வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்

 அகரமுதல






தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்

ஆடி 22, 2053 ஞாயிறு , 07.08.2022, காலை 10.00

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

கலைமாமணி குத்தாலம் மு.செல்வம்

பரதக் கலாலயப் பள்ளி

திருபுவனம் ஆத்துமநாதன்

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை

கலைச்சுடர் மணி சசிரேகா

கனகசபை பரதநாட்டியப் பள்ளி

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                             

வரவேற்புரை: தமிழாசிரியை (உ)ரூபி

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை:  எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்






செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023

 அகரமுதல


பதினோராம்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,

சிங்கப்பூர், மே 2023

 பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாகவும் சீரிய முறையிலும் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி, செயற்குழு அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.சி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச் சிங்கப்பூரைச் சார்ந்த  பேராயிரமாண்டுத் தமிழர்கள் (The Millennial Tamils) அமைப்பின் தலைவர் திரு. மணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு சிங்கப்பூர் நகரில் வரும் ஆண்டு வைகாசி 12-14, 2054  / 26-28.05.2023  வரை நடைபெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் சிங்கப்பூரைச் சார்ந்த ‘பேராயிரமாண்டுத் தமிழர்கள்’ (The Millennial Tamils)அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.

11ஆவது மாநாட்டின் இணையத் தளம் :  https://icsts11.org ;   http://iatrofficial.org.

‘வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி

 அகரமுதல


வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி

வஃகியாய் வந்த வசந்தம் – பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. இதாயத்துல்லா அவர்களின் நான்காவது நூலாகும். நற்குணத் தாயகமாம் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் அவரது நாடி நரம்புகளிலெல்லாம், உணர்வுகளிலெல்லாம் இரண்டறக் கலந்து ஆளுமை செய்கிறதென்றே கூறலாம்.அதன் அடிப்படையில் உருவானதே இந்த நூல் ஆகும்.. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி :

https://www.youtube.com/watch?v=fsZGz0MXF0I

நூலுக்கான இந்திய இணைப்பு :

https://www.amazon.in/dp/B0B5GZPBKB

நூலுக்கான பன்னாட்டு இணைப்பு :

https://www.amazon.com/dp/B0B5GZPBKB

முதுவை இதாயத்து

துபாய்

00971 50 51 96 433

muduvaihidayath@gmail.com 

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

செய்தி அரசியல், தோழர் தியாகு

 அகரமுதல


ஆடி 16, 2053 திங்கள் 01.08.2022 இரவு 7.00

செய்தி அரசியல்

செய்தித் திறனாய்வு: தோழர் தியாகு

நெறியாளர்: தோழர் மகிழ்நன்