சனி, 6 ஆகஸ்ட், 2016

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மிதிவண்டிகள் அன்பளிப்பு


வட்டுக்கோட்டை உதவி01, அம்பலவாண் சொர்ணமலர்; vattukottaiuthavi01_amabalavanarsornammal

வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினால்

மிதிவண்டிகள் அன்பளிப்பு

  புலம்பெயர் உறவான பிரான்சைச் சேர்ந்த உதயகுமார் தருசினி  தன் தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு  நாளை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்குப் புதிய  மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார்.
மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்  பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்கத் தலைமைச்செயலகத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சி.நிரஞ்சிகா, வட்டு இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.பவானி ஆகிய இருவருக்கும்  இம் மிதிவண்டிகள் கையளிக்கபட்டன.
கல்வியில் சிறந்து விளங்கும்  மேற்படி இரு மாணவர்களும் தமது கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு உதவியாக  மிதிவண்டிகள் தந்துதவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகத் தமது பிள்ளைகள் போன்றும் இவர்களும் கல்வியில் சிறந்து விளங்கி  குமுகத்தில் சிறந்த  மக்களாக உருவாக வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இத் தொண்டினைத் தன் தாயாரின் நினைவு  நாளை முன்னிட்டு வழங்கி வைத்த உ. தருசினிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் நன்றிகளைக் கூறிக் கொள்வதுடன் இவரின் தாயாரான அ.சொர்ணமலர் அவர்களின் ஆதன்  அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை  இறைஞ்சுகிறோம்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன!
முன்னாள் போராளி-சான்று01 ; witness01

தடுப்புமுகாம் மறுவாழ்வின்போது  வேதிய உணவு வழங்கப்பட்டது – ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டன :  – முன்னாள் போராளி சான்றுரை

 இனப்படுகொலைப் போரின் பின்னரான  மறுவாழ்வின்போது தமக்கு  வேதிய(இரசாயனம் கலந்த) உணவுகள் வழங்கப்பட்டதோடு  ஐயத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சான்றுரைத்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் நான்கு மாவட்டங்களில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றில் பங்கேற்று மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஒட்டிசுட்டானில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு சான்றளித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறுதிப்போரின்போது பலர் சரணடைந்திருந்தனர். இது தொடர்பாகப் பல செய்திகள் உள்ளன. ஆனால் மக்கள்  இது தொடர்பாகக் கதைக்கப் பயப்படுகின்றார்கள். இதைக் கதைக்கப்போனால் எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை. தாம் ஒருவரையும் கொல்லவில்லை என்கிறார்கள்.  அவ்வாறாயின் அங்கு சென்றவர்கள் எல்லாம் நஞ்சு அருந்தியா இறந்தார்கள். கோழியைப் பிடித்துச் சாப்பிட்டவனிடம் “எங்கள் கோழியைக் கண்டீரோ” என எவ்வாறு கேட்க முடியும். அவன் எங்களுக்கு நீதியைத் தரப்போவதில்லை. எங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் கூடக் குட்டிக்கரணம்  அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாகப் பன்னாடுகளில் இருந்து நடுநிலைமையான நாடுகள் தான் எமக்கு நீதியை வழங்கவேண்டும்.
கிரேசிமா, நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூடக் கண்டிப்பாக இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான்.
எங்கள் விரலை வெட்டிப்போட்டுத்,  “தம்பி தெரியாமல் வெட்டிவிட்டேன் நான். அம்பு வில்  தருகிறேன், உன்னைப் பாதுகாக்க” எனக் கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன.
  விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை.  போர்அறம்(யுத்த தருமம்) என்று ஒன்று உள்ளது.  சிரீலங்கா அரசாங்க இராணுவத்திற்குப் போர் அறம்பற்றிக் கடைசிவரை போதிக்க வேண்டும்.
  சரணடையப்போகிறவர்களைச் சுடுவது  அறமில்லை. ஏனெனில் அவர்கள்  ஆயுதமற்றவர்(நிராயுதபாணி)கள்.
  நான் ஒரு முன்னாள் போராளி. தடுப்பால் வந்த பிறகு நாங்கள்  போர்க்களத்தை விட்டு ஒதுங்கி இருக்கிறோம். சொன்னாலும் சொல்லா விட்டாலும்  அவர்கள் எங்களுக்கு  வேதிய(இரசாயன) உணவுகளைத் தந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்கு விளங்குகின்றது. நான் முன்பு 100  புதுநிறைகல் தூக்கி எத்தனையோ  புதுக்கல்(கிலோமீற்றர்) ஓடுகிற எனக்கு ஒரு பொருளைக்கூடத் தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விளங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினார்கள்? ஊசியைக் கொண்டுவந்து போடுவார்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. 12 ஆயிரம் போராளிகளுக்கும் நீங்கள் மறுவாழ்வு அளித்தீர்கள் என்றால்தான் இந்தப் போராட்டம் திரும்ப துளிர்க்காது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளி-சான்று02 ; witness02

பேரா.க.அன்பழகனின் நூலறிமுகம், சென்னை 600 001
பேரா.க.அன்பழகனின் நூலறிமுகம், சென்னை 600 001

ஆடி 25, 2047 / ஆக. 16, 2016

மாலை 6.00

ஒய்எம்சிஏ பட்டிமன்றம்
(கி.இ.க.பட்டிமன்றம்)

பேரா.க.அன்பழகனின்
‘பொதிகையில் வீசிய பூந்தென்றல்’
நூலறிமுக விழா

மு.பி.பாலசுப்பிரமணியன்
இள.புகழேந்தி
காசி முத்துமாணிக்கம்

அழை-பேரா.க.அன்பழகன் நூல் வெளியீடு :azhai_anbazhagan_nuulveliyeedu