சனி, 9 மார்ச், 2019

பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019

அகரமுதல

வைகாசி 12-14, 2050  / 26.05.2019-28.05.2019

பி,எசு.என்.ஏ. பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரி

திண்டுக்கல்


வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல்

மகா கணேச தமிழ் வித்தியா சாலைப் பள்ளி, மலேசியா

உலகத் தமிழ்க்காப்பிய ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா

இணையத் தோழி, இந்தியா

பதினாறாவது பன்னாட்டு மாநாடு – கருத்தரங்கம் , 2019
அறிவிப்பு மடல்

கருப்பொருள்

தமிழ்மொழியின் பன்முகத்தன்மை

துணைக் கருப்பொருள்
தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம், வரலாறு, கலை/நுண்கலை, கல்வி/ கற்றல் கற்பித்தல், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, வரலாறு, அறிவியல், ஒப்பியல், தமிழ்க்கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தமிழ்மொழியோடு தொடர்புடைய பிற துறைகள் சார்ந்த கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
கட்டுரை விவரம்
“தமிழ்மொழியின் பன்முகத்தன்மை” எனும் தலைப்பின் கீழ் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு அது தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் கட்டுரைகள் ஏற்கப்படும்.
கட்டுரைகள் துறைசார்ந்த வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டுத் தகுதியுள்ளவை ஏற்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய தகவல் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்
2019, ஏப்பிரல் 15ஆம் நாளுக்குள், ஆறு பக்கங்களுக்கு மிகாமல் முழுக் கட்டுரையையும் அனுப்ப வேண்டும். 
கட்டுரைகள் தமிழில் மட்டும் ஒருங்குகுறி (Arial Unicode MS, Latha, Vijaya) எழுத்துருக்களில் இருத்தல் வேண்டும்.
கட்டுரையாளர் பெயர், பணி விவரங்கள், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக சேர்த்து அனுப்ப வேண்டும்.
கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 
ISSN – உடன் ஆய்வுக் கோவை வெளியிடப்படும்; வரைவோலை: 
Treasurer, Valar Tamil Aayvu Manram (Dindigul) ]
கட்டணம்
இந்தியா – உரூபாய் 800
வெளிநாடு – 42 அமெரிக்க வெள்ளி(USD)
ஒருங்கிணைப்பாளர்கள்
இந்தியா
முனைவர் சி.மைசரோ சினிபாய் – 94439 19198
முனைவர் .பத்மநாப(பிள்ளை) – 98943 60944
முனைவர் .இராசரத்தினம் – 94427 51031
வெளிநாடு
முனைவர் காஇலட்சுமி – +91 90941 07500
திருமிகு தனேசு பாலகிருட்டிணன் +60143279982
இவண்
மாநாட்டுக் குழுவினர்

தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு விருது, திருச்சிராப்பள்ளி

அகரமுதல

உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் அமைப்பும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு, தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைப்  போற்றிச் சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழா ஆகியன இணைக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் உலகத்தாய்மொழி நாளான 20.02.2019 அன்று நடை பெற்றது.
 தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை, இரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினரான தூய வளனார் கல்லூரி கலைமனைகளின் அதிபர் தந்தை இலியோனார்டு  முன்னிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 22 தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,  பள்ளி – கல்லூரி மாணாக்கர்களால் தமிழ்க் குரிசில் என்னும் சிறப்பாரம் (விருதுகளை) வழங்கப்பெற்றுப் பொன்னாடை அணிவித்து மலர்கள் தூவி போற்றப்பட்டனர்.
 பெயரில், கல்வியில், கையெழுத்தில், வழிப்பாட்டில், நிருவாகத்தில், ஆட்சியில், வணிகப் பெயர்ப் பலகையில், ஊர்திகளில், இல்லற வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில், எங்கும் எதிலும் தமிழே நிலைபெறச் செயல்படுவோம் என மாணவர்கள், சான்றோர் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றனர்.
நிறைவில் தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதியைப் (பலூன்) பறக்கவிட்டு, அன்னைத் தமிழ் வாழ்க! என்றும் தமிழாய் வாழ்வோம்! தாய் தமிழை தலை நிமிரச் செய்வோம்! என்றும் முழக்கங்கள் முழங்கினார்கள்.
இந்நிகழ்வை தமிழரண் மாணவன் விசயகுமார் ஒருங்கிணைத்து வரவேற்புரையாற்றினார். தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தீபிகா, தமிழரண் மாணவி கவிதா இருவரும் தொகுத்து வழங்கினார்.
இறுதியில் தமிழரண் மாணவி அபிநயா நன்றி கூற இனிதே நிறைவுற்றது.
– நம்ம திருச்சி 09.03.2019

அளவளாவல் – மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன்

மாசி 26, 2050 ஞாயிறு   10.03.2019 மாலை 4.00
குவிகம் இல்லம், ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017
குவிகம் இலக்கிய வாசல்
அளவளாவல் – தமிழக அரசின் மொழிபெயர்ப்பு விருதாளர் சங்கரநாராயணன்
தொடர்பிற்கு  சுந்தரராசன் 94425 25191

திருக்குறள இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

அகரமுதல

மாசி 25, 2050 சனி  09.03.2019 காலை 10.30
வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை
திராவிட இயக்கத் தமிழர் பேரவை

வியாழன், 7 மார்ச், 2019

பகுத்தறிவாளர் பேரவைக் கூட்டம், பம்மல்

அகரமுதல


மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019 மாலை 6.30 மணி
  இடம்: ஈசுவரன் நகர் பொதுநலச் சங்க கட்டடம், மோசசு சாலை, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை  வரவேற்புரை: பொன்.இராமசந்திரன்
தலைமை:  வை.பார்த்திபன்
 சிறப்புரை: புலவர் சி.முத்தையா – 10 விழுக்காடு பொருளாதார ஒதுக்கீடு கூடாது ஏன்? சூர்யா  – தலைப்பு: தற்கால அறிவியலாளர்களும் – மூடநம்பிக்கைகளும்
நன்றியுரை: பொன்.செல்வராசன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை

அகரமுதல
மாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019  மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
 இடம்: பேரவையின் தலைமை யகம், (புதிய எண். 120,  என்.டி. ஆர். தெரு, (இரண்டாவது மாடி), அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24)

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின்  கருத்தரங்கம்

வரவேற்புரை: தோழர் சாந்தசீலன்
தலைமை: தோழர் மு.மாறன்

சிறப்புரை: கோவி.இலெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்)  – கொள்கைசார் இயக்கமும் தேர்தல் சமரசமும்

கருத்துரை: தோழர் தமிழ் மறவன் – அன்னை மணியம்மையார்,
தோழர் மகாலட்சுமி – முடியட்டும் விடியட்டும், 
தோழர் வித்தியா –  பூங்கொடிகள் அல்ல போர்க் கொடிகள்
நன்றியுரை: தோழர் வளசை. கணேசன்

திங்கள், 4 மார்ச், 2019

மார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலிமார்ச்சு 9 – தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனிதச் சங்கிலி
பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்குத் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம்கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!
இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்திப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்று வருகிறார்கள்.
அதில் தீர்மானித்தபடி, வரும் மாசி 25,2050 / 2019 மார்ச்சு – 9 காரி (சனி) அன்று மாலை 4 மணி முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி,திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் அனைத்துக் கட்சியினர் – இயக்கத்தினர் பங்கேற்கும் மனிதச் சங்கிலிப்போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏழு தமிழர் விடுதலை கோரி இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆங்காங்கே தமிழ்த்தேசியப்பேரியக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.
சென்னை – காஞ்சி மாவட்டத் தோழர்கள் சென்னையிலும், புதுச்சேரி – கடலூர் – விழுப்புரம் மாவட்டத் தோழர்கள் புதுச்சேரியிலும், நாகை – திருவாரூர் – தஞ்சை – திருச்சி – புதுக் கோட்டை – பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத் தோழர்கள் திருச்சியிலும், மதுரை – தேனிமாவட்டத் தோழர்கள் மதுரையிலும், நெல்லை – தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள் நெல்லையிலும், ஈரோடு – கோவை மாவட்டத்தோழர்கள் கோவையிலும், சேலம் – நாமக்கல் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்டத் தோழர்கள் சேலத்திலும் இந்த மனிதசங்கிலியில் பங்கேற்க வேண்டும். தோழமை அமைப்புகளோடு கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாக ஈடுபட வேண்டும். தமிழ்மக்களை இப்பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும்!
 மார்ச்சு 9 – மனித சங்கிலிப் போராட்ட நாளன்று பேரியக்கத் தோழர்களும், தமிழ் மக்களும் அவரவரது சுட்டுரை (Twitter), முகநூல்(Facebook) முதலான சமூக வலைத்தளங்களில் #28YearsEnoughGovernor என்ற குறிச்சொற்றொடர் (Hashtag) பயன்படுத்திப் பதிவுகள் இடவேண்டும் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம், பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com காணொலிகள் : youtube.com/Tamizhdesiya

ஞாயிறு, 3 மார்ச், 2019

மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும் – மறைமலை இலக்குவனார்

அகரமுதல
மாசி 20,2050  திங்கள்  4.03.2019  மாலை 5.00-6.30
வள்ளலார் அரங்கம், புதுவை
மாறிவரும் சமூகமும் மாறாத மதிப்புகளும்  – சிறப்புரை:
 நிறைமொழி மாந்தர் முனைவர் மறைமலை இலக்குவனார்

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!

அகரமுதல

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!- மு.க.தாலின் கண்டனம்

செம்மொழி திறனாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுக்  குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் வலியுறுத்தியுள்ளார்.
வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது எனத் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்திய முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக மு.க.தாலின் கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக நேற்று (மார்ச்சு 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழுக்கு எதிராகத், தமிழ்ப்பண்பாட்டைத் தன் மனம்போன போக்கில் பாசக, மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பும் நோக்கில் திரித்து எழுதிவரும் நாகசாமிக்கு மோடி அரசு பத்மவிபூசண் விருதை வழங்கிச்சிறப்பித்தது. இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பை வழங்கி செம்மொழித் தமிழுக்குப் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.
 மேலும், “கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தத்தளித்து நிற்கிறது. 2016-17 முதல் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ, சிறப்பிப்பதையோ, கலைஞர் பெயரில் அமைந்துள்ள சிறப்பு விருதையோ, பாசக அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியுள்ளது” என்றும் தாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில் அவசர அவசரமாகத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு இப்போது விருதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தாலின், “அன்னைத் தமிழாம் செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் திரு.நாகசாமி செம்மொழித் தமிழாய்வு விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளைக் கிள்ளுக்கீரையாக எண்ணிப் பாசக அரசு அவமானப்படுத்துகிறது. சமக்கிருதமும், வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற நச்சுப்பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிச் செம்மொழித் தமிழாய்வு விருதுகளைப் பாகுபாடின்றித் தேர்வு செய்ய முடியும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டை வெளிக்கொணராமல் ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சிகளைப் பாசக அரசு இன்னும் மூடி மறைத்து வருகிறது எனவும், இதில் உள்ள சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் தமிழக முதல்வர் கே.பழனிசாமி மாபெரும் துரோகம் செய்வதாகவும் தாலின் தெரிவித்துள்ளார். நாகசாமியை உடனடியாக அக்குழுவிலிருந்து நீக்கிவிட்டு, ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாசு சவடேகருக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழர்களின் உணர்வுடன் விபரீத விளையாட்டு நடத்த வேண்டாம் என்று மத்திய பாசக அரசை எச்சரிப்பதாகவும் அந்த அறிக்கையில்  தாலின் தெரிவித்துள்ளார்.