வெள்ளி, 20 அக்டோபர், 2017

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 30 : ‘திருவாசகமும் நானும்’


ஐப்பசி 04, 2048 சனிக்கிழமை 21.10.2017 மாலை 6 மணி

சிரீராம் குழும அலுவலகம்

மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம்

மயிலாப்பூர் சென்னை 600 004
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

இலக்கிய நிகழ்வு

‘திருவாசகமும் நானும்’
சிறப்புரை : சந்தியா நடராசன்
[தமிழ் அறிஞர், மொழி பெயர்ப்பாளர், பதிப்பாளர்]

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
விருட்சம் இலக்கியச் சந்திப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு


     15 அக்தோபர் 2017      கருத்திற்காக..


 

வட்டுக்கோட்டை

இந்து வாலிபர் சங்கத்தினால்,

வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு

  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன.
 மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது கணவரும் கடந்த காலப் போரின் போது காலில் காயம் ஏற்பட்டு உள்ளே துணுக்கு உள்ளதால் நீண்ட நேரம் கூலி வேலை செய்ய முடியாது உள்ளது என்றும் குறிப்பிட்டுத் தங்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு தனது வீட்டு கூரைக்கான தகரங்களைத் தந்துதவுமாறு ஊர்ச்சேவையாளரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்திற்க்கு அமைவாக கனடாவைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட அன்பரின் நிதி உதவியுடன் அவர்களுக்கான கூரைத் தகடுகள் வழங்கி வைக்கபட்டுள்ளன.

Jaffna University students boycott classes against manipulative justice of genocidal Sri Lanka

Jaffna University students boycott classes against manipulative justice of genocidal Sri Lanka


The students at the University of Jaffna on Friday launched a university-wide boycott of classes until further notice as student leaders are scheduled to discuss future course of protest action in support of the fast-unto-death being waged by the Tamil Prisoners of War languishing in the jails of genocidal Sri Lanka. The boycott on Friday was led by Tamil students and the students from other provinces, numbering around 41% of the total students, have also joined the protest heeding the request from the Jaffna University Student Union (JUSU). The protest comes after the leaders of the JUSU met SL President Maithiripala Sirisena on Thursday demanding the SL president to address the demands of Tamil political prisoners who are on a fast-unto-death campaign for the last 25 days. 

However, Mr Sirisena was asking more time until Wednesday next week to consult with SL Attorney General and Justice Minister, the student leaders said. He was also asking more time last Saturday, when he came to Jaffna. 

Most of those who accompanied SL President in the meeting with the students on Thursday were not prepared to grasp the perspective of the protesting Tamil prisoners. They were asking what was wrong with the Special Court in Anuradhapura investigating their case. 

The attitude of those representing the unitary State was not at all reconciliation, but manipulation and deviation, the student leaders said.

Mr Sirisena also met the families of the protesting Tamil prisoners along with NPC Councillor M.K. Shivajilingam prior to his meeting with the JUSU leaders on Thursday.

The families who accompanied Mr Shivajilingam also said they felt humiliated by the conduct of SL Governor Reginald Cooray.

SL State Minister of Defence Mr Ruwan Wijewardene, SL President’s Secretary Mr Kalupage Austin Fernando, SL Cabinet Minister of Law and Order Mr Sagala Ratnayake, Minister of Prison Reforms, Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs Mr D.M. Swaminathan, SL Governor to North Mr Reginald Cooray and other defence officials accompanied SL President in his meeting with the families and the student leaders. 

In the meantime, 70 Tamil political prisoners detained at New Magazine Prison in Colombo have also submitted a written request to Jaffna University Student Union urging the students to fight for their release with dignity. 

Since the JUSU was behind postponing a fast-unto-death campaign announced unilaterally by the Arts Faculty Student Union earlier in the week and as the health of the three political prisoners on 25th day of the fast-unto-death in Anuradhapura prison would become life-threatening within the next five days, the JUSU leaders said Thursday evening that there was no other option than stepping up the protest after consulting with fellow students. 

The student leaders are meeting again on Friday noon to discuss further course of action.
Chronology:

Sirisena disappoints student leaders, Cooray humiliates families of hunger-striking prisoners

Sirisena disappoints student leaders, Cooray humiliates families of hunger-striking prisoners


The Leader of Jaffna University Students Union (JUSU) K. Krishnameenan and Secretary K. Jackson on Thursday evening said their negotiations with SL President Maithiripala Sirisena earlier on the day have failed to produce a favourable timeframe for meeting the demands of the hunger-striking Tamil political prisoners. Since the JUSU was behind postponing a fast-unto-death campaign announced unilaterally by the Arts Faculty Student Union earlier in the week and as the health of the three political prisoners on 25th day of the fast-unto-death in Anuradhapura prison would become life-threatening within the next five days, the JUSU leaders said Thursday evening that they now have no other option than stepping up the protest after consulting with fellow students. 


JUSU statement
JUSU statement
JUSU statement

In the meantime, the kith and kin who met the SL President with NPC Councillor M.K. Shivajilingam said that the SL Governor was almost insulting them at the meeting. 

“The SL government could of course think about releasing all Sinhala, Tamil and Muslim prisoners in the prisons, but there were security, law and order issues for which the Government have to be answerable,” Mr Cooray was telling the families in a humiliating manner, the families said. 

The SL Governor has also phoned Mr Shivagilingam after the meeting to say that the meeting with SL President was ‘productive’ and that Shivagilingam’s performance in the meeting was ‘appreciated’. 

SL President’s meeting with JUSU leaders took place at 1:40 p.m. after his meeting with the families of the political prisoners. 

Mr Sirisena was asking a time frame until next Wednesday (25 October), which is not at all compatible with the prevailing situation, the student leaders said. The SL President was saying he needed time as the Justice Minister and the Attorney General were on travel and that he could only meet them on Monday. 

SL State Minister of Defence Mr Ruwan Wijewardene, SL President’s Secretary Mr Kalupage Austin Fernando, SL Cabinet Minister of Law and Order Mr Sagala Ratnayake, Minister of Prison Reforms, Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs Mr D.M. Swaminathan, SL Governor to North Mr Reginald Cooray and other defence officials accompanied SL President in his meeting with the families and the student leaders. 

The JUSU leaders said in a hand-written statement in Tamil released to media on Thursday night that they were disappointed with the outcome and wanted to discuss with their fellow students Friday morning before launching the next phase of the struggle. 

In the meantime, 70 Tamil political prisoners detained at New Magazine Prison in Colombo have also submitted a written request to Jaffna University Student Union urging the students to fight for their release with dignity. 

There are 132 Tamil Prisoners of War languishing in the prisons of genocidal Sri Lanka. 

But, the whereabouts of hundreds more, handed over to SL military after Tamil people entered the territory controlled by SL military in Mullaiththeevu and Vavuniyaa in 2009, is not known. The kith and kin of the enforced disappeared are also waging continuous protests in Ki’linochchi and Vavuniyaa.
Chronology:


Eastern Provincial Land authority discriminates Tamils


Eastern Provincial Land authority discriminates Tamils


The Department of Land Administration in the Eastern Province is ethnically biased against the Tamil-speaking people of the district, Tamil civil officials at the District Secretariat said. Tamil National Alliance parliamentarians such as K Thuraratnasingham are very well aware of the ethnic discrimination, but they have been unable to bring any change due to the collaborationist agenda of Opposition Leader R. Sampanthan, the officials said. The discrimination has escalated in recent times and the Sinhala officials are systematically ignoring the requests coming from the Divisional Secretaries of the Tamil-speaking divisions in the district. Requests for convening Land Kachcheri are also being neglected to escape resolving the burning issues of uprooted Tamil people. 

Many land-owners among the uprooted Tamils are unable to gain access to their lands despite being in possession of land deeds to prove their ownership. 

SL Forest Department has seized their lands and claims these as ‘state lands’. The Eastern Provincial administration is systematically dodging to address the disputes despite repeated requests to do so. 

Provincial Land Commissioner is the head of the Department of Land Administration. 

Land matters are said to be decentralized to divisional level and it is executed by the Divisional Secretariat. But, DS officials need assistence by Land Officers, Colonization Officers and field instructors to resolve the complicated matters. 

Eastern Provincial Land Commissioner D.D. Anura Dharmadhasa, a Sinhala official, has already come under fire from Tamil-speaking activists in the Eastern Province for his open support to extremist Sinhala Buddhist Bodu Bala Sena (Buddhist Power Force), especially on the controversial erection of Buddha statue at Maayak-kalli-malai in Ampaa'rai. 

The Provincial Land office has been controlled by Colombo since the de-merger of North-East and the establishment of the office on 01 January 2007 in Trincomalee. 

The land alienation, administration and management of settlement scheme other than ‘inter provincial schemes’ such as the Mahaweli scheme come under the purview of the Provincial Council administration.


வியாழன், 19 அக்டோபர், 2017

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 – இ.பு.ஞானப்பிரகாசன்

நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3

கடவுளைப் பூசிப்பதில் தமிழர்களுக்கே உரிய தனித்தகுதிகள்!
  “தமிழர்களுக்கு எனத் தனிச் சமயம் கிடையாது. இந்து சமயமே தமிழர் சமயம்! தமிழர்கள் இந்துக்களே! தமிழ்ச் சமயம் என்பதும் இந்து சமயத்தின் ஒரு பகுதியே!” என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள் இந்து சமய அடிப்படையாளர்கள். ஆனால், இந்து சமயத்துக்கும் தமிழர் சமயத்துக்கும் அடிப்படையிலேயே பெருத்த முரண்பாடு உண்டு!
  “கடவுள் என்பவர் அனைத்து வல்லமைகளும் கொண்டவர். அவர் மேலுலகில் வாழ்கிறார். அவருக்கு அழிவு என்பதே கிடையாது. அவர்தான் உலகத்தையும் உயிர்களையும் படைத்தார்” – இதுதான் உலக சமயங்கள் அனைத்துக்கும் பொதுவான இறைக் கொள்கை.
  இந்து சமயமும் இதற்கு விலக்கில்லை. பிரம்மன் இருப்பது பிரம்மலோகம்; திருமால் வாழ்வது வைகுண்டம்; தேவர்கள் உறைவது தேவலோகம் என ஒவ்வொரு கடவுளும் வெவ்வேறு உலகங்களில் இருப்பதாக இந்து சமயம் கூறுவதே இதன் அடையாளம். கடவுளுக்குப் படைக்க விரும்பும் பொருட்களை அந்தந்தக் கடவுளுக்கான வேள்வித் தீயில் போட்டால் எரிந்து புகையாக மேலெழுந்து மேலுலகில் உள்ள கடவுள்களை அடையும் எனும் கோட்பாட்டைக் கொண்ட வேள்வி முறைகளை இன்றும் பிராமணர்கள் கடைப்பிடித்து வருவதும் இதன் அடிப்படையில்தான். கடவுள்தான் உலகத்தையும் உயிர்களையும் படைத்து – காத்து – அழித்து வருகிறார்; அவருக்கு அழிவே இல்லை எனும் கோட்பாடுகளும் இந்து சமயத்தில் ஆழமாக வேரூன்றியவையே.
  ஆனால், தமிழர் கடவுள் கொள்கை இதற்கு முற்றிலும் நேர்மாறானது. இயற்கை வழிபாடும், தம்மிடையே வாழ்ந்து மறைந்த மனிதர்களை – அவர்தம் நினைவைப் – போற்றுவதும்தாம் தமிழர் இறைக் கொள்கை.
  கதிரவனைத் தொழும் பண்டிகையான பொங்கல் விழா, காவிரி முதலான நீர்நிலைகளை வணங்கும் ஆடிப்பெருக்கு ஆகியவை இயற்கையையே இறையாய்ப் போற்றும் தமிழர் மரபுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றும் சான்று பகர்கின்றன.வேப்பமரம், அரசமரம் போன்ற தெய்வீக மரங்களைத் தமிழர்கள் இப்பொழுதும் வணங்கி வருவதும், எல்லாக் கோயில்களிலும் தலமரம் என ஒன்று இக்காலத்திலும் இருப்பதும் இதற்கான மேலும் சில சான்றுகள். இவை போக, பண்டைத் தமிழ்க் கடவுள்களாகச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மாயோன் என்கிற திருமால், சேயோன் என்கிற முருகன், வேந்தன், வருணன் ஆகியோரும் உண்மையில் இயற்கையின் வடிவங்களே எனத் தமிழறிஞர்கள் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். (இதன் மூலம் இந்தக் கடவுள்கள் யாவரும் தமிழ்க் கடவுள்களே என்பதும் உறுதியாகிறது!).
  இதே போல் உயிர் நீத்தவர்களை – அவர்களின் நினைவைப் – போற்றுவதையும் தமிழர்கள் இறைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் நிறையவே உள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களிடையே இன்றும் நீடித்திருக்கும் சாவுச் சடங்குகள் இதற்குக் கண்கூடான சான்றாய் விளங்குகின்றன!
  தம் குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்த பின், அவர் உயிர் விட்ட இடத்தில் (அல்லது உயிர் போன பின் அவரைக் கிடத்தி வைத்திருந்த இடத்தில்) சுவரில் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டிட்டு, அந்த வரைபடத்தையே இறந்தவரின் உருவமாகக் கருதி அதற்கு முன்பு விளக்கேற்றி வைத்தும் படையலிட்டும் வழிபடுவது தமிழர் இல்லங்களில் இன்றும் உள்ள வழக்கம். அதன் பிறகும் ஓராண்டுக் காலத்துக்கு வேறு கடவுள் எதையும் தொழாமல், பண்டிகை நாட்கள் அனைத்திலும் இந்த வரைபட உருவத்தையே கடவுளாக எண்ணி வழிபடுவார்கள். இதுவும் தவிர, இதே போன்ற சுவர் வரைபடம் ‘நடுவீடு’ என்கிற பெயரில் தமிழர் இல்லங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருப்பதும், வீட்டில் எத்தனை கடவுள் படங்கள் இருந்தாலும் தமிழர் பண்டிகைகள் அனைத்தும் இந்த நடுவீட்டு உருவத்தின் முன்னிலையிலேயே கொண்டாடப்படுவதும் இறந்தவர்களைப் பூசிப்பதே தமிழர் மரபு என்பதன் கண்கூடான அத்தாட்சிகள்!
  தன் குடும்பத்துக்காக வாழ்ந்து மறைந்த ஒருவர் இறந்தால் அவர் வீட்டில் உள்ளவர்கள் அவரை இப்படிப் பூசிக்கிறார்கள். இதே போல நாட்டுக்காக, மக்களுக்காக, குமுகத்துக்காக (சமூகத்துக்காக) வாழ்ந்த / உயிர் விட்ட ஒருவரை இது மாதிரியே அவர் நினைவாகப் பொது இடத்தில், வெட்டவெளியில் ஒரு கல்லை நட்டு, அதில் மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்து அதற்கு முன்னே விளக்கேற்றிப் படையலிடுவது தமிழ்க் குமுகத்தின் வழக்கமாக இருந்துள்ளது. இதையே ‘நடுகல் வழிபாடு’ என்கிறோம். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்று திருவள்ளுவர் பாடியதும் இதைத்தான் என்றால் அது மிகையில்லை.

எல்லாக் கடவுளரும் தமிழ்க் கடவுளரே!
  ‘நடுகல் வழிபாடு’ தமிழர்களின் மிகப் பழமையான பூசை முறை. பழந்தமிழ் இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன. தொடக்கத்தில், போரில் வீரச் சாவைத் தழுவியவர்களைப் போற்றுவதற்காக ஏற்பட்ட இவ்வழிபாடு பிற்காலத்தில், குமுகத்துக்காகவும் மக்களுக்காகவும் கொள்கைக்காகவும் போற்றுதலுக்குரிய வகையில் வாழ்ந்த / மறைந்த எல்லோரையும் வணங்கும் முறையாக வளர்ந்தது. இன்று கோயில்களில் வழிபடப்பெறும் பெரும்பாலான தெய்வங்கள், தொடக்கத்தில் இப்படி நடுகற்களாகப் பூசிக்கப்பட்டவையே! இது வெறும் கற்பனையில்லை. தக்க சான்றுகள் உள்ளன.
புறப்பொருள் வெண்பா மாலை என்னும் பழந்தமிழ் நூல் ஒன்றில்,
வேத்த மருள் விளிந்தோன் கல்லென
ஏத்தினர் துவன்றி இற்கொண்டு புக்கன்று
என ஒரு வரி வருகிறது. “வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்று கூடிக் (அந்தக் கல்லுக்குக்) கோயில் எடுத்தல்” என்பது இதன் பொருள். நடுகல்லாக வழிபடப்பட்டவைதாம் பின்னர் கோயில்களாயின, கோயில் சிலைகளாயின என்பதற்கான சான்றாவணம் இது!
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று மரபில் கல்லொடு புணர – (புறத்திணை இயல், 5)
என்று நடுகல் வழிபாட்டு முறை பற்றிப் படிப்படியாக விளக்கும் தொல்காப்பியப் பாடலும் இந்த வழக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
  சிவபெருமான் என்பவர் அனைத்து வல்லமைகளும் பொருந்திய பெருந்தெய்வம் என்பது இன்றைய நம்பிக்கை. ஆனால், தமிழ்ச் சூழலில் இவர் சித்தராகவே அறியப்படுகிறார்.
  சங்க காலத் தமிழ்க் கடவுளான கொற்றவை கூட நடுகல் வழிபாட்டுத் தெய்வமாகவே அறியப்படுகிறார். இந்தக் கொற்றவையே ஆரிய – தமிழ் இனக்கலப்புக் காரணமாகப் பின்னாளில் துர்க்கை, உமையவள், அம்பிகை, அம்பாள், பராசக்தி என்ற பெயர்களால் வழிபடப்பட்டார் என்பதை இந்தப் பெண் கடவுள்களுக்கும் கொற்றவைக்கும் இடையிலுள்ள தோற்றம் – இயல்பு – வழிபாட்டு முறை ஆகியவற்றின் ஒற்றுமைகளைக் கொண்டு நன்கு அறியலாம்.
  ‘மலைமகள்’ என்றழைக்கப்படும் இந்தப் பெண் கடவுளின் மகனே இன்னொரு தமிழ்க் கடவுளான ‘முருகன்’ எனக் குறிப்பிடப்படுவதும், மலைமகளின் மகனான இவனே மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிக்குக் கடவுள் என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருப்பதும் ஒப்பு நோக்க வேண்டியவை. இன்றும் முருகன் கோயில்கள் பலவும் மலை மேல் அமைந்திருப்பதும், ‘குன்றுதோறும் குடி கொண்ட குமரன்’ என முருகன் போற்றப்படுவதும் சிந்திக்கத்தக்கவை.
  தமிழர்களுடைய இயற்கை வழிபாட்டு முறைக் கடவுளே திருமால் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு ஏதுவாக, “தங்கள் கண்ணுக்குப் பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, ‘மால்’ என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்” என்ற தமிழறிஞர் திரு.வி.க அவர்களின் கூற்றையும், “மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” என்ற ஈழத்து அறிஞர் கா.சிவத்தம்பி அவர்களின் சொற்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஆக, இன்று கோயில்களில் பூசிக்கப்படும் கடவுளர்கள் எல்லாரும் தமிழ்க் கடவுளர்களே! நடுகற்களாக ஒருகாலத்தில் தமிழர்களால் பூசிக்கப்பட்டவர்களே! அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் இதே தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த இம்மண்ணின் மனிதர்களே!
கோயிலிலுள்ள கடவுள்கள் பற்றி இதுவரை பார்த்தோம். இனி, கோயில் பூசை முறைகள் பற்றிப் பார்ப்போம். அடுத்த பகுதியில்!
– தொடரும்
– இ.பு.ஞானப்பிரகாசன்
[‘அனைத்துச் சாதியினரும் பூசாரியாகலாம்’ என அண்மையில் கேரள அரசு சட்டம் இயற்றியிருப்பதைப் பாராட்டுகிறோம்.  தமிழ்க் காப்புக் கழகத்தால் நடத்தப்பட்ட ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் கட்டுரைப் போட்டியில் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில்  தை 16 , 2047 / சனவரி 30 , 2016  இல் வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களால் உரூ.3000/- பரிசில் வழங்கிப் பாராட்டப்பெற்ற  திரு இ.பு.ஞானப்பிரகாசன் கட்டுரையை  இந்த நேரத்தில்,  வெளியிடுகிறோம்.]