refugees camps லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
refugees camps லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜனவரி, 2011

EEzha refugees camps: ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும் – யுவபாரதி

ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும் – யுவபாரதி

mugaam_thalaiyuthu
ஒரு பெரிய குடோன். அதில் சிமிட்டிப் பைகளால் தடுக்கப்பட்ட 80 சதுரடி அளவிலான அறைகள். ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம். தலைக்கு மேல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இது தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் முகாம் குடியிருப்பு.
மாதந்தோறும் குடும்பத் தலைவருக்கு ரூ. 400-ம், அக்குடும்பத்திலுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினருக்கு ரூ. 288-ம், குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ரூ. 180-ம், மற்ற குழந்தைகளுக்கு ரூ. 90-ம் நிதியுதவி. புதிதாய்க் குடியமர்த்தப்படும் குடும்பத்திற்கு சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கென ரூ. 250 உதவித் தொகை. ஈமச் சடங்குகளுக்கெனில் ரூ. 500.
முகாமை விட்டு வெளியே சென்று வர இருவர் பிணை அவசியம். 12-ஆம் வகுப்பு வரை படிக்கலாம் எனினும் பெரும்பாலும் குடும்பச் சூழல் காரணமாகவும் வெளியூர் சென்று வேலை தேட அனுமதியில்லை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வெளியே சென்று வர அனுமதி) என்பதாலும் இடையிலேயே படிப்பு முறிகிறது. படித்தாலும் கூலி வேலையை விட்டால் வேறு வழியில்லை. இந்நிலையிலும் முகாமைச் சேர்ந்தவர்களில் சற்றே பொருளீட்டியவர்கள் / பொருளியல் வசதி உள்ளவர்கள் கூட ஒரு சிறு துண்டு நிலம் கூட வாங்க முடியாது. ஒரு இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வாங்கக் கூடச் சட்டம் அனுமதிப்பதில்லை. இதுவே தமிழகத்தின் 25 மாவட்டங்களில் செயல்படுகிற 113 அரசு முகாம்களில் தங்கியுள்ள சுமார் 75,000 ஈழத் தமிழ் அகதிகளின் நிலைமை.
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3 இந்தியாவில் பிறக்கும் குழந்தை இந்தியக் குடிமகனாகக் கருதப்பட வேண்டும் என்றது. 1986-இல் இதில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும் என்கிறது. ஈழத் தமிழர் விடயத்தில் அதுவும் கூடச் சரிவரப் பின்பற்றப்படவில்லை என்பதே நிதரிசனம். 1983 கருப்பு ஜூலை இனப்படுகொலைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்து/பிழைக்க வேண்டித் தாய்த் தமிழகத்தில் கரையேறிய ஈழத் தமிழ் அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை கேள்விக்குள்ளானது. குடியுரிமையற்ற நிலையில் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கடவுச் சீட்டு பெற இயலாது என்பது மட்டுமின்றி, உலக நாடுகள் அங்கீகரித்துள்ள அகதிக்குரிய கடவுச் சீட்டும் கூட தமிழகத்தில் உள்ள இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இதே இந்தியத் துணைக் கண்டத்தில் ஈழத் தமிழர்கள் தவிர்த்து இதர அகதிகளும் இதே முறையில்தான் நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை.
ஃ ஈழத்தவர்களை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருப்பது திபெத் அகதிகள். ஐ.நா.வின் அகதிகள் உயர் ஆணையத்தின் 2008 கணக்கீட்டின்படி, அவர்களது எண்ணிக்கை 1.10 இலட்சம். (அக்கணக்கீட்டின்படி முகாம்களிலும் வெளியிலும் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் 1.02 இலட்சம்.) திபெத் அகதிகளுக்கு அவர்களது மறுவாழ்விற்கென சொந்த நிலம் வழங்கப்படுகிறது. இந்திய நடுவண் அரசால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் அவர்கள் ஏறத்தாழ இந்தியக் குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள். சமீபத்தில் சீனப் பிரதமர் புதுதில்லிக்கு வந்திருந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்.
ஃ 50,000 எண்ணிக்கையிலான நேபாள அகதிகளுக்கும் பிற தடைகள் இல்லை.
ஃ ஆப்கன் அகதிகள் 32,000 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் இங்கேயே தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் தம் விருப்பத் தேர்வின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஃ இந்தியாவில் இருக்கும் 35,000 வங்கதேச அகதிகளில் சிலர் மேற்கு வங்கத்திலும் ஒரிசாவிலும் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூட இருக்கின்றனர்.
அகதிகளை அணுகும் முறையிலும் இந்திய நடுவண் அரசின் இப் பாரபட்சத்தை என்னென்பது?
உலகின் பல நாடுகள் அகதிகளுக்கு தொழில் – வர்த்தக உரிமைகளை வழங்கியுள்ளன. ஆஸ்திரேலியா அகதிகளுக்கான நிதியுதவியாக மாதந்தோறும் ரூ. 40,000 வழங்குகிறது. நிரந்தரக் குடியிருப்பிற்கெனத் தொகுப்பு வீடு வழங்குகிறது. குழந்தைகளின் உயர்கல்விக்கு வசதி செய்து தருகிறது. ஐந்து ஆண்டுகள் அகதிகள் முகாமிலிருந்து நன்னடத்தைச் சான்று பெற்றவர்களுக்குப் பணி அனுமதி (Work Permit) அளித்து அவர்கள் பல்வேறு பணிவாய்ப்புகளைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது. இத்தகைய பணிவாய்ப்புகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி கனடாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் மறு அகதிகளாகச் செல்ல – உயிரைப் பணயம் வைத்து மீன்பிடிப் படகுகளிலும் பயணிக்கத் – துணிகின்றனர். கடற்படையிடம் சிக்கி மேலும் அவதியுறுகின்றனர். அகதிகள் தொடர்பான ஐ.நா.வின் 1951, 1967 ஒப்பந்தங்களில் இந்தியா இன்னமும் கையொப்பமிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம் காவல்துறை இவ்வகதிகளை அணுகும் முறையும் கொடுமையானது. அகதிகள் முகாம்களை அடுத்துள்ள கிராம/நகரக் குடியிருப்புகளில் நிகழும் திருட்டு நிகழ்வுகளுக்கு அகதிகள் முகாமில் உள்ளவர்களைப் பொறுப்பாளியாக்குவதும், அதற்கெனத் தண்டிக்கப்படுவதும் நடக்கிறது. சமயங்களில் பீடி, பெயிண்ட், விளக்கு போன்ற பொருள்களை எடுத்துச் செல்பவர்களும் கூட விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்றனர். செங்கல்பட்டு, பூவிருந்தவல்லியில் உள்ள – சுற்றிலும் மின்வேலியாலும் துவக்கு தரித்த காவலர்களாலும் சூழப்பட்ட – சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிக்கின்றனர்.
வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெற அரசியல் கட்சித் தலைவர்களை அணுகுவதும் பயனளிப்பதில்லை. 1997-இல் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தாம் ஆட்சிக்கு வந்ததும் ஈழத் தமிழ் அகதிகளின் பயன்பாட்டிற்குத் தரிசு நிலங்களைத் தருவதாக உறுதியளித்தார். 2001-இல் ஆட்சிக்கு வந்ததும் மறந்து போனார்.
2008 ஜூலையில் சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், அகதிகள் சட்டவிரோத ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குவதாகவும் அதனால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவதாகவும் கவலை தெரிவித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு காஞ்சியில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் அகதிகளுக்கான குடியுரிமைப் பிரச்சினை குறித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதாகவும் தெரிவித்தார்.
குடியுரிமை வழங்குவதைப் பொருத்த மட்டில் நடுவண் அரசால் மட்டுமே செய்யப்படக் கூடியது. ஆனால் வீடு, உயர்கல்வி, சுதந்திரமாக நடமாடவும் தொழில் – வர்த்தகத்திற்கானதும் சொத்து வாங்குவதற்குமான உரிமைகள் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவையே.
பட்டா நிலம் கூட வேண்டாம், சொந்த நாடு செல்லும் வரை மானத்தோடு உழைத்துப் பிழைக்க மட்டும் நிலம் தந்தாலும் போதும் என்பதே ஈழத் தமிழ் அகதிகளின் நீண்ட நாள் கோரிக்கை.
அரசாங்கம் இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு,
ஃ குடியிருக்க ஏற்ற வகையில் எல்லா அடிப்படை வசதிகளும் உள்ள தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்.
ஃ இதர குடிமக்களைப் போலச் சுதந்திரமாக நடமாடுவதற்கும் தத்தம் வாழ்வாதாரத்திற்கெனப் பணிவாய்ப்புகளைப் பெறுவதற்குமான உரிமை வழங்க வேண்டும்.
ஃ இந்தியாவில் பிறக்கும் அவர்களது குழந்தைகளுக்கு – முன்பு போல் – இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
ஃ உழவுத் தொழிலில் ஈடுபட நிலம் வழங்க வேண்டும்.
ஃ மீன்பிடித் தொழிலில் இருந்தோர்க்கு அதைச் செய்ய ஏற்ற வகையில் உரிய சாதனங்கள் மற்றும் இருப்பிட வசதிகள் வழங்க வேண்டும்.
ஃ இவர்களது குழந்தைகள் பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி பெற வழிவகை செய்வதுடன், அதற்கென உதவித் தொகை வழங்க வேண்டும்.
ஃ சொத்துரிமை வழங்க வேண்டும்.
ஃ தொடர்ச்சியாக 7 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வோர்க்கு – அவர்களது விருப்பத் தேர்வின் அடிப்படையில் – இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
ஈழத்து முள்வேலியில் வதைப்படும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இம்மண்ணில் – திறந்த வெளிச் சிறைகளாக உள்ள – அகதி முகாம்களில் துயருறும் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியமான வாழ்விற்காகவும் அரசை வலியுறுத்த வேண்டியது ஈழ ஆதரவு அமைப்பினர் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்பினருக்கு மட்டுமின்றி இங்குள்ள தமிழர் ஒவ்வொருவருக்குமுள்ள கடமை.
- யுவபாரதி

திங்கள், 12 ஏப்ரல், 2010

இலங்கை முகாம்களில் தவிக்கும் 80,500 தமிழர்கள்



கொழும்பு, ஏப். 11: இலங்கையில் பல்வேறு முகாம்களில் இருக்கும் 80,500 தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.இலங்கையில் நடைபெற்ற போரின் போது இடம்பெயர்ந்த தமிழர்கள், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு முகாம்களில் இருந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்தும் பணியில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதன்படி 1 லட்சத்து 93 ஆயிரத்து 607 தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் வவுனியாவின் செட்டிக்குளத்திலுள்ள பல்வேறு முகாம்களில் இன்னமும் 80,500 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கள் சொந்த தேவைகளுக்கும், உறவினர்களை சந்திப்பதற்கும் கூட ராணுவத்தினரின் ஒப்புதலை அவர்கள் பெறவேண்டியுள்ளது.
கருத்துக்கள்

சொந்தஊர்களுக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையும் இந்தியாவும் பரப்புரை மேற்கொணடாலும் அவர்களின் சொந்த வீடுகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாலும் முகாம்களில்தான் அடைக்கப்பட்டுள்ள்னர். அஃதாவது முகாம்களை மாற்றியுள்ளனர். அவ்வளவுதான். இதனையே தமிழர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டதாகக் கதை அளந்து வருகின்றனர். உலக அமைப்புகள் எனப் பலவற்றை வைத்துக் கொண்டு மனித நேயத்தை மடியச் செய்வது உலகிற்கே அழிவு என்பதை அனைத்து நாடுகளும் உணர வேண்டும். கடும் போராட்டங்களின் மூலம் விடுதலை பெற்ற வியத்துநாம் போன்ற நாடுகள் கூட அரசியல் காரணங்களுக்காக மண்ணின் மைந்தர்களின் விடுதலை வேட்கைக்கு எதிராகச் செயல்படும் போக்கு மேலோங்கியுள்ள போது ஈழத் தமிழினத்தைக் காப்பாற்றுவதற்கு நடுநிலை என்றும் அணிசேராமை என்றும் பேசி வரும் நாமாவது முன்வரவேண்டாமா? இதற்கு இந்தியா ஒத்துழைப்பு தருவதால்தானே காட்டுமிராண்டி ஆட்சியில் அமைதி திருமபிவிடடதாகக் கூறித் தாயகத்திலிருந்து ஏதிலிகளாகத் திருமபி வருவோரை வரவேற்காமல் விரட்டியடிக்கின்றன ஆசுதிரேலியா முதலிய நாடுகள்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

இதுவரை 2.1 லட்சம் தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர்



கொழும்பு, ​பிப்.8: இலங்கையின் வடக்குப் பகுதியில் இதுவரை 2.1 லட்சம் தமிழ் மக்கள் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.​ வடக்குப் பகுதியில் தமிழ் மக்களை மறுகுடியமர்த்தும் பணி விரைவாக நடந்து வருகிறது.​ முகாம்களில் இன்னும் 70 ஆயிரம் பேர் உள்ளனர்.​ அவர்களும் அவர்களது சொந்த ஊர்களிலேயே விரைவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை வடக்குப் பகுதியின் மேம்பாட்டுத் திட்டத்துக்கான முதன்மை ஆலோசகர் சந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.​ புலிகளைத் தோற்கடித்தப் பின்னர் வடக்குப் பகுதியில் அமைதி திரும்பியுள்ளது.​ அன்றாட நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.​ இப்பகுதியில வளர்ச்சிப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று நினைத்து,​​ அதற்கான நடவடிக்கையையும் அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.​ ஆனால்,​​ இதற்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றன என்றும் சந்திர பெர்ணான்டோ குற்றம்சாட்டினார்.​ 2010,​ ஜனவரி 31-ம் தேதிக்குள் முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களிலேயே குடியமர்த்தப்படுவர் என்று முன்னதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது.​ ஆனால்,​​ வடக்குப் பகுதியில் கண்ணிவெடி மீட்புப் பணி இன்னும் சில பகுதிகளில் முடிவடையவில்லை.​ இதனால் உறுதி அளித்ததற்கேற்ப தமிழர்களை குடியமர்த்த முடியவில்லை.​ எனினும் அவர்களை விரைவில் ​குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்று சமீபத்தில் கூறியது.
கருத்துக்கள்

வாய்க்கு வந்த பொய்க் கணக்கைத் தெரிவிப்பது மட்டுமல்ல, ஒரு கொத்தடிமை முகாமிலிருந்து வேறொரு முகாமிற்கு மாற்றுவதையும் மறு குடியமர்த்தமாகக் கூறுகிறார்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் பொழுது இவர்கள் காப்பாற்றப்பட இந்த முகாம்கள் உதவுமோ? இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
dinamalar: 0 ஆயிரம் இலங்கை தமிழர் குடியமர்த்தல் எப்போது? அரசு நடவடிக்கை பற்றி இலங்கை விளக்கம்

Front page news and headlines today

சனி, 6 பிப்ரவரி, 2010

அநாதை அகதி நாய் பயலுகளா : இந்தியப் பொலிசார் வார்த்தைகள்

05 February, 2010 by admin

நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும், என்று கூறி தமிழ் நாட்டுப் பொலிசார் செங்கல்பட்டு சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தழிர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேரில் கண்டவர் ஒருவர் அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்துள்ளார். கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தின் கருவறுக்கத் துணிந்துவிட்டனர். தமிழகப் பொலிசார் பேசிய விதம் பின்வருமாறு:

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை??? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத் தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது பேசியவார்த்தைகள்.

வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது, ஒவ்வொரு தமிழனும் வெட்க்கி தலைகுனியவேண்டிய ஒன்று.

ஒரு உணர்ச்சி மிக்க இந்தியன் புலம்பல்:

இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், உங்கள் குற்றங்களை எங்கள் தேசிய மலக்கிடங்கில் மறைத்து சிதம்பரம் ஐயாவின் வேட்டியைப் போட்டு மறைத்து விடுவோம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது, இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.

அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.

நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் அல்லக்கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப் பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க????

இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உரிமையுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு??

யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி

பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது

பயன் தரும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல லட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.


செய்வார்களா புலம் பெயர் உறவுகள்??

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தமிழக அரசு உடனடியாக ஈழ ஏதிலிகளை விடுதலை செய்ய வேண்டும்: சீமான் கண்டனம்

பதிந்தவர்_யாழினி on February 3, 2010
பிரிவு: பிரதானச்செய்திகள்
[ஆடியோ] செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர், இதை அடுத்து தமிழக அரசு உடனடியாக ஈழ ஏதிலிகளை விடுதலை செய்ய வேண்டும், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் 60 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் புதன்கிழமை தம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கியூ பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டவர்களாகும்.

இவர்கள் கடந்த புதன்கிழமையுடன் 20 ஆவது தடவையாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த முறை காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் தெரிவித்து அதன் படி நேற்று உண்ணாவிரதமும் துவக்கினர். செங்கல்பட்டு ஏதிலிமுகாம்களில் உள்ளோர் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் காவல்துறை எந்தவொரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. அத்துடன், வழக்குகளை கொண்டு செல்வதற்கும் அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

பெரும்பாலோனோர் முகாமில் 5 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றார்கள், சிலரின் வழக்குகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், திறந்த முகாமில் இருக்கும் அவர்களின் உறவினர்களிடம் இணைந்துகொள்வதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு போகக்கூட அனுமதிக்கப்படவில்லை இலங்கையில் தமிழர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று, செங்கல்பட்டு முகாமிலும் கொடுமை நடைபெறுகின்றது, முகாம்களில் இருப்பவர்களில் அநேகமானோர் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். சிங்கள ஏகாதிபத்தியத்தின் முள்வேலி முகாம்களை விட அதீத கட்டுப்பாட்டுடன் இங்கு எம் சக தமிழன் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்வது இங்குள்ள தமிழன் ஒவ்வோருவருக்கும் பெருத்த அவமானம் ஆகும். தமிழன் உலகின் எல்லா மூலைகளிலும் அடிபட்டான், கடைசியாய் ஆறறைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழர் தேசத்திலும் இந்த அவலம்.

இந்த நிலையில் தமிழக அரசு தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்னும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலை இருந்த எம் ரத்த உறவுகள் மீது காவல்துறை மிருகத்தனமாகத் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.தமிழக அரசு உடனடியாக எம் அனைத்து தமிழ்ச்சொந்தங்களையும் விடுதலை செய்ய வேண்டுமாயும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமாயும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

(Visited 118 times, 118 visits today)


Read more: http://meenakam.com/?p=5127#ixzz0eVuwXMAe

செங்கல்பட்டு ஏதிலிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்கு பழ.நெடுமாறன் கண்டனம்

பதிந்தவர்_கனி on February 3, 2010
பிரிவு: செய்திகள்

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் ஏதிலிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த ஏதிலிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நடைப்பெற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக ஏதிலிகள் அனைவருமே படுகாயமடைந்துள்ளனர். மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 ஏதிலிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. ஏதிலிகளுக்குச் சொந்தமான துணிகள் மற்றும் பொருட்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவும் தரப்படவில்லை..

தமிழ்நாட்டில் உள்ள ஏதிலிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துக்கொடுக்கப்போவதாக பசப்பிவரும் முதலமைச்சர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாநிலை இருந்த ஏதிலிகள் மீது நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.

படுகாயமடைந்த அனைத்து ஏதிலிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 15 times, 15 visits today)


செங்கல்பட்டு ஈழ ஏதிலிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

பதிந்தவர்_கனி on February 3, 2010
பிரிவு: முதன்மைச்செய்திகள்

[4ஆம் இணைப்பு காணொளி] செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆடியோ கேட்க இங்கே அழுத்தவும்

நன்றி: தமிழன் கலைக்கூடம்

செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தபடாத காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

கடவுச்சீட்டு வழக்கு மற்றும் ஏனைய வழக்குகளில் அங்கு மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வேறு முகாம்களிற்கு மாற்றக்கோரியே இந்த உண்ணாநிலைப் போராட்டதை நடத்தினார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.

காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்த நேரத்தில் செங்கல்பட்டு ஈழ ஏதிலிகளின் உண்ணாநிலை அதற்கு இடையூறாக இருந்துவிடும் எனக்கருதிய தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மீனகம் இணையம் அறிகிறது.

காவற்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :

செல்வக்குமார்
ஜெயமோகன்
பத்மநாபன்
தம்பிதுரை
பிரபாகரன்
பிரதீபன்
அமலன்
ரமணன்
சிறீதரன்
அருண்
தாசன்
சேகர்
நவீன்
முத்து

ஏதிலிகளின் உண்ணாநிலையால் தமக்கு நெருக்கடி ஏற்படப்போவதை உணர்ந்த தமிழகரசு எஸ்பி.பிரேம் ஆனந்த் சின்கா ,எ.எஸ்.பி சேவியர் தன்ராஜ் ,இன்ஸ்பெக்டர் ஆல்பட் வில்சன், எஸ்.ஐ ராஜேந்திரபிரசாந்த் இவர்கள் தலைமையில்

சுமார் 150 காவற்துறையினர் மற்றும் 25 கியூபிரான்ச் காவற்துறை இரவு 9 மணி முதல் 2 மணி வரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதலில் அமலன் என்பவரது இடது கை ஒடிந்து விட்டது. மற்றும் ரமணன், பத்மராஜா,ஜெயமோகன், பகிரதன், பிரதிபன், அருண், கிரிதாஸ், பரமேஸ்வரன், அமலன், கிருஷ்னநீதன், கங்காதரன், பிரதிதாசன், ருக்சன்,

சேகர், செல்வகுமார், இவர்கள் 15 பேரை தனியாக ஒரு வாகனத்தில் அடைத்து இரவு 3 மணிக்கு செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கமால் ஓபி சீட்டை மட்டும் வாங்கி கொண்டு அங்கு இருந்து அவர்களை சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்று உள்ளார்கள்.

வேறு என்ன காரணத்திற்காகவோ தெரியாமல் அவர்களை வேலூர் சிறைக்கு அழைத்து சென்று உள்ளனர்

அவர்கள் செல்லும் வழியிலும் உணவு, தண்ணீர், மலம் ,கழிக்க கூட விடாமல் அடித்து கொண்டே தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் அழைத்து கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு விபரம்

கிரைம் எண்: 58/2007 D1 டவுன் காவல் நிலையம் ,செங்கல்பட்டு

வழக்கு பிரிவுகள்:

147 கலகம் விளைவித்தல்

148, அபாயகரமான ஆயுதத்தை தாங்கி கலகம் விளை வித்தல்

324, அபாயகரமான ஆயுதங்கள் அல்லது பொருட்கள் மூலம்தம்மிச்சையாக காயம் விளைவித்தல்

294, ஆபாச செயல்களும் பாடல்களும்

506, மிரட்டுதல்

332, பொது ஊழியரை அவரதுகடமையிலிருந்து தடுத்தல்

307, கொலை முயற்சி

1. இந்த பொய்வழக்குகளை போட்டுள்ளனர் சிறையில் இருக்கும் ஒருவர் இதனை செய்யமுடியுமா?

2. சிறையில் எப்படி அபாயகரமான ஆயுதங்கள் வரும்?

3. 2 பேருக்கு ஒரு அறை யில் எப்படி கலகம் செய்யமுடியும்

4. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 96ன் படி தற்காப்புக்காக செய்யப்படும் போது செய்யப்படும் எதுவும் குற்றம் இல்லை

5. சிறை கம்பிக்குள் இருக்கும் ஒரு சிறை கைதி எப்படி பொது ஊழியரை கடைமையை தடுக்க முடியும்

இதனை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி நாளை உயர்நீதி மன்றத்தில் RIT PETTISHON போட உள்ளார்.

பத்திரிகை ஆசிரியர் அய்யநாதன் தலைமையில் செங்கல் பட்டு தாக்குதலைக் கண்டித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

(Visited 498 times, 489 visits today)
செங்கல்பட்டில் ஈழ அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

03 February, 2010 by admin

செங்கல் பட்டு ஈழத் தமிழர்கள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல்பட்டு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தப்படாமை காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

கடவுச்சீட்டு வழக்கு மற்றும் ஏனைய வழக்குகளில் அங்கு மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வேறு முகாம்களிற்கு மாற்றக் கோரியே இந்த உண்ணாநிலைப் போராட்டதை நடத்தினார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.

காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்த நேரத்தில் செங்கல்பட்டு ஈழ ஏதிலிகளின் உண்ணாநிலை அதற்கு இடையூறாக இருந்துவிடும் எனக்கருதிய தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 5517







Posted By : Ilakkuvanar Thiruvalluvan [website] on 03 February, 2010
Comments : புலம் பெயர்ந்த திபேத்தியர்கள் கல்வி வாய்ப்புடனும் தொழில் வாய்ப்புடனும் சிறப்பாக வாழ முடிகிறது. புலம் பெயர்ந்த வங்காள தேசத்தவரை அயல் நாட்டுப் பார்வையில் இல்லாமல் வங்காள இனப் பார்வையில் மேற்கு வங்காளத்தில் உதவ முடிகிறது. வட நாட்டான் உகாண்டாவி்ல் இருந்து விரட்டப்பட்டால் கோடிகோடிய­ாய்ப்பணம்­ கொட்ட முடிகிறது. இலங்கையில் இருந்து ஆரியன் வந்திருந்தால் காங்கிரசு கொள்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும். இத்தகு சூழலில் முகாமகளில் வைத்திருப்பதே கடும் தண்டனை என்பதையும் மறந்து அவர்களைக் காவல துறையினர் மூலம் துன்புறுத்துவது முறைதானா?அறம் தானா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Posted By : sritharan on 03 February, 2010
Comments : கருத்து இல்லை.நக்கீரன் தனது வேலையை நன்றாகவே செய்துள்ளா�­�்,தமிழர்களே­ எச்சரிக்கையாக இருக்கவும்.

Posted By : *lli on 03 February, 2010
Comments : f***in slumdog ind***, we r on the way to f***k u

Posted By : Joker on 03 February, 2010
Comments : Kanthan anna, inuma thop*l kodinu sollidu irukeengal??? ithoo kaadurangal thop*l kodi eppidinu. thiruntha parungada. Chinese karana nampinalum Indiana nampathee, paramavirothy Indian thaan. Ivangala poidu thop*lkodi uravunu sollidu, Cinema Paithiyangal. kaaaa thuuuu

Posted By : Thamil on 03 February, 2010
Comments : This is a political action by the Tamil Nadu govt. (Karunanithi & Congress) - All the blame should go to them & not to the general *blic of Tamil Nadu.

Posted By : hin ( Mumbai) on 03 February, 2010
Comments : Do not wrongly conclude and drop words. It can heart entire tamilnadu people. May be find out more details on exactly what happened.

Posted By : kanthan (paris) on 03 February, 2010
Comments : உயிர் காக்க தானே நீ தமிழகம் சென்றாய்
உன் உறவு என்ன தமிழகம் -தொப்பிள்கொடி
உன் மீது ஏன்டா வன்முறை -நாம்
ஈழத் தமிழன் என்றா? என் அண்ணன்
பிரபாகரன் இருந்தால் தொடுவான
யாரும் நம்மீது! நாங்களே இப்பொது
அனாதைகள் அப்ப அடிப்பான் தான்
சிங்களனும் +இந்தியனும் வாங்கத்தான்
வேணும் அண்ணன் வருமட்டும்
ஈழத்தமிழன்
*காந்தன்*

Posted By : nantha on 03 February, 2010
Comments : வஜித்து பிளைய நம்பினாலும் வடக்கத்தயனை நம்ப கூடாது எண்டத்த நாம் மறந்து விட்டதால வந்த வினை ?

Posted By : vetri on 03 February, 2010
Comments : that's good.

Posted By : maran madurai on 03 February, 2010
Comments : ilakainadil tamil alijakudathu enpathatkakave thanujirai thijakam thethu poradinargal poradukirarkal anna nankal 6kodi
tamil pesiranankal innamum
nadikarkalin katadavuduku palvakirathu ,tamilane ilatha oruvan nama idathila surudikondu porathuku vaikilija pesinal kaithadirathum. ilayarkale eniyavathu nankal seitha thavarukalai innamum seiyamal muluthamilanum tamilanuku onru enral vidakudathu.

Posted By : vidiyal on 03 February, 2010
Comments : thamizhan sithravadhai seyyappadum idangal, ondru ilangai, irandu india (tamilnadu)

Posted By : Guest on 03 February, 2010
Comments : kayavan karunanithi yenpathu velipattukkonde irukkirathu..

திங்கள், 30 நவம்பர், 2009

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம் நிர்வாக குழுவினர் ராஜிநாமா



கும்மிடிப்பூண்டி, நவ. 29: கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகக் குழுவினர், தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, இலங்கை தமிழர் மறு வாழ்வுத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இம் முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலிக்கொடி ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முகாமைச் சேர்ந்த சிவக்குமார், நிஷாந்தன், செல்வகுமார் ஆகியோரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு நடத்திய வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முகாம் நிர்வாகக் குழு தலைவர் கணேசமூர்த்தி, செயலாளர் ஜெகதீஸ்வரன், பொருளாளர் நாகராசா உள்பட நிர்வாகக் குழுவினர் ஒட்டு மொத்தமாக பதவி விலகியுள்ளனர். ராஜிநாமா கடித நகல்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், ஈழ தமிழர் ஏதிலியர் மறுவாழ்வு கழகம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு, கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளனர். “கைது செய்யப்பட்ட மூவரும் இப் பிரச்னையில் தொடர்பில்லாத அப்பாவிகள் என்று நிர்வாக குழுவினர் எவ்வளவோ கூறியும் அவர்களை சாதாரண விசாரணை என்று அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். வெறும் காட்சிப் பொருளாய் பதவியில் நீடிக்க விருப்பமில்லாமலும், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கி பொறுப்புகளில் இருந்து அனைவரும் விலகுவதாக’ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்கள்

தன்மானத் தமிழர்களுக்குப் பாராட்டுகள். உணர்வுகளுக்கு வடிகால் அமைத்து விட்டால் எச்சிக்கலும் எழாது என்பதை உணர்ந்து அரச வன்முறையில் காவல்துறை இறங்காமல் இரு்க்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 23 நவம்பர், 2009

நம்பிக்கை பொய்த்துவிடலாகாது!



வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது பல நூற்றாண்டுகால நம்பிக்கை. ஆனால் சுமார் 26 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலையை எண்ணிப் பார்த்தால், அது பொய்த்துப் போய்விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.போரால் வாழ்விடம் இழந்து தாய்த் தமிழகத்தை நாடி வந்த ஈழத் தமிழர்கள், 26 மாவட்டங்களில் உள்ள 115 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர் வசித்து வருகின்றனர். முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேரும் காவல்துறையிடம் பதிவு பெற்ற சுமார் 1 லட்சம் பேரும் தமிழகமெங்கும் வாடகைக் குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். இலங்கையில் இன்றுள்ள இதே அரசியல் சூழ்நிலை தொடருமானால் இவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்பே இல்லை.இவர்களின் அடிப்படை வசதிக்காக தமிழக அரசு ரூ. 12 கோடி ஒதுக்கியிருப்பது ஆறுதல் தரும் விஷயம். தற்போது முகாம்களில் அவர்களுக்குப் போதிய வசதிகள் இல்லை. எனவே இவர்களுக்கு அரசு நிலங்களில் (சமத்துவபுரங்கள் போல) குடியிருப்புகள் அமைத்துக் குடியமர்த்த வேண்டும். இதற்கு ஐ.நா. அகதி ஆணையரிடம் கேட்டாலோ, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் கேட்டாலோ நிச்சயமாக நிதி உதவி கிடைக்கும்.மேலும் அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரையும் ஆறு மாதங்களுக்கு மேல் முகாம்களில் தங்க வைக்காமல் இத்தகைய புதிய குடியிருப்புகளுக்கு மாற்ற வேண்டும்.குடியிருப்புகளுக்குப் போன பின்பு அடுத்த ஓராண்டு காலத்துக்கு, அரசு இப்போது வழங்கி வரும் மானியத் தொகையை (குடும்பத் தலைவருக்கு ரூ. 400 மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்க வேண்டும்.இங்குள்ள ஈழத் தமிழர்கள் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. ஆனால், பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. எனவே முகாம் பதிவு அட்டைகளைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் அனைத்துலகப் பயண இலங்கை கடவுச்சீட்டை (நழ்ண்ப்ஹய்ந்ஹய் டஹள்ள்ல்ர்ழ்ற் ஸ்ஹப்ண்க் ச்ர்ழ் 10 ஹ்ங்ஹழ்ள் ச்ர்ழ் ஹப்ப் ஸ்ரீர்ன்ய்ற்ழ்ண்ங்ள்) சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் மூலம் வழங்க மத்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.காவல்துறைப் பதிவு முறையில் மாற்றம் கொண்டு வந்து புகைப்படம் ஒட்டிய காவல்துறை பதிவு அட்டையை வழங்க வேண்டும். விண்ணப்பம் தகுதியுடையதாக இருந்தால் ஒருவாரகாலத்துக்குள் பதிவு அட்டை வழங்கப்படவும் வேண்டும்.நிலையான வதிவுரிமை அட்டை உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு பெறும் சுதந்திரம் வேண்டும். இந்த வசதியை ஈழத்தமிழர்கள் தவிர அனைத்து வெளிநாட்டவருக்கும் இந்திய அரசு இப்போது வழங்கியுள்ளது. இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.முதலீட்டு வலிமை கொண்டவர்கள் தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் ஈழத் தமிழர்களுக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும்.மழலையர் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை இருந்த சிறந்த அணுகுமுறையை நீட்டிக்க வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் இந்த அணுகுமுறை வேண்டும்.1983-ல் தொடங்கிய தொழிற்கல்வி அனுமதிக்கான இட ஒதுக்கீடு, நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது. மத்திய அரசின் ஒதுக்கீடாக அமைய வேண்டும் என்பதால் இடஒதுக்கீடு தேங்கியுள்ளது.மத்திய அரசின் வெளியுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Ministery of External Affairs) வெளிநாட்டு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்யுமிடமாகும். அவர்களே வெளிநாடுவாழ் இந்தியருக்கான கல்வி ஒதுக்கீடுகளைச் செய்து வருகின்றனர்.ஈழத் தமிழர்களுக்கு மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என்ற இடஒதுக்கீடு 2010-ம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமாறு இப்போதே முயல வேண்டும்.உயிர் அச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளி மாற்றம், கல்விச் சான்றிதழ்களுடன் பயணிக்க முடியாது. அவர்களிடம் இதனைக் கேட்பது மனிதநேயமும் அல்ல. உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கொண்டு கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம். இதற்கான அரசாணை தேவை.ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதி போன்று) தமிழக அரசு தொடங்கி, அரசு நிதி ஒதுக்கியும், புரவலர்களிடம் நிதி திரட்டியும், வசதி குறைந்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்க வேண்டும். பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் பரிசீலிக்க வேண்டும்.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த 31 ஆயிரம் குடும்பங்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவற்றையெல்லாம் பரிசீலித்து நிறைவேற்றும் பட்சத்தில் நம்மை நம்பி வந்தவர்களை வாழவைத்த பெருமை தமிழகத்துக்குக் கிடைக்கும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது பல நூற்றாண்டு கால நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்த்துவிடலாகாது!
கருத்துக்கள்

வ்வாறெல்லாம் பரிவு காட்டுவதாக இருந்தால் 26ஆண்டுகளுக்கு முன்பே காட்டியிருக்க மாட்டார்களா? ஈழத்திலிருந்து குற்றுயிரும் குறையுயிருமாய் வந்தவர்களைத் தடுத்திருப்பார்களா? தமிழர்கள் தமிழரல்லாதவர்களைத்தான் காலில் விழுந்து வரவேற்பார்கள்.தமிழர்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏதோ திடீர் ஞானம் பிறந்தது போல் தற்பொழுது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நீங்களுமா ஏமாறுகிறீர்கள்! இந்தியாவில் உண்மையான சம உரிமையுடன் கூடிய கூட்டரசாட்சி நடைபெறும் பொழுதுதான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும். காங்கிரசு வாழும்வரை தமிழர்கள் வாழ இயலாது. என்றாலும் பல நல்ல திட்டங்களைத் தெரிவித்துள்ளீர்கள். சிலவற்றையாவது செய்ய முதல்வர் முன்வரலாம் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/23/2009 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 13 நவம்பர், 2009

அகதிகளின் மறுவாழ்வுக்கு ரூ. 100 கோடி



சென்னை, நவ. 12: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களின் துயரங்களை உடனடியாக களைய அரசின் சார்பில் ஒட்டுமொத்தமாக ரூ. 100 கோடி நிதி ஒதுக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவுகள் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:""தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலும் உள்ள 5 ஆயிரத்து 982 குடியிருப்புகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும்.முகாம்களில் குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படும். புதிய கழிவறைகள் கட்டப்படும். மேலும், பழைய கழிவறைகள் பழுது பார்க்கப்படும்.புதிய கழிவுநீர்க் கால்வாய்கள் சீரமைத்து, மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்கப்படும். வீடுகளில் உள்ள மின் இணைப்புகளும் பழுது பார்க்கப்படும். இந்தப் பணிகள் ரூ. 37.33 கோடி செலவில் செய்யப்படும்.காப்பீட்டுத் திட்டம் விரிவு... தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் மாதாந்திர பணக் கொடையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.எனவே, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த ரூ. 1 கோடி ஒதுக்கப்படுகிறது.தமிழக மக்களுக்கு வழங்கப்படுவது போல, அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க ரூ. 4.54 கோடி ஒதுக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டம், இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ. 2.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ. 4.1 லட்சம் செலவிடப்படும்.கல்லூரிகளில் பயின்று வரும் முகாம் வாழ் மாணவர்கள் 354 பேருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இதற்காக ரூ. 8 லட்சம் ஒதுக்கப்படும்.முதல் கட்டமாக மொத்தமாக ரூ. 45.40 கோடியில் முகாம்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.மீதமுள்ள ரூ. 54.60 கோடி தொகை இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புதிதாக காங்கிரீட் வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும்.இலவச செயற்கை உடல் உறுப்பு உபகரணங்கள், உதவித் தொகையுடன் கூடிய பள்ளிக் கல்வி, மூன்று சக்கர கையுந்து ஆகியவையும் வழங்கப்படும்.தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நல வாரிய குடும்பங்களில் ஈமச்சடங்குக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ. 2,500, தமிழகத்தில் அகதிகளுக்கும் வழங்கப்படும்.முகாம் வாழ் தமிழர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்ப இயலாத நிலை ஏற்பட்டால் பணக் கொடை வழங்கும் நாளில் அவர்கள் முகாமுக்கு வந்து அதை பெற்றுக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்படும். அரசு வழங்கிய தெளிவுரைகளின் படி, ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதில், இப்போதுள்ள விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது.முகாம் பொறுப்பு வட்டாட்சியரின் பரிந்துரை மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு ஏற்ப திருத்திய தெளிவுரைகள் வழங்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழக அரசு. இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கிய காங்கிரசு இப்பொழுது ஈழத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்கு இந்த நாடகம் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருப்பினும். ஏதோ இத்தனை ஆண்டுகள் கழித்துச் சிறிது கண் திறந்து பார்க்கிறது . எனினும் இலங்கைத் தமிழர்களஅகதிகள் என்று குறிப்பிடாமல் அவர்கள் விரும்பியஇடங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் கல்வி , தொழில் , வேலை வாய்ப்புகளைப் பெறவும் தமிழக அரசு உதவினால்தான்உண்மையான உதவியாக அமையும். அவர்கள் தாயகம் திரும்பும் பொழுது ஏதிலிகளாக இல்லாமல் நன்னிலையில் செல்ல வேண்டும். ஆனால் காங்கிரசிற்கு அடிமையான தமிழக அரசு இதனைச் செய்யாது. தமிழினப் படுகொலையில் கருத்து செலுத்தும் காங்கிரசு இதனைச் செய்ய விடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2009 3:12:00 AM

Karunanidhi, for aiding the attrocities against Tamils, somebody in your family will pay a price. You are too old to live to go through the penalty. Tamils of SL willl rise from ashes to the top of the world. They have rich history behind them, and have necessary talent to come up. They will certainly rise up with the grace of Lord Murugan. The govt of Tamilnadu alloting Rs. 100 crores for the welfare of SL Tamils is a peanut. Lord Murugan is behind them. They are going through the time of testing their patience by the great Lord. Bright future ahead of them awaits them.

By NRITAMIL
11/13/2009 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2009

இன்னல்களுக்கு இடையே இலங்கை அகதிகள்!



சேலம், நவ. 5: சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, நாகியம்பட்டி, அத்திக்காட்டனூர், குருக்கப்பட்டி, பவளத்தானூர், சித்தர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முகாம்களில் 972 குடும்பங்களைச் சேர்ந்த 3,746 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை அமைச்சர்களின் ஆய்வையொட்டி தெரியவந்துள்ளது.இங்கேயும் கம்பி வேலிக்குள்தான்... இலங்கையில் உள்ள முகாம்களில் மட்டும்தான் கம்பி வேலிக்குள் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் என்கின்றனர் அத்திக்காட்டனூர் முகாம் மக்கள். இந்த முகாமில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 116 ஆண்கள், 93 பெண்கள் உள்ளிட்ட 209 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமின் நிலை குறித்து வவுனியாவில் இருந்து 1987-ல் அகதியாக வந்து குடியேறிய ராசு (68), கிளிநொச்சியில் இருந்து வந்த ரமேஷ் (32) ஆகியோர் கூறியது: இந்த முகாமில் உள்ள பெண்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கழிப்பிட வசதியே கிடையாது. 1987-ல் நாங்கள் வந்தபோது கட்டப்பட்ட தாற்காலிக கழிப்பிடங்கள் சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து உபயோகமற்றுப் போயின. அதன் பிறகு அந்த நிலத்தை முகாமிற்கு அருகில் உள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் பெண்களுக்கு மட்டுமாவது கழிப்பிடம் வேண்டும் என்று அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 ஆயிரம் செலுத்தி நாங்களே பெண்களுக்காக கழிப்பிடம் கட்டியுள்ளோம். இந்த முகாமுக்கு மட்டுமல்லாது அருகிலுள்ள பவளத்தானூர், குருக்கப்பட்டி முகாம்களுக்கும் போதுமான மின்சார வசதி கிடையாது. குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதால் மின் விளக்குகள் கூட சரிவர எரிவதில்லை. இதனால் குழந்தைகள் படிக்க முடிவதில்லை. மேலும் இங்கு சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீரை சாலையிலும் அருகிலுள்ள விவசாய நிலத்திலும் வெளியேற்றி வருகிறோம். இதனால் முகாமில் இருப்பவர்களுக்கும் சுற்றுப்புற விவசாயிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.பழுதடைந்த வீடுகள்: மேலும் இங்குள்ள தாற்காலிக வீடுகள் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் ஓடுகள் அனைத்தும் பழுதடைந்தும், சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடும் என்ற நிலையில் உள்ளன. எங்களுக்கு வழங்கப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை கியூ பிரிவு போலீஸôர் பறித்துக் கொண்டுள்ளனர். அவற்றை உடனடியாக திருப்பித் தர வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் குடிநீர், கழிப்பிடம், கான்கிரீட் சாலை, மின்சார வசதி கோரி மனு அளித்தோம். ஆனால் குடிநீருக்கு மட்டும் ஒரு குழாய் அமைத்துக் கொடுத்தனர். அதிலும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றனர். பாதியில் படிப்பு அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மண் வெட்டுவது, கட்டட வேலை போன்ற கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அத்திக்காட்டனூர் முகாமைச் சேர்ந்த கெனட் நிரோமன் (19) பிளஸ்-2 முடித்து சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஸியோதெரபி படிப்பில் சேர்ந்துள்ளார். இவரது தாய் அற்புதமேரி தாயகத்தில் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் தந்தை செபஸ்டினுடன் (60) வசிக்கிறார். செபஸ்டின் கூலி வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு அவரை படிக்க வைத்து வந்த நிலையில், வயது முதிர்ச்சி காரணமாக செபஸ்டின் வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் நிரோமன்.வயிற்றில் புற்று நோய்: இவர்கள் நிலை இப்படி என்றால் இதே முகாமைச் சேர்ந்த சிவரஞ்சனியின் (32) நிலை பரிதாபத்துக்குரியது. இவரது கணவர் சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், விபத்தில் கை ஊனமுற்ற ஜேம்ஸ் (17), 6-ம் வகுப்பு படிக்கும் ஐசக்ராஜ் (12), 4-வது படிக்கும் சிந்துஜா (9) ஆகியோருடன் வசித்து வருகிறார் சிவரஞ்சனி. சித்தாள் வேலைக்குச் சென்று குழந்தைகளை படிக்க வைக்கும் இவரது இரண்டாவது மகன் ஐசக்ராஜூக்கு வயிற்றில் புற்று நோய் இருப்பது கடந்த ஒராண்டுக்கு முன்பு தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.70 ஆயிரம் செலவழித்து இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்துள்ள நிலையில் மேலும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காப்பீட்டுத் திட்டம் கை கொடுக்குமா? ஆனால் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் தன்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது. எனவே தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி என் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்றார் சிவரஞ்சனி. இதே கோரிக்கையை வலியுறுத்திய இதய நோயாளி சுசீலா (38), எங்களது இழிநிலையை பார்வையிட்டதுடன் நின்றுவிடாமல் நல்வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார் ஏக்கத்துடன்.
கருத்துக்கள்

20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களை முள் வேலியி்ல் அடைத்து வைததிருக்கும் ஆளும் /ஆண்ட கட்சிகள் எவ்வாறு ஈழத் தமிழர்கள் நலனில் கருத்து செலுத்துவர்? எல்லாமே நாடகம்தான்! புரிந்து கொண்டால் சரி! தமிழர் நலனுக்குக் குரல் கொடுத்துப் போராடி வாதாடி உரிமைகளைக் காக்க இயலாதவர்கள் ஆள்வதற்கு நேரடியாகக் காங். கொலைகாரர்களே ஆளலாமே! எதற்குத் தனியாக வேறு கட்சி? ஆளும் / ஆண்ட கட்சிகள் காங்.உடன்இணையலாமே! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/6/2009 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 5 நவம்பர், 2009

இலங்கை அகதி முகாம்கள் நிலை 6-ம் தேதிக்குள்
அரசுக்கு அறிக்கை



வாலாஜாபேட்டை, நவ. 3: இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை குறித்து அரசுக்கு வரும் 6-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வாலாஜாபேட்டை அடுத்துள்ள பாலாறு அணைகட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் நிலை குறித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். முகாமில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்ற அவர்கள், முகாமில் உள்ள அகதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இலங்கை அகதிகள் கூறியதாவது: பாலாறு அணைக்கட்டு முகாமில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 1009 பேர் உள்ளோம். அனைவரையும் இந்தியக் குடிமக்களாக அங்கீகரித்து, நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும். 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி மேற்படிப்புக்கு வங்கி மூலமோ, நேரடியாகவோ அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். மேலும், முகாமில் உள்ள வீடுகளின் மேற்கூரை பழுதடைந்து மழைக்காலத்தில் ஒழுகுகிறது. கழிப்பறை வசதிகள் இருந்தும் தண்ணீர் கிடையாது. முகாம் குழந்தைகள் வாலாஜா சென்று படிக்க பள்ளி நேரத்தில் பஸ் வசதி கிடையாது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கை அகதிகள் முகாம் நிலை குறித்து ஆராய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை நேரில் பார்வையிட்டு 6-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி அணைக்கட்டு முகாம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற 5 முகாம்களும் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டு, 6-ம் தேதி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார் அமைச்சர். மாவட்ட வருவாய் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் சிற்றரசு, வட்டாட்சியர்கள் ரேவதி, கிருபானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

ஏதோ நேற்று தான் இலங்கைத் தமிழர்கள் இங்கு வந்தார்கள். இன்று அறிக்கை அளிக்கிறார்கள். நாளையே அவர்கள் வாழ்வில் தென்றல் வீசும் என்றல்ல! இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கி ஒரு தலைமுறை கடந்து விட்டது. இனி ஈழத் தமிழர்களையும் நாடற்றவர்களாக ஆக்க வேண்டாவா? இலங்கை முகாமகளில் தேனும் பாலும் கொட்டுகிறது என்றால்தானே அவர்களை இங்கு இழுக்க முடியும். அவர்களை அங்கிருந்து விரட்டச் சிங்களக் கொடுங்கோலரசிற்கு உதவ முடியும்! காங். அரசின் நல்லெண்ணத்தைப பெற முடியும்! உண்மையிலேயே இலங்கைத் தமமிழர்கள மீது பரிவும பற்றும இருந்தால் அவர்களுக்கு வாழ்வுரிமை தாருங்கள். விரும்பிய இடத்தில் விரும்பியவாறு வாழ வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்தித் தாருங்கள். இங்கிருந்து தங்களின் தாயகத்திற்கு அவர்கள் திரும்புகையில் பிச்சைக்காரர்களாக அல்லாமல் செல்வர்களாகச செல்லட்டும்! ஏதோ இப்பொழுதாவது நாடக அரங்கேற்றத்தின் ஒரு பகுதியால் சிறிது நன்மை கிடைக்கும என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இலங்கைத் தமிழர்களை நம்முடன் இணைந்து நன்னிலையில் வாழச் செய்வதே அரசின் கடமை என்பதை உணர வேண்டும். உணர்ந்து உரியன செய்வார்களா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:01:00 AM

அறிக்கை வெளியிடப்பட்டது: இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் இனிதே வாழ அத்துணை வசதிகளும் தந்து அவர்தம் இன்னல் தடுத்து வந்தாரை வாழவைத்த தமிழகம் எனும் பெயரை என்றும் நிலைபெறச் செய்து தமிழன் என்றும் வீழான் எனும் நிலையைப் பெற்றிடச் செய்திட்ட தமிழினத்தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு முகாம்களில் வாழும் நம் உடன் பிறப்புகள் அன்புக் காணிக்கையாக தங்கள் இன்னுயிரையும் தர தயாராக உள்ளார்கள்.

By sbala
11/4/2009 5:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *