வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Cannibal Rajapakshe visit Thirupathy

கொடுமை! கொடுமையிலும் கொடுமை! ஆன்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! கொடுமைக்கு முடிவு ஏற்படுவது எப்போது? திருப்பதிக்கு வருபவனைத் திரும்பப் போகவிடாமல் வைத்துக்கொள்வானா இறைவன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!S.M.S. to voters: ஏமாறாமல் இருந்தால் ஏற்றம் பெறலாம்'

இவ்வாறு பலரும் தேர்தல் விழிப்புணர்வு பற்றிய குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். நான்  அரசியல் ஆத்திசூடி என அனுபபி வருகின்றேன். இதுவரை அனுப்பியவை.1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்! 2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்! 3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர். 4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்!  5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்  6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்! 7.  எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்! 8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்!  9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்! 10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்! 11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்!  ௧௨ . ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்! 13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்! 14*. கயவருக்கு வாக்களிக்காதீர்!  தேர்தல் ஆத்திசூடி என்னும் தலைப்பில் thiru-thoazhamai@googlegroups.com குழுவிலும் நாள்தோறும் காணலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கண்ணியமான தேர்தல்-2011 குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆம்பூர் ஜமாத்தே இஸ்லாமி இந்த் அமைப்பு தினந்தோறும் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறது.  வியாழக்கிழமை அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிட்டிருப்பது:  "ஏமாறாமல் நாம் இருந்தால் ஏற்றம் பெறும் நம் நாடு. வரும் ஏப்ரலிலும் ஏமாந்தால் - அது ஏங்கி நிற்கும் நம்மோடு! கடமையை செய்வோம் கண்ணியம் காப்போம்.

Un expected candidate - Thanga balu: எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

தங்கபாலு உட்பட அனைத்துக் காங். வேட்பாளர்களும் மண்ணைக் கவ்வ வேண்டும். அதே நேரம் தங்கபாலுவிற்கு எதிராகக் கோவன் குழுவினர் தொடர்ந்து ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.  காலங்காலமாகக் காங்.கட்சி என்பதே இங்குள்ளோர் தனிப்பட்ட முடிவைச் செயல்படுத்த முடியாது என்பதுதான். அவ்வாறிருக்க அவர்மீது வேண்டும் என்றே பழி சுமத்தப்படுகிறது. தி.மு.க.கூட்டணியை விரும்பாதக் காங். தலைவர்களாலும் எதிர்ப்புப் போராட்டம் தூண்டப்படுகிறது.  மாநிலக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நேரடியாகவே தொகுதியைப் பெற வாய்ப்பு உள்ளபொழுது அவர் ஏன் குறுக்குவழியைப் பின்பற்ற வேண்டும். தங்கபாலு தலைவராக இருக்கும் பொழுது எதிரப்பு ஆர்ப்பாட்டங்கள் மிகுதியாக இருக்கின்றன வென்னால் அதன் காரணம், அவரது எதிர் அணியினர் தலைமைக்குக்கட்டுப்படாததுதான். எனவே, காங். அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை காங்.. கணிசமான அளவில் வெற்றி பெற்றால் அணிமாறி ஆட்சிப்பீடத்தில் அமரத் துடிப்பவர்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை அக்கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடாமல் சத்தியமூர்த்தி நிலையத்தைத் தங்கள் அணிக்குச் சார்பான போ்ராட்டக் களமாக மாற்றும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வேண்டுகோள்  காங்.தலைமைக்க நடுவு நிலையுடன் விடுக்கப்படுவது! அதே நேரம்  வாக்காளர்களுக்கான மனித நேய வேண்டுகோள், காங்.கிற்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்காதீர்கள் என்பது! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

சென்னை: ""எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பது கட்சி விரோத செயல். தேர்தல் நேரத்தில் தொண்டர்களை குழப்புவது நல்லதல்ல. தேர்தல் முடியும் வரை தொண்டர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் தங்களது கருத்துக்களை கட்சி மேலிடத்தில் தெரிவிக்கலாம். உண்ணாவிரதம் இருந்தவர்களை, உள்ளே வருமாறு அழைத்தேன். இது என் பண்பாடு. கட்சி கட்டுப்பாட்டை நான் மதிக்கிறேன். கட்சியில் எனக்கென்று தனி சிறப்பு உண்டு. இரண்டு முறை தலைவர் பதவியும், பல பொறுப்புகளையும் வகித்துள்ளேன். கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

நான் எந்த வேட்பாளரையும் மாற்றவில்லை. வேட்பாளர்கள் தேர்வு மேலிடம் எடுத்த முடிவு. மேலிடம் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரையும் காங்கிரசார் ஆதரிக்க வேண்டும். ஒரு அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகியுள்ளேன். இது விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. எனக்கு கட்சி தான் முக்கியம். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்வேன். தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. நான் விரும்பியிருந்தால் சோனியாவிடம் ஏதாவது ஒரு தொகுதியை கொடுங்கள் என கேட்டிருப்பேன். 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

Senthil - San Franciso,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:57:56 IST Report Abuse
வருங்கால பிரதமர் நொங்குபாலு வாழ்க.
 • Rate it:
 • 1
 •  
 • 0
Share this comment
Yuvraj - Chennai,இந்தியா
2011-04-01 02:45:55 IST Report Abuse
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி தங்கபாலு வாழ்க!!...
 • Rate it:
 • 0
 •  
 • 0
Share this comment
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:52:51 IST Report Abuse
எங்களுக்கு தெரியும் உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் காங்ரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தால் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசை தானே? அதெப்படி உங்களின் வேட்புமனுவோடு எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கும் போது மனைவியின் வேட்பு மனுவில் இரண்டு ஆவணங்களை மறந்தீர்கள்? நல்ல வேலை இந்த குறுக்கு புத்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே வந்ததே. நான் மேலே சொன்னது போல் தப்பித்தவறி கூட்டணி ஆட்சி அமைந்து அப்போது உங்களுக்கு துணை முதல்வர் பதவி ஆசை இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு தான். பேட்டிய பாரு "எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்".
 • Rate it:
 • 0
 •  
 • 0
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-04-01 01:38:10 IST Report Abuse
அது எப்படி அய்யா தங்க பாலு, மனைவியின் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்து போட மறந்து,, உங்க படிவத்தில் மாத்திரம் எல்லாம் சரியாக செய்தது, என்ன இருந்தாலும் இந்த தமிழ் மக்களை இவ்வளவு கேனைகளாக செய்ய கூடாது. தமிழ் மக்கள் முட்டாள்கள் தான். கேனைகள் தான். இந்த இலவசத்தை கொடுத்து கொடுத்து, சொரணை கெட்ட ஜன்மங்களாக செய்து விட்ட இந்த கலைனர் உங்களுக்கும் நல்ல உதவி இருக்கிறார். என்ன தெரு கூத்து நடந்தாலும் உங்க பின்னே தான் கொஞ்சம் சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லா நீங்க அப்ப அப்ப போடும் பிச்சைக்கு கை தூக்கும் தொண்டர்கள் கொஞ்சம் இருக்கும் வரை உங்களுக்கு கவலை எது,. உங்க கலைனரும் கோஷ்டி தலைவர்களும் வாரிசு பதவி வைக்கும் போது உங்களுக்கு மட்டும் என்ன இருக்காதா? என்ன ஒரு கேவல பிழைப்பு அய்யா ? இதில் காமராஜரையும் என்னையா இழுக்கிறீர்கள்.
 • Rate it:
 • 0
 •  
 • 0
Share this comment
maazmai - Chennai,இந்தியா
2011-04-01 00:49:46 IST Report Abuse
ஆனால் எல்லோரும் எதிர்பார்க்கிறபடி உங்கள் தோல்வி உறுதி..
 • Rate it:
 • 2
 •  
 • 0
Share this comment
k.kaipulla - nj,இந்தியா
2011-04-01 00:46:24 IST Report Abuse
பொதுவா பாத்தீங்கன்னா, எதிர்பாராத விதமா அந்த சம்பவம் நடந்திடிச்சுன்னு ஒரு கெட்ட காரியத்த பத்தி சொல்லுவாங்க. அதுமாறியே இவரும் சொல்லுறாரு.
 • Rate it:
 • 4
 •  
 • 0
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-04-01 00:44:54 IST Report Abuse
நீயெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஒரு சாப கேடு... அது என்ன எப்ப பாத்தாலும்... "அன்னை சோனியா", "அன்னை சோனியா" ன்னு ஜால்ராவ தட்டோ தட்டுன்னு தட்ற வெக்கமே இல்லாம.... சோனியாவுக்கு ..... மாதிரி இருக்கிற நீ.... பேச்சை பாரு...
 • Rate it:
 • 3
 •  
 • 0
Share this comment
Rameshbabu R - Salem,இந்தியா
2011-04-01 00:44:10 IST Report Abuse
எதிர்பாராத விதமாய் நி மனிதனாக கூடத்தான் பிறந்து விட்டாய்.. இதெல்லாம் சகஜமப்பா..
 • Rate it:
 • 4
 •  
 • 0
Share this comment
Vaigai Selvan - Chennai,இந்தியா
2011-04-01 00:31:12 IST Report Abuse
நீங்கள் வேட்பாளர் ஆனது எதிர்பாராதது தான்.. ஆனால்நீங்கள் டிபாசிட் இழக்கப்போவது நாங்கள் எதிர்பார்த்தது..
 • Rate it:
 • 4
 •  
 • 0
Share this comment


dinamalar photomessage: be free from frees


Disabled voters requested priority :வாக்களிக்க முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்

சரியான வேண்டுதல்கள். இந்தத் தேர்தலிலேயே இவை நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வாக்களிக்க முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்சென்னை, மார்ச் 31: தேர்தலில் வாக்களிக்கும்போது உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பாக, "தேர்தலில் மாற்றுத் திறனாளிகளின் சிரமங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பேசியதாவது:தமிழகத்தில் சுமார் 20 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். எனவே எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேர்தல் ஆணையம் சில உரிமைகளையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.குறிப்பாக, நடக்க இயலாதவர்களுக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி வசதியை செய்து தர வேண்டும்.பார்வையற்றோரை பொறுத்தவரையில், மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்க இயலாது. அவ்வாறு உதவி செய்பவர்கள் அவர்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களித்து விடும் சூழ்நிலை உள்ளது. எனவே பார்வையற்றோரின் வாக்குரிமை மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது.இதனைத் தவிர்க்க, மற்றவர்களின் உதவியில்லாமல் வாக்களிக்கும் வகையில் பேசும் மென்பொருள் (டாக்கிங் சாஃப்ட்வேர்) வசதியை வாக்குச்சாவடிகளில் கொண்டு வர வேண்டும்.உயரம் குறையுள்ளவர்களுக்கு வாக்கு இயந்திரம் எட்டும் அளவுக்கு சாய்வு தளப் பலகை வசதியை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல, செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு தகவல் பரிமாறும் வசதி மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வழங்கப்படும் அடையாள அட்டையையே போதுமானதாக கருதி வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் நம்புராஜன், உயர வளர்ச்சி தடை பெற்றோர் சங்கத் தலைவர் ஆர்.கோபிநாத், மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய உதவி இயக்குநர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

வியாழன், 31 மார்ச், 2011

World Cup - CANNIBAL Rajapakshe invited: உலகக் கோப்பை இறுதி: பிரதிபா பாட்டீல்,இராசபட்ச மும்பை வருகின்றனர்

பாக்கிசுதான் தலைமையமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா சிங்கள வெறிக் கொலைகாரன் வருகைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரவிடாமல் செய்ய வேண்டும். இந்தியாவின் சார்பாக இனப் படுகொலை புரிந்ததாக் சிங்களம் தன் நாடாளுமன்றத்திலேயே அறிவித்துள்ளதால் கூட்டாளிகை அடிக்கடிச்சிவப்புக் கம்பளம் விரித்துச் சிறப்பான வரவேற்பை இந்திய அரசு கொடுக்கத்தான் செய்யும். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க த் தமிழக மக்கள் திரண்டெழ வேண்டும். ஆனால், கட்சிக் கொத்தடிமைகளாக உள்ள தமிழ்நாட்டவர் அவ்வாறு செய்ய மாட்டார்கள். பம்பாய்வாழ் தமிழர்களாவது பிற மக்களைத் திரட்டி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். கொலைகாரத் தலைவர்களின் ஒற்றுமையைக் கண்டாவது நாம் ஒன்று படவேண்டும்! வென்று காட்ட வேண்டும்! கொலைகாரக் கூட்டணியைப புரிந்து கொண்டு  வரும்தேர்தலில்அதனைத் தோற்கடிக்கவேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி!

உலகக் கோப்பை இறுதி: பிரதிபா பாட்டீல், ராஜபட்ச மும்பை வருகின்றனர்


புதுதில்லி, மார்ச்.31:  இந்தியா-இலங்கை இடையே ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், இலங்கை அதிபர் ராஜபட்சவும் மும்பை வர உள்ளனர்.மொஹாலியில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ளது. இந்தப் போட்டியைக் காண பிரதிபா பாட்டீல் மும்பை செல்ல உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கொழும்புவில் இருந்து ராஜபட்சவும் இறுதிப் போட்டியைக் காண மும்பை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த உலகக் கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முத்தையா முரளிதரனுக்கு காணிக்கையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ராஜபட்ச விரும்புவதாக அவரது செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.இலங்கை- நியுஸிலாந்து இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியை இலங்கை அதிபர் ராஜபட்சவும், அவரது 3 மகன்களும் பார்த்தனர். தற்போது இறுதிப் போட்டியையும் ராஜபட்ச நேரில் காண உள்ளார்.
கருத்துகள்

Rajabakse is a war criminal. India keep on inviting him for several occasions There is a limit for INDIA's outrage. Tamils will fight against india if they invite him.
By புரவி
3/31/2011 3:44:00 PM
avana serupaala adinga
By unmai
3/31/2011 3:07:00 PM
Mr.Raja bhakse - Even though u r a co-host of World cup of 2011,you are not invited to view the Finals
By சுப்பு
3/31/2011 2:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Katchatheevu and thamizh fishermen: Nallakannu article: கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்!

நல்ல கட்டுரை. எனினும் இந்திய ஆரிய அரசு சிங்களத்திற்கு ஆதரவாக இருக்கும் வரை கட்சத்தீவை மீட்க முடியாது. இதனைத் தமிழ்நாட்டுச் சிக்கலாகக் கருதாமல் அனைத்து  மாநில - அனைத்துக் கட்சி - நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் உணர்த்தி ஒன்றுபட்டுப் போராடி வெற்றி காண வேண்டும்.அதற்கான முயற்சியை எளியோர் ஏந்தல் தோழர் தலைவர் நல்லக்கண்ணு மேற்கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்!


எண்ணூரிலிருந்து குளச்சல் துறைமுகம் வரை 1,076 கி.மீ. நீள கடற்கரை வளமுள்ளது தமிழ்நாடு. 13 மாவட்டங்கள், 591-க்கு மேலான கிராமங்களில் 15 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். நெய்தல் நிலத்தில் வாழும் இந்தத் தொன்மையான குடிமக்கள், நாட்டின் தென்கோடிக் கடற்கரையின் காவலர்களாகவும் பணியாற்றி வந்த பழங்குடியினர். வங்கக்கடலில் மீன் பிடித்தும், முத்துக் குளித்தும், மேற்கத்திய நாடுகளோடு வணிகத்தொடர்பும் வைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகளில், கடந்த பத்தாண்டுகளில்தான் கடலில் மீன் பிடிக்க முடியாமலும் கரையில் அமைதியாக வாழ முடியாமலும், இவர்கள் தங்களது வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் பயணித்துச் சேர்த்துவரும் கடல் பொருள்களின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆண்டுக்கு ரூ. 50,000 கோடியாகும்! ஆனால், இந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்கும் கட்டுப்பாடு! கரையோரங்களில் குடியிருப்பதற்கும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்களான மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு எல்லை விதிக்கப்படுகிறது. ஆழ்கடலில் பிடித்துவரும் மீனுக்கும் அளவு எல்லை போடப்படுகிறது. ஆனால், 15 பெரிய டிராலர்கள், மீன்பிடிக் கப்பல்களின் உரிமையாளர்களுக்கோ, ஆழ்கடலில் மீன் குஞ்சுகளைக்கூடப் பறித்து அள்ளிச் செல்லும் உரிமை வழங்கப்படுகிறது. வியாபாரிகளான கப்பல் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமை மீன்பிடித் தொழிலைத் தங்களது வாழ்வாதாரமாகக் காலங்காலமாகச் செய்துவரும் மீனவர்களுக்கு மறுக்கப்படுவது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி.உலகமயமாக்கல் கொள்கையால், மண்ணின் மைந்தர்களான மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. கப்பல் உரிமையாளர்களுக்குக் கடலே சொந்தமாக்கப்பட்டுள்ளது; கடற்கரையும் அழகுபடுத்தப்பட்டு சுற்றுலா மையங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், உயர்தரப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் வணிக வளாகங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. இத்தனை தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு, மீன்பிடித் தொழிலையே அன்றாட வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்கள் மீனவர்கள். வேறு வழி? அவர்களுக்கு வேறு தொழில் எதுவும் தெரியாதே.1974-1976-ம் ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், குறிப்பாக நாகப்பட்டினம், கோடியக்கரை, தொண்டி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரையில் 7 லட்சம் மீனவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றால், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். அடித்துக் கொல்லப்படுகிறார்கள். வலைகள் அறுத்தெறியப்படுகின்றன. படகுகளை வெட்டி அழிக்கிறார்கள். மீன்களை மீண்டும் கடலில் வீசிவிடுகிறார்கள். நிர்வாணப்படுத்தி தலைமன்னார் சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள்.2010 முடிய - தமிழக மீனவர்கள் 571 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்கள் 1,200 பேர், அழிக்கப்பட்ட விசைப்படகுகள் 300, சேதப்படுத்தப்பட்டவை 600. காணாமல் போனவர்களும் உண்டு; தலைமன்னார் சிறைகளில், கைதிகளாகச் சிலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பொருள் சேதமும், மீனவர்கள் அடைந்த பொருள் இழப்பும் ரூ. 25,000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் நொந்து வேதனைப்படும், தமிழக மீனவர்களைப் பற்றி மத்திய அரசும், அமைச்சர்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. தமிழக அரசும் தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம், தமிழக மீனவர்களின் மீது ஒப்புக்குக் கண்ணீர்விட்டு ஆதரவைத் தெரியப்படுத்துவதோடு சரி.டச்சுக்காரர்கள் இலங்கையை அடிமைப்படுத்திய காலத்தில் உருவாக்கிய இலங்கை வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. கி.பி.1600-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறியது வரை, ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்ததற்கான ஆவணங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டப்படி, கச்சத்தீவு தமிழக அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டது.தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, நட்பு முறையில் மத்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது.முதல் ஒப்பந்தம் 1974-ல் கையெழுத்தானது. இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் கையெழுத்திட்டார்கள். நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரண்சிங் பேசியது -""பாக் நீரிணையில் உள்ள கச்சத்தீவு முக்கால் சதுர மைல் அளவுள்ளதாம். இந்த ஒப்பந்தத்தை நாம் உறுதி செய்கிறபோது, மீன் பிடிக்கும் உரிமை, பண்டிகைக்கான சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்ற உரிமைகள் கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இருந்தது. வருங்காலத்துக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு அங்கத்தினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென நினைவுபடுத்துகிறேன். இவ்வொப்பந்த அடிப்படையில் இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்குப் போய் வருவதற்கு இதுவரை பெற்றிருந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். எனவே, போக்குவரத்து அனுமதி ஆவணங்களையோ அல்லது விசா போன்றவற்றையோ வேண்டுமென இலங்கை அரசு கோர முடியாது.ஸ்ரீலங்கா - இந்தியக் கப்பல்கள் இதுவரை பாரம்பரியமாக அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிப்பார்கள். இதுவரை என்னென்ன உரிமைகள் இருந்து வந்ததோ நம்முடைய படகுகள் அந்தப்பக்கம் செல்வதற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கம் வருவதற்கும் கச்சத்தீவு பயன்படுத்தப்படுவதற்குரிய அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பது இந்த ஒப்பந்தத்திலிருந்து ஏற்படுகிறது.''ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டுவதோடு விட்டுவிடாமல், உயிரையும் பறிக்கும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகிறது. தமிழக மீனவர்களுக்கு விரோதமான செயலில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கச்சத்தீவை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். அதற்கு 31.8.2010 அன்று பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு ஒப்பந்தம் புனிதமானது, பவித்திரமானது அதனை ரத்துசெய்ய முடியாது'' என்றெல்லாம் கூறியுள்ளார்.பாக். நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பேணிக்காக்க வேண்டிய கடமையில் இருந்து மத்திய அரசு விலகி நிற்கிறது. தமிழக அரசு இதற்கு உடந்தையாக வேடிக்கை பார்க்கிறது.இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு அறிவித்த பிறகும், தமிழக மீனவர்களை வேட்டையாடும் செயலை இலங்கைக் கடற்படை நிறுத்தியபாடில்லை. ஜெகதாப்பட்டினம் பாண்டியன், புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார் போன்றோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ் இலங்கை சென்று மீனவர் பிரச்னை குறித்துப் பேசிவிட்டுத் திரும்பியபோதும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேடிக்கை பார்த்துக்கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளன. சில நாள்களுக்கு முன்னர்கூட ராமேஸ்வரம் மீனவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. உடைமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் வந்தன.நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ""இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்ய வேண்டுமே தவிர, சுட்டுக்கொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது'' என்று கூறியுள்ளார்.இந்திய மீனவர்களைக் கைது செய்யலாம் என இலங்கை அரசுக்குப் பிரதமரே பச்சைக்கொடி காட்டுவது வேதனை அளிக்கிறது. மேலும், பிப்ரவரி 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், ""சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும் போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.அதேவேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன்பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள், இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இலங்கை மீனவர்களும், மீன்பிடித் தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பது நியாயம்'' எனக் கூறியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கூறுவதைக் கவனிக்கிறபோது, அவர்கள் இலங்கை ராஜபட்ச அரசுக்கு வக்காலத்து வாங்குவதாகத்தான் இருக்கிறதே தவிர, இந்திய மீனவர்கள் பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அப்படியானால், இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி, உரிமைகள் பற்றிக் கவலைப்பட யாருமே கிடையாதா? அவர்கள் நாடில்லா அனாதைகளா? அந்நிய தேசத்துப் பிரஜைகளா?1987-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் தமிழர்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு - கிழக்கு மாகாணத்தை ஒருங்கிணைக்க அடிகோலியது. இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் இல்லை என்பதைப் பறைசாற்றியது. அந்த ஒப்பந்தத்தை இனவாத ஜே.வி.பி. தொடுத்த வழக்கின் காரணமாக இலங்கை நீதிமன்றம் ரத்து செய்தது.இலங்கை அரசு, ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. ஆனால், நாம் மட்டும் எவ்வாறு கச்சத்தீவு ஒப்பந்தத்தைப் புனிதமாகக் கருத முடியும்? புனிதத்தின் பெயரில் இந்திய உயிர்கள் பலியிடப்படலாமா? இந்திய நாட்டில் தமிழக மீனவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நியாயமாகுமா?எனவே, கச்சத்தீவை மீட்கவும், அங்கு இந்திய மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும், நிரந்தரத்தீர்வு காண்பதற்கான எல்லா வழிகளும் காண ஒன்றுபட வேண்டும்.

எங்களுக்கு If any thing happen to us, Jayalalitha is responsible - KanimoZhi: ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதாவே பொறுப்பு: கனிமொழி பேச்சு

கனிமொழி சொல்வது எல்லாம் சரிதான். ஆனால், மக்கள் தி.மு.க.வைக்கைவிட வில்லை என்பதையும் தமிழர் படுகொலைகளுக்குத் துணை நின்றமையால் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள சற்று ஓய்வு கொடுக்க விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.சாதனை மன்னரான, சொல்வதைச் செய்பவரான, கடும் உழைப்பாளியான, காட்சிக்கு எளியரான கலைஞரை விட அடாவடிக் கட்சித்தலைமையை மக்கள் ஏற்க ஆயத்தமாகிறார்கள் என்றால் எந்த அளவிற்கு அவர்களிடம் ஈழத்தமிழர்களின் உயிர் பறிப்புகளும் உடைமை பறிப்புகளும் நிலப் பறிப்புகளும் தமிழக மீனவர்களின் துயரங்களும் வடுவை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதாவே பொறுப்பு: 
கனிமொழி பேச்சு

திருச்சி, மார்ச் 30: எங்களில் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு என்றார் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி.திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக வேட்பாளர் என். பரிமளா தேவியையும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் என். செல்வராஜையும் ஆதரித்து புதன்கிழமை அவர் பேசியது:திமுக அணியில் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பாடுபடும் கட்சிகள்தான் இணைந்துள்ளன. ஆனால், எதிரணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். கூட்டணி முடியும் முன்பே அதிமுக போட்டியிடும் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. ஜெயலலிதா யாரையும் மதிக்கக் கூடியவர் அல்லர். இத்தனை ஆண்டுகள் இருந்த மதிமுகவை தேர்தல் நேரத்தில் சுயநலத்துக்காகவும், சொந்தக் காரணங்களுக்காகவும் ஒரே நொடியில் திட்டமிட்டு தூக்கி எறிந்தவர் ஜெயலலிதா.இப்போது, வெளியே வந்துவிட்டு ஜெயலலிதாவுக்கு ஆணவம், அகங்காரம் குறையவில்லை என்கிறார் வைகோ. என்றைக்கும் ஜெயலலிதாவிடம் ஆணவம், அகங்காரம் குறையாது என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. உழவர் சந்தைகளை மூடியவர் ஜெயலலிதா. சத்துணவில் முட்டை போடும் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்புதான் இவை அனைத்தும் வழங்கப்பட்டன.இப்போது, பெண்களுக்கான திருமண உதவித் தொகை ரூ. 30,000 ஆக உயர்த்தி வழங்கத் தேர்தல் அறிக்கையிலேயே உறுதி அளித்துள்ளார் கருணாநிதி. மேலும், ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.ஆனால் ஜெயலலிதா மீண்டும் அவர்களை ஆடு மேய்க்கச் செல்ல, வீட்டுக்கு நான்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். வீட்டைத் தேடி வேளாண் இடு பொருள்கள் கொண்டு வந்து வழங்கப்படும் என்று கருணாநித் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார். சொன்னதைத் தாண்டியும் செய்வார். சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறோம். ஆனால் ஜெயலலிதா பொய் உரைகளையும், தவறான பிரசாரத்தையும் செய்கிறார். முதல்வர் கருணாநிதியை இழித்தும் பழித்தும் பேசி வருகிறார். ஏமாற்ற முற்படுகிறார். ஜெயலலிதா நாகையில் பேசிய போது, "உடல் நலக் குறைவு என்று சொல்லி கருணாநிதி மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்' என்று கூறியிருக்கிறார். உடல் நலக் குறைவு என்றால் மருத்துவ மனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. உடன்பிறப்புகளின் முகத்தை பார்த்தாலே, உடன்பிறப்புகளின் கைத்தட்டலைக் கேட்டாலே உடல் நலக் குறைவு சரியாகிவிடும். அடுத்ததாக கனிமொழியை தாக்கிவிட்டு, அனுதாபம் தேடிக் கொள்ள முயற்சிப்பார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். தந்தையே மகளைத் தாக்கும் மனது இருக்க முடியுமா?யாரையும் நம்பி நான் இங்கு வரவில்லை; பேசவில்லை. உடன்பிறப்புகளை நம்பித்தான் இங்கே வந்திருக்கிறேன். இந்த உடன்பிறப்புகளைத் தாண்டி தாக்கும் தைரியம் யாருக்கும் இல்லை. எங்களில் யாருக்கு எது நேர்ந்தாலும் அதற்குப் பொறுப்பு ஜெயலலிதாதான் என்றார் கனிமொழி.

Rules of E.C. should be amended - Prof.K.Anbazhagan: தேர்தல் ஆணைய விதிகளைத் திருத்த வேண்டும்: க. அன்பழகன்

பேராசிரியரின் கருத்து சரிதான். எனினும் இனப்படுகொலைக்கட்சியான காங.உடன் சேர்ந்திருப்பததுதானே  சிக்கல். மேலும். அனைவருக்கும் அனைத்து நிலையிலும் கட்டணமற்ற கல்வியைக் கொண்டுவர முயல வேண்டும். அத்ற்கான அறிவிப்பைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! 
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தேர்தல் ஆணைய விதிகளைத் திருத்த வேண்டும்: க. அன்பழகன்

புதுக்கோட்டை, மார்ச் 30: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடற்ற போக்கைத் தடுத்து நிறுத்தும் வகையில், அதன் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றார் மாநில நிதியமைச்சர் க. அன்பழகன்.புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெரியண்ணன்அரசை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை இரவு சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:வேறு பணிகளில் வேகம் காட்டும் தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கை நடத்துவதில் மட்டும் தாமதம் செய்கிறது. சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்துகிறார்கள். அதுகுறித்துக் கேட்டால், தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு உரிமையையும், அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் கொடுத்ததே நாம்தான்.தேர்தல் நடத்துகிறவர்களை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் தேர்தல் விதிமுறைகள். ஆனால், தற்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது, தேர்தல் ஆணைய விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது.ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் 10 சதம் பேர் மட்டுமே தங்களுக்கு சில உரிமைகள் கிடைக்கவில்லை என்று கூறி, ஆட்சி மாற்றம் வேண்டும் என்று பேசலாம். ஆனால், தற்போதைய ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.இலவசங்கள் இன்று அவசியமாகிவிட்டன. இலவசங்கள் என்பது கேடல்ல. பெற முடியாதவர்களுக்கு அதைக் கிடைக்கச் செய்கிறோம். பெற்றுக் கொள்ள உரிமையுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதுதான் இலவசம்.இலவச அரிசி வழங்குவதால் செலவாகும் கோடிக்கணக்கான ரூபாயை இழப்பாகக் கருதவில்லை. சமுதாயத்துக்கு செய்யும் செலவாகவே கருதுகிறோம். அதனால்தான் பட்டினிச் சாவு, ராப்பிச்சை என்ற வார்த்தைகள் ஒழிந்துபோயின. மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதுடன், அவர்களது பிரச்னைகளையும், துயரத்தையும் தீர்ப்பது திமுக அரசுதான்.இந்தியாவிலேயே குழந்தைகள் நல்ல கல்வி அறிவு பெற்றிருப்பதும், ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதும், அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவதும், ஆண்- பெண் விகிதாசாரத்தில் பெண்கள் அதிகம் படித்திருப்பதும், உயர்தரமான சிகிச்சைகள் கொடுப்பதும், மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள் இருப்பதும், குறிப்பாக, புத்திசாலிகள் அதிகமாக இருப்பதும் தமிழகத்தில்தான். தமிழக நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளைப் போல, மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மட்டுமே கூறி வருகின்றனர். அவர்களின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது என்றார் அன்பழகன்.

Work hard to elect kalaignar as C.M. - ramdoss: கருணாநிதியை முதல்வராக்கக் கடுமையாகத் தேர்தல் பணியாற்றுங்கள்:இராமதாசு

சாதனை மன்னரான கலைஞரை முதல்வராக்கக் கடுமையாய் உழைக்க வேண்டும் என்றால் என்ன பொருள்?  தமிழ் இனப்படுகொலைக் கட்சியான காங்.உடன் கூட்டணி வைத்துள்ளதை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை மன்பதையின் நாடி பார்த்து மருத்துவர் அறிவிக்கின்றார் என்றுதானே! காங்.கிற்கு  வாக்களிக்கவில்லை என  உறுதி கூறுங்கள், மக்கள் எளிதில் வெற்றி பெறச் செய்வார்கள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருணாநிதியை முதல்வராக்க 
கடுமையாகத் தேர்தல் பணியாற்றுங்கள்: ராமதாஸ்

உளுந்தூர்பேட்டை/திருக்கோவிலூர்/கள்ளக்குறிச்சி, மார்ச் 30: திமுக தலைவர் கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.வினரும் இணைந்து கடுமையாகத் தேர்தல் பணியாற்ற வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.உளுந்தூர்பேட்டை வட்டம் மடப்பட்டு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது யூசுபை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது: தலித் மக்களும், வன்னியர் மக்களும் மிகுதியாக உள்ள பகுதி இது. வேட்பாளர் முகமது யூசுப் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். இவரை வெற்றிப் பெற செய்யவேண்டும். இந்த மாவட்டத்தில் பாமக 3 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும் மற்றும் கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இவர்கள் வெற்றிப்பெற நானும், தம்பி திருமாவளவனும் நிற்பதாக நினைத்து இரு சமுதாய மக்களும் வாக்களிக்க வேண்டும். கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு தேர்தலில் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றார் ராமதாஸ்.இந்தக் பொதுக்கூட்டத்துக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். திருநாவலூர் ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ஆர்.வசந்தவேல் வரவேற்றார்.பாமக எம்.எல்.ஏ. கலிவரதன், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், மாவட்டத் தலைவர் தமிழ்வாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வெற்றிச்செல்வன், துணைச் செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு, இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் செ.க.சேரன், திமுக நகரச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேட்பாளர் முகமது யூசுபை அறிமுகப்படுத்தி மெழுகுவர்த்தி சின்னத்துக்கும் கூட்டணிக் கட்சிகள் சின்னத்துக்கும் வாக்களிக்க வேண்டும் என சிறுப்புரையில் பேசினார்.கூட்டத்தில் திமுக மாவட்டப் பிரதிநிதி களத்தூர் ஜெகதீசன், மாவட்டக் கவுன்சிலர்கள் மேட்டத்தூர் பழனி, தங்க.விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வேட்பாளர் முகமது யூசுப் ஏற்புரையாற்றினார். பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் வ.ச.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.திருக்கோவிலூரில்: ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார். திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியது: நானும் திருமாவளவனும் விழுப்புரம், மடப்பட்டில் நடந்த கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினோம். பின்னர் திருமாவளவன் தர்மபுரி மாவட்டத்துக்கு அவசரமாகச் சென்றுவிட்டதால் இக்கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. அதனால் உங்களோடு நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் எழுச்சியோடு இருக்கின்றீர்கள். திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் யாருமே இல்லை. குறிப்பாக 41 இடங்களில் போட்டியிடும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியாது. திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கருணாநிதி தலைமையில் நானும் திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். விழுப்புரம், திண்டிவனத்தில் பேசப் போகிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது. கருணாநிதி சொன்னதை அப்படியே ஜெயலலிதா சொல்கிறார். விஜயகாந்த் பற்றி நான் எதுவும் பேசியது கிடையாது. அந்தக் கட்சிப் பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் கும்மிடிப்பூண்டியில் பேசிய விஜயகாந்த் என்னை போராட்ட மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்னதைப்போல் நான் ஒரு போராட்ட மன்னன்தான். நான் செய்த போராட்டங்கள் ஏராளம். தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக போராட்டம் செய்தேன். இதையெல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் ஆகியோரது வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள். காரணம் இத்தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆனால் ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்றார் ராமதாஸ். இக்கூட்டத்துக்கு பின் பகண்டை கூட்ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு ஆதரவாக ராமதாஸ் பேசினார். கள்ளக்குறிச்சி: திமுக அரசு செய்த சாதனைகளால் ஏழை மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் உதயசூரியனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சங்கராபுரம் பூட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார். தா.உதயசூரியனை ஆதரித்து ராமதாஸ் பேசியது: எந்த வேட்பாளருக்கும் இல்லாத சிறப்பு அம்சம் வேட்பாளர் உதயசூரியன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஆகும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிடுவோம். 5 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது ஏழை மக்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது என்றார் ராமதாஸ்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ஆ.அங்கையற்கண்ணி, சங்கராபுரம் பேரூராட்சித் தலைவர் முனுசாமி, பாமக மாவட்டச் செயலாளர் கே.பி.பாண்டியன், சங்கராபுரம் பாமக நகரச் செயலாளர் பபுலு, ஒன்றியச் செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.பின்னர் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஏ.சி.பாவரசை ஆதரித்துப் பேசுவதற்காக வந்தார். நேரம் 10.20 மணி ஆகிவிட்டதால் தேர்தல் விதிமுறைப்படி பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வேட்பாளரின் கரங்களை உயர்த்தியும் மெழுகுவர்த்தி எரிந்த நிலையில் உள்ள சின்னத்தை தூக்கியபடி மக்களிடம் காண்பித்து ஜாடையில் மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

Thamizh ilaignar peravai supports a.d.m.k.alliance: தமிழ் இளைஞர் பேரவை அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

ஈ.மு. (ஈழத்தமிழர்கள் இனப் படுகொலைகளுக்குஆளாகும் முன்னர்) எனில் அ.தி.மு.க. எந்த வகையிலும் தி.மு.க.வை விட மேம்பட்டதாகக் கூற இயலாது. ஆனால் ஈ.பி.எனில், எப்பொழுதும் நம்பிக்கைக்குரியதாக இருந்த அ.தி.மு.க.வை விட ஆட்சிப்பொறுப்பில் இருந்தும் காங்.இனப்படுகொலைகளுக்கு அறிந்தோ அறியாமலோ உடந்தையாக இருந்த தி.மு.க., அக்கட்சியினராலேயே கண்டனத்திற்கு உரியதாக ஆகி விட்டது. அந்தச் சூழலில் கலைஞர் எதிர்க்கட்சியில் இருந்திருப்பின் இனப்படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். தமிழ் ஈழம் மலர்நதிருக்கும்.  ஆட்சிச்சுமை அவர் கைகளைக் கட்டி விடுகின்றது. எனவே, தமிழர் நலனுக்காக முன்புவரை தமிழர்களுக்கே குரல் கொடுத்து வந்த தி.மு.க. மீண்டும் தமிழர்களுக்குக் குரல் கொடுக்க அதனை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்துவதே நல்லது. யாராயினும் அறுதிப் பெரும்பான்மை இன்றியே ஆட்சி அமைக்கட்டும்! குறைந்தது தலைவர்கள் தோற்கடிக்கப்படுவது கட்சிகளின் கொத்தடிமைப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துத் தமிழ்நலப் பாதையில் தலைவர்களைத்  திருப்பி விடும்.  மருந்து கசப்பானாலும் உடல் நலம் கருதி உட்கொள்வது போல் மனம் இடம் தராவிட்டாலும் தமிழ் நலம் கருதித் தி.மு.க.-காங்.கூட்டணியைத் தோற்கடிப்போம்! வேறு வழியின்றி எழுதும் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தமிழ் இளைஞர் பேரவை அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

காஞ்சிபுரம், மார்ச் 30: நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.இது குறித்து இந்த அமைப்புகளின் மாவட்ட செயலர் சி.லெனின் பொற்செல்வன் வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் ஈழ விடுதலைக்கு போராட்டியவர்களை காங்கிரஸ் அரசு போர் வியூகம் வகுத்து கொன்று குவித்தது. 33 ஆண்டுகால தனி ஈழ விடுதலைப் போரை நீர்த்து போகச் செய்தது. திமுகவும்-காங்கிரஸýம் கூட்டு சேர்ந்து கொண்டு ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும், தமிழ் உணர்வாளர்களை அச்சுறுத்தியும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்தன. இந்தத் தேர்தலை தமிழர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கான நம்பத்தகுந்த தூய சிந்தனையுள்ள அரசில் கட்சியே இல்லாத சூழ்நிலையில், துரோகிகளை மன்னிக்க முடியது என்ற அடிப்படையில் மாற்று அணியான அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.புதன், 30 மார்ச், 2011

It is our duty to defeat cong. - Seeman : காங்கிசுக் கட்சியை வீழ்த்துவது தமிழனின் கடமை: சீமான்

தமிழ் மக்களும் தமிழ்நாட்டவரும் பேராயக்கட்சியாகிய காங்.ஐ அடியோடு வீழ்த்துவதையே கடமையாகக் கொள்ள வேண்டும். தொடரட்டும் சீமானின் பரப்புரைப் பணி. காங்.கட்சியினரும் தலைமைக்கு அறிவுறுத்த தம் கட்சியினருக்கு வாக்குஅளிக்கக்கூடாது. அதன் கூட்டணிக் கட்சியினரும்  தேர்தலுக்குப்பின் மாற்று அணியுடன் கூட்டு வைக்கத் திட்டமிட்டுள்ள அதனை - தோல்விக்குப் பின் எப்படியும் பழி போடப்போகும் அதனை - சிங்கள நாடாளுமன்றத்திலேயே இந்திய காங்.அரசின் போரைத்தான் தாங்கள் நடத்தியதாக உண்மை வெளிவந்த பின்னும் இனப்படுகொலை குறித்து வருந்தாத அதனை - இம்மண்ணின் மைந்தர்கள் உயிரிழப்புகளுக்கும் காரணமான அதனை - முற்றிலும் தோல்வியுறச் செய்வதையே கடமையாகக் கொள்ள வேண்டும். கடனுக்குப் பரப்புரை  செய்தாலும் வாக்கு அதற்கு அளிக்க வேண்டாம். காங்.ஆட்சிப்பீடத்தில் ஏற்றிய கரிசு - பாவம் -  தொலைவதற்காக அக்கட்சிக்கு எதிராக வாக்களிப்பீர்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது தமிழனின் கடமை: சீமான்

சென்னை, மார்ச் 30- காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.ராமேஸ்வரம், பரமக்குடி பகுதியில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் பேசியதாவது:மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படையை கண்டுகொள்ளாமல் தமிழின அழிப்பிற்கு துணை போய் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை நாம் வீழ்த்த வேண்டும். இனி ஒரு முறை இந்த மண்ணில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வருங்கால தமிழ்ச் சொந்தங்கள் அனைவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக ஆகிவிடும். காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது என்பது நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள் மட்டுமல்ல தமிழனாக பிறந்த ஒவ்வொரு தமிழனுக்குமான கடமை.இவ்வாறு சீமான் பேசினார்.இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தடா சந்திரசேகர், தமிழர் அரப்பா, தலைமை நிலைய பேச்சாளர் பேராவூரணி திலீபன்,  இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டோம்னிக் ரவி, மற்றும் திரைப்பட இயக்குநர்கள் செல்வமணி, செல்வபாரதி உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
கருத்துகள்

திரு. தஜுடீன் நீ தமிழனா. நிச்சயமாக இருக்க முடியாது. உண்மை தமிழன் இந்த நிலையில் இருப்பதுக்கு காரணமே உன்னை போன்ற கலப்பு தமிழன்தான்.
By kumar
3/30/2011 7:01:00 PM
சீமான் சார் ,தி.மு.க பற்றி வாயே தொறக்கமாற்றிக,எதிர்காலத்தில் என் அன்பு தம்பி சீமானே என ஒரு நாடகம் கண்டிப்பா அய்யா கருணாநிதி நடத்துவார் ,நீங்க ஈழ உறவுகளை உங்க கால்ல போட்டு மிதிச்சிட்டு போகதான் போறீக .என்ன பண்றது எல்லாம் எங்க தலைஎழுத்து ........
By kandhavel
3/30/2011 7:00:00 PM
thangarajan mind your words. Mayawathi and see others all are great who have this same attitude. He is beating his own party person and there is some reason. Are u happy with DMK family looting. ahmed
By ahmed
3/30/2011 6:52:00 PM
thangarajan mind your words. Mayawathi and see others all are great who have this same attitude. He is beating his own party person and there is some reason. Are u happy with DMK family looting. ahmed
By ahmed
3/30/2011 6:50:00 PM
தமிழனின் கடமைகளில் மிக முக்கியமானது “ஒற்றுமை”. “ஒற்றுமை நீங்கிடில் அனவர்க்கும் தாழ்வே” இதுதானே நமது நிலை இப்போது!!! வைகோ, தா.பாண்டியன், ராமதாஸ், நெடுமாறன் எல்லோரும் ஒற்றுமையாக நம்பிக்கையுடன் உறுதியுடன் கலைஞரை ஆதரித்திருந்தால் இந்த நிலை நிச்சயமாக தமிழனுக்கு வரவாய்ப்பிருந்திருக்காது. இன்றும்கூட ‘சோ’வின் பேச்சைக்கேட்டு அண்ணன் வைகோ அவர்கள் அமைதியாக இருக்கிறார். ஜெயாவிடன் மானமிழந்த பின்னரும் மவுனம் காப்பது நல்லதில்லையே? ஆகவே தம்பி சீமான் அவர்களே! முதலில் தமிழனுக்கு நம்பிக்கையான ஒற்றுமையை எடுத்துச் சொல்லுங்கள். நிச்சயம் காங்கிரஸை மக்கள் அழிப்பார்கள்.
By கோபால்
3/30/2011 6:41:00 PM
இவனுங்க என்ன தமிழனுக்கு அத்தாரிட்டியா, போங்கடா லூசு பசங்களா.
By Tajudeen
3/30/2011 5:20:00 PM
MR.SEEMAN YOU NEED NOT GO FOR CAMPAIGN AGAINST CONGRESS AS CONGRESS BY ITSELF WILL LOOSE THIS ELECTION. IF YOU ARE REALLY A DECENT GENTLMEN THEN GO AND CAMPAIGN AGAINST VIJAYAKANT PARTY WHOSE LEADER IS THE MOST INDECENT PERSON AND DRUNKARD AND HUMILATING HIS OWN PARTY MAN BY SLAPING HIM IN THE PUBLIC SO THAT IT COULD BE A LESSON TO OTHERS.
By M.thanagrajan
3/30/2011 4:47:00 PM
அன்பு சீமான் அவர்களே - காங்கிரசை வீழ்த்தவேண்டும எனில் தமிழ் துரோகி கருணா (மு.க )கட்சியை என்ன பண்ணவேண்டும் ? அழகரசன்
By alagarasn
3/30/2011 4:16:00 PM
ஹி இஸ் எ ஸ்டுபிட்
By தமிழன்
3/30/2011 3:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


Jaya flys -stalin criticise: எலிகாப்டரில் பறக்கிறார் செயலலிதா:தாலின் விமர்சனம்

எல்லாம் உண்மைதான். என்றாலும் கொலைகாரக் காங்.உடன் உறவு வைப்பதில் இருவரும் ஒன்றுதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஹெலிகாப்டரில் பறக்கிறார் ஜெயலலிதா: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, மார்ச் 29- தேர்தலின் போது கூட சாலை வழியாக பயணம் செய்து மக்களை நேரில் சந்திக்க விருப்பமில்லாமல், ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பறக்கிறார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. எந்த சூழ்நிலையிலும் மக்களுடன் நெருங்கியிருப்பவர்கள் நாங்கள். 2006ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றியிருக்கிறோம். 2006 தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு, பாமாயில் ஆகியவற்றை வழங்குவோம் என்று கூறவில்லை, ஆனால் தாய்மார்களின் துயர் துடைக்க இன்று துவரம் பருப்பு ரூபாய் 30க்கும், உளுத்தம் பருப்பு ரூபாய் 30க்கும், பாமாயில் ரூபாய் 25க்கும் வழங்கி வருபவர் முதல்வர் கருணாநிதி. இலவசமாக அரிசியை தருவேன் என்று கூறும் ஜெயலலிதா, தனது ஆட்சியில் ரூ.3.50க்கு விற்ற ரேஷன் அரிசியை, 6 ரூபாய்க்கு உயர்த்தியவர். 2006 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கருணாநிதி குறிப்பிட்டார். அதேப்போலவே ஆட்சிப் பொறுப்பேற்ற மேடையிலேயே விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை முழுமையாக தள்ளுபடி செய்தார். ஆனால் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தார். 18 ஆண்டுகள் முதல்வராக பொறுப்பு வகித்திருக்கின்ற கருணாநிதி ஒரு போதும் அரசு ஊழியர்களை அச்சுறுத்தியதில்லை, எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களை அரசு ஊழியர்கள் மீது ஏவி அவர்களை கைது செய்து துன்புறுத்தியதும் இல்லை. ஆனால் ஜெயலலிதா தனது ஆட்சியில் அரசு ஊழியர்களை கேவலப்படுத்தி, சிறையில் தள்ளி சித்ரவதை செய்தார்.2011ஆம் அண்டு தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் அளவை ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தியதோடு, ரூபாய் 2 லட்சம் மானியம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை, அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 4 மாதம், 58 வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு 3 சீருடைகள், முதியோர் உதவித் தொகையை ரூபாய் 750ஆக உயர்வு, திருமண நிதியுதவி ரூபாய் 30 ஆயிரமாக உயர்வு, ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசம், அனைத்து மாணவர்களுக்கும் இலவச லாப்டாப், தாய்மார்களுக்கு கிரைண்டர், மிக்சி, மாவட்டந்தோறும் செவிலியர் மற்றும் மருத்துவ கல்லூரிகள், விசைப்படகு மீனவர்களுக்கு 2000 லிட்டர் டீசல், நாட்டுப் படகு மீனவர்களுக்கு 500 லிட்டர் மண்ணெண்ணெய், அரசு அலுவலர்களின் குறை களைய நிரந்தர ஆணையம் என பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் கருதி செயல்படுத்த இருப்பதாக கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் ஜெயலலிதா தான் சுயமாக சிந்தித்து, தனது கட்சிக்கு தேர்தல் அறிக்கையை தயாரிக்காமல் அவசரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதையே ஜெராக்ஸ் காப்பி போல தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். தேர்தலின் போது கூட சாலை வழியாக பயணம் செய்து மக்களை நேரில் சந்திக்க விருப்பமில்லாமல், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பறக்கிறார். ஆனால் இந்த வயதிலும் முதல்வர் கருணாநிதி சாலை வழியாகவே மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி.க்கு நினைவு இல்லம், பாரதியாருக்கு நினைவு இல்லம், சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவனுக்கு மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கத்திற்கு மணிமண்டபம், இஸ்லாமிய பெரும் புலவர் உமறுப்புலவருக்கு மணிமண்டபம் அமைத்ததும் கருணாநிதி தான். இதுமட்டுமல்ல, தூத்துக்குடியில் அரசு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்தி தந்துள்ளார். தூத்துக்குடி நகரை மாநகராட்சியாக உயர்த்தியவரும், பக்கீல் ஓடையை சீரமைத்தவரும் முதல்வர் கருணாநிதி தான். இவ்வாறு ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

kamal 's new film- viswaruupam: கமலின் புதிய படம் 'வசுவரூபம்'

தமிழ்த்தலைப்பு கிடைக்கவில்லையா?  தமிழில் பெயர் சூட்ட மனம் இல்லையா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கமலின் புதிய படம் 'விஸ்வரூபம்'

சென்னை, மார்ச்.29:  நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'விஸ்வரூபம்' என்பதாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தலைப்புகளை பரிசீலித்த பின்னர் இந்த பெயரை தேர்வு செய்துள்ளனர்.படத் தயாரிப்புக்கு முந்தைய அனைத்து வேலைகளையும் ஏறக்குறைய முடித்துவிட்ட இயக்குநர் செல்வராகவன் படத்தின் தலைப்பை பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளார். கமலும் படத்தின் தலைப்புக்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.இதனிடையே, ஏப்ரல் 3-வது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு ரூ 2 கோடி ஊதியம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.