வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

சிங்கள – பவுத்த இனவெறியன் இராசபக்சே ஆட்சியில் மட்டுமல்ல தமிழினத் தலைவர் கருணாநிதியின் ஆட்சியிலும் ஈழத்தமிழர்கள் வதை படுகிறார்கள்!

பதிந்தவர்_வன்னியன் on February 4, 2010
பிரிவு: Flash News, செய்திகள்

செங்கல் பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்படடிருந்த 33 தடுப்புக் கைதிகள் மீது இன்று (புதன்கிழமை) காலை தமிழக காவல்படை மேற்கொண்ட கண்மூடித்தனமான தாககுதலில் 18 க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்துள்ளார்கள். ஒருவர் கை முறிந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருக்கும் தடுப்புக் கைதிகள் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் தங்களை விடுவிக்கக் கேட்டு உண்ணா நோன்பு மேற்கொண்டனர். பின்னர் தமிழக அரசு செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததது. அதனைத் தொடர்ந்து உண்ணாநோன்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தபடாத காரணத்தினால் நேற்றுப் பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநோன்புப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

கடவுச்சீட்டு வழக்கு மற்றும் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட இவர்கள் நீதி விசாரணை எதுவுமின்றி நீண்ட காலமாக இந்த முகாமில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு தனது காவல்நாய்களை ஏவிவிட்டு அந்தச் சிறப்பு முகாமில் இருந்தத் தடுப்புக் கைதிகளை இரவு 10 மணியளவில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்..

தமிழீழத்தில் ஒரு சிங்கள – பவுத்த இனவெறி அரசு தமிழ் மக்களை முகாம்களிலும் சிறைகளிலும் அடைத்து சித்திரவதை செய்கிறது என்றால் அதையும் தமிழினத் தலைவர் கருணாநிதியின் ஆட்சியிலும் ஈழத்தமிழர்கள் கண்மூடித்தனமாக அவரது காவல் நாய்களால் தாக்கப்படுகிறார்கள். இல்லை கடித்துக் குதறப்படுகிறார்கள்.

சிங்கள – பவுத்த வெறியன் மகிந்த இராபச்சே தமிழர்களைச் சிறைகளில் அடைத்து வைதது சித்திரவதை செய்கிறான் என்றால் அவனை மிஞ்சும் வண்ணம் செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியின் ஆட்சியில் இந்த காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கருணாநிதி தமிழினத் துரோகி என்ற பட்டத்தை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.

“ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள். எமது தொப்புள்க் கொடி உறவினர்” என கருணாநிதி மாய்மாலம் பேசுவதில் மட்டும் எந்தக் குறையுமில்லை. மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று “ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்” என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான்.

முள்ளிவாய்க்காலில் 25,000 பொதுமக்கள் செல்லடியிலும் குண்டுமழையிலும் பொட்டுப் பூச்சிகள் போல் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது. அது மட்டுமல்ல அங்கு அரங்கேற்றப்பட்ட மனிதப்படுகொலைக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் பங்காளியாக இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியும் காரணம் ஆவார். அவர் கையிலும் ஈழத்தமிழர்களின் பச்சை இரத்தம் பூசப்பட்டுள்ளது. அவரும் ஒரு போர்க்குற்றவாளிதான்.

“இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கின்றது! முகாம்களில் முள்வேலிக்குள்ளிருந்தோர் நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார். விம்மி அழுத அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே?”என்று கருணாநிதி ஆலோலம் பாடுகிறார். அவருக்கு எந்தநாளும் இன்ப நாள் என்பது உண்மைதான்.

இந்த அழகில் கருணாநிதிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த எந்த அருகதையும் இல்லை. அதில் கலந்து கொள்ள இருக்கும் சிவத்தம்பி போன்றோர் தமிழினத் துரோகிகளே ஆவர்.

(Visited 32 times, 26 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக