சனி, 1 செப்டம்பர், 2018

முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு

அகரமுதல

ஆவணி 18,  2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், எழும்பூர், சென்னை
தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
 பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும்
 நினைவேந்தல் உரை  & நூல் திறனாய்வு உரை
1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள்
  1. தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’
 ஏற்புரை: தஞ்சை கூத்தரசன் 

புதுமை இலக்கியத் தென்றல்

(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)

புதன், 29 ஆகஸ்ட், 2018

மாணாக்கர் நலனுக்கான திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் கல்வி இரவு 2018

அகரமுதல

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய

கல்வி  இரவு 2018

  திருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக இசைவு  பெற்றுப்  பண வசதியின்மையால்  படிப்பைத் தொடரமுடியாத நிலையில் மாணவர் பலர் உள்ளனர். இவர்கள் கல்வியைத் தொடர  நிதி சேர்க்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி  இரவு 2018 என்னும் பெயரிலான நிதிசேர் விருந்து  ஆவணி 08, 2049 – 2018.08.24ஆம் நாள் மாலை 6.3௦மணி முதல் இரவு 9.௦௦ மணிவரை  நடைபெற்றது. திருகோணமலை நகருக்கு  அண்மையில் அமைந்துள்ள இலட்சுமி நாராயணன் கோவில்  விருந்து மண்டபத்தில்  இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரம் உரூபா நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஐந்நூற்றுவருக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
  புனித சூசையப்பர் கல்லூரி முதல்வர் வண. அல்பிரட் அடிகளார், கிழக்குப் பல்கலைக் கழகத் திருகோணமலை வளாக முதல்வர் முனைவர் வ. கனகசிங்கம், குச்சவெளி பகுதிச் செயலாளர் திரு பொ தனேசுவரன், வெருகல் பகுதிச் செயலாளர் கு.குணநாதன், திருகோணமலை நகரசபைத் தலைவர் திரு நா. இராசநாயகம், பட்டினமும் சூழலும் பகுதி அவைத் தலைவர் மருத்துவர் எ. ஞானகுணாளன், வெருகல்  பகுதி அவைத் தலைவர் திரு க சுந்தரலிங்கம்ஆகியோர் மங்கல விளக்கேற்றினர்.   இசை ஆசிரியர் திருமதி கனகேசுவரி தமிழ் மறை ஓத, இசை ஆசிரியர் திருமதி சித்திரா தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்க, அவையோர்  அமைதி வணக்கம் செலுத்த நிகழ்ச்சிகள் தொடங்கின.
  முதலாவது நிகழ்ச்சியாக உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவியரின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. நீராரும் கடலுடுத்த நிலமடைந்தை என்னும் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலுக்கு  அவர்கள் காட்டிய மெய்ப்பாடுகள் அனைவரையும் வியக்கவைத்தது.
 அதனைத் தொடர்ந்து, செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டுப் பெட்டகமான சிலப்பதிகாரக் கதையை  வில்லிசை மூலம் அவையோரின் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
 இதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் தலைமை உரை ஆற்றினார்.அவர் தனது உரையில், பண வசதியின்மையால்  படிப்பைத் தொடரமுடியாத நிலையில் உள்ள முப்பது  மாணவருக்கு இப்பொழுது திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நிதியுதவி வழங்கி வருகின்றமைபற்றியும்   இன்னும் மாணவர் பலர் உதவி கேட்டுக்  காத்திருக்கின்றமைபற்றியும் எடுத்துரைத்தார்.
  மேலும் அவர், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது, பல்கலைக் கழக  மாணவர் ஒன்றியத்தோடு இணைந்து திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய   பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் 9,10, 11,12,13 ஆம் வகுப்புகளில் கற்கும்   மாணவருக்குக்   கணிதம், அறிவியல், ஆங்கிலம்    ஆகிய பாடங்களை மாலை வேளைகளிலும் சனி, ஞாயிற்றுகிழமைகளிலும்  கற்பிக்கும் திட்டதைநடத்தி வருகின்றமைபற்றிக் கூறினார்.
  திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள தென்னன் மரவடி ஊர்  1984  ஆம் ஆண்டில் முழுமையாக அழிக்கப்பட்டமைபற்றியும், இப்பொழுது இவ்வூரில்  87 குடும்பங்கள் மீளக் குடி யமர்ந்துள்ளமைபற்றியும்,  இவர்களுக்குத் தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு இருபத்து நான்கு  பேராயிரம்(மில்லியன்) உரூபா செலவில் ஒரு பண்ணையை செட்டம்பர் முதலாம் நாள் தொடங்கவுள்ளமைபற்றியும்  இதன் மூலம் தென்னன் மரவடி மக்களுக்கு வருவாய் கிடைப்பதோடு தென்னன் மரவடியின் இருப்பும்  உறுதிப் படுத்தப்படும் என்றும் கூறினார்.
  திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள பெண்கள் தலைமை தாங்கும்  குடும்பங்களுக்கு   வருவாய் தரும் தொழில் முயற்சிகளை உருவாக்கிக்கொடுக்கும் திட்டத்தின்  முதற் கட்டமாகச் சாம்பல்தீவு, தம்பலகமம், வெருகல் ஆகிய மூன்று இடங்களில் சத்துமா உற்பத்தித் திட்டத்தை தொடக்கி உள்ளதாகவும் கூறினார்.
  திருகோணமலை மாவட்டப் பாடசாலை மாணவரது  தமிழ்மொழி ஆற்றலையும் மனனத் திறனையும் உயர் எண்ண வளத்தையும்  மேம்படுத்தும் நோக்கோடு  கிழக்கு மாகாணக் கல்வித் திணைக் களத்தோடு இணைந்து 2018 ஐப்பசித் திங்களில் பாடசாலை மாணவரிடையே   திருக்குறட் போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் திருக்குறள் போட்டிக்கான பணிகள்  நடைபெற்றுவருவதாகவும்  இறுதித் தேர்வில்  ஒவ்வொரு பிரிவிலும்  முதலாம்  இடத்தைப் பெறும் மாணவர்க்கு உரூபா  25,000.00 பணப்பரிசிலும் இரண்டாமிடத்தினைப் பெறும் மாணவர்க்கு உரூபா 15,000.00 பணப்பரிசிலும் மூன்றாமிடத்தினைப் பெறும் மாணவர்க்கு உரூபா 10,000.00 பணப்பரிசிலும் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் சான்றிதழும் வழங்கப்படும் என்றும்  கூறினார்.
  அடுத்த நிகழ்ச்சியாக   அ/மி சண்முக மகளிர் கல்லூரி மாணவர் வழங்கிய போதைப் பொருளால் விளையும் தீமையை படம்பிடித்துக் காட்டும் நாடகம்இடம்பெற்றது.
  இதையடுத்து,  கிழக்குப் பல்கலைக் கழகத் திருகோணமலை வளாக முதல்வர் முனைவர்  வ.   கனகசிங்கம்  சிறப்புரை ஆற்றினார்.  அவர் தனது உரையில்  திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதோடு திருகோணமலையின் வளங்கள்,  அவற்றை எவ்வாறு பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்பதுபற்றியும் விரிவாக விளக்கினார்.
  இறுதி நிகழ்ச்சியாக அ/மி சண்முக மகளிர் கல்லூரி மாணவர் வழங்கிய உழைக்கும் மக்களது உள்ளத்து உணர்வுகளை எடுத்துரைக்கும் நாட்டார் பாடல்கள் இடம்  பெற்றன .
  இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது .
  இந்த விழாவுக்கும் உணவுக்குமான  அனைத்துச்  செலவுகளையும் கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்றிருந்தமை பாராட்டத்தக்கது.
  இந்தவிழாவின் மூலம் ஐந்து இலட்சம் உரூபா திரட்டத் திட்டம் இட்டிருந்ததாகவும்.இந்த இலக்கைத்  தாண்டி ஏழு இலட்சம் உரூபா கிடைத்ததாகவும் அமைப்பாளர் கூறினர்
  இந்த விழா நிகழ்ச்சிகளைப் பல்கலைக்  கழக மாணவியர் தொகுத்து வழங்கியதோடு  வரவேற்புரையையும் நன்றி உரையையும் அவர்களே மிகத்திறம்பட ஆற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்களை அழுத்திப்பார்த்தால் பெரிதாகக் காணலாம்.)

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41


ஆவணி 14, 2049 (வியாழக்கிழமை) 30.08.2018 

மாலை 5.45 மணி

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   

சாபர்கான் பேட்டை, சென்னை  

நவீன  விருட்சம் இலக்கியச் சந்திப்பு 41

தலைப்பு:     நானும் என் எழுத்தும்

சிறப்புரை : அசயன்பாலா

(சிறுகதை ஆசிரியர், திரைப்படம் குறித்த நூற்படைப்பாளர், திரைப்பட இயக்குநர்)

அன்புடன்
நண்பர்கள் வட்டம் 

தொடர்புக்கு :

அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை

அகரமுதல

  இ.கி.அ.(ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம்
 இ.கி.அ.அகலிடம்(ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு) கிளை
   (உயர்நீதிமன்றம் எதிரில்), சென்னை-600001 

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்   நினைவரங்கம்

         

ஆவணி 19, 2049  – செவ்வாய்க்கிழமை -4-9-2018

மாலை 6-00மணி

 அகலிட இ.கி.அ.(எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.)அரங்கம்


கலைஞர் ஆயிரம் – கவிதாஞ்சலி

அகரமுதல

ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கும்

கலைஞருக்கான கவிதாஞ்சலி

ஆவணி 22,2049 – 07.09.2018 

காலை 9.00 முதல் இரவு 9.00 வரை

எசு.பி.எசு.திருமண மண்டபம், சைதாப்பேட்டை,

சென்னை 15

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்

அகரமுதல

கவிஞர் .வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – 
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் 
  தமிழ்நூல் வெளியீடு – விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் கடந்த  ஆகட்டு 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா சென்னை இ.கி.அ.(ஒய்எம்சிஏ) திடலில் நடைபெற்றது.
   புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று( ஆவணி 11, 2049 -27.08.2018 அன்று) , 2017-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களை எழுதிய படைப்பாளர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.
  இவற்றுள் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘எங்கிருந்து தொடங்குவது’ நூல், தமிழில் வெளியான சிறந்த பெண்ணிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.
   இவ்விழாவிற்குத் தலைமையேற்ற தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கவிஞர் அ.வெண்ணிலாவிற்கு உரூ.5,000/- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.
     சிறந்த பெண்ணிய நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கும் கவிஞர் அ.வெண்ணிலா, வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்தவர்.
 கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியை செய்துவரும் இவர், தற்போது வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி, பள்ளியின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.
தே.வே.ஊ.மே.வங்கி(NABARD)  மூலமாகப் பள்ளிக்கு 16 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்படுவதற்கும்,
மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து உரூ.20 இலட்சம் செலவில் 15 கழிப்பறைகள் கட்டப்படுவதற்கும்
தலைமையாசிரியரோடு இணைந்து நின்று முன்முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  ஒரு படைப்பாளியாகவும் தமிழகம்  கடந்தும் அறிமுகமாகியுள்ள அ.வெண்ணிலா, இதுவரை
கவிதை நூல்கள் – 6, சிறுகதை நூல்கள் -2,  கட்டுரை நூல்கள் – 3, தொகுப்பு நூல்கள் – 4, மடல் நூல் – 1 என 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
  கவிதை உறவு, சிற்பி அறக்கட்டளை, தேவமகள் அறக்கட்டளை, ஏலாதி அறக்கட்டளை, திருப்பூர் அரிமா சங்கம், தமுஎகச செல்வன் கார்க்கி , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் வழங்கிய  பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
   2007-ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் பெற்றுள்ளார்.
  2002-ஆம் ஆண்டில் பன்னாட்டுப் பெண் எழுத்தாளர்கள் (ஐதராபாத்து) கலந்துகொண்ட தெ.நா.ம.கூ.( SAARC)   மாநாட்டிலும்,
 2011-சனவரியில் தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய (Commonwealth) எழுத்தாளர்களுக்கான மாநாட்டிலும் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுள்ளார்.
  2010-ஆம் ஆண்டில் மத்திய அரசின் கலைஇலக்கியக்கழக  (சாகித்திய அகாதெமி) அழைப்பின் பேரில் மேற்கு வங்காளம் சென்று, அங்குள்ள எழுத்தாளர்களோடும் மக்களோடும் கலந்துரையாடியுள்ளார்.
 2017-இல் தமிழக அரசு வழங்கிய ‘நல்லாசிரியர் விருதி’னையும் பெற்றுள்ளார்.
   இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி எனப்  பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.
  இவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளமுனைவர் (எம்ஃபில்.,) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.எச்டி.,) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.
கேரள அரசின் தமிழ்ப் பாடப் பிரிவில் இவரது கவிதை, பாடமாக இடம்பெற்றுள்ளது.
 2009-10 வரை சமச்சீர்க் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து, புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.
  இவரைப்போலவே பல்வேறு விருதுகள் பெற்றுள்ள படைப்பாளர் கவிஞர் முருகேசன் இவரின் கணவராவார்.
         விழாவிற்கு வருகை புரிந்தோரை சிரீசெண்பகா பதிப்பகம் ஆர்.எசு.சண்முகம் வரவேற்க,
         பாரதி புத்தகலாயம்  க.நாகராசன் நன்றியுரையாற்றினார்