சனி, 26 நவம்பர், 2016

University of Jaffna commemorates Tamil Eelam Heroes

University of Jaffna commemorates Tamil Eelam Heroes

[TamilNet, Friday, 25 November 2016, 22:47 GMT]
Delivering a sharp message against the threats coming from armed Sinhala policemen of genocidal Sri Lanka, who stormed the hostel premises in the early hours of Wednesday and warned the students not to mark Tamil Eelam Heroes Day, the entire University on Friday confluenced at Kailaasapathy Hall commemorating Tamil Eelam Heroes Day. Academics and students, including Muslim and Sinhala students, took part in the memorial event lighting candles in front of the symbol of Kaarthikaip-poo, the flower declared by the Liberation Tigers of Tamil Eelam as the national flower of Tamil Eelam. Photos celebrating the life of LTTE Leader Veluppillai Pirapaharan and posters paying tribute to fallen Tamil Eelam Heroes were put up at several places. The move, planned in total silence, was quickly mobilised as the students wanted to mark it before the weekend this year.
Maaveerar Naa'l, Jaffna University


The SL police and military intelligence didn’t expect the commemoration on Friday and the event was openly marked without any harassment.

The entire University community in Jaffna wanted to pass a strong message to the world.

“The invincible heroes of the independent struggle of Tamil Eelam, were not prepared to surrender the sovereignty of Eezham Tamils and they sacrificed their lives with dignity. None of them militarily surrendered the struggle. The sovereignty and independence of Eezham Tamils are not negotiable and would brook no compromise, as the doyen of Eelam Tamil sovereignty movement proclaimed it 47 years ago in 1969,” a student leader of Jaffna University Student Union said.
Maaveerar Naa'l, Jaffna University


In the meantime, Tamil politicians, grassroots activists and the students of Jaffna University also joined the families of Tamil Heroes in cleaning the remaining structures at one of the Tamil Eelam Heroes cemeteries (Maaveerar Thuyilum Illam) at Kanakapuram in Ki’linochchi.
Maaveerar Naa'l, Jaffna University
Maaveerar Naa'l, Jaffna University


A video showing some of the remaining structures at Kanakapuram thuyilum illam, published in September 2016, follows:


Maaveerar Naa'l, Jaffna University


Chronology:

Mannaar Magistrate issues interim order against Sinhala colony in Musali

Mannaar Magistrate issues interim order against Sinhala colony in Musali

[TamilNet, Thursday, 24 November 2016, 19:01 GMT]
Mannaar Magistrate A G Alex Raja on Thursday issued interim order against the infrastructure work at Kaayaa-kuzhi, where Colombo's Director General of Department of Fisheries & Aquatic Resources was silently engaged in creating a permanent coastal Sinhala colony for 83 Sinhalese from South. Tamil and Muslim fishermen jointly protested against the move on 09 November. On the following day, the Tamil-speaking fishermen protested when Sinhala fishermen who had come from Negombo were putting up fishing huts (vaadis) at the locality. The Senior Superintend of SL Police was attempting negotiate a deal between the Tamil-speaking fishermen and the intruding Sinhala colonists. As the local fishermen were not prepared for any compromise on the structural genocide against them, the police was forced to bring the case to the Magistrate’s Court in Mannaar.

The representatives of the protesting Tamil-speaking fishermen in Musali blamed Colombo-regime for instigating ethnic tension in Musali division. The SL Navy and Police are already at odds over the villagers capturing Sinhala navy personnel who were engaged in a series of robberies and misconduct at Arippu.

SL police that attempted to negotiate a deal in favour of the Sinhala settlers chose to detain 6 Sinhalese fishermen and 6 Tamil-speaking fishermen and brought them to the court in Mannaar on Thursday.

Six lawyers, Hunais Farook, Emmanuel Caius Feldano, M.M. Saburdeen, S. Primus Sirayva, Jebanesan Logu and Anton Punithanayakam, represented Tamil-speaking fishermen from Chilaavath-thu'rai, Kokkuppadaiyaan and Ko'ndachchi while a Sinhala lawyer from South represented the Sinhala fishermen.

Issuing a temporary order against continuing the infrastructure work of the planned Sinhala colony until next hearing on 19 January 2017, Mannaar Magistrate Alex Raja also released the 12 fishermen on personal bail bond.

The decision by Mannaar Magistrate coincides with the resolution passed by the District Development Committee meeting demanding Colombo to put an immediate stop to the controversial Sinhala colony at Kaayaa-kuzhi. The DDC meeting was co-chaired by Tamil and Muslim politicians of the Northern Province on Monday.
Mu'l'likku'lam
Mu'l'likku'lam and other SL Navy and Army bases in the region [Map courtesy: Google Earth, Legend by TamilNet]
Kaayaa-kuzhi is situated between Ma'richchuk-kaddi, a Muslim village and SL Navy occupied Mu'l'lik-ku'lam, which is a Tamil village.

Musali division of Mannaar district is bordering with Anuradhapura district (North-Central Province) and Puththa’lam district (North-Western province).

In Mannaar district, Ko’ndachchi-Chilaavaththu’rai, Thalaimannaar Pier and Madu have been particularly targeted for Sinhala-Buddhist colonies by the genocidal government in Colombo.

While SL Navy is occupying strategic coastal areas of Musali, SL Defence Ministry and Colombo's civil departments such as Cashew Corporation are engaged in Sinhalicisation of Kondaichchi farm and other areas along the borders of Musali.
Mu'l'likku'lam
The river flowing and entering the Gulf of Mannaar at Mu'l'likku'lam is the boundary between the Northern and the North Western Provinces. The Vilpattu reserved forest south of the boundary was scattered with a number of Tamil villages before it was declared a reserved forest in 1903. The Tamil territory was contiguous up to Negombo in the Western Province at that time, before the Sinhalicisation of the Tamil Catholics of today's Puththa'lam and Gampaha districts. [Map courtesy: Google Earth, Legend by TamilNet]
Mu'l'likku'lam
Mu'l'likku'lam village and the land declared for SL naval cantonment. [Map courtesy: Google Earth, Legend by TamilNet]

வெள்ளி, 25 நவம்பர், 2016

தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர்

தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர்

1909 – நவம்பர் 17
  இன்றைய நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள, வாய்மைமேடு ஊரில் பிறந்தவர், இலட்சுமணன். எட்டாம் வகுப்பு படித்த போது, அவரது பெயரை, ‘இலக்குவன்’ எனத், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் மாற்றினார்.
  திருவையாறு அரசர் கல்லுாரியில், புலவர் பட்டம் பெற்றார். 1963 இல், மதுரை தியாகராசர் கல்லுாரியில் பணியாற்றிய போது, தொல்காப்பியத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, விரிவாக ஆய்வு அறிக்கையும் வெளியிட்டார். இதற்காக, சென்னை முதல் குமரி வரை, இவருக்குப் பாராட்டு விழாக்கள் நடந்தன!
  தமிழக முதல்வராக அண்ணாதுரை பொறுப்பேற்றபோது, போப்பு ஆண்டவருக்கும், அமெரிக்க நுாலகங்களுக்கும், இந்நுாலை பரிசளித்தார்.
  கருணாநிதி, கி.வேங்கடசுப்ரமணியன், நல்லகண்ணு, க.காளிமுத்து, நா.காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாபு உள்ளிட்டோர், சி.இலக்குவனாரின் மாணவர்களில் சிலர்!
  மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில், எண்ணற்ற நுால்கள் இயற்றியுள்ளார். 1973 செப்., 3 ஆம் நாள் இறந்தார்.
  தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த  நாள் இன்று!
அரிமா இலக்குவனார், தினமலர் ; dinamalar_ithenaalil_ilakkuvanar

தினமலருக்கு நன்றி!

  தினமலரில் ‘இதே நாளில் அன்று’ என்னும் தலைப்பில் தலைவர்கள், அறிஞர்கள் முதலானவர்கள்  பிறந்தநாள், நினைவு நாள் குறிப்புகள். வருகின்றன. இதில்  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பு விடுபட்டிருந்தது. செம்மொழிம நாட்டைப்பற்றிய 100 தமிழறிஞர்கள்பற்றிய கட்டுரைகளில் பேராசிரியர்  முனைவர் சி.இலக்குவனார்பற்றிய  கட்டுரையும் ஒன்று.  எனினும் வரலாற்றுக்குறிப்பு போன்ற இப்பகுதியில் விடுபட்டிருந்ததைக் குறிப்பிட்டுத் தினமலருக்கு ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் மடல் அனுப்பியிருந்தோம்.  ஒரு வரி குறிப்பாக இல்லாமல் சிறுகட்டுரையாகவே ‘தினமலர்’  வெளியிட்டுள்ளது.
 தினமலருக்கு நன்றியும் பாராட்டும்!
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,
ஒருங்கிணைப்பாளர்,
இலக்குவனார் இலக்கிய இணையம், சென்னை 600 091

Colombo's military, police threaten grassroots not to mark Tamil Eelam Heroes’ Day

Colombo's military, police threaten grassroots not to mark Tamil Eelam Heroes’ Day

[TamilNet, Wednesday, 23 November 2016, 16:06 GMT]
The occupying Special Task Force (STF) commandos, trained once by the British and who are complicit in the crime of genocide, crime against humanity and war-crimes have been threatening the public in Batticaloa, particularly in villages situated between Aaraip-pattai (Aaraiyam-pathi) and Ka'luvaagnchik-kudi, that there was a ban of gathering in force between November 20 and November 30. In the meantime, SL Minister Rajitha Senaratne went on record stating that the SL military ‘would be dealing with’ those marking Tamil Heroes Day on November 27. The SL ministers have been instructed by SL Commander-in-Chief and President Maithiripala Sirisena to propagate a message that honouring war-dead LTTE members was harmful to ‘reconciliation’.

Ea'raavoor Rural Development Association (RDA) chairman has said that the SL authorities have informally instructed the grassroots organisations not to organise any meeting between November 20th and November 30th.

In the meantime, armed Sinhala policemen stormed the hostel premises of Jaffna University in the early hours on Wednesday while a section of students were celebrating a birth day. Armed Sinhala policemen claimed that they had information that the students were gathered to observe Tamil Heroes Week and warned the students at gun-point.

The armed policemen were referring to the killing of two Tamil students at Kokkuvil and threatened them saying they were being carefully ‘watched’.

In Vanni, particularly at Kanakaraayan-ku'lam, families of Tamil War Heroes, were silently engaged in cleaning some of the remaining structures at the bulldozed Heroes Cemetery. SL military intelligence operatives have visited the families issuing warnings against such work, news sources in Vanni said.

Chronology:

வியாழன், 24 நவம்பர், 2016

மாவீரர்களைச் சிறப்பிப்போம்!-வவுனியா மாவட்ட மக்கள் குழு




மாவீரர் நாள், விளக்கேற்றல் ; maaveerarnaal_vilakku

மண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த்  தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம்!

  கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!!


‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு.
  படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க  ஆற்றல்களின்  அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித்  தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது.
 போர் அறம் வழுவி சிறீலங்கா அரசால் நடத்தப்பட்ட இந்த மாபெரும் தமிழ் இன அழிப்புப் போருக்குப் பின்னரும் கூட, இலங்கைத்தீவில் ‘தமிழ் மக்கள்’ என்று சொல்லப்படுகின்ற ‘தமிழ்த் தேசிய இனம்’ உயிர்ப்பிழைத்திருக்கிறது என்றால்,  இந்த அருமை பெருமைகள் எல்லாம், புல் பூண்டு செடி கொடி மரம் காடு கரம்பை, கல், கட்டடம், விலங்குகள், மனிதர்கள் என்று எதிரே இருக்கும் எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு வரும் ‘மடை திறந்த வெள்ளத்தைப் போல’, நிலப்பசி எடுத்துப் புறப்பட்டு வந்த சிறீலங்காவின் நிலக்கவர்வுப் படைகளைத், தமிழர் தாயகத்தின் எல்லைகளில் நெஞ்சுரத்தோடும் – நேர்மைத்திறனோடும் எதிர்த்து நின்று மண்ணுறங்கும் மாவீரர்களையே சேரும். மாவீரர்களின் உயிர்க்கொடையே இன்றுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் உயிர் வாழ்வு ஆகும்!
 பௌத்தப் பேரினவாதச் சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்துக்கிடக்கும் சிறீலங்கா நாட்டுக்குள், தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை, பண்பாடு மரபுரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக – மீட்பர்களாக – மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக்கப்பட்ட ‘தமிழீழ நடைமுறை நிருவாக அரசை’ நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் ஒரே  ஒற்றைச் சார்பாளர்களாவர்!
  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், தரகர்கள் அல்லர். அவர்கள் போராளிகள்! அன்றே இந்திய மனநிலையை  எதிரொலிக்காமல், தமிழ் மக்களின்  மனநிலையை  எதிரொலித்தவர்கள். யார் எம்மை  வற்புறுத்திிப்பினும் வல்வளைப்பு செய்யினும், ‘பணிந்தும் – குனிந்தும் கொடாமல், சேவகம் செய்து கெடாமல், நம்மால் முடிந்ததைச் செய்கின்றோம். முடியவில்லை என்கிறபோது செத்து மடிகின்றோம்’ என்று தாம் வரித்துக்கொண்ட உயரிய கொள்கைக்காகவே வாழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்கள்.
  தமிழர் தேசத்தின் அசைவியக்கமாகிய இந்த மாபெரும் தூய விடுதலை இயக்கத்தின் கொள்கை வழி நின்று, உண்மை வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் – அரசியலுரிமைக்காகவும் ஆயுதமொழி பேசி, தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்து, தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச்சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்: நவம்பர் 27.
  ஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம், மலைபோன்ற மக்கள்   ஆற்றலால் மானசீகமாக பொத்திப்பொத்தி பெருநெருப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அதன் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் வரலாற்றின் அத்தியாயங்களை அசைத்துப்பார்த்தே கடந்து வந்திருக்கிறது. இத்தகைய அனைத்துவல்லமை பொருந்திய மக்கள் போராட்டத்திலே, பல ஆயிரம் அக்கினிக்குஞ்சுகளை நாங்கள் ஈன்றிருக்கின்றோம். இனமானப்போருக்கு உவந்தளித்திருக்கின்றோம்.
   ஈழதேசத்திலே ‘மக்களுக்காக மக்கள்’ நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தின்பால் உள்ளீர்க்கப்பட்டு, ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகியர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து பற்றுறுதியுடனும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துவோமாக!
   நவம்பர் 27 அன்று வழமை போன்றே இம்முறையும், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரத்தில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு மாலை 6.05 க்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும்.
   ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர், போராளி, குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், குடிமை, சமுக, மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர  ஆதன்(ஆத்மாக்)களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம்.
  கூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் நவம்பர் 27 அன்று மாலை 6.05க்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த் தட்டி எழுப்பிச்சிறப்பிக்கும் தேசியப் பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட  மக்கள் குழுவினர்

தொடர்புகளுக்கு:
தலைவர், கோ.இராசுகுமார் 0094 77 854 7440
செயலாளர், தி.நவராசு
ஊடகப்பேச்சாளர், அ.ஈழம் சேகுவேரா 0094 77 6699 093 (பகவி – viber)
வவுனியா மாவட்ட மக்கள் குழு ; vavunia_makkal_kuzhu_maaveerarnaal