சனி, 1 மே, 2010

தொழிலாளர் நாள்




பஞ்சாபி மொழியில் அமைச்சர் பதில்: முன்னதாகவே தெரிவிக்க மீராகுமார் அறிவுறுத்தல்



புதுதில்லி, ஏப்.30: மக்களவையில் துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா பஞ்சாபி மொழியில் பதிலளித்தார். முன்னதாகவே அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் இவ்வாறு பேச நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை என மக்களவைத் தலைவர் மீராகுமார் அவரிடம் தெரிவித்தார்.காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா எழுப்பிய துணைக் கேள்விக்கு காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அப்துல்லா பஞ்சாபி மொழியில் பதிலளித்தார். பஞ்சாபி மொழியில் அமைச்சர் திடீரென பதிலளிக்கத் தொடங்கியதும் அவையில் எம்பிக்களிடையே சிரிப்பு ஏற்பட்டது. எனினும் காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான குலாம் நபி ஆஸாதின் உதவியுடன் ஃபரூக் அப்துல்லா பதிலளித்து முடித்தார்.அவர் பதிலளித்ததும், இந்தி அல்லது ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் பேச வேண்டுமானால் அதுகுறித்து முன்னதாகவே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என மக்களவைத் தலைவர் அவரிடம் தெரிவித்தார்.அப்போதுதான் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரும் புரிந்துகொள்ளச்செய்யலாம் என மீராகுமார் தெரிவித்தார்.
கருத்துக்கள்

துணைக் கேள்விகளுக்கான மறுமொழிகளைப் பிற மொழிகளில்முன்கூட்டித் தெரிவித்துவிட்டு அளிக்கலாம் என்னும் பொழுது ஏன் உரைகளைப் பிற மொழிகளில் ஆற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக்கூடாது. முன கூட்டித் தெரிவித்தால் மொழி பெயர்ப்பு வசதி அளிக்க இயலும் என்னும பொழுது இதனை விரிவாக்கி உடனுக்குடன் மொழபெயர்க்கும் வசதியாக மாற்றக் கூடாது? ஏக இந்தியா என்று இந்தியைத் திணிப்பதையே மத்திய அரசு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் தேசிய மொழிகளின் உரிமைகள் நசுக்கப்படும் நிலையே உள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை புது தில்லி சென்று வரும் அமைச்சர்அழகிரி இந்தி நீங்கலான பிற தேசிய மொழிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து தேசிய மொழிகளின் சம உரிமைக்குப் போராடி வெற்றி காணலாமே! இவ் வெற்றி தமிழக அரசியலில் முன்னிலை பெறவும் அவருக்கு வாய்ப்பை உருவாக்கித்தருமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (அப்துல்லா தன் தாய்மொழியில் உரையாற்ற வில்லை.இது போல் தமிழ் அறிந்த பிற மொழி அமைச்சர்களும் தமிழில் பேச வாய்ப்பு ஏற்படும்)

By Ilakkuvanar Thiruvalluvan
5/1/2010 3:59:00 AM

இந்த விழாவை பாகிஸ்தானில் நடத்த முடியுமா? அமிதாப்பச்சனால் இந்த விழாவை பாகிஸ்தானில் நடத்திவிட்டு மும்பைக்கு திரும்ப முடியுமா? இது தான் தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் திரையுலகத்தினர் முன்வைக்கும் கேள்வி. அவர்களின் ஆதங்கத்திலும் ஒரு காரணம் உண்டு. நான்காம் ஈழப்போர் உக்கிரம் அடைந்த காலப்பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். காயமடைந்து சாவின் விளிம்புக்கே போய்க்கொண்டிருந்த ஈழத்தமிழரை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தியது சிங்கள தேசம். அவர்களின் இராணுவம் ஈழத் தமிழரின் குருதியையே குடித்து ரசித்ததாக களத்தில் இருந்து வந்த பல செய்திகள் கூறின. ஆனால் கோடான கோடி தொப்புழ்கொடி உறவுள்ள தமிழ் நாட்டின் தன்மானத் தமிழர்கள் மீளமுடியாத சோகத்தில் மூழ்கியிருந்தார்கள். ஏன் 17-க்கும் அதிகமான மானத்தமிழர் தமது உயிரை தீக்கு இரை கொடுத்தாவது வட இந்தியாவின் ஆதிக்கவாதிகளின் மனக்கதவுகளையேனும் திறந்து ஈழத் தமிழரை காப்பாற்றலாமென்று எண்ணினார்கள். நடந்தது என்ன? வட இந்திய வல்லாதிக்கம் மென்மேலும் ஆயுதங்களை கொடுத்து ஈழத் தமிழரை அழித்தது. ஈழம் எரிந்துகொண்டிருந்த நேரம் மற்றும் த

By Ragu
5/1/2010 12:49:00 AM

Bull shit!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!India never respect human being at all. Indian people also discriminated in India !இது தொடர்பாக பிரபாகரனின் தாயாரின் கடிதம் பெறப்பட்டு இரு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அக்கோரிக்கையை அனுப்பிவைக்கவேண்டும், மத்திய அரசு அதன் பின் 4 வாரங்களுக்குள் அதன் மீதான முடிவினை தெரிவித்துவிடவேண்டும் என வெள்ளிக் கிழமை நீதிமன்றம் உத்திரவிட்டது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி கூறியிருந்தார். தமக்கு முன்பு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று 2003 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் இருந்த நடுவணரசு அதிகாரிகள் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதாக தமக்கு தெரிய வந

By Rama@hotmail.com
5/1/2010 12:05:00 AM

SINGALA DOG WRITING IN FAKE TAMIL NAMES SHOULD KNOW VERY WELL BEFORE WRITING. THERE ARE 28 FEDRAL STATES AND 7 UNION TERRITORIES IN UNION INDIA. SINGALAVA DOG DON'T THINK THAT ONLY OPEN QUOTA STUDENTS ARE EXCELLENT. THERE ARE MANY EXCELLENT STUDENTS FROM QUOTA WORKING VERY WELL AROUND WORLD. CLEANING TOILET IS NOT VERY BAD PROFESSION AS SINGALA DOG THINKS. IT IS A RESPECTABLE JOB IN ANY PART OF THE WORLD EXPECT INDIA WHERE THIS JOB DOING PEOPLE ARE DISCRIMINATED FOR MORE THAN 2000 YEARS BY THE MASTERS OF SINGALAVA DOG, BHRAMINS IN THE NAME OF CASTE. THE KIDS OF THESE TOILET CLEANERS LEARN AND RESPECT THEIR TAMIL CLTURE VERY WELL THAN THE CHILDREN OF SINGALAVA DOG AND THEIR MASTER BHRAMINS. NO ONE HAS ANY RIGHT TO DENOUNCE ANY PROFESSION AND DISCRIMINATE THEM. IF ANY FURTHER DISCRIMINATIONS OF ANY JOB IS CARRIED OUT THEY WILL BE CHARGED LEGALLY.

By Paris EJILAN
4/30/2010 10:23:00 PM

இந்தியா ஒரே நாடு ஒரு தாய் மக்கள் என்று கூறும் போது ஒருவர் ஏன் அவர் தாய் மொழியில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் அவையில் போசக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள மற்றவர்களுக்கு பொறுமை கிடையாது என்றால் இந்தி ஆங்கிலம் தெரியாதவர்கள் நிலையும் அதுதானே. தாய் மொழியில் பேசக் கூடாது என்று கூறினால் நமக்கு ஏன் சுதந்திரம்? இந்தியாவை வெள்ளைக்காரர்களை ஆண்டிருக்கலாமே. அழகிரி தமிழில் பேசவே பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லை என்றால் அவரது செய்கையை அணைவரும் பாராட்ட வேண்டும். இந்தி என்பது அதிகமானோர் பேசும் மொழி மட்டுமே தேசிய மொழி இல்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது. தாய் மொழியாக இந்தி பேசம் பாரளுமன்ற உருப்பினர்களின் எண்ணிக்கையை விட பிற மொழி பேசுவேரே அவையில் அதிகம் இருப்பர். அமைச்சர் அப்துல்லா பஞ்சாபி மொழியில்பதிலளித்தது வரவேற்கத்தக்கது. இந்தியை திணிப்பவர்களுக்கு நாசூக்காக உணர்த்தி விட்டார். மொழிபே பிரச்சினை என்றால் அழகிரி பாராட்டத்தக்கவர்.

By Unmai
4/30/2010 10:03:00 PM

This is India. The forum is Parliament, where representatives of 25 states and 9 Union territories present. In the country 14 National Languages got official status. But to transact business in the parliament, the language should be the one which is understandable by all or supposed to be understandable by all. For that English being the link language is there. This is not Srilanka, the whole island is not bigger than our Maharashtra or Madhya Pradesh or Andhrapradesh. Peelam urinating animals beware don't drive wedge in this country. Shame on you. You and your kids are speaking for begging & cleaning toilets by very fluently in German, Spanish, French, and what not...yes what not...that is the language spoken by the another set of people of the island i.e., singalam. Shame on you and your kids. You are urinating on your own face. But those escaped from Vanni Sudalai Andavan, Bunkar Paramasivan, Parabhakaran, they and their kid speak singalam also.

By Also Tamil
4/30/2010 9:16:00 PM

Paris Ejilan, It is a pity that Thamizh is not accepted as an official language of the Union. It is one of the National languages, though. They would never make Thamizh an official language of the union instead they always try to impose their language. People are still required to have at least some kind of proficiency in the majority language to get in to Federal services, even if the offices are located in Thamizh Nadu. This forces some parents to have their kids get proficient in hindi. The status of respect for Thamizh is not any better here than in the island, except people are not discriminated against that extreme.

By Raja
4/30/2010 8:43:00 PM

HINDI LIKE OTHER LANGUAGES IS THE OFFICIAL LANGUAGE OF THE UNION INDIA. HINDI IS SPOKEN BY AROUND 40% OF THE POPULATION OF UNION INDIA. IT IS NOT THE LANGUAGE OF ALL PEOPLE LIVING IN UNION INDIA. IN SUCH CASE WHY PEREFERNCE IS GIVEN TO THIS LANGUAGE. SO IN UNION INDIAN PARLIMENT ALL LANGUAGES OF THE UNION INDIA SHOULD BE USED AND NOT ONLY ENGLISH AND HINDI.

By Paris EJILAN
4/30/2010 8:21:00 PM

Folks, Do not be slaves. If it is your country, you should be able to speak in your language anywhere, especially in law making parliment. It is your inalienable rights and it is not something done on favor.

By Raja
4/30/2010 7:56:00 PM

அப்போது தமிழிலும் பேசலாம் போலிருக்கே ? ராஜு www.tamilish.com

By raju
4/30/2010 5:08:00 PM

என்னது, அப்படியென்றால் முன்னரே நோட்டீஸ் அளித்து தமிழிலும் பதில் அளிக்க முடியுமா? அப்புறம் ஏன் அஞ்சாநெஞ்சர் அழகிரி தமிழில் பேச அனுமதிப்பதில்லை என்று கூட்டங்களைத் தட்டிக்கழிக்கிறார்?

By சரவணன், சென்னை
4/30/2010 4:43:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

ருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம் – தமிழருவி மணியன்

உலகின் பிற பகுதிகளில் நாகரிகம் மெள்ள எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலகச் சகோ தரத்துவம் பற்றிய உயர்வான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் தமிழினம். பசியின்றி வாழ்தல், பிணி நீங்கி வாழ்தல், யாரோடும் பகையின்றி வாழ்தல், அறம் சிறக்க வாழ்தல் என்ற மேலான நோக்கங்களே சங்கத் தமிழரின் வாழ்வியல் பண்பு களாகும். அறவுணர்வும், அருளுணர்வுமே பழந்தமிழர் பண்பாட்டின் அடித் தளங்களாகும்.

சங்கத் தமிழன் தோகை விரித்த மயிலுக்கும் இரங்கினான்; துவண்டு விழுந்த மலர்க்கொடிக்கும் இரங்கினான்; வண்ண மலரில் வாசம் செய்த வண்டுக்கும் இரங்கினான் என்பதுதான் நமது இலக்கியம் காட்டும் வரலாறு. அவர்களுடைய வாரிசுகளாகிய நாமோ, சக மனிதரின் துயர் கண்டும் இரங்காத சமூக மனிதர்கள்.

தமிழனத்துக்கே உரிய மரபார்ந்த மனிதநேயம், முற்றாக வற்றிவிட்ட தற்கு நம் வாழ்காலச் சாட்சியம்தான் வீரத் திருமகன் பிரபாகரனைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய அன்னை பார்வதி அம்மையார் விமானத்தில் இருந்து இறங்க அனுமதி இன்றி, மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட அவலம். 80 வயது கடந்து, ரத்த அழுத்தம் அதிகரித்து, நினைவு தடுமாறும் நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூதாட்டியைத் திருப்பி அனுப்பிய இந்திய அரசு, காந்தியின் பெயரை உச்சரிக்கும் அருகதையை அறவே இழந்துவிட்டது. இந்திய அரசின் ஈரமற்ற நடவடிக்கையை எதிர்க்கத் துணிவின்றி நம் தமிழக முதல்வர் வழக்கம்போல், கடிதம் வரைவதற்கு எழுது கோல் எடுத்துவிட்டார். சுயநலத்தில் சுருங்கிப்போய்விட்ட எம் தமிழினமோ தொலைக்காட்சிக் கிளுகிளுப்பில் தொலைந்துவிட்டது. எங்கே இருந்து, எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் நாம்? தள்ளாத வயதுப் பெண்மணியைத் தரை இறங்கவிடாமல் திருப்பி அனுப் பிய மனிதநேயமற்ற நிகழ்வு குறித்துச் சட்டப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சூழலில்… முதல்வர் கலைஞர் என்ன சொன்னார் என்பதுதான் நம் தமிழி னம் சிந்திக்க வேண்டிய செய்தி.

‘… அதைப் பரிசீலனைசெய்து மத்திய அரசுக்கு அதுபற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மத்திய அரசின் பதிலைப்பற்றி, அது என்ன கூறுகிறது என்பதைப்பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால், அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்று கூறி இந்த அளவில் இந்தப் பிரச்னையை முடிக் குமாறு கேட்டுக்கொள்கிறேன்!’ என்றார் நம் முதல்வர். ஆக, எந்தப் பிரச்னையானாலும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது ஒன்றுதான் நம் கலைஞர் கண்டெடுத்த தீர்வு. ஆயிரம் ராகங்கள் பிறந்தாலும் ஸ்வரங்கள் ஏழுதான். எத்தனை சிக்கல்கள் வந்தாலும் கலைஞரின் தீர்வு ஒன்றே ஒன்றுதான். கடிதம்… கடிதம்… கடிதம்!
‘தமிழ்நாட்டு அரசியல் பீடம் டெல்லிக்குத் தபால் பெட்டி அந்தஸ்துடன்தான் நடத்தப்பட்டது. எதற்கெடுத் தாலும் ஆணையிடுகின்ற உரிமை, ஆயிரம் மைலுக்கு அப்பாலுள்ள டெல்லிப் பட்டணத்தில்தான் தேங்கி வழிந்தது. இங்கு காமராஜரின் அரசியலும் காங்கிரஸ் ஆட்சியின் பிடிவாதங்களும் நினைத்தாலே நெஞ்சத்துக்குச் சோர்வை அளித்தது’ (கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ பக்.279 தினமணி கதிர் வெளியீடு) என்று எழுதிய கலைஞரின் இன்றைய நிலையை நினைத்தால், நமக்குச் சொல்லில் அடங்காத சோர்வு எழுகிறதே! காமராஜர் தபால் பெட்டியாக இருந்தார் என்று, அன்று குற்றம் சாட்டிய கலைஞர்… இன்று தபால் பெட்டிகளின் தலைமை நிலையமாக மாறிவிட்டது நியாயந்தானா? ‘தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல தி.மு.கழகத்தில் இருப்பவர்கள். நாட்டுக்குப் புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி.மு.கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது!’ என்று அண்ணா சொன்னதாக அதே ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் குறிப்பிட்டிருக்கும் கலைஞரின் கழக ஆட்சியால், தமிழ்நாட்டுக்கு எந்தப் புதிய அந்தஸ்து பூத்துச் சொரிகின்றது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மூன்று பட்டியல்கள் உள்ளன. மத்திய அரசின் சட்டம் இயற்றும் பட்டியலில் 97 அதிகாரங்களும், மாநில அதிகாரப் பட்டியலில் 66 இனங்களும், மத்திய – மாநில அரசுகள் செயற்படக்கூடிய பொதுப் பட்டியலில் 47 அதிகாரங்களும் இடம்பெற்றன. பல்வேறு திருத்தங்களால் மாநில அரசுகளின் அதிகாரப் பதிவுகள், 19 ஆகச் சுருங்கிவிட்டன. மைய அரசின் அதிகாரங்கள், 144 ஆகப் பெருகிவிட்டன. ‘மாநிலப் பட்டியலில் கண்ட அதிகாரங்களை மாநிலங்களவைத் தீர்மானத்தின் மூலமாகப் பறித்துக்கொள்வதற்குரிய வழிவகை, நாடாளுமன்றம் சில சூழ்நிலைகளில் மாநில ஆட்சி அதிகாரங்களில் ஊடுருவும் இயல்பு, இன்னோரன்ன மொழி, இன மக்களின் தன்னாட்சியை முறியடிக்கும் வேறு பல ஏற்பாடுகளும் இன்றைய நமது அரசமைப்பில் இடம்பெற்றுள்ளன. எனவே, அது மாநிலங்களின் உரிமைப் பட்டயம் அன்று; மாறாக மாநிலங்களின் அடிமை முறி’ என்கிறார் கு.ச.ஆனந்தன். எந்த விதமான குறைந்தபட்சத் தியாகத்துக்கும் தயாராக இல்லாத இன்றைய கலைஞர், ‘மாநிலச் சுயாட்சி’ என்று வாய் வலிக்காமல் குரல் கொடுப்பதோடு நின்றுவிட்டார். தேர்தல் கூட்டணிக்குச் சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக… காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மனம் சிறிதளவும் வருத்தமுறாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கும் கலைஞரால், பார்வதி அம்மையார் விவகாரத்தில் பட்டும் படாமல் பக்குவமாக மன்மோகன் அரசுக்குக் கடிதம் எழுதுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? இலவசங்களுக்குப் பல்லை இளிக்கும் இனமாக நாம் இருக்கும் வரை, கலைஞர் வேலனாகவும் வருவார்; விருத்தனாகவும் காட்சி தருவார். வேடம் புனைவதில் நம் அரசியல்வாதிகளை யாரால் வெல்ல முடியும்?

‘மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுத்த அதிகாரங்கள் மட்டுமே மத்தியக் கூட்டாட்சி அரசிடம் இருக்க வேண்டும். மற்ற வகையில் ஒவ்வொரு மாநிலமும் சுதந்திரமாக இயங்க வேண்டும்!’ என்று மகாத்மா அறிவுறுத்தினார். இன்று ஒரு தமிழர் தலைவரின் நோயுற்ற அன்னைக்கு மருத்துவச் சிகிச்சை தரும் சுதந்திரம்கூட மன்மோகன் அரசிடம் அடகுவைக்கப்பட்டுவிட்டது. பிறப்பால் தமிழரான ப.சிதம்பரத்தால், உணர்வால் தமிழராக இயங்க முடியவில்லை. நாட்டு நலன் சார்ந்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் கலைஞரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பதாக நம் பிரதமரும் சோனியாவும் சென்னை வந்து சட்டமன்றத் திறப்பு விழாவில் சொன்னார்கள். பார்வதி அம்மையார் தமிழகம் வந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டுமென்று கலைஞர் கேட்பாரா? அப்படி கலைஞர் கேட்ட அடுத்த கணமே மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிட்டுமா? பொறுத்துப் பார்ப்போம். தன் மீதே தனக்கு உரிமை இல்லை என்ற அடிமை நிலைதான் தமிழருக்கு வாய்த்த வரமா? பொறுத்த பின் கேட்போம்.

‘தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும் வரை… தமிழன், தமிழ்நாடு ஒரு நாளும் சூத்திரத்தன்மையில் இருந்து, அடிமைக் குடியாய் இருப்பதில் இருந்து கடுகளவும் மாற்ற மடைய முடியாது!’ என்றார் பெரியார். சூத்திரர்கள் ஆட்சி வந்த பின்பும் அடிமைக் குடியாய் இருப்பதில் இருந்து விடுபடவில்லையே ‘வாய் வேதாந்தம்’ பேசும் தமிழினம். ‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவரே; மற்று உடலினால் பலராய்க் காண்பார்’ என்று பாவேந்தர் பாடியபடி தமிழினம் இன்று வரை எந்தப் பிரச்னையிலும் ஒன்றாக இணைந்து நிற்கவில்லையே. ஒன்றுக்கொன்று வேறுபட்ட மொழிகளையும், மாறுபட்ட பழக்க வழக்கங் களையும்கொண்ட 14 மலை வாழ் மக்கள் நாகாலாந்தில் ஒன்றிணைந்து உரிமைக் குரல் கொடுக்கின்றனர். ஆனால், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடுகொண்ட தமிழினம் ஒன்று சேர முடியாமல் கட்சி அரசியல் பிரித்துவைத்திருக்கிறது. கிருஷ்ணா நதியில் அலமாதி அணையை 1,720 அடியாக கர்நாடகம் உயர்த்தியபோது, ஆந்திராவின் நலன் பாதிக்கப்படுவதாக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொங்கி எழுந்ததுபோல், முல்லை பெரியாறு விவ காரத்தில் நாம் ஒன்றாக நின்றோமா? காவிரி நீர்ப் பிரச்னையில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் கட்சி கடந்த ஒற்றுமை, நம்மிடம் உண்டா? ‘தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அதற்கோர் குணமுண்டு’ என்றாரே நாமக்கல் கவிஞர்… அது என்ன குணம்? எந்த நிலையிலும் ஒன்றுபட்டு நிற்பதில்லை என்ற நீச குணமா?

இங்குள்ள தமிழர் ஒன்றாக இல்லை. ஈழத் தமிழர்கள் ஒன்றாக நின்றார்களா? எட்டப்பன் வாரிசுகளாக டக்ளஸ் தேவானந்தாவும், கருணா வும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு வியூகம் அமைக்கவில்லையா? புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் யூத இனத்தின் ஒற்றுமையுணர்வைக் காண முடிகிறதா? உலக நாடுகளும், இந்திய அரசும் செய்த சதியால் விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்பு, தமிழீழம் வென்றெடுக்க ஒன்றிணைந்த அரசியல் உத்தி இன்று வரை வடிவமைக்கப்பட்டதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்குப் புலம் பெயர்ந்த ஈழ அறிவுஜீவிகள் இணைந்திருக்கின்றனர். இதுவரை ஈழ நிலத்தில் இருந்த தமிழர்கள் போராடி இன்னல்களை அனுபவித்தனர். இனிமேல் ஈழப் போராட்டத்தைப் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் முதலில் உலக நாடுகளின் மனோபாவத்தை, சந்தைப் பொருளாதாரம் சார்ந்த சுயநலப்போக்கைக் கணக்கில்கொண்டு, காரியத்தில் இறங்க வேண்டும். ‘அக்கா வந்து அள்ளிக் கொடுக்க, சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே’ என்றார் பாவேந்தர். இன்னல்கள் இன்னும் தொடரத்தான் செய்யும். அறிவின் பிரகாசமும், உண்மையின் ஒளியும், பரிசுத்தமான எண்ணங்களும், தணியாத லட்சிய வேட்கையும் சேர்ந்து செயற்பட்டால், தமிழீழம் ஒரு நாள் நிச்சயம் மலரும். அதற்கு முதல் தேவை ஒன்றிணைந்த போர்க் குரல்.

‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாட்டின் வழி நின்று தமிழக, இந்திய, அனைத்துலக சமூக ஆதரவுடன் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு, தமிழீழ விடுதலையை வென்றெடுக்கப்போவதாக விசுவநாதன் ருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம். ஆனால், ‘ஆயுதப் போராட்டம் என்பதோ, வன்முறை வழியோ இனி எங்கள் அகராதியில் கிடையாது!’ என்று அவர் சொன்ன தாக வந்த செய்தியை மறுத்திருப்பது கவலையைத் தருகிறது. ஈழத் தமிழர் போராட்ட அகராதியில் இனி ஆயுதங்களுக்கும், வன்முறைக்கும் இடமில்லாத நிலை கனிந்தால்தான், உலக நாடுகளின் ஆதரவு பெருகும். ஆயுதப் புரட்சிக்கான சூழல் அடியோடு மாறிவிட்டது. எல்லாக் காலங்களிலும் பொருந்தக்கூடியது காந்தியப் போர் முறை ஒன்றுதான். வன்முறைக்கு இடம் இல்லை என்று அறிவிப்பது மாவீரன் பிரபாகரனின் அணுகுமுறையைக் களங்கப்படுத்தும் காரியம் என்று எண்ணத் தேவை இல்லை.

காலச்சூழலுக்கேற்ப போராட்ட உத்திகளை மாற்றியமைப்பதுதான் விவேகமானது. தமிழ்நாட்டில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் அறவழியில் இந்திய அரசை நிர்ப்பந்திக்க ஆயிரம் வழிகள் உண்டு. உணர்ச்சியைத் தூண்டி வன்முறையை வளர்ப்பவர்கள், ஈழ நலனுக்கு எதிரானவர்கள். ஆயுதப் போர் தொடர்ந்தால், எஞ்சியுள்ள ஈழ நில மக்களையும் நாம் இழந்துவிடுவோம். ருத்ரகுமாரனும், அவருடைய தோழர்களும் ஆழச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இறுதியாக, பிரபாகரன் தாயார் பார்வதி அம்மையார் மனிதநேயத்துக்குமாறாகத் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கலைஞரி டம் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி ஒன்று இருக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மையாரும் தமிழகத்தில் கால்வைக்க முடியாதபடி கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றதாக நம் முதல்வர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பார்வதி அம்மையாருக்கு நேர்ந்த அவமானத்துக்கு ஜெயலலிதாவே காரணம் என்று கலைஞரின் அன்பு மழையில் நனையும் சில மனிதர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போன்று சத்தமிடுகின்றனர். ஜெயலலிதா மத்திய அரசுக்கு பிப்ரவரி 5, 2003 அன்று கடிதம் எழுதியதாக முதல்வர் தெரிவித்தார். வாஜ்பாய் அரசு அக்டோபர் 13, 1999 முதல் மே 13, 2004 வரை மத்தியில் ஆட்சி செய்தது. அந்த அமைச்சரவையில் தி.மு.கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தனர். விசா விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது உண்மை. மத்திய அரசுக்கு மட்டுமே அதில் அதிகாரம் உண்டு என்பதும் மறுக்க முடியாத உண்மை. மாநில முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு புறக் கணித்திருக்க முடியுமே. கேபினட் அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் பிரதமர் வாஜ்பாயிடம் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மையார் ஆகியோருக்கு எதிராக விசா விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று எதிர்த்துக் கிளர்ந்தார்களா? இதற்குக் கலைஞர்தான் விளக்கம் தர வேண்டும். ‘ஆரிய மாயை’ எழுதிய அண்ணா, ‘பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி!’ என்றார். பார்வதி அம்மையார் விவகாரத்தில் பலரும் இரண்டு நாவால் பேசுவதுதான் வருத்தம் தருகிறது.

உலகில் எத்தனை இனங்கள் ஒன்றுபட்டாலும், ஒரேயரு இனம் மட்டும் எங்கிருந்தாலும் இரண்டுபட்டே நிற்கும். அந்த இனம்தான் நம் பெருமைக்குரிய தமிழினம். ஒன்றுபடாமையே தமிழரின் தனிக் குணம். கட்சி அரசியலும், சாதி வெறியும் நம்மை ஒருபோதும் ஒன்றாகச் சேரவிடாது. விவேகம் உள்ளவர்க்கு எதில் வேறுபடுவது, எதில் ஒன்றுபடுவது என்று தெரியும். அறிவார்ந்த (!) நம் இனத்துக்குக் காரணங்களோடு வேறுபடவும் தெரியாது; ஒன்றுபடவும் தெரியாது!

– தமிழருவி மணியன்

ஜீனியர் விகடன்

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை- சிதம்பரம் உறுதி



புது தில்லி, ஏப். 29: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் அவற்றை பலப்படுத்துவதற்காக சட்டம் கொண்டுவர அரசு ஆலோசனை செய்துவருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.ஐபிஎல் விவகாரத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக புகார் எழுந்தது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மாநிலங்களவையில் வியாழக்கிழமை சிதம்பரம் பேசினார்.தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம், சட்டத்துக்குப் புறம்பாக ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொலைபேசிகளை இடைமறித்துக் கேட்கும் தொழில்நுட்பத்தை தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. அவர் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையை பிரதமருக்கு நேரிடையாக தெரிவிப்பார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தை நாடாளுமன்றத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.எந்த ஒரு அரசும் உளவுத் துறையின்றி செயல்பட முடியாது. அது அரசின் ஓர் அங்கம். நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது நேரடி வரிக்கான மத்திய வாரியம் மற்றும் இதர அமலாக்கத் துறை அமைப்பினர் இடைமறித்து கேட்பதற்கு அதிகாரம் உள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக உறுப்பினர் அருண் ஜேட்லி, வரி ஏய்ப்பு தொடர்பாக எழும் புகார்களைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற்றங்களை இடைமறித்து கேட்பதற்கு மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.இதற்கு பதிலளித்த சிதம்பரம், சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசிகளை இடைமறித்துக் கேட்கப்பட்டதா என்பதை அரசு ஆராயும். எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.÷அரசின் நடவடிக்கைகளில் இடைத்தரகர்கள் முக்கிய பங்குவகிப்பதாக கூறப்படும் புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தொலைபேசி ஒட்டுக் கேட்பதை தடுக்க போதுமான விதிகள் இல்லையெனில் தேவைக்கேற்ப சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.திமுக - அதிமுக மோதல்தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் புகார் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.விவாதத்தின்மீது பேசிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக தெரிவித்தார். என் தொலைபேசி மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி நடராஜன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில மத்திய அமைச்சர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.அப்போது மைத்ரேயனுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா பேசினார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி குறித்து அதிமுக உறுப்பினர் இளவரசன் கண்ணியக் குறைவாக பேசியதாக கனிமொழி புகார் தெரிவித்தார். இதனால் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் - பாஜக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் மீண்டும் கூச்சல் நிலவியது. இதைத் தொடர்ந்து தலையிட்ட அவைத் தலைவர், அதுபோன்ற பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெற்றிருந்தால் அதை நீக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துக்கள்

தையே ஒரு பிழைப்பாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்களே! நாட்டு நலனுக்காக ஒட்டுக் கேட்பது தவறல்ல! கொலைகாரரகளால் தலைவர்களுக்கு வரும் பேரிடர்களைத் தவிர்க்கவும் ஒட்டுக்கேட்பது உதவலாம். ஒற்றறிதலில் இன்னார் இனியார் என வேறுபாடு காட்டாமல் ஈடுபட வேண்டும். எனவே.அரசு ஒட்டுக் கேட்கும நடைமுறையைப் பின்பற்றி வந்தால் ஒத்துக் கொண்டு அதன் தேவையை உணர்த்த வேண்டும். அதே நேரம் ஆளும் கட்சிக்கு ஆள் பிடிக்கவும எதிர்க்கட்சிகைள அழித்தொழிக்கவும் இதனைப் பயன்படுத்தக் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை: அரசின் நிலையைத் தெரிவிக்க ஆணை



சென்னை, ஏப். 29: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலையை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.வழக்கறிஞர் கருப்பன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக வழக்கறிஞர் கருப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெறுவதற்காக கடந்த 16-ம் தேதி இரவு மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், அவர் அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.முறையான விசாவோடு வந்த பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது சட்ட விரோதம். தனி விமானம் மூலம் அவரை சென்னைக்கு மீண்டும் அழைத்து வந்து சிகிச்சை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கோரினார்.நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, குடியுரிமை அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:பார்வதி அம்மாளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் 2003-ம் ஆண்டு கோரிக்கை வந்தது. அதனடிப்படையில், அவருக்கு இந்திய விசா வழங்கக் கூடாது என்று வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.ஆனால், கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு தவறுதலாக விசா வழங்கியுள்ளது. இந்தியாவுக்குள் நுழையும் எந்த வெளிநாட்டவரையும் திருப்பி அனுப்புவதற்கான அதிகாரம் இந்திய குடியுரிமை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே, பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று மனுவில் குடியுரிமைத் துறை தெரிவித்துள்ளது. பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன என்பதை அறிந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

இப்படியெல்லாம் கேட்டால் என்ன செய்வது? மத்திய அரசைக் ்காட்டிக் கொடுத்தால் தமிழக அரசு நிலைக்க முடியுமா? தமிழக அரசு உடந்தையாக இருந்ததைத்தான் ஒத்துக கொள்ள முடியுமா ? ஏற்னெவேதான் விரும்பினால் கேட்டால் கேட்டு முடியாது என்ற மறுமொழியைத் தெரிவிப்பதாகக் கூறியாயிற்றே! இதை விட வேறு வளா வளா கொளாகொளா விடை வேண்டுமா? சாமானியர்கள் ஆட்சி செய்வது மேட்டுக்குடி நீதிபதிகளுக்குப் பிடிக்கவில்லையா? எதிர்க்கட்சியாக இருந்தால் வீரமாக நடந்து கொள்வோம என்பதும் இல்லையேல் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடப்போம் என்பது்ம் இவர்களுக்குத் தெரியாதா என்ன? சரி! சரி! மாநாடு முடியும் வரையாவது வழக்கினை ஒத்தி வைக்கச் செய்வோம்.

(இலக்குவனார் திருவள்ளுவன்)

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 2:59:00 AM

§"$&/$&((//$/%$"///&%$§(/%/§///%%$§)(=/($$"§/=)((&%$§"&%&(%&(%/§$§"&%%§"&%%$$%$$§%$$§%$$$%$"%&&%"!$$/((%$§$%$§§/&%(/%&&§§"%%&$"%%&%%&%%$::...இது என்னடான்னு பாக்குறீங்களா !...தமிழ்நாடு அரசு சீலிடப் பட்ட கவருல நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கை !!! @ rajasji

By rajasji
4/30/2010 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்



காஞ்சிபுரம், ஏப். 29: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.÷சித்திரை முழுநிலவு நாளையொட்டி வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில் புதன்கிழமை இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ராமதாஸ் பேசியது:இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் என அறிவித்த அரசு வன்னியர்களுக்கு 8 சதவீதம் மட்டும் வழங்குகிறது.தமிழ்நாட்டில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களின் ஜனத்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜூலை 18-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா நடத்தப்படும்.கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு ஜூலை 28-ந் தேதி ஒன்றிய, நகர, வட்டார, மாவட்ட அலுவலகங்கள் முன் தமிழகம் முழுவதிலும் அறவழியில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தப்படும்.போராட்டத்துக்கு முன்னர் வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து என்னுடைய தலைமையிலான குழு முதல்வரை சந்திக்க உள்ளது என்றார்.
கருத்துக்கள்

அரசியல் கட்சித் தலைவர்கள் சாதிஅடிப்படையில் பரப்புரை மேற்கொண்டால் கடூஞ்சிறைத்தண்டனை வழங்க வேண்டும். அரசியல் கட்சியே சாதி வெறியில் ஈடுபட்டால் அக்கட்சியைத் தடை செய்ய வேண்டும். சாதிச் சங்கங்கள்அரசியலில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும். நம்நாடு உருப்பட இதுவே வழி. பல நல்ல கொள்கைகளை உடைய இராமதாசு தான் சாதிச் சங்கம் நடத்துவதா அல்லது அரசியல் கட்சி நடத்துவதா என முடிவெடுத்து இரண்டில் ஒன்றில் மட்டும் கருத்து செலுத்த வேண்டும். சாதி இருக்கின்றது என்பானு்ம் இருக்கின்றானே என்னும் நிலை வர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 2:45:00 AM

எதிர் காலத்துல யாராவது ஒரு வன்னியர் முதலமைச்சரா வந்துரப் புடாதுன்னு நல்லா திட்டம் போட்டு ஜாதிய கெடுக்குராருய்யா !

By Thiri*
4/30/2010 2:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 29 ஏப்ரல், 2010

மருத்துவத் திட்டத்தின் கீழ் ஏழைகளும் பயன்பெற வேண்டும்: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி



சென்னை தரமணியில் உள்ள மருத்துவப் பூங்கா மையத்தின் சார்பில் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும் மருத்துவ சிகிச்சை திட்ட தொடக்க விழாவில் வெளியிடப்பட்ட தி
சென்னை, ஏப்.28: ஏழை முதியவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவப் பூங்காவின் மருத்துவத் திட்டம் செயல்பட வேண்டும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.சென்னை தரமணி டைசல் பயோபார்க்கில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவப் பூங்காவின் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும் திட்டத் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பேசியது:முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களில் மருத்துவக் காப்பீடு திட்டம் மிகவும் பிரகாசித்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் எல்லாம் பாராட்டு தெரிவிக்கின்றனர்.மருத்துவப் பூங்காவின் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் முதியவர்களும் இளைஞராக முடியும் என்று கூறினார்கள். ஆனால், இந்த சிகிச்சைக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏழைகளும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சியோடு நோயும் அதிகரித்து வருகிறது. எனவே, மருத்துவப் பூங்காவின் திட்டம் நோய்களைத் தடுப்பதில் உதவியாக இருக்கும் என்றார்.மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: தமிழகத்தில் மருத்துவச் சுற்றுலா நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு இங்கு சில லட்சங்கள் செலவாகின்றன. வெளிநாட்டில் அது ரூ.40 லட்சமாக உள்ளது. நல்ல மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ்:புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. தமிழகத்தில் சராசரி ஆயுள்காலம் 70 ஆண்டுகளாக உள்ளது. 50 வயதுக்கு மேல் ஆனவுடனேயே ஏதேனும் ஒரு நோய் வந்துவிடுகிறது. இதனால் வாழ்க்கைத் தரம் மகிழ்ச்சியாக இல்லை. மகிழ்ச்சியுடன் வயது முதிர்ந்த காலத்தைக் கழிப்பதற்கு வழிகாட்டும் அமைப்புகள் இல்லாத நேரத்தில் வயோதிக மேலாண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ்.மருத்துவப் பூங்காவின் நிறுவனர் ஜெயப்பிரகாஷ், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. திருவாசகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், முன்னாள் துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

அமைச்சர் அழகிரி ஒவ்வொரு திங்களிலும் 10 முறை தில்லி சென்று வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால் நா.உ.கடமையை ஆற்றாமலா இருந்திருப்பார்? பதிவேட்டில் கையொப்பம் இட்டாலே நா.ம. விற்கு வருகை தந்ததாக விதிமுறை இருக்கும் பொழுது விதிகளுக்கிணங்க அவர் நா.ம.சென்றுள்ளார் என்றே கொள்ள வேண்டும். (ஆனால், விதியை மாற்றுவதே மக்களாட்சியில் நன்மை பயக்கும்.) செய்தியைப் பொறுத்தவரை செயல்படுத்த வேண்டிய பேச்சு. முன்பொரு முறை 10 காசு மாத்திரை 30 உரூபாய் அளவில் விற்கப்படுவதாக நாடாளுமன்றத்திலேயே உரிய அமைச்சர் பேசியிருக்கிறார். எனவே, மருந்துப் பொருள்களின் விலைகளை அடக்கச் செலவிற்கு இணையாகக் குறைத்தாலே நடுத்தர மக்கள் பயனடைய முடியும். பின் மருந்துக் கருவிகள் விலைகளையும் இறக்குமதி வரிகளையும் குறைத்து மருத்துவக் கட்டணங்களையும் குறைக்கச் செய்ய வேண்டும். ஏழ்மையால் ஒருவர் உயிர் இழந்தார் என்னும் நிலை மறைந்து எல்லாரும் நலம் பெறும் எளிய முறையே நிலவ வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/29/2010 11:09:00 AM

ROMMA NALA ALAI KANOM EN MK VATCHA APPU THANGAMUDIALIYA NEE ELLAM DMK LEADER AVURATHUKKU LAYAKKU ILLANU MK SOLLIDARU PESAMA MADURAIKKU POYE KATTA PANCHAYUTU PANNALAM ILLA KALYANA MANDAPATHULA VASOOL PANNALAM INKA VANDU SAMPANDEME ILLAMA THOOKI PIDICHUKITU IRRUKIRE .STALIN VANDALAVADU PORUTHAMA IRRRUKUM BECAUSE HE WILL BE THE NEXT CM AND DMK LEADER. OFO ENGLISHLA ELUTHITTENA ENNA PANNURADU TRY PANNI PADIKKAVUM.

By baski
4/29/2010 10:21:00 AM

Dai Mannaru, As a Chemical Minister he attend this function.

By Muthu-Hong Kong
4/29/2010 10:13:00 AM

Thiru. AZHAGIRIyaare... ! Oru PERIYA SANTHEKAM...THEERTHTHU VAIYUNGA! Neenga , M.L.A.va..? allathu M.P.yaa..? DELLIkkup poi pesunga anne..,unga rasaayanath thurai sambanthamaaka yekappatta kelvinga, vidaiyalikkap padaama kidakku..! Odunga.. odunga..muthal flight pidichchu DELLIkku odunga...? Inge, thamizhnattu vevakaaram ellaam thambi STALIN PAATHTHUKIDUVAARU...

By NilaSundaram
4/29/2010 7:06:00 AM

அண்ணே ரசாயனத்துறைக்கும் இதுக்கும் என்னண்ணே தொடர்பு, உங்களைக் காணலேன்னு டெல்லியிலே அவனவன் மண்டையை பிச்சுக்கிறான் நீங்க என்னடான்னா உங்க துறைக்கு சம்பந்தமில்லாத ஒண்ணைத் தூக்கிப் பிடிச்சுகிட்டு நிக்கிறீங்க!

By வாடா மன்னாரு
4/29/2010 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்