சனி, 26 டிசம்பர், 2009

தலையங்கம்: ஐந்தில் மகிழாதது...தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும்,​​ "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள்,​​ வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது,​​ செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை.​ அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை ​(இந்தியா)​ என்ற அமைப்பு,​​ ​ மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது,​​ அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு,​​ மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல,​​ சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக,​​ பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன.​ வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு ​(டியூஷன்)​ அனுப்புகின்றனர்.​ இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.இந்த ஆய்வுகளின்படி,​​ தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை.​ முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும்,​​ பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை.​ இதற்கு ​ தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது.​ குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை.​ உரையாடல்,​​ விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன.​ குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர்.​ 5 வயதுக்குப் பிறகு,​​ தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல்,​​ ​ ​ மொழி ஆகியவற்றின் அடிப்படை,​​ படித்தல்,​​ எழுதுதல்,​​ ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது.​ பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர்.​ ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில்,​​ இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள்.​ வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள்.​ பேசினார்கள்,​​ சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள்.​ பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள்.​ அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும்,​​ தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது.​ மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள்,​​ கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது.​ நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள்.​ எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள்.​ வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள்.​ புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள்.​ தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள்.​ இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட,​​ குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.​ அந்த பாடத்திட்டங்கள்,​​ அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில்,​​ எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.​ ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால்,​​ அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு,​​ உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும்,​​ இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை."உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல,​​ அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக,​​ நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது.​ ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.​ ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
கருத்துக்கள்

ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். உருசியமொழிக் கல்விநூல் ஒன்றைப் படித்தேன். அதில் 10 அகவை வரை எழுத்துப் பயிற்சி இல்லை யெனவும் பிறமொழிக்கல்வி இல்லை யெனவும் தாய்மொழி வழிக் கல்வியே நல்ல எதிர்காலத்தை அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நம் நாட்டில் கல்வி மட்டுமல்ல சூழலும் சரியல்ல. நமது வீடமைப்பு நகரமைப்பு முறைகளினால் வண்ணத்துப் பூச்சி , தும்பி, சிட்டுக்குருவி, ஆடு மாடு முதலான உயிரினங்களுடன் விளயாடும் பருவமே இல்லை என்றாகிவிட்டது. எனவே, இயற்கைத் தோட்டத்தின் நடுவே அமைந்த தாய்மொழி வழிக்கல்விக்கூடங்களை உருவாக்க வேண்டும். செம்மொழி விழா கொண்டாடுகிறீர்களே! செம்மொழியால் பயிற்றுவிக்க முடியாதா என வருவோர் கேட்டால் எங்கே போய் முட்டிக் கொ்ளவது? எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை ஏட்டளவிலும் வாயளவிலும் இல்லாமல் செம்மொழி மாநாட்டிற்கு முன்னராவது செயலாக்குவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவளளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 6:51:00 AM

"கல்வியும்-மருத்துவமும் அரசின் சேவை.. அதில் தனியாருக்கு இல்லை வேலை.." முதலமைச்சரின் வீட்டுப் பிள்ளையும், மூட்டை தூக்குபவரின் பிள்ளையும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும்(அரசுப் பள்ளியில்). மத்திய அரசின் பள்ளிகளில்(கேந்திரிய வித்யாலயா) இது சாத்தியமாகும்போது மாநில அரசின் பள்ளிகளில் மட்டும் ஏன் முடியாது ? - மக்கள் சக்தி கட்சி(www.makkalsakthi.net)

By மக்கள் சக்தி கட்சி
12/26/2009 6:23:00 AM

Parents are responsible for this kind of torture . In India Pre KG, LKG UGK is still not mandatory for I st standard admission. Only private school insist this to make more money . Good Article .. Keep your good work Dinamani !!!

By Allahu AKbar
12/26/2009 5:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அகதிகள் முகாமில் இருந்து வெளியே செல்ல...இலங்கையில் வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதி பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் தமிழர்கள்.​ நாள்:​ புதன்கிழமை.
கருத்துக்கள்

1. போலிப் பெயர்களில் தமிழருக்கு எதிராக எழுதுபவர்களும் வன்முறைக்கு எதிராக எழுதுவதுபோல் நடித்து தமிழினத்திற்கு எதிரான வன்முறை பற்றி வாய்மூடிக் கிடப்பவர்களும் இந்தியப் பற்றாளர் ஆகி விட முடியாது. 2. நம் வீட்டை விட்டு வெளியேறி நம் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களுக்குச் செல்லவோ, கடைகள், அலுவலகங்களுக்குச் செல்லவோ நமக்கு யாருடைய இசைவும் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு எனில் சிங்களர்களுக்கும் இதே கட்டுப்பாடு இருக்க வேண்டுமே! ஏன் இல்லை? 3) கருத்து எழுதத் தெரியாமல் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரைக்கூடக் கொலை பண்ணி எழுதுபவர்கள் தமிழின் பெயரைப் பயன்படுத்துவதுதான் பெரிதும் வெட்கக்கேடு. 4) சட்டத்தின் முன்னால், நிறம், சாதி, சமயம், மொழி வேறுபாடு காட்டக் கூடாது என்ற அறத்திற்காகத்தான் ஈழத்தமிழர்கள் போரிட்டு மடிகின்றார்கள் என்னும் உண்மையைத் தெரிந்து கொண்டே அறவாணர் போல் நடிப்பவர்களுக்கு நாம் ஒன்றும் மறுமொழி எழுதத் தேவையில்லை. 5) தினமணி தனக்குரிய ஊடகக் கடமையை ஆற்றுவதற்காக அதையும் திட்டுவதற்கு அதே இதழ்தான் உதவுகிறது என்ற உண்மையை உரியவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். (தொடர்ச்சி காண்க.) அன்புடன் இலக

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 6:31:00 AM

தொடர்ச்சி) 6) தமிழ் ஈழத் தேசிய ஞாலத் தலைவர் மேதகுபிரபாகரன் அவர்கள் பயங்கரவாதி என்றால், இந்தியத் தேசியப் படையின் வீரத் தளபதி சுபாசு சந்திர போசு, பகவத்சிங முதலானவர்களையும் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டுவர்களையும் என்ன வென்று சொல்வது? 7) உலக நாடுகளின் விடுதலைகளையெலலாம் படிக்கின்றோமே! விடுதலைக்குப் போராடிய அந்தத் தலைவர்கள் யார்? 8) அன்பையும் அருளையும் வலியுறுத்திய எல்லா அருளாளர்களும் தம்மைச் சார்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்பொழுது சிறுமை கண்டு பொங்கி எழுமாறுதான் சொல்லியிருக்கின்றனர். 9) தமிழ், தமிழர் நலனை வலியுறுத்துபவர்கள்தாம் உண்மையில் நாட்டுப் பற்றாளர்கள். அவர்களை நாட்டுப் பகைவர்களாகக் கூறுவதுபோல் அறியாமை வேறு இல்லை. 10) இந்தியா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசமைப்பு. எனினும் தமிழ் மக்கள்தாம் இதற்கென உயிரை மிகுதியாய்க் கொடுத்துள்ளனர். இந்தியத் தேசியப் படையில் மிகுதியானவர்கள் தமிழ் மக்களாக இருந்து தம் உயிரைக் கொடுத்தமையால்தான் சுபாசுசந்திர போசு மறு பிறவியில் தமிழனாய்ப் பிறக்க வேண்டும் என்று விரும்பினார். (தொடர்ச்சி காண்க.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 6:31:00 AM

(தொடர்ச்சி) விடுதலைப் போராட்டத்தில் தமிழரகளே மிகுதியாயப் பங்கேற்றதால் தாம் தமிழ் கற்றதாகக் காந்தியடிகள் தெரிவிததார். இவ்வாறு தமிழர்கள் உழைப்பில உருவான இந்தியாவில் தமிழர் நலனுக்குக் கேடு வருகையில் அதற்கு இந்திய அரசே காரணமாய் இருக்கும் பொழுது இடித்துரைப்பது தவறல்லை. இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்பது உலகப பொதுமறை.11.) இந்தியாவிற்கு எதிரான போர்களில் மிகுதியாய்ப் பங்களிப்பு செய்தவர்கள் தமிழர்களே! 12.) இந்தியாவில் ஒவ்வோர் இனமும் தனித்துச் சிறந்து பின் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இணைந்தால்தான் இந்தியா வலிமையான நல்லரசாகத் திகழ முடியும். இல்லையேல் பாழ்பட்டுச் சிதைவுறும். 13)ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள வெறியாளர்கள் பல நாடுகளுடன் இணைந்து வன்முறையைக்கட்டவிழ்த்துவிட்டுப் படுகொலை பு்ரிகையில் இங்கிருந்து வேதாந்தம் பேசுபவர்கள்தாம் உண்மையில் நாட்டுப் பகைவர்கள்; மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதிகள். 14) தமிழர்க்கு எதிரான பகைமலை யாவும் விரைவில் தூள்தூளாகும். தமிழர் பெயர்களில் தமிழர்களுக்கு எதிராக எழுதுவோர் அப்போது காணாமல் போவர். (தொடர்ச்சி காண்க.) அன்புடன் இலக்க

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 6:30:00 AM

(தொடர்ச்சி)15. வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பார்புகழ் பைந்தமிழ் நாடு! வாழிய இந்தியா! வாழிய ஆசியா! வாழிய வையகம்! வாழிய உயிரினம்! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 6:29:00 AM

ILAKKUVANAR, NAVEEN & USHANTHAN ALSO CAN COMMIT SUICIDE FOR THE GREAT SHAME !!! THEY MUST DIE THEMSELVE BY PULLING THEIR TUNGS !!! THIS FELLOWS ONLY TAMIL GOVERNORS IS IT? WHAT A NONSENSE ABOUT TAMIL IN FRONT OF JUSTICE? WHERE GOT COLOR, RACE, RELIGION & LANGUAGE FOR JUSTICE?? NARROW MINDED CRUKE FELLOWS ABUSE THE NAME OF TAMIL. ITS INSULT FOR GREAT LANGUAGE TAMIL. TAMIL MEAN PEACE NOT TERRORISM. OZHINDHAAN BAYANGARAVAADHI !! OZHINDHAAN NATPU VALARKKA THERIYAADHA MUTTAAL !! OZHINDHAAN KOLAI VERI PIDITHA, NAMBIYAVARGALUKU SARIYAANA PAADHAI KAATTA THERIYAADHA KURUDAN !!!

By LET ME TELL YOU
12/25/2009 6:02:00 PM

OZHINDHAAN BAYANGARAVAADHI !!!

By ANBU
12/25/2009 5:58:00 PM

Hai Koopu, you calling me shit. You Peelam Tamils are washing the shit of Westerners in all the europe and US. You Refugee shit drinking the urine of all the english, french wores. Who the shit Ganavani, read her interview, telling her life in the Internment camp. Just by that interview, she ridiculed all the ordinary tamil women, such kind of shit mentality of your puli.

By Also Tamil
12/25/2009 1:44:00 PM

Mr.Koopu, basic identity of the Peelam tamils in western countries are urinating in public places. It was documented. HEEE..HEEE. Then what you said about democracy. You people are refugees but voting for a transnational country.phee...pheee... You are commenting about democracy to us..pheww..phew.. If not Tamil Nadu and MGR you people would have been lynched by the JRJ and even your parents would not have given you birth you know. You scoundrel talking about my language. Peelam tamils only spoiled the name of tamils....haaa...haaa..

By Also Tamil
12/25/2009 1:37:00 PM

..ALSO TAMIL...HE HE HE...CAN YOU TELL ME WAHT IS THIS URINATING IN PUBLIC ,MARRYING OWN SISTERS DAUGHTER,DANCING IN FENNERAL PROCESSION,HAVING TWO WIVES,CANT READ AND WRITE,LIVING ON STREETS AND UNDER BRIDGE N TREES....DRAVIDIAN CULTURE IN TAMIL NADU..JUST A MINUTE WORSHPING FILM STARS N BUILDING TEMPLES FOR THEM....SHIT FIRST GIVE YOUR NAME THEN COMMENT..WHAT IS THE LANGUAGE YOU TALK IN TAMILNADU..TAMINGILAM..TAMINGLISH HE HE HE

By KOOPU
12/25/2009 1:27:00 PM

RUSHANGAN..DO YOU KNOW DOGS KNOW ONLY TO BARK..THIS SL TAMILS ARE NOT REFUGEES..THEY HAVE ,LAND,HOUSE,PADDY FIELD,EDUCATED,HAVE BANK ACCOUNT..EVEN THEIR CHILDREN ARE EDUCATION IN FOREIGN COUNTRIES...IN TAMIL NADU PEOPLE ARE LIVING UNDER BRIFGE,ROADS AND TREES SHITTING AND URINATING IN PUBLIC...SO YOU IMAGINE SAME ABUT SRI LANKA HE..HE..HE IN SRI LANKA MINIMUM EDUCATION IS GRADE 9(SECONDARY SCHOOL) ..YOU VOTE FOR BURIYANI PARCEL AND RS:500..IN INDIAN DEMOCRAZY...YOU GIVE ADVICE TO THEM HE..HE..HE..IN SRI LANKA TAMIL DONT KNOW BURIYANI DEMOCRAZY...

By KOOPU
12/25/2009 1:22:00 PM

கூமுட்டைகளின் கூட்டம் புலிக் கூட்டம் என்பது சந்தேகம் இல்லை.ஒரு பொது சேவையை பயன் படுத்த வரிசையில் சென்று ஒழுக்கம் பேணுவது ஒரு சாதாரண நிகழ்வு.ஆனால் இதில் தவறு கண்ட தினமணி உசாந்தன், நவீன் மற்றும் இலக்குவனார் குரு லொல்லுவர் ஆகியோர் இந்தியாவிற்க்கு எதிரான கருத்து எழுத வாய்ப்பு அமைத்து தருகிறது.யாரயினும் தேவடியா மகன் என்ற கருத்து வெளியிட்டால் அவரது தாயாரை பற்றி மிகவும் அசிங்கமாக கருத்து வரும்

By Also Tamil
12/25/2009 11:27:00 AM

ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்ஷவிற்கு பிடித்த அரசியல் தலைவர் முதல்வர் கருணாநிதி. இந்த வீடியோவை காணத் தவறாதீர்கள். www.manithan.com/index.php?subaction=showfull&id=1261571183&archive=&start_from=&ucat=1& சோனியாவும் ராஜபக்ஷவும் கூத்தும் கும்மாளமும் www.manithan.com/index.php?subaction=showfull&id=1261586529&archive=&start_from=&ucat=1&

By bavani
12/25/2009 10:28:00 AM

இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே உங்கள் தமிழ் உணர்வுக்கும் தமிழ் பற்றுக்கும் நான் தலை வணங்குகிறேன், எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை.இவ்வளவு இனப் படுகொலை, கடத்தல், சித்திரவதை,ராணுவ அட்டுழியம்,கைது,முகாம்களின் மனித உரிமை மீறல் நடந்தும் ஏன் இந்தகைகூலி நாய்கள் இப்படி இருக்கு? ஒன்று மட்டும் தெரியும்..இந்த ஈனப்பிறவிகள் தமிழ்ழர் இல்லை?நாம் கவலைபட தெனவஇல்லை

By USANTHAN
12/25/2009 4:16:00 AM

எங்கள் தமிழின அடிமை விலங்கு உடையனும் என்றல் முதலில் கைகூலி நாய்கள் கூட்டம் அழிய வேண்டும்: சிங்களவன் கையால் அழிவனத பார்க்கவேண்டும்?

By USANTHAN
12/25/2009 3:53:00 AM

யாரங்கே! ருசாங்கன் என்ற பெயரிலும் வேறு வேறு பெயர்களிலும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் மனித நேயமற்ற கைக் கூலிகளுக்கு என்ன தண்டனை? அதை உடனே அளிக்க வேண்டும். என்ன? இவர்கள் .... பிறவிகளே அல்ல! முதன்மை கொடுத்து அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்கிறீர்களா? சரி!சரி! ஈனப்பிறவிகள் தாமாகவே அழிய வேண்டும் என்று விதி இருக்கும பொழுது நாம் மனிதர்களாக மதித்து உயர்த்தக் கூடாதுதான்.இப்படி வானுலகில் பேச்சு நடைபெற்றது என் காதில் விழுந்தது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 3:20:00 AM

OZHINDHAAN BAYANGARAVAADHI PRABAKARAN !!! Those refugee dogs celebrated when other human shed blood by LTTE but now they couldn't take it when LTTE & their leader killed as street DOGS !!! OZHINDHAAN BAYANGARAVAADHI PRABAKARAN !!! DEAR INNOCENT TAMILIANS, PLEASE ENJOY FREEDOM & DEMOCRACY WITHOUT TERRORISM.

By RUSHANGAN
12/25/2009 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சுவாமி விவேகானந்தர் பிறந்ததினத்தன்று மதுக்கடைகளை மூட கோரிக்கைசென்னை, ​​ டிச.​ 25: ​ சுவாமி விவேகானந்தர் பிறந்ததினமான ஜனவரி 12}ம் தேதி மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.​ இந்தியா ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த பண்டைய நாடு என உலகிற்கு உணர்த்தியவர்.இன்றைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆன்மிகம் அறிந்த இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரை தங்களது ஆதர்ச நாயகனாக பார்க்கிறார்கள்.​ இதைக் கண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தார்.ஆனால் இன்று தமிழகத்தில் மது அருந்துவோரில் 95 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர்.​ எனவே சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.சி.​ செந்தில்​ குமார் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இந்தக் கோரிகையை இந்தியா முவழுவதுமே வைப்பதுதான் முறை.எனினும் தமிழ நாட்டில்தமிழர் திருநாளை முன்னிட்டு அந்த வாரம் முழுவதுமே மதுக்கடைகளுக்கு விடுமுறை விடலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மகால படைப்புகள் பாடத்திட்டத்தில் கூடாது: தினமணி ஆசிரியர்உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​ திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​
சென்னை, ​​ டிச.25: "சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது' என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது:""எல்லாக் காலங்களிலும் படைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.​ எல்லா எழுத்தாளனுக்குமே தான் படைத்த படைப்பெல்லாம் இலக்கியம்தான்;​ சிறந்ததுதான்.​ இதில் எதை நாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வது?​ இலக்கியம் என்கிற அங்கீகாரம் பெற என்னதான் அளவுகோல்?காலம் என்கிற பரிசோதனைச் சாலையில் அங்கீகாரம் பெறாத எந்த எழுத்தும் இலக்கியமாகாது.​ குறைந்தது ஒரு தலைமுறையைத் தாண்டி அந்தப் படைப்பு நின்றால் மட்டுமே அது இலக்கியம்.​ எழுதப்படும்,​​ வெளியிடப்படும் படைப்புகளில் 90% படைப்புகள் காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை.​ ​அதேபோல,​​ சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி,​​ கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது.​ குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகள் மட்டுமே பாடத் திட்டத்தின் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.​ சமகாலப் படைப்புகளை ஏற்றுக் கொள்ளும்போது,​​ ஆட்சிக்கும்,​​ பாடத்திட்டக் குழுவுக்கும் வேண்டியவர்களின் தரமற்ற இலக்கியப் படைப்புகள்கூடப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாகத் தரப்பட்டுவிடும் ஆபத்து உண்டு.​ இதன் தொடர் விளைவாகத் தரமற்ற நாளைய தலைமுறை உருவாகிவிடும் என்பது மட்டுமல்ல,​​ இலக்கியத்தின் தரமும் தாழ்ந்துவிடும்.நமது எழுத்தும்,​​ பேச்சும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்;​ மாற்றத்திற்கு வழிகோல வேண்டும்;​ அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்'' என்றார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.
கருத்துக்கள்

சமகாலப் படைப்புகள் என்ற போர்வையில் தரமற்ற படைப்புகள் பாடமாக ஆக்கப் படுகின்றன என்பது முற்றிலும் உண்மை. ஆனால் பொதுவாக 50 ஆண்டுகள் என்பது நீண்ட இடைவெளி. கதை. கவிதை இலக்கியங்களுக்கு மட்டும் கால வரையறை வைத்தால போதுமானது. மேலும், இக்காலத் திறனாய்வுக் கருத்துகளைப் புறந்தள்ளக்கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பென்னாகரம் இடைத்தேர்தலை ​ஒத்திவைக்க வேண்டும்: ம.தி.மு.க கோரிக்கைசென்னை, ​​ டிச.25: ​ பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என ம.தி.மு.க.​ கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தேர்தல் ஆணையருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனவரி 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.​ ஆனால்,​​ தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் ஜனவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.​ மக்களின் கவனம் முழுவதும் பொங்கல் பண்டிகையில்தான் இருக்குமே தவிர,​​ அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.எனவே,​​ உச்சகட்ட பிரசாரம் நடைபெற வேண்டிய நாட்களில்,​​ 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பிரசாரம் பாதிக்கப்படும்.​ இதனால் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் எடுத்து வைக்கும் பிரச்னைகள்,​​ வாதங்கள் மக்களை சென்றடையாது.ஆகவே,​​ பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்.இந்த கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய பரிசீலனை செய்ய வேண்டும்.​ மேலும் தேர்தல் நேர்மையாகவும்,​​ நியாயமாகவும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்' என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

தோற்றாலும் பரவாயில்லை என்று கட்சித் தொண்டர்கள் உற்சாகத்திற்காகவாவது இத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக விடம் கேட்டு வாங்குங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:14:00 AM

DMK will also win in this election.

By Jayalalitha
12/26/2009 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *