சனி, 24 அக்டோபர், 2020

உ.த.ச.வின்இணையத் தமிழ்க்கூடல் 23

 அகரமுதல

ஐப்பசி 12, 2051 / 28.10.2020

புதன் மாலை 4.00

உலகத் தமிழ்ச் சங்கம்

இணையத் தமிழ்க் கூடல் 23 

ஆத்திரேலியாவின் ஆதி குடிமக்களும் நம்பிக்கைகளும்

கூடலுரை – நாகை கா.சுகுமாரன்

பதிவுப்படிவம்
https://tinyurl.com/y46pop5f

இணைப்பு
https://tinyurl.com/yxm3hu8w

 

வெள்ளி, 23 அக்டோபர், 2020

கவிதைக் குரல்கள் – நூல் வெளியீடு

 அகரமுதல

ஐப்பசி 10, 2051 திங்கள்  26.10.2020

மாலை 5.00

அரிமா புதுக்கண் அரங்கம்

25அ, மேடவாக்கம் நெடுஞ்சாலை

சென்னை 600 091

கவிதைக் குரல்கள் -கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு

தலைமை

பேரா.முகிலை இராசபாண்டியன்

ஞாலம் இலக்கிய இதழ்

800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!

 அகரமுதல

800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இராசகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த விசாலி, கோகிலா, மனோசு ஆகியோர், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நிலக்கிழார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ஈசுவரி கோயில் விதானத்தில் 6 அடி நீளமுள்ள இரு கல்லில் கல்வெட்டுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். புதுக்கோயில் கட்ட அம்மண்டபத்தைப் பிரித்தபோது 3 அடி உயரமுள்ள மேலும் ஒரு கல்லில் கல்வெட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது இது கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது.

இந்தக் கல்வெட்டுகள் குறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இராசகுரு, “இது மூன்று கற்களில் இருந்தும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய 55 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும். நிச்சி நாயகனான மேல்கீரை நாடாள்வான், மாணிக்கன் உய்யவந்தானான குளதையாதயன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை சாயல்குடி சொக்கனார் கோயிலுக்கு விற்று, அதைச் சிவன் கோயில்களின் பொறுப்பாளராகக் கருதப்படும் சண்டேசுவரத்தேவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்து அதற்கு ஈடாகப் பணம் பெற்றுள்ளதையும், இதற்குச் சான்றாகப் பலர் கையொப்பம் இட்டுள்ளதையும் இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. தற்போது நிலம் விற்பனை செய்யும்போது வாங்குபவர், விற்பவர், சான்றுரைஞர்கள் ஆகியோர் பத்திரத்தில் கையொப்பம் இடுவது போல அக்காலத்தில் ஓலைச் சுவடியில் அவர்களின் கையொப்பம் பெற்று அதைக் கல்வெட்டில் வெட்டி வைப்பார்கள். கையொப்பம் இடத் தெரியாதவர்களைத் தற்குறி எனவும், அவர்களுக்கு மற்றவர்கள் சான்று இடுதலைத் தற்குறி மாட்டெறிதல் எனவும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 

800 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு.பாண்டி இதில் தற்குறியான மூவருக்குப்  பிள்ளையார் அழகிய விடங்கர் கோயிலில் இருக்கும் முத்தன் சிவலங்கனான இமையே தருவான், சாத்தனிரட்டையான் அஞ்சாத காடத்தட்டான், தச்சன் சீராமன் மூவானான இளமை ஆசாரியன் ஆகியோர் சான்று இட்டுள்ளனர். மேலும் கூத்தன் சோழனான செம்பிலராயன், கொற்றன் முத்தனான செம்பில் வளநாடன், சொல் நாணலையான் வழுதி சிங்கராயன், சிறுமுத்தனாளுடையானான வீரபாண்டியராயன், மங்கல வனப்பனாலன் கங்காராயன், சிறந்தான் தொண்டையன், பேரருங்கோவேளான் உடையான் பாலன், வதுலங்கன் கெங்கையான் விரதமிட்ட ராயன் ஆகியோரும் இதில் கையொப்பம் இட்டுள்ளனர். இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள அனைவரின் பெயர்களும் அழகிய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இதன் மூலம் 800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிந்து கொள்ளமுடிகிறது.

கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்துவிட்டதால் கோயிலுக்கு விற்கப்பட்ட நிலம் பற்றி முழுமையாக அறிய இயலவில்லை. அதன் எல்லைகளாக இரு பெருவழிகள், போளம், சிறுகுளம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லப்படும் பெருவழிகள் (நெடுஞ்சாலைகள்) பெரியபட்டணம், கன்னியாகுமரி செல்லும் பெருவழிகளாக இருக்கலாம். போளம் என்பது பிசின் போன்ற நறுமணப் பண்டங்கள் ஆகும். வணிகர்களின் விற்பனைப் பண்டமான போளம் வைக்கப்பட்டிருந்த இடமும் கல்வெட்டில் ஓர் எல்லையாககங கூறப்பட்டுள்ளது. சாயல்குடி இரு வணிகப் பெருவழிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்த ஒரு முதன்மை வணிக நகரமாகப் பழங்காலம் முதல் இருந்திருப்பதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

கல்வெட்டுள்ள இடம் தற்போது அங்காள ஈசுவரி கோயில் என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் பிடாரி கோயில் எனப்படுகிறது. நிலம் விற்கப்பட்டது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு என்றாலும், அதன் கல்வெட்டைப் பிடாரி கோயிலின் கிழக்குப் பகுதியில் வைத்துள்ளதாகக் கல்வெட்டில் சொல்லப்படுகிறது. சாயல்குடி சிவன் கோயிலில் உள்ள கி.பி.10-ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் இவ்வூர் உலகு சிந்தாமணி வளநாட்டு சாகியில்குடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

  • இரா.மோகன்
தரவு: சேசாத்திரி சிரீதரன்

 

வியாழன், 22 அக்டோபர், 2020

குவிகம்அளவளாவல், 25.10.2020

 அகரமுதல


ஐப்பசி 09, 2051 ஞாயிறு 25.10.2020
மாலை 
6.30

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 
அணுக்கிக் கூட்ட எண் Zoom Meeting ID:
 856 3556 4765          கடவுக்குறி Passcode: 172419     
பயன்படுத்தலாம் அல்லது   

https://us02web.zoom.us/j/85635564765?pwd=OXVaNFpqMG5RdWtpTzFFSlJQZ0pJdz09

இணைப்பைப் பயன்படுத்தலாம் 

திங்கள், 19 அக்டோபர், 2020

‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்

 அகரமுதல


ஐப்பசி 09, 2051 / ஞாயிறு / 25.10.2020 நேரம்: 

இந்திய நேரம் –   மாலை 7.00

இலங்கை நேரம் – மாலை 7.00

கனடா நேரம் –    காலை 9.30

 ‘இலக்கியவெளி சஞ்சிகை’

‘தமிழ்ஆதர்சு.கொம்’

  இணைந்து நடத்தும்  

இணைய வழி க் கலந்துரையாடல் – அரங்கு 3

 ‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’

வழி:     

அணுக்கிச்(ZOOM) செயலி, முகநூல்(Facebook), உம்குழல்(Youtube)  வழியாக

 இணையக் கூட்டத்தில் இணைவீர் Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89295172679?pwd=aktCREp2cnpiQ2cvaDhwQ0x6WHRsQT09

கூட்ட எண்  / Meeting ID: 892 9517 2679

கடவுக்குறி / Passcode: 123456

உம்குழல்  / Youtube: Ahil Sambasivam                      

முகநூல் நேரலை  / Facebook live : Ahileswarn Sambasivam

மேலதிக விவரங்களுக்கு: அகில் 001 416 8226316

 

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்

 அகரமுதல

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், காரைக்குடி

‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’  – சிறப்பு உரையரங்கம்

ஐப்பசி 03, 2051  திங்கள்  19.10.2020
இந்திய நேரம்: மாலை 4.00 மணி
மலேசிய நேரம்: மாலை 6.30

பதிவுப்படிவம்:  https://tinyurl.com/y56j8ux4

இணைப்பு : https://tinyurl.com/yxm3hu8w

கூட்ட அடையாள எண்:  2037171676

நுழைவுச்சொல்: wts

அணுக்கிக் கூட்டத்தில் இணைக! சிறப்பு தருக!