சனி, 12 டிசம்பர், 2020

திருக்குறளுக்குத் தடையா? வலையரங்கம்

 அகரமுதல


கார்த்திகை 28, 2051 ஞாயிறு

13.12.2020 இரவு 7.00

கூட்ட எண் : 477-589-6897

கடவுச்சொல் : தேவையில்லை

திருக்குறளுக்குத் தடையா?

திருக்குறள் பரப்புரைச் செயலாக்கக் குழு நடத்தும் வலையரங்கம்

நோக்கவுரை : பேரா.மறைமலை இலக்குவனார்

தொடக்கவுரை :  முனைவர் பொன்.கோதண்டராமன்

கருத்துரை : திருக்குறள் அறிஞரகளும் ஆன்றோர்களும்

நிறைவுரை : பேரா.கண.சிற்சபேசன்
இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி

 அகரமுதல
இசை வடிவில் தமிழ்த்தாய் அந்தாதி

தமிழ் மீது தாழா நேசம் கொண்ட உங்களுக்கு வணக்கம்

மொழி ஓர் இனத்தின் ஆன்ம அடையாளம். தமிழினத்தின் இருப்புக்கு மொழி சார்ந்த, வீச்சுரம் கொண்ட செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவது அவசியமாகும். அப்படியான இலக்கை நோக்கிய ஒரு வேலைத்திட்டம் இது.

தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறும் விதமாகச் செறிவான சொற்களில், அணி அழகு துலங்கும்படி பாவலர் தவ சசிதரன் புனைந்திருக்கும் போற்றிப்பாடல் தமிழ்த்தாய் அந்தாதி ஆகும் (YouTube காணொளி)  (YouTube  காணொளி  காண்க). கேட்கும்தோறும் மனத்தை ஈர்க்கும் மந்திரத்தன்மை கொண்ட ஒரு படைப்பு.

பேராசிரியர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் முதலானோர் இதனைப் பெரிதும் விதந்து பாராட்டியிருக்கிறார்கள். (தொடர்புடைய பதிவுகள்: https://tinyurl.com/y63445yy)

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழில் அமைந்த அந்தாதி இப்போது இசையாகவும் நாடகமாகவும் முகிழ இருக்கிறது. இலண்டன் மொழியகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

முதலாவது காணொளி உயர் தரத்துடன் வெளிவந்து பெருவரவேற்பைப் பெற்றுள்ளது – பார்வையாளர்கள் இந்தப் படைப்பின் சிறப்பை எவ்விதம் போற்றிப் பேசியிருக்கிறார்கள் என்பதை ( YouTube comments) YouTube comments வழியாகக் காணலாம்.

இதே தரத்தில் மீதம் இருக்கும் அந்தாதிப் பாடல்களுக்கான காணொளிகளும் வெளிவருவதற்கு உங்கள் மேலான உதவி / கொடை தேவைப்படுகிறது.

இந்த இணைப்பின் வழியாக நீங்கள் நிதி நல்கலாம்.

இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிய  sajitharan@moliyagam.org  என்ற மின்னஞ்சல் வழியாகவோ +447428631805 என்ற பகிரி (WhatsApp) எண் வழியாகவோ நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

என்றும் இதயத்தன்பும் நன்றியும்

மொழியகம்

இலண்டன்

அந்தாதிக்கு உதவ

வ.அ.த.ச.பே.: தமிழரின் மெய்யியல் மரபு: பேரா.கரு.ஆறுமுகத் தமிழன்

 அகரமுதல

கார்த்திகை 27, 2051 சனி 12.12.2020

கிழக்கு நேரம் இரவு 8.30

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

இலக்கியக் கூட்டம்

தமிழரின் மெய்யியல் மரபு

பேரா.கரு.ஆறுமுகத் தமிழன்

அன்புடையீர்

வணக்கம்,

நான் யார்? இந்த அண்டத்தின் தோற்றம் எவ்வாறு? என்ற கேள்விகளுக்கான விடை தேடிய பயணம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதரிடையே நடக்கிறது. உலக நாகரிகங்களில் தொன்மையான நாகரிகமான தமிழர்கள் இது குறித்து 2000 ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. பன்முகத்தன்மைக்குப்  பெயர் பெற்ற தமிழர் பண்பாடு கொடுத்த உரிமையில் பல்வேறு மெய்யியல் கொள்கைகள் இங்குத் தோன்றி, பரவி வளர்ந்து உள்ளன. 2500 ஆண்டுகள் பழமையான தமிழரின் மெய்யியல் வரலாற்றை நம் கண்முன்னே மீட்டுருவாக்கம் செய்ய வருகிறார் பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன் அவர்கள். இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் மெய்யியல் துறையில் பேராசிரியராகப்  பணிபுரிகிறார் .


இணைப்பு: http://tinyurl.com/fetna2020ik

பேரவையின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள பேரவையின் முகநூல் பக்கத்தை விரும்பவும்.
https://www.facebook.com/fetnaconvention

இப்படிக்கு
பேரவை இலக்கியக் குழு


 


வியாழன், 10 டிசம்பர், 2020

குவிகம், மூன்று நூல்கள் வெளியீடு, 13.12.2020

 அகரமுதல


கார்த்திகை 28, 2051 ஞாயிறு 13.12.2020

மாலை 6.30

கூட்ட எண் : 619 157 9931

கடவுக்குறி : Kuvikam123

 

குவிகம் இல்லம்

இணையம் வழியாக

மூன்று புத்தகங்கள் வெளியீடு

  1. சில நினைவுகள் சில கதைகள் – சோழ கட்டுரைகள்

  2. விழியாற்றின் அலைகள்

  3. ஆத்தா நான் பாசாயிட்டேன்
ஞாயிறு, 6 டிசம்பர், 2020

தினமணிக்குக் கண்டனக் கூட்டம் – 10.12.2020

 அகரமுதல


கார்த்திகை 25, 2051 வியாழக்கிழமை 10.12.2020

காலை 10.00 முதல் மாலை 4.15 வரை

தலைநகர்த் தமிழ்ச்சங்கக் கூட்ட அரங்கம், வண்டலூர்

திருக்குறளை இழிவுபடுத்திய தினமணி நாளிதழுக்கு

மறுப்புரைத்துக் கண்டனக் கூட்டம்

தலைமை: திரு த.ப.சி.குமரன்

முன்னிலை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி

நோக்கவுரை: ஆ.நெடுஞ்சேரலாதன்

தொடக்கவுரை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

மறுப்புரைகள்

நிறைவுரை: பழ.நெடுமாறன்

திருக்குறள் பாதுகாப்புக் குழு, சென்னை 600 049