சனி, 7 நவம்பர், 2009

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

எழுதியவர்மீனகம் on November 5, 2009
பிரிவு: சிறப்புச்செய்திகள்

tamil_lettersதமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்று சிங்களப் பேராசிரியர் சுசரித்த கம்லத் தெரிவித்துள்ளார். யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த யாழ்ப்பாணத்தின் மனச்சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1977ஆம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறையில் சிங்களவர்கள் எவரும் தமிழ்மக்களால் தாக்கப்படவில்லை என்று உறுதிபட எடுத்துரைத்தார்.

தமிழ்மொழி மிகப்பெரியதோர் பழமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் ஒரு மொழியாக உள்ளது. தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்றும் தெரிவித்துள்ளார்.

(Visited 272 times, 38 visits today)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 158: போராட்டம் தொடர்கிறது...!



ராஜீவ்காந்தி படுகொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதன் ஆதரவாளர்கள் மீது தடா சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. இதன் உச்சகட்ட நடவடிக்கையாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு தடைவிதித்தது. இது குறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "தமிழகத்தில் செயல்படாத ஓர் இயக்கத்தின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மீட்புப்படை என்ற பெயரில் சில இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க, விடுதலைப் புலிகள் சதி செய்தனர் என்ற குற்றச்சாட்டு நகைப்புக்கு இடமான குற்றச்சாட்டாகும். தமிழ் தேசிய மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு உண்மை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட்ட பின்பே தமிழ்த் தேசிய மீட்புப்படை உண்மையில் இருந்தது என்பது நிரூபணம் ஆகும். இந்த வழக்கே விசாரணைக்கு வராத நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது சரியல்ல' என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டதும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலருக்கு யாழ்ப்பாணத்தில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகின்றது. இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லை' என்று தனது மறுப்பினை வெளியிட்டு, இலங்கையின் இனப் பிரச்னையில் இந்தியாவின் தவறுகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்கும் நடவடிக்கையைக் கூட சட்டப்படி இந்திய அரசு செய்யவில்லை. 14-5-1992 அன்று இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தடை சரிதானா? என்பதைப் பற்றி முடிவு செய்ய நடுவர் மன்றம் ஒன்றையும் அமைத்தது (தமிழீழம் சிவக்கிறது - பழ.நெடுமாறன், பக்-488). 8-7-1992 அன்று நடுவர் மன்றம் வெளியிட்ட அறிவிப்பில், "விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்ப்பவர்கள் தங்கள் மனுக்களை, தம்மிடம் அளிக்கலாம்' என்றும் தெரிவித்திருந்தது. இதனையொட்டி, பழ.நெடுமாறன், மணியரசன், தியாகு, தீரன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகம் சார்பில் திலகர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழீழ மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். பன்னாட்டுச் சட்டங்களின் கீழும், பன்னாட்டு முறைமைகளின் கீழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. 1985-ஆம் ஆண்டில் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதும், 1987-ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை உடன்படிக்கையின்போதும் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் பேராட்ட ஈடுபாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்துள்ளது. 1967-ஆம் ஆண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள கருத்துகளின் கீழ் விடுதலைப் புலிகளின் இயக்கம் வரவில்லை. இந்திய அரசின் நீதி-நிர்வாக எல்லைக்குள்ளும் அஃது இயங்கவில்லை. எனவே, எந்தச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டாலும் அது செல்லத்தக்கதன்று. இந்தியாவின் உள் அரசியலிலோ அல்லது அதனுடைய எல்லைகளுக்கு அபாயம் விளைவிக்கும் வகையிலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறுக்கிடும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு அறவே இல்லை' என்று கூறிய அவர், மேலும் கூறுகையில், "இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வீணானது; தேவையற்றது. சட்டத்தினால் செயல்படுத்த முடியாதது' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந் நிலையில், நடுவர் மன்றத்தில் தங்களது கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், விசாரணைகள் ரகசியமாக நடக்கின்றன என்றும், இதனால் ஒருதலைப்பட்சமான முடிவு அறிவிக்கப்படலாம் என்றும் இவ்விசாரணைக்குத் தடை கோரி, தியாகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம் மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், 27-10-1992 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க நடுவர் மன்றத்தின் பதிவாளருக்கு அறிவிப்புக் கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு கிடைக்கும் முன்பாகவே, நடுவர் மன்றம் ரகசியமாகக் கூடி விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்ட தடை செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது (ஆதாரம்: மேலது நூல்). விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். பத்திரிகைகளும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டன. அது குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன.நாளை: கிட்டுவின் உயிர்த்தியாகம்!
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

அரிக்கோடு : படகு கவிழ்ந்து, ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில், ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, மாணவர் ஷமீம் மரணத்தை தழுவினார்.



கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு - மூர்க்கநாடு இடையே சாலியாறு ஓடுகிறது. அரிக்கோடு பகுதியிலிருந்து, இந்த ஆற்றை கடந்துதான் மாணவ, மாணவியர் மூர்க்கநாடு பள்ளிக்குச் செல்ல வேண்டும்.சில தினங்களுக்கு முன், பள்ளி முடிந்து படகில் திரும்பியவர்களில் எட்டு பேர் பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில் பலியான, பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் ஷமீம் (16), படகு கவிழ்ந்ததும், ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சக மாணவர் இருவரை, இழுத்து வந்து கரையில் சேர்த்தார். சோர்வாக காணப்பட்ட அவரை, கரையில் இருந்த பிற மாணவர்கள் தடுத்தும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவரைக் காப்பாற்ற நீரில் குதித்தார். அப்போது தான், துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறக்க நேரிட்டது.தன் உயிர் போனாலும், சக மாணவர்களை காப்பாற்றிய அவரது உறுதிமிக்க வீரத்தை, கிராமத்தினர் நெகிழ்ந்து பாராட்டுகின்றனர்.

இலங்கைப் போரில் மனித உரிமை மீறல்: விசாரிக்க குழு நியமனம்

கொழும்பு, நவ. 6: இலங்கையில் போரின் போது மனித உரிமை மீறப்பட்டதான குற்றச்சாட்டை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபட்ச நியமித்துள்ளார். நீதித் துறை வல்லுநர் டி.எஸ். விஜயசிங்க இந்த விசாரணைக் குழுவுக்கு தலைவராக இருப்பார் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்க கொழும்பில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கருத்துக்கள்

அ ஆட்சி செய்யும் பொழுது ஆ குற்றவாளி; ஆ ஆட்சி செய்யும் பொழுது அ குற்றவாளி என்பது எழுதப்படாத உலக வரலாறு. அவ்வாறிருக்க கொலைகாரனிடம் விசாரணைப் பொறுப்பை ஒப்படைத்தால் பாதிக்கப்பட்டவர்களைத்தானே குற்றவாளியாகக் காட்டுவான். ஏதோ அந்த அரசிற்குத் தெரியாமல் ஏதோ நடந்து விட்டது போன்று விசாரணை மேற்கொள்ளச் சொல்லும் வேடிக்கையை என்னென்பது? குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இனப்படுகொலைக்காரனை நீதிபதியாக்கும் தந்திரத்தை அமெரிக்கா செய்துள்ளது. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளிவரும் மயங்காதே!ஒரு தலைவர் இருக்கிறார் கலங்காதே என அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/7/2009 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழர்கள் மறு குடியமர்த்தல் அதிகரிப்பு: இலங்கை அரசு



கொழும்பு, நவ. 6: இலங்கையில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது, அவர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவது வேகம் பெற்று வருகிறது என்று இலங்கை அரசு கூறுகிறது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்தும் முகாம்களின் அவல நிலைமை குறித்தும் சர்வதேச அரங்கில் கடுமையான சர்ச்சைகளும் விவாதங்களும் வேகம் பெற்று வருவதால் அவர்களை முகாம்களைவிட்டு அனுப்பும் வேலையை இலங்கை அரசு துரிதப்படுத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இலங்கை அரசு நடத்திவந்த முகாம்களில் 2,88,000 தமிழர்கள் அகதிகளாகத் தங்கியிருந்தனர். இம் மாதம் 4-ம் தேதி கணக்கெடுப்பின்படி முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை 1,57,000 தான். அடுத்த வாரத்தில் சுமார் 60,000 பேர் குடியமர்த்தப்படுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மகிந்தா சமரசிங்க: இந்த ஆண்டின் இறுதிக்குள் (2009) பெரும்பாலான தமிழர்கள் அவரவர் சொந்த ஊர்களிலேயே குடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என்று இயற்கைப் பேரழிவு நிர்வாகம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிக்கிறார். முல்லைத்தீவில்: விடுதலைப் புலிகளின் கோட்டை என்று கருதப்பட்ட முல்லைத் தீவில் மட்டும் 1,314 குடும்பங்களைச் சேர்ந்த 4,390 பேர் குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என்று அரசு தெரிவிக்கிறது. அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் அவரவர் வசித்த இடங்களுக்கே மீண்டும் சென்றுவிட்டனர். 15 லட்சம் கண்ணி வெடிகள்: வடக்குப் பகுதியில் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகளை விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னர் 14 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கடந்த வாரம் மேலும் 5 இயந்திரங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தன. 5 நாடுகள் இந்தப் பணியில் இலங்கை அரசுக்கு உதவுகின்றன. கண்ணி வெடிகளைத் தவிர வெடிக்காத பீரங்கிக் குண்டுகள் போன்றவையும் நிலங்களில் சிதறிக் கிடக்கின்றன. கண்ணி வெடிகளை அகற்றுவதில் முதலில் முக்கிய நெடுஞ்சாலைகளும் பிரதான சாலைகளும் இலக்காகக் கொள்ளப்பட்டன. இப்போது கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் இந்தப் பணி நடைபெறுகிறது. நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்ததுடன் நீர் நிலைகளையும் மாசுபடுத்தி வைத்துள்ளனர். எனவே கால்நடைகளும் மக்களும் அவற்றைப் பயன்படுத்தும் அளவுக்கு அவற்றைச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. சாலை வசதி, மின்சார வசதி, ரயில் பாதை, தகவல் தொடர்பு ஆகிய வசதிகளையும் மக்களுக்குச் செய்துதர வேண்டியிருக்கிறது என்று அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. முகாம்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் வவுனியா, புல்மோடை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள அரசு மையங்களில் இப்போது தங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பண்ட பாத்திரங்கள், நிதியுதவி: மறு குடியமர்த்தலின்போது தமிழர் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள், 6 மாதங்களுக்குத் தேவைப்படும் ரேஷன் சாமான்கள், வேளாண் கைக்கருவிகள், இலங்கை ரூபாயில் 5,000 ஆகியவை தரப்படுகின்றன. குடியமர்த்தல் மானியமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25,000 ரூபாய் தரப்படுகிறது, கூரை வேய ஷீட்டுகள் தரப்படுகின்றன, விவசாயிகளுக்கு சாகுபடிக்கு நிலத்தைத் தயார் செய்ய ஏக்கருக்கு 4,000 ரூபாய் தரப்படுகிறது. அத்துடன் விதை, உரம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படுகின்றன என்கிறது அரசு அறிக்கை.
கருத்துக்கள்

கொத்தடிமை முகாம்களை இடம் மாற்றிக் கொண்டு மறு குடியமர்த்தல் என இந்தியத் துணையுடன் பொய்யான பரப்புரையைச் சிங்களம் மேற்கொண்டு வருகின்றது. என்றாலும் காலம் ஒரு நாள் மாறும்! விரைவில் சிங்களம் அழியும்! ஈழம் சிறப்பாய் மலரும்! ஞாலம் அதனை உணரும்! வருத்தத்துடனும் வாழ்த்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/7/2009 3:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
நாடு திரும்பிய சரத் பொன்சேகா ராஜபட்சேவை சந்திக்கவில்லை



கொழும்பு, நவ.6- அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா மரியாதை நிமித்தமாக அதிபர் ராஜபட்சேவை சந்திப்பதை தவிர்த்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபட்சேவுக்கு எதிரான ஆதாரங்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் அங்கு விசாரணைக்கு உட்படாமல் நாடு திரும்பினார்.

இந்நிலையில், அவர் நேற்று மாலைக்குள் அதிபர் ராஜபட்சே அல்லது பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபட்சேவை சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரையும் சரத் பொன்சேகா இதுவரை சந்திக்கவில்லை என்றும், அவர்களுடன் இருந்து வரும் மோதல் போக்கே இதற்கு காரணம் என்றும் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்கள்

சிரீதரன் இராமன்! சரியாகச்சொல்லியுள்ளீர்கள். அயலகத்திலுள்ள பிராமணர்கள் தமிழ்ப்பண்பாடு பேணப்படும் என்ற உணர்வுடன் இருக்கையில் இங்குள்ளளோர் பகைப் போக்குடன் உள்ளார்கள். தம்மைத் தமிழராக எண்ணாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்கத் தேவையில்லை. தமிழர்கள்தாம் என்ற உணர்வு இருந்தால் தமிழர்க்கு எதிரான கருத்துகளைப் பதிதல் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/7/2009 3:16:00 AM

Dei Koopu Bastard. What do u think you are you srilankan tamils living abroad are finished for good. if you go back you will see what will happen. you guys were using your wives as ugly call girls and making money now its over go and fall in the feet of rajapakse you idiots

By rahman
11/7/2009 1:38:00 AM

கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம் என்ற கயவனின் இயற்பெயர் கல்லுவித்தரானா - ஸ்ரீலங்கா . யாரும் அந்த நாயயை உள்ளூர்காரன் என்று நினைத்து எமாறவேண்டாம்.

By keeran
11/6/2009 11:24:00 PM

தனது நாட்டு மக்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய புலிகளை அளிக்கவேண்டியது ராணுவ தளபதியின் கடமை. அதை தான் பொன்சேக செய்தார். இவரை விசாரணை செய்வதற்கு அமெரிக்க அரசுக்கு தகுதியே இல்லை. இவர்கள் இராகிலும், வியட்னாமிலும் ஆயிரகனகநோர்களை படுகொலை செய்ததற்கு யார் இவர்களை விசாரிப்பது?

By கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்
11/6/2009 11:23:00 PM

.....SRI RANGAM KRSHNAMOORTHI....WHAT LANGUAGE YOU SPEAK AT HOME...SANSKRIT....WHEN YOUR PEOPLE COME TO EUROE THEY WASH TOILET AND GO AND EAT WITH TOILET CLEANERS AND COBBLERS....DAUGHTERS OF BARHMINS MARRYING COBBLERS,AND TOILET CLENERS SONS...NO SIN... BRAHMIN WILL DO ANYTHING FOR MONEY.

By KOOPU
11/6/2009 9:49:00 PM

...VICTORY DANCE FOR SINHALA AS WELL AS SOME TAMIL STOOGES AND INDIAN TAMIL REFUGEES IS OVER..SINHALA ARMY IS DIVIDED...SOON THEY WILL KILL EACH OTHER...THEN NO ARMY TO GUARD TAMIL CAMPS ..THEY WILL COME OUT...AND PLAY...BIGGEST MISTAKE OF THE DELHI WALLAHS.ITALIANS AND MALAYALIES IS..THEY THINK SL TAMIL ALSO ILLIRETRATE ,LIVE IN POVERTY AND WORSHIP FILM STARS.....SOON THEY WILL KNOW WHO ARE EELAM TAMILS....SRI LANKA IS BANKRUPT NOW...WITH THE GSP PLUS WITHDRAWEL SINHALA MASSES WILL BE ON THE STREET BECAUSE ALL EXPORT INDUSTRY WILL STOP PRODUCTION....EVERY DROP OF TAMIL BLOOD IN SL THOSE WHO ARE RESPONSIBLE IN SL AND INDIA WILL BE IN DOCK SOON....

By KOOPU
11/6/2009 9:45:00 PM

I do not understand the logic in this issue. As tamilians we can raise our voice. I believe tamilians not only from tamilnadu but all over world are concerned. but our voice has not anything becoz the issue is to solved only with the co-operation of srilankan government. I dont understand what is the wrong in mentioning Iyer when a person is Iyer. this disease is only in tamilnadu. there people are not mentioning their surname (caste) BUT EVERY WHERE ONLY THE CASTE IS WORKING. LOOK AT NORTH INDIA HERE NO ONE FEELS BAD IF YOU WRITE WITH SURNAME (ALL ARE MENTIONING THEIR NAME WITH SUFFIX (SURNAME). IN TAMILNADU PEOPLE ARE ONLY TALKING ABOUT CASTE. WILL ANY THING DONE WITHOUT CASTE POWER? SRILANK ISSUE CANNOT BE SOLVED WITHOUT THE INTERNATIONAL PRESSURE. IF INDIA DON'T HELP, SOME OTHER COUNTRIES (SAY PAKISTAN, CHINA & US) WILL DEFINITELY HELP SRILANKA. Iyer, Iyengar are also loyal to their mother toungue. Tamil and no one has right to suspect their identity becoz they mention their names

By K V SIVARAMAN IYER
11/6/2009 8:23:00 PM

இதெல்லாம் ஒரு நியூசா... அவா அமெரிக்காவிற்கு பயணம் செய்த கலிப்பா இருக்கும்பா!!!!

By கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்
11/6/2009 7:18:00 PM

...contd... Having said that, more thought provoking and positive comments are more than welcome. Please for heaven's sake don't play with the lives of people there, when you don't even have proper voice in Delhi. Thanks!

By shreedharan raman
11/6/2009 5:18:00 PM

Dear Mr.Rajasekaran Iyer, Pls post names without the caste suffix. It leaves an impression that ALL Iyers are like that - which is not the case. Majority of Iyers who reside abroad are supporting the Eelam - including myself. Secondly, when we as indians voiced our opinion against Iraq war - remember the parliament was stalled? why can't we oppose this? Thirdly, please read history and humanity. Fourth, we as tamils can't do anything right now to free tamil civilians in the 'camps'. So, we don't know the truth until people are freed and free access is given to the non-indian media. Hope you understand that its a big conspiracy that we intellectuals are trying to find out. So, if you have any point to add to that process, please contribute. No one is asking for suggestions from you / like minded readers like you. Having saaid that, more thought provoking and positive comments are more than welcome. Please for heaven's sake don't play with the lives of people there, w

By shreedharan raman
11/6/2009 5:12:00 PM

Atrocious activities against human being at any place of world should answer to the world community.. Even this may be their internal country's matter but they didnt achieve combinly for goodwil of the people of their country.. this is purely the competition of retaining or capturing power only.. So the controversies between the ruler and military chief is expectable only...

By karthikeyan
11/6/2009 4:55:00 PM

This is their country's problem and we have nothing to say. Secondly, he must have spoken to them on telephone even, who knows?

By Rajasekaran Iyer
11/6/2009 4:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
முதல்வர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை:
ஏ.பி. பரதன் வலியுறுத்தல்



ஹைதராபாத், நவ.6- மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் மற்றும் சமூக அடிப்படையை ஊழல் சீரழித்து வருகிறது. மதுகோடா மட்டுமல்ல நாட்டின் பல்வேறு முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்தும் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுக்குழு (சிபிஐ), நீதித்துறை ஆகியவை இத்தகைய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 330 பேர் கோடீஸ்வரர்களாக திகழ்கிறார்கள். நமது தேர்தல் முறையை பணம் என்னும் கருப்பு நிழல் ஆக்கிரமித்துள்ளது. தொடக்கத்தில் அதிகார பலமும், பின்னர் குற்றவாளிகளும் அரசியலை ஆட்டிப்படைத்தனர். தற்போது பணபலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தலைமையிலான 'பெல்லாரி சுரங்க மாபியா கும்பல்' மாநில அரசை நிலைகுலையச் செய்ய அச்சுறுத்தி வருகிறது. ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த மாபியா கும்பலுடன் தொடர்புள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மாவோஸ்ட்டுகளை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதவுள்ளேன்.

இவ்வாறு ஏ.பி. பரதன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

கருத்துக்கள்

சொத்துக்கள் பற்றிய உசாவல் மேற்கொண்டால் பல இந்நாள் , முன்னாள் முதல்வர்கள் அமைச்சர்கள் கம்பி எண்ண வேண்டியதுதான். ஆகவே. இந்த நச்சு முயற்சியில் மத்திய அரசு இயங்காது. தேவைப்படும் பொழுது மிரட்டுவதற்கு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/7/2009 3:06:00 AM

How politicians become rich? Please fellow Indian citizens think very carefully. (1)Student bribe to MPs , MPPS to get admition in a college(2). Graduates bribe to MPs , MPPs to get a jobs in the Governments.(3)MPPs and MPs appomited some agents to get monet from people to have passports, Driving licence and other govermmenta services.(4) To get custom office work, gruduate brobe to ministers about 2to3 lacks of Indian money to agent and the agents transfer to miniters later in the other contries . (5) cutom officers bribe the passangers thenthey transfer money to miniters.. there many side ministers and mPPs and MPs bribe from the orninary people. Specially bramins bribe to get high level of possition to central and state governments. If you see the statis of MPs , Mpps, Miniters prifile finacilallt last 20 years you wil find how they get rich with in a short period. I do not think India is a democreitcs nations ; instead we can say bribery nation; Thats I have learn from Ind

By Kumar
11/7/2009 2:04:00 AM

முன்னொரு காலத்தில் துண்டு பீடிக்கு வகையில்லாத சாமானியர்கள் இன்று சொன்னால் தலை கிறங்கும் அளவுக்கு செல்வந்தர்களக எப்படி ஆனார்கள் என்று அந்த பராசக்தி தான் விளக்கவேண்டும்.

By Deyeskay
11/6/2009 11:04:00 PM

ந‌ம‌து அர‌சிய‌ல் மிக‌வும் பாழ்ப‌ட்டுவிட்ட‌து.வெள்ளைய‌ர்க‌ளிட‌மிருந்து நாட்டை விடுவித்த‌ காந்தி போல் ந‌ம்நாட்டின் கொள்ளைய‌ர்க‌ளிட‌மிருந்து காக்கும் இன்னொரு காந்தி பிற‌க்க‌வேன்டும் இல்லாவிட்டால் இவ‌ர்க‌ள் வெள்ளைய‌ர்க‌ளை விட‌ ஆப‌த்தான‌வ‌ர்க‌ள்.ஏனெனில் அவ‌ர்க‌ளாவ‌து அன்னியன் என‌ கார‌ண‌ம் சொல்லி விர‌ட்ட‌ வாய்ப்புள்ள‌து.ஆனால்? இக்கொள்ளைய‌ர்க‌ளை எதை சொல்லி விர‌ட்டுவ‌து?

By அன்பும‌ணி
11/6/2009 9:27:00 PM

Even Kani moli got a new estate worh of 150 crores nera ooty. Actor Napolean MP bought a house near Washington DC worh of 4 Million (woth of 200 crores in Indian rupees), Vaiko has properties in Chicago, Stalin, Alagiri has properties in Singapore. People of Tamilnadu doesnot even have clothes to hide their butts!

By Sivakumar
11/6/2009 9:01:00 PM

கணக்கெடுத்துப் பார்த்தால் முதலமைச்சர்கள் என்ன, பிரதமர்களை விட பணக்காரராக நம்ம் ஆள்தான் முதலில் இருப்பார். கேட்டால் கலைத்துறையில் சம்பாதித்தேன் என்பார்.

By நவீன் சென்னை
11/6/2009 5:36:00 PM

They are already declaring in crores before elections. Who is going to take actions? Politics is good business in India nothing else

By indian
11/6/2009 4:54:00 PM

gone are those days when people in politics were scared of flauting their wealth. now 'samanians' have become 'crorepathis' ranking in the top 100 or 200 wealthy people of the world. now these people are emboldened enough to declare their asset value in the range of several crores of rupees without any sense of shame. declaring their assets before contesting the election is used as a tool towards regularising their ill gotten wealth. if they lose the election also they win on another front 'i.e., indirectly regularising their ill gotten wealth' by asserting 'see i have already declared my assets, i am a born rich person, i have not earned money after entering politics' etc. anything and everything, finally politicians emerge victorious.

By krishnan ks
11/6/2009 4:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மீண்டும் இந்தி திணிப்பு என்கிற அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருத்து வரவேற்புக்குரியதா?

First Published : 03 Sep 2009 07:55:57 PM IST


இதுபற்றி வாசகர்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யலாம்.

கருத்துக்கள்

தமிழும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுள்ள பிற மொழிகளும் தேசிய மொழிகள்தாம் . ஆனால்மத்திய அரசின் தவறான பரப்புரையால் இந்தி மட்டுமே தேசிய மொழி என்ற கருத்து தமிழரிடையே பதிந்து விட்டது. இந்தியை மத்திய அரசு யார் ஆட்சியில் இருந்தாலும் முனைப்பாகப் பரப்பிக் கொண்டுதான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் அதைத் தடுப்பதில்லை. மேடைப்பேச்சால் எந்தப் பயனும் இல்லை. மும்மொழித் திட்டத்தின் கீழ் வடக்கே தமிழைக் கற்றுக் கொடுக்கத் திட்டத்தில் ஒதுக்கப்படும் தொகையில் ஒரு காசு கூட இதுவரை செலவழிக்கப்பட்டு தமிழ் வடக்கே கற்றுத் தரப்படவில்லை. இது குறித்துத்தனியே கட்டுரை எழுதும் அளவிற்குப பல ளெசயதிகள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால் இந்தித் திணிப்பிற்குத்தமிழக அரசும் ஒரு காரணம். எனவே அரசியல் வாதிகளின் மேடைப்பேச்சுகளால் எந்தப் பயனும் இல்லை. இனியேனும் நாம் விழிப்பாக இருந்து இந்தி முதன்மையைத் தடு்க்காவிட்டால் வருங்காலத் தலைமுறையினரின் அழிவைத் தடுக்க முடியாது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/7/2009 3:01:00 AM

I lived almost entirely in north India for the last 26 years. Knowing Hindi is not necessary if one gets a job and then goes to North India as the language is easy and can be picked up quickly. But north India gives fantastic opportunities for jobs and knowing Hindi in advance will be a strong help for getting a job there. If you live in North India you will also realize how simple and magnanimous these people are. There should at least be an opportunity for learning Hindi by those who want it.

By Raam
11/6/2009 11:36:00 PM

Everyone in INDIA should know HINDI.Because hindi is our national language.None of the people in this world does not know their national language like our tamil people in INDIA. Tamil tamilnu solli namala elam naradichitanuga in DMK naigal. Andhra, kerala, karanataka elarum hindi paesaranga...Tamil natila matum than indha nilamai. Reason is our politician karunanidhi...Andha nai saagama inam Tamil Nata kuttisevir aakudhu.

By Karthi
10/24/2009 4:22:00 PM

i think our mother tongue is first,but in modern world v should know atleast 2 other languages...i think english & hindi is must for every student in future

By M.Suresh Balaji
10/5/2009 5:54:00 PM

I DISAGREE WITH Mr.THANGAM THENNARASU.HINDI IS OUR NATIONAL LANGUAGE.EACH AND EVERY CITIZEN SHOULD SPEAK IN HINDI. FOR EXAMPLE WE CAN SEE CHINA,THERE IS NO OTHER LANGUAGES,THEY SPEAK IN CHINESE ONLY.SO,THERE IS NO PARTIALITY AMONG THEM.SO,HINDI IS MUST.,

By anandapadmanabhan
9/8/2009 11:34:00 AM

சரியானதுதான்! எல்லாப் பள்ளிகளிலும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அது திணிப்புத்தானே! இந்தி மட்டும் தேசிய மொழி என்றால் மற்ற இந்திய மொழிகள் தேசிய மொழி இல்லையா? விரும்பிய மொழியை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும்! மொழிகள் கற்றுக்கொள்வதால் நன்மையே ஏற்படும்!

By Balakrishnan
9/5/2009 12:06:00 AM

no hindi oncemore. i believe tht our cm won't agree with him.

By kathiravan
9/4/2009 7:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *