புதன், 3 பிப்ரவரி, 2010

செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்கு விருது



சென்னை,​​ பிப்.2: உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு விருது வழங்கப்படுகிறது.முதல்வரை செவ்வாய்க்கிழமை சந்தித்த நியூயார்க் தமிழ்ச் சங்க செயலாளர் பிரகாஷ்சாமி இந்தத் தகவலை தெரிவித்தார்.​ உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 100 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும்,​​ அதில் "அமெரிக்க காங்கிரஸ் மகா சபை விருது' முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.​ இந்தியர் ஒருவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கே தெரியும். விருதுகள் அவருடைய தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சித் தலைமை என்ற அளவு கோல் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்று. விருதுகள் வழங்கும் பல்கலைக்கழகம் போன்ற அவர் ஏன் இந்தச் சிறிய விருதுகளுக்கெல்லாம் மன மகிழ்வு கொண்டு ஏற்றுக் கொள்கிறார் என்று தெரியவில்லை. இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு எனத் தெய்வப் புலவர் கூறியதை நினைத்து போலிக் கூட்டம் தரும் பட்டங்களால் மகிழாமல் தமிழினத்தை ஒன்று படுத்தித் தமிழர் தாயகம் உலகோரால் ஏற்கப்பட ஆவன செய்ய வேண்டுகிறேன். வரலாற்றில் படிந்த கறைகளைத் துடைக்கும் மருந்து அஃது ஒன்றுதானே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/3/2010 2:56:00 AM

அமெரிக்க கங்கிரஸ் மகாசபை விருது இதுவரைக்கும் யாருக்குமே கொடுக்கவில்லையா!,இன்னாகடா மகாசபை,நியூயார்க் ன்னா ஏமாந்துடுவோமா!.லெட்டர்பேட் இயக்கமுன்னு எங்களுக்கு தெரியாதா!.நான் பொறந்து கண்முழிச்சதிலேந்து அந்த பேமானி விருதுதான் வாங்கினு இருக்றான்.வேற யாராவது வாங்க உடுங்கப்பா!,உலகம் சுத்துது,காலம் நகருது.நான் ஒரு விருது தரேன்.முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னாடி,பெரியார் திடலில்,திராவிடகழக வீரமணி கொடுத்தது,"மகளிர் நலன் காக்கும் மாண்பாளர்"!.

By விருதுநகர் பெ சீனிவாசன்
2/3/2010 2:35:00 AM

""முதல்வருக்கு பதிலா துணை முதல்வர் போறதுக்கான காரணம் தெரியுமா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி. ""டில்லிக்கு போறது தான பா... என்ன காரணம்...'' எனக் கேட்டார் அன்வர்பாய். ""டில்லியில் இந்த வார கடைசியில, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தறது குறித்த கூட்டமும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டமும் பிரதமர் தலைமையில நடக்கப் போவுது... இந்த கூட்டத்துல, எல்லா மாநிலங்களின் முதல்வர்களும் கலந்துக்குவாங்க... ""போன முறை நடந்த கூட்டத்திலும், முதல்வர் கலந்துக்கலை... இந்த முறை, விலைவாசி உயர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், முதல்வர் கலந்துக்கறதா இருந்துச்சு... இப்ப, திட்டத்தை மாத்திட்டு, துணை முதல்வர் தான், இந்த கூட்டங்கள்ல கலந்துக்கப் போறாரு வே... "அதே தேதியில, முதல்வருக்கு சென்னையில் சினிமாக்காரங்க பாராட்டு விழா நடத்துதாங்க... அதுல, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கலந்துட்டு முதல்வரை பாராட்டப் போறாங்க... முதல்வர் போகாததுக்கு இதுவும் காரணமா இருக்கலாம்ன்னு சொல்லுதாங்க வே...'' என சொல்லி முடித்தார் அண்ணாச்சி; பெரியவர்கள் புறப்பட்டனர் தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்

By p.sakthi
2/3/2010 2:31:00 AM

தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் திரைத்துறை கண்மணிகளின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவிற்கு செல்வேனே தவிர டெல்லி செல்ல மாட்டேன்

By P.SAKTHI
2/3/2010 2:25:00 AM

This is very very important news!!!!!!!

By C.Saran
2/3/2010 2:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக