சனி, 18 செப்டம்பர், 2010

வெவ்வேறு மொழியில்உள்ள பெயர்களை ஒப்பிட்டு ஒற்றமை காண்பது தவறு. கிருட்டிணன் என்றால் கருப்பன் என்றுதான் பொருள். தமிழில் கண்ணன் என்று சொல்வதே சரி. எனவே, பெயர் ஒற்றுமை பொருந்தாது. இருவரும் தாய்மாரின் கணவன்மாருக்கப் பிறக்கவில்லை என்று சொன்னால்தான் உதைக்க வருவார்கள். இடையர் குலத்தைச் சேர்ந்த இருவரும் ஆடுமாடுகளை மேய்ப்பதுபோல் உலக மக்களை மேய்த்துப் பேணினார்கள் என்று நல்ல வகையில் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். கிறித்து மனிதர்க்காக வாழ்ந்து தெய்வ நிலையை எட்டியவர். கண்ணன் பல பெண்களுடன் உறவு கொண்டு கற்பு நெறி தவறிய கற்பனைப் பாத்திரம் என்று சொன்னால் பற்றாளர்கள் சினமடைவார்கள். கடவுளாகக் கற்பிக்கப்படும் கண்ணன் குறுக்கு வழிகளில்தான் தன்னை நம்பியவர்களுக்கு அவர்கள் பக்கம் நீதி இல்லை யென்றாலும் உதவி வெற்றி தேடித்தந்தான் என்று சொன்னாலும் உண்மையை ஆராயாமல் கண்ணை முடிக்கொண்டு அடிக்க வருவார்கள். நடுநிலையுடன் ஒப்பிட முடியாத பொழுது எதற்கு இந்த வீ்ண் வேலை. நான் ஒப்பீ்ட்டில் இறங்க விரும்பவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


                                     சில

தலித் அதிகாரிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது: ஜெயலலிதா

First Published : 18 Sep 2010 12:00:00 AM IST

Last Updated : 18 Sep 2010 12:50:30 AM IST

சென்னை, செப்.17: திமுக ஆட்சியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் என தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது.அந்த வகையில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல உதவி தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் மு. முருகன் தாக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார்.கடந்த 7-ம் தேதி வழக்கம் போல் அலுவலகத்திற்குச் சென்ற முருகன் வீடு திரும்பவில்லை.  ஆனால், மருந்து குடித்ததன் காரணமாக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வீட்டிற்கு தகவல் மட்டும் அனுப்பப்பட்டது.  அவரது மனைவி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தன் கணவரைப் பார்த்திருக்கிறார். தன் கணவரின் இடது தோள்பட்டைக்கு கீழ் ரத்த காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 9-ம் தேதி புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி முருகன் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.தனது கணவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்த அவரது மனைவி, 13.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், தன் கணவருக்கு குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ரேஷன் பொருள்கள் கடத்தல் தொடர்பாக முந்தைய மண்டல மேலாளர் மற்றும் சிலர் மீது நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்திடமும், காவல் துறையிடமும் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார்கள் வழங்கியதாகவும் கூறியிருக்கிறார். மேற்படி நபர்களால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று தன் கணவர் தன்னிடம் ஏற்கெனவே கூறியதாகவும், கொலையை மறைப்பதற்கான முயற்சி நடப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.மேலும், தன் கணவர் வழக்கமாக கையில் வைத்திருக்கும் டைரி மற்றும் பை தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.எனவே கொலையை தற்கொலையாக காவல் துறையினர் மாற்றி இருக்கின்றனரோ என்ற சந்தேகம் இப்போது அப்பகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது. ரேஷன் பொருள்களை கடத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை முதல்வர் கருணாநிதிக்கு இருந்திருந்தால், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும். மேற்படி கடத்தல் மற்றும் கொலை சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், மரணமடைந்த முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

உண்மையிலேயே திருந்தியிருந்தால் பழைய செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மாறாகத் தமிழினப் படுகொலைகாரர்களுடன் கூட்டணி வைத்துள்ளமையால் மக்களிடம் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை அறுவடை செய்தவற்கான தந்திரம் என்றால் எதிர்பார்த்த பயன் இருக்காது. முதல்வரும் ஆய்வாளர் மு.முருகன் இறப்பு குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவுதான் நலத்திட்டங்கள் புரிந்தாலும் தமிழினப் படுகொலை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள மாறா வடுவையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:13:00 PM
ஊழலின் முன்னாள் பணச் சாதி ஒன்றுதான் நிற்கும். இவர் குறிப்பிட்டவர்களெல்லாம் பாதிப்பிற்கு உள்ளானதன் காரணம் சாதியன்று. அவ்வாறிருக்க சாதி அடிப்படையில் குற்றம் சுமத்துவது பொருந்தாது. நேர்மையாகச் செயல்பட எண்ணுவோர் முடக்கப்படுகிறார்கள் என்று கூறினால் அது பொருந்தும். ஆனால் தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசு ஊழியர்கள் மீது பாச மழை பொழிபவர் எப்பொழுதும் எல்லார் மீதும் பரிவு காட்டலாமே. இவர் காலத்தில் கோப்புகள் போயசு தோட்டத்தில் உறங்கிக் கிடந்தமையால் நீதி கிடைக்காமல் போனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அரசு ஊழியர்கள் அனைவருமே தி.மு.க. என்று தவறாக எண்ணிக் கொண்டு முரட்டு நடவடிக்கை எடுத்ததை நினைவு படுத்தத்தேவையில்லை. எனவே, உண்மையிலேயே திருந்தயிருந்தால் பழைய செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மாறாகத் தமிழினப் படுகொலைகாரர்களுடன் கூட்டணி வைத்துள்ளமையால் மக்களிடம் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை அறுவடை செய்தவற்கான தந்திரம் என்றால் எதிர்பார்த்த பயன் இருக்காது. முதல்வரும் ஆய்வாளர் மு.முருகன் இறப்பு குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவுதான் நலத்திட்டங்கள் புரிந்தாலும் தமிழினப் படுகொலை மக்களிடையே
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:11:00 PM
ஆமாம் உன் தானை தலைவி முதல்வரா வருவார் அப்பா ராஜாச்சி அப்போது நீ தான் அவருக்கு குண்டி கழுவி விடனும் ஏன்டா அவருக்கு தான் தானாக எதையும் செய்ய தெரியாதே.நீ தான் கழுவனும் நீ தான் கழுவனும் .போடா புண்ணாக்கு நீயும் உன் கனவும் உன் வாயிலே பிஸ்கோத்தை தான் வைக்கணும்.
By periya karuppan.kadalur
9/18/2010 12:14:00 PM
jj! you donot give comments just to get votes. we want you to do really good to the people. you should not do welfare facility to a particular people only. the welfare schemes should reach everyone. but please stop giving long long statements. give brief statement but at the same time strong one.
By ram
9/18/2010 11:57:00 AM
Another honest officer victimised by Govt., Our sympathy with the family and we want justice
By Boodhi Dharma
9/18/2010 8:23:00 AM
Involment of political parties in this case is appreciable. But they should not advantage out of this case. Why congress and ruling party do not take part in this rally? It means politician from ruling party is acting behind the screen to suport the higher govt officals who have been alleged involed the suspected or abettment to the suiside. CBI inquiry is required to bring the truth to the public.
By m sundaram
9/18/2010 5:12:00 AM
புரட்சித் தலைவியின் ஆட்சி மலர்ந்ததும் ..... திருக்குவளை தீயசக்தியாம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தாக்கப் பட்ட தலித் அதிகாரிகள்.... பழிவாங்கப் பட்ட தலித் அதிகாரிகள்... மர்மமான முறையில் மரணமடைந்த தலித் அதிகாரிகள் சம்பந்தமாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் ! இந்த விசாரணைக் கமிஷன் அளிக்கும் அறிக்கையின் படி குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் ! மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் ! புரட்சித் தலைவி அவர்கள் இதனை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மக்களுக்கு நேரத்தோடு பிரகடனப் படுத்த வேண்டும் !!! நன்றி !!! @ rajasji
By rajasji
9/18/2010 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சீ.பிரபாகரன்

Wednesday, June 23, 2010

திராவிடரா? தமிழரா? எது நமது அடையாளம்? நான் தமிழன்!

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது.

கோவையில் தமிழக அரசால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாடு குறித்து முரசொலியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு,கருணாநிதி எழுதிய கடிதம் மற்ற நாளிதழ்களில் திமுக, தலைமைக் கழகத்தால் விளம்பரமாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தை, திராவிடர் நாகரீகத்தை, அவர் தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, தென்னகப் பலாக்கனியான் - திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை...” என்று எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்க, அதுவே தமிழரின் அடையாளம் எது? திராவிடரா? தமிழரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த விவாதம் சென்னை, தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி மைதானத்தில் திங்கட்கிழமை மாலை ஒரு கருத்தரங்கமாக துவங்கி நடைபெற்றது.

கருத்தரங்கின் முதல் பேச்சாளராக வந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் புகழேந்தி, தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது என்பதை தேவநேயப் பாவாணர் உறுதி செய்துள்ளதை எடுத்துக் கூறி, ஒரு மருவு எப்படி தொன்மையான தமிழினத்தின் அடையாளம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

தனது கடிதத்தில் திராவிடர், திராவிடம் என்று கூறி அடையாளப்படுத்த முயற்சிக்கும் தமிழக முதல்வர், திராவிடத்தின் அங்கமாகவுள்ள கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ தேர்தலில் நிற்கத் தயாரா என்று கேட்டது மட்டுமின்றி, தனது அடையாளம் என்ன, தன்னை திராவிடர் என்கிறாரா அல்லது தமிழர் என்கிறாரா என்பதை முதலில் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தமிழர் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வர அனுமதி பெற எந்த முயற்சியும் தமிழக முதல்வர் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றினார்.

தமிழ் மொழியின் வளமையை ஆய்வு செய்த அறிஞர் பலர், அதிலிருந்து பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை நீக்கிவிட்டால் அந்த மொழிகளே இருக்காது என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினால் அது மேலும் சிறப்புப் பெறும் என்று கூறினார்.

திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை என்று கூறிய தமிழறிஞர் அருகோ, அது தாயுமானவர் பாடிய பாடல் ஒன்றில் மட்டும், அதுவும் எதிர்மறைப் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாடிக்காட்டினார்.

செம்மொழி என்று கூறுவதால் தமிழிற்கு பெருமை ஏதுமில்லை என்றும், இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்க உள்ளார் என்றும் அருகோ கூறினார்.

“நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” என்று அருகோ கூறினார்.

தமிழ் மொழிச் சொற்களே வடமொழியில் உள்ள பெரும்பான்மை சொற்கள் என்று கூறி தனது உரையைத் துவக்கிய தமிழறிஞர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மாலையை குறிப்பிட, சூரியன் மேற்கில் சாயும் பொருள்பட நாம் கூறும் சாயங்காலம் என்றத் தமிழ்ச் சொல் சாய்ங்கால் என்றும், புவியைக் குறிப்பிட தமிழில் உள்ள பழவி என்ற சொலை பிருத்வி என்றும், பவழம் என்ற சொல் பிரவாகம் என்றும், படி என்ற சொல் பிரதி என்றும், தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் வாயில் நுழையாத காரணத்தால் ஒலி மாறி வடமொழியாக புழங்கிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் எந்த ஒரு காலத்திலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பேசப்பட்ட ஒரு மொழியல்ல என்றும், தமிழ் உட்பட வழக்கில் இருந்த பேச்சு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே அது என்றும் கூறிய பேரா.தங்கப்பா, திராவிடம் என்பது பொய் என்றார்.

அப்படி ஒரு பகுதி வரலாற்றில் இல்லை என்று கூறிய பேரா. தங்கப்பா, தமிழை ஆய்வு செய்த மொழியியல் ஆய்வாளரான கால்டுவெல் தமிழையும், அதிலிருந்து பிறந்த மற்ற தென்னாட்டு மொழிகளையும் திராவிடக் குடும்பம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம் என்று கூறினார்.

ஈழத்தில் தமிழினப் படுகொலைக்குப் பின்னர், தமிழர்களிடையே உருவாகிவரும் தமிழ்த் தேசிய உணர்வைக் கண்டு அச்சமுற்றதாலும், எங்கே அந்த வரைமுறைக்குள் தன்னால் வர முடியாதோ என்கிற அச்சத்தாலுமே திராவிடர், திராவிடம் என்றெல்லாம் கருணாநிதி பேசுவதாக தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூறினார்.

“ஒரு மருந்து காலாவதியாகும் போது அது விஷமாகிறது, அதுபோலவே, திராவிடம் என்பது இப்போது பொருளற்றதாகிவிட்டது” என்று கூறிய புலமைப் பித்தன், தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லால் தமிழை மீட்டார். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திருக்காது என்றார்.

1956ஆம் ஆண்டுவரை தமிழுக்கு திராவிடம் அரணாக இருந்தது, இன்றைக்கு அது தேவையற்றதாகிவிட்டது என்று கூறிய புலவர் புலமைப்பித்தன், தமிழர் என்ற அடையாளத்தை கண்ட பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், ஆங்கில வரலாற்றாளர்கள் எழுதியுள்ளது போல், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

தமிழரின் முன்னேற்றத்திற்கு எதிராக இருந்த ஒரு சமூதாயத்தினை எதிர்த்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார், திராவிடர் என்று அடையாளத்தை பயன்படுத்தினார் என்று கூறிய அய்யநாதன், அது அரசியல் அடையாளமாக்கப்பட்டப் பிறகு, தமிழரின் மு்ன்னேற்றத்தைத் தடுக்கும் மற்ற மொழிச் சக்திகளும் தமிழர் அரசியலில் ஊடுறுவ வழி வகுத்துவிட்டது என்றும், இந்த நிலை மாற, தமிழர் என்ற ஒரே அடையாளத்தை தங்களது மொழியை, இனத்தை, பண்பாட்டை, அரசியலை காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் கொள்ள வேண்டும் கூறினார்.

இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழக்ம கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது. இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.

தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே.

ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. 6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.

ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்?

இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை.

சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.

எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர். நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது” என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி - எங்கள் தாய் மொழியின் வழி - ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு. இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக ‘திராவிடர்’ என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது”.

தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.

முற்றும்.

நன்றி:வெப்துனியா.காம்

5 comments:


துளசி கோபால் said...
எனக்கு ஒரு ஐயம் இருக்குதுங்க.
பிரகடனம் என்ற சொல் தமிழ்ச்சொல்லா?
maruthu said...
இதில் என்ன குழப்பம் இருக்கிறது?தமிழ் நாட்டில் இருக்கும் கருப்பு சட்டை பன்றிகள் திராவிட தமிழர்கள்;ஏனைய தமிழ் பேசும் மக்கள் தமிழர்களாவர்.
thiru said...
பிரகடனம் தமிழ்ச் சொல் அன்று. நேர் பொருள் வெளிப்படுத்தல் என்பதுதான். செய்தியை வெளிப்படுத்தல் என்ற வகையில் இதுவும் சொல்லுதல் என்னும் பொருளே தருகிறது. தமிழில் சொல்லுவதற்கு அவ்வாறு சொல்லும் முறைக்கேற்ப, இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், நவிறல், கத்துதல், உரைத்தல், கூறல், வழங்கல், குயிலல்,புகலல், பேசுதல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செப்பல், அதிர்த்தல், பணித்தல், சொல்லல், ஆடல்,சொல்லுதல், முதலான பல சொற்களும் ,இவற்றிற்கும் வெவ்வேறு வகைப்பாட்டுச் சொற்களும் உள்ளன. பறையறைந்து அரசாணையை வெளிப்படுத்தவதைக் குறிக்கும் பறைதல் என்னும் சொல்லே பிரகடனம் என மாறியிருக்க வேண்டும். எனவே, பிரகடனம் என்னும் சொல்லைத் தவிர்த்து,பறையறிவிப்பு / பறையறிந்தார் என்றாவது இது புரியாது எனக் கருதினால் அறிவிப்பு/அறிவித்தார் என்றாவது குறித்தல் வேண்டும். விளக்கமளிப்பதற்கு வாய்ப்பாக வினா தொடுத்த துளசி கோபாலுக்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
துளசி கோபால் said...
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்,

அருமையான விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி.
செம்மொழி மாநாட்டில் அவ்வப்போது அறிக்கைகளை 'பிரகடனம்' செய்துகொண்டிருந்த துணை முதல்வரின் சொற்பொழிவால் எனக்கு வந்த ஐயம் இது. தீர்த்தமைக்கு நன்றி. வாழ்க 'செம்மொழி'யாம் தமிழ் மொழி!
seeprabagaran said...
துளசி கோபால் அவர்களுக்கும் அவரின் ஐயத்தை போக்கிய மரியாதைக்குரிய இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள். மருது அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்... கருணாநிதி போன்று தமிழினத்திற்கு துரோகம் செய்யும் ஒரு சிலரை மட்டும் மனதில் கொண்டு ஒட்டுமொத்தமாக கருப்புசட்டைகாரர்கள் அனைவரையும் இழிவு படுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மான உணர்வோடு தமிழினத்திற்காகவும் தமிழுக்காகவும் ஈகம் செய்த கருப்புசட்டைக்காரர்கள் ஆயிரகணக்கானோர் உள்ளனர். அவர்களின் ஈகத்தால் விளைந்த பயனை தமிழினம் அனுபவிக்க விடாமல் அதை கருணாநிதி போன்றவர்கள் குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார்கள்.
தொடர்பு எல்லைக்கு வெளியே...
First Published : 18 Sep 2010 12:00:00 AM IST


அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில், செல்போனில் சிக்னல் கிடைக்காததால்  செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களை எல்லாம் நகைச்சுவை நடிகர் ஒருவர் திட்டித் தீர்ப்பது போன்ற ஒரு காட்சி. பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும், செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை அது. அன்றாட வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டதைப்போல பெரும் இம்சையாகவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட செல்போனில் ரீசார்ஜ் செய்யும் வசதி  வந்துவிட்டது. ஆனால், பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல அது. சட்டைப்பையில் 5 ரூபாயைக்கூட வைத்திருக்கவிடாமல் பறித்துக் கொள்ள செல்போன் நிறுவனங்கள் வகுத்துள்ள உத்தியாகத்தான் கருத வேண்டும். மக்களின் செல்போன் மோகத்தைப் பயன்படுத்தி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெரும் கொள்ளையே அடிக்கின்றன. செல்போன் எண்களை வணிக நிறுவனங்களுக்குத் தந்து தேவையற்ற அழைப்புகளுக்கு வழிவகை செய்வது ஒருபுறம் என்றால், சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் காசு பறிப்பது மற்றொரு புறம். ரிங்டோனை தேர்வு செய்யக் கட்டணம், அதைப் பதிவிறக்கம் செய்யக் கட்டணம்.  "விருப்பமானவங்க கால் செய்யும்போது அவங்க விரும்பும் பாடலைக் கேட்கச் செய்யுங்க' என்று விளம்பரம் செய்து காலர் டியூனை செயலாக்கம் செய்யக் கட்டணம் என எதற்கெடுத்தாலும் கட்டணம்தான். பேலன்ஸில் உள்ள தொகையில் திடீர் திடீரென |30 குறையும். வாடிக்கையாளர்  சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டால், "எஸ்.எம்.எஸ். பேக் உங்கள் எண்ணுக்கு தவறுதலாகத் தேர்வாகிவிட்டது. அடுத்த மாதம் இந்தச் சேவையை நீக்கிவிடுகிறோம்' என்பார்கள். கட்டணம் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டால் குறைந்தது குறைந்ததுதான் என வருத்தமேயின்றிச் சொல்வார்கள். பிடித்தமானவர்கள் போன் செய்யும்போது காலர் டியூனால் மகிழ்விக்கலாம் என்றால், "இந்த காலர் டியூனை காப்பி பண்ண எண் ஒன்றை அழுத்துங்கள்' என்ற விளம்பரத்தைத்தான் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும்.  சில நிறுவனங்கள் தங்களுக்குச் செல்போன் கோபுரம் இல்லாத பகுதியில் இணைப்புக் கிடைக்காததை மறைத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றன. 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 42.50 ரூபாய்க்குத்தான் பேசலாம். எப்பேர்ப்பட்ட பகல் கொள்ளை இது. முழுத் தொகையும் கணக்கில் ஏறும் வசதி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆலோசனை செய்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் "மனசு வைத்தால்' மட்டும் அவ்வப்போது முழு "டாக் டைம்' வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். அது மட்டும் செல்போன் நிறுவனங்களுக்கு கட்டுபடி ஆகிறதா என்ன? "ஆட்-ஆன்' எண்களைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பேசுங்கள் என்ற சலுகையை அனைத்து நிறுவனங்களுமே அளிக்கின்றன. ஆனால், அதற்கு மாதந்தோறும் தனி வாடகை. 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, குறைந்த அழைப்புக் கட்டணத்தில் பேச வேண்டுமானால் தனியாக ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக ஏமாற்றுகின்றன. இப்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணையதள சேவையிலும் இறங்கியுள்ளன. அதிலும் செல்போன் பயன்படுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இல்லை. இலவச "டவுண்லோட்', "அன்லிமிடெட் பிரவுசிங்' என்றெல்லாம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தாலும் "பேலன்ஸ்' தொகை மொத்த மொத்தமாக காலியாவதுதான் மிச்சம். காரணம் கேட்டால் உரிய பதில் கிடைக்காது. மாதந்தோறும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை. இதனால், செல்போனில் பேசும்போது தெளிவாகக் கேட்காதது, பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் இணைப்புத் துண்டிக்கப்படுவது என பல சிரமங்கள். மொத்தத்தில் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சேவையைப் பொறுத்தவரை தொடர்பு எல்லைக்கு வெளியேதான் உள்ளன.
சரியாக எழுதிச் சரியாக முடித்துள்ளார் கட்டுரையாளர் திரு இராசாராம். பாராட்டுகள். அலைபேசி நிறுவனங்கள் என்று திருத்திக் கொள்ளுமோ?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 4:05:00 AM
*
தினமணி செய்தி எதிரொலி: தமிழில் ரயில்வே கால அட்டவணை வெளியீடு


தெற்கு ரயில்வே சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை புத்தகத்தின் முகப்பு அட்டை.
சென்னை, செப். 17: தமிழில் ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.   தெற்கு ரயில்வே மண்டல அளவில் இந்த ஆண்டுக்கான (2010) கால அட்டவணை ஆங்கிலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இதேபோல தமிழிலும் ரயில்வே கால அட்டவணையை வெளியிட வேண்டும் என்று தினமணியில் செய்தி வெளியானது.  இதையடுத்து, தமிழில் ரயில்வே கால அட்டவணையை வெளியிட தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.  இதைதொடர்ந்து, கடந்த இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் தென்மண்டல அளவிலான ரயில்வே கால அட்டவணை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. எளிய தமிழில் 358 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள இந்த கால அட்டவணையின் விலை ரூ. 30. இதன் முகப்பு அட்டையில் ராமேசுவரம் ரயில்வே பாலம் மற்றும் ராஜமுந்திரி ரயில்வே பாலம் ஆகியவற்றின் படங்கள் இடம் பெற்றுள்ளன.பயணிகளுக்கான விவரங்களின் தொகுப்பு: இதில், கால அட்டவணையைப் படிக்கவும், பயன்படுத்தவும் அட்டவணை எண்களுடன் கூடிய வரைபடம் மூலம் வழிகாட்டப்பட்டுள்ளது. அனைத்து இந்திய மற்றும் தென்னிந்திய அளவிலான ரயில் பாதைகள் குறித்த வரைபடங்களும் இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே ஆகிய 4 மண்டல அளவில் அனைத்து தகவல்களும் இதில் உள்ளன. ரயில்களின் புறப்படும், சேரும் இடங்கள், சேவை நேரம், துரந்தோ, யுவா, ராஜதானி, சதாப்தி, ஜன் சதாப்தி, சம்பர்க் கிராந்தி ஆகிய வண்டிகளுக்கான அட்டவணை, சுற்றுலா இடங்கள், தங்கும் வசதி, மற்றும் பயணிகளுக்கான பல்வேறு தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இது தவிர முன்பதிவு மையங்கள், முக்கிய தொலைபேசி எண்கள், டிக்கெட் தொகையை திரும்பப் பெறும் வசதி, பயணிகளுக்கான ஓய்வு அறை உள்ள ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மேலும் பல தகவல்களும் இந்த கால அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளன.பார்வைத் திறனுக்கு சவால்:  எனினும், இந்த கால அட்டவணையில் பெரும்பாலான பக்கங்களில் உள்ள தகவல்கள் மிகச் சிறிய வடிவிலான (ஃபாண்ட்) எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளதால், பயணிகளின் பார்வைத் திறனை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கால தாமதம் ஆகியதால் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.  ஓரிரு நாள்களில் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள புக்கிங் அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களில் இந்த ரயில்வே கால அட்டவணை விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

தினமணிக்குப் பாராட்டுகள்! இனி அச்சிடுகையில் ஒப்பிற்கு அச்சிடாமல் மக்கள் பயனுறும் வகையில் இயல்பு எழுத்துகளில் அச்சிடுக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெருமழைப் புலவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் உத்தரவு

First Published : 18 Sep 2010 12:00:00 AM IST


சென்னை, செப். 17: மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தினரின் வறுமை நிலை கருதி ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்து ஆகஸ்ட் 7-ம் தேதியிட்ட "தினமணி'யில் செய்தி வெளியானது. அன்றைய தினமே பெருமழைப் புலவரின் இல்லத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார், தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் கபிலர்.இதனிடையே, மறைந்த பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் வறுமை நிலை கருதி தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவாரூர் மாவட்டம், மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ல் பிறந்தவர் பொ.வே.சோமசுந்தரனார். ஆழ்ந்த தமிழ்ப் புலமை பெற்ற அவர், திருவாசகம், நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற 21 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். செங்கோல், மானனீகை முதலிய நாடக நூல்களையும் இயற்றிய தமிழறிஞர்.அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்புகள் பலவற்றைக் கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய திருமகன் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் கடந்த 1972-ல் இயற்கை எய்தினார். பெருமழைப் புலவரின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் சிரமங்களுக்கு ஆளாகி இப்போது அவருடைய வாரிசுகள் வறுமையில் வாடுவதாகப் பத்திரிகைகள் வாயிலாக முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குச் செய்திகள் வந்தன.பெருமழைப் புலவரின் நூல்களை அரசுடைமையாக்குவதில் பிரச்னைகள் இருக்கின்றன. இப்போதுள்ள சூழலில் அவரது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்காக உதவும் நோக்குடன் அவரின் குடும்பத்துக்கு உதவி நிதியாக தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் அளிக்கப்படுகிறது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

கலைஞருக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள்! கோரிக்கை வைத்தவர்களுக்கும்தினமணி, குமுதம் ஆகியவற்றுக்கும் நன்றிகள். பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரானர் புகழ் ஓங்குக! 
மகிழ்ச்சியுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கையை பின்பற்ற வேண்டும்: கோத்தபய


கொழும்பு, செப்.17- பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாக பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.
மேலும், போரின் இறுதிநேரத்திலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முந்தைய நாளில்கூட பதில் தாக்குதல் ஒன்றை நடத்தி தப்பிச்செல்ல முயற்சி செய்தனர் என்றும் கோத்தபய கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ராணுவத்தினர் ஏராளமான இழப்புகளுக்கு இடையில் வெற்றியைத் தொட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே தான் கடைசி நேரத்தில் யுத்த நிறுத்தத்துக்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

பொதுவாக எல்லா நாட்டு அரசுகளும் ஆளும்கட்சிக்கு எதிரானவர்களையும் குடிமக்கள் காவலர்களையும் மண்ணின் மைந்தர்களையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு வன்முறை நாச வேலைகளில் ஈடுபட்டுத்தான் வருகின்றன. ஆனால் இலங்கையோ பிற நாடுகளின் வஞ்சகத் துணையுடன் இன அழிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனை வெற்றி எனக் கருதி மமதையில் ஆர்ப்பரித்தும் வருகின்றது. எனினும் அதற்குரிய விலையை விரைவில் கொடுக்கத்தான் போகிறது. அப்பொழுது தெரியும் பிற நாடுகளுக்கு இன அழிப்பினால் அடையப் போகும் இழப்புகளும் தண்டனைகளும் என்ன வென்று. அதுவரை வெற்றி முரசு கொட்டி ஆர்ப்பரிக்கட்டும் போர்க்குற்றவாளிகள்.! விரைவில் பிணப்பறை ஒலிகளை நாம் கேட்போம்! இன அழிப்பாளர்கள் விரைவில் அழிவார்களாக! மண்ணின் மைந்தர்கள் வெற்றி பெறுவார்களாக! விடுதலைப் போராளிகளின் புகழ்க் கொடியும் வெற்றிக் கொடியும் எங்கும் பரப்பதாக! அறம் வெல்வதாக! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:31:00 AM
The Victory is very highly temporary just wait for three more months and see the reality.
By Mundane astrologer
9/17/2010 8:30:00 PM
சிதம்பரம் அவர்களே, கோத்தபய ராஜபட்ச அருமையான ஆலோசனை கூறியுள்ளான். அவன் கூறியுள்ளபடி தாங்களும் இந்தியாவில் காஷ்மீர் தீவிரவாதத்தையும் மாவோயிஸ்ட்களையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கைக்கு இந்தியா உதவியது போல் இலங்கையின் உதவியையும் முழுமையாக இந்தியா பெற்றிட தாங்களே ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவிலும் அமைதி நிலவிடும்.
By அண்ணாத்தம்பி
9/17/2010 7:23:00 PM
Shut your bloody mouth Gothbhaya Rajapakshe, we know and the world knows how you defeated the freedom fighters and how you and your whole family and the bloody politicians are trying to woo some of the betrayers lest without doubt soon you will be hanged with the other members of your family by the International Court of Justice. Do you think you defeated them? Never say it again, you cowardly...., you could not defeat this organisation whom you call terrorists for the last thirty years with your shivering and pissing army men in any way you liked except bobming the civilians. And you know this is the only way to bring out the cadres and bomb them. Do you call this cowardly act victory why even it is war? If they had one tenth of your firpower, all your balls would have been roasted and all vultures in Srilanka and South Asia would have been fed. Don't gloat over the victory, wait and see, and prepare for a bigger war in which you will run for mercy and forgiveness
By John Christopher
9/17/2010 5:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இலங்கை மீதான போர்க்குற்றப் புகார்: ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு விசாரணை துவக்கம்


வாஷிங்டன், செப்.17: இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையிலுள்ள முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைத்தது.ஆனால் நிபுணர் குழு இலங்கை வந்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசியது. இதைத் தொடர்ந்து தங்களது விசாரணைப் பணிகளை குழுவினர் துவக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாள்ர் மார்ட்டின் நேசிர்க்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் இலங்கை வரும்போது குழுவினருக்கு விசா அளிக்க மாட்டோம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் காமினி லட்சுமண் பெரிஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

விரைவில் விசாரணையை நடுநிலையுடன் முடித்து இலங்கையிலும் இந்தியா முதலான பிற நாடுகளிலும் உள்ள போர்க்குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கட்டும். எந்த ஒரு நாட்டிலும் இனிப் போர்க்குற்றங்கள் நடைபெறா வண்ணம் தண்டனை அமையட்டும்! அறம் வெல்க! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 3:10:00 AM