சனி, 3 செப்டம்பர், 2011


article about kalaignar stand on mercy petition: எல்லாப் புகழும் உங்களுக்கே!


பதவியில் இருக்கும் பொழுது  இந்தியனாகவும் இல்லாத பொழுது தமிழனாகவும் காட்டிக் கொள்வதால் ஏற்படும் நிலையே இது. எனவே, பதவி நலன்களுக்காகக் காங்கிரசிற்கு அடிமையாகும் பொழுது தமிழ், தமிழன், உரிமை, என்பனவெல்லாம் காற்றில் பறப்பது இயல்புதானே! உயர்நீதிமன்றமே புதிய விண்ணப்பத்தை வாங்கி ஆய்வு செய்ய அறிவுறுத்தியும்  விடுதலைக்குப் பரிந்துரைக்க மறுத்தவரிடம் மனுவை அனுப்புங்கள் என்று சொல்லாதது ஏன் என்பதுதான் பொருந்தாத கேள்வியாக உள்ளது. பிற அனைவரும் அறிந்ததுதான். எனினும் இதைப்படித்துக் கழக உடன் பிறப்புகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!/

எல்லாப் புகழும் உங்களுக்கே!

First Published : 03 Sep 2011 01:38:47 AM IST


11 ஆண்டுகளாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததற்கு திமுகதான் காரணம்' - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களில் நளினிக்கு மட்டும் தண்டனை குறைப்பு செய்து மற்ற மனுக்களை நிராகரிக்கலாம் என்று 2000-ம் ஆண்டில் திமுக அரசுதான் முடிவு எடுத்தது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு, அந்நாளின் முதல்வர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில்தான் இது.இந்தப் பதிலை எப்படி எடுத்துக்கொள்வது என்று நமக்குத் தெரியவில்லை. ஏன் இவ்வாறான பதில்களால் முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான கருணாநிதி தன்னைத் தானே ஏளனப் பொருளாக்கிக் கொள்கிறார் என்பது புரியவில்லை.நளினிக்குத் தண்டனை குறைப்பு செய்யப் பரிந்துரைத்த திமுக அரசு, முருகன் சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் தண்டனையைக் குறைத்திருந்தால் இத்தனை சிக்கல்கள் இருந்திருக்காதே என்று ஜெயலலிதா சொன்னால், தான் ஏன் அந்த நேரத்தில் அந்த மூன்று பேரின் மனுக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும், ஏன் நளினிக்கு மட்டும் தண்டனையைக் குறைக்கக் கேட்டுக்கொண்டோம் என்றும் விளக்கம் தர வேண்டிய முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் பதிலை தனக்கான நியாயப்படுத்தலாக மாற்றுதல் அவருக்குப் பெருமை சேர்க்காமல், மேலும் சிக்கலைத்தான் உருவாக்குகிறது. அதுமட்டுமல்ல, இன்று இந்த மூவரின் தூக்குத் தண்டனையும் 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை கிடைக்கக் காரணமும் நான்தான் என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லாமல் சொல்கிறார் கருணாநிதி.அவரது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "மத்திய அரசுக்கு அந்தக் கருணை மனுக்களை அனுப்பி வைத்ததன் காரணமாகத்தான் 11 ஆண்டுகளாக அவர்களது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார். 11 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை ஒரு காரணமாக நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் எடுத்துக்கூறி, தண்டனையை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்கள்'எல்லாப் புகழும் கருணாநிதிக்கே கிடைக்கட்டும். அதில் யாருக்கும் எந்தவித மனக்காய்ச்சலும் கிடையாது. அவரிடம் இரண்டே கேள்விகள் மட்டும் கேட்கத் தோன்றுகிறது. முதல் கேள்வி: குடியரசுத் தலைவர் போட்டிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு எதிர்ப்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த வேளையில், குடியரசுத் தலைவராகப் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளரை தமிழகத்துக்கு அழைத்து வந்து, சென்னையே அதிரும் வகையில் மாபெரும் பேரணி நடத்தியவர் அன்றைய முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்ற பிறகு, கருணை மனுவை ஏற்று தண்டனையைக் குறைக்கும்படி அன்றைய முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் சொல்லியிருந்தாலும் போதுமே! தனக்கு விழா எடுத்த திமுக தலைவர் கருணாநிதிக்குப் பெருமை சேர்க்கவாகிலும் கருணை கொண்டிருப்பாரே குடியரசுத் தலைவர். மிக எளிமையாக முடிந்திருக்க வேண்டிய விவகாரம் அல்லவா? ஏன் இதை அவர் செய்யவில்லை? இந்தப் புகழைப் பெறும் அனைத்து வாய்ப்பும் அதிகாரமும் இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?இப்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ள, இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் குடியரசுத் தலைவருக்குத்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு அல்ல. ஆகவே, இப்போதாகிலும், விழா எடுத்த நன்றிக்கடனுக்காக கருணை வழங்கும்படி குடியரசுத் தலைவரை கருணாநிதி நேரில் சந்தித்துக் கேட்கலாமே. கேட்பாரா?மத்திய அமைச்சரவையில் தனது குடும்பத்தினர் இடம்பிடிக்க, தங்களுக்கு வேண்டிய இலாகாக்கள் ஒதுக்கித் தரப்பட தள்ளாத வயதிலும் தில்லிக்குச் சென்ற முன்னாள் முதல்வர், இந்த மூன்று பேருக்கும் கருணை கேட்டுச் செல்வாரா?இரண்டாவது கேள்வி: தூக்குத் தண்டனை பெற்ற இடதுசாரித் தோழர்களில் ஒருவரான தியாகு, "தண்டனையைக் குறைக்குமாறு நீதிபதியிடம் விண்ணப்பித்தபோது, தமிழக அரசிடம் ஆளுநர் கருத்து கேட்டார். அப்போது கருணாநிதி அமைச்சரவையைக் கூட்டி தண்டனையைக் குறைக்கப் பரிந்துரைத்தார். அதன்படி எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். தூக்குத் தண்டனை பெற்ற பெண்ணாடம் புலவர் கலியபெருமாள் மகன், தனது தந்தைக்கு தண்டனை குறைப்புக்காக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஆளுநருக்கு மனு அனுப்பினார். அந்த மனுவை அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். அது குறித்து அமைச்சரவை விவாதித்து தண்டனையைக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.............என்றெல்லாம் இப்போது சொல்கிறீர்களே, நீங்கள் முதல்வராகப் பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறையாகிலும் "இப்படியொரு மனுவை ஆளுநருக்கு அனுப்புங்கள், அவர் எனக்கு அனுப்புவார், நான் பரிந்துரை செய்து தண்டனையைக் குறைக்கிறேன்' என்று ஒரு கோடி காட்டக்கூட இல்லையே, அது ஏன்? அல்லது தன்னிச்சையாக தமிழக அரசேகூட இதைப் பரிந்துரைத்திருக்கலாமே! வேலூர் மத்திய சிறையில், நிலப்பறிப்பு வழக்கில் கைதானவர்களைப் போய்ப் பார்க்கும் திமுக தலைவர்கள் இந்த மூன்று பேரையும் பார்த்துப் பேசியதுண்டா?ஆட்சி அதிகாரமும் வாய்ப்பும் இருந்தபோது இதை நீங்களே செய்திருந்தால் எத்தனை எளிமையாகப் பிரச்னை முடிந்திருக்கும்! "அப்சல் குருவுக்காக இதே தீர்மானத்தை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை போட்டால் சும்மா இருப்பீர்களா?' என்று உமர் அப்துல்லா கேள்வி கேட்கும் நிலைமை உருவாகியிருக்காதே. இந்தியா முழுவதிலும் இது ஒரு பெரிய கெட்ட விவகாரம் போல திசை மாற்றப்படும் அவலம் நேர்ந்திருக்காதே.இன்று நீதிதேவனுக்கும் மயக்கம் தரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கும் நீங்கள்தானே காரணம். நீங்களே தண்டனைக் குறைப்பை செய்திருந்தால் இப்படியெல்லாம் கேள்விகள் எழுமா?எல்லாப் புகழும் உங்களுக்கே!

தூக்குத் தண்டனையை நீக்க அமைச்சரவையில் தீர்மானம்:இராமதாசு

தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம்: ராமதாஸ்

First Published : 03 Sep 2011 05:26:49 AM IST

Last Updated : 03 Sep 2011 06:10:58 AM IST

சென்னை, செப். 2: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெள்ளிக்கிழமை அவர் அனுப்பிய கடிதம்:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது.அதே நேரத்தில் அரசியல் அமைப்பின் 161-ம் பிரிவின்கீழ் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கருணை மனுவை பரிசீலிக்குமாறு ஆளுநரை மாநில அரசு கோர முடியாது என்று 1991-ம் ஆண்டு மத்திய அரசு தெளிவுரை வழங்கியுள்ளதாக 2-9-2011-ல் சட்டப்பேரவையில் முதல்வரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அரசியல் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக அரசியல் சட்டம் 161-ன் படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அரசியல் சட்டத்தின் 257 (1) பிரிவு கூறுவதாக 5-3-1991-ல் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த தெளிவுரை மாநில அரசையோ, ஆளுநரையோ கட்டுப்படுத்தக்கூடியது அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.எந்த அரசியல் சாசனத்திலிருந்து மத்திய அரசு அதிகாரத்தைப் பெறுகிறதோ, அதிலிருந்துதான் மாநில அரசும் அதிகாரத்தைப் பெறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவின் கீழ் மத்திய அமைச்சரவையின் மூலமாக குடியரசுத் தலைவருக்கு மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே அரசியல் சட்டத்தின் 161-ன் பிரிவின்படி மாநில அமைச்சரவையின் மூலம் ஆளுநருக்கு மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருவரின் அதிகாரங்களும் சரிசமமானவை. இரண்டும் தனித்தனி அதிகாரங்கள். ஆளுநர் மற்றும் அவரது அமைச்சரவை, குடியரசுத் தலைவரைவிட உயர்வானது அல்ல எனும் கருத்திலிருந்து அரசியல் அமைப்பின் 161-வது பிரிவு விதிவிலக்கானதாகும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மாநில ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் உள்ள மன்னிக்கும் அதிகாரம் முழுமையான கட்டற்றதும் ஆகும். இங்கிலாந்து மன்னருக்கும், அமெரிக்க அதிபருக்கும் உள்ள உச்சமான மன்னிக்கும் அதிகாரம் இந்தியாவில் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் உண்டு என்கிறது உச்ச நீதிமன்றம்.அரசியல் சட்ட விதி 161-ன் கீழ் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவை மறுக்கவும் முடியாது. மாநில ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது.கருணாநிதியின் வரலாற்றுப் பிழை: 19-4-2000-ல் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின்படிதான் ஆளுநரால் மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இந்த வரலாற்றுப் பிழையை இப்போதைய முதல்வரால் மாற்ற முடியும்.ஆளுநராலும், குடியரசுத் தலைவராலும் ஏற்கெனவே கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்பது ஒரு தடையல்ல. தண்டனை குறைப்பு கோரி மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க சட்டப்படி இடம் உண்டு. எனவே, மூவரின் கருணை மனுக்களை ஏற்றுக்கொள்ள தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் எவ்வித தடையும் இல்லை. எனவே, மூவரின் தூக்குத் தண்டனையை குறைக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

   
ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan 
 
முன்னோடி
சி. இலக்குவனார்
- பா.சு. ரமணன்|ஏப்ரல் 2010|
Click Here Enlarge
ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan

 செந்தமிழ் மாமணி', 'இலக்கணச் செம்மல்', 'முத்தமிழ்க் காவலர்', 'செம்மொழி ஆசான்', 'தமிழர் தளபதி' என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். "தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும், தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்" என்கிறார் தமிழறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கனார்.

சி. இலக்குவனார், 1909 நவம்பர் 17ம் நாள், திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி அம்மாள். மளிகைக்கடை உரிமையாளரும், நிலக்கிழாரும் ஆன தந்தை, இலக்குவனாரின் ஏழாவது வயதில் இயற்கை எய்தினார். சிங்காரவேலரிடம் கடன் பெற்றிருந்த பலர் திருப்பித் தராததால் குடும்பப் பொருளாதாரம் தாழ்ந்தது. இல்லப் பொறுப்பை சகோதரர் நல்லபெருமாள் ஏற்றார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த இலக்குவனாரின் கல்வி தடைப்பட்டது. அண்ணனுக்கு உதவியாக வயல்வேலையைக் கவனிப்பதும், மாடு மேய்ப்பதும் அவரது வேலையாயிற்று.

வகுப்பில் முதல் மாணவராக விளங்கிய இலக்குவனாரின் கல்வி தடைப்பட்டதால் தாய் இரத்தினத்தாச்சி பெரிதும் வருந்தினார். தாய் ஊக்குவிக்க, தாய்வழி உறவினர் சதாசிவம் பிள்ளையின் ஆலோசனையோடு அரசர்மடத்தில் அமைந்திருந்த பள்ளி ஒன்றில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. அரசர்மடம், ஒரத்தநாடு பள்ளிகளில் பயின்றார் இலக்குவனார். தமிழாசிரியரான சாமி. சிதம்பரனார், இலட்சுமணன் என்ற இவரது பெயரை 'இலக்குவன்' என்று தூய தமிழ்ப் பெயராக மாற்றி அமைத்தார். அவரது வழிகாட்டலில், தனித்தமிழ் நாட்டமும், பிறமொழிக் கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.

தமிழ் மொழியின் உயர்விற்கும் உழைப்பதே எனது உறுகடன் என்றும், தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப் போர் என்ற குறிக்கோளையும் வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன்.
பள்ளிப் பருவத்திலேயே திருக்குறள் சொற்பொழிவுகள் பலவற்றை நிகழ்த்திய இலக்குவனார், பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார். கல்லூரி மாணவராக இருந்தபோதே குடியரசு இதழில் பல கட்டுரைகள் எழுதினார். இவர் வரைந்த தொல்காப்பியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் ஆசிரியர்களாலும், சக மாணவர்களாலும் பாரட்டப்பெற்றன. பல ஊர்களுக்கும் சென்று தமிழ்ச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தான மன்னர், இவரது தமிழறிவு கண்டு 'பண்டிதர்' பட்டம் வழங்கியதுடன், பரிசுகளும், பாராட்டுப் பத்திரமும் அளித்து கௌரவித்தார்.

"புலவர் பட்டத்துக்குப் படித்ததனால் தமிழின் தொன்மை பற்றியும், தமிழிலக்கிய வளமையைப் பற்றியும் அறிய முடிந்தது. பண்டைத் தமிழரின் சிறப்பும், தமிழர் வாழ்வின் மேன்மையும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. தமிழகத்தின் உரிமைக்கும், தமிழ் மொழியின் உயர்விற்கும் உழைப்பதே எனது உறுகடனாகும் என்று உறுதி கொள்ளச் செய்தது. தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப் போர் என்ற குறிக்கோளை வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பெரும்பயன் இஃதேயாகும்" என்கிறார் இலக்குவனார், தனது 'என் வாழ்க்கைப் போர்' என்னும் தன்வரலாற்று நூலில்.

பின்னர் அவர் ஆசிரியர் பயிற்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின் தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். குடவாசல், நன்னிலம், திருவாரூர் முதலான ஊர்களில் அவரது ஆசிரியர் பணி தொடர்ந்தது. திருவாரூரில் அவர் பணியாற்றிய போது அவரிடம் பயின்ற பல மாணவர்களுள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியும் ஒருவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர் இலக்குவனார் என்று தன்வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யில் குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி.

நன்னிலத்தில் இலக்குவனார் பணியாற்றியபோது அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பட்டம்மாள் தமிழுணர்வும், இலக்கிய ஆர்வமும் மிக்குத் திகழ்ந்தார். கணவருக்கு உறுதுணையாக விளங்கினார். மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்த்த இலக்குவனார், அவர்கள் மொழியில் ஆழ்ந்த அறிவு பெறும் வண்ணம் பல விழாக்கள் எடுத்தார். அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது 'தொல்காப்பியர் திருநாள்'. இந்நிலையில் துணைவியார் பட்டம்மாள் காலமானார். அவரது பிரிவு இலக்குவனாரைப் பெரிதும் வாட்டியது. நண்பர்களின் ஆதரவால் அதிலிருந்து மீண்டவர், மலர்க்கொடி என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கற்கும் ஆர்வத்தால் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல், எம்.ஏ., தேர்வுகள் எழுதி பட்டம் பெற்றார்.

இந்நிலையில் திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. தாம் பயின்ற கல்லூரியிலேயே ஆசிரியப் பணி கிடைத்ததை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார் இலக்குவனார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசளித்ததுடன், தமிழார்வத்தையும் தூண்டினார். ஆனாலும் அங்கு நிலவிய சூழல் திருப்தி தராமையால் அவர் செ.தெ. நாயகம் அவர்களால் குலசேகரன்பட்டினத்தில் ஆரம்பிக்கப் பெற்ற 'இராமநாதன் கல்விக்கூட'த்தில் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்குச் சில காலம் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார்.

கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர் இலக்குவனாரிடம் அக்காலத்தில் தமிழ் பயின்ற மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை 'ஆஜர்' என்று மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி 'உள்ளேன் ஐயா' எனக் கூறவைத்த பெருமைக்குரியவர் சி. இலக்குவனார் அவர்கள்தான். பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படுவதற்கு முன்னோடி அவரே என்கிறார் இரா. நல்லகண்ணு.

மொழிப்போரில் கைது செய்யப்பெற்ற முதல் பேராசிரியர் இலக்குவனார்தான். 'தன்மானத் தமிழ் மறவர்' என்று இலக்குவனார் போற்றப்பட்டார். எப்பொழுதும் தமிழ் உயர்வைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்தார்.
தனித்தமிழ், தமிழ் உணர்வு என்று இலக்குவனார் தீவிரமாக இருந்தது உடன் பணியாற்றிய பலருக்கு ஏற்பிருக்கவில்லை. சிலர் இலக்குவனாரைத் தமது எதிரியாகவும் கருதினர். ஆனால் இலக்குவனார் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். தமக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு, 'தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் தலைப்பில் தமது ஆய்வுநூலை ஆங்கிலத்தில் சமர்ப்பித்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். தொடர்ந்து 1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ. செந்திற்குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியில் சேர்ந்தார். சில காரணங்களால் அவர் அப்பணியிலிருந்து விலக நேர்ந்தது. தொடர்ந்து திருவெறும்பூர், புதுக்கோட்டை, ஈரோடு, நாகர்கோவில் என்று சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றினார். ஆனால் எதுவும் அவரது தீவிர தமிழ்ப்பற்று காரணமாக நிலையானதாக இருக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர் ஊட்டியது, அவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரிப் பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.

பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார் இலக்குவனார். ஐந்தாவது தமிழ்ச் சங்கம் எனப் போற்றப்பட்ட அக்கல்லூரியில் அவர் பணிபுரிந்த காலம் அவரது வாழ்வின் பொற்காலம். தமிழறிஞர்கள் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை, அ.கி.பரந்தாமனார் போன்றோரின் நட்பு அவருக்கு ஊக்கத்தைத் தந்தது. மீ. ராஜேந்திரன் (மீரா), முகமது மேத்தா (மு.மேத்தா), இன்குலாப் (சாகுல் அமீது), அப்துல் ரகுமான் போன்றோர் இப்பேராசியர்களின் அன்பிற்குகந்த மாணவர்களாக விளங்கினர். 'தமிழ்க்காப்புக் கழகம்' என்பதனை நிறுவி தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட இலக்குவனார், விளம்பரப் பலகைகளில் தமிழே இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, விரிவாக ஆய்வு நிகழ்த்தி, தமது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். 1963-இல் முனைவர் பட்டம் பெற்றார். மேனாட்டவரும் போற்றும் விதத்தில் அவர் தொல்காப்பியத்தை மொழிபெயர்த்திருந்ததால், அறிஞர்கள் பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்ததுடன், தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளுக்கும் அழைக்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றார்.

"இலக்குவனார் தமிழார்வம் மிக்கவர்; தாய்மொழியாகிய தமிழின் வாயிலாகவே பல்கலைக்கழகக் கல்வி அமைதல் வேண்டும் என்பதில் தணியாத வேட்கை கொண்டவர்" என்கிறார் பேராசிரியர் டாக்டர் மு.வ. அதற்கேற்றவாறு, கல்வித்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை போன்ற அரசின் பல துறைகளில் தமிழ் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், 'தமிழ் உரிமைப் பெருநடைத் திட்டம்' என்ற ஒன்றை உருவாக்கினார் இலக்குவனார். அதன் காரணமாக இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பெற்றார். பின் பணிநீக்கமும் செய்யப் பெற்றார். சிறை சென்று மீண்டு வந்த பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஓராண்டுக் காலம் முதுநிலைப் பேராசிரியாராகப் பணியாற்றினார். ஆனால் அங்கும் பிரச்சனை தொடர்ந்தது. கல்வியமைச்சருடன் ஏற்பட்ட பிணக்கினால் அவருக்கு பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டது. பின்னர் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து, பின் மீண்டும் நாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலம் அங்குப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஹிந்தி எதிர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர் இலக்குவனார். மாலை நேரத்தில் மன்றங்களின் மூலம் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் குறித்த இலவச வகுப்புகளை நடத்தினார். தாம் சென்ற இடங்களிலெல்லாம் மன்றங்கள் நிறுவியும், தம் கைக்காசைக் கொண்டு இதழ்கள் நடத்தியும் தமிழ் உணர்வு நிலைபெற உழைத்தார்.

மொழிப்போரில் கைது செய்யப்பெற்ற முதல் பேராசிரியர் இலக்குவனார்தான். 'தன்மானத் தமிழ் மறவர்' என்று இலக்குவனார் போற்றப்பட்டார். எப்பொழுதும் தமிழ் உயர்வைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்தார். 'சங்க இலக்கியம்', 'இலக்கியம்', 'திராவிடக் கூட்டரசு', 'குறள்நெறி' போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். அதே சமயம் தமிழின் தொன்மையை, பண்பாட்டுச் சிறப்பை, அகப்பொருள் ஒழுக்கங்களை உலகுக்குப் பறைசாற்றும் முகமாக ஆங்கில இதழ்கள் இரண்டையும் வெளியிட்டார். அக்காலத்திலேயே தமிழில் ஆறு இதழ்களையும், ஆங்கிலத்தில் எட்டு இதழ்களையும் இவர் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளுக்கு எளிய பொழிப்புரை எழுதிய இலக்குவனார், தொல்காப்பிய விளக்கம், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், கருமவீரர் காமராசர், எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், பழந்தமிழ், தமிழன்னை காவியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் கற்பிக்கும் முறை, தமிழிசைப்பாடல்கள் என் வாழ்க்கைப் போர் போன்ற பல கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார். போராட்ட வாழ்வு, ஓய்வின்மை, பணி நிமித்தமாக அடிக்கடி குடுமபத்தைப் பிரிந்து வாழ்ந்தது போன்ற காரணங்களால் அடிக்கடி இலக்குவனாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வயதின் காரணமாக நீரிழிவு நோயும் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தும் குணமாகாமல் 1973 செப்டம்பர் 3ஆம் நாள் இலக்குவனார் காலமானார். தமிழும், தமிழரும் உயர உழைத்த முன்னோடி சி. இலக்குவனார் எனில் மிகையல்ல.

பா.சு.ரமணன்
40 அடி நீள கழிவுநீர் கால்வாய்க்குள் சிக்கிய தொழிலாளிசெங்குன்றம்:மது போதையால், மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி, 40 அடி நீள கழிவு நீர் கால்வாயில் விழுந்து சிக்கினார். அரை மணி நேர போராட்டத்திற்குப் பின், ஆட்டோ டிரைவரின் உதவியால், அத்தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.சென்னை செங்குன்றம் அடுத்த தீர்த்தக் கரையம்பட்டு, மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 40. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, லேசாக மன நலமும் பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி கட்டுமான வேலை செய்து வருகிறார்.

நேற்று பகல் 12 மணி அளவில், செங்குன்றம் நகர தி.மு.க., அலுவலகம் அருகே, கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த 40 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 3 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயின் சாலை தடுப்புச் சுவர் மீது, முருகன் அமர்ந்திருந்தார். திடீரென்று கால்வாய்க்குள் விழுந்தவர், அப்படியே ஐந்தாறு அடி முன்னோக்கி தவழ்ந்து சென்று, குறுகிய இடத்தில் சிக்கினார்.அவர் உள்ளே விழுந்ததைப் பார்த்த சிலர், அருகில் உள்ள செங்குன்றம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கேசவன், எஸ்.ஐ., கண்ணன், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கால்வாய்க்குள் செல்லத் தயங்கினர். அப்போது, அங்கு வந்த செங்குன்றம், அண்ணா தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன், 32 என்பவர், துணிச்சலுடன் தீயணைப்பு வீரர்கள் வைத்திருந்த கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு கால்வாயின் எதிர்த்திசையில் இறங்கி, ராணுவ வீரர் போல் ஊர்ந்தபடி உள்ளே சென்றார்.சில நிமிட போராட்டத்திற்குப் பின், அவரை பாதுகாப்பாக மீட்டு, தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்தார். அவரை, வீரர்கள் கழுவி சுத்தம் செய்தனர். பின், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில், தொழிலாளி முருகனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.மனிதநேயத்துடன் துணிச்சலாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் சீனிவாசனை பொதுமக்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் பாராட்டினர். முதலுதவிக்குப் பின் முருகனை, அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

ramdoss opposed salman: சல்மான் குர்சித் கருத்துக்கு இராமதாசு எதிர்ப்பு

சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு

First Published : 31 Aug 2011 02:32:45 PM IST


சென்னை, ஆக.31: 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மூவருக்கும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அனைவரும் பாராட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் சல்மான் குர்ஷித் அந்த தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறியிருப்பதன்மூலம் தண்டனையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு, தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதித்து மூவரின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்ய மத்திய அரசும் பரிந்துரைக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அளிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் மூவரின் தண்டனையைக் குறைப்பதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றி புதிய ஆளுநரிடம் முதல்வர் நேரில் வழங்க வேண்டும். புதிய ஆளுநர் ரோசய்யா பிறக்கும் முதல் உத்தரவே மூவரின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்வதாகத்தான் இருக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

cmaniyarsan condemed central law minister: மத்திய சட்ட அமைச்சருக்கப் பெ.மணியரசன் கண்டனம்

மத்திய சட்ட அமைச்சருக்கு 
பெ.மணியரசன் கண்டனம்

First Published : 31 Aug 2011 10:25:35 AM IST


சென்னை, ஆக.31: தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானம் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளதற்கு தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் மறுஆய்வு செய்து தமது முந்தைய நிராகரிப்பு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களது மரண தண்டனையை நீக்கி வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளார். இந்த மனிதநேய முடிவை இந்தியாவெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனைக்கெதிரான இயக்கங்களும் வரவேற்றுள்ளன.சென்னை உயர்நீதிமன்றம் மூன்று தமிழர்களுக்கும் நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது.  இந்தச் சிறப்பு மிக்க உயர்நீதிமன்ற முடிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் வரவேற்று ஒட்டு மொத்தத் தமிழினமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.இந்த நிலையில் புதுதில்லியில் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் அது ஒரு தீர்மானம் என்பதைத் தாண்டி அதற்கு முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை ஒரு கருத்துதான் என்றும் உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் கூறும் கருத்துகளைவிட குடியரசுத் தலைவர் ஆணையே இறுதியாக நிற்கும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து பதில்மனு தாக்கல் செய்வோம் என்றும் சொல்லியுள்ளார்.  சட்ட அமைச்சர் சல்மான் குருஷித்தின் மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தைச் சவாலுக்கு அழைக்கும் முரட்டுத்தனமான வாதங்களாகும்.தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று நடுவண் அமைச்சர் கூறுவது ஏழு கோடித் தமிழ் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் இழிவுபடுத்தும் செயலாகும். ஏற்கெனவே புண்பட்டுள்ள தமிழினத்தை மேலும் புண்படுத்துவதாகும்.  அத்துடன் சட்டமன்றத்திற்கு இருக்கின்ற அரசமைப்புச் சட்டப்படியான அங்கீகாரத்தையும் மதிப்பையும்  கேவலப்படுத்துவதாகும்.அடுத்து நீதித் துறையையும் கொச்சைப்படுத்தும் முறையில், உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ கருத்துகள் சொல்லலாம். ஆனால் இறுதி முடிவு குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது என்று அவர் கூறியிருப்பது நீதித்துறையின் தற்சார்புத் தன்மையை மறுப்பதாகும்.இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கூட்டம்கூட்டமாகக் கொன்று குவிக்க எல்லா வகையிலும் சிங்கள இனவெறி அரசுடன் பங்கெடுத்த இந்திய ஏகாதிபத்தியம், குற்றமற்ற மூன்று தமிழ் இளைஞர்களையும் காவு கொள்ளத் துடிக்கிறது என்பது தெரிகிறது. இந்த நிலையில் மூன்று இளைஞர்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கவும், தமிழர்கள் தொடர்ந்து ஓய்வின்றி போராட வேண்டிய தேவை இருக்கிறது.தமிழக சட்டப் பேரவை தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று இந்திய ஏகாதிபத்தியம் ஏகடியம் செய்தால் இந்திய அரசின் சட்டங்கள் தமிழினத்தைக் கட்டுப்படுத்தாது என்ற நிலைக்குத்தான் தமிழர்கள் செல்லவேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனித நேயமற்ற மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்திய அரசு தமிழ் மக்களின் உணர்வுகளையும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால ஆணையையும் உரியவாறு கவனத்தில் எடுத்து அவற்றிற்குட்பட்டு செயல்படவேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மணியரசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

veera nankai senkodi: இளம் பெண் செங்கொடிக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி


இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி

பதிவு செய்த நாள் : August 30, 2011காஞ்சிபுரம்: தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது.
காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஞ்சலி செலுத்த பல ஆயிரம் பேர் திரண்டு வந்ததால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை வரை தள்ளி வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட செங்கொடியின் உடல் ஊர்வலமாக நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பேரணியிலும் பங்கேற்றனர். வீடுகளின் மாடிகள், மொட்டை மாடிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 8 வருடமாக மக்கள் மன்றம் மூலமாக காஞ்சிபுரம் மக்களின் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் செங்கொடி என்பதால் காஞ்சிபுரம் மக்கள் செங்கொடியின் இந்த அகால மறைவால் பெரும் சோகமடைந்துள்ளனர். அவரது மரணம் மிகவும் அசாதாரணமானது, உண்மையான தியாகம் என்று பலரும் சோகத்துடன் தெரிவித்தனர்.
இருள் வகுப்பைச் சேர்ந்தவரான செங்கொடியின் தாயார் ஏற்கனவே காலமாகி விட்டார். இதையடுத்து அவரது தந்தை இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு போய் விட்டார். இதனால் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட செங்கொடி மக்கள் மன்றத்தில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.
பறை வாசிப்பதில் மிகவும் கை தேர்ந்தவரான செங்கொடி பல்வேறு சமூக நாடகங்கள் மூலம் மக்களுக்கு சமூ்க கருத்துக்களையும் பரப்பி வந்தார்.
செங்கொடியின் உடல் தற்போது அவரது சொந்த கிராமமான மங்கல்பாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் முக்கியத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். இதன் காரணமாக இன்று நடப்பதாக இருந்த உடல்தகன நிகழ்ச்சி நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர‌றிவாள‌ன், முருக‌‌ன், சா‌ந்த‌னை தூ‌க்‌கி‌ல் போட 8 வார‌ம் தடை ‌வி‌‌‌‌தி‌த்தது செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்


வாசகர் கருத்துகள் (2)
  1. வீர நங்கை செங்கொடிக்குச் சிறப்பான வீர வணக்கச் செய்தியை வெளியிட்டு உள்ளீ்ர்கள். எனினும் எதற்காகவும் யாரும் உயிரைஇழக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. நம்அரசுகளுக்குயாருடைய உயிரைப்பற்றியும் கவலை இல்லை என்னும் பொழுது அதற்கான முயற்சியில் இறங்குவதும் விழலுக்கு இறைத்த நீரே! எனினும் மூவர் உயிர் காக்கப்படும்!தமிழ் ஈழம் மலரும்! செங்கொடிக்கு வீர வணக்கம். 
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/

high court stayed hanging for 3 : 3 பேரைத் தூக்கில் போட 8 வாரம் தடை: நீதிமன்றம்

பாராட்டுகள். முன் எடுத்துக்காட்டுகள் அடிப்படையில் மூவரையும் விடுதலை செய்யும் நாளையும் எதிர்பார்ப்போம்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை: நீதிமன்றம்சென்னை, ஆக. ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். 3 பேரின் சார்பில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தது நீதிமன்றம். விசாரணை முடிவில், இம் மூவரையும் தூக்கில் போட நீதிபதிகள் சத்தியநாராயணன், நாகப்பன் ஆகியோர் இம்மூவரையும் தூக்கில் போட தற்காலிகத் தடை விதித்தனர். மூன்று பேரின் மனுவை ஏற்று சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

assembly resolutions about hanging of 3: 3 பேரின் தூக்கு த் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பேரவையில் தீர்மானம்

மிக மிகப் பாராட்ட வேண்டிய தீர்மானம்.  குடியரசுத்தலைவரின் கருணை மனு மறுக்கப்பட்ட பின்பு மாநில அரசு மறு ஆய்வு செய்யக்கூடாதுஎன்ற மத்திய அரசின் குறிப்புரையை  முதல்வர் வாசித்த பொழுதே   சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி அனுப்பலாம் என மக்களால் கருதப்பட்டது. மக்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ள  மாண்புமிகு முதல்வர் அவர்களுக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பேரவையில் தீர்மானம்

First Published : 30 Aug 2011 11:23:37 AM IST

Last Updated : 30 Aug 2011 11:27:41 AM IST

சென்னை, ஆக.30: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக முதல்வர் தெரிவித்தார். பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உடனே தெரிவிக்கப்பட்டது. தூக்கு தண்டனை என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருத்துகள்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதல்வருக்கும், உயர்நீதிமன்றம், இரண்டுக்கும் தமிழர்கள் தலைவனங்குறோம்.
By கேசவராஜ.j
8/30/2011 12:00:00 PM
நன்றி
By gb
8/30/2011 11:31:00 AM
நன்றி அம்மா . நன்றி.
By கௌசல்யா
8/30/2011 11:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

life of 3 :மூவர் உயிர்”இருந்து சாதிக்கவேண்டிய கடமை நிறைய இருக்கிறது, உயிர்க்கொடை பகுத்தறிவாத செயல் அல்ல” எங்கள் தாய் அற்புதம் அம்மாள்.
 
”வீரத்தமிழச்சி செங்கொடிக்கு எங்கள் வீரவணக்கம்”
“மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்”
 
 
மூன்றுத்தமிழர் உயிரைக்காக்க இனஉணர்வு கொண்டு எழுச்சியோடு பங்குபெறுங்கள்....
 
மூன்றுயிரைக் காப்பதே முதன்மையா
கக் கொள்வீர் உலகத் தமிழரே!