சனி, 25 டிசம்பர், 2010

seminar on save thamizh from grandha unicode : யுனிகோட் தமிழைக் காக்க டிசம்பரில் கருத்தரங்கம்

யுனிகோட்  தமிழைக் காக்க டிசம்பரில் 

கருத்தரங்கம்


Vote this article
Up (0)
Down (0)
சென்னை: தமிழ் யுனிகோட் எழுத்துருவில் தமிழையும், கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழைக் கெடுக்க நடக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி டிசம்பர் மாதம் கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கணிணி மூலமாக ஒருங்குறியில் தமிழையும் கிரந்தத்தையும் சேர்த்துத் தமிழுக்குக் கேடு விளைவிக்க மேற்கொண்டு வரும் சிலரின் முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் பொருட்டுத் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழுவிற்கு உரிய பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்க்காப்பு அமைப்புகள் திசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் தமிழ்க்காப்பு அரங்கம் நிகழ உள்ளது.

இதில் பங்கேற்க ஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் நவம்பர் 25 ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே

thamizhkkaappu@gmail.com என்ற மின்முகவரிக்குத் தங்கள் பெயர், முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். நாளும் இடமும் முடிவான பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.

தொடர்பிற்கான பேசி எண்கள்:

98844 81652 (இலக்குவனார் திருவள்ளுவன்)
94452 37754 (அன்றில் பா.இறையெழிலன்) என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்தவர்: Aravamuthan
பதிவு செய்தது: 14 Nov 2010 8:11 am
ஆங்கில அறிஞர்கள் கண்டிப்பாக உதைக்க வரமாட்டார்கள். ழ என்பதை zha என்று எழுதுவது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முறை. தமிழ் சொற்களை துல்லியமாக உச்சரிக்க, ஆங்கிலத்தில் transliteration வழிமுறை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது என்பதை தமிழ் பற்றிய ஆங்கில நூல்களைப்படித்து அறிந்துகொள்ளுங்கள். அதற்கு மாறாக, ga, dha, za, fa என்பவற்றை தமிழ் எழுத்து மூலமாகவோ, கூடுதல் குறியீடுகள் மூலமாகவோ தெரிவிக்கும் முறை இங்கு இல்லை. எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டால், திரு ரமண சர்மாவின் முயற்சி நன்மை தரும்.


பதிவு செய்தவர்: இராமசாமி
பதிவு செய்தது: 13 Nov 2010 9:51 pm
தமிழில் உள்ள ‘ழ’ எனும் எழுத்தினை ஆங்கிலத்தில் எழுதவேண்டி 27ஆவது எழுத்தாக ஒரு எழுத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஒப்புக் கொள்வார்களா ஆங்கில அறிஞர்கள்? உதைக்க வர மாட்டார்கள்? அது போலத்தான் (உண்மையான) தமிழர்களும் இந்த கிரந்த எழுத்து திணிப்பினை ஏற்க மாட்டார்கள்.

[ கருத்தை எழுதுங்கள் ]

பதிவு செய்தவர்: sgk
பதிவு செய்தது: 13 Nov 2010 8:01 am
குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டுகிறோம். உலகத்தில் உள்ள இடங்களின் பெயர்கள், கண்டுபிடிப்புகள், பொருட்களின் பெயர்கள், ஏன், முஸ்லிம் கிருத்துவ நண்பர்களின் பெயர்களையும் சரியாக எழுதுவதற்கு தொல்காப்பியரின் எழுத்துகள் போதாது. இலக்கியத் தமிழுக்கு இவை வேண்டாம்தான். ஆனால், நடைமுறைத் தமிழுக்கு முன்னேற்றம் கருதி இவை தேவையாகும். மற்ற திராவிட மொழிகளில் இவை உண்டு. செல்பேசி வேண்டும், பற்பசை வேண்டும், கார் வேண்டும்,.. நவீன வாழ்க்கைக்கு, உலகத்துடன் ஒத்து வாழ புதிய எழுத்துகளும் தேவைதாம்.


பதிவு செய்தவர்: காதிர்
பதிவு செய்தது: 13 Nov 2010 2:58 am
தமிழகம் விரைந்து செயல் பட வேண்டிய நேரம்.


பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 13 Nov 2010 2:49 am
முதலில் தமிழ் நாட்டில் ஒழுங்காக தமிழைப்பேசுங்கள்

3,00,000 voters removed from voter list of Yaazhppaanam: யாழ்ப்பாணம் வாக்காளர் பட்டியல்: 3 லட்சம் பெயர்கள் நீக்கம்

மக்களின் உயிர்களை நீக்கியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்குவது எல்லாம்  இயலாச் செயலா? அல்லது எத்தனை உயிர்களைப் பறித்தோம் என அறிந்துள்ளமையால் அதற்கேற்பவும் பெயர்களை நீக்கியிருக்கலாம். எவ்வாறிருப்பினும் தமிழ்ஈழ அரசு உண்மையான பட்டியலை வெளியிட்டு முறையான தேர்தலை நடத்தும் காலம் விரைவில் வரும். வெல்லட்டும் மனித நேயம்! மலரட்டும் தமிழ் ஈழம்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


யாழ்ப்பாணம் வாக்காளர் பட்டியல்: 
3 லட்சம் பெயர்கள் நீக்கம்

First Published : 25 Dec 2010 03:17:14 PM IST


கொழும்பு, டிச.25- இலங்கை யாழ்ப்பாணத்தில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2009-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,16,000 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்ததாகவும், தற்போது அவற்றில் 3 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.2010-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் ஆணையர் குகநாதன் தெரிவித்துள்ளார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thiruvalluvan karuthurai in meenagam

Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "100ஆன்றோர்களை ஒன்று கூட்டிய அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கத்திற்கும் இலக்கிய வீதிக்கும் பாராட்டுகள். செய...
 
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "திருக்குறள் அறிஞர் கா.பொ.இரத்தினம் அவர்களை விழா ஒன்று அழைப்பதற்காக எஙகே உள்ளார் என நண்பர்களிடம் ...
 

govt.aid to 10th failed students: அரசு நிதியுதவி பெற 10-ம் வகுப்பு தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்

விவரம் தவறாக  இருக்கிறது. பட்டியல் பிரிவினருக்குச் சலுகை அளிக்கும் முறையில்தான் வரம்பு  இருக்கும். எனவே, குறிப்பிட்ட ௪௫ அல்லது ௪௦ அகவையைக் கடந்திருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அகவை வரம்பைக் குறிப்பிட்டிருந்தால் மாறி அமைந்திருக்கும். எனவே, சரிபார்த்துத் திருத்தமாகச் செய்தியை வெளியிட வேண்டுகின்றேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
அரசு நிதியுதவி பெற 10-ம் வகுப்பு தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்

First Published : 25 Dec 2010 02:26:08 AM IST


சென்னை, டிச. 24: பள்ளி இறுதித் தேர்வு (10-ம் வகுப்பு) தவறியவர்கள் அரசின் நிதியுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சம்பத் கூறியிருப்பது: பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 100 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு, பள்ளிகளில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10-ம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறாதவர்களாக இருந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 வயதையும், மற்றவர்கள் 40 வயதையும் கடந்து இருக்க வேண்டும்.  இந்த நிதியுதவியைப் பெற விரும்புகிறவர்கள், அதற்கான சான்றிதழ்களுடன், சென்னை நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 31-ம் தேதிக்குள் நேரில் வந்து பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

வெள்ளி, 24 டிசம்பர், 2010

periyar: விடுவிக்கப்படுவாரா பெரியார்?

விடுவிக்கப்படுவாரா பெரியார்?

First Published : 24 Dec 2010 03:19:41 AM IST


பெரியாருக்குச் சொந்தமான இடம் விற்பனை தொடர்பான கிரயப் பத்திரம். திருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றிக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் பெரியார் பய
திருச்சி, டிச. 23: திருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.  அந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973}ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு இப்போது குப்பையாகக் கிடக்கிறது.  அதே திருச்சியின் சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது "பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்' (சர்வீஸ் என்றால், சோஷியல் சர்வீஸ் அல்ல; வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ்). நகரில் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.  பெரியாரின் சொத்துகள் இன்றைக்கு எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன; எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இரு சின்ன உதாரணங்கள் இவை.  பெரியார் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் எனினும் தன்னுடைய சொத்துகளைச் செலவிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர் அல்லர்; மிக எளிமையான வாழ்க்கையை வரித்துக்கொண்டவர். பெரியாருக்கு வாரிசுகள் இல்லாதபோதும் அவர் சிக்கன வாழ்க்கை வாழ்ந்ததற்கும் சொத்துகளைப் பேணி பராமரித்ததற்கும் மூன்று காரணங்கள் உண்டு: 1. இந்தச் சொத்துகள் யாவும் தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். 2. திராவிடர் கழகம், பொதுப்புத்தியை உடைக்கும் கருத்துகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல பொருளாதாரம் எந்தக் காலத்திலும் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. 3. இந்தச் சொத்துகளில் தொண்டர்களின் } பொதுமக்களின் நிதியும் இருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் பெரியார் தனது இயக்கத்தின் பெயரில் எல்லா சொத்துகளை வாங்கியதன் காரணம்.  ஆனால், இப்படியெல்லாம் பெரியார் பார்த்து பார்த்து சேர்த்த } பராமரித்த சொத்துகள் பலவும் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இப்போது பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக, பெரியாருடைய எழுத்துகள் காப்புரிமை தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடர்ந்த வழக்கில், ""சொத்துகளுக்கான உரிமை கோரும் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவை பொதுச் சொத்துகளாக } மக்கள் சொத்துகளாகவே கருதப்படும்'' என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் இந்த விற்பனை முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் பெரியாருக்கு நெருக்கமாக இருந்த பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.  ""தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பேரூராட்சி, சின்ன கடைவீதியில் 1950}களில் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் (புல எண்: 183/1; பட்டா எண்: 53) இப்போது விற்கப்பட்டுவிட்டது. இதேபோல, திருச்சி மாவட்டம், இடையாற்றுமங்கலம், மேலவாளாடி; சென்னை, ஷெனாய் நகர்; ஏற்காடு எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியாராலும் பெரியாரின் தொண்டர்களாலும் வாங்கப்பட்ட சொத்துகள் பலவும் இப்போது விற்கப்பட்டுவிட்டன அல்லது அவற்றை விற்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் பெரியாரின் வழக்குரைஞரான எஸ். துரைசாமி.  ""தமிழகத்தில் சின்ன கிராமங்களில்கூட "பெரியார் படிப்பக'ங்கள் இருக்கும். பெரியார் மீது கொண்ட மதிப்பினால் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமான சொத்துகளை பெரியார் பெயரிலும் இயக்கத்தின் பெயரிலும் வாங்கினர். இந்தச் சொத்துகளில் பெரும் பகுதியானவை கை மாறிவிட்டன. எஞ்சியிருக்கும் பெரிய சொத்துகளும் முற்றிலும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன'' என்று கூறும் துரைசாமி, பெரியார் "விடுதலை' பத்திரிகையை நடத்திய - சென்னையில் அவர் வாழ்ந்த } சிந்தாதிரிப்பேட்டை, மீரான் சாகிப் தெருவிலிருந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, இப்போது "பெரியார் பிளாஸô' என்ற பெயரில் வணிக வளாகமாக மாற்றப்பட்டுவிட்டதையும் பெரியார் தன் இறுதிக் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்த திருச்சி "பெரியார் மாளிகை' பல்வேறு நிறுவனங்கள் இயங்கும் இடமாக மாறிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.  இது ஒருபுறமிருக்க, ""பண மதிப்புக்கு அப்பாற்பட்ட - இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்பட வேண்டிய - பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய பெரியாரின் நினைவுகள் பொதிந்த அவருடைய சொத்துகள் - அவருடைய எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் பசு. கெüதமன்.  பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள் சேகரிப்பாளர்களில் முக்கியமானவர் இவர். "ஈ.வெ. ராமசாமி என்கிற நான்' நூலின் தொகுப்பாசிரியரும்கூட.  ""திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி "விடுதலை' இதழில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் - விளம்பரங்களின்படி, பெரியார் நடத்திய "குடிஅரசு' மற்றும் "விடுதலை' இதழ்களின் பல ஆண்டு பிரதிகள் அவரிடத்தில் -  திராவிடர் கழகத்தினிடத்தில் இப்போது இல்லை; குறிப்பாக "குடிஅரசு' இதழின் 8 ஆண்டுத் தொகுப்புகள் (1925 - 28; 1946 } 48) இல்லை. பெரியாருடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பெரும் பகுதி - இன்னும் அச்சேறாதவை - அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.  பெரியாருடைய பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழைகளில் பெரும் பகுதியானவை அழிந்துவிட்டன. மிகச் சொற்பமான பதிவுகள் மட்டுமே தற்போது திராவிடர் கழகத்தின் வசம் இருக்கின்றன. அவையும் அரசியல் சூழல்களுக்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக, அவர்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.  பெரியார் அணிந்திருந்த மரகதக் கல் மோதிரம் இப்போது நடிகர் சத்யராஜிடம் இருக்கிறது; திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அன்புப் பரிசாக!  பெரியார் தொடர்பான அனைத்துக்கும் உரிமை கோரும் வீரமணியின் பொறுப்பில் பெரியாரின் எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் இப்படித்தான் பாதுகாக்கப்படுகின்றன'' என்கிறார் கெüதமன்.  இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்கிறார் பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவரும் பெரியாரியல் சிந்தனையாளருமான வே. ஆனைமுத்து. குறிப்பாக, ""பெரியாருடைய பேச்சுகளையும் எழுத்துகளையும் அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்'' என்று அவர் கோருகிறார்.  இன்று பெரியார் நினைவு நாள். தந்தை பெரியார் மறைந்து 37 ஆண்டுகளாகியும் இன்னும் பெரியாருடைய படைப்புகளையும், அவர் தொடர்பான சொத்துகளையும் அரசு ஏன் நாட்டுமையாக்கிப் பராமரிக்காமல் தவிர்க்கிறது என்கிற துரைசாமி, கெüதமன் போன்றோரின் கேள்விகளுக்கு, தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உருவானவர் என்று அடிக்கொரு தரம் கூறிக் கொள்ளும் முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும்!
கருத்துகள்

பகுத்தறிவுன்ர பேர்ல, மக்கள மூடனாக்கி, பெரியார் சொத்தயும் நாட்டையும் கொள்ள அடிக்கிற திருட்டு கூட்டத்த, நாட்டைவிட்டு வெரட்டியடிக்க மக்கள் தயாரா இருக்காங்க.
By பெரியார்பித்தன்
12/24/2010 4:16:00 PM
வார்த்தைக்கு, வார்த்த தந்தை பெரியார் என்று சொன்ன அவரது தனயர்கள் எல்லாம், இப்ப எங்கே ஒழிந்து போனார்கள்? அப்ப..... நீங்க பண்றதெல்லாம் மாய்மாலம்தானா? அவர வச்சு வித்து ஒங்க வைத்த கழுவுரீங்களா? இப்படி அவர் பேர சொல்லி ஊர ஏமாத்தி பொழப்பு நடத்துரதேல்லாம் ஒரு பொழப்பா?
By Periyarnesan
12/24/2010 4:05:00 PM
The name of Periyar, his party's name and principles are now commercially being used by Mr. Veeramani etc. They actually not interested in awakening people or even their own partymen. Their "Paguththarivu" concept has become a joke and entertainment among our people. Karunanidhi himself not showing much interest in such issues. If any such pay attention on such issues that is seasonal.
By Parasuraman
12/24/2010 3:04:00 PM
இவர்கள் ஈரோட்டு பெரியாரின் வேனை மட்டும் குப்பைக்குள் போ டவில்லை .புதுசு புதுசாக பல கழகங்களை கட்சிகளாக ஆக்கி காசு பார்க்கும் காரியத்தில் அல்லவா பெரியாரை யூஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் /கருப்பு நிறத்தை வுடைகளில் மட்டும் காட்டட்டும் மனசை வெள்ளையாக்கி .இனியாவது பெரியார் பேரை கெடுக்காமல் இருந்தால் போதும். .
By பி.டி.முருகன்
12/24/2010 2:59:00 PM
இவர்கள் ஈரோட்டு பெரியாரின் வேனை மட்டும் குப்பைக்குள் போ டவில்லை .புதுசு புதுசாக பல கழகங்களை கட்சிகளாக ஆக்கி காசு பார்க்கும் காரியத்தில் அல்லவா பெரியாரை யூஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் /கருப்பு நிறத்தை வுடைகளில் மட்டும் காட்டட்டும் மனசை வெள்ளையாக்கி .இனியாவது பெரியார் பேரை கெடுக்காமல் இருந்தால் போதும். .
By பி.டி.முருகன் திருச்சி
12/24/2010 2:57:00 PM
கன்னடுதுகரன் பெரியாருக்கு இவ்வளவு மரியாதையை தேவையா? வீரமினியும் அந்த குள்ள பொம்பளையும் சேந்து கூத்து அடிக்கிற கொடுமை .. இதுக்கும் மேல திருடன் சொத்தை திருடரங்கோ
By இந்தியன்
12/24/2010 11:57:00 AM
கி வீரமணி என்ற கொடியர்தான் பெரியாரின் கொள்கையை சிதைத்தது . எல்லரோகும் ஜால்ரா அடிப்பவராக மாறி விட்டார். திராவிட கழகத்திற்கு கேட்ட நேரம் என்றால் அது கி வீரமணி என்ற ஜால்ரா தான். எனக்கு ஒரு அனுபவம் நான் BE முடித்து ME cse படிபதற்காக ஒரு நேர் காணலுக்காக தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரிக்கு சென்று இருந்தேன் ,அந்த பெரிய மனிதர் பிரின்சிபால் மற்றும் பல கருப்பு சட்டைக்கர்கள் இருந்தன . அவைகள் என்னிடம் வெட்க்கம் இல்லாமல் 2 லட்சம் கொடு, 1 லட்சம் கொடு என்று பேரம் பேசினார்கள். நான் உண்மையில் அடைந்த சோகதிருக்கு அளவே இல்லை.. உண்மையாக சொல்ல வேண்டுமானால் பெரியாரின் அணைத்து சொத்துகளையும் நாட்டு உடைமை ஆக்க வேண்டும் ,கி வீரமணியை நடுரோட்டில் பிச்சை எடுக்க அனுப்ப வேண்டும். .... இப்படிக்கு ஒரு பகுத்தறிவாளன்.
By பாரதி
12/24/2010 10:44:00 AM
ஏன் எந்த பகுத்தறிவுவாதியும் தங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை - பெரியார்நேசன், அச்சரபாக்கம் மா பா மற்றும் விவேகாநந்தன் என்கிற பெயரில் சிலர் பார்பனர்களை திட்டுவார்கள் அல்லது சங்கராச்சாரியாரை திட்டுவார்கள் இவர்கள் வீரம் எங்கே போனது ஓ நீங்கள் செய்யும் தவறை சொன்னால் உங்களுக்கு தாங்க முடியாதே. விமர்சனங்களை தாங்கும் சக்தி உங்களுக்கு கிடையாதே. மிரட்டினாலே அஞ்சி ஓடும் ஒரு சமூகத்தை திட்டினால் தான் நீங்கள் வீரர்கள் அல்லவா.
By கோ க
12/24/2010 8:09:00 AM
அவருக்கு ரொம்ப பெரிய லிஸ்ட்டே இற்கு பதில் சொல்ல இதுக்கெல்லாம் பதில் சொல்ல என்ன இது சி பி ஐ கேள்வியா.
By prabu
12/24/2010 7:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

old age people: முதுமை தேடும் ஆதரவு

 முதுமை தேடும் ஆதரவு

First Published : 24 Dec 2010 12:40:17 AM IST


திருமண விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்கு ஒரு துண்டுப் பிரசுரத்தை அளித்தார்கள். ஏதோ வாழ்த்து மடல் என்றெண்ணிப் படித்தபோது, இன்றைய பெற்றோர் பலரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அது இதுதான்.  "என் அருமை மகனே, மகளே, நான் முதுமையால் தள்ளாடும் நாள்களில், நான் உண்ணும்போது, உடை அழுக்கானால்.. நான் உடையணிய முடியாதிருந்தால்..  பொறுமையைக் கடைப்பிடி. நீ குழந்தையாய் இருந்தபோது, அவற்றைக் கற்றுத் தர நான் செலவிட்ட பல மணி நேரங்களை எண்ணிப் பார்.  நான் குளிக்க விரும்பாதபோது என்னை அவமானப்படுத்தாதே, கோபித்துக் கொள்ளாதே, உன்னைக் குளிப்பாட்ட ஆயிரம் கற்பனைக் காரணங்களைச் சொல்லி உன் பின்னால் ஓடி வந்த நாள்களை நினைத்துப்பார்.  சொன்னதையே திரும்பத் திரும்ப நான் சொன்னாலும், அதைக் கவனித்துக் கேள். உனக்குத் தூக்கம் வரும்வரை திரும்பத் திரும்ப ஒரே கதையைச் சொன்னது நானல்லவா.  என் கால்கள் தளரும்போது உன் கரங்களால் என்னைத் தாங்கு. நீ நடை பழக என் கரங்கள் உன் பிஞ்சுப் பாதங்களைத் தாங்கி நின்றதை அப்போது நினைத்துக்கொள்.  மறதி என்னை ஆட்கொள்ளும்போதெல்லாம் என்னிடம் சிடுசிடுக்காதே. என் உரையாடலைவிட, நான் உன்னுடன் இருப்பதும், நீ என்னைக் கவனித்துக் கொள்வதுமே முக்கியம்'.  வயதான தாய், தந்தையரைத் தொட்டிலில் அமர்த்தி தனது இரு தோள்களில் சுமந்து புனித யாத்திரை மேற்கொண்ட சிரவணன் பிறந்த நம் நாட்டில்தான் இந்த ஏக்கப் பெருமூச்சு வார்த்தைகள் உதித்துள்ளன.  இன்று பணமும், பகட்டும் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது.  இதற்காக இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும்  போக்கு அதிகரித்துள்ளது.  தனிக் குடித்தனம் என்ற புதிய சிந்தாந்தம் இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் வேரூன்றிவிட்டது. இதனால் கிராமப்புறங்களில்கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை மெல்லச் சிதைந்து வருகிறது.  இத்தகைய சூழலில் பெற்றோர் வயதான காலத்தில் தனித்து விடப்படும் நிலை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. ஒண்டுக் குடித்தனம், உல்லாச வாழ்க்கை,  வயதான பெற்றோரின் அறிவுரையை ஏற்க இயலாத மனப்போக்கு, அவர்களைப் பராமரிக்க நேரத்தைச் செலவிட மனமின்மை போன்ற காரணங்களால் இன்றைக்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  அமெரிக்க நாட்டின் கலாசாரச் சீரழிவால், இன்றைக்கு 17 ஆயிரம் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு 1.5 கோடி முதியோரைப் பராமரிக்கும் நிலை உருவெடுத்துள்ளது. மேலைநாட்டுக் கலாசாரம் மெல்ல நம்மிடையே பரவும்  நிலையில் இங்கேயும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில்  வியப்பில்லைதான்.  இன்றைக்கு நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை லாபநோக்குடனும், விளம்பர நோக்குடனும் பராமரிக்கப்படுபவையாகவே உள்ளன.  இந்நிலையில், தமிழக அரசு மாவட்டம்தோறும் அரசு சார்பில் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிலை வருவது தலைக்குனிவுதான் இன்றைய தலைமுறைக்கு.  வெளிஇடங்களிலும், வெளிநாடுகளிலும் பணம் சம்பாதிக்கக் குடியேறும் இளைய தலைமுறையினர் பலர் ஏனோ தனது பெற்றோரைத் தன்னோடு வைத்துப் பாதுகாக்கத் தவறுகின்றனர்.  இதனால் தனித்துவிடப்படும் பெற்றோர், தனது மகனின், மகளின் பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை அதிகரித்து வருகிறது.  முதியோர் இல்லங்களில் என்னதான் பராமரித்தாலும், அவற்றை அண்டி வாழும்  பெற்றோரின் இறுதிக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை.  செல்ல நாய்க்குட்டியைப் பராமரிக்கவும், பாசத்தைக் காட்டவும் நேரம் ஒதுக்க  முடிந்த இன்றைய தலைமுறையினர் பெற்றோர் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.  இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை, கணவன்-மனைவி கட்டாயம் வேலைக்குச்  செல்லும் மனப்போக்கு, குழந்தைகளிடம் இருந்து பெற்றோரைப் பிரித்துவிடுகிறது. இதில் இன்றைய தலைமுறை உடனடியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில், அவர்களும் முதியோர் இல்லங்களை எதிர்காலத்தில் நாட வேண்டியிருக்கும். 

worst conditions in S.C. students hostels : dinamani editorial: தலையங்கம்: சாயம் வெளுக்கிறது..

முறையான கருததுகள். சரியான கேள்விகள். எல்லாத் துறை மாணவர் விடுதிகளும் எல்லா ,டங்களிலும் பொதுவாக  இவ்வாறுதான உள்ளன. உணவிற்காக ஒதுக்கீடு செய்யும தொகையும் போதுமானதாக இல்லை. பல விடுதிகளில் சமையலர்கள் மட்டுமே பெரும்பாலும்  இருப்பர். விடுதிக் காப்பாளர்கள் சில நேரம்  வந்து  செல்வார்கள்.
எனவே, அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலையங்கம்: சாயம் வெளுக்கிறது...!

First Published : 24 Dec 2010 12:46:38 AM IST


இரு தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்தை நிலைகுலைய வைத்தது எம்.சி. ராஜா ஆதிதிராவிடர் மாணவர் விடுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் "வெளிசக்திகள்' இருந்ததாகச் செய்திகள் வந்தாலும், இதுபோன்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கான மாணவர் விடுதிகள் தங்குவதற்குத் தகுதியற்றதாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.  ஏற்கெனவே வசதிகள் குறைவாக இருக்கும் இத்தகைய விடுதிகளில் மாணவர்கள் தங்கிப் படிக்கச் சிரமப்படுகிறார்கள் என்பதோடு, இந்த அறைகளைப் பழைய மாணவர்களும் வேறு சிலரும் ஆக்கிரமித்துக் கொண்டு, இவர்களுக்கான உணவையும் தட்டிப் பறிக்கிறார்கள் என்பதை இத்துறையின் அமைச்சரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது.  இப்போதைய போராட்டத்துக்கு வேண்டுமானால் வெளிசக்திகள் காரணமாக இருக்கலாமேயொழிய, இந்த நிலைமைக்குக் காரணம் நிச்சயமாக வெளிசக்திகள் மட்டுமே அல்ல. தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், ஆதிதிராவிட மாணவர்கள் நல வாரிய அதிகாரிகளும்தான் இதற்கு முழுமுதற் பொறுப்பு. இவர்களது அக்கறையின்மையும் பின்னணியும் உள்ள ஊழலும்தான் இத்தகைய மோசமான நிலைமை உருவெடுத்ததற்கான காரணம்.  தமிழ்நாட்டில், 2009-ம் ஆண்டு மக்கள் சாசனத்தின்படி, 1,204 ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் உள்ளன. 82,636 மாணவர்கள் தங்கியுள்ளனர். இதில் பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 70,773. மீதியுள்ள சுமார் 11,863 மாணவர்கள் உயர்கல்வி பயில்வோர். கலைக் கல்லூரி, தொழிற்கல்வி, பாலிடெக்னிக், சட்டக் கல்வி, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக 81 விடுதிகளும், மாணவியருக்காக 55 விடுதிகளும் உள்ளன. கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் இந்த மாணவ மாணவியருக்காவது உரிய வசதிகள் செய்து தர வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் அரசும், அதிகாரிகளும் உள்ளதால்தான் இத்தகைய போராட்டம் வீதிக்கு வருகிறது.  ஆதிதிராவிட மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் அதிக அளவு நிதியை ஒதுக்குகின்றன. ஒவ்வோர் ஆண்டும் மாணவர் விடுதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் எந்தவொரு நகரை எடுத்துக் கொண்டாலும், ஆதி திராவிட மாணவர்களுக்காகக் கட்டப்படும் விடுதிகள் தரமானதாக, தங்கிப் படிப்பதற்கான வசதிகள் உள்ளதாக இல்லை. கழிப்பறைகள்கூட இடிந்து பாழ்பட்ட நிலையில்தான் இருக்கின்றன. இந்த நிலைமை பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளுக்கும் பொருந்தும்.  மாணவர் விடுதிக் கட்டடங்கள் ஓராண்டுக்குள்ளாகவே விரிசல் விட்டும், கதவுகள் பெயர்ந்தும், சன்ஷேட் அனைத்தும் உடைந்தும், கட்டடம் முழுதும் மழையில் சாதாரண குடிசைபோல ஒழுகுவதும்தான் வாடிக்கையாக இருக்கிறது. ஏதோ தர்மத்துக்குக் கட்டித் தருவதைப்போல, ஒப்பந்ததாரர்கள் ஏனோதானோ என்று கட்டிக் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்தான் இவை. இதைக் கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரர்கள்மீது இதுவரை ஒரு வழக்குக்கூட தமிழக அரசினால்-அது எந்த ஆட்சியாக இருந்தாலும்-பதிவு செய்யப்பட்டதில்லை.  ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளில் வழங்கப்படும் இலவச உணவின் தரமும் மோசம். இதற்குக் காரணம், அங்குள்ள விடுதிக் காப்பாளர்தான். ஒவ்வொரு மாணவருக்கும் குறிப்பிட்ட அளவு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அந்தப் பணம் முழுமையாக மாணவர்களின் சாப்பாட்டுத் தட்டுக்கு வந்து சேர்வதில்லை. பாதியில் யாரோ சாப்பிடுகிறார்கள். மாணவர்களின் உணவுக்காக வழங்கப்படும் அரிசி, பருப்பு "வெளியே கொண்டுபோய் தூய்மை செய்து கொண்டு வருகிறோம்' என்ற பெயரில் பட்டப்பகலிலேயே கடத்தப்படுகின்றன.  இந்த ஊழலுக்குத் துணையாக நிற்கவும், புதிதாக வரும் ஆதி திராவிட மாணவர்களை மிரட்டுவதன் மூலம் அடங்கிப்போகச் செய்யவும் அடியாள்களாக முன்னாள் மாணவர்களை விடுதிக் காப்பாளர்களே "நியமிக்கிறார்கள்' என்று மாணவர்களே புகார் சொல்கிறார்கள். இதை அதிகாரிகளிடம் சொன்னாலும் நடவடிக்கை இல்லை என்று சொன்னால், அதிகாரிகள் மனப்போக்கை என்னவென்று சொல்வது? நேர்மையான விடுதிக் காப்பாளர்கள் சிலரும்கூட, இதில் தலையிட அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  இந்த முன்னாள் மாணவர்கள் விடுதிகளில் தங்கிக்கொண்டு, அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வதன்மூலம், உண்மையான மாணவர்களின் நலன் முழுக்க முழுக்க கேள்விக்குறியாகிவிடுகிறது.  தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து, உயர்கல்வி பயிலும் ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள், பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகள் அனைத்திலும் ஆய்வு நடத்தி, அங்கு இப்போது உள்ள வசதி என்ன, எத்தனை மாணவர்கள் உண்மையில் தங்கியிருக்க வேண்டும், வெளிசக்திகள் தங்கியிருந்தால் அதற்கு ஆதரவாக இருக்கும் நபர்கள் யார் என்பதை மாணவர்களிடம் தனித்தனியாகப் பேசி, உண்மையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும். இதைச் செய்வதற்கும், சில அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு தயங்கும் என்றால், தாழ்த்தப்பட்ட மக்களை அரசாங்கமே தாழ்வாக நடத்துகிறது என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கும்.  புதிது புதிதாக சமத்துவபுரம் கட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். இருக்கும் ஆதிதிராவிட நல விடுதிகளை முதலில் முறையாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்க அரசு முன்வரட்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின்மீது இந்த அரசுக்கு இருக்கும் உண்மையான பரிவும் அக்கறையும் இந்த ஆதிதிராவிடர் நல விடுதிகளைப் பார்த்தாலே தெரிகிறதே...  தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசு என்று கூறும் ஓர் அரசு, ஆதிதிராவிடர் நலவிடுதிகளை மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும்படியான வசதிகளுடன் அமைத்து, அவர்களுக்கான வசதிகளை கூடுதலாகவே செய்திருக்க வேண்டாமா? இதுவரை செய்யாதது ஏன்?  

reservation to s.c.christians : தலித் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு; போராட்டம் நடத்தவும் தயார்: கருணாநிதி

நம் நாட்டில் தொண்டாற்றிய கிருத்தவர்கள் யாரும் இந்துவாக மாறவில்லை. திருவாசகத்தால் உருகி மொழிபெயர்த்த அறிஞர போப் அவர்களும் தன் சமயத்தில்  இருந்து மாறவில்லை. அதுபோல் இந்து சமயத்தினர் கிருத்துவ சமயக் கருத்துகளைப் படிப்பது தவறல்ல. ஆனால், சமய மாற்றம் என்பது ஆயிரத்தில் ஒன்றாக எப்போதாவது  நடைபெறுவதாகத்தான் இருக்க வேண்டும். சமய மாற்றம் பண்பாட்டு மாற்றமாக மாறுகிறது. தமிழர்களாகஇருப்பினும் பல கிருத்துவ அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. ஏறத்தாழ அனைத்துக் கிருததுவர்களுமே இந்துக்கள் அளிக்கும் பொங்கல் முதலான உணவினை இந்துக் கடவுளுக்கு வழிபாட்டில் அளித்திருப்பீரு்கள் என்று வாங்குவதில்லை. பள்ளிகளில் கிருத்துவர்கள் நடத்தும் கொடுமை தனி.  இத்தகைய சூழலில் சமயம் மாறியவர்களுக்குச் சலுகைகள் நீடிக்கக் கூடாது.  அதற்கு முதலவரும் போராடக் கூடாது. எல்லாச் சமயக் கருத்தையும் வரவேற்போம். ஆனால், சமய மாற்றத்தைக் கட்டுப்படுத்துவோம. அப்படியும் மாறினால் இப்பொழுது உள்ளதபோல் சலுகைகளை நிறுத்துவோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு; போராட்டம் நடத்தவும் தயார்: கருணாநிதி
First Published : 24 Dec 2010 12:21:43 AM IST

சென்னை, டிச.23: தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற போராடவும் தயார் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.  சென்னையில் வியாழக்கிழமை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மற்றும் அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அவர் பேசியது: கிறிஸ்தவ சமுதாயத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  நான் சார்ந்துள்ள கட்சி மட்டுமல்ல, சமுதாய இயக்கமும் கூட. அந்த இயக்கத்தில் எங்களை வழிநடத்தியவர்களில் பலர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முக்கியமானவர் நான் பிறந்த திருவாரூருக்கு அருகில் பிறந்த ஏ.டி. பன்னீர்செல்வம்.  ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துகொண்டு இருந்தது. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ராஜாஜி, பெரியாரும், சோமசுந்தரபாரதியும் மட்டும்தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்றார்.  அப்போது எழுந்த பன்னீர்செல்வம், ஹிந்தியை அந்த இருவர் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஹிந்தியை ஆதரிப்பது நீங்கள் மட்டுமே என்று பதிலடி கொடுத்தவர். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமாகப் போராடியவர்.  முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதைப்போல கிறிஸ்தவர்களுக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினோம். அதனால், அவர்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்ததும், அதனை நீக்கிவிட்டோம்.  இப்போது, என்னிடம் நீங்கள் 3 கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். தலித் கிறிஸ்தவர்களுக்கும் இந்து தலித்துகளுக்கு வழங்கப்படுவதைப்போல இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. யாராலும் மறுக்க முடியாதது.  இதுபோன்ற கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் வைத்துள்ளீர்கள். நீங்கள் என்ன கேட்டாலும் கொடுப்போம். நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்போம். இங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன்.  இங்கே பேசியவர்கள், நான் இந்தியாவையும், மத்திய அரசையும் ஆட்டுவிப்பதாகச் சொன்னார்கள். நான் யாரையும் ஆட்டி வைப்பவனும் அல்ல. ஆடுபவனும் அல்ல.  ஆனால், நீங்கள் என்னை ஆட்டிவைத்தால், நான் ஆடத் தயாராக இருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளுக்கு கலை உணர்வோடு நான் தரும் பதில் இதுதான்.  தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கால்டுவெல் போன்ற கிறிஸ்துவ அறிஞர்கள் பெரும் தொண்டாற்றியுள்ளனர். கால்டுவெல்லின் நினைவைப் போற்றும் வகையில் அடுத்த வாரம் நெல்லையில் நடைபெறும் நினைவு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன்.  சிறுபான்மை மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். சிறுபான்மை மக்களுக்காக எந்தத் தியாகம் செய்யவும் நாங்கள் தயார். ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றலாம். ஆட்சியில் இருந்தாலும் இன்னொரு அரசின் மூலம்தான் கோரிக்கை நிறைவேற்ற முடியும் என்றால் அறிவு, அணுகுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறைவேற்றுவோம். அப்படியும் நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்காக கிறிஸ்தவ மக்களோடு இணைந்து நான் போராடவும் தயாராக இருக்கிறேன்.  நான் இப்படிச் சொல்வதால் கிறிஸ்தவர்களைப் போராட்டத்துக்கு அழைக்கிறார் என்று யாரும் தவறாக நினைக்கக் கூடாது. உங்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் துணையோடு நான் நிறைவேற்றுவேன் என்றார் முதல்வர் கருணாநிதி.  விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ்,பேராயர்கள் ஏ.எம்.சின்னப்பா, தேவசகாயம், எஸ்றா சற்குணம், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா குவாட்ரஸ், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை போதகர் பால் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலக்குவனார் திருவள்ளுவர் அவேர்களே நீங்கள் சொல்லியது சூப்பர்.
By ulakanathan
12/24/2010 10:16:00 AM


Govt. will change-raghul said: ஆட்சி மாற்றம் வரும்: ராகுல் காந்தி

உடனே ஆட்சிக்குக் காங். வரும் என  இராகுல் பேசவில்லை. முதலில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால்தான் அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும்  என்கிறார். அவரைப் பொறுத்தவரை அவரது எண்ணம் சரிதான். ஆனால், மக்கள்  நலன் அடிப்படையில் காங்.அடியோடு வீழ்த்தப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஆட்சி மாற்றம் வரும்: ராகுல் காந்தி

First Published : 24 Dec 2010 01:08:53 AM IST


திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பிறகு அரங்கில் இருந்து வெளியேவரும் ராகுல் காந்தியை வாழ்த்த
திருப்பூர், டிச.23: "தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இளைஞர் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதன்மூலமே ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் வரும். தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் உள்ளதை விரும்பவில்லை' என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி கூறினார்.  இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த ராகுல், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர் ஆகிய இடங்களில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது:  125 ஆண்டுகள் வரலாறு கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இளைஞர் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதன்மூலமே ஆட்சிமாற்றமும், அரசியல் மாற்றமும் வரும். இப்போது தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் உள்ளதை விரும்பவில்லை.  காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை ஏற்படுத்தி முதல்வர் பொறுப்புக்கு வர வேண்டும்.  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களாகியுள்ளனர். ஆனால், ஊராட்சித் தலைவர் பதவிகளை தவறவிட்டுவிட்டோம். எல்லா இடங்களிலும் காங்கிரûஸ முன்னிலைப்படுத்தும்போதுதான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அதற்கு கிராமப்புற ஏழை மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கப் போராட வேண்டும். அதைச் செய்யாமல் ஆட்சியைப் பிடிக்க முடியாது. தொடர்ந்து, ஊராட்சி, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொறுப்புக்கு வர வேண்டும். அதற்கடுத்து, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி முதல்வர் பதவியையும் கொடுப்பது எனது வேலை.  காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் எளிமையாக வாழ்ந்து மக்களுக்காகப் பாடுபட்டனர். அத் தலைவர்களைப் போல் இங்கு பல இளைஞர்கள் உள்ளனர்.  தமிழக அரசியலில் மாற்றம் வர அத்தகையோர் முன்வர வேண்டும். தமிழகத்தில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றினால் முதல்வர் பதவி தானாகவரும் என்றார்.  கூட்டத்தில் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் இருந்ததைக் கவனித்த ராகுல், இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்த இளம் பெண்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். பெண்கள் சக்தி இல்லாமல் எந்தவொரு இயக்கமும் வலுப்பெறாது. தமிழகத்தில் நடைபெறும் ஊராட்சி, வார்டு தேர்தல்களில் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றார்.  முன்னதாக திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:  கக்கன் தலித் சமூகத்துக்கு மட்டும் தலைவர் அல்ல; இந் நாட்டுக்கே தலைவர். அவர் எளிமையாக வாழ்ந்து காட்டினார். அவர் பணத்தையோ, புகழையோ சேர்க்கவில்லை. அதனால்தான் இன்றும் நாம் அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். அடுத்தமுறை நான் இங்கு வரும்போது உங்களில் பல கக்கன்களைப் பார்க்க வேண்டும். கக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பதுடன் திருப்தி அடைந்துவிட்டால், நாம் தோல்வியடைந்து விட்டோம் என்றே பொருள்.  முதுபெரும் தலைவர்களை பின்னுக்குத் தள்ள...: இளைஞர் காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டால், முதுபெரும் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ள முடியும். அதற்கு நாம் அடிப்படையில் பலமாக வேண்டும். அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான், ஒரு கட்டடம் பலமானதாக இருக்க முடியும். எனவே நாம் முதலில் கட்சியின் அடிமட்டத்தைப் பலப்படுத்த வேண்டும்.  தமிழகத்தில் பிற கட்சிகளின் கொள்கைகளை நாம் மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். அது தவறு. நமது கட்சிக் கொள்கையை மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.  திருச்சியில்.... திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசியது:  அரசியல் மீது தமிழக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எனவே, நல்ல தலைவர்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் நாம் ஏற்படுத்த வேண்டும்.  பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு சட்ட மசோதா மக்களவையில் விரைவில் நிறைவேறவுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேறினால் தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல தேசிய அளவிலும் பெண்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும் என்றார் ராகுல்.  திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசும்போது, எப்போதாவது வந்துவிட்டு போய்விட மாட்டேன். உங்களைச் சந்திக்க இனி அடிக்கடி வருவேன் என்றார் அவர்.

Ooty scenery: உதகை உறைபனிக் காட்சிகள்

உதகை உறைபனிக் காட்சிகள்

First Published : 23 Dec 2010 04:20:41 PM IST


உதகையில் உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 6 டிகிரியாக குறைந்துள்ளது. உறைபனிக் காட்சிகள் கீழே:
கருத்துகள்

உறை பனி கண்டு உறைந்தேன்.படம் சிலிர்ப்பாக இருந்தது.அங்கு செல்ல ஆர்வமாக இருக்கிறது. அன்பு-கோவை , இருந்தது அங்கு செல் .
By N.Anbunathan
12/23/2010 6:59:00 PM
WOW !!!! Amazing
By Purush
12/23/2010 5:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *