வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

திருக்குறள் உயராய்வு அரங்கு 927 – திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை
உலகத் திருக்குறள் மையம்
திருக்குறள் உயராய்வு அரங்கு 927
திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்
தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00
வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு)
தலைமை: திருக்குறள் தூயர் 
பேரா.முனைவர் கு.மோகனராசு
திருக்குறள் சான்றோர் மறைமலை இலக்குவனார்
உரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன்
மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

வியாழன், 31 ஜனவரி, 2019

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக!

அகரமுதல

திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக!
உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு, திருக்குறள் அருவினையாளர்கள் விவரங்களைத் தொகுத்து வெளியிட உள்ளார். தாம் அறிந்த விவரங்களைத் தொகுத்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் திருத்தங்கள், கூடுதல் விவரங்கள், புதிய சேர்க்கைகள் ஆகியவற்றை உலகத் தமிழன்கர்கள் தருமாறு வேண்டுகிறார். எனவே, இவற்றைப் படித்துப்பார்த்து உரிய திருத்தங்கள் இருப்பின் அவற்றையும் புதிய விவரங்களையும் தருமாறு வேண்டுகிறோம்.

புதன், 30 ஜனவரி, 2019

சென்னையில் திருக்குறள் ஆய்வரங்கம்

அகரமுதல
தை 26, 2050 சனி  09.02.2019 காலை 10.00
மாநாட்டு அரங்கம், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி
திருக்குறள் உலகப் பொது நூல்  (Thirukkural as a Book of the World)
தொடக்கவுரை :
 பேராசிரியர் முனைவர் துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்
ஆய்வுரைஞர்கள்:
பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்,மொரிசியசு
நீதிபதி ஆர், மகாதேவன்
முன்னாள் அரசு செயலாளர்  கிறித்துதாசு காந்தி ,
முன்னாள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைசெயலாளர்
முனைவர் மூ. இராசாராம்
பேராசிரியர் சோ.ந. கந்தசாமி,
பேராசிரியர் க. செல்லப்பன்,
பேராசிரியர் ப. மருதநாயகம்,
பேராசிரியர் சான் சாமுவேல்,
பேராசிரியர் வெ. முருகன்,
பேராசிரியர் செய பிரகாசு  நாராயணன் 
நிறைவுரை: பேராசிரியர் பொன்னவைக்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
குறிப்பு:  வரும் செட்டம்பர் மாதம் தில்லியிலுள்ள யுனெசுகோ கலையரங்கில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து நான்காவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு பாரீசிலுள்ள யுனெசுகோள தலைமை அலுவலக வளாகத்தில் அடுத்த ஆண்டு ஆகட்டு மாதம் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வழி அழைப்புரை

அகரமுதல
அன்பு நலஞ் சான்றீர்,
வணக்கம்.
எதிர் வரும் ஆனி 19-22  / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழாசிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.  அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும்ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள்.  இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு;
நாடுநாள்நேரம்தொடர்பு எண்
அமெரிக்கா1/30/2019  புதன்கிழமை    இரவு 09:00 முதல் 
(கிழக்கு நேரம் ) 
இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்)  
தொடர்பு எண்
515-739-1519  
கடவு எண்: 890386 #  
 தமிழ்நாடு1/31/2019  வியாழக்கிழமை  காலை 07:30  தொடர்பு எண்: 91 1725199047 கடவு எண்: 890386 #
மேலும்ஏனைய நாடுகளிலிருந்தும் இப் பல்வழி அழைப்பில் கலந்து கொள்ளஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்பினைக் காண்க.
கடவு எண்: 890386 #
இச்செய்தியைதாங்கள்தமிழுறவுகள் அனைவருக்கும் பகிர்ந்துஇப் பல்வழி அழைப்பில் கலந்து கொள்ளச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.   
மிகவும் நன்றி.
அன்புடன், செந்தில் முருகன். வே
செயலாளர் – ஒருங்கிணைப்புக்குழு
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10ஆவது மாநாடு

நாலடியார் -சில குறிப்புகள்: எட்டாவது கூட்டம்

அகரமுதல

தை 17, 2050 / 31.01.2019 வியாழன் மாலை 5.45

கிளை நூலகம்,7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   சாபர்கான் பேட்டை,  
சென்னை
சென்னை (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்துஅசோக்கு நகர் நோக்கி வரும் நேர் தெரு)

விருட்சமும் நண்பர்கள் வட்டமும்  இணைந்து நடத்தும் எட்டாவது கூட்டம்

தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள்

தொடர் உரை :- முனைவர் வ. வெ. சு

நண்பர்கள் வட்டம்
தொடர்புக்கு : அழகியசிங்கர்
தொலைபேசி எண் : 9444113205

செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்

அகரமுதல

ஆத்தூர் பேருந்து நிலையத்தில்  வினையகத்தின்  பெண் குழந்தைகள் நாள் 
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி, வினையகத்(PDI) திட்டப் பணியாளர்கள் இணைந்து பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகளின் முதன்மைபற்றி வலியுறுத்தினர். ‘‘இளம் வயது திருமணத்தைத் தடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் “பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
முனைவர் இல.அம்பலவாணன்,
முனைவர் இல.அம்பலவாணன்

ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

ஆத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் ஆத்தூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.
 அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி  பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைவருக்கும் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் கிடைக்கப் போராடுவோம், பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப்  போற்றிப் பாதுகாப்போம்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
முனைவர் இல.அம்பலவாணன்
முனைவர் இல.அம்பலவாணன்

புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

முனைவர் இல.அம்பலவாணன்
முனைவர் இல.அம்பலவாணன்

புதுப்பாளையத்தில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி (வாழப்பாடி)  வளாகத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது. அறிவுரைஞர் (PDI) திருமிகு.செயந்தி  பேசுகையில், “பெண் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்றுச் சாதிக்க வேண்டும். நாம் அனைவரும் பெண் குழந்தைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா

திங்கள், 28 ஜனவரி, 2019

கொளத்தூரில் வினையகத்தின் பெண்குழந்தைகள் நாள்

அகரமுதல

கொளத்தூரில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில்  அறிவுரைஞர்(PDI) திருமிகு. இரேகா, பெண் குழந்தைகளுக்குச் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும், ஆண் பெண் வேறுபாடின்றிக் குழந்தைகள் எல்லா துறைகளிலும் முன்னேற்றப்பட வேண்டும் என்றார்.
 நாம் அனைவரும் “பெண் குழந்தையினைப்  போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி : நேத்திரா
முனைவர் இல.அம்பலவாணன்