சனி, 16 ஜூலை, 2016

தமிழ் நாட்டவராக வாழ விரும்பாதவர்கள் முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம் ! – சி.இலக்குவனார்
தலைப்பு-தமிழ்நாட்டவர் -சி.இ. : thalaippu_thamizhnaattavar

தமிழ் நாட்டவராக வாழ விரும்பாதவர்கள்

  முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம் !


  பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வாழ்பவர்கள் தமிழ் நாட்டவராக, தமிழராக வாழ வேண்டியதுதான் முறைமையாகும். அங்ஙனம் வாழ விரும்பாதவர்கள், அவர்களுடைய முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம். அங்ஙனமின்றி இந்த நாட்டில் இருந்து கொண்டே, இந்த நாட்டை, இந்த நாட்டு மொழியை, மக்களை எதிர்த்துக் கொண்டு, அழித்துக் கொண்டு வாழ நினைத்தால், தம் அழிவுக்கே வழி தேடியவர்கள் ஆவார்கள்.
– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
குறள்நெறி (மலர்: 4 இதழ்: 3): தை 18, 2002: 31.1.71

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்
தலைப்பு-இன்று,நாளை :thalaippu_indru_naalai

உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? –

கருத்தரங்கம் 

 ஆடி 15, 2047  –  30-7-16 சனிக்கிழமை மாலை 6.00

 40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு,

மயிலாப்பூர், சென்னை.

உங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும்

பாலசுப்பிரமணியன் 9042905783

சேலை அணிந்தால்
காற்றில் பறந்த மாராப்பினால்
இடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
காற்சட்டை –  சட்டை அணிந்தால்
உடலோடு ஒட்டிய ஆடைதான்
என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
பாவாடை –  சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான்
என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
முழுதாய் முக்காடிட்டால் கைவிரலும், கால்விரலும் தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்…
பழங்காலம் போல் அடுக்களையிலேயே பெண்ணை விட்டு வைத்தாலும்
பெண் என்பவளை நான் பார்த்ததே இல்லை அது தான் என் உணச்சியைத் தூண்டியதென்பாயோ..???
உணர்வுத் தூண்டல்
உடை எம் தவறெனில் மன்னிப்பு கோருவேன்…
வணங்கும் உடை ஒன்று சொல்..?
நான் தரிக்கிறேன்
அதை மீறி எனை தப்பர்த்தம் கொண்டால் உன் தோலுரிக்கிறேன்…
உணர்வுகளின் தூண்டல்
மனித இயல்பு
மறுக்கவில்லை நான்…
மனமொன்று எமக்கும் உண்டு
மறுப்பாயா..நீ..?
நான்
என் செய்தால்
உனை ஈன்றவளுக்கீடாய்
எனைப் பார்ப்பாய்…ஆண்மகனே..???
இப்படிப் பிச்சை கேட்பதால் ஒரு பயனும் இல்லை
எது நடந்தால் இது போன்ற குற்றங்கள் நடக்காதோ அதைக் கேட்க வேண்டும்
எது காரணியோ அந்தக் காரணியைக் கண்டறிந்து வேரறுக்க வேண்டும் ?
இன்னொரு இராம்குமார் உருவாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
இந்த உடைகளில்தான் கவர்ச்சி
இப்படிப் பார்ப்பதே மகிழ்ச்சி
இப்படி இந்த அங்கங்களை இப்படித்தான் பார்க்கவேண்டும் என நெருக்கத்தில் சொல்லித்தந்ததன் விளைவே காமத்தின் தூண்டலால் கட்டுப்படுத்த இயலாத பெண்ணாலும் ஆணாலும் பாலியல் துண்டால் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று நாம் அறிவோம்.
அதுமட்டுமல்ல விளம்பரம் மூலம் கறிக்கோழிகளாக நமது பிள்ளைகளை வளர்க்கும் இன்றைய உணவு முறைகளும் வரம்பு கடந்த வளர்ச்சி மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதை அறியாமல் உண்ணத் தருகின்றோம்.
ஆனாலும் ,
வீட்டின் வரவேற்பறையில் துணுக்குகள், சிறப்புக் காட்சிகள், காதல் காட்சிகள் என விதம் விதமாய் விரசங்களைக் காட்டும் போது இரகசியமாய் அல்ல வெட்கமில்லாமல் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்த்து இரசிக்கும் நமது மன மாசுதான் பிள்ளைகளுக்கும் உள்ளது
வீட்டின் வரவேற்பறையில் 24 மணி நேரமும் ஆபாசம் முக்கல் முனகல் காட்சிகளையும் வன்முறைக் காட்சிகளையும் காட்டிப் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிஊடகங்களையும் திரைப்படங்களையும் கண்காணித்துத் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை
உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் ஆபாச விளம்பரங்கள், திரைப்படத்  துணுக்குக் காட்சிகள், குடும்ப வன்முறையை – பாலியல் உணர்வைத்   தூண்டும் பெண்களுக்கெதிரான இந்தக் காட்சியைக் கண்டாலும் உடனடியாகப் புகார் அனுப்புங்கள்.
இன்று இராம்குமார் யாரோ! நாளை அது நமது பிள்ளையாக . இருக்கலாம்!.
இன்று சுவாதி யாரோ! நாளை நமது பிள்ளையாக இருக்கலாம் !
இவற்றுக்குக் காரணமான மனமாசு (MIND POLLUTION ) ஏற்படாமல் தடுக்கப் புகார் செய்வோம்! நடவடிக்கை கோருவோம்!
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 
தேவநேயப் பாவாணர் நூலகம் 
2 – ஆவது தளம் 
அண்ணா சாலை 
சென்னை 600002
பேசி : 044 – 28592750.

Encouraged by US appeasement, SL military strengthens genocidal grip on North

Encouraged by US appeasement, SL military strengthens genocidal grip on North

[TamilNet, Friday, 15 July 2016, 23:51 GMT]
The occupying Sinhala military of genocidal Sri Lanka has put up new fences to consolidate the military-seized lands of Eezham Tamils in Valikaamam North in Jaffna within the last three days while the visiting US State Secretary for South Asia Ms Nisha Biswal was trading off international justice and human rights with ‘security’ and maritime military-to-military cooperation with the unitary ‘Sri Lanka’ during her visit to Colombo this week. The SL military consolidation in the lands seized from Eezham Tamils in Valikaamam North reminds Tamils how Israel fenced off Palestinian territories in the Middle East, commented Tamil rights activists in North. The latest move, accompanied with tricky deceptions, have dashed all hopes for proper resettlement in the villages of uprooted Eezham Tamils, said Subramaniyam Nagendraseelan, the secretary of Valikaamam North Rehabilitation Society.
New military fences in Valikaamam North


The occupying Sinhala military has put up fences along the road infrastructure to keep their prying eyes on resettling Tamils.

The SL military is installing new concrete structures during the last three days.
Vali North
Former ‘High Security Zone’ changed into Sinhala ‘Military Zone’


While keeping the most resourceful fishing village of Mayiliddi under its military corporatism, the occupying SL Navy was attempting deceive the uprooted Tamils from Mayiliddi with a controversial jetty at Keerimalai, Mr Nagendraseelan said.

“Keerimalai is regarded as a holy place for Hindus. Putting up a fishing jetty there is not only a deceptive move, but it also seeks to desecrate the place of worship,” he said.

In the meantime, US Secretary of State for Democracy, Human Rights and Labour Tom Malinowski, who accompanied the visiting US State Secretary for South Asia, was openly advocating economic-development and reconciliation as going hand-in-hand with each other in ‘Sri Lanka’.

But, what Eezham Tamils in the North and East have been witnessing, under the new regime is an accelerating structural-genocide camouflaged as ‘development’, which is working hand-in-hand with Sinhala militarisation and colonisation targeting strategic areas in the occupied country of Eezham Tamils, responded Tamil activists for alternative politics in the island.

Nisha Biswal, who was visiting Jaffna last time, was visiting the strategic port city of Trincomalee in the Eastern Province this week.
New military fences in Valikaamam North
New military fences in Valikaamam North
New military fences in Valikaamam North
New military fences in Valikaamam North
New military fences in Valikaamam North


Chronology:

வெள்ளி, 15 ஜூலை, 2016

நமக்குரிய மொழிக் கொள்கை – சி.இலக்குவனார்தலைப்பு-மொழிக்கொள்கை-சி.இலக்குவனார் : thalaippu_namakkuriya_mozhikolgai_S.Ilakkuvanar

நமக்குரிய மொழிக் கொள்கை

           உரிமைநாட்டில் அந்நாட்டு மொழியே அந்நாட்டு மக்கள் கருத்தை அறிவிக்கும் கருவியாகப் பயன்படும். செருமன் நாட்டையோ ஆங்கில நாட்டையோ எடுத்துக் கொண்டால் அந்நாடுகளில் அந்நாட்டு மொழிகள்தாம் எல்லாவற்றுக்கும் என்பது யாவரும் அறிவர். ஆட்சித்துறை,  அரசியல் துறை, கல்வித்துறை, சமயத்துறை, பண்பாட்டுத்துறை முதலிய யாவற்றுக்கும் அந்நாட்டு மொழி ஒன்றேதான். ஆகவே தேசியமொழி, ஆட்சிமொழி, தொடர்பு மொழி, கல்விமொழி சமயமொழி, எல்லாம் ஒரே மொழிதான். ஆனால் இங்கு நமக்கோ தேசியமொழி, சமயமொழி, எல்லாம் வெவ்வேறாக அமைகின்றன.
            தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி ஆங்கிலமாம், சமயமொழி ஆரியமாம், பாட்டுமொழி தெலுங்காம், வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும். முழு உரிமை பெற்ற நாளாகும். தமிழர்க்குத் தேசிய மொழியும், கல்வி மொழியும், தொடர்பு மொழியும், பாட்டு மொழியும் தமிழாகவே இருத்தல் வேண்டும். இவ்வாறு கூறுவதனால் வேற்று மொழிகளைத்  தமிழர் கற்கக்கூடாது என்று கூறுவதாகக் கருதிட வேண்டா. வாய்ப்பும் வசதியும் தேவையும் இருந்தால் எத்துணை மொழிகள் வேண்டுமானாலும் ஒருவர் கற்கலாம். அதற்கேற்ப வசதிகளைச் செய்து தரவேண்டியது அரசின் பொறுப்பாகும். ஆனால் வேண்டாதார் மீது அவர் விரும்பாத வகையில் வேற்றுமொழிகளைக் கற்கவும் தம் மொழியை மறக்கவும் கூடிய திட்டத்தைச் சுமத்துதல் கூடாது. தமிழர்க்கு எல்லாம் தமிழ்தான் என்று கூறுவது ஒற்றுமைக்குக் கேடு பயக்கும் என்று சிலர் கருதலாம். அது தவறு. அவரவர்க்குரிய மொழியை அவரவர் போற்றுவதனால் ஒருநாளும் ஒற்றுமை கெடாது. ஒற்றுமையை உண்டு பண்ணுவதும் கெடுப்பதும் மொழியே என்பது முற்றிலும் பொருந்தாது. உள்ளப் பண்பால்தான் ஒற்றுமை ஏற்படும். ஆகவே ஒரு மொழிக் கொள்கையால்தான் ஒற்றுமை உண்டாகும் என்ற தவறான கொள்கையை விடுத்தலே நன்று.
 பாரதக் கூட்டரசில் பல மொழி பேசும் நாடுகள் கூடியுள்ளன. கூட்டரசின் ஒற்றுமை வலிமையுற ஒரு பகுதிக்குரிய மொழிதான் ஆட்சிமொழியாக, தொடர்புமொழியாக இருக்க வேண்டுமென்று கூறுவது கூட்டரசுக் கொள்கைக்கே ஊறுபயப்பதாகும். ஒற்றைத் தனியரசை விரும்புவோர்தாம் ஒரு மொழிக் கொள்கையை வலியுறுத்துவர். பல நாடுகளின் கூட்டமைப்பில் எங்ஙனம் ஒரு பகுதியின் மொழியை மட்டும் ஏற்றுக் கொள்ள இயலும். ஆதலின் நம் பாரதக் கூட்டரசு என்றும் கூட்டரசாக வலிமை பெற்ற அரசாக கூட்டமைப்பில் சேர்ந்துள்ள பகுதிகளின் தேசிய மொழிகட்கு இடம் கொடுக்க வேண்டும். பாரதக் கூட்டரசு அமைப்பில் தமிழுக்கும் சமநிலை அளித்தல் வேண்டும். கூட்டரசின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக – கூட்டரசுத் தேர்வு மொழிகளுள் ஒன்றாகத் தமிழும் அமைந்தால்தான், தமிழர்க்கும் தமிழ்நாட்டுக்கும் உலக அரங்கிலும் மதிப்பு ஏற்படும். கூட்டமைப்பிலும் சரிசமமாகப் பழக இயலும். இன்றேல் பின்நிலையில் இரண்டாம் நிலைக் குடிமகனாகவே வாழ வேண்டிய நிலை தானே உறுதியாகிவிடும். ஆகவே மொழிக் கொள்கையை வகுப்பவர்கள் தமிழுக்கும் ஏனைய மாநில மொழிகட்கும்  உரிய பங்கை   உரிமையைத் தரும் வகையில் திட்டம் தீட்ட அன்போடு வேண்டுகின்றோம்.
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தீக்கதிர் : ilakkuvanar,theekkathir
செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
குறள்நெறி : சித்திரை 3, 1996: 15.04.1965
kuralneri02