வெள்ளி, 22 ஜூன், 2018

இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்


இங்கிலாந்து  திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன்

– இலக்குவனார் திருவள்ளுவன்


ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில்

இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில்

(Liverpool Hope University) 

இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது.


ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும்

பிற  அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில்

மாண்புமிகு தமிழகத்

தமிழ்வளர்ச்சி அமைச்சர்  ம.ப.பாண்டியராசன்

சிறப்புரையாற்றுகிறார்.


இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் 

நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும்

இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில்


“ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து”

 என்னும் தலைப்பில்

கட்டுரை அளிக்க இருக்கிறேன்.

அதே பொழுது 5 ஆம் அரங்கில்

மரு.மணவை முசுதபா செம்மல் கடடுரை அளிக்கிறார்.


அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! – கி. வெங்கட்ராமன்

அரசமைப்பு உறுப்பு 161இன்படி

ஏழு தமிழர்களை விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

கிவெங்கட்ராமன் கோரிக்கை!

உச்ச நீதிமன்றக் கெடு முடியும் தறுவாயில், இந்திய அரசு – குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்து வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.
2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது.
இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலைபற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டா” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்!
ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார்.
இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமசு, தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
கொலையுண்ட இராசீவு காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்!
இராசீவு காந்தி கொலையில் பன்னாட்டுச் சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது!
இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது.
இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!
அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்!
மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தஅளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் – அந்த அதிகாரம் கட்டற்றது!
ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்!
குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannottam.com
=====================================
இணையம்: tamizhdesiyam.com
=====================================

கருத்தில் வாழும் கவிஞர்கள் : ‘கவிஞர் ஆத்மாநாம்’ – முனைவர் கல்யாணராமன்

ஆனி 08, 2049  வெள்ளிக்கிழமை   22.06.2018 
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,  
இலக்கியவீதி  அமைப்பும்,
சீர் கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும்
இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு


முன்னிலை :  இலக்கியவீதி இனியவன்
தலைமை :  எழுத்தாளர் சீனிவாசன் நடராசன்
அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் பெருந்தேவி

 சிறப்புரை  : ‘கவிஞர் ஆத்துமாநாம்’ –  முனைவர் கல்யாணராமன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்  
தகுதியுரை  : துரை இலட்சுமிபதி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.

புதன், 20 ஜூன், 2018

தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! – உரையரங்கம், சென்னை

எண்என்ப   ஏனை   எழுத்துஎன்ப   இவ்விரண்டும்
கண்என்ப   வாழும்   உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392)

தமிழ்ப்பள்ளிகளை          மூடாதே!

உரையரங்கம்

ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018

தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ),
(அருங்காட்சியகம் எதிர்ப்புறம்),
எழும்பூர், சென்னை 600  008
தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி
வரவேற்புரை  :         த.தமிழ்த்தென்றல்
தலைமை      :               இலக்குவனார் திருவள்ளுவன்
தொடக்கவுரை:      முனைவர் க.ப. அறவாணன்
கருத்துரை   :
தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம்
கல்வியாளர் முனைவர் இ.மதியழகி
எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர்
கல்வியாளர் வெற்றிச்செழியன்
கல்வியாளர் இறை. பொற்கொடி
இதழாளர் ஆரா
அன்றில்   பா. இறைஎழிலன்

சிறப்புரை    :               தோழர்  தியாகு
நிறைவுரை :               முனைவர்   பொன்னவைக்கோ
தீர்மான உரை:   கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர்
நன்றியுரை  :               அக்கினி சுப்பிரமணியம்
தமிழ்ப்பள்ளிகளை நிலை நிறுத்திட
அன்புடன்  அழைக்கும்
தமிழ்க்காப்புக் கழகம்
தமிழ்வழிக்  கல்விக்கழகம் 
தாய்த்தமிழ்க் கல்விப்பணி      
 தமிழ் அமைப்புகள்
தாய்த்தமிழ்ப் பள்ளிகள்

அன்புடன்    வேண்டுகிறோம்!

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியும் தமிழ் மொழிக்கல்வியும் வேண்டும் எனப் போராடும் அவலம் இன்னும் உள்ளது வேதனையாக உள்ளது. ஆண்டுதோறும் அரசு தமிழ்வழிப் பள்ளிகளை மூடி வருகிறது. 2012-13 இல் 320 பள்ளிகளிலும் 2013-14 இல் 3200 பள்ளிகளிலும் ஆங்கில வழிப்பிரிவுகள்தொடங்கப்பட்டன. இவ்வாறு ஆண்டுதோறும் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்கப் பட்டதால், 4.84.498 பேர் தமிழ்வழிக்கல்வியை இழந்தனர். இதைத் தொடர்ந்து 2017-2018 இல் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு அரங்கேறியுள்ள அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 3.916. இவ்வாண்டில் ஏறத்தாழ 890 பள்ளிகைள மூடுவதாகச் செய்தி வந்தது. அரசு அப்படி எண்ணம் இல்லை என்று சொன்னாலும்  நம்பிக்கை இல்லை. ஏனெனில், இதனை எதிர்க்க வேண்டிய திமுக உறுப்பினர்களே ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க வினா தொடுக்கிறார்கள். கல்வியமைச்சரும் நடவடிக்கையில் உள்ளதாகக் கூறுகிறார். தமிழ்வழிப்பள்ளி செயல்பட்ட இடங்களில் ஆங்கிலவழிக்கல்வி கொண்டு வர எண்ணுகிறார்கள். ஆங்கில வழிக்கல்வி என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்துவதுதான்.
ஆழமாகக் கற்க வேண்டிய மொழிக்கல்வியைச் சிதைக்கும் வகையில் அரசு. (தமிழ்)மொழித் தேர்வுத்தாள் இரண்டாக இருந்ததை ஒன்றாகக் குறைத்துள்ளது. பள்ளிக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை சிறப்பாக இருக்க
வேண்டும் என்று விரும்புபவர்தான். ஆனால் மொழி தொடர்பான முடிவுகளை ஆங்கில மையல் கொண்ட அதிகாரிகளின் கருத்திற்கேற்ப எடுக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைப்பதற்காகப் பின்வரும் நடவடிக்கைகளை மாண்புமிகு முதல்வர் எடுக்க  வேண்டும்.
  1. ‘கூட்டுறவுக் கல்விநிலையங்கள் சட்டம் 2018’ என ஒன்றை உருவாக்க வேண்டும். இச்சட்டத்தின் அடிப்படையில் தாய்த்தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசிரியர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்திக் கூட்டுறவுக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும்.
  2. மூடக்கருதியுள்ள கல்வி நிலையங்களையும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள கல்வி நிலையங்களையும் கூட்டுறவு அமைப்பில் இணைக்க வேண்டும்.
  3. எல்லாத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாக மாற்றித் தேவைப்படும் உதவிகளைப் புரிய வேண்டும்.
4, தமிழ்நாட்டில் கல்வி என்றால் தமிழ்வழிக்கல்விதான் என்னும் நிலையை ஏற்படுத்த  வேண்டும்.
பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி உள்ளமைபோல் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வேண்டும் எனத் தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொண்டு இந்தியப்பாதுகாப்புச்சட்டத்தில் தளையிடப்பட்டார் தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார். இன்றைக்குப் பள்ளிகளில் உள்ள தமிழும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்ப்புலவர்கள். தமிழாசிரியர்கள். தமிழன்பர்கள். தமிழ் அமைப்பினர். கல்வியாளர்கள், பிறர் என அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைக்கவும் தமிழ்மொழிக்கல்வி சிறப்புறவும் ஆவன செய்ய வேண்டும்.

கண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை

வைகாசி 06, 2049 புதன் 20.6.2018 அன்று மாலை மணி

 தியாகராயர் நகர்முத்துரங்கம் சாலை, சென்னை

தமிழக மக்கள் முன்னணி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைதைக் கண்டித்தும், தோழர்.பெ.மணியரசன் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும்

கண்டனப் பொதுக்கூட்டம்

தலைமை : தோழர்.பொழிலன்
ஐயா.பழ.நெடுமாறன், 
தோழர் ்தியாகு,
தோழர்.திருமாவளவன், 
தோழர்.தெகலான்பாகவி, 
திருமுருகன்காந்தி, 
ஒய்வு பெற்ற நீதிபதிகள்
மூத்த வழக்குரைஞர்கள்
மனித உரிமை ஆர்வலர்கள் அணிவகுக்கின்றனர் !