சனி, 25 டிசம்பர், 2021

குவிகம் இணைய அளவளாவல்: குரு சீடர் பரம்பரையம்

 அகரமுதல

     25 December 2021      No Commentமார்கழி 11, 2052 ஞாயிறு 26.11.2021

மாலை 6.30

குரு சீடர் பரம்பரையம்

பிள்ளை – உவேசா –  கிவாச

சிறப்புரை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆசிரியர், கலைமகள் திங்களிதழ்

கூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931
கடவுச் சொல் /  Passcode:

 kuvikam123   பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

வெள்ளி, 24 டிசம்பர், 2021

Tamil Thai Vaazhthu: Scholar says GO was right, court was wrong

 


by  | Dec 24, 2021 | Culture
English தமிழ்The ‘Tamil Thai Vaazhthu’ (hymn in praise of the Mother Tamil) was penned by Manonmaniam P. Sundaranar in the preface to his poetic drama ‘Manonmaniam’ published in 1891. The Karanthai Tamil Sangam demanded that the song, “neeraarum kadaluduththa nilamadanthai” (the earth personified as a woman wearing the garment of sea flush with water) should be sung at all functions in Tamil Nadu. Following the introduction of the Tamil panegyric at the organization’s events in 1914, demands to the Tamil Nadu government poured in from various quarters that the ‘Tamil Thai Vaazhthu’ be made the state song.

In 1960, Prof.S. Ilakkuvanar, then secretary to the Academy of Tamil scholars (Thamizhaga Pulavar Kuzhu), urged the government to fulfill the demand, but to no avail. But when he reiterated his demand to the state during his second term in the same position, the then Chief Minister and his student Kalaignar M Karunanidhi accepted the demand and announced on March 11, 1970 that the song would be sung as a hymn to Tamil at all government functions. However, close on the heels of the government initiative followed a controversy. Some groups objected to the lines that said Tamil was alive unlike Sanskrit that was dead. To pacify the detractors, the DMK government removed the controversial lines when sung in state functions.

The present DMK government, led by M. K. Stalin, on December 17 declared the ‘Tamil Thai Vaazhthu’ as state anthem  and released the G.O. in this regard.

Prof.S. Ilakkuvanar Thiruvalluvan, president, Tamil Protection Association

Ilakkuvanar Thiruvalluvan, president, Tamil Protection Association (Tamil kaappuk kazhagam), an outfit spearheading and propagating Tamil as an everyday language, speaks about the issue in the following interview.

Question: The government order now has made it mandatory for all educational institutions, government offices, and public sector units to play the ‘Tamil Thai Vaazhthu’ at functions where the attendees should stand to attention during the rendition of the song.  Organizers of private functions too will be motivated to conform to the stipulation. What is your opinion about this government order?

Answer: It’s an order that deserves congratulations. An order that enables  Mother Tamil to stand firm, holding her head high.

Q: Why do you say this?

A: In a case related to the ‘Tamil Thaai Vaazhthu’ issue, the Madurai Bench of the Madras High Court noted that there was no executive order nor an administrative one insisting on all standing to attention during the rendition of the song. But the government did not go on appeal against this verdict or criticised it. Noting the absence of a legislation, as pointed out by the court, the government has formulated an order and issued it now.

The order has, while making it mandatory for all to stand to attention during the rendition of the song, exempted the differently abled. A well trained singer must sing the song rather than play the recording, the order says. So, all are now bound by law to stand in honor of Mother Tamil. The case has, in fact, culminated in something good.  Now Mother Tamil, who faced humiliation in the hands of certain groups, is standing tall in glory. Hence, Chief Minister M.K.Stalin and Minister Thangam Thennarasu and all officials connected with the issue deserve our praises and gratitude. It is praise-worthy that the government remained unfazed by opposition from certain quarters and yet did not go out of its way to counter the opposition. Rather it has taken the trouble to find a solution to the issue, silencing detractors and critics.

During the rendition of the ‘Tamil Thai Vaazhthu’ at an event, some may mumble some Sanskrit song or some film lines or may curse under their breath if they are not standing up. This is unacceptable. The high court verdict was therefore wrong.


Q: Why do you say that some may curse Tamil?


A:  Their hereditary trait is to be anti-Tamil. They have spoken ill of the world renowned Tamil classic Tirukkural and launched a smear campaign or hate campaign against Tamil ethical values. How will such people and their descendants worship Mother Tamil? Will the heirs to those, who always asserted that only Sanskrit has magical divine power and opposed worshipping gods in Tamil, respect Tamil? Those who had said they never respected Mother Tamil (Tamil Thaai) won’t worship her with their eyes closed and sitting down.

 

Q: Even if it is wrong, what impact will such individuals make?

A: No. This is a wrong hypothesis. Such individuals and their supporters who are anti-Tamil to the core may portray those standing up for the song as a bad custom and this may catch on. I witnessed this tendency at an event  in Chennai just following that incident. While the ‘Tamil Thaai Vaazhthu’ was being played, the onlookers in the auditorium all stood up in a spirit of veneration,  but the key dignitaries sitting on the dais preferred to keep sitting as if deliberately avoiding the ritual. Seeing this some in the audience began to sit.  After the end of the event, I approached one of them, who was reputed to be serving Tamil, editing a newspaper, and told him, “If only you had stood to attention during the rendition of the Tamil hymn, others on the dais would have followed suit. Is it right that while claiming you’re doing great service to Tamil, you don’t respect Mother Tamil?”He said: “That’s  just a song.  So no need to stand up.”

This event takes the cake in the trend of Tamils ignoring their mother tongue while living on Tamil soil and earning through Tamil.

Q: What is your final take on this issue?

A: It was only to stop this rot that the government has come out with its order stipulating that all Tamils and non-Tamils living in Tamil Nadu respect Mother Tamil. Hence, once again, I convey my gratitude and regards to the Chief Minister and the Tamil Development Minister.https://inmathi.com/2021/12/24/tamil-thai-vaazhthu-scholar-says-go-was-right-court-was-wrong/35097/தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?

 அகரமுதல

by Inmathi Staff | டிசம்பர் 24, 2021 | பண்பாடுEnglish தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 1914இல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் விழாக்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலைத் தமிழக அரசின் பாடலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தன. 1960இல் தமிழகப் புலவர் குழுவின் செயலராக இருந்த பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழக அரசிற்கு இது குறித்து கோரிக்கை அனுப்பினார். நடவடிக்கை எதுவும் இல்லை. அவர் இரண்டாம் முறை அதன் செயலராகப் பொறுப்பேற்றார்.அப்பொழுது மீண்டும் அரசிற்கு மடல் அனுப்பினார். அப்பொழுது முதல்வராக இருந்த அவர் மாணவரான கலைஞர் கருணாநிதி இதனை ஏற்றார். 1970ஆம் ஆண்டு மார்ச்சு 11ஆம் நாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக முதல்வர் மு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் சிலரிடம் இருந்து வந்த எதிர்ப்பால், ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் நீக்கப்பட்டுப் பிற பாடல் வரிகளை ஏற்றார். இந்த திசம்பர் 17ஆம் நாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதல்வர் மு.க. தாலின் தலைமையிலான தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதுகுறித்து தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் அளித்த நேர்காணல்:

தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன்

கேள்வி: தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த (“தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும். மேலும், தனியார் மத்தியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஊக்குவிக்கப்படும் என்னும்”) தமிழக அரசின் ஆணை குறித்து என்ன கருதுகிறீர்கள்?

இலக்குவனார் திருவள்ளுவன்: பாராட்டப்பட வேண்டிய ஆணை. தமிழ்த்தாயைத் தலைநிமிரச் செய்த ஆணை.

கேள்வி: ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?

திருவள்ளுவன்: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பில் “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, கலந்து கொள்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் எனச் சட்டப்பூர்வமாகவோ, நிருவாக முறையிலோ உத்தரவு எதுவும் இல்லை “ என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அரசு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. கண்டித்தும் அறிக்கை விடவில்லை. மாறாக இதற்கான சட்டம் இல்லை என்றுதானே நீதிபதி கூறுகிறார். அதற்கு ஆவன செய்வோம் என உரிய சட்டத்தை இயற்றியுள்ளார்கள்.

“வாழ்த்து பாடப்படுவதுடன் அனைவரும் எழுந்து நிற்பதும் அவசியம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இசைத்தட்டு ஒலிக்கச் செய்வதை விடப் பாடலில் தேர்ச்சிப் பெற்றவரை கொண்டு வாய்ப்பாட்டாக பாடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என அரசாணை கூறுகிறது. எனவே, இதுவரை எழுந்து நிற்காதவர்கள்கூடச் சட்டப்படி எழுந்து மதிப்பளிக்க வேண்டும். எனவே, வழக்கினால் நல்லதுதான் நடைபெற்றுள்ளது. தன்னை மதிக்காத தமிழ் மக்களால் தலை குனிந்த தமிழ்த்தாய் இப்பொழுது தலைநிமிர்ந்து காட்சியளிக்கிறார். எனவே, தலைகுனிந்த தமிழன்னை மகிழும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டம் இயற்றிய முதல்வர் மு.க. தாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடர்பான அதிகாரிகள் அனைவரும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள். எதிர்ப்பு கண்டு ஒதுங்கவும் இல்லை. அதனை எதிர்த்துச் சிக்கலையும் உருவாக்கவில்லை. மாறாகத் தக்க தீர்வு கண்டுள்ளார்கள். தமிழ் உலகு உள்ளளவும் இச்செயல் என்றும் பாராட்டிற்குரியதாகும்.

சமற்கிருதப்பாடலை மனத்திற்குள் சொல்லிக் கொண்டிருக்கலாம் அல்லது திரைப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது தமிழையோ தமிழ்த்தாயையோ திட்டிக் கொண்டுகூட இருக்கலாம். எனவே, ஒன்றுபோல் தமிழன்னைக்கு மதிப்பளிக்காமல் அவரவர் வழியில் மதிப்பளிக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தவறு செய்தவர்கள் மீது மதிப்பு இருந்தால், அவர்களின் தவறான செயல்களும் நல்ல செயல்களாகத்தான் தெரியும். எனவேதான் தவறான புரிதலில் தீர்ப்பு வெளிவந்துள்ளது எனலாம்.

கேள்வி: என்ன நீங்கள், தமிழைத்திட்டிக்கொண்டுகூட இருக்கலாம் என்று சொல்கிறீர்கள்?

திருவள்ளுவன்: தமிழ்ப்பகைக் குணமே இவர்களின் பரம்பரைக்குணம்தானே. உலகம் தொழுது போற்றும் திருக்குறளைத் தீய குறள் என்று சொன்னவர்களும் தமிழ் அறநெறிக்கருத்துகளுக்கு எதிராக நச்சுப் பரப்புரை மேற்கொள்பவர்களும் எப்படித் தமிழ்த்தாயை வணங்குவார்கள்? அவர்கள் பரம்பரையில் வந்தவர் எப்படி இருப்பார்?

சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல் உண்டு எனக்கூறித் தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவரின் பரம்பரையில் வந்தவர் எப்படித் தமிழை மதிப்பார்?

எப்பொழுதுமே அவர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் செலுத்துவதில்லை என்று கூறியிருக்கும் பொழுது கண்களை மூடிக்கொண்டு தமிழை வாழ்த்தியிருப்பார் என்பது அவருக்கே எதிரான கருத்துதானே.

கேள்வி: அதைத் தவறு என்றாலும் தனி ஒருவர் தவற்றால் என்ன ஆகப்போகிறது?

திருவள்ளுவன்: அப்படிச்சொல்லக்கூடாது. அவரது ஆதரவாளர்களும் தமிழ்ப்பகைவர்களும் அதைப் பின்பற்றுவார்கள்; பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட நிகழ்வு நடந்த சில வாரத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது பார்வையாளர்கள் எழுந்து நின்றனர். மேடையில் அனைவரும் உட்கார்ந்திருந்தார்கள். இதைப்பார்த்த பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் எழுந்து நிற்கக்கூடாதுபோல எனக் கருதி அமர்ந்து விட்டார்கள். கூட்டம் முடிந்ததும் மேடையில் இருந்த தமிழ்ப்பணி ஆற்றுவதாகக் கருதப்படும் இதழாசிரியரைச் சந்தித்தேன். ‘‘பிறர் அமர்ந்திருந்தாலும் நீங்கள் எழுந்து நின்றால் அவர்களும் எழுந்து நிற்பார்கள் அல்லவா? தமிழ்த்தொண்டாற்றுதாகக் கூறிக்கொண்டு தமிழ்த்தாயை மதிக்காதிருப்பது சரிதானா?’’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘‘தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்கத் தேவையில்லை. அது ஒரு பாட்டு. அவ்வளவுதான்’’ என்றார். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழை மதிக்காதவர்கள் பெருகுவதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

கேள்வி: இதுகுறித்து நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

திருவள்ளுவன்: இத்தகைய தவறான போக்குகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் தமிழரல்லாதவர்களும் தமிழ்த்தாயை மதிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தமைக்காகத் தமிழ்நாட்டின் முதல்வருக்கும் தமிழ் வளர்ச்சி அமைச்சருக்கும் தமிழக அரசிற்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் மீண்டும் தெரிவிக்கிறேன்

 
 
 


தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசுதொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும்.

இந்த மையம் மூலமாகத் தமிழ்ப் பழங்கால இலக்கணத்தைப் பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி தற்போது செம்மொழித் தமிழ் நிறுவனம் தயாரித்துள்ள தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பு,  கன்னடத்தில் தொல்காப்பியம், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் முனைவர் சுபாசு சருக்கார், இந்தி, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியத்தின் இந்தி, கன்னட நூல்களையும் தமிழ் இலக்கியம்-பண்பாட்டின் செழுமையான பாரம்பரியத்தைப் போற்றும் பதினெண் கீழ்க்கணக்கின் கன்னட மொழி நூல்களையும் வெளியிட்டார்.

தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன?

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சருக்கார், இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தமிழ் மொழி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம்-பண்பாட்டின் செழுமையான பாரம்பரியம் காலத்தின் மாறுபாடுகளைத் தாங்கி பல நூற்றாண்டுகளாகச் செழித்து வளர்ந்துள்ளது என்று கூறினார்.

 

சங்க இலக்கியங்களும், தொல்காப்பியமும் இந்தச் செழுமையும் பெருமையும் வாய்ந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இந்த பாரம்பரியத்தை நாடு மிகவும் பெருமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நூல்களில் உள்ளார்ந்த இலக்கியச் செழுமையையும் ஞானத்தையும் மக்கள் விரும்புவார்கள் என்று கூறிய அவர், இந்த மொழிபெயர்ப்புகளை வெளிக்கொணரவும், இந்தி, கன்னட வாசகர்களுக்கு இந்த இலக்கியம் கிடைக்கச் செய்யவும் சிறந்த பங்களிப்பை வழங்கிய செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், அதன் மொழிபெயர்ப்பாளர்கள் குழுவுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, செம்மொழித் தமிழ் நிறுவனப் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், கல்வி அமைச்கத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொல்காப்பியம் நூல் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது குறித்துப் பேராசிரியர் சந்திரேகரனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, “தமிழ்ப் பழங்கால இலக்கிய, இலக்கண நூல்களைப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது தமிழாய்வு நிறுவனத்தின் நோக்கம்,” என்று கூறினார்.

சங்கக் காலத்தில் நீடித்த படைப்புகள்

 

 தமிழ் எழுத்து முறைகள் கிமு 250க்கு* முந்தையவை. தமிழ்ச் சங்கக் காலப் பாடல்கள் என்பது 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்களைக் குறிக்கின்றன. 102 பாடல்கள், இயற்றியவரின் அடையாளம் அறியப்படாதவை.

பெரும்பாலான அறிஞர்கள் வரலாற்றில் சங்க இலக்கிய ஊழியை கிமு 300 முதல் கிமு 600 வரையிலான காலக்கட்டத்தை உலகின் மிகச் சிறந்த இலங்கியங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியம் எனும் செய்யுளில் இலக்கண நூலான தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் மட்டுமே பண்டைத் தமிழுக்கு உண்டு என்று நம்புவது நியாயமானதாக இருந்தாலும், எட்டுத்தொகைகளும் பத்துப் பாடல்களும் காலத்தைக் கடந்து நிற்கின்றன. எட்டுத்தொகை என்பது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவற்றைக் கொண்டது.இந்த நூல்களின் சிறப்பைக் கருத்தில் கொண்டு, பட்டறிவு வாய்ந்த தமிழ்-கன்னட அறிஞர்கள் குழு, பெங்களூர் தமிழ் சங்கம் மூலம் சங்க இலக்கியங்களைக் கன்னடத்தில் மொழிபெயர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர்கள் இரு மொழிகளிலும் நன்கு அறிந்தவர்கள் மற்றும் மொழிபெயர்ப்புப் பணியை முடிப்பதில் சிறந்த பட்டறிவைப் பெற்றவர்கள் என செம்மொழித் தமிழ் நிறுவன நிருவாகம் கூறியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட செம்மொழித் தமிழ் உரையின் கன்னட மொழிபெயர்ப்பை 8,000 பக்கங்களுக்கு மேல் ஒன்பது தொகுதிகளாக வெளியிட செம்மொழித் தமிழ் நிறுவனம்  முயற்சி எடுத்திருக்கிறது.

 தொல்காப்பியம் இந்தி மொழிபெயர்ப்பில் வசனம் (உரை, ஒலிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புகள்) முனைவர் எசு.பாலசுப்ரமணியம், பேராசிரியர் கே.நாச்சிமுத்து போன்றோரால் மொழிபெயர்க்கப்பட்டு 1,214 பக்கங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச்சு மாதத்துக்குள் மேலும் சில மொழிகளில் தமிழ் இலக்கிய நூல்கள் வெளியிட செம்மொழித் தமிழ் நிறுவனம்  நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு நூல்கள் என மொத்தம் 36 நூல்கள் வெளிவரும் என்றும், தெலுங்கில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை அடுத்த ஆண்டு மார்ச்சு மாதத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராசிரியர் இரா. சந்திரசேகரன்கூறினார்.

மலையாள மொழியிலும் ஐந்து நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த பிறகு அவை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொல்காப்பியம் என்பது என்ன?

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

 தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என அவை வகைப்படும்.தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேராசிரியர் இலக்குவனார் 1963இல் செய்தார். அந்த நூலுக்கு திமுகவின் அப்போதைய தலைவராக இருந்தவரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை முன்னுரை எழுதியிருந்தார்.

அவருக்கு முன்பாக, தொல்காப்பியத்தை ஆங்கில மொழியில் பேராசிரியர் பி. சுப்பிரமணிய சாத்திரி எழுதியிருந்தார். திருவையாற்றை சேர்ந்த அவர் அடிப்படையில் சமற்கிருதப் பேராசிரியர். அவரது மொழிபெயர்ப்பு குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அது பல்வேறு தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-59758537

தரவு: பொறி.இ.திருவேலன்

 

வியாழன், 23 டிசம்பர், 2021

இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்: 26/12/21

 அகரமுதல
தமிழே விழி !                                                                                             தமிழா விழி  !

தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

இணைய உரையரங்கம்:

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்

 மார்கழி 11, 2052 ஞாயிறு 26.12.2021 காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

 வரவேற்புரை: செல்வி வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

பொழிஞர்:

திருக்குறள் ஆராய்ச்சி யறிஞர் பேரா.வெ.அரங்கராசன்

முனைவர் இர.அர.கீதா

சிறப்புரை:

கலைஞர் செம்மொழி விருதாளர் திருக்குறள் தலைமைத் தூதர்

முனைவர் கு.மோகன்ராசு

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை : திரு.ப.சிவக்குமார்

அன்புடன்

 தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்