சனி, 2 அக்டோபர், 2021

இலக்குவனார் திருவள்ளுவன் பொழிவு : இளையார் ஆத்திசூடி : 03.10.21

 அகரமுதல


கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்

கருநாடகத்தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

இலெமூரியா அறக்கட்டளை, மும்பை

இணைந்து வழங்கும்

பாவேந்தர் இலக்கியத் தொடர்

புரட்டாசி 17, 2052 ஞாயிறு    3.10.2021 காலை 10.30

இலக்கியச் சொற்பொழிவு –  இணையவழிச் சொற்பொழிவு 66

அறிவியல் தமிழ் அறிஞர்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்

தலைப்பு: இளையார் ஆத்திசூடி

தலைமை: திரு அ.தனஞ்செயன் (எ) வெற்றிச் செல்வன்

தலைவர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

பெங்களூரு

நன்றியுரை: திருமதி கார்த்தியாயினி

செயலாளர்,

கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

பெங்களூரு

நெறியாள்கை: முத்துமணி நன்னன்

தொடர்பு – 84837 55974 ;  99809 73030  

அணுக்கி இணைப்பு

அடையாளஎண் 720 2231 7522    / கடவு எண் 111222

வலையொளி நேரலைக்கு : https://w.w.w.youtube.com/user/Paaventhar_Ilakkiya_Thodaவெள்ளி, 1 அக்டோபர், 2021

6 எழுத்தாளர்களுக்குப் புத்தகப்பதிப்பாளர்கள் சங்கத்தின் கலைஞர் பொற்கிழி விருது

 அகரமுதல
6 எழுத்தாளர்களுக்குப் புத்தகப்பதிப்பாளர்கள் சங்கத்தின்

கலைஞர் பொற்கிழி விருது

   எழுத்தாளர் இராசேந்திர சோழன்கவிஞர் அபிஎழுத்தாளர் எசு.இராமகிருட்டிணன்தமிழ்ப்புதுமை நாடக இயக்குநர் வெளி இரங்கராசன் ஆகியோருக்குக் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி உரூபாயை தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி), அமைப்பிற்கு வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும் ஓர் ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் ஓர் இலட்சம் உரூபாய் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்கள்.

2007-இல் 30ஆவது சென்னை புத்தகக் காட்சியைத் தொடக்கி வைக்கப்பட்ட பொழுது வழங்கப்பட்ட நிதியிலிருந்து அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 2007ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு 84 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மகுடைத் தொற்றின் காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும் 2021ஆம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த நாள், நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன் தலைர்  அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எசு. சண்முகம் அவர்கள் அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு விருது பெறும் எழுத்தாளர்கள்:

அபி – கவிதை

இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்

எசு.இராமகிருட்டிணன்  – உரைநடை

வெளி இரங்கராசன் – நாடகம்

மருதநாயகம் – ஆங்கிலம்

நதித்து சாகியா – பிற இந்திய மொழி(காசுமீரி)

வியாழன், 30 செப்டம்பர், 2021

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விவரம்

 அகரமுதல

 

கலைஞர் மு. கருணாநிதி

செம்மொழித் தமிழ் விருது விவரம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி உரூபாய் வழங்கித் தோற்றுவித்துள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பெறும்.

இவ்விருது இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகும்.

பத்து இலட்சம் உரூபாய் (உரூ.10,00,000) பரிசுத்தொகைக்கான காசோலை, மதிப்புச் சான்றிதழ், நினைவுப்பரிசாகக் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவச் சிலை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்.

ஒவ்வோராண்டும் இந்த விருது அறக்கட்டளையை நிறுவிய கலைஞரின் பிறந்த நாளான சூன் 3 அன்று வழங்கப்படும்.

செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்பெறும். இப்பங்களிப்பு பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும் அமைய வேண்டும். கீழ்க்காணும் துறைகளில் மேற்கொண்ட ஆய்வாக அது அமையலாம்:

தொல்லியல்

கல்வெட்டியல்

நாணயவியல்

பண்டை இலக்கணமும் மொழியியலும்

இலக்கியத் திறனாய்வு

படைப்பிலக்கியம்

மொழிபெயர்ப்பு

இசை, நடனம், நாடகம், ஒவியம், சிற்பம்

தனித்தன்மையும் மேன்மையும் உலகளாவிய ஏற்பும் பெற்ற ஒரு நூலிற்காக அல்லது ஒர் அறிஞரின் வாழ்நாள் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படும்.

விருது பெறும் அறிஞர் எந்நாட்டினைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; விருது பெறும் நூல் அறிவுலகைக் கவர்ந்த பெருமையுடையதாயின் எந்த மொழியிலும் இருக்கலாம்.

2009ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை விருது 2010 சூன் திங்கள் 23-27இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞர் பேராசிரியர் அசுகோ பர்ப்போலா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் கலைஞரின் பெயரிலான விருது என்பதால் இவ்விருது வழங்குவது புறக்கணிக்கப்பட்டது. அதுவும் ஒரு வழியில் நல்லதுதான். இப்போதைய ஆட்சியில் தக்கவர்கள் விருதுகள் பெறும் வாய்ப்புகள் வந்துள்ளன.

செம்மொழி நிறுவனத் தலைவரான மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் தெரிவுக்குழுவை அமர்த்தி குழுவின் பரிந்துரைக்கிணங்கப் பதின்மருக்கு விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது விவரம் அறிய சிலர் விரும்பியதால் இவ்விவரம் இங்கே அளிக்கப்படுகின்றது.

– இலக்குவனார் திருவள்ளுவன்

என் வாழ்வில் குறள் – அளவளாவல்

 அகரமுதல


புரட்டாசி 17, 2052 / ஞாயிறு /

 3.10.2021 மாலை 6.30

குவிகம் அளவளாவல்

என் வாழ்வில் குறள்

கூட்ட எண்  /   Zoom  Meeting ID: 619 157 9931 
கடவுச் சொல் /  passcode kuvikam123    

ஒருங்கிணைப்பு – துரை. தனபாலன்புதன், 29 செப்டம்பர், 2021

ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை! – பெ. மணியரசன்ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை!

தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக 27.09.2021 அன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எசு.கே. அலுதார் தலைமையில் 27.09.2021 அன்று புதுதில்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டு முடிந்துவிட்டது.

ஆனால், நாளேடுகள் பலவற்றில் கருநாடகம் தமிழ்நாட்டிற்கு 33.7 ஆ.மி.க. (TMC) தண்ணீர் திறந்துவிடக் காவிரி ஆணையம் “உத்தரவு” என்று செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்குசேனா தலைமையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கடந்த 2021 சூன் மாதத்திலிருந்து செட்டம்பர் 26 வரை கருநாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. (TMC) பாக்கி உள்ளது. அதை உடனே திறந்துவிடச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் காவிரி ஆணையக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய எசு.கே. அலுதார் அவ்வாறு ஆணையிடவில்லை. அவர் என்ன கூறினார் என்பது ஆங்கில இந்து நாளேட்டில் (28.09.2021) வந்துள்ளது.

அந்த ஏட்டின் மூத்த செய்தியாளர் டி. இராமகிருட்டிணன் தொலைப்பேசியில் எசு.கே. அலுதாரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன விடை அப்படியே இதோ :

“குறிப்பாக எவ்வளவு தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடச் சொன்னீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டும் அவர் (எசு.கே. அலுதார்) அது பற்றிச் சொல்ல மறுத்துவிட்டார்.

ஆனால், அவர் ஒரு தகவலைச் சுட்டிக் காட்டினார். கடந்த 30 ஆண்டுச் சராசரியை ஒப்பிட்டால், மேட்டூரில் இந்த நாளில் இருக்க வேண்டிய நீர் இருப்பு இல்லை. இக்காலத்தில் சராசரியாக 40 முதல் 45 ஆ.மி.க. (TMC) வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இருக்கும். இதனோடு ஒப்பிடும்போது கொஞ்சம் பற்றாக்குறை (deficiency) இருக்கிறது. அதையாவது கருநாடகம் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்” என்று ஆங்கில இந்து ஏடு கூறுகிறது.

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தண்ணீரின் அளவில், உச்ச நீதிமன்றம் ஓரளவு குறைத்து 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி சூன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரைக் கருநாடகம் திறந்து விட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. பற்றாக்குறை உள்ளது. ஆனால் காவிரி ஆணையத் தலைவர் கட்டப்பஞ்சாயத்தாகக் கூறியது அதற்கும் குறைவான குத்துமதிப்பான அளவுத் தண்ணீர். ஆணையத்தின் இந்தக் குத்துமதிப்பான “பரிந்துரையையும்” கருநாடக அரசு செயல்படுத்தப் போவதில்லை.

ஏற்கெனவே ஒரு தடவைகூட காவிரி ஆணையத்தின் “பரிந்துரையை”க் கருநாடகம் செயல்படுத்தியதில்லை. அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை.

தமிழ்நாட்டை ஏமாற்றும் இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை; உருப்படியான சனநாயக நடவடிக்கையும் எடுத்ததில்லை!

காவிரியை நம்பி வாழும் பல கோடித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் பொறியமைவாகவே, தன்னாட்சி அதிகாரமோ, தனியான முழுநேரத் தலைவரோ, தனி அலுவலகமோ இல்லாமல் நரேந்திர மோடி அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இப்போது ஆணையத்தின் முழுநேரத் தலைவராக அதே எசு.கே. அலுதாரை இந்திய அரசு அமர்த்தி இருக்கிறது. அதே அல்தார் வரும் நவம்பர் 30-இல் பணி நிறைவு பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு ஓய்வுக்காலப் பரிசாக இப்பதவி வழங்கப்பட்டுள்ளத. இஃது என்ன உள்சூழ்ச்சியோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.

இந்த மோசடி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள முழுநேர ஆணையத்தை அமைத்திட இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு உடனே கோரிக்கை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்துத் தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து மக்களும் காவிரி மீட்பு எழுச்சி நாள் ஒன்றை உடனடியாகக் கடைபிடித்து, அந்நாளில் குமரிமுனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
==========================

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் பத்தாண்டிற்கு அறிவிப்பு

 அகரமுதல


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர். மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள்  2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தன. தற்போது முதல்வரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8- ஆவது ஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது.

தமிழக முதல்வரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:

1. 2010 – முனைவர் வீ.எசு. இராசம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania) .

2. 2011 – பேராசிரியர் பொன். கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

3. 2012 – பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி ( முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

4. 2013 – பேராசிரியர் ப. மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்)

5. 2014 – பேராசிரியர் கு. மோகனராசு (முன்னாள் பேராசிரியர்& தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)

6. 2015- பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி)

7. 2016 – பேராசிரியர் கா. இராசன் ( முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்),

8. 2017 – பேராசிரியர் உலுரிக்கு நிக்குலாசு, ,(Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University, Germany).

9. 2018 – கவிஞர் ஈரோடு தமிழன்பன் ( முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை).

10. 2019 – பேராசிரியர் கு.சிவமணி ( முன்னாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை).

2010 முதல் 2019 வரையிலான கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் 30.08.2021 அன்று நடைபெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 8- ஆவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்குரிய கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு விளம்பரம் வெளியிடவும் ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர்.மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, தமிழறிஞர்கள், தமிழ்நாட்டுப் பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் வழங்கப்படவுள்ளது. 

கலைஞர் செம்மொழி விருதுகள்  பெறும் பேராசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கடந்த ஆட்சியில் இருந்தே கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்கத் தமிழ்க்காப்புக்கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  இவ்விருதுகளை வழங்குவதே கலைஞருக்குச் செலுத்தும் உ்ணமைான அஞ்சலி என என்செவ்வியும் நக்கீரன் இதழில் வெளிவந்தது. புதிய அரசு அமைந்ததும் கலைஞர் செம்மொழி விருதுகளை விரைவில் வழங்குமாறு மாண்புமிகு முதல்வருக்கு வேண்டுகோள்களும் விடப்பட்டன.  அந்த வகையில் விரைந்து நடவடிக்கை எடுத்து விருது வழங்க ஆவன செய்த தமிழக முதல்வரும் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் தலைவருமான மு.க.தாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்.

நடுநிலையுடன் நல்லறிஞர்களைத் தெரிவு செய்த விருதுக்குழுவினருக்கும் பாராட்டுகள்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள அறிமுகக் கூட்டம்

 அகரமுதல
மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள அறிமுகக் கூட்டம்

 

மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள முன்னெடுப்பான ‘Common Voice ‘ (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘Common Voice’ தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதன் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது.

நாள்: புரட்டாசி 10, 2052 /  26.09.2021 ஞாயிறு – காலை 10 மணி இந்திய நேரம்

ஒருங்கிணைப்பாளர்கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

நிகழ்வில் பங்கெடுக்க: meet.jit.si/mozilla