வியாழன், 4 பிப்ரவரி, 2010

செங்கல்பட்டு ஈழ ஏதிலிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

பதிந்தவர்_கனி on February 3, 2010
பிரிவு: முதன்மைச்செய்திகள்

[4ஆம் இணைப்பு காணொளி] செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆடியோ கேட்க இங்கே அழுத்தவும்

நன்றி: தமிழன் கலைக்கூடம்

செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமிலிருந்து தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழகரசு செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமை மூடி அங்கிருப்பவர்களை ஏனைய முகாங்களிற்கு மாற்றம் செய்யப்போவதாக அறிவித்ததன் பின்னர் அந்த உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக அரசின் அந்த அறிவித்தல் நடைமுறை படுத்தபடாத காரணத்தினால் அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் மீண்டும் அவர்கள் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

கடவுச்சீட்டு வழக்கு மற்றும் ஏனைய வழக்குகளில் அங்கு மக்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வேறு முகாம்களிற்கு மாற்றக்கோரியே இந்த உண்ணாநிலைப் போராட்டதை நடத்தினார்கள்.

இருப்பினும் அவர்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் மக்களை அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. உள்ளிருந்து கொண்டு உண்ணாநிலை மேற்கொண்ட மக்கள் மீது இரவு 10 மணியளவில் உள்நுழைந்த காவற்துறையினர் சரமாரியாக தாக்கினர்.

காவற்துறையினரின் தாக்குதலில் 16க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையிலும் அவர்களிற்கு தகுந்த மருத்துவ உதவியை செய்யாமல் வேலூர் சிறையில் அடைப்பதற்காக அவர்களை இழுத்துச் சென்றிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மொழி மாநாடு நடக்கவிருக்கின்ற இந்த நேரத்தில் செங்கல்பட்டு ஈழ ஏதிலிகளின் உண்ணாநிலை அதற்கு இடையூறாக இருந்துவிடும் எனக்கருதிய தமிழகரசு காவற்துறையினரை ஏவிவிட்டு அங்கிருக்கும் ஏதிலிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மீனகம் இணையம் அறிகிறது.

காவற்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :

செல்வக்குமார்
ஜெயமோகன்
பத்மநாபன்
தம்பிதுரை
பிரபாகரன்
பிரதீபன்
அமலன்
ரமணன்
சிறீதரன்
அருண்
தாசன்
சேகர்
நவீன்
முத்து

ஏதிலிகளின் உண்ணாநிலையால் தமக்கு நெருக்கடி ஏற்படப்போவதை உணர்ந்த தமிழகரசு எஸ்பி.பிரேம் ஆனந்த் சின்கா ,எ.எஸ்.பி சேவியர் தன்ராஜ் ,இன்ஸ்பெக்டர் ஆல்பட் வில்சன், எஸ்.ஐ ராஜேந்திரபிரசாந்த் இவர்கள் தலைமையில்

சுமார் 150 காவற்துறையினர் மற்றும் 25 கியூபிரான்ச் காவற்துறை இரவு 9 மணி முதல் 2 மணி வரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத் தாக்குதலில் அமலன் என்பவரது இடது கை ஒடிந்து விட்டது. மற்றும் ரமணன், பத்மராஜா,ஜெயமோகன், பகிரதன், பிரதிபன், அருண், கிரிதாஸ், பரமேஸ்வரன், அமலன், கிருஷ்னநீதன், கங்காதரன், பிரதிதாசன், ருக்சன்,

சேகர், செல்வகுமார், இவர்கள் 15 பேரை தனியாக ஒரு வாகனத்தில் அடைத்து இரவு 3 மணிக்கு செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கமால் ஓபி சீட்டை மட்டும் வாங்கி கொண்டு அங்கு இருந்து அவர்களை சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்று உள்ளார்கள்.

வேறு என்ன காரணத்திற்காகவோ தெரியாமல் அவர்களை வேலூர் சிறைக்கு அழைத்து சென்று உள்ளனர்

அவர்கள் செல்லும் வழியிலும் உணவு, தண்ணீர், மலம் ,கழிக்க கூட விடாமல் அடித்து கொண்டே தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் அழைத்து கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு விபரம்

கிரைம் எண்: 58/2007 D1 டவுன் காவல் நிலையம் ,செங்கல்பட்டு

வழக்கு பிரிவுகள்:

147 கலகம் விளைவித்தல்

148, அபாயகரமான ஆயுதத்தை தாங்கி கலகம் விளை வித்தல்

324, அபாயகரமான ஆயுதங்கள் அல்லது பொருட்கள் மூலம்தம்மிச்சையாக காயம் விளைவித்தல்

294, ஆபாச செயல்களும் பாடல்களும்

506, மிரட்டுதல்

332, பொது ஊழியரை அவரதுகடமையிலிருந்து தடுத்தல்

307, கொலை முயற்சி

1. இந்த பொய்வழக்குகளை போட்டுள்ளனர் சிறையில் இருக்கும் ஒருவர் இதனை செய்யமுடியுமா?

2. சிறையில் எப்படி அபாயகரமான ஆயுதங்கள் வரும்?

3. 2 பேருக்கு ஒரு அறை யில் எப்படி கலகம் செய்யமுடியும்

4. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 96ன் படி தற்காப்புக்காக செய்யப்படும் போது செய்யப்படும் எதுவும் குற்றம் இல்லை

5. சிறை கம்பிக்குள் இருக்கும் ஒரு சிறை கைதி எப்படி பொது ஊழியரை கடைமையை தடுக்க முடியும்

இதனை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி நாளை உயர்நீதி மன்றத்தில் RIT PETTISHON போட உள்ளார்.

பத்திரிகை ஆசிரியர் அய்யநாதன் தலைமையில் செங்கல் பட்டு தாக்குதலைக் கண்டித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

(Visited 498 times, 489 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக