சனி, 5 டிசம்பர், 2020

கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்

 அகரமுதல

கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்தமிழே விழி !                                                          தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்

தமிழன்பரீர்,

வணக்கம்.

கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020 காலை 10.00 மணி முதல் நடைபெற இருந்த மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான இணையக் கூட்டம்

https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

40 நிமையத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டிய நடைமுறையைத் தவிர்ப்பதற்காகத் தோழர் தியாகு அவரது அணுக்கித் தளத்தைப் பயன்படுத்தத் தந்துள்ளார். ஆதலின் புதிய இணைப்பில் கண்டன அரங்கத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.

நன்றி.

கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020

முற்பகல் 10.00 – நண்பகல் 1.00

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடவுக்குறி / Passcode: 12345

[ அயல்நாட்டார் பங்கேற்பிற்கு மட்டும்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடடவுக் குறி /Passcode: 12345

அலைபேசி வழி / One tap mobile

+16465588656,,8641368094#,,,,,,0#,,12345# US (புது யார்க்கு / New York)

+13017158592,,8641368094#,,,,,,0#,,12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C)

இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location

+1 646 558 8656 US (புது யார்க்கு / New York)

+1 301 715 8592 US (வாசிங்கடன் கொ.மா. / Washington D.C)

+1 312 626 6799 US (சிக்காகோ /Chicago)

+1 669 900 9128 US (சான்் சோசு / San Jose)

+1 253 215 8782 US (தக்கோமா / Tacoma)

+1 346 248 7799 US (ஊசுட்டன் /Houston)

உங்கள் இருப்பிட எண் அறிய / Find your local number: https://us02web.zoom.us/u/kb9tpSCitW ]

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 


வெள்ளி, 4 டிசம்பர், 2020

மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020

 அகரமுதல
தமிழே விழி !                                                                          தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! (பாவேந்தர் பாரதிதாசன்)

மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான

கண்டனஅரங்கம்

கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020

காலை 10.00 மணி முதல்

அணுக்கிக் கூட்ட எண்:  824 0078 6393  

 கடவுச்சொல் : thamizh

அல்லது

கூட்ட இணைப்பு

https://us05web.zoom.us/j/82400786393?pwd=VklFT0NxWXNpQi9US0pQNFFiYkpCUT09

அருள்கூர்ந்து ஒவ்வொரு 40 நிமையத்திற்கும் புதுப்பித்துக் கொள்க!

மத்திய அரசு நாளும் இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து ஐம்பதின்மருக்கும் மேற்பட்டோர் கவிதைக் கணைகளையும் சொல்லம்புகளையும் வீச உள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகம், மகாராட்டிரம், பிரான்சு முதலான பல நாடுகள், மாநிலங்களிலிருந்தும் தமிழ்க்காப்பு நண்பர்கள் பங்கேற்கின்றனர். உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம்! , நிகழ்வின் பொழுது,

“மத்தியஅரசின் இந்தி,சமற்கிருதத்திணிப்புகளுக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்”

 எனக் கூறித் தத்தம் பெயர், அமைப்பு விவரங்களைத் தெரிவிக்கலாம்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
குவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020

 அகரமுதல


கார்த்திகை 21, 2051 / 06.12.2020

ஞாயிறு மாலை 6.30

நூலறிமுகம்:

புலியூர் அனந்துவின்

ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்

அறிமுகம்: ஆர்.கே.இராமநாதன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்குறி/Passcode: kuvikam123  

பயன்படுத்தலாம் அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.

 

புதன், 2 டிசம்பர், 2020

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்

 அகரமுதல


கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க (பாவேந்தர் பாரதிதாசன்)

தமிழ்க்காப்புக் கழகம்

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து

இணையவழிக் கண்டனக் கூட்டம்

கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020

காலை 10.00 மணிமுதல்

உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம்!

மத்திய அரசு நாளும் இந்தி,சமக்கிருதத் திணிப்புகள் மூலம்  தமிழ் முதலான தேசிய மொழிகளை அழித்து வருகிறது.

இது குறித்து  மேற்குறித்த நாளில் நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் நீங்களும் பங்கேற்கலாம். கூட்ட இணைப்பு விவரம் பிறகு தெரிவிக்கப்படும்.

ஐந்து நிமிடததிற்குள் பேச அல்லது கவி பாட முன்வருவோர் தங்கள் விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். தங்களுக்கு அறிமுகமான பிறர் பங்கேற்க முன்வந்தாலும் விவரங்களைத்தெரிவிக்கலாம். கவிதையின் வடிவம் மரபு, புததுக்கவிதை, குறும்பா என எவ்வாறும் இருக்கலாம். ஆனால், பிறமொழிச்சொல் கலவாமல் இருக்க வேண்டும்.

மேலும், நிகழ்வின் பொழுது,

“மத்தியஅரசின் இந்தி,சமற்கிருதத்திணிப்புகளுக்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்”

 எனக் கூறித் தத்தம் பெயர், அமைப்பு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

எக்கட்சி அல்லது அமைப்பினராக இருந்தாலும் தமிழ்நலன் நாடுவோர் எனில் பங்கேற்கலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்

திங்கள், 30 நவம்பர், 2020

பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக! – பெ.மணியரசன்

 அகரமுதல

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக!

கரூர் பசுபதீசுவரர் கோயில், அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் முதலான திருக்கோயில்களுக்கு கார்த்திகை 10, 2051 / 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாகத் திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். மகுடையால்(கொரோனாவால்) தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.

அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.

கடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அருச்சகராகலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அருச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அருச்சகர்களுக்குத் தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.

எனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பெ. மணியரசன்)
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

 

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்

 அகரமுதல

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 

100 நிகழ்ச்சிகள் நடத்திய

சமால் முகம்மது கல்லூரி

முன்னாள் மாணவர்கள் சங்கம்

 

சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்திக் கொண்டாடியது.

சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி அருவினை படைத்துள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இலவசப் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழிவுகள், ஒற்றுமையை வளர்க்கும் குடும்ப நாள், நோன்புத் துறப்பு,  சமய இன நல்லிணக்க நிகழ்ச்சிகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான விழாக்கள், இறகுப் பந்து விளையாட்டுப் போட்டிகள், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி வழங்குதல், முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு ஆடைகள், சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்குதல், மாணவர்களுக்கான எழுதுபொருட்கள் நன்கொடை வழங்குதல், பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக நலப் பணியாற்றுதல் முதலான சேவைகளைச் செய்து, சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அரும்பணி ஆற்றி வருகிறது.

சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் தலைமையில் நடைபெற்ற 10ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா, சங்கம் ஆற்றிய கல்வி, சமூக நலப் பணிகளை எடுத்துரைத்தார். 10 ஆண்டுகளில் நடத்திய 100 நிகழ்வுகளின் தொகுப்பு காணொளியாக வெளியிடப்பட்டது. நாகூர் உரூமி எழுதிய “மீண்டுமோர் கருவறை தந்த தாயே!” என்ற பாடலை மாணவிகள் சினேகா முரளி, அனுமிதா முரளி இணைந்து பாட, “சமால் சமால் நீ வாழ்கவே!” என்ற பாடல் இசைமணி பரசு கல்யாண் குரலில் ஒலித்தது. கல்லூரியின் செயலர் முனைவர் காசா நசீமுதீன் சாகிபு, பொருளாளர் சமால் முகம்மது சாகிபு, முதல்வர் முனைவர் இசுமாயில் முகைதீன், பேராசிரியர் சாகிர் உசைன், கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அத்துல் சுபஃகான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழகத்தில் திருச்சியில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமால் முகம்மது கல்லூரி  கடந்த 70ஆண்டுகளாக உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

– முதுவை இதாயத்து