வெள்ளி, 24 ஜூலை, 2009

ஜூலை 23,2009,00:00 IST
மண்டபம்:எல்லை தாண்டி பிடிப்படும் தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டு சித்ரவதை செய்யப்படும் நிலையில், இந்தியா கடல் எல்லையில் பிடிப்படும் இலங்கை மீனவர்கள் ராஜ மரியாதையுடன் ஓட்டலில் தங்கவைக்கப் படுகின்றனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப் படும் தமிழக மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் ஜெயிலில் அடைக்கின்றனர்.

அங்கு தமிழக மீனவர்களை, சிங்கள போலீசார் குற்றவாளியை விட கேவலமாக நடத்துகின்றனர். ஆனால், எல்லை தாண்டியதாக இந்திய கடலோர காவல்படையினரிடம் பிடிபடும் இலங்கை மீனவர்கள் ராஜ மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன் எல்லைதாண்டி பிடிபட்ட இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் மண்டபம் தமிழ்நாடு ஓட்டலில் போலீஸ் பதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு கூட பதியப்படவில்லை.

இவர்களோ வெளியில் மீன், கறிகளை வாங்கி தாங்களே சமைத்து உண்கின்றனர். இவர்களிடம் கைப்பற்றப்படும் மீன்கள் ஏலம் விடப்பட்டு அவர்களிடமே அதற்கான பணமும் ஒப்படைக்கப்படுகிறது. இந்த பணத்தில் இவர்களோ, பகலில் சீட்டு விளையாட்டு, இரவில் மது அருந்தியும் ஏதோ பிக்னிக் வந்ததுபோல் மகிழ்ச்சியில் உள்ளனர்.இலங்கை அனுராதபுரம் சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் கூறுகையில்,இலங்கையில் எங்களை தமிழன்தானடா எனக்கூறி மிக தரக்குறைவாக நடத்துகின்றனர்.

கழிப்பறை, குளியலறையில் சிங்கள கைதிகளுக்குத்தான் முன்னுரிமை. அவர்கள் உபயோகப்படுத்திய பிறகு தான் நாங்கள் உபயோகிக்க முடியும். எங்கள் மீது இலங்கை அரசு வழக்கு பதிவு செய்கிறது. மீன்களையும் பறித்துவிடுகிறது. ஆனால் இந்திய அரசோ எல்லைதாண்டி பிடிப்படும் இலங்கை மீனவர்கள் மீது வழக்கு பதிவதில்லை. தமிழக மீனவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக கூறும் அரசியல்வாதிகளும் இதைப்பற்றி வாய்திறப்பதில்லை'' என்றனர்.

வாசகர் கருத்து .

it is not an unusual thing.everyone know that how india treats the foreigners and what kind of respect Dr.kalam got in airport.just like that it is also an another example.this type of examples will continue......!

by k senthilkumar,India
Posted on ஜூலை 23,2009,22:08 IST

I would like to thank Dinamalar for putting this news.

Indian Government treating indian as Third world worm, and teating a Singhala foreigner as their Human being. Best of wishes to Indian Government for treating my fisherman brother as a Third world worm. I appreciate the Indian Government''s action against Singhales. Our indian government thinking that the singhales has the power and knowledge to rule this world like American.

One more credit should go to Mr.M.karunanithi for treating Singhales as God and Indian fisherman as worm.

by R Selvam,India
Posted on ஜூலை 23,2009,17:26 IST

Indian government especially Tamilnadu should wake up. They should read Dinamalar and understand what is happening in and around Tamilnadu and tamils!!!!!!!!!!!!! God only save tamilnadu people.

by r murthi,India
Posted on ஜூலை 23,2009,13:12 IST

Dr. Karunanidhi,

You failled to handle the Sri Lankan Tamils life.

Atleast save our Tamil Nadu''s fishermen life.

by s daniel jebakumar,Saudi Arabia
Posted on ஜூலை 23,2009,10:51 IST

Yes, right why india govt ( tamilnadu govt) scare to srilankan govt they small country they are nothing but they pepole are arrgant.i ask 1 question to tamilnadu govt. if arrest srilankan fisherman why u don''t put it in the jail ? 2, then why u don''t give pinishement? you are all in goverment servant u know u have to do u r duty correctly.
karuna

by j katuna,Saudi Arabia
Posted on ஜூலை 23,2009,10:32 IST
வாசகர் கருத்து
பொய்யோ, மெய்யோ!சென்னையைச் சேர்ந்த வி. மாதவ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ள சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம், ""ஏப்ரல் 30 முதல் மே 3-ம் தேதி வரையிலான நான்கு நாட்களிலும் நகரப் பேருந்துகளில் கட்டணங்களைக் குறைக்கவில்லை; மாற்றம் செய்யவுமில்லை'' என்று கூறியுள்ளது. மே 13-ம் தேதி தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நேரத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது குறித்து எல்லா பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, ""தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். இது தொடர்பாக, ஃபேக்ஸ், தொலைபேசியில் புகார்கள் வந்துள்ளன'' என்றார். ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, ""மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிக எண்ணிக்கையில் சாதாரண பஸ்களை இயக்கினோம். கட்டணத்தைக் குறைக்கவில்லை'' என்று பதில் கூறினார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தேர்தல் ஆணையத்தின் முன்பு மே 3-ம் தேதி ஆஜராகி, விளக்கம் அளித்த பிறகு மே 4-ம் தேதி முதல் "அதிகரிக்கப்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து, குறைக்கப்பட்ட உயர்கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து'' விட்டார்கள். மக்களின் வேண்டுகோளை தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், தேர்தல் நாள் நெருக்கத்தில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? "சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க' தாழ்தளப் பேருந்துகளையும்கூட பயன்படுத்தியது ஏன்? தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் இத்தகைய திட்டத்தை அமல்படுத்துவதென்பது இலவச டிவி, சேலை வழங்குவதைப் போல தேர்தல் விதிமுறை மீறல்தானே! இதில் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்றால் சாதாரண கட்டணப் பேருந்துகளை அப்படியே அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து இயக்கி இருக்க வேண்டியதுதானே! தேர்தல்வரை நிறுத்தப்பட்டிருந்தாலும், தேர்தல் முடிவுற்ற பின்னர் இந்த மக்கள் கோரிக்கை இல்லாமல் ஆகிவிட்டதா என்ன? இந்த நான்கு நாட்களில் சென்னை பெருநகரப் பேருந்துக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.4 கோடிக்கும் அதிகம். இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. யாரும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கவில்லை. அமைச்சர் அப்போதும், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் இப்போதும் அளித்துள்ள விளக்கம் சட்டத்தின் வார்த்தைகளில் சரியாக இருக்கிறது.. ஆனால், போக்குவரத்துக் கழகம் இதை அமல்படுத்திய காலம் தவறு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் அல்லது குறைந்த லாபத்தில் செயல்படும் என்றால் அதற்குக் காரணம், அந்தப் பேருந்துகளில் மக்கள் ஏறுவதில்லை என்று பொருள் அல்ல. நிர்வாக ஊழல்தான் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. ""சாதாரண கட்டண பஸ்களின்'' எண்ணிக்கையை திடீரென அதிகரித்ததைப் போல, நிறைய விஷயங்கள் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்று வருகின்றன. அதனை முறைகேடு என்று மற்றவர்கள் சொல்லும்போது, முறைகேடே இல்லை என்று ஆட்சியாளர்கள் மறுப்பது வழக்கமாக இருக்கிறது. ஆள்வது எந்தக் கட்சியாக இருந்தாலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வாகனம் வாங்குதல், உதிரி பாகங்கள் வாங்குதல், பெட்ரோல் பயன்பாடு ஆகியவற்றில் முறைகேட்டுக்கு அதிக இடம் இருக்கிறது. குறை சொல்வோர் முன்வைக்கும் முக்கியமான இரண்டு குற்றச்சாட்டுகள்: ஒன்று - போக்குவரத்துக் கழகம் ஆயிரக்கணக்கில் பஸ் சேஸிஸ் வாங்கும்போது, சேஸிஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு பத்து சேஸிஸ்களுக்கும் ஒரு சேஸிஸ் இலவசமாகத் தர முன்வருகின்றன என்றும் இவை கணக்கில் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இது மெய்யோ பொய்யோ! இரண்டு - சிறப்பு பேருந்துகள், நெரிசல்நேர கூடுதல் பேருந்துகள், விழாக்கால பேருந்துகள் இயக்கும்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், எல்லா பஸ் உரிமையாளர்களையும் போல முறையான அனுமதி பெற்றுத்தான் இயக்க வேண்டும். ஆனால் வட்டாரப் போக்குவரத்துத் துறையும் போக்குவரத்துத் துறை அமைச்சரின் கீழ் உள்ளதால், அனுமதி பெறாமலேயே அந்தந்தக் கிளைகள் தங்கள் விருப்பம்போல அதிக எண்ணிக்கையில் பஸ்களை இயக்குகின்றன. அதனால் முறைகேடுகள் நடக்கின்றன என்கிறார்கள். இது மெய்யோ பொய்யோ! தமிழக அரசைப் போலவே எங்களது விருப்பமும் இவையெல்லாம் பொய்யாக இருக்க வேண்டும் என்பதுதான்!
கருத்துக்கள்

மக்கள் உள்ளத்தில் எழும் கேள்விகளைத்தான் திரு இரா.சோமசுந்தரம் எழுப்பியுள்ளார். பல கோடி மக்கள் உயர் வசதிப் பேருந்துகளில் கூடக் குறைந்த கட்டணச் சீட்டு வழங்கப்பெற்ற விந்தை தந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பொழுது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் என்பது போல் மாறி மாறி ஒவ்வொரு தரப்பாரும் பொய்களையே அவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பதவி இழப்பையாவது குறைந்த அளவு தண்டனையாக வழங்க வேண்டும். பொய்மையில் எழுப்பபட்ட திமுக கூட்டணி வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ஆனால், இது ஒரு போதும் நடைபெறப் போவதில்லை. தோல்வி அடைந்தவரையே வெற்றி பெற்றவராக மாற்றும் மந்திர மையும் பதிவான வாக்கை விட எண்ணும் பொழுதான வாக்கு எண்ணிக்கையைக் கூடுதலாக்கும் விந்தை மையும் வைத்துள்ள திமுக-காங்.அரசுகள் மனச் சான்றுடன் செயல்படும் வாய்ப்பு இல்லையே! இவ்வாறு கட்டுரைகள் எழுதி ஆற்றாமையைப் போக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எனினும் இவற்றின் தொடர்ச்சியாக கட்டுரையாளர் வெளிக்கொணர்ந்துள்ள வேறு சில முறைகேடுகள் குறித்தாவது நடவடிக்கை எடுத்தால் சரி - இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 4:35:00 AM

ஜூலை 25, 1984-இல் சென்னை பெரியார் திடல் ராதா மன்றத்தில் இலங்கை தமிழினப் படுகொலை நினைவாக ""கண்ணீர் நாள்'' எனத் தி.மு.கழகத்தால் அனுசரிக்கப்பட்டது. அன்று நடந்த கூட்டத்தில் மு.கருணாநிதி குறிப்பிட்டதாவது: ""அரும்பாடுபட்டு நான் பலமுறை சந்தித்து, சந்தித்து, இந்த விடுதலை இயக்கங்களின் இளம் தோழர்களிடம் பேசிப்பேசி, ஒருவேளை என்னுடைய முயற்சியினாலோ அல்லது என்னைப் போல வேறு யாருடைய முயற்சியினாலோ-எனக்குத் தெரியாது-அந்த இளைஞர்களே மனப் பக்குவப்பட்டு அந்த முடிவுக்கு வந்தார்களோ தெரியாது; ஸ்ரீ சபாரத்தினம் தலைமையில் இயங்குகிற டொலோ என்கிற (பஉகஞ) இயக்கமும், பாலகுமார் தலைமையில் இயங்குகிற ஈரோஸ் (உதஞந) என்கிற இயக்கமும், பத்மநாபா தலைமையில் இயங்குகிற உடதகஊ என்கிற இயக்கமும் இந்த மூன்று இயக்கங்களும் ஓரணியில் திரண்டு-அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கூட்டணியாக உருப்பெற்று-தமிழ் ஈழத்தை முழுமையான சுதந்திர நாடாக ஆக்குவது-உழைக்கும்-மக்களைக் கொண்ட அரசை உருவாக்குவது, முதலாளிகளுக்குச் சொந்தமான வங்கிகளை, நிறுவனங்களை, தொழிலாளர், விவசாய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவது என்கிற ஒரு சமதர்ம சமத்துவ நோக்கோடு-சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும்; ஈன்றெடுக்க வேண்டும் என்ற நிலையிலே இன்றைக்கு ஒன்று கூடி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு இயக்கங்கள் இருக்கின்றன. ஒன்று முகுந்தன் தலைமையிலே இயங்குகிற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (டகஞப), இன்னொன்று தம்பி பிரபாகரன் தலைமையிலே இயங்குகிற விடுதலைப் புலிகள் இயக்கம் (கபபஉ). அந்த இரண்டு இயக்கங்களும், இந்த மூன்று இயக்கங்களோடு இணைந்து-அல்லது அவர்கள் விரும்பினால் அந்த இரண்டோடு இந்த மூன்று இயக்கங்களும் இணைந்து-யார் யாரோடு இணைவது என்று பார்க்காமல் இந்த ஐந்து பெரும் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம். அனைவரின் எதிர்பார்ப்பு'' என்றார். கூட்டத்தில் பேச வந்தவர்களும், கேட்க வந்தவர்களும் இக் கருத்தையே கருணாநிதி பேச்சுக்குப் பிறகு வலியுறுத்தினார்கள் என்பது உண்மை. அதே கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், ""இந்தக் கண்ணீர் நாளில் நாம் குட்டிமணியை, தங்கதுரையை, ஜெகனை நினைத்துக் கொள்கிறோம். வெலிக்கடை சிறையில் நான் குட்டிமணியுடன் ஒன்றாக இருந்தேன்; ஒரே அறையில் இருந்தேன். அப்போது குட்டிமணிக்குக் குழந்தை பிறந்தது என்று செய்தி வந்தது. என் குழந்தை கருப்பாய் இருக்குமா? சிகப்பாய் இருக்குமா என்று என்னைக் கேட்டான். அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லை. இந்த நாளில் நாம் கண்ணீரைத்தான் சிந்துகிறோம். குட்டிமணி கண்ணையே சிந்தியவன்'' என்றார். கூட்டத்தில் இரா. செழியன், அப்துல் லத்தீப், ஆற்காடு வீராசாமி, செ. கந்தப்பன், தி.சு. கிள்ளிவளவன், செல்வேந்திரன், கோவை மகேசன், சிகாமணி, தெள்ளூர் தருமராசன், டி.ஆர். பாலு முதலியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். "இலங்கையிலே கண்டிப்பகுதியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் பெயர் விக்கிரமராஜசிங்கன். அவனைப் பிரிட்டிஷார் போரில் தோற்கடித்துக் கண்டிப்பகுதியைக் கைப்பற்றினர். தோற்கடிக்கப்பட்ட விக்கிரமராஜசிங்கனுக்குக் கண்ணுசாமி என்ற பெயரும் உண்டு. வேலூர் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த அம்மன்னன் தனது 56-வது வயதில் மரணமடைந்தான். அவனது கல்லறை வேலூர் பாலாற்றங்கரையில் இன்றும் இருக்கிறது' என்று சென்னைக் கடற்கரையில் (8.8.83) நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி கூறினார். அது தொடர்பாக பெங்களூரில் வசித்த விக்கிரமராஜசிங்கனின் கொள்ளுப்பேரன் கே.ஜி.எஸ். ராஜசிங்கனைச் சந்தித்தபோது கிடைத்த தகவல்கள்: இலங்கையை ஆண்ட (கண்டிப் பகுதியை) மன்னன் நரேந்திரசிங்கன் மணமுடிக்க அரச குடும்பத்துக்கு இணையான பெண்கள் கிடைக்கவில்லை. பட்டத்து அரசியாக சூரிய வம்சத்தைச் சேர்ந்த பிற தேசத்து அரச குடும்பங்களிலிருந்து பெண் எடுப்பதெனத் தூதுவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தார்கள். மதுரையை (1709-இல்) நாயக்கர்கள் ஆண்டு வந்த நேரம். அவர்கள் சூரிய வம்சமானதால் நாயக்கர் குடும்பத்திலிருந்து பெண்ணெடுத்து அரசியாக்கிக் கொண்டான் நரேந்திரசிங்கன். அவனுக்கு பிள்ளைப்பேறு இல்லை. தனக்குப் பிறகு நாடாளவென்று மனைவியின் சகோதரனை மதுரையிலிருந்து வரவழைத்து பட்டத்திற்குரியவனாக்கினான். அவன்தான் கண்டியின் முதலாவது தமிழ் மன்னன். பட்டப் பெயர் ஸ்ரீ விஜயராஜசிங்கன். அவரும் எங்களுடைய வம்சத்திலேயே பெண் எடுத்தார். அவருக்கும் ஆண் வாரிசில்லை. அவர் இறந்த பின் அவரது தம்பி கீர்த்தி ஸ்ரீராஜசிங்கா மன்னரானார். அவர் அரசாண்ட சமயத்தில் இலங்கையில் புத்தமதம் வலுவிழந்திருந்தது. மீண்டும் அங்கே புத்தமதத்தைப் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் கீர்த்திஸ்ரீ தீவிரம் காட்டினார். தூதுவர்களைச் சயாம் நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து புத்த பிட்சுக்களை வரவழைத்து இலங்கையில் உள்ளோரைப் புத்த பிட்சுக்களாக மாற்றும் வேலையில் ஈடுபடுத்தினார். அப்படி முதன் முதலாக வந்த புத்தபிட்சு வெளிவத்தை சரணங்கரா என்பவராவார். இவரைக் கொண்டு, தமிழ்நாட்டில் தெய்வ விக்கிரகங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வது போல் புத்தரின் பல்லை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபடச் செய்தார். இன்றுவரையும் நடைபெறும் "பெரஹரா' எனப்படும் அவ்விழாவுக்கு அவரே மூலகர்த்தா! கீர்த்தி ஸ்ரீராஜசிங்காவுக்கும் ஆண் வாரிசில்லை. அவருக்குப்பின் அவரது தம்பி ராஜ அதிராஜசிங்கா ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பிரிட்டீஷாரும் பிரெஞ்சுக்காரர்களும் போர்ச்சுகீசியரும் கவனம் செலுத்தியதைப் போலவே இலங்கையின் மீதும் நாட்டம் கொண்டனர். ராஜ அதிராஜசிங்கா திடீரென இறந்துவிடவே, ஆண் வாரிசில்லாத நிலையில் அவரது ஆட்சியில் மந்திரியாக இருந்த பிலிமத்தலாவைக்கு மன்னராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, மன்னரின் மைத்துனரைப் பேருக்கு மன்னராக்கினார். அவரது பட்டப்பெயர் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. மந்திரி பிலிமத்தலாவையின் ஆசை நிறைவேறாதபடி ஸ்ரீவிக்கிரமராஜ சிங்கன் சிறப்பாக ஆட்சி புரியவே, வெறுப்புற்ற மந்திரி கபடமாய்ச் செயல்பட ஆரம்பித்தார். பிரிட்டீஷார் கண்டியைக் கைப்பற்ற பல முயற்சி செய்து தோற்றுப் போயிருந்த நேரம். மன்னர் தமிழரானாலும் அதிகாரிகளாகச் செயல்பட்டவர்களில் சில சிங்களர்களும் இருந்தார்கள். இவர்கள் அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொடுமைகளில் மந்திரிக்கும் உடன்பாடு உண்டு. கண்டியைப் பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த பிரிட்டீஷாருக்கு நண்பரானார் மந்திரி பிலிமத்தலாவை. கண்டி மன்னர் மீது பல அவதூறான கதைகளையும், அவரைக் கொடுங்கோலனாகச் சித்திரிக்கும் நிகழ்ச்சிகளையும் ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள். இவைகளுக்கு அந்த மந்திரி பேருதவியாக இருந்தார். ஒரு நாள் மன்னர் தெல்தெனியாவுக்கு அருகில் மெதமசநுவரா என்னுமிடத்தில் தன் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அங்கு பிரிட்டீஷார் திடீரென்று தோன்றி மன்னரையும் குடும்பத்தினரையும் சிறைப்படுத்தினார்கள். இது நடந்தது 18 பிப்ரவரி 1815-இல். அலவரடிக் குடும்பத்தினரையும் பிரிட்டீஷார் கொழும்புக்குக் கொண்டு வந்தனர். அங்கு ஓராண்டு காலம் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த ஓராண்டு காலம் முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிப் பலவகையில் பிரிட்டீஷாருக்கு இடைஞ்சல் செய்தனர். பிரிட்டீஷாருக்கு உடந்தையாக இருந்த மந்திரிக்கும் பதவி தராமல் மொரீஷியஸýக்கு அடித்து விரட்டினார்கள். மன்னர் கொழும்புவில் இருக்கும் வரை இது போன்ற தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும் எனக் கருதி எச்.எம்.எஸ். கான்வாலிஸ், எச்.எம்.எஸ். ஆன் என்னும் கப்பல்கள் மூலம் மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனையும் குடும்பத்தினரையும் பிரித்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். சென்னையை ஆண்ட பிரிட்டீஷ் அரசோ, அவர்கள் அனைவரையும் வேலூர் கோட்டைச் சிறையில் அடைத்து வைத்தது. வேலூர் கோட்டையில் சப்-ரிஜிஸ்தரார் அலுவலகம் இருக்கும் இடத்தில் மன்னரின் குடும்பத்தினர் வழிபட்ட துளசிமாடம் இன்றும் இருக்கின்றது. மன்னர் சிறையிருந்த இடம் இன்றைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ட்ரெயினிங் ஸ்கூல் இருக்கிறதே அந்த இடம் தான்! அவர் வேலூர் கோட்டைச் சிறையிலேயே வசித்து 1836-ஆம் ஆண்டு ஜனவரி 30-இல் காலமானார். பாலாற்றங்கரையில் அவரை அடக்கம் செய்தனர்.நாளை: எம்.ஜி.ஆர். விடுத்த அறிக்கை!
கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மூலம்
"புலிகளுக்கு' ரூ. 52.89 கோடி நிதிடொரான்டோ, ஜூலை 23: இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாக, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மூலம் ஆண்டுக்கு 1.20 கோடி கனடிய டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 52.89 கோடி) நிதியுதவி கிடைத்து வந்தது. வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு அதிக அளவில் நிதியுதவி கிடைத்து வந்த நாடுகளில் கனடாவும் முக்கியமானதாக விளங்கியது. கனடாவிலிருந்து வெளியாகும் "நேஷனல் போஸ்ட்' நாளிதழ், ரகசியப் புலனாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. கனடாவில் பெருவாரியாக வசிக்கும் தமிழர்கள் இந்த நிதியைத் திரட்டி, விடுதலைப் புலிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சகோதரி வினோதினி, அவரது கணவர் பாலராஜேந்திரன் ஆகியோரும் கனடாவில்தான் வசித்து வருகின்றனர். கனடாவில் உள்ள டொரான்டோ, மான்ட்ரீல் ஆகிய நகரங்களில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து திரட்டப்பட்ட இந்த நிதியானது, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக கனடா புலனாய்வு போலீஸôர் தெரிவித்துள்ளனர். டொரான்டோ வாழ் உலகத் தமிழர்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலம் விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி திரட்டப்பட்டதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தாய்நாட்டு விடுதலைக்காகக் கனடா வாழ் தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகுதியெனில் பாராட்டிற்குரியவர்களே! பிறரால் பின்பற்றப்பட வேண்டியவர்களே! வெறிபிடித்த சிங்கள அரசு இந்தியா முதலான பல்வேறு நாடுகளிடமிருந்து படை வலிமைக்குத் தனியாகப் பெருஞ்செல்வம் திரட்டியது போ்தாது என்று நலத்திட்ட உதவிக்கென்றும் வளர்ச்சிக்கென்றும் பெருஞ் செல்வம் பெற்று தாய்நாட்டு மக்களை - உறவினர்களை - அழிக்கும் பொழுது அதற்கு எதிராக எந்தநாடேனும் உதவ முன்வரும் என்று அப்பாவியாக நம்பி ஏமாறாமல் தாங்களே நிதி உதவி அளித்துள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் முயற்சி என்றென்றும் வரலாற்றில் போற்றப்படும். தொடர்க உங்கள் முயற்சிகள்! முயற்சி வீண் போகாது! விரைவில் தமிழ் ஈழம் மலரும்! அதனைக் காலம் உலகிற்குச் சொல்லும்! எல்லா நாடுகளிலும் தமிழ் ஈழக் கொடி பறக்கும்! ஈழத் தமிழர்களின் வாழ்வு சிறக்கும்! வெல்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ-உலக நட்புறவு!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 4:07:00 AM

By Appan
7/24/2009 3:38:00 AM

By rajia
7/24/2009 3:33:00 AM

By vinay
7/24/2009 3:28:00 AM

ANWAR WHAT IS YOUR IDENTITY'? ARAB? PAKISTANI? INDIAN? TAMIL NOT POSSIBLE BECAUSE THIS IS NOT A TAMILS NAME.AFTER ALL SOMEONE IN YOUR GENERATION ACCEPTED A BIG SUM AND CONVERT TO ISLAM BY MOGULS SO I AM NOT SURPRISED ABOUT YOUR COMMENT.DO YOU KNOW IT IS POSSIBLE TO BUY ANYTHING IN INDIYA WITH MONEY ASK HOW TO OTAVIO QUTUROCCHI FROM NAPLES HA HA HA HA

By KUTTY
7/24/2009 2:56:00 AM

DONT WORRY THIS AMOUNT WILL BE TRIPLED SOON NOT ONLY IN CANADA BUT ALSO FROM ALL OVER THE WORLD.SL TAMILS ARE PREAPERD TO DO THIS.SORRY REBELS DONT WANT MONEY FROM TAMIL NADU JUNGLE ONE DAY MEAL IS A STRUGGLE THERE.

By KUMARAN
7/24/2009 2:51:00 AM

By Anwar
7/24/2009 2:39:00 AM

Therefore that the Tigers were compelling or otherwise were ext5cating money from the exptariate Tamuls isa lie!THERE WAS NOTHING WORNG IN SUCH COTNRIBUTIONS TO LIBERATE TEHRI HOME LAND and to sustain war against the oppressive Sinhalese. If not for betrayl by Tamil naadu polticians like the CM thiru.MK and New Delhi, the LTTE would have made separate and sovereign eezham a reality.

By P.Padmanaabhan
7/24/2009 12:54:00 A
இலங்கை அகதிகள் 2}வது நாளாக உண்ணாவிரதம்செங்கல்பட்டு, ஜூலை 23: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 63 பேர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். க்யூ பிரிவு போலீஸôரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள், தங்களை வழக்குகளில் விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி பாலசுப்ரமணியம், க்யூபிரிவு டிஎஸ்பி விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் ஆல்பர் வில்சன், வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையில் நம்பிக்கையில்லாமல் தமிழக அமைச்சர்கள் அல்லது முதலமைச்சரின் பிரதிநிதியாக யாராவது வந்து தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் அப்பொழுது தான் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் இப்போது யார் பேசினாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு உடன் பட மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் அகதிகள் முகாமில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழக அரசு இவர்களை மட்டும் தொடர்ந்து வதைமுகாம்களில் அடைத்து வைப்பது முறையன்று. தமிழக ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் நாட்டுப்பற்றை மெய்ப்பிப்பதாக எண்ணிக் கொண்டு இந்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு அறமற்ற முறைகளில் தடுத்து வைப்பது முறைதானா? இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைப் பொருள்களை வழங்கியதைக் கூடக் கடுங்குற்றமாகக் கருதி வதைப்பது முறைதானா? எனவே, தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அப்பாவிகளை விடுவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் இச்சிக்கலில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் மூலமாக நீதி கிடைக்க உடனே உதவ வேண்டும். அப்பாவிகளின் துயர நிலை கண்டு வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 3:52:00 AM
மருத்துவமனையாகிறது முதல்வர் இல்லம் ?
சென்னை, ஜூலை 23: சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லம் எதிர்காலத்தில் இலவச மருத்துவமனையாகச் செயல்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்ட' தொடக்க விழா உரையின் நிறைவாக, முதல்வர் செய்த அறிவிப்பின் விவரம்:- ""இன்றைய விழாவில் உங்களில் ஒருவன் என்ற முறையில் என் சார்பாக ஓர் அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன். பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பும், பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் - கோபாலபுரத்தில் நான் வசிக்கும் ஒரு வீடும் (Street House) (இந்த வீட்டின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி), திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் 14 ஏக்கர் நிலமும்தான் உள்ளது. இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல் அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நேரத்தில் எல்லாம், இப்போது கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்குப் பதிலாக அரசு பங்களா ஒன்றில் வசிக்க வீடு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வரும் பார்வையாளர்களையும் வெளிநாட்டினரையும் என் இல்லத்தில் வரவேற்றுப் பேசுவதற்குக்கூட போதுமான அளவுக்கு இடம் கிடையாது. புகைப்படக்காரர்கள் நின்று படம் எடுக்கக்கூட வசதி இல்லாத நிலை என்பதை தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.இலவச மருத்துவமனை: கோபாலபுரத்தில் நான் வசிக்கும் இந்த இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு, 1968 - ல் என் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளேன். இப்போது அந்த இல்லத்தினை என்னுடைய காலத்துக்குப் பிறகும், என் மனைவியின் காலத்துக்குப் பிறகும் தமிழக அரசுக்கோ அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடைமையாக்குவதென்றும், அந்த இல்லத்தில் ஓர் இலவச மருத்துவமனையினை என் தாய் - தந்தையர்களான அஞ்சுகம் - முத்துவேலர் பெயரில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். இதற்கு என் மனைவி, பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

1/2) இலவச மருத்துவமனை என்பது நல்ல திட்டம். ஆனால், புரட்சித் தலைவர் தம் இல்லத்தில் காது கோளாதோர் பள்ளி நடக்க வேண்டும் என்று விரும்பினார். அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் அனைவரும் அறிந்ததே! போதுமான இடவசதி இல்லையென்று கலைஞரே குறிப்பிடப்படும் இடத்தில் மிகப்பெரும் செல்வர்கள் வசிக்கும் பகுதியில் இலவச மருத்துவமனை நடத்துவதால் ஏழை எளியோருக்கு உரிய பயன் கிட்ட வாய்ப்பிருக்காது. அரசுடைமையாக்கும் பொழுது ஆட்சி மாற்றத்தித்றகு ஏற்ப புறக்கணிப்பும் ஈடுபாடும் அமையும். பல நல்லதிட்ங்களை அறிமுகப்படுத்துவதில் உலகிலேயே முதல்நிலை முதல்வராக இருக்கும் கலைஞர் அவர்கள், தன்னுடைய பெயரில் இருக்கும் சொத்தைத்தான் - அதுவும் தன்னுடைய காலத்திற்குப் பிறகும் தன்னுடைய மனைவியின் காலத்திற்குப் பிறகும் இலவச மருத்துவ மனையாக்க வேண்டும் என்று தேவையில்லையே! எனவே, இப்பொழுதே - தான் வாழும் காலத்திலேயே - தன் குடும்பத்தார் பெயரில் இருக்கும் பல்லாயிரம கோடி உருபாய் சொத்து மதிப்பில் ஒரு பகுதியைச் செலவிட்டுச் சென்னையில் ஏழை எளியவர்களுககுத் தேவைப்படும் பகுதியில் புதிய இலவச மருத்துவமனையை அமைக்க முன்வரவேண்டும். (தொடர்ச்சி

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 3:38:00 AM

2/2) (1/2 இன் தொடர்ச்சி) இல்லையேல் கட்டடம் மட்டும்தான் கொடுத்துள்ளார்; மருத்துவமனைக்குச் செலவழிக்க வேண்டியது அரசு / அறக்கட்டளையின் பொறுப்பு என்று சொல்லப்பட்டு இக்கனவு நனவாகாமலேயே போகும். அவர் இருக்கும்போ்தே அடித்துக் கொண்ட குடும்பத்தினர் பின்னரும் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சரியாகாது. எனவே, கலைஞர் அவர்கள் உடனடியாக அஞ்சுகம் முத்துவேலர் இலவச மருத்துவமனையைத் தான் விரும்பும் வடிவமைப்பில் பல்துறை வசதிகளுடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 3:37:00 AM

Karunanedhi family owns more than Rs.5000 crores properties. Now Karunanedhi playing drama that he don't want this house, what is the use of this house, there are thousands of Goverment hospitals are available already, let Goverment hospitals serve the people. People don't want any corrupt money, he made all the properties by corruption. Karunanedhi tamils traitor because of him we don't get Cauvery water, Mullai Periyar dam problem not solved, Eelam Tamils more than 50,000 people are killed. After doing all the sin his life now saying he will give this house. Karunanedhi made tamil people in begger stage, now people have to get everything free such TV, Rice and others. There is no growth in the state, no employment created, Karunananedhi making tamils life miserable. No tamils will forgive his crime against humanity.

By yogaraja
7/24/2009 3:37:00 AM

BEAUTY FOR TAMIL IS TO TALK AND CRITICIZE DECENTLY. EVEN IF YOU DON'T LIKE OTHERS STAND LETS NOT KINDLY DO AN STREET FIGHT. LETS AT LEAST MAKE A CHANGE IN OUR FUTURE TAMIL COMMUNITY.

By tamizhan
7/24/2009 3:36:00 AM

what ever ravikumar told is 1000% correct. kumara badu nee poi ayya poola sappu

By jayadasan
7/24/2009 3:31:00 AM

guys, please don't use bad words. No need to worry about this news. KK is a writer before politics. Now also he is doing writing/screen play for some movies. Most of the times he is showing his "Actor" face also... Just laugh....Don't take it as serious

By Joe
7/24/2009 3:16:00 AM

idot ravikumar, shut your mouth and ass

By kkll
7/24/2009 1:37:00 AM

mooduda ravikumar. . . . . . . . . .

By Kumaran
7/24/2009 12:59:00 AM

Welcome one Long Live our Beloved CM

By janakiraman
7/24/2009 12:31:00 AM

எடிட்டர் சார்! அய்யா சினிமாவுக்கு எழுதின வசனத்தை சினிமா செய்தியில போடாம முக்கிய செய்தியாக போடுவது ஓவர்!

By ravikumar
7/23/2009 10:58:00 PM

வியாழன், 23 ஜூலை, 2009

சென்னை, ஜூலை. 23-
டைரக்டர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இலங்கை அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி உள்ளது.
ஆனால் இதுவரை தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சிங்கள ராணுவ, போலீசார் குடும்பத்தினரும் நிர்வாகத்தில் உள்ள சிங்களர்கள்தான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
இதற்காக இந்தியா வழங்கிய ரூ.500 கோடியையும் தமிழக அரசு கொடுத்த ரூ.100 கோடியையும் சிங்கள அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்தியா, தமிழக அரசுகள் இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க வேண்டும்.
இலங்கை வடக்கில் தமிழர் பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்காமல் சிங்கள அரசு சொல்லும் இடங்களில் வசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
19 பேர் கொண்ட இலங்கை குழுவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் 2 தம் பிகள், 8 ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் சிங்களர்கள். ஒரு தமிழர் கூட இல்லை. இந்த குழுவா தமிழர்களுக்கு வசந்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது?
இதை இந்திய அரசும், தமிழக அரசும், சர்வதேச சமூகமும் தட்டிக்கேட்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் வரை அடுத்த நாட்டு விவகாரத்தில் எப்படி தலையிடுவது என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்தது வேடிக்கையானது. இந்த தொகையை வைத்துதான் கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
நெற்களஞ்சியமான கிளி நொச்சி, மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களில் விவசாய புரட்சி ஏற்படுத்துவதாக கூறி தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை சென்று மகிந்த ராஜபக்சேயை சந்தித்து பேசி உள்ளார்.
முழுமையான விவசாய திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லப்போவதாக அறிந்தோம். இதனால் சிங்களர்கள்தான் பயன் அடைவார்களே தவிர தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவது இல்லை.
காரணம் தமிழர்கள் அனைவரும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள்?
இது சிங்களர்களை வளப்படுத்தும் முயற்சி. எனவே எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. விவசாயப் புரட்சிக்கான திட்டங்களையும் அவர் வழங்கக்கூடாது. இதை மீறி அவர் இலங்கை சென்றால் தமிழ் உணர்வுள்ள மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள எம்.எஸ்.சாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
எம்.எஸ்.சாமிநாதன் தமிழர்கள் உணர்வை மதிப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.

தேசியத் தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்ற “புதினம்” இணையத்தளம்

epb900செம்மலை, வழுதி, தயாமோகன், பத்மனாதன் அண்ணார்… என இன்னும்சில பெயர்கள் ஈழவிடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன. செம்மலை புலிகளின் அனைத்துலக தொடபகத்திலிருந்து அறிக்கை விடுகிறார்.தயாமோகன் மட்டு – அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார். பன்னாட்டு பேச்சாளர் பத்மனாதன் ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை உலகத்தமிழர்கள் உருவாக்க வேண்டுமென்கிறார். இவர்கள் யாவரும் விடுதலைப்புலிகள் இயக்க முத்திரையை போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு முத்திரையுடன் தமது அறிக்கைகளை முதன்மையாக தமிழ்வின், புதினம் ஆகியஇணையதளங்களில் வெளியிடுகின்றனர். இவை யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழமைக்கு மாறானது. இவ்வாறு அறிக்கை வெளியிடுவோர் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களது அறிக்கைகளில் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரது பொறுப்புக்களிலிருந்து பார்க்கும் போது மூன்றாம் நிலை, நான்காம் நிலை பொறுப்பாளர்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது.இவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் உரிமையை இயக்கம் ஒருபோதும் வழங்கியிருக்காது. இவர்களது அறிக்கைகள் வேக வேகமாக வெளியாகும் இக்காலக்கட்டத்தில் ‘புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னல் இன்னும் உறுதியாக இருக்கிறது’ என்று சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா தெரிவித்திருப்பதை இணைத்துப்பார்த்தால் அந்த வலைப்பின்னலை நோக்கி அரசின் சதிவலை விரிவதையும் புலிகளின் முதல் நிலை, இரண்டாம் நிலை தலைமையை தமக்குசாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாம் நிலை, நான்காம் நிலை தலைமையை சிறீலங்கா அரசு வலைவீசி வருகிறது என்ற ஐயப்பாடு எழுகிறது.

இந்த ஐயப்பாட்டிற்கு காரணமாக அமைவது மேற்சொன்ன அறிக்கைகளை தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுவோர் தமது அறிக்கைகளில் இரண்டு மூன்று விடையங்களை அழுத்தி சொல்வதுதான். முதலாவதாக தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று அடித்துக்கூறுகின்றனர் இந்த அறிக்கையாளர்கள். கருணாநிதியே பிராபகரன் இறந்து விட்டார் என்ற செய்தி உறுதிபடுத்தப்படவில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறி விட்டார். அது தவிர இந்திய அரசின் பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும் உறுதியாக இது குறித்து எதனையும் கூறவில்லை. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள் இறப்புச்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சிறீலங்கா அரசு தலைவர் இறப்பு பற்றிய தனது பொய்பரப்புரையை நிறுத்திவிட்டு விடுதலைப்புலிகளின் பெயரிலேயே அப்பொய்பரப்புரையை அவிழ்த்து விடும் என்று சாதாரண அறிவுபடைத்த எவரும் சிந்திக்கத்தக்கதே. போருக்கு பல்லாயிரம்கோடி ரூபாய் செலவு செய்யும் சிறீலங்கா அரசு, புலிப்பதாகையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு புறம்போக்குக் கூட்டத்தை உருவாக்கசில நூறு கோடிகளை செலவு செய்யாதா என்ன?

பிராபகரன் இறப்பு விடையத்தில் அறிக்கையாளர்கள் புளுகுகின்றனர் என்பது ஒருகுறிப்பிட்ட செய்தியால் உறுதியாகிறது. ‘முன்னாலே போனவர்களின் பின்னாலேபோனவரின் வழியில்’ என்ற கட்டுரையை தமிழ்வின்னிலும், புதினத்திலும் வெளியிட்ட தி.வழுதி தலைவர் இறக்கும் போது சையனைட் குப்பியை அணிந்திருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறீலங்கா அரசுகாட்டிய உடலில் சையனைட் குப்பி எதுவும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஜூன் 12, 2009 அன்று வெளியான ‘தினத்தந்தி’ செய்தித்தாளில் பிராபகரன் இறக்கையில் சையனைட் குப்பி அணிந்திருக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்த செய்தி வெளியாகியுள்ளது. இறப்புச்செய்தி உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அரசின் கூற்றுக்கும் அறிக்கையாளர்களுக்கும் உள்ள முரண்பாடு தெரியவில்லையா? இந்த முரண்பாடே தலைவர் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்வது விளங்கவில்லையா? ஆகவே அறிக்கையாளர்களின் முதல்வேலை என்னவென்பது இங்கே தெளிவாகிறது. அதாவது தலைவர் இறந்தது போல் ஒரு பிரமையை உருவாக்கிடவேண்டுமென்பதே அது. ஏன் அத்தகைய பிரமையை உருவாக்க வேண்டும்? பிரபாகரன் இறந்ததாக நாம் நம்பினால்தானே இனி புலித்தலைமை என்பது இதுதான் என்று ஒரு புறம்போக்குத் தலைமை வெளிப்பட முடியும்! அதனால் தம் அறிக்கைகளில் இவர்கள் மிகக்கவனமாக பிரபாகரனின் புகழ்பாடி பாடியே அவரைபுதைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

தங்கள் அறிக்கைகள் தோறும் பிரபாகரனின் சாதனைகளை, ஈகையை, வீரத்தை அறிக்கையாளர்கள் மெச்சிப்புகழ்ந்தாலும் தமிழ்வின்னிலும், புதினத்திலும் தி.வழுதி எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பை பாருங்கள்: “முன்னாலே போனவர்களின்பின்னாலே போனவரின் வழியில்”! என்ன ஒரு கேவலமான சொற்றொடர்! முன்னாலேபோனவர்களின் பின்னாலே போனவராம் தலைவர். அவரது வீரத்தை புகழ்வது போல புகழ்பவர்கள் தங்களையறியாமல் அவர் கோழை என்று சொல்லவரும் தங்கள் விருப்பத்தை தலைப்பிலேயே தெரிவித்து விடுகின்றனர்.

பிராபகரன் இறந்து விட்டதாக அறிக்கையாளர்கள் நிரூபிக்க முயலவில்லை.

அவரோடு சேர்ந்து பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாகவும், தலைவரின் குடும்ப்பத்தினரும் களபலியாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். கோதபய ராஜபக்சேவைத்தவிர வேறெந்த சக்த்தியும் இவ்வாறு கூற வில்லை. இந்த அறிக்கையாளர்களும் ஏன் அதுபோல கூறுகின்றனர்? அவர்களது ஆழ்மன விருப்பம்அடுத்து வரும் அவர்களது வர்ணனையில் வெளிப்படுகிறது.

இதோ அறிக்கையாளர்களின் வர்ணனை:

 • விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச்சாரும்.
 • விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ்,சூசை, பொட்டு, கே.பி…. என இன்னும் சிலரைச் சாரும்.
 • விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த்தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும்சாரும்.ஆனால் – சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும்,நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக – மனம்தளராமல் – விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

மேற்கண்ட வர்ணனையில் கே.பி என்றழைக்கப்படுபவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள், அல்லது இறந்து விட்டதாக அறிக்கையாளர்களால் சொல்லப்படுகிறது. ஆக அந்த கே.பி.தானே தேருக்கு இப்போது சொந்தக்காரர்! தலைவரின் சாவுச்செய்தி உலகிற்கே புதிராக இருக்கிறது. ஆனால் இயக்கத்தை கைப்பற்றுவதற்காக தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் குழிதோண்டி புதைத்து விட்டு, வாரிசுரிமைப்பட்டா வேண்டுகின்றனர் அறிக்கையாளர்கள். தங்களுடைய வாரிசுரிமைக்கு விடுதலைப்புலிகள் சின்னத்தை பயன்படுத்திக்கொள்ளமுடியுமா என்று சிந்தித்தவர்கள் உண்மையான புலிச்சின்னத்தை பயன்படுத்தினால் பின்னாளில் சிக்கல் வரலாம் என்று யூகித்து இரண்டு வித போலியான சின்னங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். ஜூன் 9-ம் தேதி பொ.செம்மலை என்பவர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சின்னத்தில் புலிமுகம் இடப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டக்கள் ஏதுமில்லை. சின்னத்தின் கீழ் ஏதோ மொழியில் சில சொற்கள் தெளிவின்றி இடம்பெற்றுள்ளன. ஜூன் 110ம் தேதி தயா மோகன் என்பவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இடம்பெற்றுள்ள சின்னத்தில் புலிமுகம் வலப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டாக்கள் இடம்பெற்றுள்ளன. சின்னத்தின் கீழ் ‘தமிழ் ஈழம்; என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஏதோ சில சொற்கள் தெரிகின்றன. வாசுரிமை கோருபவர்கள் சின்னத்தில்மாறாட்டம் செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் உண்மையான தலைமை வெளிப்பட்டாலும் தாங்கள் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற ஓர் அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக காட்டிகொள்வதற்காகவே.

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைமைக்கு வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் அழுத்திச் சொல்லவரும் இரண்டாவது விடையம் காயம்பட்டுள்ள கணக்கற்ற பேரையும் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்ச்சக்கணக்கான மக்களையும் விடுவித்திட பன்னாட்டரங்கு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே. சரியான கோரிக்கை. ‘போரை நிறுத்து; புலிகளை அங்கீகரி; ஈழத்தை ஏற்படுத்து”என்று முழங்கி களம் கண்ட புலம்பெயர் உறவுகள், இனி “போரில்சிக்குண்டவர்களை விடுவி; ஈழத்தை விடுவி” என முழங்கி களம் காண வேண்டும். இடையில் ஓர் வெற்றிடம் உள்ளது. “விடுதலைப்புலிகளை அங்கீகரி” என்ற இடம் வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடத்தில் தங்களை இருத்திக்கொள்ள முயலும் வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டம் என்பது இனி ஈழத்திலும் தொடர வேண்டும் என்றும் தொடக்க முதலே உரைத்து வருகின்றனர். அமைதி வழி என்பது தந்தை செல்வா காலத்தில் பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. ஆயுத வழி தலைவர் பிராபகரனால் 37ஆண்டுகளாக பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. இரண்டுமே தோல்வியடைந்தது என்று எடுத்துக்கொண்டாலும் கூட ஒன்றிலிருந்து புதிய ஒன்று விளையுமே தவிர பழைய ஒன்றிற்கு எதுவும் திரும்பி போவதில்லை. வரலாறு திரும்புவதில்லை. தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளைப்போல ஈழத்திலும் தாங்கள் தலையெடுக்கலாம் என்ற நப்பாசை உடையோர் வரலாறு திரும்பும் எனக்கூறலாம். ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் பெற முயல்பவர்கள் – எதிரியின் வலையில் வீழ்ந்து விலைபோகாதிருக்க விரும்புபவர்கள் புதிய வழிமுறைகளைத்தான் நாடுவார்கள். புலித்தலைமை தங்கள் துப்பாக்கிகளை மௌனித்து வைக்கப்போவதாக அறிவித்தபின் வேறெந்த முடிவுகளையும் எடுக்க வில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். பன்னாட்டு போக்கிற்கேற்ப பரீட்ச்சித்துப்பார்க்க வேண்டிய புதியவழிமுறைகளை அவர்கள் இப்போது பரிசீலித்துக்கொண்டிருப்பார்கள்.

இதனையடியாகக்கொண்டு தமிழ்நெட் இணையதளத்தில் வெளியான ஆலோசனைத் திட்டத்தினைக் கூறலாம். புலம்பெயர் ஈழ அரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்கிறது அவ்வாலோசனைத்திட்டம். இன்று திபேத்தியர்களுக்கா கதலாய்லாமா தலைமையில் புலம்பெயர் அரசு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் புலம்பெயர் இந்திய அரசு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதுபோல் புலம்பெயர் ஈழ அரசு ஒன்று அமைக்கப்பட்டால் அது பொம்மை அரசாக இருக்காமல் தற்போது ஒரு திருப்புமுனையை அடைந்திருக்கும் ஈழப்போரின் வடிவங்களையும், போக்குகளையும் அதுதீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிப்பதன் மூலம் விடுதலைப்புலிகளின் தலமைப்பாத்திரத்தையும், ஈழத்தை எதார்த்தத்தில் அடைவதற்கான சாத்தியக்கூறுகளையும் உருவாக்க வேண்டும். அந்நிலையில் போராட்ட வழி என்பது பழையன கழிதல், புதியன புகுதல் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி பழையன புகுதலாக இருக்கக்கூடாது. அமைதி வழியா ஆயுதப்போராட்ட வழியா என்பதை தீர்மானிக்கப்போவது ஏற்கனவே வழிநடத்திய தலைமையின் கீழ் புறப்படப்போகும் புதிய தலைமுறைதான். தலைமையை பிளக்க முயலும் எதிரிகளின் ஊதுகுழல்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நான்காவது ஈழப்போர் ஏற்படுத்திய திருப்புமுனையாக புறப்பட்டிருக்கும் புதிய புலம்பெயர் தலைமுறை ஈழக்காடுகளிலும் மேடுகளிலும் மக்கள் முன்னெடுக்கப்போகும் புதிய போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, ஊமையாகக் கிடக்கும் தமிழகத்தின் போராட்டசக்திகளுக்கு புதுவடிவம் கொடுத்து, உலகமய போக்கினுக்கு ஏற்றபடி அல்லாமல் அதற்கு எதிர்முகமாக, ஏகாதிபத்திய எதிரி முகாமாக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் அமைதி வழியும் சேரும், எதிரி முகாம்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வழியும் சேரும். இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது வரலாறு திரும்பும் என்ற திரிபு வாதத்தையேமுன்னிறுத்தும். புதினம், தமிழ்வின் அறிக்கையாளர்கள் அமைதிவழி ஒன்றுதான் இலக்கை அடைய இனி ஒரே வழி என்பது அவர்கள் கருணாவின் வழியை, கருணாநிதியின் வழியை, டக்ளஸ் தேவானந்தாவின் வழியை, சித்தார்த்தன், ஆனந்த சங்கரியின்வழியை தேர்ந்தெடுப்பதையே காட்டுகிறது.

இங்கு சொல்ல வேண்டிய இன்னொரு விடயம் புதினம், தமிழ்வின் அறிக்கையாளர் குழுவினர் அடுத்து வரும் காலக்கட்டத்தினை 3-வது ஈழப்போர் என வர்ணிப்பது பற்றியது. போர் என்பது சிங்கள இனவாதிகள், மற்றும் தமிழ் இன விடுதலைப் பாதையாளர்கள் ஆகியோர் இடையே நடந்த ஆயுதப் போரைக்குறிக்கும். அரசியல் போராட்ட இயக்கம்என்பது தந்தை செல்வா காலம் தொடங்கி இன்று வரை முடிந்து இனியும்வரப்போகும் காலத்தை உள்ளடக்கியது. அவ்வகையில் தந்தை செல்வாவின் காலம்தமிழர் உரிமை விடுதலை போராட்டத்தின் முதற்பகுதி எனலாம். அந்த முதற்பகுதிவட்டுக்கோட்டை தீர்மானத்தோடு நிறைவு பெறுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானம்தனி ஈழ நாட்டை உலகிற்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த காலம்ஆயுதப்போரின் காலம். அது நான்கு கட்டங்களாக நடந்து இன்று ஒருதிருப்புமுனையைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. தமிழர் உரிமை விடுதலைக்கான இந்த இரண்டாவது போராட்டக்காலம் விடுதலைப்புலிகளின் கை மேலோங்கியிருந்தகாலம். இக்காலத்தில்தான் நான்கு ஈழப்போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. தமிழர் உரிமையை மீட்பதற்கான எதிர்வரும் மூன்றாவது விடுதலைப்போராட்டக்காலத்தில் ஆயுதபோர் இடம்பெற்றால் அது ஐந்தாவது ஈழபோராக அமையும். தந்தை செல்வா காலம் தொடங்கி எதிர்வரும் காலக்கட்டம் வரை அமைதி வழி அரசியலும், ஆயுதபோராட்டமும் மாறி மாறி வந்துள்ளதைக் காண்கிறோம். ‘அரசும்புரட்சியும்’ நூலில் அரசியல் மேதை லெனின் கூறுகிறார்: “அரசியல் என்பது ஆயுதங்களின் உதவியின்றி அமைதி வழியில் நடைபெறும் போர். போர் என்வது ஆயுதங்களின் உதவியுடன் நடைபெறும் அரசியல்”. முதலில் அமைதி வழியில் அரசியில் நடத்தும் இரு தரப்பாரும் ஒரு புள்ளியை நெருங்குகையில் இனிமேற்கொண்டும் அமைதி வழியில் தங்கள் அரசியலை தொடர முடியாது என்ற நெருக்கடியை உணரும்போது ஆயுதங்களின் உதவியோடு தங்கள் அரசியலை தொடருகின்றனர். போர் நடத்த முற்படுகின்றனர். அதுதான் ஈழவிடுதலைப்போராட்டத்தில் நடைபெற்றது. வட்டுக்கொட்டை தீர்மானத்திற்கு பின்பு சிறீலங்கா இனவாதிகளும் சரி தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களும் சரி இனி மேற்கொண்டும் தங்கள் அரசியலை அமைதி வழியில் தொடர முடியாது என்பதைஉணர்ந்தனர். ஆயுதந்தரித்தனர். இன்றைய நிலைமையில் சிங்கள இனவாதிகளுக்கும்தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு யாது? இந்தக் கேள்விக்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்பாடுகள் மூலம் அண்மை எதிர்காலத்தில் பதிலளிப்பார்கள். தி.வழுதியோ, பத்மனாதன் அண்ணாரோ, செம்மலையோ, தயா மோகனோ அல்லது இந்த பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் இந்திய அரசோ பதிலளிக்க முடியாது. அமைதி வழி என்பது ஒருதரப்புக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. சிங்கள இனவாதத் தரப்பு வன்முறையைக் கடைப்பிடிக்கவும், ஈழத்தமிழர்கள் அமைதி வழியில்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற தந்தைசெல்வா, அமிர்தலிங்கம் போன்றோரின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிக்கும்குரலாக வரலாற்றில் மாறிவிட்டது. ஒரு வழி மட்டுமே சரியானது என்று கூற தயாமோகனும், பத்மனாதனும் அவர்களுக்கு பின்னலிருப்போரும் யார்? எதிரிஆயுதங்களோடு நிற்கவும், அமைதி வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று கூறுவது எதிரியிடம் சரணடையுங்கள் என்று கூறுவதன்றி வேறென்ன?

ஆகவே, தமிழ்வின், புதினம் குழுவினர் விடுதலைப்புலிகளின் தலைமையைக் கைப்பற்றும் நோக்குடனும், சரணாகதி மூலம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போன்றதொரு வகையாக மாறமுடியும் என்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிகொள்ளவும் முதலாவதாக தேசியத்தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்றனர். இதற்காக தேசியத்தலைவருக்கும்அவரது குடும்பத்தினருக்கும் இறுதி வணக்கம் செலுத்தத் தூண்டுகின்றனர். இரண்டாவதாக இனிவரும் காலம் ஈழப்போரின் 3-ம் காலம் என்று கூறுவதன் மூலம் தந்தை செல்வா காலத்திற்கும் விடுதலைப்புலிகளின் காலத்திற்கும் இடையேயான அரசியல் தேவைகளின் வேறுபாட்டை மறைத்து வரலாற்று திரிபுவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஈழப்போர் என்று வகைப்படுத்தப் படுவதும் தந்தைசெல்வாவின் கால நிகழ்வுகளும் ஒன்றுதான் என்று நிறுவி வரலாறு திரும்பும்என நம்பச்செய்து பழைய அமைதி வழிப்பாதைதான் இனி ஒற்றை வழிப்பாதை எனக்காட்டுகின்றனர். அமைதி வழி அரசியலையும், ஆயுதப்போரையும் தீர்மானிக்கப்போவது புதிய தலைமுறையும், களமாடும் புலிகளும் அவர்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளும்தான் என்பதை மறைக்கின்றனர். மூன்றாவதாக ஆயுதங்களுடன் நிற்கும் எதிரியிடம் அமைதிவழியில் சரணடையச்சொல்வதன் மூலம்எதிர்வரும் காலக்கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வதற்கான புதியவாய்ப்புக்களை மறுதலிக்கின்றனர். சரணாகதி வழியில் போன டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் எந்த போராட்டத்தை தொடர்ந்தனர் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இந்த புதினம், தமிழ்வின் குழுவினருக்கு உடைந்து நொறுங்கிய ஈழத்தமிழர்களும், ஊமைகளாக கிடக்கும் தமிழ்நாட்டின் போராட்ட சக்த்திகளும் சேர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக சளைக்காமல் போராடிய மாவீரன் பிரபாகரனின் வழியில் சொல்ல வேண்டிய பதில் இதுதான்: “வரலாறு திரும்புவதில்லை; நாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாம என்பதை தீர்மானிக்கபோவது எதிரிதான்!”.

அது வரையிலும் செங்கொடிக்கு எதிரானவர்கள் செங்கொடியையே தூக்கிகொண்டு வருவது போல புலிக்கொடிக்கு எதிரானவர்கள் புலிக்கொடியையே தூக்கிகொண்டு வருவார்கள் என்பதை தமிழர்கள் மறக்காமல் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும்.

நிலவரசு கண்ணன்
வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவைதமிழகம்

நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

32 Comments on “தேசியத் தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்ற “புதினம்” இணையத்தளம்”

 • Dr. V. Pandian wrote on 15 June, 2009, 10:47

  சிறந்த, ஆழமான ஆய்வு!

  தமிழினம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் இது.

  ஈழம் என்பது ஈழமக்களுக்காக மட்டுமல்ல. தமிழினத்தின் நல் வாழ்விற்கு, ஈழம் என்பது மிகவும் அடிப்படையானது. ஆக, தமிழ் மக்களும் இன்னும் வலுவோடு ஈழத்திற்காக போராட வேண்டும்.

  நமக்குள் உள்ள பேதங்களைப் புறந்தள்ளி, இன முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழர் அனைவரும் செயல்பட வேண்டிய காலம் இது.

  ஈழம் பிறந்தே தீரும். உறுதியோடு போராடுங்கள். வெற்றி உண்டு.

 • ram wrote on 15 June, 2009, 11:11

  நெருடலுக்கு மிக்க நன்றி, மக்களை குழம்பாமல் வச்சிருக்கிறது நெருடல் மட்டும் தான்…..என்ர முழு ஆதரவும் நெருடலுக்கு தான்…..புதினம் என்ன இலங்கை அரசுக்கு விலை போய்விட்டதா???

 • Sooriyan wrote on 15 June, 2009, 12:48

  Please tell us, Are you calling Mr.Thayamohan is not part of LTTE now ??? !!! I belive he is the LTTE political guy who is in Batticaloa under Col.Ram’s command.!!!

 • Thamilan wrote on 15 June, 2009, 15:47

  அண்ணா உங்களுக்கு எனது நன்றிகள். இங்கு எம்மை குழப்புவதற்கு ஒன்றும் இல்லை. சில விசமிகள் எம்மிடையே விசத்தை தூவி எம்மை பிரிக்க பார்க்கிறார்கள் தயவுசெய்து நாம் எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டுமெனக் கேடுக்கொள்கிரேன். தமிழ் புலிகள்தான் தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் என்பதை நாம் எல்லோரும் ஒருமித்து உரத்து உலகிற்கு சொல்ல வேண்டும். நாம் எல்லோரும் ஒருமித்து ஒட்ரே சொல்வேர்ம்.

 • jothey wrote on 15 June, 2009, 15:51

  urutiyodu poradungal vettri nichayam…..vaalge tamil

 • ganeesh wrote on 15 June, 2009, 19:53

  புதினம் இணைய தளத்தை நாம் பார்வை இடுவதை முடிந்தவரை குறைத்து கொள்வோம். இல்லாவிடில் பார்ப்பதை முற்றாக நிறுத்தி விடுவோம்.

 • Sivan wrote on 15 June, 2009, 20:37

  The problem is that we don’t have any proof whether our Leader is still alive or not. We want our leader to make a video speech and send it to the media. That will eliminate all the doubts. I know we should be concentrating/focusing on creating Tamil Eelam and forget about the rest but a lot of people issuing conflicting reports/statements etc. in the name of Tamil Tigers. I don’t think I can believe any of those. I want to see our national Leader make video statement. All these rumours and conflicting messages will disappear.

 • dr.rs.thirupathi balaji wrote on 15 June, 2009, 22:38

  miga arumaiyama alzntha katturai, naam enainthu ottrumaiyudan pooradinal tamil eealam nichyam namma vasam varum, namm thalaivar , tamileelanadipathiyaga kanbom.

 • Tamilar thayakam Tamil wrote on 16 June, 2009, 3:08

  ellam puchandii emaku thevai nemathi so ipaa iladilum ini ninmathiya vazlalaaam so arasiyal thervu srilankan gov tharum wait panuvammee suma LTTE nu enna tha kandoom

 • vasen wrote on 16 June, 2009, 5:29

  hi anna thanks.
  vaalge tamil…………………………………………………..

 • pollachi nasan wrote on 16 June, 2009, 7:34

  அருமையான, ஆழமான, அடையாளம் காட்டுகிற, தரமான ஆய்வறிக்கை இது. விலைபோகும் இவர்களது புலம்பல்களை உண்மையான தமிழன் உள்வாங்க மாட்டான். சலனத்தை ஏற்படுத்தும் இவர்களது முகத்திரையைக் கிழிக்கும் பணி தொடரட்டும்

 • k.pathi wrote on 16 June, 2009, 8:37

  i started suspecting tamilwin&puthinam!
  O.K:let them go ahead and live with our blood money:
  people like us try to change things!
  Tamileelam may be refused by chavunists for time being now:
  But,later satge,singala communty to run for their life:
  Is it possible?

  possible!

 • Andrew wrote on 16 June, 2009, 9:36

  நான் இந்த கட்டுரயை படித்தேன் .மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு இது பிடிக்கவில்லை.

 • naveen wrote on 16 June, 2009, 10:59

  Andavanai Ethirthu Poradum Vallamai Tamilanukku Vondu.

 • sivakumar wrote on 16 June, 2009, 13:05

  Fantastic Observation and Investigation.

 • pravita wrote on 16 June, 2009, 16:17

  உயிர் உள்ள வரை போராடுவோம் தமிழ் ஈழதிர் காக ….பிரபாகரன் வாழ்க….

 • HEMACHANDER wrote on 16 June, 2009, 23:30

  விடுதலை போராட்டம் இளம் தலைமுறைகளில் கைகளில் செல்ல வேண்டும் .பிரபாகரனின் மகள் தலைமை ஏற்க வரவேண்டும்

 • mathiyazhaki wrote on 17 June, 2009, 7:55

  போதும் நிறுத்துங்கள் தமிழக மக்களே. எங்களை எங்கள் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல விடுங்கள். எங்கள் கடைசிக் காலத்தில் உங்களிடம் கெஞ்சிக் கேட்டோம். மாவீரன் முத்துக்குமார் தன்னை எரித்துக் கேட்டான். என்ன செய்தீர்கள்? உங்கள் வாக்குகளை எங்கள் உயிர் காப்பதற்காக பிரயோகியுங்கள் என்றழுதோம். ஆனால் நீங்கள் விலைக்கு விற்று எங்கள் உயிர் குடிக்க அனுமதித்தீர்கள். எங்களுக்குத் தெரியும் எங்கள் தலைவர் உயிரோடு உள்ளார் என்பது. அதே நேரம் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சில காரணங்களால் பத்மநாதன் அவர்கள் தலைவர் இல்லை என்று அறிவிக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்புப் பிரிவு உலக அரசாங்கங்களுக்கு என ஒரு செய்தியையும் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவு தமிழ் ஈழ, புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியையும் விடுத்துள்ளார்கள் என்பதும் இவர்களில் யாரும் விலை போகவில்லை என்பதும் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்றுவித்து வளர்த்தெடுத்த தலைவருக்கும் மக்களுக்கும் புலிகளுக்கும் தெரியும். உங்கள் தமிழகத்து கட்சித் தாவல்களை இங்கு ஒப்பிடாதீர்கள். சாவின் விளிம்பில் கையேந்தும் பொது கை விட்ட பேருதவி போதும். முடிந்தால் , உண்மையில் உணர்வுடன் இருக்கும் அந்தக் கொஞ்சத் தமிழக மக்களைக் கேட்கிறோம். முடிந்தால் எங்களுடன் கை கோர்த்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள். அனால் யாரும் தயவு செய்து குட்டையைக் குழப்பாதீர்கள். பிரபாகரனின் மகளாவது நிம்மதியாக வாழட்டும். எங்களுக்குத் தெரியும் எங்கள் தலைவர் தற்காலிகமாக இறக்க வைக்கப் பட்டுள்ளார் என்பது. அவர் வெளியில் வரும் நிலை உருவாக வேண்டுமானால் இப்போது நாங்கள் பத்மநாதன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முகாம்களில் வாடும் மக்களின் துயர் துடைக்கப் பட வேண்டும்.

 • ,Rajan.Rajjamani wrote on 17 June, 2009, 16:49

  இந்தக் கட்டுரை-இந்தப் பக்கம் அநாகரீகமாக இருக்கிறது. முத்துக்குமார் பேரவை ரீதியில் வந்த இந்தக் கட்டுரை உண்மையாக நெருடலுக்கென எழுதப்பட்டதாக-நெருடலின் கருத்தாக அடக்கப்பட்டிருக்கிறது. தலைவர் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் விளக்க முயல்பவர்கள் நிலைப்பாடு இரண்டும் போலியானது.
  ஏதோவொரு தேவைக்காகச் செய்கிறார்கள்.
  இறப்பில்லா மனிதனுக்கு இறப்புக் கொடுக்கப்பார்க்கிறார்கள். ஈழத் தமிழ் மண்ணின் எதிர்காலத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்திற்குப் பிரபாகரனைத் தெரியுமா? கண்டிருப்பார்களா? அவர்களின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போடவே றோவிற்குப் பின்னால் பலர் நிற்கிறார்கள்.
  அதில் நீங்களாகவும் இருக்கலாம். ஒருவரையும் ஒருவரும் பொல்லாப்புச் சொல்லி
  உலகத் தமிழர்களைக் கூறு செய்யவேண்டாம்.
  உருத்திரகுமாரின் அறிக்கை பல இணையத்தளங்களில் காணவில்லை.
  தலைவரின் ஒரு சுட்டுவிரலுக்குள் ஆடிய தமிழ் உலகத்தை இல்லை என்று சொல்லி எத்தனை கலாட்டா நடக்கிறது. சாமி ஆடும் எல்லோரும் சாமி அல்ல.
  பேய்களாகவும்(றோ) இருக்கலாம். தேவையற்ற வாதங்களை விட்டுவிடுங்கள்.
  உண்மையான உறுதியான செய்திகளை மட்டும் வெளியிடுங்கள். இன்றைய நிலையில் நாட்டுக்கு வெளியேயான அமைப்பின் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பாருங்கள். இந்த அமைப்புக்கு மாறுபட்டு, கூறுபட்டு, இன்னொரு தலைமையை உருவாக்க முனைந்தால் தமிழினம் நாறிவிடும்.
  அந்தளவுக்கு அந்திய முனைப்பு இன்னமும் சிங்களத்திடம் தமிழர்கள் சாகவே வைத்திருக்கிறது.
  இணையத்தளங்கள் எல்லாமும் உறுதிசெய்யப்படாத தகவல்களை வெளியிடாதீர்கள்.
  உலகத் தமிழினம் ஒன்றுபடவேண்டும். அதுவே இன்றைய தேவை.
  இராசன்.

 • sinnarajah pratheeban wrote on 17 June, 2009, 20:00

  why tamilnatham web page put in front page puthinam web and all my tamilpeople please stop read puthinam website because Indian raw(intelligent buro) disconnected out side of eelam tamil people

 • Keatharan wrote on 17 June, 2009, 21:26

  அன்புடன் தமிழீழ விடுதலை விரும்பிகள் அனைவருக்கும் இன்றும் சிங்கத்தின் குகைக்குள் நடந்த படி அதன் பற்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு போராளியின் புரட்சிகர வணக்கங்கள்!

  தயவு செய்து தலைவர் இருக்கிறாரா ? இல்லையா? என்ற தங்கள் வேண்டா விவாதங்களை இத்துடன்நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அத்தனை பேரும் உததமர்களாக இருந்திருந்தால் ஆயிரம் ஆண்டுகள் தமிழன் உறங்கி கிடந்த பின் உங்கள் விடுதலைக்காக வாராது வந்துதமிழ் படை அமைத்து முப்படைகளையும் கட்டியமைத்து எதிரிக்கு சிம்ம சொப்பனமாகி வாழ்ந்த தலைவனை ஒரு ஆபத்தான களச் சூழலிற்கு இட்டுச் சென்று தான் மிகவும் நேசித்த முதல் படைத் தளபதி ஆசீர் சீலன் அவர்களை மறந்து விட முடியாமல் தான் பெயரிட்ட சீலனை இரண்டாவது தடவையும் இழந்து எப்படி முதல் சீலனின் உடலை எதிரிகள் சிதைத்து பண்ணை கடற் கரையில் புதைத்தார்களோ அதே போன்று எதிரிக்கு வாய்ப்பை வழங்கி இருக்க மாட்டீர்கள்.

  எமது தலைவர் பலரை ஏற்பாடு பண்ணி இறுதியில் அரச பேரூந்தை கொழுத்துவதற்காக தனியாக சென்றது போன்று தனிமைப் படுத்தி எமது மக்கள் படையை பலப்படுத்த தவறி விட்டார்கள். சிங்கத்திற்கும் ஒரு பெண்ணிற்கும் பிறந்த இனம் என உலகிலுள்ள அத்தனை உயிரியல் அறிஞர்களையும் ஏமாற்றும் மகாவம்ச அரசியலிற்கு அடிமைப்பட முடிவு செய்து விட்டீர்களா?

  திருகோணமலை மாவட்டத்திலே எதிரியால் தொடக்கி வைக்கப் பட்ட சமர் முதல் இறுதி சமர் வரை புலிப்படை தமது வழமையான மரபினை மாறறி அமைத்து தட்காப்பு சமரையே நிகழ்த்தியது இறுதி

  Keatharan

 • Thamil wrote on 18 June, 2009, 2:29

  ஒரு இணையம் இன்னொரு இணையத்த குறை சொல்வதை நான் வரவேற்கவில்லை.

  இது மீண்டும் மீண்டும் தமிழருக்கான அளிவுப்பதயாகத்தான் நான் கருதுகிறேன்.

  ஒருவரை ஒருவர் குறை கூறுவது அநாகரிகமானது.

 • canadian wrote on 18 June, 2009, 21:05

  please dont talk about hit there is no one have a rights to. tell him about good and bad. THIS NOT A TIME TO TALK BOUT AND WAIT FOR WHAT WE HAVE TO FIGHT FOR OUR RIGHTS NOW THIS TIME ALL IN GET TO GET TO GETHER GET TAMIL EELAM FREEDOM.

 • sonja wrote on 18 June, 2009, 22:25

  எங்கோ ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு ஈழத்தமிழரின் வேதனையை அறியாது வாய்சவாடல் விடும் புலன்பெயர்ந்தவரே நீரும் உறுதிப்படுத்தாமலே குழப்பினால் மக்கள் என்ன செய்யமுடியும் .அறிவழகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் .அதில் பிரபாகரன் இறந்தது உண்மை என்கின்றார். இப்போ அவரும் துரோகி, புல்லுருவி தானா?முதலில் நீங்க தெளிவாகிட்டு பின்னர் எழுதுங்க!உங்க தலைமை போட்டியை எங்க தலையில் கட்டாதீங்க. நன்றி!! தமிழீழம் வேண்டுமென்றால் தாயகம் சென்று சிங்கள ராணுவத்துடன் மோதி பெறுங்கள். பேசி மற்றவரை சாகடியாதயுங்க.தமிழ்நாட்டு அரசியல் எங்களிடம் வேண்டாமையா!!மீண்டும் நன்றிகள்!!

 • மொக்குத் தமிழன் wrote on 19 June, 2009, 6:44

  எல்லாரும் தத்தம் பங்குக்கு ஒவ்வொரு கதை சொல்லினம்…..இதோ என் பங்குக்கு ஒரு கதை…..முள்ளிவாய்க்காலிலை தேசிய தலைவர் தன்னுடைய M16 ஐ பயன்படுத்தி 53ம் மற்றும் 58ம் படையணிகளுக்கு எதிராக தீரமுடன் போராடிக் கொண்டிருக்கிறார். புலனாய்வு பிரிவுப் போராளிகள் தலைவரை நட்டாற்றில் கை விட்டு விட்டு ஓடி விட்டார்கள். அன்று ஓடத் தொடங்கியவர்கள் தான்…ஒரு மாத காலமாக ஒடோடேன்று ஓடி இப்பொழுது தான் பாதுகாப்பான இடத்துக்கு வந்திருக்கிறார்கள் (ஒரு மாதமாக எங்கு ஓடினார்கள் என்று என்னைக் கேட்க வேண்டாம்). பாவம் தேசியத் தலைவர். தனியாக நின்று சண்டை பிடித்து வீரமரணம் அடைந்து விட்டார். ஓடிக் கொண்டிருக்கும் வழியில் புலனாய்வு பிரிவு போராளிகள் போட்ட கடிதம் உரியவர்களின் கைகளுக்கு ஒழுங்காக வந்து சேரவில்லை. அது மழையில் நனைந்து, எழுத்தெல்லாம் அழிந்து, அரை குறையாய் தான் வந்து சேர்ந்தது. அதனால் தான் எல்லாம் குழப்பமாகப் போட்டுது. (இதை வாசிக்கும் பொழுது உங்களுக்கு சிரிப்பு வந்தால், நீங்கள் ஓர் உண்மையான தமிழன் அல்ல….ஏனெனில் தமிழனாய் இருந்தால், அவன் ஒரு போதும் சிரிக்க மாட்டான். அவன் இந்த கதையை தீவிரமாக அலசி ஆராய்ந்து, தானும் குழம்பி மற்றவனையும் குழப்புவான். இறுதியாக ஒன்று, மிக விரைவில் பத்மநாதன் அண்ணை இருதயக் கோளாறு காரணமாக இயற்கை மரணம் அடைய இருக்கிறார் என்பதை அவரே இன்னும் சில நாட்களில் அறிக்கை மூலம் புலம்பெயர் சமூகத்துக்கு அறியத் தருவார். அப்பொழுதும் நாமெல்லாம் வழமை போல நம்மையும் குழப்பி மற்றவரையும் குழப்பி மகிழ்வடைவோம் ஆக!!!)

 • saravan,bala wrote on 19 June, 2009, 19:21

  This current affiers is more importent we will find out who is the black ship.Dont worry our national leader. will come soon. at that time this all black ship are will remove inthe tamileelam histroy.

 • Rahavan.G wrote on 19 June, 2009, 22:45

  வெற்றிடங்களை எவ்வாறு நிரப்புவது ?

  எங்கிருந்து தொடங்குவது …………..

  தமிழீழ விடுதலை போராட்டம் அதன் இயங்கு நிலமை சமகால ஜதார்தங்கள் குறித்த பார்வை என்பவற்றிற்கு கடந்த கால சம்பவங்களையும் மீள் பார்வை செய்தல் அவசியமா? என்ற கேள்வி மேலெழுந்த போது கூகிள் மொழி பெயர்பிஉடன் மல்லு கட்ட வேண்டியிருந்தது. ஆம் காலத்தின் தேவை கருதி பல நெருடலான விடயங்களை தொட்டு செல்கின்றேன். தோல்விவரும் போது தூற்றவும் வெற்றி பெறும் போது வாழ்த்தவும் செய்கின்ற மனித மனங்களோடு இனமான உணர்வு ஊற்று எடுத்து ஓடுவதால் சொல்ல விழைவதாகவும் இருக்கலாம். ……………………………………
  தற்போதைய நிலை குறித்து …………
  புரிந்து கொள்ளுதல், செயற்படுதல், வழிகாட்டுதல், ஒற்றுமை படுத்தல், தலைமைஏற்றல், இவை அனைத்தும் வெற்றிடமாகவே உள்ளது…………
  இவை குறித்து TNA இன் பங்கு என்ன?
  சர்வதேச புலம் பெயர் தமிழ் தலைமையை உருவாக்குதல் தமிழ் மக்கள் மத்தியில் கருத்தொற்றுமையை உருவாக்கக் கூடிய, ஒத்தகருத்து நிலமையை உருவாக்கக் கூடிய கருத்துருவாக்கிகளை இனம் கண்டு அவர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பதன் மூலமும் அன்றி தொழிற்பட வைப்பதன் மூலமும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அமைப்புகள் மத்தியில் மோதல் பிளவுகள் என்பவற்றை கட்டுப்படுத்தி பொதுக்கருத்தினை உருவாக்குதல்
  கடந்த்த 3 வாரங்களாக கனடாவில் பல கல்விமான்களை புத்திஜீவிகளை பல்கலை கழக விரிவுரையாளர்களை சந்தித்திருக்கிறேன் அவர்களின் கருத்துகள் ஆதங்கங்கள் என்பவை சர்வதேச தமிழ் தலைமை உருவாக்குதல் பற்றிய உடனடி தேவை குறித்தே அங்கலாய்க்கின்றனர்
  தமிழ் நாடில் ஷோ ராமசாமி சுப்பிரமணியம் சுவாமி போன்றோர் எவ்வாறு தமிழ் தேசியத்தை உடைக்க தமது நலனுக்கு ஏற்ற கூடணியை அல்லது சார்பு நிலைமையை தோற்றுவிக்கும் கருத்துருவாக்கியாக இருக்கிறாரோ!
  தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை வளர்க்க நெடுமாறன் எவ்வாறு கருத்துருவாக்கியாக செயற்படுகிறாரோ! (அவரோடு இணைந்த கருத்து உருவாக்கிகள் செயல் திறன் குறைந்தவர்கள் என்பது வேறு விடயம் )
  இவர்கள் எல்லாவற்றையும் தாண்டி சிங்கள பேரினவாதம் உலகையும் சிங்களத்தையும் தமது கருத்து உருவாக்கத்தால் எவ்வாறு வெற்றி கொண்டு தமிழரின் போராட்டத்தை சிதைத்து அழித்ததை பார்த்தோம் அல்லவா?
  TNA இற்கு அதில் உள்ளவர்களுக்கு தமிழ் தேசிய தலைமையை உருவாக்கும் திறன் உண்டு. TNA என்ற அமைப்பு உடனடியாக இத்தலைமை ஏற்பதில் சிக்கல் வரலாம். எனவே சமாந்திரமாக சர்வதேச தமிழ் வெகுஜன இயக்கத்தை உருவாக்கி ஒரே குடையின் கீழ் ஒரே கொள்கையின் கீழ் தமிழர் போராட்டத்தை உரிமையை வென்றெடுக்க ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும். அவ் இயக்கம் சர்வதேச நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களையும் உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கப்பட்டு அந்தஅந்த நாடுகளில் தலைமை காரியாலயங்களை கொண்டியங்க வேண்டும் (Looks like function of embassy or consulate section)
  உள்ளக யனநாயகம், கருத்தாடல், பேசி தீர்த்தல், பொது உடன்பாடு, ஜீரணிக்கும் தன்மை, மற்றவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் பண்பு, முரண்பாடுகளை தீர்த்தல் இவை தமிழர் மத்தியிலும் அவர் தம் குழுக்கள் மத்தியிலும் பேணப்படவேண்டும்.
  உதரணமாக அன்டன் பாலசிங்கம் அவர்கள் ஒருதடவை சொன்னார் கருணாவின் பிளவு ஒரு பெரிய விடயமல்ல அதனை விட பெரிய பிளவு உமா பிரபா பிளவு தான் அதனை தணிப்பதற்கு கடுமையாக முயத்சிததாக குறிப்பிட்டார் ஆக அனைத்து பிளவுகளும் எம் மத்தியில் சரியான கருத்து உருவாக்கிகள், ஆற்றுகை படுத்துனர்கள் இருந்திருந்தால் சமன் செய்து இருக்க முடியும். பிளவுகள் இல்லாத சமுகம் இல்லை ஆகவே பிளவுகளை சமன் செய்வது ஆற்றுகை படுத்துவதில் தான் ஒரு சமூகத்தின் வெற்றி தங்கி உள்ளது. அன்டன் சத்தியேந்திரா சந்திரகாசன் போன்றோரின் செயற்பாடுகளின் வெற்றி மூலம் திம்பு போராளிகளை இணைத்தது அல்லவா?
  எனவே முரண்பாடுகளை தீர்க்க தணிக்க, ஆற்றுகை படுத்த அரசியல் ராயதந்திரத்தோடு செயற்பட நல்ல அற்பணிப்பு உள்ள கருத்துருவாக்கிகள் முன்வர வேண்டும்.
  முன்வருவீர்களா?
  இவ்வேலை திட்டத்தை முன்னெடுக்க
  சர்வதேச மட்டத்தில் TNA உம் தாயக மட்டத்தில் தமிழரசு கட்சியும் முன்வரல் வேண்டும். இக் கட்டத்தில் விடுதலை புலிகள் மிகவும் நிதானமாக செயற்படவேண்டும் இச் செயற்பாட்டை அவர்கள் ஊக்கிவிக்க வேண்டும் எதனையும் சந்தேகிக்கும் மனப்பான்மை என்பதை விட்டு எதனையும் ஆய்வு செய்து பின் பங்களிப்பு செய்யவேண்டும். தற்போதைய காலகட்டத்தில் புலிகளின் மீள் உருவாக்கம் என்பது இவற்றின் ஊடாகவே இருக்க வேண்டும்.
  புலிகள் இவற்றை புறந் தள்ளி தம்மை முதன்மை படுத்தி புலி மயமாக்கல் (மன்னிக்கவும்) செய்தால் உலகம் எம்மை மீளவும் புறந்தள்ளிவிடும் இது தற்போதைய யதார்த்தம். புலிகள் சமாந்திர கொள்கையை கடைபிடிக்க வேண்டும் தேவையற்ற திணிப்புகளை செய்யக்கூடாது.
  தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட இன்னும் பல தமிழர் அம்மைப்புகள் சுய சார்பு அமைப்புகளாக தொழில் பட்டு இருக்குமானால் அத்துடன் TNA சுயமாக இயங்க அனுமதிக்க பட்டு இருந்திருக்குமானால் ஓரளவுக்கு ஆவது உலகம் எம்மை பார்த்திருக்கும் எமது போராடத்தை பார்த்திருக்கும் அதனூடாக உலகம் புலிகளை பார்த்திருக்கும். புலிகள் என்று, தனித்தரப்பை வலியுறுத்தினார்களோ அன்றே புலிகள் தமது நன்மதிப்பை இழந்து விட்டார்கள். இவற்றை கதைப்பது புலிகளை கொச்சை படுத்த அல்ல. இழந்ததை மீட்க்க மாத்திரமே.
  நாங்கள் சொல்வதைத் தான் TNA கேட்கவேண்டும் என்றார், மதியூகி அன்டன் அண்ணா, ஒரு ஊடகத்திற்கு, அதனை அவர்கள் உலகம் பூராகவும் போட்டுகாட்டினார்கள். புலிகளின் பினாமி TNA!, TNA சொல்வது புலிகளின் குரலை எனவே உலகம் TNA யை கருத்திற் கொள்ளவில்லை. புலிகளை யனநாயக மறுப்பர்களாகவே உலகம் பார்த்தது (பேட்டி கண்டவர் ஒரு தமிழர் அவர் இலங்கை இந்திய நிகழ்ச்சி நிரலில் செயற்படுபவர்)
  எனவே அனைத்தையும் மீளாய்வு செய்து புதுவழி காண்போம்
  எனவே TNA ஜின் செயற்பாட்டை சர்வதேச செயற்பாடாக மாற்றி அதனை சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் , ஜெயானந்த மூர்த்தி,பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் முன்னேடுக்க தமிழரசு கட்ச்சியை சம்மந்தன் தலைமையில் ஈழத்தில் செயற்படுத்துவது பயன் தருவதாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
  TNA தனித்து நின்று இலங்கையில் தொழிற்ட்படுமாக இருந்தால் நிச்சயமாக அவ் இயக்கத்தை பிளவு படுத்தியோ அல்லது அடக்குமுறையை பாவித்தோ அழித்துவிடுவார்கள்
  சுரேஷ், சிவாயி, ஜெயானந்த மூர்த்தி, ஆகிஜோர் தமிழர் தரப்பை சர்வதேச மட்டத்தில் ஒற்றுமை படுத்தி அணி திரட்டும் திறன் கொண்டவர்கள். அவர்கள் சிறந்த கருத்து உருவாக்கிகளாகவும் செயற்படமுடியும்.
  தமிழர் நலனுக்காக சிறந்த அழுத்த குழுவாக தொழிற்படும் ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் தயவு செய்து ஒன்றிணையுங்கள் நலிந்து போன தமிழர் வாழ்வு தனை மீட்டுத்தர.
  (கடைசியாக கிடைத்த மிக துன்பமான ஏன் நேரில் கண்ட விடயம் உலகத் தமிழர் பேரவை தானும் செயலாற்றாது மற்றவர்களையும் செயலாற்றாமல் தடுக்கின்றனர்.)
  குற்றம் கண்டால் சுற்றம் இல்லை.
  விடுதலை அமைப்புகள் தங்கள் மீதான சர்வதேச தடைகளை நட்டாமுட்டி தனத்தால் களைய முடியாது ராஜதந்திரத்தால் மாத்திரம் களையமுடியும் அதற்காக புலிகள் TRO WTC/WTO என்பன தமது செயற்பாட்டை யனநாயாக மயப்படுத்த வேண்டும். அதனை உணரும் பக்குவம் சகல தமிழ் செயற்பாட்டாளர்களிடமும் வர வேண்டும்.
  நாம் தமிழர் என்பதே எமது அடையாளம் அதன் கீழ் செயற்படுவோம் முட்டி மோதி எம் இறுதி இருப்பையும் கேள்விகுள்ளாக்காதீர்கள்.
  புதினம், தமிழ்வின், பதிவு தமிழ் நெட் என்பன வெறும் தகவல் இணையங்கள் மாத்திரமா? தற்கால நிலைமையை கையாளும் திறன் தங்களிடம் இல்லையா? ஒரு வெகுஜன இயக்கத்தை செயற்பட நெறிப்படுத்த முடியாதா? தயவு செய்து உலகச் செய்திகள் வாசிக்க வேண்டம் அதற்க்கு நிறைய செய்தி நிறுவனங்கள் உண்டு. சர்வதேசம் பூராகவும் தமிழரை ஒழுங்கு படுத்தும் வேலையை செய்யவும். எமது உடனடித் தேவை நாட்டிற்கு நாடு ஒரு Union தெரிவு செய்து அதனை தமிழர் தகவல் மையமாகவும் தமிழர் இணைப்பு மையமாகவும் தொழிற்பட வைப்பதே.
  S.G.இராகாவன்
  கனடா

 • nathan wrote on 20 June, 2009, 11:26

  //நெருடலுக்கு மிக்க நன்றி, மக்களை குழம்பாமல் வச்சிருக்கிறது நெருடல் மட்டும் தான்…..என்ர முழு ஆதரவும் நெருடலுக்கு தான்…..புதினம் என்ன இலங்கை அரசுக்கு விலை போய்விட்டதா???//
  இல்லை ராம், இந்திய அரசுக்கு …இந்திய அரசின் றோவுக்கு விலை போய்விட்டது

 • Subanki wrote on 21 June, 2009, 4:29

  மிகத்துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரை மிகவும் வரவேற்கத்தக்கது. உண்மைகளை இதைவிடத் தெளிவாக யாரும் இந்த நேரத்தில் எழுதி விட முடியாது.
  விடுதலைப் புலிகளி;ன் புலனாய்வுப் பிரிவினரையும் தலைமைப் பீடத்தையும் கூட ஒருவர்கொருவர் எதிராளிகளாக்கி விட சதி நடப்பது பல துரோகிகளின் கட்டுரைகளினூடாகத் தெரியத் தொடங்கியுள்ளது.
  முக்கியமாக புதினம் இணையத்தளம் முற்று முழுதாக மேலே நிலவரசு கண்ணன் அவர்கள் கூறியுள்ளது போன்ற மாய்மால வேலைகளில் இறங்கியுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
  ஆனால் இவர்களை இனம் காணாமல் இவர்களின் பின்னே செல்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் காதில் பூ வைத்துத் திரிபவர்கள் இல்லை!

 • R.kumar.london wrote on 21 June, 2009, 5:42

  nerudalukku nandri. emathu makkalajarum thisa thiruppa mudijathu nam ellorum emathu thalavar valije selvathu sirantha valie.valka tamil valarka tamil thani tamil elam peruka tamil.

 • kathir wrote on 8 July, 2009, 8:35

  the problem is according to the world our leader have to die but for us he have to live. so the ltte have to do something that way announcement form mr KP even if our leader live want so to the media until the ppl release from the camp so now we have to fallow some one because KP is acting position not our leader but valuthi did not acceptable why dont we try that nadu kanatha arsu? because we have to move on. we cannot just leave like that. think.

 • நிலவரசு கண்ணன் wrote on 14 July, 2009, 10:57

  கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. தங்கள் கருத்துகளுக்கு மறுமொழியாக ‘காற்றுகென்ன வேலி’ திரைப்படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் கீழ்வரும் எழுத்தோவியத்தை தருகிறேன்.

  அன்பன்

  நிலவரசு கண்ணன்

  ******************************

  தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறி, பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது.
  குட்டி ஆடுகள் மிக மிக “ஸ்மார்ட்”. கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால், அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வாலை வெட்டின குட்டி ஆடுகள். ஊளையிட்டபடியே ஓடியது ஓநாய்.

  ஆடு நீ… ஆடு நீ… ஓநாய் மாதிரி ஊளையிடாதே…. என்ற ஆட்டுக்குட்டிகளின் பாடலைக் கேட்க ஓநாய் அந்த ஏரியாவிலேயே இல்லை. அதன்பிறகு அதற்கு வாலும் இல்லை, வாலாட்டுவதுமில்லை. ஆளைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை, வாலைப் பார்த்தாலே போதும் என்பதை ஆடுகள் மட்டுமல்ல… அனைவருமே அறிந்துகொள்ளவேண்டும்.

  உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக யாராவது அழுது புலம்பினால், உடனேயே கண்ணீர்க் கூட்டணி அமைத்துவிடக்கூடாது. அழுபவர் கிளிசரின் போட்டிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதைவைத்து எது ஒரிஜினல், எது டூப்ளிகேட், எது வதந்தி, எது உண்மை என்பதையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியும்.

  கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் என்றுமில்லாத அளவுக்கு பலவீனமாகி நிற்கிறோம்…

  என்று மூக்கைச் சீந்துவது எதற்கு? நம்மை பலப்படுத்துவதற்கா, மனத்தளவில் பலவீனப்படுத்துவதற்கா? இவ்வளவு பாசத்தோடு நமக்கு பந்தி வைப்பவர்கள் பாயாசத்தை வைப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்!

  ராம் அண்ணன் அடுக்கெடுக்கிறார் என்பது கதை….மீண்டும் பாய்வார்கள் என்பது வதந்தி….. சாதித்துக் காட்டுவார்கள் என்பது கற்பனை… என்றெல்லாம் இப்போது எழுதியிருக்கும் இதே பேனா தான், 30 ஆண்டுகளாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று முன்பு எழுதியது. அதன்மூலம் தனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது. இத்தகைய பதிவால் தான், தாங்கள் யாரென்பதை அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

  மிகக் கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழுகிறது. உணர்ச்சிப் பெருக்கோடு எதையாவது செய்ய முனைவது சிங்கள வெறியர்களை உசுப்பேற்றி விடும், அது வன்னியில் ஆபத்தில் இருப்பவர்களை பேராபத்தில் தள்ளும் என்று வெளி உலகிலிருந்து ஒரு குரல் வருகிறது. இரண்டுமே சாதுர்யம் பேசுகின்றன.

  மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அமெரிக்க அதிபராக இருந்தவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட். அவரது மனைவி, அன்னா எலீனர் ரூஸ்வெல்ட், மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர். நல்ல எழுத்தாளர். அச்சத்தை மட்டும் உங்கள் மனத்திலிருந்து அகற்றிவிட்டீர்களென்றால், எவ்வளவு மோசமான அனுபவத்திலிருந்தும் நீங்கள் பலத்தையும் மனோதிடத்தையும் நம்பிக்கையையும் பெறமுடியும் என்றார் எலீனர்.

  எவருடைய மனைவி என்பதைவிட அவருடைய எழுத்துதான் எலீனரின் சுய அடையாளமாக இன்றுவரை இருக்கிறது. இது ஒருரகம். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், இவருடன் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டே நம்மை அச்சுறுத்தும் விதத்தில் எழுதுவது இன்னொரு ரகம். இப்படியெல்லாம் ஜோடனை செய்பவர்களுக்கு, நம்மை பலவீனப்படுத்துவதைத் தவிர வேறு நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை.

  30 ஆண்டுகளாய் தாய் மண்ணில் நின்று போராடியவர்களுக்கு, அச்சம் தவிர் என்று ஆணையிட்ட பாரதியையும் தெரியும். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்ற வள்ளுவமும் தெரியும். எலீனர் சொன்னதும் தெரியும். எதை எங்கே எப்படி ‘அப்ளை’ செய்வது என்பதும் தெரியும். அவர்களுக்கு, பாதுகாப்பான இடங்களிலிருப்போரின் போதனை தேவையில்லை.

  எலீனர் சொன்னதை விடுங்கள்… லசாந்த விக்கிரமதுங்க சொன்னதையாவது இவர்கள் புரிந்துகொண்டார்களா?. லசாந்த என்ற அந்த ஆண்மை தவறாத பத்திரிகையாளன் இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி சுட்டுக்கொல்லப்படுகிறான். தான் கொல்லப்படலாம் என்பதை அவன் அறிந்தே இருந்தான். கொல்லப்படுவேன் என்பதை அறிந்தே இருக்கிறேன், யார் கொலையாளி என்பதும் தெரியும், எப்போது என்பதுதான் தெரியவில்லை…. என்று கொல்லப்படுவதற்கு முன்தினம் எழுதியவன் அவன்.

  லசாந்தவின் மரணவாக்குமூலமாகவே கருதப்படும் அந்தக் கடைசி தலையங்கம் ராஜபட்சேவை இப்படி எச்சரித்தது: தமிழர் பகுதிகள் முழுவதையும் நீ கைப்பற்றிவிடலாம். போராளிகளை நசுக்கிவிட்டதாக அறிவிக்கலாம். இந்த வெற்றியை நீ கொண்டாடலாம். ஆனால், தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்படுபவர்கள் மீண்டும் எழும்போது முன்னிலும் வலுவாக எழுவார்கள்.

  லசாந்த, விவரமான பத்திரிகையாளன். அதனால்தான், பின்னர் என்ன நடக்கும் என்பதை ஜனவரியிலேயே எழுதினான். இதற்கு ஜோதிட அறிவு தேவையில்லை, குறைந்தபட்ச வரலாற்று அறிவு இருந்தாலே போதும். கடந்த காலத்தைத் திரும்பிப்பார்ப்பது வரலாற்றின் புதைகுழியிலிருந்து எலும்புகளை எடுத்து அழகு பார்ப்பதற்காக அல்ல, கடந்த காலங்களில் அடியோடு நசுக்கப்பட்ட இனங்களெல்லாம் எப்படி வீறுகொண்டெழுந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்காக.. லசாந்த அதைப் புரிந்துகொண்டிருந்தான். ஒப்பாரிப் பாடகர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியுமா?

  2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபிறகு, அரசுகள்-ஆயுத இயக்கங்கள் என்று உலகம் இரண்டே தரப்பாகப் பிரிந்து விட்டதாகவும் நியாயமான வேட்கைகளுக்காகக் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை உருவானதாகவும் சொல்பவர்கள், நடந்ததைத்தான் சொல்கிறார்கள். தங்கள் தாய் மண்ணைச் சுவாசித்து மரணத்தை நேசித்த மாவீரர்களுக்கு புரியாத இந்த “உண்மை”, இப்போது இதைச் சொல்லும் அறிவாளிகளுக்கு அப்போதே புரிந்திருக்கும் தானே.

  அப்போது இருந்த அந்தச் சூழ்நிலையில்- தமிழர்களின் போராட்டம் விடுதலைப் போராட்டம் என்பதையும், அவர்கள் தங்கள் தாயகத்தை மீட்கத்தான் போராடுகிறார்கள் என்பதையும், விடுதலைப் போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையும் சர்வதேசத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இந்த மகானுபாவர்கள் செய்ததென்ன?

  அப்போது இவர்களிடம் பேனா இல்லையா, லாப்டாப் இல்லையா, இன்டர்நெட் இணைப்பு இல்லையா? நாட்டில் ரத்தம் சிந்திப் போராட இயலாத நிலையில், புலத்திலிருந்த தங்களது “ஸ்மார்ட் பவர்”-ஐ இதற்காக இவர்கள் பயன்படுத்தியிருக்க முடியுமே! பயன்படுத்தினார்களா, இல்லையா? இல்லையென்றால், இவர்களுக்கெல்லாம் ஸ்மார்ட் பவர் இருந்தென்ன, இல்லாமல் தொலைந்தென்ன!

  எந்தத் தலைவனின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லையோ அந்தத் தலைவனைப் பற்றி எழுதிக் குழப்பியவர்கள், பிரபாகரனை தமிழ்ச் செல்வன் ஏமாற்றிவிட்டதாக புழுதி கிளப்பியவர்கள், திடீரென ஞானோதயம் பெற்று, உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் அனைவருக்கும் நல்லது என்று உபதேசிக்கிறார்கள். புதிய உபதேசிகள்!

  உருப்படியாக என்ன செய்யவேண்டுமாம்? இந்தியாவோடு அனுசரித்து, இந்தியாவை அரவணைத்து, இருதரப்பு நலன்களையும் அகத்திலெடுத்து, அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நகர்த்தவேண்டுமாம். பிறப்பால் மேட் இன் இண்டியா-வாக இருக்க நேர்ந்துவிட்டதுகுறித்த குற்ற உணர்வுடன் நாங்கள் கூனிக் குறுகி நிற்கிறோம். இது தெரிந்தும், அனுசரிக்க வேண்டும்… அரவணைக்க வேண்டும்… என்று எழுதினால் என்ன அர்த்தம்? அது என்ன மேட் இன் இண்டியா பேனாவா?

  எந்த இந்தியாவை அரவணைக்கச் சொல்கிறார்கள்?

  1983ல் தொடங்கிய இனப்படுகொலைகள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிராக அர்ஜென்டைனா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை வழிமொழியக் கூட மறுத்துவிட்ட இந்தியாவையா? தன்னுடைய பிரஜைகளான தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்பவர்களைத் திருப்பிச் சுடத் தெரியாத இந்தியாவையா? அப்பாவித் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுத்துவிட்டு கொலைகார சிங்கள ராணுவத்துக்கு மருந்துகளை அனுப்பிவைத்த இந்தியாவையா? போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருப்பதாக நேசத்துடனிருந்த ஒரு மாநில முதலமைச்சரிடமே கூசாமல் பொய்யுரைத்த இந்தியாவையா?

  காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்த எங்கள் திலீபன் கொஞ்சம்கொஞ்சமாக உயிர் நீத்ததை ஹுக்கா பிடித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவையா? ஒருபுறம் புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை வாங்கியபடியே, இன்னொருபுறம் புலிகளின் எதிரிகளுக்கு ஆயுதம் வழங்கிய இந்தியாவையா? அப்பாவித் தமிழ்மக்கள் மீது குண்டுவீச எந்த விமானத்தளத்திலிருந்து போர்விமானங்கள் புறப்பட்டனவோ அந்த விமானத்தளத்தைப் பழுதுபார்த்துக் கொடுத்த இந்தியாவையா? ஆயிரக் கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எழுந்துநின்று குரல்கொடுத்தபிறகும் கள்ள மௌனம் சாதித்த இந்தியாவையா? பல்வேறு நாடுகள் ராஜபட்சேவைக் கண்டிக்க, அந்த பிணந்தின்னிக் கழுகுக்குப் பாராட்டுமடல் வாசிக்கும் இந்தியாவையா?

  1942 ஆகஸ்ட் 8ம் தேதி நள்ளிரவில், மும்பை காங்கிரஸில் காந்தி ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அன்று அவரது பேச்சு, அவரது வழக்கமான பாணியில் அமைந்திருக்கவில்லை. கடுமையாக இருந்தது.

  எங்களுக்கு உடனடியாக சுதந்திரம் வேண்டும்.. முடிந்தால், விடிவதற்குள்! செய் அல்லது செத்துமடி என்ற தாரகமந்திரத்தை இந்தியாவுக்குத் தருகிறேன். முடிந்தால் விடுதலை பெறுவோம்… அல்லது அதற்கான முயற்சியில் செத்துமடிவோம் என்று மும்பை நகரே அதிரும்விதத்தில் அந்த கிழட்டுச் சிங்கம் சீறியது.

  அந்த காந்தியால் தான்… அண்ணல் காந்தியால்தான் இந்தியா பெருமை பெற்றதே தவிர, அன்னை சோனியாகாந்தியால் அல்ல! அன்றைக்கு காந்திக்கு சுதந்திரம் பிறப்புரிமை, இன்றைக்கு பிரபாகரனுக்கு சுதந்திரம் பிறப்புரிமை. அதனால்தான் அந்தக் கிழட்டுச் சிங்கம் சொன்னதை இந்த இளம்புலியும் சொன்னது- “செய் அல்லது செத்துமடி!”

  இந்தியாவை அனுசரித்துப் போகும்படி நமக்கு போதிப்பவர்கள் காலச் சக்கரத்தில் ஒரு 60 ஆண்டு பின்னோக்கிய பயணம் செய்துகொண்டிருக்கிறார்களோ…. இது மகாத்மா காந்தியின் தேசம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களோ…. ஐரோப்பாவிலிருந்து அழகு சாதனங்கள் மட்டுமின்றி காந்திகள் கூட இறக்குமதி ஆவதை அவர்கள் அறியவில்லையோ.. அவர்களுக்கே வெளிச்சம்.

  இவர்களை மாதிரி ஆட்கள், தகுதியே இல்லாதவர்களிடம் போய் தட்டேந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் 1987 செப்டம்பரிலேயே மிகவும் தெளிவான தமிழில் பிரகடனம் செய்தான், எங்கள் இனத்தை எழுப்பிநிறுத்திய வீரத்தியாகி திலீபன்.

  இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்கவேண்டும். மற்றவர்களைக் கொண்டு அதை வெல்லலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது என்றான் அவன், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது. நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்த திலீபனின் வார்த்தைகளை தங்களுக்காக நாட்டைத் தியாகம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

  திலீபன் பேசியது, செப்டம்பர் 14ம் தேதி.. அதற்கு 40 நாளுக்கு முன், ஆகஸ்ட் 4ம் தேதி சுதுமலையில் பேசினார் பிரபாகரன். அந்தப் பேச்சு ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல் தலைமையின் பேச்சுக்கு இணையானதாக இருந்தது. 1987 ஜூலை 29ல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. அதை ஏற்கமறுக்கும் பிரபாகரனிடம், நீங்கள் இதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காதீர்கள் என்கிறது இந்தியா. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வருகிறார் பிரபாகரன். மறுவாரம், சுதுமலை கூட்டத்தில் மக்களைச் சந்திக்கிறார். அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் கவனத்தில் வைக்கப்படவேண்டியவை.

  நாம் இந்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எம் மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம் என்றார் பிரபாகரன். இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் வேறெவர் பேசமுடியும்? இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல். இந்தியாவுக்கு மட்டும் எப்படி இது விளங்காதுபோயிற்று? அந்த மக்களை, ராஜீவின் ராணுவம் பாதுகாத்த லட்சணம் என்ன?

  புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே, அவர்களை இங்கே வரவைத்து இவர்களுடன் மோதவிட்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார் ஜெயவர்தன. ஸ்மார்ட் ஆக இல்லாததால் தான், ராஜீவ் தரப்புக்கு இது புரியாமல் போயிற்று. தொப்புளாவது கொடியாவது என்று தப்புதப்பாக இந்தியா முடிவெடுப்பது அப்போதிருந்துதான். இந்த இந்தியாவின் துணையுடனா ஸ்மார்ட் பவர் பேர்வழிகள் தேரை நகர்த்தப் போகிறார்கள்!

  இவர்கள் தேரையும் நகர்த்தவேண்டாம், போரையும் நடத்தவேண்டாம். தாமதமில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் ஈடுபட தாமாகவே முன்வரும் ஈடுஇணையற்ற சக்தியான இளைய தலைமுறையினரைக் குழப்பாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

  வதை முகாம்களில் உள்ள மூன்று லட்சம் தமிழர்கள் என்ன செய்யப்படுவார்கள் என்பது கோதபாயவுக்கே தெரியாது. மகிந்த ராஜபட்சேவை என்ன செய்வதென்றே அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில், 180 நாளில் மீள்குடியேற்றம் என்று ராஜபட்சே சொல்வதை, வடிகட்டிய அறிவாளியான இந்தியாவைத் தவிர வேறெவரும் நம்பப்போவதில்லை. 880 சதுர கிலோமீட்டர் கொண்ட யாழ்குடாவில், 160 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

  இத்தனை ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடந்துவிடாத மீள்குடியேற்றம், 180 நாளில் வன்னியில் நடந்துவிடப் போகிறதா? அறிவுள்ளவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ராஜபட்சேவுக்கு கருணை மனு எழுதிக்கொண்டிருக்கமாட்டார்கள். நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியங்களாகத் திகழ்ந்தவர்கள் மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா போன்றோர். அவர்களைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் இருந்தால்தான், உண்மைகள் வெளிவரும்.

  அவர்கள் கோதபாயவின் பிடியில் இருந்தால், ஹிந்து பத்திரிகையின் மொழியில்தான் பேசவேண்டி இருக்கும். முல்லைத் தீவில் விமானத்திலிருந்து குண்டுவீசியது இலங்கை விமானப்படையினர் அல்ல, புலிகள்தான் விமானத்திலிருந்து குண்டுவீசினார்கள் என்றுகூட சொல்லவேண்டியிருக்கும்.

  இது நம்முடைய கருத்து மட்டுமல்ல. சர்வதேச அமைப்பான அம்னஸ்டியும் இதைத்தான் சொல்கிறது. தங்களுடைய மக்களைக் கைவிட்டுவிடாமல் பங்கருக்கு உள்ளே இருந்துகூட மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்கள் உள்ளேயும், ராஜபட்சே கும்பல் வெளியேயும் இருப்பது மனித இனத்துக்கே அவமானம். அந்த மருத்துவர்களை வெளியே கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் தேவை.

  ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான சர்வதேச சூழல் உருவாகியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் மாணவர்களாலும் இளையோராலும் நிச்சயமாக முடியும். தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த அரக்கர்கள் தள்ளப்படும்போதுதான், இலங்கையின் திமிர் அடங்கும். தமிழரின் குரல்வளையின் மீதான பிடி விலகும். இதன் முதல்படியாகஇ நடந்த இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகெங்கிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் திரையிடத் தேவையான முயற்சிகளை இளையோரும் மாணவர்களும் எடுக்கலாம். ராஜபட்சேயின் பொய்முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான முதல்படி இது.

  அடுத்த படி இதைவிட முக்கியமானது.

  எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்கிற யதார்த்தம் ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற ஆவன செய்ய ஆரம்பித்தாலே போதும், ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும்.

  தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கை தான். இதைச் சொல்வதற்காகத் தான் என்மீது தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறது. இதைச் சொல்வதுதான் தேசத்துரோகம் என்றால் அந்த முத்திரையைப் பெருமையுடன் ஏற்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த. மகிந்தவின் நண்பனான லசாந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதில் மகிந்தவுக்குத் தொடர்பிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.

  ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்…….. என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்திஇ ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.

  எனவே, ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான், அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான், கொதிப்பது அடங்கும். அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம். சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல ‘தகுதி’களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் “இந்தியாவின் போரை நடத்தியவர்கள்”.

  குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால், இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியது, குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத் தான்.குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்ற, சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன், உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம். அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலு, பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.) போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில், மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.

  தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழு, முதலில் முதல்வர் கலைஞரையும்,அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம். அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம், அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரை ஏன் பார்க்கவேண்டும், இவரை ஏன் பார்க்கவேண்டும், அவர் வந்துவிடுவாரா, இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகு, உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம். செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்ல, சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்க, தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்…. எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

  இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகு, உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள் தான்.

  ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும், ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும், ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.

  இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்கு, இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது. சர்வதேச அரங்கில்இ போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும். ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆக, எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.

  ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதை, அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம், நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.

  இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல், இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்ல, சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.

  மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வது, இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான். எனவே, துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காக, மனிதச் சங்கிலியோ,, அதைவிட மகத்தான பணியோ… எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சி, எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.

  பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்,

  நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்

  உதிர்ந்த மலர்கள்கூட

  ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!

  கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.

  வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை

  நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த

  நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்….

  ரத்தம் குடித்த ராஜபட்சிகளை

  சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்….

  இறக்கை என்பது இயற்கையின் எல்லை,

  இயலாதென்று முயலாதவர்கள்

  இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.

  முத்துக்குமாரின் நினைவோடு

  ஒட்டுமொத்த உலகத்தையும்

  திரும்பிப் பார்க்கவைத்த

  எங்கள் இளையோரின் அகராதியில்

  இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.

  அந்தப் பொடியன்களின் தலைமையில்

  உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்….

  களங்கத்தைத் துடைப்போம்… வரலாறு படைப்போம்!

  ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான், கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரை, எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்தி,இன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.

  தமிழ்க்கதிருக்காக,

  காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்

  - புகழேந்தி தங்கராஜ்