சனி, 28 செப்டம்பர், 2013

நளினியைச் சந்தித்தார் வைகோ


நளினியை முதல்முறையாக ச் சந்தித்தார் வைகோ

Comment   ·   print   ·   T+  
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டணி வெற்றியைத் தொடர்ந்து, அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் அக்டோபர் 22-ம் தேதி, பல்வேறு தூக்குத் தண்டனை வழக்குகள் தொடர்பான விசாரணை வருகிறது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்குகளைச் சேர்க்கவில்லை. தலைமை நீதிபதியின் விசாரணை குறித்த முடிவுகள் அப்போது வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதில், இந்த மூன்று பேரின் மரண தண்டனையும் ரத்தாக வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்குப் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்தச் சிக்கலை சமாளிக்க அங்கு ஜனநாயகம் இருப்பதுபோல காட்டிக்கொள்ள 25 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இது இந்தியா-இலங்கையின் சதித் திட்டம். ராஜபக்க்ஷே கூட்டணி வெற்றிபெறக்கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தமிழர்கள் வாக்களித்து, அபரிதமான வெற்றியைத் தேடித்தந்துள்ளார்கள். வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத்தினர், சிங்களவர்களை வெளியேற்றி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அதில், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ’மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. நாங்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என தேர்தல் நேரத்தில் கூறுவார்கள்’ இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினியை வைகோ சுமார் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். நளினியை வைகோ சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது இருவருக்கும் நடந்த பேச்சுகள் தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.
கு தமிழர்கள் வாக்களித்து, அபரிதமான வெற்றியைத் தேடித்தந்துள்ளார்கள். வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத்தினர், சிங்களவர்களை வெளியேற்றி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அதில், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாக்களிக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ’மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. நாங்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என தேர்தல் நேரத்தில் கூறுவார்கள்’ இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினியை வைகோ சுமார் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். நளினியை வைகோ சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது இருவருக்கும் நடந்த பேச்சுகள் தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.

‘Tamils vote in NPC not a legitimation of unitary Sri Lanka’

‘Tamils vote in NPC not a legitimation of unitary Sri Lanka’: Tamil Nadu activist

[TamilNet, Friday, 27 September 2013, 23:43 GMT]
Arguing that the Northern Provincial Council elections was not conducted for the interests of the Eezham Tamil nation but rather was coordinated by the US-Indian establishments for diverting the attention of the world from the genocide taking place, Umar, activist with the May 17 Movement, stated that the vote of the Eezham Tamils for the TNA was cast against the genocidal Sri Lankan state. Without considering this, some are interpreting the vote as being against the demand of Tamil Eelam and a legitimation of unitary Sri Lanka. In an interview to TamilNet, he further said a political solution can be arrived at only through a referendum amongst the Eezham Tamils in the island, in Tamil Nadu and the diaspora, referring to the overwhelming mandate for the Vaddukkoaddai resolution given by the diaspora in 2010.
Umar from May 17 Movement in Tamil Nadu
Umar from May 17 Movement in Tamil Nadu
Tamil Eelam was the fundamental demand of the Eezham Tamils in the homeland, the refugees in Tamil Nadu and the diaspora, who should be considered as one national entity.

The number of votes in the diaspora in favour of the Vaddukkoaddai resolution almost equals the number of votes given for the TNA in the NPC.

This NPC election has nothing to affect the demand for Tamil Eelam.

Any election conducted within the Sri Lankan constitution and the 6th amendment cannot provide a solution for the Eezham Tamils. Only an extra-constitutional solution can do that, he opined.

TNA providing legitimacy to the US resolution of March and working within its paradigms shows that it has been caught in the web of US-Indian game plan.

Commenting on the current situation in Indian politics, he was of the view that there would be no difference whether BJP or Congress was in power, referring to several instances where in the previous BJP rule, India provided extensive help to the GoSL.

He called on the Tamils to extend their support only for the alternative forces.

Navi Pillay's oral update, a gross betrayal of Tamils: Prof Ramasamy

Navi Pillay's oral update, a gross betrayal of Tamils: Prof Ramasamy

[TamilNet, Friday, 27 September 2013, 09:24 GMT]
The United Nations Human Rights High Commissioner Navanetham Pillay, in her latest oral update to the UN Human Rights Council is more concerned with whitewashing the Sri Lankan government than looking at the tragic situation of Tamils, writes Malaysia’s Penang State Deputy Chief Minister Professor P. Ramasamy, in an article sent to TamilNet on Thursday. “I think that the report should be more appropriately entitled ‘Strengthening Democracy in Sri Lanka’. In essence, close reading of the report in its entirety will reveal that she picked her words carefully to drive home the point that her main interest in Sri Lanka is not about inquiring into gross violation of human rights against Tamils, but to strengthen democracy and human rights in Sri Lanka. Tamils are not given prominence in the report. In fact, Tamils are treated just like another minority in the country, he further writes.

All the positive propaganda about Navi Pillay by certain governments and NGOs is a ploy to hide the real truth of the UN as an agency that serves the geo-political interests of the US and its allies,” Professor P Ramasamy writes.

Full text of the article by the Deputy Chief Minister of Pengang, Prof P. Ramasamy, follows:

Navi Pillay’s Oral Update: Gross Betrayals of Tamils!
Prof P Ramasamy
Prof P Ramasamy
Navi Pillay, the UN High Commissioner of Human Rights, a celebrated global personality and a champion of the underdogs, has proved it once again that she is after all an agent of the West. In her latest Oral Update, she is more concerned with whitewashing the Sri Lankan government than looking at the tragic situation of Tamils. This Oral Update is a follow up on what she presented in Colombo after having visited and examined the state of human rights in Sri Lanka.

This Oral Update is not different from the earlier one. It is obviously more polished and well-presented to the requirements of the prominent international players. I think that the report should be more appropriately entitled “Strengthening Democracy in Sri Lanka”. In essence, close reading of the report in its entirety will reveal that she picked her words carefully to drive home the point that her main interest in Sri Lanka is not about inquiring into gross violation of human rights against Tamils, but to strengthen democracy and human rights in Sri Lanka. Tamils are not given prominence in the report. In fact, Tamils are treated just like another minority in the country.

In this Update, she commends the excellent cooperation extended by the government. She gives credits to the impressive human rights achievement by the government with the help of the international community. She says that vast majority of the internally displaced persons had been settled another instance of achievement by the government. She is pleased that the government has taken the initiative to invite the Special Rapporteur from UN.

She thinks that the recent elections to the Northern Provincial Council will bring about better devolution of power. On the large military presence in Tamil areas, compulsory acquisition of private land and the role of military in civilian areas, she contends that all these are not simple and straightforward issues that could be resolved overnight. She thinks that these are complex issues that would have to be tackled through the initiatives of the various responsible ministries. Of all the internal mechanisms, she praises the LLRC. She is pleased that the government has accepted a number of its recommendations; for instance, the separation of the police from the Ministry of Defense. Touching on LTTE, she said that the outfit should be held responsible for war crimes.

Navi Pillay does not talk about the mass killings of Tamils during the last stages of the war. More than 100,000 Tamils were mercilessly killed by the Sri Lankan troops. Is she blind to this episode? While she talks about the intimidation of minorities, she avoids even mentioning the mass murder of Tamils. If she can gloss over such an incontrovertible fact, then she must definitely have a particular agenda in talking about human rights in Sri Lanka.

She mentions about the LTTE in relation to war crimes. What about the murderous Sinhala regime that decimated hundreds and thousands of Tamils with the support of the international community. Who raped hundreds of Tamil women? What about the thousands of Tamil prisoners languishing in prisons without any form of support? She praises the recent elections for the Northern Provincial Council, but what about the systematic attacks against candidate Ananthi?

This Update by Navi Pillay is highly irresponsible one. It is an insult to Tamils who suffered and endured thirty years of war. With two reports, she has marginalized the victims and exalted the oppressors. By her non-committal to the principles of democracy and human rights, she has weakened the demands for Tamils for justice and freedom. All the positive propaganda about Navi Pillay by certain governments and NGOs is a ploy to hide the real truth of the UN as an agency that serves the geo-political interests of the US and its allies.

In the final analysis, UN’s real intention is not so much to understand the sufferings of Tamils so that they could seek justice, but ensure that Sri Lankan government is “rehabilitated” so that it could shed its “international pariah” status. Naveen Pillay is doing a wonderful job in this direction!

Chronology:

சருக்கரை - ஒரு கசப்பான உண்மை

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_814341.jpg

சருக்கரை - ஒரு கசப்பான உண்மை

மனிதன் அதிகம் உண்ணும்,உணவில் சத்தில்லாத சருக்கரையும் ஒன்று. நம் உடலுக்கு,இவை அறவே தேவையில்லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் "குளுக்கோஸ்' ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல், இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் தான், இதுசத்தில்லாத கலோரி உணவு என்றும் அழைக்கிறோம். சிகரெட், மது முதலியவற்றை விட சர்க்கரை அதிக ஆபத்தானது. புற்றுநோய்,எலும்புமுறிவு நோய், மூட்டு வியாதிகள்,உடல் பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், சரும நோய், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரக கோளாறு, சொத்தை பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல்,பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சர்க்கரை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. கேனில் அடைத்து விற்கும் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவற்றில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஆபத்து:


குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூலம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின்றனர்.சர்க்கரை அதிகமாகவும், வைட்டமின்மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு, உடம்பில் ரசாயன மாறுதல் ஏற்பட்டு அளவுக்கு மிஞ்சிய துடுக்குதனத்தையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கும்,நொறுக்கு தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. இனிப்பான பொருட்களை உண்ணும் போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள், ஒருவித அமிலத்தை உருவாக்கும். இந்த அமிலம், பற்களில் உள்ள "எனாமலை' அரித்து ஓட்டையாக்கி, பல்லில்சொத்தையை ஏற்படுத்தும். சர்க்கரையும், கொழுப்பும் உள்ள உணவு பொருட்கள், ரத்தத்தில் "கொலஸ்ட்ரால்' அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால், ரத்தம், ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபடுகிறது. இது தொடருமானால், ஒருவருடைய தசைநார்கள் இறந்துபோய், மாரடைப்பை ஏற்படுத்தும். இந்த மாரடைப்பிற்கு குழந்தை பருவத்திலேயே நாம் வித்திட்டு விடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரையை நாம் உணவில் சேர்த்தால், 92 சதவீத வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும். உடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதை சுத்தப்படுத்த அதிகமாக "இன்சுலின்' வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் "இன்சுலினுக்கும்' நோய் எதிர்ப்புசக்தியை தடுக்கும் ஹார்மோன்களான, புரோஸ்டேகிளேன்டான்-க்கும் அதிக தொடர்பு இருக்கிறது.இது புற்றுநோய் கட்டியை உருவாக்குகிறது.

பெண்மைக்கு பகை:


"கேன்டிடா எல்பிகன்ஸ்' என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை, இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக "சுக்ரோஸ்' உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே, மெல்ல கொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

விரைவான அருவினைக்கு வினைத்திறன் இன்றியமையாதது!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81427220130928005710.jpg
வேகமான சாதனைக்கு விவேகம் அவசியம்!


அமெரிக்காவில், மூன்று லட்சம் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவரும்; பல துறைகளில் ஆராய்ச்சி செய்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற, சுப்ரா சுரேசு: நான், சென்னையில் வளர்ந்தவன். சென்னை ஐ.ஐ.டி.,யில், ‘கெமிக்கல் இன்ஜினியரிங்’ முடித்து, மேற்படிப்பிற்காக கடன் வாங்கி, 100 டாலர் பணத்துடன், அமெரிக்கா சென்றேன். என் முதல் முனைவர் பட்டத்தை, எம்.ஐ.டி., யில், 1981ல் பெற்று, அங்கேயே ஆசிரியராக பணியாற்றினேன். ஆசிரியப் பணியின் போதே, ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, 250 ஆராய்ச்சி கட்டுரைகள், ஆறு புத்தகங்களை எழுதியுள்ளேன். பொறியியல், மருத்துவம், ரசாயனம், உயிரியல் என, பல துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, 22 புதிய கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமையும் பெற்றிருக்கிறேன். எம்.ஐ.டி., பல்கலை கழகத்தில், ஐந்து வெவ்வேறு துறைகளின் தலைவராக பணியாற்றியதை, இன்றளவும் பெருமையாக கருதுகிறேன். ஏனெனில், இச்சாதனையை செய்த முதல் ஆசிய இனத்தவர் நான் தான். பல துறைகளில் ஆராய்ச்சி செய்து சாதித்ததற்காக, ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி, இந்திய அரசு பாராட்டியது.
‘என்.எஸ்.எப்.,’ எனும், தேசிய அறிவியல் அறக்கட்டளை தான், அமெரிக்காவின் மிக உயர்ந்த அறிவியல் அமைப்பு. இங்கு, விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், புதிய கண்டுபிடிப்புகள் செய்ய இளைஞர்களை ஊக்குவித்து, நிதி உதவியும் செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக, 2010ம் ஆண்டு என்னை நியமித்தார்.
நான், கடந்த ஆண்டு மட்டும், மூன்று லட்சம் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியதோடு, 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, நிதி உதவி செய்து, பல புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்துள்ளேன். அமெரிக்க பல்கலை கழகம் ஒன்றின் தலைவர் பொறுப்பை ஏற்க, அறக்கட்டளை பணியிலிருந்து விலகிய போது, அமெரிக்காவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவியதாக, அதிபர் ஒபாமாவே என் திறமையை பாராட்டினார். சாதனைகளை வேகமாக செய்தாலும், விவேகம் அவசியம்.

இலங்கைத் தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதி: வைகோ

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டம்: வைகோஇலங்கை வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தேர்தல் இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள ராஜீவ் கொலை வழக்கின் தூக்கு தண்டனைக் கைதிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை வெள்ளிக்கிழமை அவர் சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எள்ளளவும் தொடர்பில்லாத பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வாழ்க்கையின் பெரும்பகுதி சிறைச் சாலையிலேயே கழிந்துவிட்டது. அவர்கள் நிரபராதிகள் என்பதால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் போராடி வருகிறோம்.
வரும் அக்டோபர் 22-ம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு பல மரண தண்டனை வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதில் இவர்கள் மூவரின் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா என்பது அன்றைய தினம் தெரியவரும்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியது இந்திய-இலங்கை அரசுகளின் சதித் திட்டமாகும்.13-வது சட்டத் திருத்தத்தை தமிழர்கள் ஏற்காத சூழலில், அச்சட்டத்தை நீர்த்துப்போக செய்வதற்காக ராஜபட்ச அரசு களம் இறங்கியுள்ளது.
லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காக்க தவறிய பாங்கிமூன் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
இலங்கை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். காமன்வெல்த் நம்பகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டுமெனில் அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றார் வைகோ.
அவரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் வரவேற்றனர்

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

உயர்கல்வியை வீழ்ச்சியிலிருந்து மீட்க...கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கூறி வரும் நல்ல கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எனினும் சாதி முதலானவற்றிற்கு முதன்மை தருவது குறித்துப் படைத்துறையுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது சரியல்ல. படைத்துறையில் சேரும் பொழுது  எப்படி இருந்தாலும் பதவி உயர்வு எதன் அடிப்படையில்  கிடைக்கிறது என்பதைப் படைத்துறை அலுவலர்களிடம் கேட்டால் கூறுவார்கள். மேலும், இட ஒதுக்கீட்டால் பயனடைந்து விட்டு அதற்கு எதிரான  கருத்தைச் சொல்வதும் தவறாகும். இட ஒதுக்கீட்டில் தகுதி பார்க்கப்படவில்லை என்று யார்  சொன்னது?  மருத்துவம், பொறியியல் சேர்க்கைக்கான மதிப்பெண் விவரங்களைப் பார்த்தாலே உண்மை தெரியும்.  தமிழ் வழிக்கல்வியும் ஊழலின்மையும் இருப்பின் தரமான கல்வி பெருகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உயர்கல்வியை வீழ்ச்சியிலிருந்து மீட்க...
அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
÷இந்தத் தரவரிசைப் பட்டியல் குறிப்பிட்ட அடிப்படைகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் தகுதி, உலகளவில் புகழ்பெற்றுள்ள இதழ்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள், அக்கட்டுரைகள் உலகப் பெரும் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்டவை, பல்கலைக்கழக வழி கண்டறியப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் அயல்நாட்டு மாணாக்கர்கள், ஆசிரியர்கள் இவை போன்ற அடிப்படைகளை வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
÷கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே, உலக அளவில் அறிவியல் கட்டுரை பற்றி வெளிவரும் பட்டியலில் (சைன்ஸ் இன்டக்ஸ்) இந்தியப் பல்கலைக்கழகங்களின் இடம் மிகப் பரிதாபமானதாக இருக்கும். மறுதலையாக, 1948க்கு முன்பு இந்தியாவைப் போன்றே வறுமையிலும் அரசியல் ஸ்திரமின்மையிலும் இருந்த சீனா, உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்துக்குள் இடம்பெற்றிருக்கும்.
முன்பு சுட்டிக்காட்டப்பெற்ற இருநூறு பல்கலைக்கழகப் பட்டியலில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தாய்மொழியாகிய சீன மொழியிலேயே பள்ளிக் கல்வி தொடங்கி, பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வி வரை நடத்துகின்ற சீனா, உலகத் தரப் பட்டியலில் முன்னிடம் பெற்றிருக்கிறது. தாய்மொழிக்குப் பயிற்றுமொழித் தகுதி தந்தால் கல்வித்தரம் தாழ்ந்துவிடும் என்று கற்பனைக் குதிரையில் ஏறிப் பறந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்புச் சாதனைகள் எதனையும் நிகழ்த்துவது இல்லை.
÷பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரின் குறைந்தபட்ச ஊதியம் ஐம்பதினாயிரம் ரூபாய். கூடுதல் ஊதியம் ஒன்றரை லட்சம். மாத ஊதியம் மட்டுமில்லாமல், வெளியூர் கருத்தரங்கிற்குச் சென்று பங்கேற்றல் மூலமாக ஒவ்வோர் ஆசிரியரும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தியா முழுதும் சுற்றிப்பார்க்க அரசாங்கச் சலுகை; நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்தினர் அனைவருக்கும் இலவசப் போக்குவரத்தும் நல்கப்படுகிறது. மருத்துவம் இலவசம். இன்னும் பல வசதிகளைப் பெற்றிருந்தும் நம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உலகத்தரத்தை எட்டும்படியாக எதனையும் எழுதுவதில்லை. பலர் எழுதுவதே இல்லை.
சில பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் முழு நேரமும் தம் அலுவலக இடத்தில் இருப்பதும் இல்லை. இன்னும் சிலர் தமக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரங்களில் வகுப்புகளுக்குச் செல்வதும் இல்லை. பணி நேரத்தில் உட்படும்படியாக, எம்.ஃபில்., பிஎச்.டி., ஆய்வேட்டு நெறியாளராக இருக்கும் ஆசிரியர்களுக்கு வசதி செய்து தரப்படுகிறது. ஆனால், ஆய்வேடுகளைப் படித்துப் பார்க்கும் பாமரனும் கூட, ஆய்வேடு நெறியாளர்களால் படிக்கப்படுவதுமில்லை; திருத்தப்படுவதுமில்லை என்ற ஊரறிந்த உண்மையைத் தெரிந்துகொள்வார்கள்.
÷பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் முதலான பொறுப்புகளில் இருக்கும் ஆசிரியர்கள் எம்.ஃபில்., பிஎச்.டி., நெறியாளராக இருக்கிறார்கள். எம்.ஃபில். என்றால் இத்தனை ஆயிரம் ரூபாய். பிஎச்.டி. என்றால் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று தம் ஆராய்ச்சி மாணாக்கரிடம் பணம் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது பல்வேறு இடங்களில் இருந்து வரும் செய்தியாகும். சில இடங்களில் எம்.ஃபில். ஆய்வேடு எழுதித் தர இத்தனை ஆயிரம் ரூபாய், பிஎச்.டி. ஆய்வேடு எழுதித் தர இத்தனை ஆயிரம் ரூபாய் என்று விலை பேசி எழுதித் தர ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படாத செய்தி.
÷ஒரு பல்கலைக்கழகம் என்றால் அப்பல்கலைக்கழகத்தில் "ஜர்னல்' எனப்படும் ஆராய்ச்சி இதழ்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தனி ஆராய்ச்சி இதழை நடத்துவதே இல்லை. விதிவிலக்காக சில இருக்கலாம். ஆராய்ச்சிக் கட்டுரை எழுத வேண்டிய தேவை இல்லை என்பதால் புதிய கட்டுரை எழுதப் புதிய புத்தகங்களை வாசிக்கவும் தேவை இல்லை; வாங்கவும் தேவை இல்லை. புதிய புத்தகம் எதுவும் எழுதவும் தேவை இல்லை.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் எழுதி வெளிவந்துள்ள நூல்கள் மிகச் சிலவே. இவையும் தமிழ்ப் பேராசிரியர்களால் எழுதப்பட்டவையே பெரும்பான்மை. ஏனைய துறை ஆசிரியர்கள் அப்பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை.
÷கன்ஃபூசியஸ் எனும் சீன மேதை சீனர்களின் வாழ்வைப் பெரிதும் செறிவுபடுத்தியவர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர், அமைச்சர் பதவி வேண்டாம் என்று துறந்தவர். ஊர் ஊராகச் சென்று மக்களைக் கூட்டி அவர்கள் நடுவே பலவேறு கருத்துகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் எடுத்துரைப்பார். மிகச் செல்வாக்குமிக்க அறிஞராகச் சீனர்களிடையே அவர் விளங்கினார். கேட்போர்க்குரிய தகுதி மூன்று வகையினருக்குத்தான். அவர்களில் தான் தெரிவு செய்து கருத்துகளை விதைப்பதாக அவர் சொல்லுகிறார்.
முதல் தர வகையினர் சிப்பியைப் போன்றவர்கள். சிப்பி மழைத்துளி மண்ணில் விழ, தன் வாயில் வாங்கி வயிற்றில் வைத்திருந்து சில காலம் சென்று அம்மழைத் துளியை முத்தாக்கிவிடும். இன்னொரு வகையினர் விதைத்தது விளையும் வகையினர். மூன்றாவது வகையினர் தவளை வகையினர். கேட்டதை அப்படியே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பர். சிற்பி வகையினருக்கு மட்டும்தான் கருத்துகளை எடுத்துச் சொல்லுவேன் என்று கன்ஃபூசியஸ் தன் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டைத் தமிழரிடையேயும் கல்வி கற்கும் பழக்கமும் கற்பிக்கும் பழக்கமும் இருந்து வந்தன. அவை ஒரு கல்வி நிறுவனமாக இல்லை. எனினும் இவ்வாறு பாடம் போதிக்கும் ஆசிரியரை நல்லாசிரியர் எனவும் பாடம் கேட்கும் மாணவரை நல்மாணாக்கர் எனவும் வகைப்படுத்தி இருந்தனர். இவர்களைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பிய உரையின் உள்ளும் நன்னூலிலும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் ஏறத்தாழ ஐந்நூறு இணைப்புக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றிற்காக அரசு செலவு செய்வதோ கோடிக்கணக்கில். இந்திய அளவில் ராணுவத்திற்கு அடுத்தபடியாக கல்விக்காகத்தான் அதிக பணம் செலவிடப்படுகிறது. இவ்வளவு பணம் செலவிட்டும் உலகப் பார்வையில் நம் நாட்டில் கல்வி கற்றோரை சராசரி தகுதி பெற்றவராகக்கூடக் கருதுவது இல்லை.
ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில், நம் நாட்டில் பட்டம் பெற்றவர்களுக்கு அப்பட்டத்திற்கு உரிய சம்பளம் வழங்குவதில்லை. நம் நாட்டில் முனைவர் பட்டம் பெற்றோரை முனைவர் பட்டம் பெற்றவருக்கு உரிய ஊதியத்தைப் பெறக்கூடியவராக ஏற்றுக்கொள்வதில்லை. ஃபிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் அவர் இணைந்து மீண்டும் முனைவர் பட்டம் பெற்றால்தான் ஏனையோர் பெற்று வரும் ஊதியத்தைப் பெற முடியும்.
தற்போதைய பிஎச்.டி. பட்டம் பெற்றோரின் தகுதியை அவர் வேலை செய்யும் திறனைக் கொண்டு மதிப்பிட்டால் பெரும்பாலோர் பாஸ் பெறுவரா என்பது ஐயம். பொறியியல் கல்லூரிகளில் படிப்போர் கூட அவர் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ற அலுவலில் சேரத் தகுதி உடையோராக இல்லை என்பது வேலை தருவோரின் கணிப்பு. இந்நிலை ஏன் என்பது உரத்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி.
பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிக்கல்வி, மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை கல்லூரிக் கல்வி என முழு நேரமும் இக்கல்வியைக் கற்ற பிறகும் கற்ற கல்விக்கு உரிய வேலை செய்யும் திறனை இவர்கள் பெற்றிருப்பது இல்லை. இதற்குப் பின்வருவன காரணங்களாக இருக்கலாம்.
1. மாணாக்கர் தகுதி உடையவராக இருப்பதில்லை. 2. பயிற்றும் ஆசிரியர் தகுதி உடையவராக இருப்பது இல்லை. 3. நம் தேர்வு முறை சரியாக அமைந்திருக்கவில்லை. 4. நம் பாடத் திட்டம் உலகத் தகுதி உடையதாக இருப்பது இல்லை. படித்தவுடன் வேலைக்குத் தகுதி உடையவராக ஆக்குவதில்லை.
பாடம் படிப்போர், பயிற்றுவோர், தேர்வுமுறை ஆகியவற்றில் சரியான மாற்றத்தைக் கொண்டு வந்தால் ஒழிய நம் கல்வித் தரத்தை உலக சராசரிக்குக் கூடக் கொண்டு போக முடியாது. அமெரிக்காவில் வேலை செய்து வரும் சீனர்களைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் செவி வழிச் செய்திகள் வருகின்றன. சீனர்களுக்கு ஆங்கிலம் வராது. ஆனால் வேலை வரும். இந்தியர்களுக்கு வேலை வராது. ஆனால் ஆங்கிலம் வரும்.
நம் பாட திட்டத்தையும் தேர்வு முறையையும் நாம் அடிக்கடி மாற்றி வருகிறோம். ஆனால், தர வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக இருக்கின்ற ஆசிரியர் தெரிவு பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
கற்பிக்க வரும் ஆசிரியனின் கல்வித் தகுதி, கல்வி பயிற்றும் தகுதி ஆகியவற்றைச் சோதிப்பதைவிட நாம் அவனுடைய புறச்சார்புகளைச் சோதிக்கிறோம். சாதி, மதம், மொழி முதலானவற்றில் காட்டும் அக்கறையை அவன் கல்வித் தகுதியிலும் காட்ட வேண்டும் அல்லவா? ராணுவத்திற்கு ஆளெடுக்கும்போது அவன் கை கால்கள், உடல் நலம், வலு ஆகியவற்றைப் பார்ப்பதுதானே முதன்மை. அவன் எங்கிருந்து வந்தான்? அவனுடைய அப்பா அம்மா யார்? அவர்களுடைய சாதி என்ன? மதம் என்ன? என்று ஆராய்ந்தா ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறோம்? அப்படி ஆள் சேர்த்தால் நம் ராணுவம் உருப்படுமா? ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும்போது ராணுவத் தகுதியை முன்னிறுத்துவது போல பல்கலைக்கழகக் கற்பித்தலுக்கு ஆசிரியரைத் தெரிவு செய்யும்போது அவருடைய கல்வித் தகுதியையும் பயிற்றும் தகுதியையுமே பார்க்க வேண்டும்.

கட்டுரையாளர்:
பல்கலைக்கழகத் துணைவேந்தர் (ஓய்வு).