிச்சலிப் பழம் Orange
178) கிச்சிலிப் பழச் சாறு Orange Juice
179) கிண்ண இன்மா Cupcake
180) கிண்ண வெதுப்பம் Muffin
181) கிண்ணி Buttercup
182) குச்சிப் பண்டம் Lollipop
183) குடித்து விட்டு ஓட்டுதல் Drink Driving
184) குடிப்பிக் கலன் Soda Can
185) குடும்ப மரம் Family Tree
186) குடும்பத்தடம் Family Echo
187) குண்டு Bullet
188) குதநோய் Rectal Disease
189) குப்பி Bottle
190) குப்பை Garbage
191) குப்பை அகற்றி garbage disposal
192) குப்பை முறம் Dustpan
193) குப்பை வண்டி garbage truck
194) குப்பை வாளி Trash Can
195) குப்பை வைப்பு மனநிலை Compulsive Hoarding Disorder
196) குப்பைத் தொட்டி Dumpster
197) குமளிச் சாறு / சீமை இலந்தைச் சாறு Apple Juice
198) குமிழி Bubbles
199) குமிழ் விளக்கு Lightbulb
200) குழி அப்பம் Waffle

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்