கொழும்பு, பிப். 3: சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாக வெற்றிபெற்றுள்ள மகிந்த ராஜபட்ச, புதிய அதிபராக வரும் நவம்பரில் பதவியேற்கவேண்டும் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் அவர் அதிபராக இன்னும் 7 ஆண்டுகள் பதவியில் இருப்பார். அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி பொது வேட்பாளர் பொன்சேகாவை தோற்கடித்த அதிபர் ராஜ பட்ச, புதிய அதிபராக உடனடியாக பதவியேற்க வேண்டுமா அல்லது முறைப்படி நவம்பரில் பதவியேற்க வேண்டுமா என்ற குழப்பத்துக்கு தீர்வு கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அவரது தற்போதைய பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பரில் முடிகிறது. அதிபர் மனு மீது தலைமை நீதிபதி அசோக் டி சில்வா தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது. இலங்கை அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். பதவியேற்று 4 ஆண்டு பூர்த்தி செய்தால் மறு தேர்தலுக்கு உத்தரவிட அதிபருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. தற்போதைய பதவி முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் விடுதலைப்புலிகளை ஒழித்து மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்துள்ளால் அதன் மூலம் தனக்கு மக்களின் பேராதரவு கிடைக்கும் என்று திட்டமிட்டு முன்கூட்டியே தேர்தலை அறிவித்து அதில் வெற்றியும் பெற்றார் அதிபர் ராஜபட்ச. புதிய பதவி காலத்தை உடனடியாக தொடங்கவேண்டுமா அல்லது இப்போதைய பதவிக்காலம் 5 ஆண்டு முடியக் கூடிய நவம்பர் 2010ல் தொடங்கலாமா என்று தனது மனுவில் விளக்கம் கேட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் நவம்பர் 19லிருந்து இரு வாரத்துக்குள் புதிய அதிபராக ராஜபட்ச பதவியேற்கலாம் என்று தீர்ப்பு அளித்தனர். இந்த தகவல் அதிபர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எப்போது பதவியேற்கிறாரோ அப்போதிலிருந்து அதிபரின் புதிய பதவி காலம் தொடங்கும். 6 ஆண்டு பதவி வகிக்கலாம்.
கருத்துக்கள்
அதற்குள் என்னென்ன மாற்றம் நிகழப் போகிறதோ?
எதிர்பார்ப்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/4/2010 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
2/4/2010 2:19:00 AM