சனி, 8 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 64

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 63 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்  64

பொநபி (EWS) வழக்கில் 

 எழுதிய தீர்ப்புரையின் முதல் பத்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் பகிர்ந்திருந்தேன். தமிழாக்கம் தொடர்பாகக் கேட்கப்பட்ட விளக்கங்களும் தந்துள்ளேன். அதே தீர்ப்புரையின் இன்னொரு பகுதியில்… இட ஒதுக்கீடு தொடர்பான பழைய வழக்கு ஒன்றில் பெரும்பான்மையுடன் மாறுபட்டு நீதியர் சுப்பா ராவு அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியைப் பட்டு எடுத்துக் காட்டுகிறார். அதையும் ஈண்டு தமிழாக்கத்துடன் பகிர்கிறேன்:

“ Article 14 lays down the general rule of equality. Article 16 is an instance of the application of the general rule with special reference to opportunity of appointments under the State. It says that there shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State. If it stood alone, all the backward communities would go to the wall in a society of uneven basic social structure; the said rule of equality would remain only an utopian conception unless a practical content was given to it. Its strict enforcement brings about the very situation it seeks to avoid. To make my point clear, take the illustration of a horse race. Two horses are set down to run a race one is a first class race horse and the other an ordinary one. Both are made to run from the same starting point. Though theoretically they are given equal opportunity to run the race in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse. Indeed that is denied to it. So a handicap may be given either in the nature of extra weight or a start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one. The same difficulty had confronted the makers of the Constitution at the time it was made. Centuries of calculated oppression and habitual submission reduced a considerable section of our community to a life of serfdom. It would be well nigh impossible to raise their standards if the doctrine of equal opportunity was strictly enforced in their case. They would not have any chance if they were made to enter the open field of competition without adventitious aids till such time when they could stand on their own legs. That is why the makers of the Constitution introduced clause (4) in Art. 16.

தமிழில்:

“உறுப்பு 14 சமத்துவத்துக்கான பொது விதி ஆகும். உறுப்பு 16 என்பது அரசின் கீழமைந்த நியமனங்களிலான வாய்ப்பில் தனிக் கவனம் கொண்டு இந்தப் பொது விதியைச் செயலாக்கும் இடம் ஆகும். அரசின் கீழமைந்த வேலைவாய்ப்பு அல்லது பணியமர்த்தம் (நியமனம்) தொடர்பான பொருட்பாடுகளில் அனைத்துக் குடிமக்களுக்கும் வாய்ப்புச் சமத்துவம் இருக்கும் என்று அது கூறுகிறது. இந்த விதி மட்டும் தனியாக நின்றால் சமச்சீரற்ற அடிப்படைச் சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் பிற்பட்ட சமுதாயங்கள் எல்லாம் நொடித்துப் போகும். சமத்துவ விதி என்பதற்கு நடைமுறைசார்ந்த உள்ளடக்கம் தரப்படா விட்டால் அது கனவுக் கண்ணோட்டமாகவே இருந்து வரும். அதனைக் கண்டிப்பாகச் செயலாக்குவது அது எந்நிலைமையைத் தவிர்க்க முனைகிறதோ அந்நிலைமையையே தோற்றுவிப்பதாகி விடும்.


“ஒரு பந்தயத்தில் இரண்டு குதிரைகள் ஓடுவதாகக் கொள்வோம். ஒன்று தரமான பந்தயக் குதிரை. மற்றொன்று சாதாரணக் குதிரை. இரண்டும் ஒரே தொடக்கக் கோட்டிலிருந்துதான் புறப்பட வேண்டும். கோட்பாட்டளவில் இரண்டுக்கும் பந்தயத்தில் ஓட சமமான வாய்ப்பு வழங்கப்பட்டாலும் நடைமுறையில் பந்தயக் குதிரையோடு போட்டியிட சாதாரனக் குதிரைக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. உண்மையில் அதற்கு சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆகவே கூடுதல் எடை சுமத்தல் அல்லது கூடுதல் தொலைவிலிருந்து புறப்படுதல் என்ற தன்மையில் ஒரு தடை ஏற்படுத்தலாம். கேலிக் கூத்தாகியிருக்கக் கூடிய போட்டி இதனால் உண்மைப் போட்டியாக்கப்படும். அரசமைப்பை வகுத்த நேரத்தில் வகுத்தவர்கள் இதே இடர்ப்பாட்டைச் சந்தித்தனர். நூற்றாண்டுக் கணக்கிலான திட்டமிட்ட ஒடுக்குமுறையும் வழக்கமான அடங்கிப் போதலும் நம் சமுதாயத்தில் கணிசப் பிரிவினரைப் பண்ணையடிமைகளாக வாழும் நிலைக்குத் தாழ்த்தி விட்டது. சமவாய்ப்புக் கொள்கையை அவர்கள் தொடர்பில் கண்டிப்பாகச் செயலாக்குவோமானல் அவர்தம் வாழ்க்கைத் தரங்களை  உயர்த்த முடியவே முடியாது என்ற நிலை ஏற்படும். அவர்கள் சொந்தக் காலில் நிற்கக் கூடிய நேரம் வரும் வரை ஊன்றுகோல் உதவிகள் இல்லாமல் திறந்த போட்டிக் களத்தில் இறக்கி விடப்பட்டால் வெற்றி பெற வாய்ப்பே இருக்காது.  அரசமைப்பை இயற்றியவர்கள் இதற்காகவேதான் உறுப்பு 16இல் (4) எனும் கூற்றினைச் சேர்த்தார்கள். இது விதிக்கு விலக்கன்று, இந்த உறுப்பின் மற்ற வழிவகைகளால் கட்டுப்படுத்தப்படாத ஓர் அதிகாரத்தைக் காப்பதே ஆகும்.”

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 38 

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 40,41 & 42 : இணைய அரங்கம்: 09.04.2023

 



கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 40,41 & 42 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 26, 2054 ஞாயிறு 09.04.2023

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தமிழும் நானும் – உரையாளர்கள்:

முனைவர் வேணுகோபால் தங்கராசு

முதன்மைச் சிறப்பாய்வாளர்தமிழ்மொழித்துறை

பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு

சிங்கப்பூர்

முனைவர் கவிஞர் தமிழியலன்

தமிழ்த்துறைஅண்ணா பல்கலைக்கழகம்

நிறுவனர்நான் ஓர் ...கழகம்

சென்னை

தமிழ்ப் பரப்பாளர் முத்துமணி நன்னன்

பொருளாளர்

தமிழ் வகுப்புகள் நடத்தி வரும் தமிழ் அறக்கட்டளை

 பெங்களூரு.

தொகுப்புரை : தோழர் தியாகு

நன்றியுரை:  தமிழாசிரியர் (உ)ரூபி



தோழர் தியாகு எழுதுகிறார் 63

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 62 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்:

1.   இந்திய மாறுதலுக்கான தேசிய நிறுவனத்தின் (NITI) பரிந்துரை

வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் அல்லாத பிற துறைகளின் தொழிலாளர்கள் போன்ற பிற நலிந்த பிரிவினரையும் உள்ளடக்கித் தலைமை யமைச்சர்,உழவர் திட்டத்தை அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டமாக மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும், பின்னர் பிற மானியங்களையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம் என்றும்  இ.மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து பரிந்துரைத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதும் போதாக் குறையானது. ஆண்டிற்கு 6,000 உரூபாய் / மாதத்திற்கு 500 உரூபாயை அடிப்படை வருமானம் என்று குறிப்பிடுவது தகுமா? அதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம் என்று கருதினால் அஃது ஓர் இழிய நகைச்சுவையாகவே, கேலிக் கூத்தாகவே இருக்கும்.  இத்தகைய அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கான (UBI) திட்டத்துடன் பிற நல்கைகளையும் இணைத்துக் கொள்ளலாம் எனும் போதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. உணவு மானியத்திற்கும், பொது வழங்கல் முறையில் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்திற்கும் மூடுவிழா நடத்தவுள்ளார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. அவ்வாறு இருப்பின் அதனால் வறுமை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

2022 திசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட த.அ.ஏ.உ.பா.தி.( PMGKAY) (பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோசனா என்னும் மூலப்பெயரைச் சொன்னாலேயே மூச்சு முட்டுதே.)   திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.  அதற்கு மாற்றாக இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தானியங்களை வெளிச் சந்தையில் விற்று தானியங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று இ. மா.தே.நி.உறுப்பினர் இரமேசு சந்து  பரிந்துரைத்துள்ளார்.

+ இத்திட்டம் மகுடை(கோவிட்டு) தாக்கத்தால் வேளாண்மை அல்லாத துறைகளின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களில் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் துயர்தணிப்பை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும்,

+ இயல்பு நிலை மீண்டுள்ளதால் இலவசப் பொது வழங்கல்-பகிர்வு திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை இன்னுஞ் சிறந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும்,

+ பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னும் இத்திட்டத்தைத் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும்,

+ இந்தத்  திட்டத்தைச் செயல்படுத்த மாதந்தோறும் ஒதுக்கப்படும் 4 பேராயிரம் பார( மில்லியன் டன்) அரிசி, கோதுமையைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்திய சேம வங்கியின் மீதுள்ள பணக் கொள்கையை மேலும் கடுமையாக்குவதற்கான அழுத்தத்தைக் குறைக்கவும் ஒதுக்க வேண்டும் என்றும்  

இந்த மகானுபாவர் (இரமேசு சந்து ) பரிந்துரைத்துள்ளார்.

மகுடை(கோவிட்டு) தாக்கம், வேலையின்மை, ஊதியக் குறைவு, உயரும் பணவீக்கம் ஆகியவற்றால் வீழ்ந்த மக்களின் வாங்கும் திறன் இன்னும் மீட்கப்படாத நிலையில் இத்திட்டத்தை நிறுத்துமாறு பரிந்துரைப்பது கடும் கண்டனத்திற்குரியது. உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் கடைநிலை என்பதன் பொருள் என்ன? அனைவருக்கும் பொது வழங்கல் முறையில் உணவு தானியங்களும்  இன்றியமையாப் பண்டங்களும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். அனைவருக்குமான அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் இந்த இரமேசு சந்து  பரிந்துரைத்த போதே பொது வழங்கலுக்கு மூடுவிழா நடத்துவதற்கான ஏற்பாடு நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என மேலே எச்சரித்திருந்தது சரிதான்..

2.   பணவீக்கம்

ந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு நவம்பரில் 5.88% உயர்ந்துள்ளது; பணவீக்கம் சனவரி யிலிருந்து தொடர்ந்து 10 மாதமாகச் சேம வங்கியின் உச்ச வரம்பான 6 விழுக்காட்டிற்கு மேல் இருந்து வந்துள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் 5.88 விழுக்காடாகக்குறைந்துள்ளது. சில்லறைப் பணவீக்கம் 2022 அட்டோபரில் 6.77 விழுக்காடாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 4.91 விழுக்காடாகவும் இருந்துள்ளது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.67 விழுக்காடு உயர்ந்துள்ளது. அட்டோபர் மாதத்தில் இது 7.01 விழுக்காடாக இருந்தது.

நவம்பரில் தானியங்களின் விலைவாசி 12.96% உயர்ந்துள்ளது. பால் பொருட்களின் விலைவாசி 8.16% உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.62% உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 8.08% குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 3.15% உயர்ந்துள்ளது. வாசனைப் பொருட்களின் விலைவாசி 19.52% உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.9% உயர்ந்துள்ளது. இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவாக தெலங்கானாவில் பணவீக்கம் 7.89% உயர்ந்துள்ளது.

3. அட்டோபரில் தொழில்துறை வளர்ச்சி

ட்டோபர்  மாதத்திற்கான தொழில் துறை  உற்பத்திக்  குறியீடு  புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தொழில் துறை உற்பத்திக் குறியீடு அட்டோபர் மாதத்தில் 4 விழுக்காடு குறுக்க மடைந்துள்ளது. சென்ற ஆண்டு செட்டம்பரில் 4.2% வளர்ச்சியடைந்திருந்தது. அட்டோபரில்  சுரங்கத் துறையின் உற்பத்தி 2.5% வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை 5.6% குறுக்கமடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 1.2% உயர்ந்துள்ளது. அட்டோபரில் முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 2% உயர்ந்துள்ளது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 2.3% குறைந்துள்ளது. இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 2.8% குறைந்துள்ளது. உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 1% உயர்ந்துள்ளது. விரைவில் நுகரக்கூடிய பொருட்களின் ஆக்கம் 13.4% குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் ஆக்கம் 15.3% குறுக்கமடைந்துள்ளது.

இந்தத் தரவுகள் அட்டோபரில் தொழில்துறை, குறிப்பாகச் செய்பொருளாக்கத்  துறை (manufacturing sector) தேக்கநிலையில் இருப்பதையே காட்டுகின்றன.

+++++++

அன்பர் ஆசுபான் சோசுவா எழுகிறார்:

தாங்கள் அனுப்பும் தாழி மடல்களுக்கு மிகவும் நன்றி. என் அன்பு. என் பெயர் ஆசுபான். நான் ஒரு திருச்சபை போதகர். எல்லாம் வல்ல இறை அருளாலும் இயற்கையின் அன்பிலும் நூறாண்டு கடந்து நீங்கள் வாழ வாழ்த்துகிறேன். வயதில் சிறியவன். உங்களுக்காக இறையிடம் இறைஞ்சுகிறேன்.

நன்றிங்க அன்பரே! உங்கள் அன்புக்காகவும் வாழ்த்துக்காகவும்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 38

வியாழன், 6 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 62

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 61 தொடர்ச்சி)

தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு திறந்த மடல்

பாராட்டே அவமானம்?

இந்து- தமிழ், திசை நாளேட்டில் சென்ற திசம்பர் 12 ஆம் நாள் அண்ணல் அம்பேத்துகர் குறித்து நீங்கள் எழுதியுள்ள “அவமானமே பாராட்டு!” என்ற கட்டுரை படித்தேன். அம்பேத்துகர் தாம் வாழ்ந்த காலத்தில் ஏசப்பட்டார், இழிவுபடுத்தப்பட்டார், அவர் மறைந்து இத்துணைக் காலம் கழித்தும், அவரது 65ஆம் நினைவு நாளிலும் (2022 திசம்பர் 6) அவமதிக்கப்பட்டார். அன்று போலவே இன்றும் இந்தச் சமூகம் மாறாமல் இருப்பதே காரணம் என்று நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சரியானது.

அம்பேத்துகருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் நீறு பூசுவதும், அவருக்குச் செருப்பு மாலை போடுவதும் ஒன்றுதான்! உங்கள் கருத்து அழுத்தமாய் மனத்தில் பதிகிறது. இந்துவாகச் சாக மாட்டேன் என்று சூளுரைத்து பௌத்தம் தழுவியவரை இன்றைக்கு இந்துத்துவம் சொந்தம் கொண்டாடுவதா? என்று அறச் சீற்றம் கொள்ள உங்கள் எழுத்து நம்மை உந்துகிறது.  அம்பேத்துகர் சந்தித்த அவமானங்கள் எத்தனை எத்தனை? இப்போதும் இந்த அவமானங்கள் தொடர வேண்டுமா? அவரைப் பாராட்டுவதாகச் சொல்லிக் கொண்டு அவமதிக்கிறதே இந்தக் காவிக் கூட்டம்? உங்கள் எழுத்து இந்த வேதனையை அனல் தகிக்க எழுப்புகிறது. இந்த அவமானம் அம்பேத்கருக்கு மட்டுமா? அவரது இதயத் துடிப்பில் தம் குமுறலைக் காணும் கோடானுகோடி ஒடுக்குண்ட மக்களுக்கும் இது அவமானம் இல்லையா?

ஆனால், அம்பேத்துகருக்கு இந்த அவமானமே பாராட்டுதான்! உங்கள் தலைப்பு உணர்த்தும் செய்தி இதுதான் எனக் கருதிக் கொள்கிறேன்!

இருப்பினும் எனக்குள் எழும் ஒரு கேள்வியை உங்களிடமே கேட்டு விட வேண்டும். மோதியின் பாசக பாசிச அரசு கொண்டுவந்துள்ள பொ.ந.பி. [பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான] (EWS) இட ஒதுக்கீட்டுத் திட்டம், அதற்கான அரசமைப்புத் திருத்தச் சட்டம் (திருத்தம் 103) அம்பேத்துகருக்கும் ஒடுக்குண்ட மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று நீங்கள் கருதவில்லையா? வேறு வேறு பெயர்கள் சொல்லிப் பார்ப்பனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் இடஒதுக்கீட்டின் சமூகநீதி அடித்தளத்தைத் தகர்க்கும் தே.தொ.அ.(இரா.சே.ச.) சூழ்ச்சி உங்களுக்கு விளங்கவில்லையா தோழரே?

பொநபி திருத்த சட்டம் செல்லாது என்று சிறுபான்மைத் தீர்ப்புரைத்த இரு நீதியரில் ஒருவரான இரவீந்திர பட்டு எழுதியிருப்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்:

“இந்தியக் குடியரசின் எழுபதாண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்த நீதிமன்றம் வெளிப்படையாகவே ஒரு பகுதியினரை மட்டும் விலக்கி வைப்பதும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுமான ஒரு கொள்கைக்கு இடமளித்துள்ளது என்று நான் கருதுகிறேன்.

“நமது அரசமைப்புச் சட்டம் விலக்கி வைத்தலின் மொழி பேசாது. இந்தச் சட்டத் திருத்தம் விலக்கி வைத்தலின் மொழி பேசுவதால் சமூக நீதியின் கட்டைமப்பையும், எனவே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது என்பது என் தீர்க்கமான கருத்து.”

விலக்கி வைத்தல், ஒதுக்கல் … இதுதான் தீண்டாமையின் சாரம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இரவீந்திர பட்டின் பார்வையில் 103ஆம் திருத்தச் சட்டம், அது “ஏழைகளுக்கு” வழங்கும் சலுகை எல்லா ஏழைகளுக்கும் பொருந்தாது, ப.சா.,ப.ப.,பி.பி.வ.(எசுசி, எசுடி, ஓபிசி) ஏழைகளுக்குப் பொருந்தாது. அது முற்பட்ட சாதி ‘ஏழை’களுக்கு மட்டும்தான் பயன்படும். ஏழ்மைக்கான அளவுகோலும் கூட அவர்களுக்கு வேறு, இவர்களுக்கு வேறு!

“அல்லாத பிற”  என்ற விலக்கலின் சொற்றொடர் இந்தியச் சிற்றூர்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கும் அரசமைப்புக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் போய் விட்டது, இது தீண்டாமையின் வெற்றிக் கொடி! அம்பேத்துகரையும் அவரை நேசிக்கும் நசுக்குண்ட மக்களையும், அவர்களின் விடியலுக்காக எழுதும் உங்களையும், உங்கள் எழுத்திலிருந்து ஊக்கம் பெறும் என்னைப் போன்றோரையும் இழிவுபடுத்தும் கொடி!

தோழரே! கண்ணுக்குத் தெரிந்த  உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடித்தால் போதாது. சட்ட நுட்பங்களில் மறைந்திருக்கும் பொநபி (EWS) தீண்டாமைச் சுவரையும் இடித்து நொறுக்க வேண்டும். அதுதான் அற்பர்கள் அம்பேத்துகருக்குச் செய்த இழிவைத் துடைக்கும்.    

“அவமானமே பாராட்டு” எழுதிய நீங்கள் அதே நாளேட்டில் அல்லது வேறு எங்காவது அம்பேத்துகருக்கு பாசகவின் பொமுபி செய்துள்ள இழிவைப் பற்றியும் எழுதுங்கள், இந்த மடலுக்கு மறுமொழியாக நீங்கள் என்ன எழுதினாலும் தாழி அதனைத் தாங்கி வரும், ஏனென்றால் அம்பேத்துகருக்குப் பாராட்டே அவமானம் ஆகி விடக் கூடாது அல்லவா?

பின் குறிப்பு:  தோழர் ச. தமிழ்ச்செல்வனோடு எனக்கு நேர்த் தொடர்பு இல்லை. அன்பர்கள் யாரேனும் இந்தத் திறந்த மடலை அவர் கவனத்துக்குக் கொண்டுசென்றால் நன்று! அவரது மின்னஞ்சல் முகவரிக்கும் இம்மடலை அனுப்புகிறேன். இந்த மடலைச் சமூக ஊடகங்களில் பரவலாக விதைத்திடுங்கள். இந்த மடலுக்கு மறுமொழி மற்றவர்களும் எழுதலாம். உரையாடலால் உண்மை காண்போம்.

படியுங்கள்: ஈழம் மெய்ப்படும்!

அன்பர் மா. சத்தியசீலன் எழுதுகிறார்:  

உடன்பிறப்பு நலங்கிள்ளி அவர்களின் மடலில் குறிப்பிட்டவாறு தங்களின் வயது முதிர்வு குறித்தான தங்களின் விளக்கம் – தாழி பொருள் தொடர்பாக- நானும் அவ்வளவாக முதலில் கவனத்திற் கொள்ளவில்லை; ஆனால் மறுபடியும் இப்போது படித்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது.

தங்களைப் போன்ற சான்றோர்கள்- களப் போராளிகளின் வாழ்வின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் என்னால் உணர முடிகிறது; தங்களின் உழைப்பு மென்மேலும் தொடரவே நான் உளப்பூர்வமாக விரும்புகிறேன்.

நிற்க, நவதாராளவாதமா- புதுத்தாராளியமா என்ற பேசுபொருள் சொல்லாராய்ச்சியுடன் இடை நின்றுவிட்டது; அது குறித்தான விளக்கத்தை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தேன்; அத்துடன் பழைய தாராளியம் என்றால் என்ன என்பதையும் அறிய விழைகிறேன்.

இதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்; ஏனென்றால் ‘ பெரியாரா- பிரபாகரனா’ என்று தருக்கம் தடம் புரள நான் கருத்து இடையீடு செய்து விட்டேன். மன்னிக்கவும்!

நான் மீண்டும் என்னுடைய விளக்கத்தை விளம்புகிறேன்: நான் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவே – என்னைப் போன்றோர் அறிந்து கொள்ள – சில கேள்விகளை எழுப்பினேன்.

என்னுடைய ஐயப்பாட்டை சிபி அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதையும் சிறப்பாகத் தாங்கள் விளக்கினீர்கள்- இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இங்குக் குற்றாய்விற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும், எதுவும் இல்லை; அது பெரியாரோ அம்பேத்துகரோ எவராக இருப்பினும்!

வள்ளுவன் குறிப்பிட்டவாறு “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்”  அனைத்தையும் ஐயுற வேண்டும்; பெரியாரே அதைத் தானே கூறினார்; எனவே அவரும் குற்றாய்விற்குட்பட்டவரே- இதை நான் மறுக்கவில்லை- ஆனால் சீமான் போன்றவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புவது ‘ பெரியாரின் கருத்தில் மாறுபாடு இருந்தால் தாராளமாக குற்றாய்வு செய்யுங்கள்; ஆனால் அதற்குப் பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தாதீர்கள்’ என்பதுதான்!

என்னைப் போன்ற புலிகளைப் பற்றி அவ்வளவாக அறியாத -ஆனால் பெரியாரின் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டோர் என்ன செய்வோம்? பிரபாகரனின் அரசியல் மீது ஐயம் கொள்வோம்; இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா?

இதன் மூலம் அவர்கள் சாதிக்க விழைவது என்ன? இதைத்தான் நான் கேட்டது!

மற்றபடி பிழையாக் கோட்பாடு என்று எதுவும் இவ்வுலகில் இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன். முழுமுதல் உண்மை (Absolute truth) என்று எதுவும் இல்லை.

அறிவியலாளர் ஐன்சுடீனின் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ (General theory of relativity) பேரண்ட விளக்கத்திற்கு மட்டுமல்ல; நடைமுறைக் கோட்பாடுகளுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.

அவரவர் சார்ந்திருக்கும் வருக்க – சாதி – பாலினம்- நம்பிக்கைகள் மற்றும் பண்பாடு சார்ந்து தமது நிலைப்பாட்டை எடுப்பர்; ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு என்று எதுவும் இருக்க இயலாது.

ஆனால் எந்தவொரு குற்றாய்வும் முற்போக்கானதாக, அடுத்தக் கட்ட வளர்ச்சிக்குரியதாகவும் இருக்க வேண்டுமே ஒழிய பிற்போக்கானதாக – கற்காலத்திற்கு இட்டுச்செல்லக் கூடியதாக இருக்கக் கூடாது என்பதே கருத்திற் கொள்ளவேண்டியதாகும்!

*****

நன்றி சத்திய சீலன்!

நவ தாராளவாதமா?  புதுத் தாராளியமா? இந்த உரையாடல் முடியவில்லை, தொடரும். கடைசியாக நின்ற வினா: தாராளியமா? தாராளவியமா? இது குறித்து சிபி தந்த இலக்கண விளக்கத்தையும் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் கருத்தையும் தெரிந்து கொண்டோம். சொல்லாய்வறிஞர் அருளியாரின் கருத்துக் கேட்டு அவரிடமும் பேசியுள்ளேன். பழைய தாராளியம் பற்றி எழுத வேண்டியது நானே. பொறுங்கள், எழுதுவேன். இந்த உரையாடல் வேறோர் உரையடலால் தடம் மாறவோ தடுமாறவோ இல்லை. எல்லா உரையாடல்களும் தேவையானவையே. சொல்லடிக்கும் பணி தொடரும். கவலை வேண்டாம்.

புலிகளின் அரசியல் பற்றிய உங்கள் வினாவிற்கு எனக்குத் தெரிந்த வரை விடை தந்துள்ளேன். தமிழ்த் தேசியம், திராவிட இயக்கம், ஈழ விடுதலை ஆகியவற்றுக்கிடையிலான ‘சிக்கல்’ குறித்து நான் ஏற்கெனவே முகநூலில் தொடர் இடுகைகள் எழுதியுள்ளேன். அனைத்தையும் இங்கே மீள்பதிவு செய்ய தாழி கொள்ளாது. “ஈழம் மெய்ப்படும்” என்ற தலைப்பில் அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெறப் போகின்றன. நீங்கள் அவற்றைப் படிக்க வேண்டும். அது வரை பொறுத்தருள்க!   

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 38

புதன், 5 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 61 - சமந்தா எழுதுகிறார்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 60 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்

பொருளியல்:

1.   தொழிலாளர் உரிமைக் குரல்

Ø   இருபது நாடுகள் குழு(G-20) கூட்டமைப்பின் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் அமைப்பாக த20(L 20) உள்ளது. கடும் கண்டனத்துக்குரிய வகையில் தேசியத் தொண்டர் அணி (ஆர்.எசு.எசு.), ஆதரவு இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை  (Bharatiya Mazdoor / Sangh BMS) த -20இன் தலைவராக நியமித்துள்ளது பாசக அரசு.

இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.அ.(HMS) முதலான  10 மத்தியத் தொழிற்சங்கங்கள் ஈகியர் நாளான  சனவரி 30ஆம் நாள் தில்லியில் கூடி, தேசிய மாநாடு நடத்தி, நரேந்திர மோதி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்க்கத் திட்டமிட்டுள்ளன. தொழிலாளர்களை மேலும் அணிதிரட்டுவது, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று இந்து மசுதூர் அவையின்பொதுச் செயலாளர் அர்பசன் சிங்கு சித்து கூறியுள்ளார்.

 தாங்கள் முன்வைத்த எந்தவொரு சிக்கலுக்கும் அரசு சரியாக விடையிறுக்கவில்லை. என்றும், நான்கு தொழிலாளர் சட்டங்களின் பெரும்பாலான விதிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவானவை அல்ல என்றும், அவை முதலாளிகளுக்கு நன்மை செய்வதையே நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். பல வருடங்களாக இந்தியத் தொழிலாளர் மாநாடு கூட்டப்படாமல் உள்ளது. மற்றொரு சிக்கல் என்னவென்றால், தே.தொ.அ.(இரா.சே.ச. )ஆதரவு பாரதிய மசுதூர் சங்கம்  கு.20(G 20) இன் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் த(எல்)-20 இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. இச்சிக்கலை அனைத்துத் தொழிற்சங்கங்களும் கிளப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.அ.(HMS) முதலான   தொழிற்சங்கங்கள், தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் குறித்தும், இந்தியத் தொழிலாளர் மாநாடு போன்ற முத்தரப்புக் கூட்டங்கள் நடத்தப்படாதது குறித்தும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கம் குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.

2.    எண்ம (DIGITAL) ஏற்றத் தாழ்வு

Ø  புதிய ஆஃசா குழு அறிக்கை – இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022: எண்மப் பிரிவினை. பெண்கள், வேலையில்லாதோர், சிற்றூர்ப்புற ஏழைகள் எண்மப் பிரிவினையால் பின்னடைந்துள்ளனர் என்கிறது புதிய ஆஃசா குழு அறிக்கை. இந்தியாவில் சாதி, பாலினம், இருப்பிடம், வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக உள்ளன.  “இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை, 2022: ப் பிரிவினை” என்ற தலைப்பில் இந்தியா பற்றிய புதிய ஆஃசா குழு அறிக்கையின்படி, தற்போது எண்ம வெளியிலும் பிரிவினை பரந்த அளவில் காணப்படுகின்றது.

Ø  இந்த அறிக்கையின் படி 2021ஆம் ஆண்டில் ஆண்களில் 61 விழுக்காட்டினர் கைபேசி வைத்திருந்தனர், ஆனால் பெண்களில் வெறும் 31 விழுக்காட்டினர் மட்டுமே கைபேசி வைத்திருந்தனர். பெரும்பாலும் ஆண்கள், நகர்ப்புறத்தில் வசிப்போர், ‘உயர்சாதியினர்’, உயர்வகுப்பினர்க்கே எண்மத் தொழில்நுட்பங்களை அணுகக்கூடிய வாய்ப்பு உள்ளது. சாதி அடிப்படையில் பார்த்தால் பொதுப் பிரிவில் 8 விழுக்காட்டினர் கணிணி அல்லது மடிக் கணிணி வசதியைப் பெற்றிருந்தாலும், பட்டியலினத்தவரில் பட்டியல் சாதிப் பிரிவினரில் 2 விழுக்காட்டினராலும் பட்டியல் பழங்குடியினரில் 1 விழுக்காட்டினராலும் மட்டுமே கணிணி அல்லது மடிக் கணிணி வாங்க முடிந்துள்ளது.

Ø  2021ஆம் ஆண்டில் ஊதியம் பெறும் நிரந்தரத் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினரிடம் கைபேசி இருந்ததாகவும், ஆனால் வேலையில்லாதவர்களில் 50 விழுக்காட்டினரிடம்  மட்டுமே அது இருந்தது என்றும் புதிய ஆஃசா குழு அறிக்கை கூறுவது வேலைவாய்ப்புக்கும் எண்மப் பிரிவினைக்குமான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.

Ø  பொதுவாக நம்பப்படுவது போலல்லாமல், சிற்றூர்ப்புறங்களில் கணினிச் சாதனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மகுடைக்(கோவிட்டு) கொள்ளை நோய்க்கு முன்னர் சிற்றூர்ப்புற மக்களில் 3 விழுக்காட்டினர் கணிணி வைத்திருந்தனர், மகுடை(கோவிட்டு)க்குப் பிறகு இது 1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

Ø  கல்வி, நலவாழ்வு போன்ற இன்றியமையாச் சேவைகளை வழங்குவதில் எண்மத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் நாட்டின் எண்மப் பிளவும், அதன் விளைவுகளும் எதிரொலிக்கிறது. 2020 செட்டம்பரில் பொதுமுடக்கத்தின் போது ஐந்து மாநிலங்களில் நடத்திய விரைவான கணக்கெடுப்பின்படி, 82% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எண்மக் கல்வி கிடைக்கச் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பலை(சிக்னல்), இணைய வேகம் தனியார் பள்ளிகளில் மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அரசுப் பள்ளிகளில், 80% பெற்றோர்கள் பொதுமுடக்கக் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 84% அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சாதனங்கள், இணைய வசதி இல்லாததால் இணைய ஊடகங்கள் மூலம் கல்வியளிப்பதில் சிரமப்பட்டுள்ளனர்.

Ø  “எண்மத் தொழில்நுட்பங்கள் பொது சேவைகள், திட்டங்களை மேலும் அணுகக் கூடியவையாக மாற்ற வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை பணக்காரர்களுக்கும் சலுகை பெற்றவர்களுக்குமே எண்மத் தொழில்நுட்பங்கள் அணுகக்கூடியவையாக உள்ளன என்பதையே அறிக்கை.  எடுத்துக்காட்டுகிறது. கல்வியறிவு இல்லாத ஒருவருடன் ஒப்பிடும் போது முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் தொலைபேசி வைத்திருப்பதற்கான வாய்ப்பு 60% அதிகம் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது” என்று ஆஃசா குழு(ஆக்குசுபாம்)-இந்தியா தலைமை நிருவாக அதிகாரி அமிதாப்பு பெஃகர் கூறியுள்ளார்.

Ø  “இந்தியாவில் உயர்ந்து வரும் சமத்துவமின்மை எண்மப் பிளவு காரணமாக மேலும் உயர்ந்துள்ளது. சாதனங்கள், இணையம் இல்லாதவர்கள் கல்வி, நலவாழ்வு மற்றும் பொதுச் சேவைகளை அணுகுவதில் உள்ள இடர்ப்பாடுகளால் மேலும் ஓரங்கட்டப்படுகிறார்கள். சமத்துவமின்மையின் இந்தத் தீய சகடம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்றும் அமிதாப்பு பெஃகர் கூறினார். மத்திய, மாநில அரசுகள் எண்ம  அகக்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆஃசா குழு வலியுறுத்தியுள்ளது, இணையத்தை அணுகக் கூடியதாக மாற்றுவதோடு, திறன்பேசிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இனிய அன்பர்களே!

பொ ந பி (EWS) இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஐவர் ஆயத்தின் பெரும்பான்மைக் கருத்துடன் மாறுபாட்டுக் கருத்துரைத்த இரு நீதியரில் ஒருவர் இரவீந்திர பட்டு.. அவரது தீர்ப்புரையில் முதல் பத்தியின் முகன்மை கருதி அதனை ஆங்கிலத்தில் அவர் எழுதியவாறே தருவதோடு, அதற்கான என் தமிழாக்கத்தையும் படைக்கிறேன்:   

I regret my inability to concur with the views expressed by the majority opinion on the validity of the 103rd Amendment on Question No. 3, since I feel – for reasons set out elaborately in the following opinion – that this court has for the first time, in the seven decades of the republic, sanctioned an avowedly exclusionary and discriminatory principle. Our Constitution does not speak the language of exclusion. In my considered opinion, the amendment, by the language of exclusion, undermines the fabric of social justice, and thereby, the basic structure.

தமிழில்:

அரசமைப்புச் சட்டத்துக்கான 103ஆம் திருத்தம் கேள்வி எண் 3இன் அடிப்படையில் செல்லுபடியாவது பற்றிய பெரும்பான்மை நீதியர் தீர்ப்பில் சொல்லியிருக்கும் கருத்துகளோடு உடன்பட இயலாமைக்கு வருந்துகிறேன். ஏனென்றால் இந்தியக் குடியரசின் எழுபதாண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்த நீதிமன்றம் வெளிப்படையாகவே ஒரு பகுதியினரை மட்டும் விலக்கி வைப்பதும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுமான ஒரு கொள்கைக்கு இடமளித்துள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த என் கருத்துக்குரிய காரணங்களைக் கீழ் வரும் என் தீர்ப்புரையில் விரிவாகத் தருகின்றேன். நமது அரசமைப்புச் சட்டம் விலக்கி வைத்தலின் மொழி பேசாது. இந்தச் சட்டத் திருத்தம் விலக்கி வைத்தலின் மொழி பேசுவதால் சமூக நீதியின் நெசவியலையும், எனவே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது என்பது என் தீர்க்கமான கருத்து.

offends the basic structure…

ஆய்வுக்குரிய கேள்வி எண் மூன்று:

“அல்லாத பிற” என்ற விலக்கி வைக்கும் தன்மையிலான விதி         அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தாக்குகிறதா?

 [குறிப்பு: பொநபி இட ஒதுக்கீடு குறித்து நாம் நடத்திய இணையக் கருத்தரங்கில் உரையாற்றிய மேனாள் நீதியர் அன்பர் அரி பரந்தாமன் அவர்கள் நீதியர் இரவீந்திர பட்டின் இந்தக் குற்றாய்வைச் சிறப்பாக எடுத்துக் காட்டினார். பட்டுக்கே தெரிகிறது, இந்தியவாத இடதுசாரிகளுக்குத் தெரியவில்லையே!]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 37