செவ்வாய், 31 டிசம்பர், 2013

இயற்கை வேளாண் அறிவியலர் நம்மாழ்வார் மரணம்



இயற்கை வேளாண் அறிவியலர் 
நம்மாழ்வார் மரணம்

பட்டுக்கோட்டை: இயற்கை வேளாண் அறிவியலர் நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு  அகவை 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற ஊரில் 1938 ஆம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது  வேதியல் உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் தீங்குகளை அறிந்த அவர், வேளாண் முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார். தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளைத் தமிழகத்தில் பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக இப்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் ஆகிய இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.

கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரிப் பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார். 

இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Resettled survivors of Vanni onslaught languish

Resettled survivors of Vanni onslaught languish in Batticaloa

[TamilNet, Monday, 30 December 2013, 17:14 GMT]
95% of the 1080 families of Batticaloa Tamils who survived the 2009 genocidal onslaught in Vanni and resettled back in Batticaloa district have been completely neglected from any help and still languish without basic facilities. When the families displaced from Batticaloa to Vanni in 2004 from different places of the district, Karuna group paramilitary destroyed their houses and their possessions were robbed. When they returned to their district, surviving the genocidal onslaught, Europe-based NGOs and UN agencies provided temporary huts to these families. All support stopped there, and these huts became the ‘markers’ for these families to get isolated from further aid, the families complain. They have also been sidelined from the Indian housing assistance.

These families are systematically discriminated in the provision of humanitarian aid in the district through the influence exerted on the civil administration by the SL military operated paramilitary elements.

Of 4,000 houses to be constructed in the Eastern Province under the Indian housing plan, 2,000 units are allocated to the victims in Batticaloa district. The Vanni survivors are neglected also from the provision of housing scheme due to various interferences in the selection of beneficiaries, the affected families complain.

The families of Vanni survivors, who were originally displaced from Koa'ra'laip-pattu North (Vaakarai), Koa'ra'laip-pattu South (Kiraan), Vavu'natheevu, Koa'ra'laip-pattu, Paddip-pazhai, Poara-theevup-pattu and Ma'n-munaip-pattu were resettled into 10 DS divisions when they came back to the district surviving the genocidal onslaught, barbed-wire internment and SL military detention.

Chronology:

using China for Mannaar mass grave questioned

Colombo's motive of using China for forensic examinations on Mannaar mass grave questioned

[TamilNet, Monday, 30 December 2013, 08:42 GMT]
Occupying Colombo's police officials in Mannaar have said that the skeletons recovered at the mass grave at Thirukkeatheesvaram were being dispatched to China for forensic examinations. Responding, legal sources in Mannaar asked the motive of Colombo using China for DNA testing of the skeletons discovered at the mass grave and questioned the fate of similar cases earlier sent to China for ‘forensic examinations’. In 2009, China had allegedly provided Colombo with ‘movable crematory vehicles’ to get rid of the dead bodies of the genocidal victims in Vanni. Tamil activists urged the alternative world to assist the nation of Eezham Tamils to undertake forensic examinations in future in a credible and independent manner.

None of the forensic examinations, supposed to be carried out by Colombo with foreign assistance since the discovery of Chemma'ni mass graves in Jaffna since 1998, has been helpful in the investigations.

Rt. Rev. Dr. Rayappu Joseph, the catholic bishop of Mannaar, has also called for international investigations to be conducted on the mass grave located in Thirukkeatheesvaram as Sri Lanka has systematically failed to carry out any investigations on similar findings in the past.

In 2001, a number of civilians from Paappaa-moaddai were been reported missing when SL military deployed in Rana Gosha military operation advanced into Mannaar. At least 40 people from Paappaa-moaddai were reported missing in May-June 2001.

At the same time, civilians trying to reach Mannaar from Vanni were also captured by the SL military and a lot of them are still reported missing.

Chronology:

Local contacts of visiting Indian journalist exposed to TID

Local contacts of visiting Indian journalist exposed to TID interrogators in Colombo

[TamilNet, Sunday, 29 December 2013, 21:34 GMT]
In one of the strongest investigations and monitoring conducted so far on a foreign journalist visiting the island, the experienced interrogators of the notorious ‘Terrorist Investigation Department’ of Colombo had not only confiscated the electronic and non-electronic possessions from the young journalist from Tamil Nadu, but also monitored and traced all his contacts from the moment he landed at Colombo airport for the second time, informed media sources in Colombo told TamilNet Sunday. In the meantime 22-year-old Maga Thamizh Prabhagaran, when contacted by TamilNet after his deportation to Chennai, said he was subjected to ‘psychological torture’ like condition at the hands of the TID interrogators in Colombo and that the TID had his Tamil book of his first visit translated when they questioned him on his affiliations.

The journalist was arrested by the Sri Lankan military in Ki'linochchi on Wednesday and deported to India on Saturday after extensive interrogations in Vanni and Colombo.

A prominent member of a media rights group in Colombo told TamilNet on Sunday that anonymous callers from the TID had already issued threats at least to two local contacts, who were allegedly in touch with Mr Prabhagaran.

When contacted by TamilNet, Maga Prabhagaran said he was extensively questioned on his Tamil Nadu political links. The TID interrogators were questioning on the kind of relationship he had with Tamil leaders and activists in Tamil Nadu.

The TID interrogators were particular on his contact with Mr Vaiko, the general secretary of the MDMK and Mr Pazha Nedumaran. They had a photo of him and Mr Vaiko during their questioning. The interrogators were also interested to know about whether there was any link between him and Mr Seeman of Naam Thamizhar.

He also added that the TID interrogators were also questioning him on his contacts in the island. They were keen in knowing which Tamil politicians in the island, with whom he was in touch during his first and second visit to the island.

Mr Thamizh Prabhagaran, who was on a ‘tourist visa’ trip to the North, has defended himself by saying that he was only filming open facilities and that he had entered none of prohibited places as being claimed by the SL military.

However, it would not be possible to anyone filming activities in North to avoid SL military being captured in filming, as the SL military presence is virtually everywhere inseparable from the civilians, sources in Vanni told TamilNet.

Meanwhile, the Sri Lankan TID has stepped up threats against local journalists this weekend, rights activists in the island say.

Chronology:


திங்கள், 30 டிசம்பர், 2013

புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும் - இதழுரை


புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்

  திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன.
அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள்.
  தமிழ் ஈழம்  தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்!
  நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க இயலாது. சமய அமைப்பினர் திருவள்ளுவர் ஆண்டு அவர்களின் சமய ஆண்டிற்கு எதிரானதாகக் கருதிப் பின்பற்றுவதில்லை. இனியேனும் திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பை இயன்ற முறையில் கொண்டாடவும் எல்லா நேர்வுகளிலும் பயன்படுத்தவும் வேண்டுகின்றேன்.
   ஈழத்தமிழர்கள் ஆங்கிலத் திங்களுக்குப் பெயராகத் தமிழ்த்திங்கள் பெயரைக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆங்கிலப் பெயரைப் புறக்கணிக்கும் அவர்களின் உள்ளம் பாராட்டிற்குரியது. ஆனால், இந் நடைமுறை வரலாற்றுப் பிழைகளை ஏற்படுத்தும். சான்றாகச் சனவரி என்றால் தை எனக் குறிப்பதால் சனவரி 14 அன்று பொங்கல் திருநாள் வருவதைத் தை 14 எனக்  குறிக்க  வேண்டி வருகிறது. அப்படியானால் தை முதல்நாள்தான் பொங்கல் திருநாள் என்னும் வரலாற்று உண்மை தவறாகிறது. தை, மாசி முதலான அனைத்துப் பெயர்களும் தமிழே. அதற்கு மாற்றாக இவை தமிழல்ல எனச் சிறுபான்மையரால் பயன்படுத்தப்படும் சுறவம், கும்பம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, மீனம்  முதலான ஓரைகளின் பெயர்களை ஆங்கிலத்திங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாமா அல்லது எவ்வாறு குறிப்பிடலாம் எனத் தமிழறிஞர்கள் ஒன்றுகூடிப் பரிந்துரைக்க வேண்டும். அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
  தமிழ்த்திங்கள்களைக் குறிப்பிடும் பொழுது எத்திங்கள் 32 நாள் கொண்டது என்பதில் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. இது குறித்தும் கணியர்களுடன் இணைந்து தமிழறிஞர்கள் பரிந்துரை அளிக்க வேண்டும்.
  கலைச்சொற்களில்கூடக் கிரந்தத்தைப் புறக்கணிக்கும் இலங்கை, ஈழத்தமிழர்கள் சிரேட்ட முதலான அயற் சொற்களைப் பயன்படுத்துவதும் ஊர்ப்பெயர்களை ஆங்கில ஒலிப்பிற்கேற்பத் தமிழில் குறிப்பதும்  நடைமுறையாக உள்ளது. உலகில் எங்கிருந்தாலும் தமிழ் மக்கள்  அயலெழுத்துகளையும் அயற்சொற்களையும் தவிர்த்து எழுதுவதற்கும் பெயர்களைத் தமிழ் ஒலிப்பிற்கேற்ப  உச்சரிக்கவும் எழுதவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் தமிழ்நலன் தொடர்பானவற்றில் ஒன்றுபட்டுச் செயல்பட உறுதி கொள்ள வேண்டும்.
  கட்சித்தலைமைக்குக் கொத்தடிமைகளாக இருப்பதே அவலங்கள் தடுக்கப்படாமல் இருப்பதற்கும் தலைவர்கள் தொண்டர்கள் உணர்வுகளுக்கு எதிராகத் தங்களைச் சார்ந்தோர் நலனில் கருத்து செலுத்தி, அன்னைத் தமிழைப் புறக்கணிப்பதற்கும்  வாய்ப்பாக அமைகின்றது. தமிழைப் புறக்கணிப்பின் தலைமையையும் புறக்கணிப்பர் என்ற அச்சம் கட்சித் தலைவர்களிடம் இருந்தால்தான் தங்கள் விருப்பு  வெறுப்பிற்கேற்ப  கட்சிகளை வழி நடத்தாமல், மக்கள் நலனுக்கேற்ப நடத்த முன்வருவர்.  தங்கள் செல்வாக்கைக் காட்டி ஆட்சியில் அமரவும் அல்லது ஆட்சியில் தொடரவும் பல மணி நேரப் பேரணியைக் கூட்டும் தலைவர்கள் தமிழர் நலனுக்காகச் சில மணிக்கூறு ஒன்று கூடலுக்கும் வழி வகுக்காத தமிழ்நலப் புறக்கணிப்பு நிலையும் தொடருகின்றது. பதவியில் இருக்கும் பொழுது ஒன்றும் இல்லாத பொழுது மற்றொன்றுமாகப் பேசி மக்களை ஏய்க்கும் போக்கும்  தொடருகிறது. எனவே, தமிழ்நலனுக்கு எதிராகச் செயல்பட்டாலோ, தமிழ்நலனுக்கு ஆதரவாகச் செயல்படாவிட்டாலோ, துணிந்து இடித்துரைக்க முன்வரவேண்டும்.
தமிழ் ஈழத்தில் மேற்கொண்ட இனப்படுகொலையை,  விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்றும் உள்நாட்டுப்போர் என்றும் போர்க்குற்றம் என்றும் திரித்து எழுதியும்பேசியும் வருகின்றனர். இத்தகைய செய்திகளைப் பகிரும் பொழுது இனப்படுகொலை என்றே குறிப்பிட்டுப் பகிர வேண்டும். தவறாகக் குறிப்பிடும் தலைவர்களையும் ஊடகங்களையும் புறக்கணிப்போம் எனக் கூறி அவர்களை  உண்மையைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். ‘போருக்குப் பிந்தைய அமைதி, நல்லிணக்கம்’ என்னும் தொடரே இழைக்கப்பட்ட இனப்படுகொலைக் கொடுமைகளை மறைப்பது என்பதை உணர்ந்து இதுபோன்ற தொடர்களைக் கையாளவும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மட்டுமல்லாமல் அதற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற, நடைபெறும் இனப்படு கொலைகளையும் உலகிற்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு’ என்பதை இலக்காகவும்  முழக்கமாகவும் கொண்டு இனப்படுகொலைகாரர்கள், கூட்டாளிகள் தண்டிக்கப்படவும் தமிழீழத் தனியரசு மீட்சி பெற்று அமைந்து நிலைக்கவும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
படைப்பாளர்கள் இவற்றைப் பற்றிய படைப்புகளைத் தமிழ்ஈழ இலக்கை அடையும் வரை உருவாக்கிப் பரப்ப வேண்டும்.
அயல்மொழி அறிந்தவர்களும் அயல்நாடுகளில் வசிப்பவர்களும் உண்மை வரலாற்றையும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும்  அயல் மொழியினர் உணரும் வகையில்,  பிற மொழிகளில் இவற்றைப் படைக்கவும் மொழி பெயர்க்கவும் தொண்டாற்ற வேண்டும். அச்சிட்டுப் பரப்புதல், இணையத்தளங்கள் வழி பரப்புதல் என்ற முறையில்  பாரெங்கும் ‘தமிழ் ஈழம் தமிழர்களின் தாயகம்’ என்பதையும் அதை ஏற்பதே அறம் என்பதையும் பரப்பி ஏற்கச் செய்ய வேண்டும். இலங்கையில் அயலவர்கள் கால்ஊன்றும் முன்னர் இருந்த தமிழ்ப்பகுதிகளை வரையறுக்க 1.1.1600  அன்று தமிழ்ஆட்சிப் பரப்பாக இருந்த பகுதியை வரைபடமாக்கி அதனையே தமிழீழம் எனக் குறிக்க வேண்டும். தமிழீழப் பரப்பு சிங்களப்  படையாலும் சிங்கள அரசாலும் திருடப்பட்டுப் பறிக்கப்பட்டு வருவதை உணர்த்தி முன்பு தமிழ் ஆட்சி செய்த பரப்புகளில் இருந்து  சிங்களர்களை வெளியேற்ற வகை செய்ய வேண்டும்.
 வாக்குச்சீட்டு என்னும் ஆயுதம் கொண்டு தமிழ்ப்பகைவர்களையும் கொலைகாரர்களையும் கூட்டாளிகளையும் அரசியல் தளத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்.
  தமிழ், தமிழ் எனப் பேசுபவர்கள் ஆங்கில வழிப்பள்ளிகள் நடத்துவதையும் ஊடகங்கள் மூலம் தமிழ்க்கொலை புரிவதையும் கைவிட வேண்டும்.
  தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றின் சிறப்புகளை ஓரளவேனும் அறிந்து கொண்டு வளரும் தலைமுறையினரையும் அறியச் செய்ய வேண்டும்.
  துறைதோறும் தமிழில்  நூல்கள் வரும் வகையில் படைக்கவும் படைப்பாளர்களுக்கு உதவவும் முன்வரவேண்டும்!
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!
பேசுவோம் தமிழில்! பயிலுவோம் தமிழில்!
வணங்குவோம் தமிழில்! வாழ்த்துவோம் தமிழில்!
தமிழர் வாழுமிடங்களில் தமிழுக்குத் தலைமை! தமிழர்க்கு முதன்மை!
இவற்றையே நம் இலக்காகக் கொண்டு வாழ்தல் வேண்டும்!
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்(திருக்குறள் 1021).
 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்(திருக்குறள் 1028).
 தெய்வப்புலவர் திருவள்ளுவரின் மேற்குறித்த திருவாக்குகளை நினைவு கொள்வோம்!
நிலைபுகழ் பெறுவோம்!
மார்கழி 14, தி.பி.2044 feat-default
திசம்பர் 29, கி.பி.2013

அகரமுதல இணைய இதழ் 7 மேலும் சில செய்திகள்

...
image-1329

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்

முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின்  வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு  அகவை 67.  இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை ...
image-1315

டி.இராசேந்தர் திமுகவில் இணைந்தார்

 குரு அழைத்ததால் இணைந்தேன் என்று  அறிவி்ப்பு இலட்சிய திமுக தலைவர்  விசய டி.இராசேந்தர் 27.12013 மாலை 6 மணி அளவில் தன் மனைவி உசாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்; கருணாநிதியைச் சந்தித்து  ஏறத்தாழ 1 மணிநேரம்பேசினார். பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் உடல்நலம்  உசாவிவிட்டு இரவு 7 மணி அளவில் ...
image-1310

வேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி

பழமையான 4 வேதங்களும் 'தமிழி'' என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும்  தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார். மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ ...
image-1305

தமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்

  அண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார். மேலும் பயணத்தின் ...
image-1321

தமிழைப் புறக்கணித்த இடத்தில் கமல்

பெங்களூரில் அண்மையில் கருநாடகச் செய்தித்துறை, கருநாடகச் சலனச்சித்திரா அகாதமி ஆகியன இணைந்து பன்னாட்டுத் திரைப்படவிழாவை நடத்தின.  இவ்விழாவில் ஒரு திரைப்படம்கூட வெளியிடப்படாமல் கருநாடகத்தினர் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எனினும் முன்பு ஒரு திரைப்படத்தில் சிக்கல் எழுந்த பொழுது தான் பெங்களூர் அல்லது மைசூரில் குடியிருப்பேன்  என அறிவித்த கமலை மட்டும் அழைத்து விழாவைத் தொடக்கி வைக்கச் ...
image-1325

தில்லியின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் அரவிந்து கெசுரிவால்

 தில்லியின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்து  கெசுரிவால் இராம்லீலா திடலில் 28.12.13 அன்று  நண்பகல் 11.58 மணிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அங்கே கூடியிருந்த   ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில், தில்லி துணை நிலை ஆளுநரால், கெசுரிவால் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார். இவரைத் தொடர்ந்து   சட்ட மன்றத் தேர்த்லில்  வெற்றி பெற்ற பிறர் தில்லிச் சட்டப்பேரவை  உறுப்பினர்களாகப்  பொறுப்பேற்றுக் ...
 

No Indian houses for uprooted Batticaloa Tamils

No Indian houses for uprooted Batticaloa Tamils from Vanni

[TamilNet, Saturday, 28 December 2013, 22:30 GMT]
Hundreds of Tamil residents, who were uprooted from Vanni in the 2009 genocidal onslaught and resettled in Batticaloa district now, have not been provided permanent houses under the Indian housing project, according to complaints made to the Batticaloa District Citizen Committee.

The resettled survivors of the genocidal onslaught are still sheltered in temporary huts in Batticaloa.

The affected people residing in Aaraip-pattai (Aaraiyampathi), Thaazhagkudaa and Kiraan-ku’lam attended the monthly meeting of the Batticaloa Citizen Committee last Sunday and brought their pathetic situation without permanent dwellings to the notice of the civil society.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

தமிழ் பிரபாகரன் விடுதலை! நேற்றிரவு சென்னை வந்தார்.


தமிழ் பிரபாகரன் விடுதலை! நேற்றிரவு சென்னை வந்தார்.


 maha tamilpirabaharan01
இலங்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண  அவை உறுப்பினர் பசுபதி (பிள்ளை) ஆகியோருடன் உடன் பயணம் மேற்கொண்ட பொழுது தளையிடப்பட்ட மகா.தமிழ் பிரபாகரன் நேற்று 28.12.12 சனி யன்று விடுதலை செய்யப் பெற்றார். இரவே சென்னை வந்துசேர்ந்தார். கிளிநொச்சிப் பகுதியில் இருந்த அவர், எங்ஙனம் யாழ்ப்பானம் பகுதியில் ஒளிப்படம் எடுத்திருக்க முடியும் என்ற உண்மையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். வரும் 30.12.13 திங்கள் மாலை செய்தியாளர் கூட்டத்தில் முழு விவரம் குறித்துத் தெரிவிப்பதாக தமிழ்ப்பிரபாகரன் அகரமுதல் இணைய இதழுக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!

தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!

maha tamilpirabaharan01
இலங்கைக்குச் சுற்றுலா  புகவுச் சீட்டு பெற்று  இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும்  வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு  என்னும்   ஊரில்  தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப் படைத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
மூவரையும்  தளையிட்ட  படையினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரனையும், பசுபதி (பிள்ளை)யையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர்.  இவர் உயர்வளையப் பாதுகாப்புப் பகுதிகளை ஒளிப்படம் எடுத்ததாகவும் எனவே,புகவு விதிகளை மீறி உள்ளார் எனவும் இலங்கை தெரிவிக்கிறது.
இது தொடர்பிலான சில செய்திகள், தமிழர் என்றாலே தமிழ் ஊடகங்களே புறக்கணிக்கும் போக்கை மெய்ப்பிக்கின்றன.
இலங்கை படைத்துறையின் செய்தித் தொடர்பாளர் கொடுத்த செய்தியையே  தமிழக இதழ்கள் வெளியிட்டுள்ளன. அவ்வாறு  வெளியிடும் பொழுது இதழாளர் பெயரை அறிந்து வெளியிட வேண்டும் என்ற இதழ்உணர்வும் இதழாளருக்காகக்  குரல் கொடுக்க வேண்டும் என்ற அறவுணர்வும் இதழ்களுக்கு இல்லாமல் போனது வருந்தத்தக்கது. நியூயார்க்கில் செயல்படும் இதழாளர் பாதுகாப்புக்குழு(Committee to Protect Journalists) மகா. தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்ய முறையிட்டுள்ளது. ஆனால் ஓங்கி ஒலிக்க வேண்டிய தமிழக ஊடகமோ மென்மையான போக்கையே கடைப்பிடிக்கின்றது. sreetharan01
இது தொடர்பில் வைகோ, இராமதாசு, தொல்.திருமாவளவன் ஆகியோர் தெரிவித்த கண்டனம் கூட இணையப் பதிப்பில் தேடிப்பார்த்து அறியுமாறுதான் வெளியிடப்பட்டுள்ளது.
புகவுச் சீட்டு விதிமுறைகளை மீறிய  தேவயானிக்குக் குரல் கொடுத்த இந்திய ஊடகங்கள் ஒரு புறம்! தமிழ் இதழாளருக்கு இதே போன்ற, ஆனால், பொய்யான குற்றச்சாட்டில் ஊறு இளைவிக்கும் பொழுது அமைதி காக்கும் தமிழக ஊடகங்கள் ஒருபுறம்! இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் விரைவாகக் கொண்டு செல்ல வேண்டிய செய்திப்பாட்டைத் தமிழக ஊடகங்கள் புறக்கணிக்கின்றன என்றால் அவை யாருக்காக ஊடகங்களை நடத்துகின்றன! இனியேனும் அவை மாறாவிட்டால் தமிழக மக்களால் புறக்கணிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர வேண்டும்.
மக்கள் செல்லும் பாதையில் மக்களவை உறுப்பினர்கள்உடன் இருப்பவர் எப்படி எங்கோ உள்ள உயர்வள‌ையப் பாதுகாப்புப் பகுதிகளை ஒளிப்படம் எடுத்திருக்க இயலும்?
ஆகவே,  பொய்யாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டு என்பது நன்கு தெளிவாகிறது.  இலங்கை நாடாளுமன்ற உறுப்பிரன் சிரீதரன் வழக்குரைஞர் மூலம் நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் விரைவில் விடுதலை  செய்யப்படுவார் என எதிர்நோக்குவதாகவும் பிரித்தானிய ஒலிபரப்பு  நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
  அவர் விடுதலை செய்யப்படுவார் என நாமும் எதிர்நோக்குவோம்! ஆனால், நாம் அமைதி காத்தால் விடுதலை தள்ளிப்போகும் என்பதால் தமிழக அரசையும் மத்திய அரசையும் அணுகி மகா.தமிழ் பிரபாகரன் விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும்.


- அகரமுதல

வேட்டி நாள் – சகாயம் இ.ஆ.ப. அறிவிப்பு

வேட்டி நாள் – சகாயம் இ.ஆ.ப. அறிவிப்பு

veatti08
பரம்பரை மரபைப் பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகளும்  ஊழியர்களும் ஒருநாள் வேட்டி அணிந்து வேட்டி நாள் கொண்டாடுமாறு  கூட்டு நெசவு (கோஆ டெக்சு) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாகக்  கூட்டுநெசவு(கோஆ டெக்சு) பணியாட்சித்துறை அரசு அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்துச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில்  உரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடைப்  பரம்பரை கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு.  பரம்பரையின்  பகட்டு, மனிதனின் மானம் காத்தது மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டிதான். sakayam i.a.s.01
இன்றைய புதுமை நாகரிகச் சூழலில் வேட்டி அணிவது குறைந்து விட்டது.இப்போது,  வீறார்ந்த வேட்டியைக் காணமுடியவில்லை. வேட்டி என்பது வெறும் ஆடையின்  அடையாளம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு. உழைப்பின் உயர்சிறப்பு. வேட்டி என்கிற ஆடை மரபைப் போற்றவும், வலுப்படுத்தவும் அதைத் தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்குத் தோள் கொடுக்கவும், “வேட்டி  நாள்’ கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது .
veatti07வேட்டி அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவச் சிறப்பபை உணர்த்தவும், தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல்  திருநாளுக்கு  முன்பாக 2014 சனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேட்டி  நாளாகக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு துறையிலும் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேட்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.
இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும்,  கூட்டு நெசவு(கோஆப்டெக்சின்) விற்பனைக்கு உதவவும்கூடிய இத் திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் எனக்  கூட்டுநெசவு(கோஆப்.டெக்சு) இயக்குநர் சகாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கை ஆட்சியர்கள்,  அனைத்துத்துறைத் தலைவர்கள் என அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ‘வேட்டி  நாள்’ கொண்டாடும் வகையில் அனைத்து வடிவங்கள், வண்ணங்களில் அனைத்து வகை நூலில் சிறிய, பெரிய கறையுடன் கூடிய வகைகளைக்   கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) உற்பத்தி செய்துள்ளது. உரூ. 130 முதல் உரூ. 500 வரையிலான வகைகள் உள்ளன. தேவையான வேட்டிகளை அந்தந்தப் பகுதியில் இயங்கும்  கூட்டுநெசவு(கோஆப்டெக்சு) மூலம் வழங்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”veatti02
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகரமுதல இணைய இதழ் 7 : சிறுகதை, பாடல், செய்திகள்





  அன்புடைய பெருந்தகையீர்…! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2044 முதல் பொங்கல் விழாவினையொட்டி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தமிழரின் பரம்பரை விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர் விளையாட்டுப் போட்டிகளாக நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் முயற்சியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் என்னும் சிற்றூரில் நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் ...

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது - தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  திருமலை   அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள்என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் திச.23,24 ஆகிய இருநாளிலும் நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை ...


 கொல்லப்பட்டவர்கள் பற்றிய  சிங்கள அரசின் கணக்கெடுப்பு சரியானதல்ல: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது பேரினச் சிங்களவாத அரசு கடந்த 30 ஆண்டுகளாக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த  இனப்படுகொலையின் போது, நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   மேலும் தமிழர் பகுதிகளை  வன்முறையில் கவர்ந்துள்ள சிங்களப்படை தமிழர்களின் நிலங்களைக் ...

   ஆந்திர மாநிலம் நிசாமாபத்தில்  சௌசன்யா என்னும் பொறியியல் மாணாக்கி, ஒரு கை ஓசை எழுப்பி கின்னசு அருவினையேட்டில் இடம்பெற விரும்புகிறார்.   நிசாமாபாத்து நகரில்சூரியநகர் பகுதியைச்  சேர்ந்த  பொறியியல் கல்லூரி ஒன்றில்,இளம்தொழில்நுட்பவியல்(பி.டெக்.) படித்து வருபவர் பாப்பா சவுசன்யா(Pabba Soujanya)இவர், தன் கையைத் தானே, உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி, ஓசையை எழுப்புகிறார்.  ...

    10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும்  சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசயா என்ற மனநலம் தாக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ...


கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் ...


  அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக ...