சனி, 16 ஏப்ரல், 2011

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை பரவியிருந்த தமிழ்க்கண்டத்தில்தான் முதன் முதலில் மனித  இனம் தோன்றியது. அங்குபேசப்பட்ட மொழியான தமிழ்மொழிதான் உலக மொழிகளின் தாய். இதனைப் பல அறிஞர்கள் மெய்ப்பித்து உள்ளனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில்தான் இக்கருத்து உள்ளது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்
லண்டன், ஏப்.16-

 
உலகில் வாழும் மக்கள் ஆயிரக்கணக்கான மொழிகளை பேசுகின்றனர். தொடக்கத்தில் அவை எந்த மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
 
இதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளி, இந்தி, ஜப்பானிஷ் உள்ளிட்ட 500 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொதுவாக 1 1/2 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றினான் என்ற கருத்து உள்ளது.
 
அந்த மனிதன் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென தனியான மொழியை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பறிமாற்றிக் கொண்டான். அங்கிருந்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறினான்.
 
இதை வைத்து பார்க்கும்போது தற்போது உலகில் உள்ள மொழிகளின் தாயகமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் ஒரே மொழியில் இருந்துதான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.


Saturday, April 16,2011 01:40 PM, மூத்த குடி said:
அப்போ தமிழ் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த மொழி இல்லையா?
On Saturday, April 16,2011 02:12 PM, Ilakkuvanar Thiruvalluvan said :
இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை பரவியிருந்த தமிழ்க்கண்டத்தில்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றியது. அங்குபேசப்பட்ட மொழியான தமிழ்மொழிதான் உலக மொழிகளின் தாய். இதனைப் பல அறிஞர்கள் மெய்ப்பித்து உள்ளனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில்தான் இக்கருத்து உள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

100 influenced persons - times magazine : fraud actions of mahindha

டைம்சில் மகிந்தவின் பெயர் வருவதற்காக மில்லியன் கணக்கில் பணம் அளித்த சிறீலங்கா

புகழ்பெற்ற ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய உலகின் வலிமைமிக்க நூறு தலைவர்களுக்கான கருத்துக்கணிப்பில் தனது பெயரும் இடம்பெறவேண்டும் என்பதற்காக சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபச்சா இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக புலம்பெயர் நாட்டில் இருந்து இயங்கும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனா என்பவரிடமே இந்த நடவடிக்கைக்கான முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாக அது மேலும் தெரிவித்துள்ளது.
அவருக்கு உதவியாக சிறீலங்கா அரச தலைவரின் ஊடகப்பிரிவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது எனவும், இதற்கான நிதி உதவிகள் வெளிநாடுகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளன. நேற்று முந் தினம்(14) முடிவடைந்த இந்த மின்னஞ்சல் வாக்கெடுப்பில் மகிந்தா 28 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 cjarges against singala govt. by U.N.O.Committe : ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது 5 குற்றச்சாட்டுகள்

இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசை எதிர்த்து அறிக்கை அளிக்க மன உறுதி இல்லாமல்,மண்ணின் மைந்தர்களை மனித நேயமின்றி வதைத்துக் கொன்ற உண்மையை வெளிப்படுத்தும் துணிவில்லாமல்மண்ணைக் காக்கும் விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  மன்னுயிர் காக்கத் தன்னுயிர் ஈந்தவர்கள் மீது 6 பொய்யானக் குற்றச்சாட்டு; உண்மையிலேயே  இனப் படுகொலை செய்தவர்கள் மீது 5 குற்றச்சாட்டு;  அந்த வகையில் இதனை நியாயமாக்கும் முயற்சி. மறு வகையில் சிங்களத்தின் கொடூர முகத்தைக் காட்டியது போல் நல்ல பெயர் எடுக்கும் முயற்சி. குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும் என்று கூறாமல் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனப்படுகொலையில் நம்பியார் முதலான அதிகாரிகளுக்குப் ப்ங்கு இருக்கும் பொழுது அவர்கள் எவ்வாறு உண்மையை வெளிப்படுத்து்வார்கள். தன்னார்வ அமைப்பினர் உண்மையை அறிக்கையை வெளியிடுவார்கள். தமிழினத்தைக் கொன்றறொழித்த கயவர்கள்,தமிழ் ஈழத்தைச் சிதைத்து நாசமாக்கிய நயவஞ்சகர்கள் விரைவில்  தண்டிக்கப்படுவார்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையில் சிறிலங்கா அரசு மீது 5 குற்றச்சாட்டுகள், விடுதலைப்புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் சிறீலங்கா அரசின் மீது 5 குற்றச்சாட்டுகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையை மார்ச் 31ம் நாள் தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையின் பிரதி ஒன்று சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் புத்தாண்டுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணிக்க ஆணைக்குழுவின் முயற்சிகளை நிராகரித்துள்ள இந்த அறிக்கையில், இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசு நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில வாழ்ந்த மக்களை பணயக் கைதிகள் போன்று தடுத்து வைத்திருந்ததாகவும், தப்பிச் செல்ல முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.
இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் கொழும்பு ஊடகம் ஒன்றின் ஊடாக கசிந்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன. முழுமையான விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்.
“ சிறிலங்கா அரசாங்கம் மனிதாபிமானப் போரை நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினாலும்- அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் பாரதூரமான சம்பவங்களில் சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கருதப்படத்தக்கவை.
போரின் இறுதிக்கட்டத்தில்- 2008 செப்ரெம்பர் தொடக்கம் 2009 மே 19 வரையான காலப்பகுதியில், சிறிலங்காப் படையினர் வன்னியில் முன்னேறிச் சென்ற போது மேற்கொண்ட பரவலான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளமாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளை வாகனங்களில் ஆட்கள் கடத்தப்பபட்டது, காணாமற்போனது போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
வன்னியில் மூன்று தாக்குதல் தவிர்ப்பு வலயங்களின் மீது சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களின் மூலம் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான இழப்புகளுக்கு சிறிலங்கா அரசின் பீரங்கித் தாக்குதல்களே காரணம்.
மருத்துவமனைகளின் மீதும் சிறிலங்கா அரசு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகளும் மோட்டார் மற்றும் ஆட்டிலறி போன்ற பீரங்கிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகள் திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டுள்ளன.
2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலத்தில் பல பத்தாயிரம் உயிர்கள் பலியாகின. இதில் போரின் இறுதி நாட்களில் அடையாளம் காணப்படாமல் பெருமளவானோர் இறந்தனர்.
போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் போராளிகள் தனியாக பிடித்துச் செல்லப்படனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட்டிருக்கக் கூடும். ஏனையோர் காணாமற் போயுள்ளனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மூடப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் மீறப்பட்டன. அநாவசியமாக பலர் உயிரிழக்க நேரிட்டது. பலர் சித்திரவதை செய்யப்பட்டனர்.
புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு வசதிகள் மறுக்கப்பட்டன. அவர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டனர்.
முன்னேறி வந்த சிறிலங்கா படையினரைத் தடுக்க பொதுமக்களை புலிகள் மனித கவசங்களாகப் பயன்படுத்தினர். கட்டாய ஆட்சேர்ப்பை நடைமுறைபடுத்தினர். இளவயது சிறார்களையும் படையில் சேர்த்தனர்.
2009 பெப்ரவரியில் தமது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதிகளவு பொதுமக்கள் தங்கியிருந்த- அவர்களுக்கான விநியோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர். போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர்.
சிறிலங்கா அரசு மீது ஐந்து விதமான குற்றச்சாட்டுகளை இந்த நிபுணர்கள் குழு சுமத்துகிறது.
1. பரந்தளவிலான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைப் படுகொலை செய்தமை.
2. மனிதாபிமான இலக்குகள், மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.
3. பொதுமக்களுக்கு மனிதமாபிமான உதவிகள் கிடைப்பதை தடுத்தது.
4. போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் மனிதஉரிமைகளை மீறியது.
5. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளியே மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டது.
அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளையும் நிபுணர்கள் குழு முன்வைக்கிறது.
1. பொதுமக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியது.
2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது.
3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது.
4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது.
5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது.
6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது.
சிறிலங்காவில் அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதற்கு பொறுப்புக் கூறுவது உள்நாட்டு அனைத்துலக சட்டங்களின் படியான கடமையாகும்.
இந்த வலுவான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சிறிலங்கா இராணுவத் தளபதிகள், மூத்த அரச அதிகாரிகள், குறிபாக இராணுவ, குடியியல், மற்றும் புலிகளின் தலைவர்கள் மீது அனைத்துலக குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னிறுத்தப்பட வேண்டும்.
சிறிலங்கா அரசு நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல. அதில் ஆழமான குறைபாடுகள் உள்ளன.
சிறிலங்கா அதிபரும் ஐ.நா பொதுச்செயலரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு ஏற்ப அது திருப்திகரமானதாக இல்லை.
போரின் இறுதிநாட்களில் ஐ.நாவின் அரசியல் அங்கங்களோ அல்லது அமைப்புகளோ வன்னியில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளன.
பரிந்துரை -1
அ. ஆயுதப்போரின் போது இருதரப்பினாலும் மீறப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஆ. சிறிலங்கா தொ்டர்பாக ஐ.நா பொதுச்செயலர் உடனடியாக சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிந்துரை-2
கீழ் குறிப்பிடும் விடயங்கள் குறித்து சிறிலங்கா அரசு குறுகிய காலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பரிந்துரை-3
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலான நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பரிந்துரை- 4
சிறிலங்கா தொடர்பாக 2009 இல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அழைப்பது குறித்து ஐ.நா மீளாய்வு செய்ய வேண்டும்.“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகளில் ஐ.நாவும் சிறிலங்காவும் செய்ய வேண்டியவை தொடர்பாக விரிவான விளக்கக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

Short URL: http://meenakam.com/newsnet/?p=11750

Kovan opposes to remove 19 from cong. :காங்கிரசிலிருந்து 19 பேரை நீக்கியது தன்னிச்சையானது: ஈ.வி.கே.எசு. இளங்கோவன்

கோவனைக் காங்.கில் இருந்து நீக்குவது அக்கட்சிக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது; அவருக்குமே நல்லது. தன்னைத்தவிர யார்தலைவராக இருந்தாலும்   சிக்கல் எழுப்பிப்பிறரைத் தூண்டிக் கொண்டே தலைமையை மதிக்காமல் நடந்து கொண்டு பிறரையும் அவ்வாறே எதிர்க்கச் சொல்பவர். தமிழினப் பகைவர். நடுநிலையாளர்போல் பேசித்திரியும் சந்தர்ப்பவாதி.    பரபரப்புச் செய்தி தருகிறார் என ஊடகங்கள் அவருக்கு முதனமை கொடுப்பதால் தன்னைப் பெருந்தலைவராக எண்ணிக்கொண்டு மயக்கத்தில் உழல்பவர். எனவே, உடனடியாக அவர் மீது காங். நடவடிக்கை எடுத்தால் நன்று. மற்றபடி பாழ்செய்யும் பல் குழுக்களால் காங். அழிவது மகிழ்ச்சியே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




காங்கிரஸிலிருந்து 19 பேரை நீக்கியது தன்னிச்சையானது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


கரூர், ஏப். 15: காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட 19 பேரை நீக்கியது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவின் தன்னிச்சையான செயல் என்றார் மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.கரூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 பேரை நீக்கியது செல்லாது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீக்கப்பட்ட 19 பேரில் பாதிப் பேர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள். மீதிப் பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்.காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை நீக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் அனுமதி தேவை. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியில் வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்வானவர்கள். இவர்களை நீக்க காங்கிரஸ் தலைமை, ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். ஆனால், அவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாகச் செயல்பட்டு 19 பேரை நீக்கியுள்ளார் தங்கபாலு.தொண்டர்களைத் தலைவர்கள் ஏமாற்றியதாகத்தான் வரலாறு உள்ளது. ஆனால், மனைவியையே தங்கபாலு ஏமாற்றியதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டார். மேலும், வாக்காளர் பட்டியலில் தனது மனைவியின் பெயரே இடம் பெறாத வகையிலும் செய்துவிட்டார். எனவே, மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் (தங்கபாலு) மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியாக பெரிய கட்சி. எனவே, தொண்டர்கள் தங்களின் குறைகளை அமைதியான போராட்டங்கள் மூலமாகத் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு காந்திய வழியிலான போராட்டங்களுக்கு நான் எப்போதும் ஆதரவு தெரிவிப்பேன். இப்போதிருக்கும் தலைவரை மாற்ற வேண்டுமென ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் விரும்புகின்றனர் என்றார் இளங்கோவன்.

சத்தியமூர்த்தி பவனில் நுழைவோம்: கராத்தே தியாகராசன்அறைகூவல்


கரக்கலை தியாகராசன் ஆரவாரம்  இல்லாமல் அனைவருக்கும் உதவுபவர்;  தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளவர்;  எனினும்  நேற்று முளைத்த கார்த்தி சிதம்பர்தின் பினனால் நின்று தன் மானத்தை அடகு வைத்த்வர். சின்னப்பயல் பின்னால் நிற்கும் மன உறுதி உள்ளவர் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படுவதில் என்ன சிக்கல்?  திரு மங்கள்ராசுவும் பகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிக்ள கிடைக்கப் பாடுபடுபவர்  ; கட்சியையும் நாட்டையும் சீர்குலைக்கும் கோவன் பின்னால் அணி வகுப்பவர் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டால் என்ன தவறு?
நடிகர் சேகர் ச.ம.உ. என்ற முறையில் கோரிக்கை வைப்பவர்கள் குறைகளை உடனே களைய முற்படுபவர்.  நேற்றுதான் கட்சியில் பதவிக்காக நுழைந்தவர், அதற்கான வாய்ப்பு மங்குவதால் கட்சித்தலைமையை எதிர்ப்பது முறைதானா? எப்படியோ தமிழினப் பகையாளி காங்.ஐ உள்ளிருந்தே அழிக்கிறீர்கள். பாராட்டுகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


சத்தியமூர்த்தி பவனில் நுழைவோம்: கராத்தே தியாகராஜன் சவால்


சென்னை, ஏப். 15: பத்திரிகையாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சத்தியமூர்த்தி பவனில் நுழைவோம் என்று சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தங்கபாலுவின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய காரணத்தால் எங்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்துள்ளார். கட்சியினர் யாரும் எங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும், சத்தியமூர்த்தி பவனில் நுழையக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.சத்தியமூர்த்தி பவன் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அது காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இதற்கு ஆபத்து வரும்போதெல்லாம் நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது சத்தியமூர்த்தி பவனை மீட்டு மூப்பனாரிடம் ஒப்படைத்தவர்களில் நானும் ஒருவன். அந்த நேரத்தில் அங்கிருந்து ஓடிப்போன தங்கபாலுவுக்கு இதெல்லாம் நினைவிருக்க நியாயமில்லை.எங்களை உள்ளே வரக்கூடாது என்று அவர் கூற முடியாது. அவ்வப்போது இடைக்கால தலைவராக பதவியில் தொற்றிக் கொள்ளும் அவர், நள்ளிரவில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ஆலோசனை நடத்துகிறார்.வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் கட்டடத்தை மாற்றி அமைப்பதாகக் கூறி அலுவலகத்தை அடிக்கடி இடித்து வருகிறார். இதற்கான அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?பத்திரிகையாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு குறிப்பிட்ட நாளில் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைவோம். முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும் என்று கராத்தே தியாகராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

tamil osai editor bakkiya nathan demises - kalaignar condolence : தமிழ் ஓசை ஆசிரியர் மறைவு: கருணாநிதி இரங்கல்

ஊடகத்தில் தமிழைப் பேண வேண்டும் என்ற பா.ம.க.வின் கொள்கை நிலைப்பாட்டிற்கு உறுதுணையாக  இருந்தவர்;  மிகை முனைப்பால் பல செய்தியாளர்கள் விலகக் காரணமாக  இருந்தாலும், எந்தப் பொருண்மையானாலும் தமிழ் சார் நோக்குடன் ஆய்ந்து அறிக்கை உருவாக்குபவர்;தமிழ் ஓசை ஆசிரியர் திரு பாக்கியநாதன் மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


தமிழ் ஓசை ஆசிரியர் மறைவு: கருணாநிதி இரங்கல்


சென்னை, ஏப்.15: தமிழ் ஓசை நாளிதழின் ஆசிரியர் பாக்கியநாதன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் ஓசை நாளிதழின் ஆசிரியர் பாலா என்கிற பாக்கியநாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தவர் திடீரென நேற்று மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நல்ல வாதத் திறமையோடு அரசியல் கருத்துக்களை விமர்சிக்கக் கூடியவர் பாலா. பாமக நிறுவனர் ராமதாஸ் எதைத் தொடங்குவதாக இருந்தாலும் என்னை அழைத்துத் தான் அதனை நடத்தி வைத்திடக் கூறுவார். அதன்படி தமிழ் ஓசை நாளிதழே நான் தொடங்கி வைத்ததுதான். அந்த இதழில் என்னைப் பற்றிய விமர்சனங்களைக் கூட பாலா எழுதும்போது அவரது ஆற்றலை கண்டுள்ளேன். அவரது மறைவு ராமதாஸுக்கும், பாலாவின் குடும்பத்தினருக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Bail for Dr.Vinayak sen : விநாயக் சென்னுக்கு நீதிமன்றம் பிணை

பிணையில் விடுவித்த நீதிமன்றம் விரைவில் விடுதலை வழங்கட்டும்!  விநாயக்  அவர்களின் பணி தொடரட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



விநாயக் சென்னுக்கு நீதிமன்றம் ஜாமீன்


புதுதில்லி, ஏப்.15: நக்ஸலைட்டுகள் தொடர்பு உள்ளதாக, தேசத்துரோக குற்றச்சாட்டுகளின்கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் விநாயக் சென்னுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.டாக்டரான விநாயக் சென், தனக்கு எதிராக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தனக்கு தவறாக தண்டனை வழங்கியுள்ளதாக ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எஸ்.பேடி மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் ஏப்ரல் 11-ம் தேதி விசாரித்தனர். இந்த வழக்கில் வாதாட மேலும் அவகாசம் தேவை என சத்தீஸ்கர் அரசு கோரியதால் அப்போது விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் அந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் விநாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள்

அரசும் நீதிமன்றங்களும் ஒரு மனிதனின் வாழ்க்கையை நாசப்படுத்தினால், அந்த அரசின் மீதும் நீதிமன்றங்கள் மீதும் யார் நடவடிக்கை எடுப்பது? பாதிக்கப்பட்ட மனிதனுக்கு நஷ்ட ஈடு கொடுக்குமா அரசு? தவறான நீதி வழங்கியதற்கு நீதி மன்றமோ, நீதிபதியோ மன்னிப்பு கேட்பாரா?
By மதுரைக்காரன்
4/15/2011 7:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Singhala navy is responsible for the murder of tamil fishermen : தமிழக மீனவர்களின் சாவுக்கு இலங்கைக் கடற்படைதான் காரணம்: வைகோ

மீனவர்களின் படுகொலைகளுக்குக் காரணம் சிங்களக் கடற்படைதான். ஆனால், அதன் இந்தக் கொலைவெறிப் போக்கிற்குக் காரணம் ஒத்தூதும் இந்திய அரசும் தட்டிக் கேட்காத் தமிழக அரசும்.  நாட்டு மக்களை அயல்நாட்டிடம் இருந்து காப்பாற்ற வக்கற்ற அரசுகள் ஏன் பதவியில் இருக்க வேண்டும் என்று  மக்களிடையே எழுந்துள்ள  எண்ணம் பெரு நெருப்பாகப் பரவுவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



தமிழக மீனவர்களின் சாவுக்கு இலங்கைக் கடற்படைதான் காரணம்: வைகோ


ராமேசுவரம், ஏப். 15: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்து, கடலில் வீசியுள்ளனர் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.இலங்கைக் கடற்படையினரால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்களின் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தலா ரூ. 25 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ் மற்றும் கமுதி தாலுகா, வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகிய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அன்றைய தினம் நள்ளிரவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத இலங்கைக் கடற்படையினர் ஆத்திரமடைந்து, அங்கு மீன் பிடித்த 4 மீனவர்களின் படகை மடக்கிப் பிடித்துள்ளனர்.பின்னர், மீனவர்களின் கை, கால்களை கயிற்றால் கட்டி கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதில், படகிலேயே 4 பேரும் உயிரிழந்துள்ளனர். பின்னர், மீனவர் விக்டஸின் உடலைத் தூக்கி வீசியுள்ளனர். அந்த உடல் யாழ்ப்பாணம் கடற்கரையில் ஒதுங்கியது.மீதமுள்ள மீனவர்களின் உடலை ஒன்றன்பின் ஒன்றாக தமிழக கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர் தூக்கி வீசியதால், தொண்டி, பாசிப்பட்டினம் கடற்கரையில் அச் சடலங்கள் ஒதுங்கின. மற்றொரு மீனவர் உடலையும் விரைவில் கடலில் வீசுவார்கள். இறந்துபோன விக்டஸ் உடலில் 16 இடங்களில் படுகாயமும், காலில் கயிற்றால் கட்டியதற்கான அடையாளமும், ஜான்பாலின் மணிக்கட்டு கை துண்டித்தும், அந்தோணிராஜ் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயமும் உள்ளன. மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமை 30 ஆண்டுகளாகத் தொடருகிறது. இக் கொடூரச் செயலைக் கண்டிக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. இதுகுறித்து ஏப்ரல் 4-ம் தேதி கடிதம் எழுதினேன். இதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.இந்தப் படுகொலை குறித்து மதிமுக உயர்நிலைக் குழு சென்னையில் கூடி விவாதித்து, விரைவில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் எனத் தெரிவித்தார் வைகோ.மதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலர் ஜெயராமன், சிவகங்கை மாவட்டச் செயலர் புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலர் பூமிநாதன், விருதுநகர் மாவட்டச் செயலர் சண்முகசுந்தரம், மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி, மண்டபம் ஒன்றியச் செயலர் பேட்ரிக், மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன் உள்ளிட்ட நிர்வாகிகள், மீனவர்கள் ஏராளமானோர் இருந்தனர்.மீனவரின் மனைவிக்கு ஆசிரியர் பயிற்சிக்கு நிதியுதவி: இறந்துபோன மீனவர் அந்தோணிராஜின் மனைவி சாலியோனுக்கு (19) ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆகும் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்தார்.

Kalaignar reports against E.C. regarding counting date : தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி மீண்டும் புகார்

சரியான கருத்துகள். நாடாளுமன்றத் தேர்தல் எனில் பிற மாநிலத்தேர்தல் முடிவிற்காகக் காத்திருக்கலாம். சட்ட மன்றத் தேர்தல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் தன்மையது. எனவே, உடனே வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கலாம்.  கடைசி நேரப பணப்பரிமாற்றம் நடைபெற வழி வகுத்ததால் சிறிது பாராட்டு கிடைத்திருக்கலாம்.  ஆனால், மக்களின் பாராட்டு அதன் கிடுக்கிப் பிடி நடவக்கைக்காகத்தான். எனவே, முதல்வரின் நியாயமான கருத்திற்குச் செவி மடுத்துத் தேர்தல் அணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!   

தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி மீண்டும் புகார்


சென்னை ஏப். 15: வாக்குப் பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். முடிவுகள் மே 14-ம் தேதிதான் தெரியும். ஆனால் இப்போதுள்ள சட்டப்பேரவைக் காலம் மே 16-ம் தேதி முடிவுற்று அடுத்த சட்டப்பேரவை மே 17-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். எனவே மே 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். இடையில் இருக்கின்ற நாள்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப் பார்த்துவிட்டுதான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது.மே 17-ம் தேதி புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால் எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாள்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தின் முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? இந்த கேள்விகளை நான் ஏற்கெனவே எழுப்பி உள்ளேன்.இது ஒருபுறம் இருக்க, தமிழக மக்கள் அளித்த தீர்ப்புகள் மே 13-ம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படமாட்டாது, எடுக்கப்பட கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அந்த நிலைதான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடப்பதாகவும் அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.அது மாத்திரமல்ல, அரசு சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான் ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்று காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வு கூட செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம். அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்துக்கு அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்த வகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும் தேர்தல் ஆணையமும்தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.


Struggle against the killins of fishermen - Vaiko : மீனவர் படுகொலை தொடர்ந்தால் தீவிரப் போராட்டம்: வைகோ

காததிருக்க வேண்டா. உடனே களத்தில் இறங்குக! வேறு யாருக்கும் அதற்கான தகுதியில்லை. மீனவர்கள் படுகொலை என்பது மனித நேயத்திற்கு எதிரானது; சட்டத்திற்கு மாறானது; தமிழக  இறையாண்மைக்கு எதிரானது; இந்தியப் பாதுகாப்பிற்கு எதிரானது;சிங்கள நட்பிற்காகத் தமிழக  மக்களின் உயிர்களைப் பலி கொடுப்பதே இந்தியத்தின்  பணியாகிவிட்டது. ஆதலின் உடனே களத்தில்  இறங்குக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


மீனவர் படுகொலை தொடர்ந்தால் தீவிரப் போராட்டம்: வைகோ


சென்னை, ஏப்.15- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது தொடர்ந்தால், கடும் போராட்டத்தை நடத்துவோம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து மதிமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2.4.2011 அன்று ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, மீன்பிடிக்கச் சென்ற விக்டஸ், அந்தோணி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் காணாமல் போயினர். இத்தகவலை அறிந்த வைகோ, கடந்த 5.4.2011 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களைக் காப்பாற்றிடக் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில், தமிழக மீனவர்கள் நால்வரும், இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விக்டஸ் என்பவரது சடலம் மட்டும் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. எஞ்சிய இரு மீனவர்களின் சடலங்கள், தொண்டி அருகே, இலங்கைக் கடற்படையால் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மற்றொருவர் குறித்துத் தகவல் இல்லை. இறந்த மீனவர் ஒருவரின் கை, வெட்டித் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த வைகோ, இன்று ராமேஸ்வரம் சென்று, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார். வைகோவைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் கதறி அழுதனர். வைகோ குழந்தைகளை ஆற்றுப்படுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். "உங்களின் தாங்க முடியாத துக்கத்திலும், கண்ணீரிலும் பங்கு கொள்வதற்காகவே நான் வந்துள்ளேன். நான்கு மீனவர்களைக் கொன்றது, இலங்கைக் கடற்படையினர் தான். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்குவதுடன், தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் மத்திய-மாநில அரசுகள் கருதுகின்றன. மீனவர் படுகொலை தொடருமானால், இளைஞர்களைத் திரட்டி, கடுமையான போராட்டத்தை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்," என அவர்களிடம் வைகோ கூறினார்.மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, மதிமுக சார்பில் தலா ரூ. 25,000 உதவித்தொகை வழங்கினார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

இதென்ன கோமாளித்தனம்? சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் நடத்த வேண்டிய நிஜ யுத்தத்தை, வெறும் பொம்மலாட்டப் போராட்டமாக்கப் பார்க்கிறாரே? இலங்க்கைச் சகோதரர்களின் நலனையோ மீனவர்களின் நலனையோ தொலை நோக்குப்பார்வையில் பார்க்காமல் வரட்டுக் கவுரவத்தில் சட்ட சபைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டாரே? தமிழன் கண்கலங்குகிறான், வைகோ அவர்களே-இருந்த ஒரு போர் வாளும் கூர் மலுங்கிற்றே என்று!
By இராமசாமி சேகர்
4/15/2011 7:28:00 PM
வைகோவின் சங்கநாதம் .....தமிழர்களின் விடியலுக்காகவும் .....விடுதலைக்காகவும்.. ஜெயலலிதாவின் நாடு கொடநாடு ....ஜெயா ஏன் தமிழ்நாடுக்காக போராடவேண்டும் .... கருணாநிதி இன் வாய் பேச்சு காம்பவுண்ட் சுவருக்குள் உள்ள அவரது குடும்பத்திற்காக .... விஜயகாந்தின் வசனம் டாஸ்மாக் விற்பனைக்காக.
By விக்னேஷ் கண்ணன்
4/15/2011 6:55:00 PM
தமிழகத்தின் ஈடு இணையில்லாத உண்மை உணர்வுள்ள நாடகத்தன்மையற ஒரே அரசியல் தலைவர் வை.கோவும்,பிறகு அண்ணன் சீமானும்தான் . அதை மக்கள் நன்கு உணர்துள்ளார்கள்... வை.கோ அவர்களே இப்பொழுதில் இருந்தே நன்கு திட்டமிட்டு யாரையும் நம்பாமல் மக்களை மட்டுமே நம்பி செயலில் இறங்கவும் வரும் தேர்தலில் நிச்சயம் நாம் வெல்வோம்... ஒவ்வொருமுறையும் மக்களுக்காக போராடும் உண்மை மனிதர் நீங்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.. நடைபெற்ற தேர்தலில் உங்களின் மௌனம் மக்களை கண்கலங்க செய்ததுதான் நிஜம்... உங்களின் சிம்ம குரல் ஒளிக்காமல் ஓய்ந்த தேர்தல் ஒவ்வொருவர் மனதிலும் எதையோ இழந்துவிட்ட ஒரு உணர்வை வெளிபடுத்தியது என்றால் அது மிகையாது... உங்களின் பலத்தை நீங்கள் இன்னும் உணராமல் இருப்பதுதான் வேதனை... விதைகளை எங்கு புதைத்தாலும் அது ஒருநாள் உடைத்து வெளிவரும் என்பது இயற்கை... ஆம் நீங்கள் ஒரு ஆல(ள)விதை ...
By தமிழினியன்
4/15/2011 6:16:00 PM
jeya, karuna, vejaykanth, congress(k.v.thangabalu, p.chidambaram, g.k.vasan), communist(t.pandian, varadarajan),kudithangi no.1 (ramdoss) ,kudithangi no.2 thiruma they are waiting for election result they dont care about tamil peole they are need only padhavi & panam but this person(mr.vaiko)only need tamil people. he dont care about pdhadhavi & panam. vaiko is a good man & honour
By tamilan
4/15/2011 6:15:00 PM
இவருடைய நல்ல என்னத்தை மக்கள் புரிந்து கொள்வார்களா!!!
By தமிழன்
4/15/2011 5:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

Supporting wave ? or change of the govt. : ஆதரவு அலையா... ஆட்சி மாற்றமா?

ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணை நின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டா எனச் சீமானின் நாம்தமிழர் கட்சியும் பிற தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் மேற்கொண்ட பரப்புரையும்  வாக்களிப்பு மிகுதிக்குக் காரணம். இதனை ஏன் செய்தியாளர் கருதிப் பார்க்கவில்லை என்று தெரியவில்லை.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

ஆதரவு அலையா... ஆட்சி மாற்றமா?


சென்னை, ஏப். 14: யாரும் எதிர்பாராத அளவு வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பொதுத் தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம். வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது.ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலின்போது இந்தக் கருத்து அடிபட்டுப் போனது. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி குறையவே இல்லை. ஆனால் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கூடுதலாக பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை திமுக வேட்பாளருக்குக் கிடைத்தவை.எல்லா வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வது, அதுவும் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்கச் செய்வது என்ற அணுகுமுறையை திமுகவினர் அப்போது கையாண்டதால் அந்த வெற்றி கிடைத்தது.இப்போது முடிந்துள்ள வாக்குப் பதிவில் 80 சதவீதத்துக்கும் மேலானோர் வாக்களித்துள்ளனர்.வாக்களிக்க தாமதம் ஆனபோதிலும்கூட யாரும் கோபம் கொள்ளவோ, தகராறு செய்யவோ, திரும்பிச் செல்லவோ இல்லை. பொறுமையாகக் காத்திருந்து வாக்களித்திருக்கிறார்கள்.அந்த உறுதி, மனமாற்றம் வாக்களர்களிடம் ஏற்படக் காரணம் என்ன என்பது அரசியல் கட்சிகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பெண் வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். இது அரசியல் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே பெண்கள் இரட்டை இலையின் ஆதரவாளர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம்.இப்போது அவர்கள் அதிக அளவில் வந்திருப்பதற்கு மூன்று அம்சங்கள் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.1. கடந்த 5 ஆண்டுகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் கிடைத்தது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மனதில் கொண்டு இந்த ஆட்சி தோற்கக்கூடாது என்பதற்காக அதிக அளவில் வாக்களிக்க வந்திருக்கலாம்.2. அல்லது தேர்தலுக்கு முன்பே வேட்பாளர்களிடம் பெற்ற பணத்துக்காக, அவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக வாக்களிக்க வந்திருக்கலாம். பெண்கள் சென்டிமெண்ட் உள்ளவர்கள் என்பதால் இந்த இரு வாய்ப்புகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.3. அதேசமயம், ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கிய அரிசியைச் சமைக்க இதர மளிகைப் பொருள்களுக்கு ரூ.100 செலவிடும் அளவு விலைவாசி உயர்வு,பஸ் கட்டணம் மறைமுக உயர்வு, மின் தடைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த அரசு மறுபடி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்கூட அவர்கள் பெருமளவு வந்திருக்கலாம் என்கிறார்கள்.பல இடங்களில் வாக்களித்துவிட்டு வந்த பெண்களிடம் விசாரித்தபோது, ""யாரும் சுத்தமான ஆட்சியைத் தரப் போவதில்லை. இந்த முறை மாற்றித்தான் பார்ப்போமே. அதனால் தவறு செய்தால் 5 ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அச்சமாவது அரசியல்வாதிகளுக்கு ஏற்படும்'' என்று கூறினர்.மாற்றம் வேண்டும் என்ற கருத்து பரவலாகக் காணப்பட்டது என்றாலும், மகளிர் சுய உதவிக் குழு என்ற வாக்கு வங்கி இதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.கடைசி நேரத்தில் பரிசுகள் மூலம் பெண்கள் அமைப்பினர் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பார்களா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.தொகுதிகளில் வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பணமோ, பரிசுப் பொருள்களோ தரப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால் பண பட்டுவாடா நடக்காத பகுதிகள் உள்பட, பரவலாகவே வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. காலையில் இருந்தே கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. எனவே பணம் தராத பகுதிகளிலும்கூட வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது பணம் தந்துவிட்டு, அந்த நம்பிக்கையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பல இடங்களில், ""பணம் தந்தார்கள் வாங்கிக் கொண்டோம்; ஆனால் எங்கள் விருப்பப்படிதான் முடிவெடுத்து வாக்களித்தோம்'' என அடித்தட்டு மக்கள் கூறினர். அப்படியானால் ""பணம் வாங்கியது தவறு இல்லையா?'' என கேட்டால், ""அது எங்களுக்கு உரிய பணம், இப்போதுதான் தந்தார்கள், வாங்கிக் கொண்டோம்'' என்று உரிமையோடு கூறினர்.வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், பணம் தந்ததால் மட்டும் இந்தத் தேர்தல் முடிவு இப்படி அமைந்தது என்று கூறுகிற அளவுக்கு முடிவுகள் இருக்காது என்பது மட்டும் வாக்காளர்களிடம் பேசியதில் இருந்து தெரிகிறது.இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஊழல் எதிர்ப்பு என்ற கருத்து அவர்களிடம் அதிகம் காணப்படுவது ஆளும் கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. ஜெயலலிதா கூறியிருப்பதுபோல, வெளியில் எதுவும் சொல்லாமலே "மெüனப் புரட்சி' என்பது வாக்குச் சீட்டுகள் மூலம்தான் நடந்து வருகின்றன.1977, 1996 ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் காணப்பட்ட எழுச்சி இந்தத் தேர்தலில் காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இந்த மெüனப் புரட்சியின் முடிவுக்காக இன்னும் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை பலரையும் வேதனையடையச் செய்திருக்கிறது.
கருத்துகள்

2011 தேர்தல் முடிவுகள் 1996 இல் ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சிக்கு சாவு மணி அடித்ததை பிரதிதிபலிக்கும் என்றே தோன்றுகிறது. அப்படி நடப்பதுவே, ஜனநாயக ஆட்சி முறையை நிருபித்து, தேசிய அளவில் தமிழ் சமுதாயத்தின் மானத்தையையும் காக்கும். இலவசங்களை கொடுத்து ஒட்டு வாங்கி பதவியில் அமர்ந்து கொள்ளை அடித்து மக்களை முட்டாளாக்க நினைக்கும் இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளுக்கும் ஒரு படிப்பினை ஆகும்.
By Padhu, New Delhi
4/15/2011 11:29:00 AM
நோ ஓனே ஹெல்ப் மிடில் கிளாஸ் பெஒப்லே. எவெரி ஓனே இஸ்ஸுஎ ப்ரீ இட்ம்ஸ் போர் வோட்ஸ். இன்ச்ரியசிங் பரிசே டு மோவே இன்ச்ரியசே ஒன்லி நோ ரெடுசே. வோடேத் பாப்லஸ் ஆர் பூளிஷ். இப் ஜெயா கம் இம்மீடியாடே தேச்ரியசே நோ சமே கருணாநதி அலசோ. சோ ஆல் பர்தீஸ் சாய்ஸ் டு பெஒப்லே பட் இட் வில் நாட் ஹப்பேன்.
By Rajan
4/15/2011 11:19:00 AM
ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். ஒட்டு போடுபவர்களின் இரகசியம் காக்க படவில்லை. நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாசா காந்தி நிலையத்தில் ஒட்டு போட சென்றேன். ஒட்டு போடும் இயந்திரத்தில் '49 ௦' பதிவு செய்ய வசதி இல்லை. நான் கேட்டபோது, அங்கு இருந்த அதிகாரி உடனே எல்லோரும் கேட்கும்படி சத்தமாக என்னை பார்த்து கேட்டார் " நீங்கள் '49 o ' போடவேண்டுமா, அந்த அதிகாரியிடம் உள்ள நோட் புக்கில் கையெழுத்து போடுங்கள்" அவர் சொன்னது அங்கிருந்த அனைவருக்கும் (பூத் ஏஜென்ட்களும்) கேட்க சொல்லப்பட்டது. என்னுடைய ஒட்டுரிமையின் இரகசியம் காக்க படவில்லையே. அங்கிருந்த போலீஸ் இடம் பெற்று ஜோனல் ஆபிசருக்கு போன் செய்த பொது அவர் பூத் அதிகாரி செய்ததை நியாயபடுத்தினார். செய்தி தாள்களில் கொடுத்திருந்த புகார் நம்பருக்கு போன் செய்தால், அவர் ARO , மற்றும் RO நம்பர்களை கொடுத்தார். அந்த நம்பர்கள் கிடைக்கவே இல்லை.
By மனோகரன்
4/15/2011 11:17:00 AM
இந்த தேர்தலில் மக்கள் இந்த அளவுக்கு வாக்கு அளித்ததற்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் தேர்தல் ஆணையத்தின் மீது சில பழுத்த அரசியல் தலைவர்கள் கோபமாக உள்ளனர் ஏன் இந்த கோபம் என மக்கள் உணர்துவிட்டனர் வாழ்க தேர்தல் ஆணையம் சிறக்க உனது பணி.
By முத்து
4/15/2011 11:11:00 AM
இதில் என்ன சந்தேகம் சூரியனை மறைக்க போவது இரட்டை யிலை தான்.
By மரத் thamizhan
4/15/2011 10:58:00 AM
கொலை,கொள்ளை, ஊழல் இவை அனைத்தையும் பொறுமையுடன் சகித்து கொண்டிருந்த மக்கள் எப்பொழுது தேர்தல் வரும் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று ஏங்கி காத்து கொண்டிருந்ததையே இந்த வாக்குபதிவு காட்டுகிறது.. இது ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் அமர்ந்து சிந்திக்கவேண்டிய விஷயம்.. இனிமேலும் நாங்கள் உறங்குவதாக இல்லை என்பதை மக்கள் மணியடித்து சொல்லிவிட்டனர்.. இனியாவது ஊழலில் மூழ்கியுள்ள அரசியல்வாதிகள் விழிப்பார்களா?? அனைத்து பெருமைகளும் தேர்தல் ஆணையரையும்,அதிகாரிகளையும்,முக்கியமாக தினமணி போன்ற ஊடகங்களையும் சாறும்..
By தமிழினியன்
4/15/2011 10:34:00 AM
சிறப்பான பதிவு... பெரும்பாலும் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்வதில் பெண்களும் இளைஞர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்... இவர்கள் பெருமளவில் வாக்களித்ததால் கட்சிகள் கலக்கத்தில் இருப்பது உண்மை... இந்த வெற்றி நிச்சயம் தேர்தல் கமிஷன்னையே சாரும்... ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது பரவலாக உள்ள கருத்து.. அது இந்த முறை வெளிப்படும் நிலை உள்ளது.. ஆனால் பெரும் இழுபறி நிலையும் உருவாக வாய்ப்பு அதிகம்... எது எப்படியோ.. இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி..!!!
By கோபி கிருஷ்ணா
4/15/2011 9:13:00 AM
அப்போ தி மு க தான் ஆட்சி அமைக்கும்
By ponnampalam
4/15/2011 8:59:00 AM
அப்போ கண்டிப்பாக தி மு க தான் ஆட்சி அமைக்கும்
By ponnampalam
4/15/2011 8:56:00 AM
தினமணி! திமுக தான் வெற்றி, அதிமுக கண்டிபா தோல்வி! இன்னும் 4 வாரங்கள் காத்திருக்கவும்.
By புகழேந்தி சா
4/15/2011 8:48:00 AM
அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள் என்பது உண்மை என்று தெரிந்து விட்ட படியால் மக்கள் பணம் வாங்குவது தவறு இல்லை என்று முடிவு கட்டி விட்டார்கள் .பணம் கொடுப்பது தவறு என்பது உண்மை என்றாலும் அதை தடுக்க பெரும் செலவு செய்ய வேண்டியுள்ள படியால் பேசாமல் ஒன்று செய்யலாம். ஒரு வாக்காளருக்கு ஒரு அரசியல் கட்சி ஒரு குறிப்பிட்ட தொகையை ஓட்டு போடுவதற்கு முன் கொடுத்துவிட வேண்டும் என்று சட்டமே கொண்டு வரலாம் .மக்களும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு தங்கள் விருப்பம் போல ஓட்டு போட்டு விடுவார்கள்.
By கே.ஜானகி vallabhan
4/15/2011 8:30:00 AM
இது தினமணி கருத்து ஆனால் மக்கள் இலவசத்துக்கு அடிமை, உழளுகும் உடந்தை, இந்த தேர்தல் பணம் மற்றும் இலவசம் ஜெயா மேல மக்களுக்கு நம்பிகைலம் இல்ல ஆதலால் எல்லாம் தி மு க வுக்குதான் சாதகம், மகளிர் சுய உதவி குழ்குகள் ஒட்டு அரசு ஊழியர் இலவச வீடு வாங்கினவர்கள் எல்லோரும் தி மு க தன இந்த இணையதுள்ள கருத்து சொல்லுற எவனும் ஒட்டு போடா போகல இதை நம்பி கனிச்ச கணிப்பு தப்பதான் போகும், எதரி கட்சி ஒன்னும் உத்தமர்அஹ்ன் கள் எல்லா ஆதலால் மக்கள் தெளிவதன் இருகிறார்கள் தினமணி தினமலர் ஜெயா பஜன பாடும் செய்திதால்கத்தான் இங்க கருத்து எழுதும் மக்களை வச்சி ஒரு கணிப்பும் நீங்களா ஒரு கற்பனை கட்டுரையும் எழுதுறிங்க , நீங்க சொன்ன முதல் ரெண்டுதான் காரணம் மற்ற விளக்கம் எல்லாம் ஜெயா கோசம் சொம்புதன்
By முனைவர் இரா மணிகண்ணன்
4/15/2011 8:28:00 AM
இந்த முறை அரசியலில் ஒரு புது திருப்பம் அமையும் என்று அனைவரும் எதிர் பார்க்கிறோம் .ஆட்சி மாற்றம் அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது .
By chinna
4/15/2011 7:12:00 AM
சரியான நெரத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து தமிழக இலைஞர்களிடம் ஓரளவுக்காவது விழிப்புனர்வு ஏற்படுத்திவிட்டார் சரியாக ஓட்டுபதிவுக்கு முன்பு அவரது போராட்டம் வெற்றி அடைந்தது மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தி இருக்கும் என்று தோன்றுகிறது. எது எப்படியொ இந்த தேர்தலில் தேர்தல் ஆனையத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் மக்களிடையே கூடியுள்ளது. எல்லோரும் பணத்திற்க்காகதான் வந்து ஓட்டளித்திற்பார்கள் என்று கூறவும் முடியாது காரணம் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கோவையில் மெழுகு வத்தி ஏந்தி போராடிய மக்கள் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள். இந்த தேர்தலில் தேர்தல் ஆனையதின் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த விதத்தில் பத்திரிக்கைகளின் பங்கு மிகப்பெரிய பாராட்டுக்குறியது.
By கருவி பாலா
4/15/2011 6:57:00 AM
படித்தவர் அதிகம் உள்ள தொகுதிகளில் சதவிகிதம் குறைவு. மயிலாப்பூர், திருவெல்லிக்கேணி, அண்ணா நகர், வேளச்சேரி பகுதிகளில் குறைவு. ராயபுரம், போன்ற இடங்களில் அதிகம். படித்தவன் பெப்சி குடித்துவிட்டு வீட்டில் இருப்பன். இவர்கள்தான் உரிமை பற்றி அதிகம் சொல்வார்கள்.
By சிவ.தமிழ்மணி
4/15/2011 6:21:00 AM
இரண்டு ஊழல் கட்சிகளிடையே எதற்கு ஆதரவு தருவது? உண்மையில் மக்களுக்காக உழைக்கும் எண்ணம் கருணாநிதிக்கோ அல்லது ஜெயலலிதாவுக்கோ இல்லை. உண்மையான மக்கள் தலைவன் தற்போது தமிழ்நாட்டில் இல்லை. எதனை கோடிகள் சம்பாதித்தாலும் இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் அரசியல்வாதிகள். இவ்வளவு கோடிகளை சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள் என்று புரியவில்லை. பதவிக்காக பல அறிவுப்புகளை தி.முக. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே வாரி வழங்கி உள்ளன. தான் ஆட்சிக்கு வந்தால் என்கிற தான் என்னும் அகம்பாவம் ஜெயலலிதாவுக்கு இன்னும் போகவில்லை. அந்த பக்கம் பாரத்தால் கருணாநிதி தன குடும்ப உறுப்பினர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க ஆனந்தபட்டுக்கொண்டிருக்கிறார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மின் வெட்டு அடியோடு நீக்கப் பட போவதில்லை. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை இலங்கை தமிழர் பிரச்சினை தீர போவதில்லை. குறைந்த பட்சம் தமிழ்நாடு மக்களின் தேவைகள் என்ன என்று பார்த்து சேவை புரியும் கட்சி என்று ஆட்சிக்கு வருமோ? [பாவம் நாங்கள்தான்.
By ஜெயராஜ் வி.சி.
4/15/2011 6:19:00 AM
வாங்குபவன் இருப்பதால் தான் கொடுப்பவன் இருக்கிறான். அனால் அண்ணா நகரில் சதவிகிதம் என்ன. படித்தவர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் வாக்கு ....
By சிவ.தமிழ்மணி
4/15/2011 6:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *