வியாழன், 27 ஜனவரி, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 470 – 490 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  452 – 469 இன் தொடர்ச்சி)

470. கதிரிய நீரியல்

 Radiohydrology

471. கதிரிய நுட்பியல்

Radiotechnology

472. கதிரியக் கால நிரலியல்

Radio Chronology

473. கதிரிய ஏமவியல்

எதிரூக்கி யியல் என்கின்றனர். அவ்வாறு சொல்வதைவிடச் சொற்சீர்மை கருதி கதிரிய ஏமவியல் என்பது ஏற்றதாக இருக்கும். 

Radioimmunology

474. கதிரிய வளைசலியல்

Radioecology

475. கதிரியப் பண்டுவம்

Radiotherapy

476. கதிரியப் பனியியல்

Radioglaciology

477. கதிரியப் புவியியல்   

Radiogeology

478. கதிரியல்

Radiology

479. கதிர்வீச்சு இயற்பியல்

Radiation physics

480. கதிர்வீச்சு வளைசலியல்           

Radiation Ecology

481. கத்தி இயல்

Machirology

482. கபால யியல்

மண்டை உளப்பான்மை உறவியல், கபால அளவையியல், போலி மனவியல்  என்கின்றனர்.

phrēn என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மனம். இத்துறை, மண்டை ஓட்டின் மீதுள்ள புடைப்புகளை அளவிட்டு மனநலப் பண்புகளைக் கணிக்கும் போலி அறிவியல் துறை. சுருக்கமாகக் கபால இயல் என்றே சொல்லலாம்.

Phrenology(1)

483. கரிசியல்

Hamartiology

484. கரிம வேதியியல்

Organic Chemistry

485. கருதுகை விலங்கியல்

Cryptozoology மறை விலங்கியல், அழி விலங்கியல், கருதுகை விலங்கியல்  எனப் படுகிறது.

Crypto என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு மறை, கமுக்கம் முதலிய பொருள்கள். இங்கே கருதப்படுதல் என்னும் பொருளில் வந்துள்ளது.

 இச்சொல்லின் நேர் பொருள் மறைக்கப்பட்ட விலங்குகள் பற்றிய ஆய்வு என்பதாகும். இஃது உண்மையில் விலங்கியலோ அறிவியலோ அல்ல. போலி அறிவியலாகும். எனவே, விலங்கியலாகக் கருதப்படுவதால்,

 கருதுகை விலங்கியல் Cryptozoology  எனலாம்.

Cryptozoology

486. கருத்தடை நுட்பியல் 

Contraceptive Technology

487. கருத்திணைவியல் (மெய்யியல் துறை)

Hodology(1)

488. கருத்திய  வாயு இயங்கியல்

Ideal aerodynamics

489. கருத்தியல்

Ideology

490. கருப்பொருளியல்

இலக்கிய அடிப் பொருளாய்வு, அடிப் பொருள் ஆய்வு, கருப்பொருள் ஆய்வு, உரிப் பொருளாய்வு, மையப் பொருளாய்வு எனப்படுகிறது. இலக்கியங்களின் மையக் கருத்துகள்  குறித்த ஆய்வு. முதலில் கருத்தியல் எனக் குறித்திருந்தேன். கருத்தியல் தனியாக உள்ளதால் இலக்கியக் கருப்பொருளை ஆராயும் இதனைக் கருப் பொருளியல் என மாற்றியுள்ளேன்.

Thematology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

புதன், 26 ஜனவரி, 2022

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

 அகரமுதல




தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.

பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்து
மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருட்டிணகுமார்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன்
சொல்லின் செல்வர் விருது – சூரியா சேவியர்
சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சீவிராயர்
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை – திங்களிதழ்
தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு. அரசேந்திரன்
உமறுப்புலவர் விருது – நா. மம்மது
கி.ஆ.பெ. விருது – முனைவர் ம. இராசேந்திரன்,
கம்பர் விருது – பாரதி பாசுகர்
சி.யு.போப்பு விருது – ஏ.எசு. பன்னீர்செல்வம்
மறைமலையடிகள் விருது – சுகி.சிவம்
இளங்கோவடிகள் விருது – நெல்லைக் கண்ணன்
அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான. அலாய்சியசு


மேலும், இந்தாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை உரூ1 இலட்சத்தில் இருந்து 2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. கூடுதலாக, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவார்கள்.

வாழ்வியல் அரங்கம் – பொன்னவைக்கோ சிறப்புரை

 அகரமுதல




மயிலைத் திருவள்ளுவர் சங்கம்

தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகம்

இணைந்து நடத்தும்

வாழ்வியல் அரங்கம் – 19

தை 14, 2053 / 27.01.2022 வியாழன்

மாலை 4.00 – மாலை 6.00

கூட்ட எண் : 356 272 2898

கடவுச் சொல் : mtsacademy

சிறப்புரை – பேராசிரியர் முனைவர் பொன்னவைக்கோ

பங்கேற்போர்

முனைவர் சேயோன்

முனைவர் வாசுகி கண்ணப்பன்

பேரா.கோ.பார்த்தசாரதி

பேரா.க.திலகவதி

திருமதி செண்பக காசி

முனைவர் ஐ.அம்பேத்து

செவ்வாய், 25 ஜனவரி, 2022

தமிழனின் மொழிப்போர் எதற்காக? – இலக்குவனார் திருவள்ளுவன், இன்றைய(25/01) உரை

 அகரமுதல


திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம்

இணையவழிக் கருத்தரங்கம் 37

தை 12, 2053 / செவ்வாய் / 25.01.2022 /

மாலை 6.30

குறி எண் : 894 6054 6548

கடவு எண் : 202020

வலையொளி நேரலை : Dhiravidam 1944

தலைமை:  தகடூர் சம்பத்து

சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன்

“தமிழனின் மொழிப்போர் எதற்காக?”

தொடர்பு : 8939 59 4500




திங்கள், 24 ஜனவரி, 2022

தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

 

அகரமுதல


ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கான

தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

முதல் பரிசு: அமெரிக்கப்பணம்  $ 1000.00

இரண்டாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 500.00

மூன்றாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 250.00

  • கட்டுரைகள் திருக்குறள் குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 1500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • ஒருவர் எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம் ஆனால், வெவ்வேறு தலைப்புகளில் இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும்.
  • கட்டுரை குறித்த 5 நிமைய விரிவுரை, நேர்முகத்தேர்வு அடிப்படையில் கட்டுரையாளரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பெற்றுப் பரிசு முடிவுகள் எடுக்கப்படும்.
  • கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி kuralessay@washingtontamilsangam.org
  • கடைசி நாள்: : பங்குனி 01, 2053 / 15.03.2022

கூடுதல் தகவலறிய : https://tsgwdc.org/events/kuralessay

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா

 அகரமுதல


தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா

விழா மலருக்குப் படைப்புகள்

அனுப்ப வேண்டிய மின்வரி

malar@fetna.org

750 சொற்களுக்கு மிகாமல் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும்.

கடைசி நாள்: மாசி 17, 2053 / 01.03.2022

கூடுதல் தகவலறிய : http://fetna-convention.org  



குழந்தை வளர்ப்பிற்கான இணைய வழிப் பயிலரங்கம்

 அகரமுதல


பெண்களுக்கான குழந்தை வளர்ப்பு இணைய வழிப் பயிலரங்கம்

பிப்.11-16, 2022

பதிவுக்கட்டணம் உரூ.499/-

தொடர்பிற்கு: 75982 33858 ; 93455 53486

தகவல்: முதுவை இதாயத்து

துபாய் 00971 50 51 96 433

muduvaihidayath@gmail.com 

 




ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கலைஞர் செம்மொழி விருது வழங்கு விழாவில் முதல்வரின் சிறப்பான உரையும் அறிவிப்புகளும்

 அகரமுதல




கலைஞர்    மு.கருணாநிதி செம்மொழித்  தமிழ்  விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க.தாலின் அவர்கள்,

“மேடவாக்கம்  –  சோழிங்கநல்லூர்இணைப்புச் சாலை “செம்மொழிச்சாலை”  எனப்  பெயர்  மாற்றம்செய்யப்படும்.   

என்றும் 

தென்கிழக்குஆசியாவிலுள்ள  5  பல்கலைக்கழகங்களில் “செம்மொழித் தமிழ்இருக்கைகள்” அமைக்க நடவடிக்கை   மேற்கொள்ளப்படும்”

என்றும் 

“அண்ணா,  கலைஞர்காட்டிய பாதையில் கழக அரசுதமிழை  ஆட்சி  மொழியாக்கதொடர்ந்து குரல் கொடுக்கும்”

என்றும் 

உறுதிபடக் கூறினார். 2010  முதல்  2019-ஆம்  ஆண்டுகள்  வரையிலான  செம்மொழித் தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தால் வழங்கப்படும்     “கலைஞர்     மு.கருணாநிதி  செம்மொழித்  தமிழ்விருதுகள்’’    வழங்கும்  விழாவில், முதல்வர்  மு.க.தாலின்  அவர்கள் தமிழறிஞர்களுக்கு     விருதுகள்வழங்கி ஆற்றிய உரை வருமாறு:-

“தமிழுக்கும் அமுதென்றுபேர் -அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்உயிருக்குநேர்!”-  என்ற  புரட்சிக்கவிஞர்  பாரதிதாசனின்    கவிதை    வரிகளை நெஞ்சில்  ஏந்தி,  இந்த  விழாவின் மேடையில்  நான்  நின்றுகொண்டு இருக்கிறேன். தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியவர் – முத்தமிழறிஞர் கலைஞர்! தமிழுக்கான  செம்மொழித்  தகுதி ஏற்கப்பட  வேண்டும்  என்பது  தமிழறிஞர்களின்  நூற்றாண்டுக்  கனவு. அந்தக்  கனவை  நிறைவேற்றிய தலைவர்தான் நம்முடைய தமிழினத்தலைவர்  முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்கள்! அத்தகைய தலைவர் கலைஞரின் பெயரால்  அமைந்திருக்கக் கூடிய செம்மொழித் தமிழாய்வு விருதுகள், அதை  விழாவாக,  அதிலும்  குறிப்பாகப்,  பேரறிஞர்  அண்ணா  பெயரில் அமைந்திருக்கக் கூடிய  இந்த  நூலகத்தின் அரங்கத்தில் நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம். அண்ணனாகவும்  தம்பியாகவும் இருந்து  தமிழுக்குத்  தொண்டாற்றிய   இரண்டு   பெரு   மக்களின் நினைவை   ஏந்தி   இந்த   விழா மேடையில்  நான்  நின்றுகொண்டு இருக்கிறேன். தமிழ்  தொன்மையான  மொழி என்பதைத்  தமிழர்கள்  சொல்லித்தான்  தெரிய  வேண்டிய  அவசியமில்லை.  உலகம்  முழுவதும்  இருக்கும்    மொழியியல்    அறிஞர்கள், இனவியல்  அறிஞர்கள்  அதைத்தான்  சொல்லிக்கொண்டு  இருக்கிறார்கள்.  தொல்பொருள்  ஆராய்ச்சியாளர்களால்  ஏற்றுக்  கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது. பண்பாட்டுக்கு இலக்கணம் வகுத்த மொழி தமிழ்!தமிழ் – குறிப்பிட்ட நாட்டு மக்கள்பேசும் மொழியாக மட்டுமல்ல,  ஒருபண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது.  நம்முடைய  தமிழ்  மொழியானது.  நிலத்துக்கு,  மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக் கூடிய மொழி! தமிழைப் பேசும்போது  இனிமையாக இருக்கிறது. தமிழைக் கேட்கும்போது  இனிமையாக  இருக்கிறது. ஏன்,  ‘தமிழ்’  என்று  சொல்லும்போதே இனிமையாக இருக்கிறது. தமிழ் என்றாலே இனிமை என்றுதான் பொருள்! ‘இனிமையும் நீர்மையும்  தமிழ்  எனல்  ஆகும்’  என்றுபிங்கலநிகண்டும்  கூறுகிறது! தமிழுக்காக – தங்கள் உயிரையே தத்தம் செய்த தியாகிகள்! தமிழ்,  உலகின்  மூத்த  மொழிகளில்  ஒன்று!  தமிழ்,  எந்த  மொழியில்   இருந்தும்   கடன்   வாங்கிஉருவான  கிளை  மொழி  அல்ல.தமிழில்  இருந்துதான்  ஏராளமான மொழிகள்  உருவாகியுள்ளன. இப்படிப்  பல  மொழிகளை  உருவாக்கும்  திறன் கொண்ட  மொழிதான், நமது தாய்மொழி யான தமிழ். தமிழ்,  தமிழரசி,  தமிழரசன்  என்று மொழியின்  பெயரையே  பெயராக வைத்துக்கொள்ளும்   அளவுக்குப்பற்று  நம்  இனத்தில்  இருக்கிறது. மொழிக்காக உயிரைத் தந்த தியாகிகளைப்   பெற்ற   மொழியும்   நம் தமிழ்மொழி ஆகும். “இலக்கியச்        செழுமையும்இலக்கண    அறிவும்    கொண்டமொழியை  உயர்தனிச்  செம்மொழியாக  அறிவிக்க  வேண்டும்’’  என்ற கோரிக்கை   தமிழ்   அறிஞர்கள்இடையே   பல   ஆண்டுகளுக்கு முன்பே  எழுந்தது.  அந்தக்  கனவை நிறைவேற்றி      வைத்தவர்தான், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். 2004-ஆம்  ஆண்டு  அட்டோபர்14-ஆம்  நாள்,  ஒன்றிய  அரசால், காங்கிரசு   ஆட்சிக்   காலத்தில் தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.    இதைத்    தொடர்ந்து, செம்மொழித்   தமிழாய்வு   மத்தியநிறுவனம், அன்றைய ஒன்றிய அரசால்2007-ஆம் ஆண்டு ஆகட்டு 18-ஆம்நாள் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்கத்தில்  இந்த  நிறுவனம்,மைசூரில்,   இந்திய   மொழிகளின் நடுவண்    நிறுவனத்தில்    இருந்துசெயல்பட்டது. 2008-ஆம் ஆண்டு மேமாதம்  19ஆம்  நாள்  முதல்  சென்னைக்கு  இந்த  நிறுவனம்  மாற்றப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போதுதான்   “செம்மொழித்தமிழாய்வு  மத்திய  நிறுவனம்’’  என்றுபெயர்  சூட்டப்பட்டது.  இதற்கும்  காரணமாக  இருந்தவர்  நம்முடைய  தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.சென்னை  கடற்கரை  காமராசர்சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழித்   தமிழாய்வு   மத்தியநிறுவனத்தின்    அலுவலகத்தை2008-ஆம்  ஆண்டு  சூன்  30-ஆம்நாள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள். செம்மொழி நிறுவனத்துக்கு எனத் தனியாக   ஒரு   கட்டடம்   அமையவேண்டும்   என்று   முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆசைப்பட்டார்கள்.  அதற்காக  2007-ஆம்ஆண்டு    நவம்பர்    5-ஆம்    நாள் சென்னை   பெரும்பாக்கத்தில்   16 காணி  நிலத்தை  வழங்கினார்கள்.   1  கோடியே  45  இலட்சம்  உரூபாய் மதிப்பில் அந்த இடத்தை சமப்படுத்தி வழங்கினோம். கலைஞர் இருந்திருந்தால் -மகிழ்ந்திருப்பார்! அந்த  இடத்தில்  24  கோடியே  65 இலட்சம்  உரூபாய்  மதிப்பீட்டில்  ஒன்றியஅரசு  மாபெரும்  கட்டடம்  அமைத்துத் தந்துள்ளது.  கடந்த  12-ஆம்  நாள் அந்தக் கட்டடத்தை இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரமோடி   அவர்கள்   திறந்து வைத்திருக்கிறார்கள். காணொலி   வாயிலாக   நடந்த அந்த  விழாவுக்கு  நான்  முன்னிலைவகித்துப்  பேசும்போது  –  “இந்தியத் தலைமையமைச்சர்    அவர்கள்    செம்மொழித் தமிழாய்வு  நிறுவனத்தின்  புதிய  கட்டடத்தைத்  திறந்து  வைத்துள்ளார்கள். அதற்காகத்  தமிழ்நாட்டு  மக்களின் சார்பிலும்,  அரசின்  சார்பிலும்,  தனிப்பட்ட  என்  சார்பிலும்  நன்றி  தெரிவித்துக்  கொள்கிறேன்”  என்று  குறிப்பிட்டுச்  சொன்னேன்.“

தலைவர்  கலைஞர்  அவர்கள்இன்று    இருந்திருந்தால்    மிகுந்தமகிழ்ச்சி அடைந் திருப்பார்கள். தமிழர் திருநாளாம்  பொங்கல்  திருநாளின்போது  தமிழுக்கு  இத்தகைய  சிறப்புசெய்யப்பட்டுள்ளது  மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுக்காட்டியிருப்பார்கள் என்று கூறினேன். அதன் பிறகு நானும் தமிழ் வளர்ச்சித்  துறை  அமைச்சர்  தங்கம்  தென்னரசு  அவர்களும்  பெரும்பாக்கம் சென்று  தமிழாய்வு  நிறுவனத்தைப் பார்வையிட்டோம். உண்மையில் மிகச்சிறப்பாக அந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது.  தொடக்கம்  முதல்  இன்றுவரை  இதன்  வளர்ச்சிக்குப்  பாடுபட்டஅனைவருக்கும்   தமிழக   அரசின் சார்பில் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்    கொள்ள    விரும்புகிறேன்.தகுதிசால்  தமிழறிஞர்களுக்குவிருது வழங்க விரும்பினார் கலைஞர்!

*  செம்மொழித்  தமிழாய்வு  மத்தியநிறுவனம்  41  செவ்வியல்  தமிழ்  நூல்களின்  ஆய்வுக்கு  முதலிடம்  வழங்கிவருகிறது.*  தொல்  பழங்காலம்  முதல்  கி.பி.6-ஆம்  நூற்றாண்டு  வரையிலானகாலப்பகுதிக்குள்  தோன்றிய  இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினைமேற்கொள்ள  உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய  இந்த  நிறுவனம்,  தமிழ்மொழி  ஆய்விலும்  அதன்  மேம்பாட்டிலும்      தனிக்கவனம்      செலுத்திவருகிறது.*  செம்மொழித்  தமிழின்  தொன்மையையும்  தனித்  தன்மையையும் அவற்றின்  மரபுத்  தொடர்ச்சியையும் ஆராய்ந்து  பாதுகாப்பதை  முக்கிய நோக்கமாக  இந்நிறுவனம்  கருதிக் கொண்டிருக்கிறது. இந்த  வரிசையில்  செம்மொழித் தமிழாய்வில்  குறிப்பிடத்தக்க  பங்களிப்புச்  செய்தவர்களுக்கு  விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தியாவிலேயே மிக உயரிய விருது!செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு,  2008-ஆம்  ஆண்டு  சூலை24-ஆம் நாள், தனது சொந்த நிதியில் இருந்து    ஒரு    கோடி   உரூபாயை முத்தமிழறிஞர்  தலைவர்  கலைஞர் அவர்கள் வழங்கினார்கள். ‘கலைஞர்மு.கருணாநிதி  செம்மொழித்  தமிழ்அறக்கட்டளை’  என்ற  பெயரால்  ஓர் அறக்கட்டளையை  நிறுவினார்கள். இந்த  அறக்கட்டளை  சார்பில்  தகுதிசால்   தமிழறிஞர்களுக்கு   விருதுவழங்க  வேண்டும்  என்று  முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்கள்  விரும்பினார்கள். இந்தியாவிலேயே  மிக  உயரிய விருதாக, பத்து இலட்சம் உரூபாய் பரிசுத்தொகை  கொண்டது  இந்த  விருது.பாராட்டு  இதழும்,  முத்தமிழறிஞர் கலைஞர்    அவர்களின்    உருவம் பொறித்த  நினைவுப்  பரிசும்  வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்க மறுத்து வந்தனர்!முதல்  விருது  2010,  சூன்  23-அன்று   கோவையில்   நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அன்றைய  குடியரசுத்  தலைவர்  அவர்களால்  பின்லாந்து  நாட்டைச்  சேர்ந்த‘ பேராசிரியர்  அக்கோ  பார்ப்போலா’ அவர்களுக்கு        வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்த விருதைத்  தொடர்புடைய  அரசுகள் வழங்கி  இருக்க  வேண்டும்.  அதை இந்த  மேடையில்  பேசி  நான்  அரசியலாக்க  விரும்பவில்லை. தமிழுக்கு,  தமிழறிஞர்களுக்குச் செய்ய    வேண்டிய    பாராட்டுகள் ,மரியாதையில்கூட  அரசியல்  புகுந்ததன் காரணமாக, 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்தவிருதுகள் வழங்கப்படவில்லை. கழகஅரசு  பொறுப்பேற்றதற்குப்  பிறகு விருதாளர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்கள்! வேறு எதற்காக இல்லாவிட்டாலும் – தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பதற்காகவாவது,       தமிழ்நாட்டில் மீண்டும்  திராவிட  முன்னேற்றக்  கழகத்தின் ஆட்சி மலர்ந்ததை நினைத்து இன்றைய  நாளில்  நான்  பெருமைப்படுகிறேன். எப்போதும்        தமிழுக்காகவே உழைத்திடும்  திராவிட  முன்னேற்றக்கழகம்  ஆட்சிப்  பொறுப்பில்  இருந்தபோதெல்லாம்,  தமிழின்  வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது.    குறிப்பிட்டுச் சொல்ல  வேண்டுமென்றால், நமது மாநிலத்துக்கு மொழியின்பெயரால்  ‘தமிழ்நாடு’  என்று  பெயர்சூட்டியது,  திராவிட  முன்னேற்றக்கழக ஆட்சி!தமிழ்த்தாய்  வாழ்த்தை  நிறுவி, அதனை  மாநிலப்  பாடல்  ஆக்கியது, கழக ஆட்சி! உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைப் பேரறிஞர் அண்ணா தலைமையில்  தொடங்கி,  உலகத்  தமிழ்ச்  செம்மொழி  மாநாடு  வரை  நடத்தி,  தமிழை உலகளவில் கொண்டு சென்றது.  ஐயன்  வள்ளுவர்  –  ஒளவையார்  முதலான  பழங்காலத்  தமிழ்ப்புலவர்கள்  தொடங்கி,  காலுடுவெல்  – சி.யு.போப்பு  போன்ற  அயல்நாட்டுத் தமிழறிஞர்கள்  வரை,  திருவுருவச்சிலை  நிறுவியதும்  கழக  ஆட்சியில்தான். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு  சமூகநீதி  வழியில்  உயர்கல்வியில்  இடஒதுக்கீடு  தந்தது  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்! வள்ளுவருக்குச் சென்னையில் கோட்டமும்  –  குமரியில்  133  அடியில்வானுயர்ந்த சிலையும் நிறுவி உலகமே அண்ணாந்து     பார்க்க     வைத்த ஆட்சிதான்  திராவிட  முன்னேற்றக்கழக ஆட்சி! தமிழை  இணையப்படுத்தியது; தி.மு.கழக ஆட்சி! சுவடிகளில்  இருந்து  புத்தகங்களுக்குத்  தமிழ்  மாறியது  போல், தமிழை இணையத்துக்குக் கொண்டுசெல்ல  1999-இலேயே  தமிழ்  இணையமாநாடு நடத்தியதும், தமிழ் இணையக்கல்விக்  கழகத்தை  நிறுவி,  இன்று உலகில் எங்கிருந்தாலும், தமிழ் இலக்கண  –  இலக்கியங்களை  அனைவரும்  படிக்கும்  அளவிற்குத்  தமிழை இணையப்படுத்தியதும்     திராவிடமுன்னேற்றக் கழக ஆட்சி தான். இப்படி  என்னால்,  ஒரு  நீண்ட பட்டியலை  சொல்லிக்  கொண்டிருக்கமுடியும்!  இப்படித்  திராவிட  முன்னேற்றக்  கழக  ஆட்சி  தமிழுக்கு  ஆற்றியபணிகளின்  தொடர்ச்சியாகத்தான் இந்த  விழாவில்  சில  அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.* 

செம்மொழித்  தமிழாய்வு  மத்தியநிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள  மேடவாக்கம்  –  சோழிங்கநல்லூர்    இணைப்புச்    சாலை    இனி“செம்மொழிச்சாலை”  எனப்  பெயர்மாற்றம்  செய்யப்படும்.* 

செம்மொழிச்  சிறப்புகளை  உலகெங்கும்  கொண்டு  சேர்க்கும்  வகையில்  முதற்கட்டமாகத்  தென்  கிழக்குஆசிய நாடுகளில் உள்ள 5 பல் கலைக்கழகங்களில்  ‘செம்  மொழித்  தமிழ்இருக்கைகள்’  அமைப் பதற்கான நடவடிக்கை  மேற்கொள் ளப்படும்.

தமிழ்  மொழிக்கு  வளம்  சேர்க்கும் முதன்மைத்துவம்  வாய்ந்த  பல  திட்டங்களைச்  செம்மொழி  நிறுவனம்  மேற்கொண்டு  வருகின்றது.  செம்மொழி நிறுவனம்  முன் வைத்துள்ள  இலக்குகளை   அடைய,   தமிழ்நாடு   அரசு எப்போதும் துணை நிற்கும். விருது   பெற்ற   தமிழறிஞர்கள் அனை  வரையும்  நான்  மனதாரப்பாராட்டுகிறேன்,  வாழ்த்துகிறேன். உங்களுக்கு  விருது  வழங்கியதன்மூலமாகச்  செம்மொழி  நிறுவனம்பெருமை  அடைகிறது,  ஏன்,  நானும் பெருமை  அடைகிறேன்,  தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறது. இந்த  விருதின்  மூலமாகத்  தமிழ்மொழி மேலும் சிறப்படையப் பல்வேறுஆக்கப்பூர்வமான பணிகளை நீங்கள் தொடர  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளக்  கடமைப்பட்டிருக்கிறேன். உலகளாவிய அளவில் ஆய்வுகள் விரியட்டும்! பழமைக்குப்     பழமையாய்     – புதுமைக்கு   என்றும்   புதுமையாய் இருக்கக்கூடிய  மொழி  நம்முடைய தமிழ் மொழி! இந்த  மொழி  குறித்த  ஆய்வுகள் தமிழ்நாட்டோடு,  இந்திய  எல்லையோடு முடிந்து விடாமல் உலகளாவியதாக அமைய வேண்டும். உலக மொழியியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக    நமது    ஆய்வுகள்    அமையவேண்டும். மொழியை   ஒரு   பண்பாடாகச் சொல்வது உலக மரபாகவே உள்ளது.“ நோம்சாம்சுகி’’  போன்ற  உலகப்புகழ்  பெற்ற  அறிஞர்கள்,  மொழியைமூளையின்    ஓர்    உறுப்பு    என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். “குழந்தையின்   மூளைக்குள்   ஒருமொழியறிவு  இருக்கிறது,  இது  மனித இனத்துக்கே  உரியது”  என்று  அவர் சொல்கிறார்.‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால்’என்று  எப்போதோ  சொல்லிவிட்டார் புரட்சிக்கவிஞர்          பாரதிதாசன் அவர்கள். உலக அறிஞர்கள் தேடி வரும் இடமாக அமையட்டும்! உங்களது ஆய்வுகள் அறிவுப்பூர்வமானதாக  மட்டுமில்லாமல்  உணர்வுப்பூர்வமானதாகவும்  அமைய  வேண்டும். அப்படி அமைந்தால் உலக மொழியியல்  அறிஞர்கள்  அனைவரும்  தேடிவரக்கூடிய    இடமாகச்  செம்மொழித் தமிழாய்வு  மத்திய  நிறுவனம்  நிச்சயமாக  மாறும்.  அப்படி  உயர்ந்து  நிற்கவேண்டும்  என்று  கேட்டுக்  கொள்கிறேன்.

‘எங்கும்  தமிழ்!  எதிலும்  தமிழ்!’என்று  பேரறிஞர்  அண்ணா  காட்டியபாதையில்,  முத்தமிழறிஞர்  தலைவர்கலைஞர்    அவர்களின்    தொலைநோக்குப் பார்வையோடு நடைபோடும் நமது அரசு, தமிழை ஆட்சிமொழியாகவும் வழக்காடு மொழியாகவும் மேலும் உயர்த்திட  தொடர்ந்து  குரல்  கொடுக்கும்! தமிழ் வாழ்க! செம்மொழித் தமிழ்வாழ்க!   என்று   வாழ்த்தி   விடைபெறுகிறேன்.

இவ்வாறு      முதல்வர்      மு.க.தாலின் அவர்கள் உரையாற்றினார்.

– முரசொலி