சனி, 2 ஜனவரி, 2016

ஓம்தமிழ் கலைச்சொல் செயலி

ஓம்தமிழ் கலைச்சொல் செயலி

ஓம் தமிழ் கலைச்சொல்01 : omthamizhkalaichol01
  புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது.
இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.
  முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம்.
ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ
https://play.google.com/store/apps/details…

ஓம்தமிழ்

முத்திரை-ஓம்தமிழ் :muthirai_omthamizh


நல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளியீட்டு விழா

அட்டை-நல்ல உரைநடை எழுதவேண்டுமா? : attai-nallaurainadaiezhuthavendumaa

‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ 

நூல் வெளியீட்டு விழா

  முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை, இராசரத்தினம் கலையரங்கில் மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 அன்று நடைபெற்றது.
  முதல் நூலை நூலாசிரியர் நன்னன் வெளியிட, தி.மு.க. பொருளாளர் மு.க.தாலின் பெற்றுக்கொண்டார்.
  மு.க.தாலின், தன்னுடைய வெளியீட்டுரையில், “தமிழை – தமிழாக எழுத வேண்டும் என்று 13 நூல்களை நன்னன் எழுதியிருக்கிறார். ‘தமிழ்படும்பாடு’ என்று 9 நூல்களை எழுதியிருக்கிறார். இதற்குத் தமிழனாய் நாம் பெருமைகொள்ள வேண்டும். நம்முடைய தலைவர் கருணாநிதியிடத்தில் மிகுந்த அன்பு கொண்டவர்; பாரதிதாசன் மீது தீவிர பற்றுக்கொண்டவர்; தொடக்கக் கல்வி, உயர்நிலைக்கல்வி என்று தனது பணியைத் தொடங்கிப் பேராசிரியராக உயர்ந்தவர்; அவர் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.
  திராவிட இயக்க உணர்வை ஊட்டித் தமிழுக்கு தொண்டு செய்து வருபவர்; தமிழ் மொழியை வளர்ப்பது, தமிழில் உள்ள பிழையைத் திருத்துவதை தன்னுடைய கடமையாகக் கொண்டு தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றி வருகிறார். அவர் தொகுத்துள்ள இந்த நூலில் அணிந்துரை எழுதியுள்ள தலைவர் கருணாநிதி, தவறான சொல் வழக்கை விலக்கி, சரியான சொற்களைப் பயன்படுத்தவும், தமிழைப் பிழையின்றி எழுதவும் இந்த நூல் உதவும் என்று பாராட்டியிருக்கிறார் ” எனக் குறிப்பிட்டார்.
  முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், “மாநிலக் கல்லூரியில் எனக்குப் பேராசிரியராக நன்னன் இருந்தார். அதை இந்த நேரத்தில் நினைவு கொள்ள விரும்புகிறேன். ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மாணவர்களுக்குத் தமிழை கற்றுக்கொடுத்தவர். நல்ல உரைநடையில் தமிழை எழுத வேண்டும், தமிழைப் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். இன்றைக்குத் தமிழை எழுதும் முறையும், பேச்சு முறையும் மாறுபட்டு விட்டது. பேச்சு தமிழுக்கும், எழுத்து தமிழுக்கும் இடைவெளி வந்து விட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பொருளை மிக விளக்கமாக அவர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் தமிழ் கடனாளியாகி விடும் என்று குறிப்பிடுகிறார். வழக்கில் இருந்து மறைந்து போன சொற்களைத் தேடிப் பிடித்து புதிய சொற்களை உருவாக்க வேண்டும். ” என உரையாற்றினார்.
  இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பரஞ்சோதி, புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் பாண்டுரங்கன், சட்டக்கதிர் இதழின் ஆசிரியர் சம்பத்து, திருவாட்டி பிரேமா அரியரன், தென்மொழி இதழின் ஆசிரியர் மா.பூங்குன்றன், திட்டக்குடி திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதல்வர் அழகேசன், பேராசிரியர் விசயலட்சுமி இராமசாமி ஆகியோர் பேசினர்.
  நிறைவாக நூலாசிரியர் முனைவர் மா.நன்னன் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் “இன்றைக்குத் தமிழில் உள்ள குறைகளை எடுத்து சொல்லித் திருத்துவதற்கு ஆள் இல்லை. காரணம் கேட்டால், வழக்கத்தில் வந்து விட்டது, மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் என்பது எளிமையாக இருக்க வேண்டும். தேவையற்ற சொற்களைப் பயன்படுத்தித் தமிழை சீர்குலைக்கக் கூடாது. என்னுடைய நூல்களை ஒரு பல்கலைக்கழகத்தில் கூட வாங்கிப் பயன்படுத்தவில்லை என்பது எனக்கு வேதனையான ஒன்று. என்னுடைய பழைய மாணவர்களைக் கொண்டு   ஓர் அமைப்பை தொடங்க இருக்கிறேன்.” எனக் கூறினார்.

 பெரிய அளவில்  காணப் படத்தை அழுத்தவும்!


10th Anniversary of STF murder of Trincomalee Tamil students

10th Anniversary of STF murder of Trincomalee Tamil students

[TamilNet, Saturday, 02 January 2016, 02:36 GMT]
Dr Kasippillai Manoharan and four other families will be commemorating the tenth anniversary of the murder of their sons extra-judicially executed by the Special Task force (STF) of the Sri Lanka Government on the 2nd January 2006. The high school students, all then nearly 20-years old, were spending an afternoon at a seafront in Trincomalee when the allegedly planned crime took place. Dr Manoharan told TamilNet that while he is disappointed with the Western powers who are acquiescing with Colombo to impose 'victor's justice' in SriLanka, he will continue to fight to seek justice for his son, and expressed his appreciation to the support he has received from individuals and organizations for his work.

Dr Manoharan said he has no faith in any investigations Sri Lanka Government takes on the students' murders, and only an internationally organized investigation will provide the justice he seeks.
Dr Manoharan reiterated that the STF officers Kapila Jayasekera and Vas Perera, part of the STF contingent sent to Trincomalee on the orders of the Defence Secretary and President's sibling, Gothabaya Rajapakse, and Udawatte Weerakody, a naval officer, were key players in the planning and execution of the murders.

Another key player in the massacre is alleged to be the Sinhala extremist and former DIG, H. Kotagadeniya, now reported to be residing in the U.S.
Culpability chart
Culpability chart
The STF team was sent to Trincomalee with the approval of Defence Secretary Gotabhaya Rajapakse before Christmas 2005, and Kotagadeniya was acting as an advisor to the Defence Ministry in Police matters. "Judging by events there is hardly any doubt that the attack on the students in a public place was conceived as teaching the Tamils a lesson...If not the details, the general form of the atrocity was planned at the highest level," the Rights organization UTHR concluded in its investigations. (UTHR, 1/2/10, pg. 14)

A commission of inquiry was established in November 2006 to investigate the incident along with 11 other deaths. However, the commission report, delivered directly to the Sri Lanka's President, was never made public.

No thorough investigation has ever been conducted and no one has been brought to justice for Ragihar’s murder, according to Amnesty's report.

"[T]he murder of the five young boys in Trincomalee became an early symbol of the legacy of impunity that would plague the Sri Lankan Government, both in its execution of the final war to defeat the LTTE and the continued suppression of legitimate dissent both during and after the war," Financial Times (FT) wrote on the murder.

In a classified memo written by US's Sri Lanka Ambassador Robert Blake in October 2006 to Washington, ten months after the extra-judicial execution of five students, Basil Rajapakse, another Presidential sibling, had told Ambassador Blake that Special Task Force (STF) was responsible for the killings, according a Wikileaks document.

The names and the dates of birth of the five students killed at the big harbor town are: (i) Manoharan Ragihar, DoB 22.09.1985, (ii) Yogarajah Hemachchandra, DoB 04.03.1985, (iii) Logitharajah Rohan, DoB 07.04.1985, (iv) Thangathurai Sivanantha, DoB 06.04.1985, and (v) Shanmugarajah Gajendran, DoB 16.09.1985.

Related Articles:
02.01.15   9th Anniversary of STF killing of Trincomalee students
02.01.14   Trincomalee students killing - 8th Anniversary
05.07.13   Twelve STF arrested for 2006 killing of five Trinco students
17.03.13   Kapila Jeyasekara, alleged killer of Trinco-5 students, appo..
02.01.13   Extra-judicial killings of Trinco-5 students by SL military ..
12.03.12   Dr. Manoharan rejects Colombo's proposal, demands release of..
29.01.12   STF killed Trinco students, Basil Rajapakse told Blake
02.01.12   Extra-judicial execution of Trincomalee students, Sixth anni..
14.04.11   SLA killed my son - Dr. Manoharan
30.01.11   US legal effort to seek justice for son's killing - Dr Manoh..
28.01.11   Rajapaksa sued in US Courts over war-crimes, plaintiffs seek..
02.01.11   Fifth Anniversary of Trincomalee Students execution
02.01.10   Fourth Anniversary of Trinco Students' extra-judicial killin..


External Links:
UTHR: Unfinished Business of the Five Students and ACF Cases – A Time to call the Bluff
UTHR: Official Secrets and Blind Justice: Fourth Anniversary of the Trinco Five Students’ Case
UTHR: The Five Students Case in Trincomalee
Wikileaks: Candid statements from Basil Rajapakse
UTHR: A Bullet for a Fig Leaf

வெள்ளி, 1 ஜனவரி, 2016

என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு வியப்பிறந்தது – பேரா.சி.இலக்குவனார்


தலைப்பு-முதலும்பொருளும் : thalaippu_muthalumporulum

என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது.
முதல் எனப்படுவது நிலம் பொழுதும் இரண்டின்
                 இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே யன்றோ ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும் உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது.
பேரா.சி.இலக்குவனார்:
தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 133
 அகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015

பொ.ப.சம்பந்தம் நினைவேந்தல், படத்திறப்பு

பொ.ப.சம்பந்தம் நினைவேந்தல், படத்திறப்பு

மார்கழி 18, 2046 / சனவரி 03.01.2016

 காலை 11.00

சென்னை

நினைவேந்தல்-சம்பந்தம்01 : azhai_sambanthamninaiventhal01 நினைவேந்தல்-சம்பந்தம்02 : azhai_sambanthamninaiventhal02
அகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015

தூண்டில் திருவிழா

அழை-தூண்டில்திருவிழா : ahzi_thuundilthiruvizhaa

தூண்டில் திருவிழா 

பள்ளி விடுமுறை நாட்களில் தூண்டிலோடுதான் சுற்றுவோம். கண்மாய், ஊருணி, ஏரி, குளம், குட்டை, ஏந்தல், தாங்கல் எனப் பல்வேறு நீர்நிலை அமைப்புகள் வருடம் முழுதும் தண்ணீர் நிரம்பி இருந்த பொற்காலம் அது. பசுமைச் சூழலில் மரமேறுதலும் கவட்டையும் நம் மரபு விளையாட்டாக இருக்கும் வரை பறவைகள் பற்றிய தொடக்கநிலை அறிவு நம்மிடம் இருந்தது. பின் வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுகிற போது இயற்கை பற்றிய அறிவு விரிவடையும். இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் மரபு அறிவியல் வளர்ச்சியின் இயல்பு இது. முக்குளிப்பான், சிறகி, நெய்காக்கா, நாரை, கொக்கு, ஆலா, உல்லான், மீங்கொத்தி, மரங்கொத்தி, வானம்பாடி, குயில், புறா, பனங்காடை, தைலாங்குருவி, ஆள்காட்டி, தேன்சிட்டு, ஆந்தை, பருந்து, கழுகு, கிளி, காகம், நாகணவாய், மயில், கீச்சான் என்று அதன் உருவத்தாலும் அவை எழுப்பும் ஒலியாலும் பறவைகளை அடையாளப்படுத்தும் அறிவு நம்மிடம் இருந்தது. அவ்வறிவை கவட்டை, மரமேறும் விளையாட்டு, வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி போன்ற பண்பாட்டுத் தொடர்புகளின் நீட்சியால் பெற்று இருந்தோம். அவ்வாறே மீன்கள் – நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய தொடக்க நிலை அறிவைத் தூண்டில், பானைப்பொறி, கொட்டுப்பொறி போன்ற மரபு முறைகளால் பெற்றிருந்தோம். கெண்டை, கெளுத்தி, குரவை, விரால், ஆரா, வெளிச்சி, உழுவை, அயிரை, விலாங்கு, தவளை, நண்டு, நத்தை, பாம்பு என்று நீர்வாழ் உயிரினங்களை அடையாளப்படுத்தும் தொடக்க நிலை அறிவும் நம்மிடம் இருந்தது. பின் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிற போது அவ்வறிவு விரிவடையும்.
உலகமயமாக்களின் விளைவால் இயற்கை பற்றிய மரபு அறிவை நாம் இழந்துவிட்டோம். இன்று நம்மைப் பொறுத்தவரை பறப்பது பறவை, நீந்துவது மீன், நிற்பது மரம் அவ்வளவுதான். நம் பிள்ளைகள் அறிந்து வைத்திருக்கும் ஒரே பறவை ‘சினப்பறவை'(Angry Bird) தானே. பறவைகள் அழிந்து வரும் சூழலில் கவட்டையை ஊக்கப்படுத்துவது அபத்தம், சட்டமீறல் என்ற போதும் பறவை இனங்கள் அழிவுக்கும் கவட்டைக்கும் தொடர்பு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். நீர், நிலம், மலை, காடு என இயற்கையை முதலாளிகளுக்காகக் கூறுபோடும் தனியாதிக்க உற்பத்தி முறையும் அதற்கு அடிபணியும் அரசுகளுமே நமது இயற்கை வளம் – பல்லுயிர் சூழல் அழிவுக்கு காரணம்.
இயற்கை மீட்பை பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டுத் தளத்தில் இருந்து தொடங்குவதே உலகமயத்திற்கு எதிரான மக்கள் திரட்சியை உருவாக்கும். அழிந்து வரும் நமது நாட்டு மீன்களை ஆவணப்படுத்தி மீட்கும் நோக்கோடு தூண்டில் திருவிழா நிகழ்வை கயல் நாட்டு மீன்கள் – மீனவர் வாழ்வியல் நடுவமும், மதுரை சூழலியல் பேரவையும் இணைந்து ஒருங்கிணைக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளை தங்கள் ஊர்களில் அனைவரும் செய்யலாம். நிகழ்வில் பங்கெடுக்க விரும்புவோர் அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும். வாய்ப்புள்ளோர் வாருங்கள், தூண்டில் போடலாம்!
இடம்: ஊருணி, நேசனேரி, திருமங்கலம், மதுரை 
நாள்: மார்கழி 18, 2046 / 03.01.2016,

ஞாயிறு, காலை 7.00 மணி 
தொடர்புக்கு: 8489723624, 989447961

தூண்டில் : thuundil