சனி, 13 அக்டோபர், 2018

கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை

அகரமுதல


ஐப்பசி 30-கார்த்திகை 01, 2049 /

நவம்பர் 16-17,  2018

இலயோலா கல்லூரி, சென்னை

கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு, சென்னை

ஆராய்ச்சிக் கட்டுரைக்கும், பயனாளர்களுக்கும் முன்பதிவு அழைப்பு

கணிதம், புள்ளியியல், கணிணி அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவுப் பசியை ஊக்குவிக்கவும், கலந்துரையாடல்களால் மேலும் பண்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், ஆராய்ச்சியாளர்களை நேர்முகம் காணவும் கணிப்பானியல் உலகளாவிய இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது.
பதிவுக் கட்டணம்
15.10.2018 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்து பணம் கட்டும் கட்டுரையாளர்களுக்கும், ஆராய்ச்சி உரை கேட்க வரும் பயனாளர்களுக்கும் மொத்தக் கட்டணத்தில் உரூ 500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,
முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு உரூ500
ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு உரூ800
 பேராசியர்களுக்கு உரூ 1000
 தொழில் | நிறுவனப் பணியாளருக்கு உரூ 1500
16.11.2018 இரவு : கலையிரவு.  சிறப்பு விருந்து
பார்வைத் தளங்கள்:
கணியறிவியல்: csiccs@loyolacollege.edu
கணக்கியல் : iccsmaths@loyolacollege.edu
புள்ளியியல் : iccsstats@loyolacollege.edu
செ.செரால்டு இனிகோ
(J. Jerald Inico,)
உதவிப்பேராசிரியர், கணியறிவியல் துறை
இலயோலா கல்லூரி, சென்னை-34

ஒன்றியக் கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -நூல் வெளியீட்டு விழா, இலண்டன்

ஐப்பசி 10, 2049 27.10.2018 மாலை 6.30

சிவன்கோயில் அரங்கம், இலண்டன்

முன்னாள் அதிபர் திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களின்

ஒன்றியக்(யூனியன்) கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு

                 -தங்கத் தாரகை- நூல் வெளியீட்டு விழா !


தொடர்புகளுக்கு:
திருமதி சொருணாதேவி தம்பிபிள்ளை (காஞ்சி)
தலைவர்

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, விழுப்புரம்

அகரமுதல

புரட்டாசி 14, 2049    ஞாயிறு   14.10.2018 

காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 

நித்தியானந்தா பள்ளி,  புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் 

கணியம் கட்டின்மை நாள்

15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன.

நிகழ்வு
தொடர்புக்கு : 
9894327947
9952426108
இதனால் பயன் என்ன..?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் கணிணி வரை, நமக்குத் தெரியாமலே நம்மைப் பற்றிய தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் திரட்டி, அதன் மூலம் அதிக ஆதாயம் பெற்று விடுகின்றனர். இதனைத் தடுக்கவும், பல தொழில்நுட்பங்களை மக்களாகிய நாம் கற்றுக் கொள்ளவும், நம் அனைவரின் தன்னுரிமையை/அந்தரங்கத்தைக் காப்பதுமே இந்தக் கணியன் கட்டற்ற  (மென்பொருள் விடுதலை) நாளின் முதன்மை நோக்கம்.
அனைவரும் வாரீர்! தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதலையும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய விழிப்புணர்வையும்  இலவசமாகப் பெற்று செல்லுங்கள்.
 முற்றிலும் இலவசம்..!
பின் குறிப்பு:
வரும்போது பதிவோட்டி(Pen-drive) கொண்டு வந்து கணியனை(மென்பொருளை) இலவசமாகப் பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!

சீனிவாசன்

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழும

வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018, சென்னை

அகரமுதல

புரட்டாசி 14, 2049    ஞாயிறு  14.10.2018

 பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை

அறிவியல் தமிழ் மேம்பாட்டிற்கான வெள்ளையறை
மணவை முசுதபா அறிவியல் தமிழ் நிறுவன அறக்கட்டளை
ஏஇ 103, 6 ஆவது தெரு, பத்தாம் முதன்மைச் சாலை
அண்ணா நகர்மேற்கு, சென்னை 40

வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018

வழிப்படம் :
பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப்பற்றிக் கலந்துரையாடுவோம்.  வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்.







பவள சங்கரி
பணியாளுமை ஆசிரியர்வல்லமை மின்னிதழ்

வியாழன், 11 அக்டோபர், 2018

துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்



துபாய் ஈமான் அமைப்பு  

இரத்தத்தான முகாம்

புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை  அட்டோபர் 12, 2018

காலை  10.00 முதல் 2.00  வரை

திறன் மண்டல(talent zone)நிறுவனம்,

 என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம்

துபாய் அல் நக்தா பகுதி

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்

அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும். 

தொடர்பு எண்கள்

050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 – சிறப்புரை: நாகார்சுனன்


புரட்டாசி 27, 2049 சனிக்கிழமை 

அட்டோபர் 13, 2018 மாலை 6.00- 7.30

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 
சிரீராம் குழும அலுவலகம்
மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம்
மயிலாப்பூர் சென்னை 600 004 
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

‘மறுதுறை மூட்டம்’ – FOG ON THE SHORE

சிறப்புரை:  நாகார்சுனன் (அமைப்பியல்வாதத்திறனாய்வாளர்)

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
 

கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள்

அகரமுதல

புரட்டாசி 25, 2049 வியாழக் கிழமை

அட்டோபர் 11, 2018 மாலை 6.45

நாரதகான சபா, சென்னை

இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில்

கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள்

தொடக்கி வைப்பவர்:  திரு சத்யராசு

சிறப்பாளர் :

தினமணி வைத்தியநாதன்

அமுதசுரபி திருப்பூர் கிருட்டிணன்




செவ்வாய், 9 அக்டோபர், 2018

சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது!

சென்னை விமானநிலையத்தில்

நக்கீரன் கோபால் கைது!

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன்  புலனாய்வு இதழாசிரியரும், மூத்த இதழளருமான  நக்கீரன் கோபால் எந்த ஆவணங்களும் இன்றிக் காவல் துறையினரால் தளையிடப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த  முறையீட்டின் அடிப்படையில் சென்னைவிமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால்அடையாறு சரகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என நக்கீரன் இதழ் கூறுகிறது.
நக்கீரன் இதழில் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து  முறையீடு அளித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
முதலில் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  உசாவுவதாகக் கூறப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்ட  நிலையில், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து  அவரிடம் காவல்அதிகாரிகள் உசாவல் மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது எனப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டப்பிரிவு 124- அ இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இச்சட்டப்பிரிவு பொருந்துவதாக இல்லை. எனினும் உசாவல் முடிந்தபின்னரே சட்டப்பிரிவுகளை முடிவெடுப்பர்.
  நாடெங்கும் இதழாளர்கள் சிறையிலடைக்கப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும்.