திங்கள், 1 பிப்ரவரி, 2010

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
பிப்ரவரி 01,2010,00:00 IST

Important incidents and happenings in and around the world

புதுச்சேரி:அரியாங்குப்பத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது, மண்ணாலான பழங்கால முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அங்கு தங்கப் புதையல் கிடைத்திருப்பதாக தகவல் பரவியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சீனுவாசன். வங்கி ஊழியரான இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் அரியாங்குப்பம் மணவெளி சுடலை வீதி 5வது குறுக்குத் தெருவில் ஒரு மனை வாங்கியிருந்தார். இந்த மனையில் வீடு கட்டுவதற்காக நேற்று அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி, தண்ணீர் குவளை, டம்ளர் உள்ளிட்ட மண்ணால் ஆன 9 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதற்கிடையே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது தங்கப் புதையல் கிடைத்ததாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால், பொது மக்கள் அங்கு குவியத் தொடங்கினர்.தகவல் அறிந்து புதுச்சேரி தாலுகா தாசில்தார் தில்லைவேல், ரூரல் எஸ்.பி., தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர்கள் அங்கப்பன், சுப்ரணியன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.இது குறித்து, தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும், அஸ்திவாரம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிக்கமேடு, மணவெளி கிராமத்தின் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரியாங்குப்பத்தில் பழங்கால பொருள்கள் கண்டெடுப்பு



புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி அருகே காலி மனையில் ஞாயிற்றுக்கிழமை புதிய வீடுகட்ட பள்ளம் தோண்டும் போது கிடைத்த பழங்கால பொருள்கள்.
புதுச்சேரி, ஜன.31: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது பழங்கால பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வங்கிப் பணியாளர். இவருக்கு அரியாங்குப்பம் மணவெளியில் வீóட்டுமனை உள்ளது. இதில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது மண்ணால் ஆன பழங்கால பொருள்களான முதுமக்கள் தாழி மற்றும் பல பொருள்கள் கிடைத்தன.தகவல் அறிந்து எஸ்பி தெய்வசிகாமணி (கிராமியம்), அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் அங்கப்பன், தாசில்தார் தில்லை உள்ளிட்டோர் அங்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக