சனி, 6 பிப்ரவரி, 2010

முதல்வரை சந்தித்தார் அதிமுக எம்.எல்.ஏ.



சென்னை,​​ பிப்.​ 5:​ கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க.​ எம்.எல்.ஏ.வான எல்.​ ராதாகிருஷ்ணன் சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.முன்னதாக காலையில் அவர் மதுரையில் மத்திய அமைச்சரும்,​​ திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார்.தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அழகிரியை சந்தித்துப் பேசியதாக அங்கு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.​ இந்தச் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் ராதாகிருஷ்ணன் மீது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.தூத்துக்குடி மாவட்ட ஜெ.​ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராதாகிருஷ்ணன் நீக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.பின்னர் மாலையில் சென்னை வந்த ராதாகிருஷ்ணன் கோபாலபுரத்தில் முதல்வரை சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.இதன்பின், ​​ செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:​ கோவில்பட்டி தொகுதியின் பிரச்னைகளை சட்டப் பேரவையில் பேச அதிமுக தலைமை எனக்கு அனுமதி தரவில்லை.​ இதனால்,​​ தொகுதி வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பேருந்து,​ ​ சாலை,​​ தண்ணீர் வசதி போன்றவை போதுமானதாக இல்லை.​ அடிப்படை வசதிக் குறைபாடுகள் உள்ள எனது தொகுதி வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகும்.அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய உரிமை முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்றார்.திமுகவில் சேருகிறீர்களா என்ற கேள்விக்கு எந்த பதிலையும் கூற முடியாது என்றார் ராதாகிருஷ்ணன்.அழகிரி வரவில்லை...மதுரையில் தன்னை ராதாகிருஷ்ணன் சந்தித்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி,​​ "கோவில்பட்டி தொகுதியின் பிரச்னைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.மாலையில் முதல்வருடனான சந்திப்பின் போது அவர் வரவில்லை.​ தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி,​​ எம்.எல்.ஏ.​ அப்பாவு உள்ளிட்டோர் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீப காலமாகவே அதிமுகவில் அதிருப்தியில் இருந்த ராதாகிருஷ்ணன் திடீரென அழகிரியை சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இவர் முன்னாள் அமைச்சரும்,​​ சில மாதங்களுக்கு முன் திமுகவில் சேர்ந்தவருமான அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராகக் கருதப்படுபவர்.கடந்த வாரத்தில் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு செயலாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.​ அப்போது கயத்தாறு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மாணிக்கராஜா கோவில்பட்டி தொகுதிக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.​ மாணிக்கராஜா கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முயன்று வருபவர் என்பதாலும்,​​ அவரே இப்போது தொகுதி செயலாளராக அறிவிக்கப்பட்டதாலும் ராதாகிருஷ்ணன் தரப்பினர் அதிருப்தி அதிகமானது.கட்சியில் இருந்து நீக்கப்படாத காரணத்தால் ராதாகிருஷ்ணன் அதிமுக எம்.எல்.ஏ.வாகவே நீடிக்கிறார்.ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.​ சேகர் இப்போது எக்கட்சியும் சாராதவராக உள்ளார். சட்டப் பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அமரும் பகுதியில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் திமுகவில் சேருவதாக இருந்தால் எம்.எல்.ஏ.​ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.திமுகவில் சேருவது பற்றி எதுவும் கூற முடியாது என இப்போது ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.​ இருந்தாலும் அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை வந்துவிட்ட காரணத்தால் பேரவையில் அவர் திமுகவுக்கு சாதகமாகவே செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கெனவே சட்டப் பேரவையில் திமுகவுக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.​ எஸ்.வி.சேகர் திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசி வருகிறார்.​ ராதாகிருஷ்ணனின் ஆதரவும் கிடைத்தால் கட்சிக்கு ஆதரவாக 101 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.இதுதவிர பென்னாகரம் தொகுதியில் ஓரிரு மாதங்களில் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்கை அடிப்படையில் கட்சி மாறுவது தவறல்ல. ஆனால் நாய் பிடிக்கும்-மன்னிக்கவும் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குவது யாருக்கும் அழகல்ல. தனக்குப் பதவி கிடைக்காது என அறியும் பொழுது கட்சி மாறுபவர் இதைவிடப் பெரிய வசதி வரும் பொழுது அங்கிருந்தும் மாறமாட்டார் என்று எப்படிக் கூற முடியும். உறுவது சீர் தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (குறள் 813)என்று தெய்வப்புலவர் பொதுமறையில் கூறியது போல் இதுவும் பரத்தமைக்கும் திருட்டுத்தனத்துக்கும் சமமானதுதான். என்ற பொழுதும் இது வரை தொகுதிக்கு எந்த நன்மையும் செய்ய வில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் இந்தச் சட்ட மன்ற உறுப்பினர் இடைத் தேர்தலை வர வைத்து அதன் வழித் தன் தொகுதி மக்களை வளம் படுத்த எண்ணுகிறார் போலும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 3:01:00 AM

HIYA.....KONDAATTAM.........Innoru DMK MLA Vararungo....JAYALALITHA.......Neeyum DMK il join pannidu... kadaisiyil jaya nee mattum than admk il iruppai...Ippave DMK Member Aidu...........dont waste ur time jaya.

By Raja
2/6/2010 1:15:00 AM

அரசியல்வாதியும் விபச்சாரியும் பெரியளவில் வித்தியாஸம் ஏதும் இல்லை!

By மானஸ்த்தன்
2/6/2010 1:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக