முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவம் சுற்றிவளைத்தது உண்மை சுடப்பட்டதும் உண்மை ஆனால் புலி இயக்கத் தலைவனின் உயிரிற்கு பங்கம் ஏதும் இல்லை. இது தான் காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.   Embed " readonly="readonly" type="text">
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத் தொடர்பாக எந்த செய்தி வந்தாலும் அது உலகத் தமிழர்களது நாடித்துடிப்பை எகிறவைத்துவிடும். அதனை வைத்து சில தமிழ் இணையங்கள் கீழ்தரமான வேலைகளில் இறங்கி தமது தளத்திற்கு அதிகளவான பார்வையாளர்களை வரவைப்பதற்காக முயற்சித்து வருகின்றன.

ஈழதேசம் இணையத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பாகவும் முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் நடந்தேறியவை குறித்தும் தெளிவான தகவல்கள் அன்று தொட்டே கிடைத்துவிட்டன. ஆனால் தேசியத் தலைவர் மறைவாக இருக்கும் காரணத்திற்கு பங்கம் உண்டாக்க விரும்பாது இதுவரை மௌனம் காத்துவருகின்றோம்.

இருந்தும் தமிழர்களது உளவுரனை சிதைப்பதற்காக எதிரிகளும் துரோகிகளும் கையிலெடுக்கும் ஒரே விடையமாக தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பான செய்திகள் நிலைபெற்றுவிட்ட புறச்சூழலில் அதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க ஈழதேசம் இணையம் பல வழிகளில் நீண்டநாட்களாக முயற்சி செய்ததன் விளைவாக தற்போது சோதிட ரீதியாக தலைவரது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.

அதனை உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஈழதேசம் இணையம் பெரும்மகிழ்வடைகின்றது. அத்துடன் அதற்கான நேரமாக இன்றைய சூழலும் அமைந்து வலுச்சேர்துள்ளது.

காலச்சக்கரத்தின் மூலமாக உலகின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்த வழியில் தமிழர்களின் ஆத்மாக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தேசத்தின் சொத்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மர்மத்திற்கு விடைகான முயற்சித்தோம்.

1993ம் ஆண்டு சாதாரண அமைச்சராகவும் தரநிலையில் பலரிற்கு பின்னாலும் பத்தோடு பதினொன்றாக இருந்த ராசபக்சேதான் சந்திரிக்காவிற்கு பின்னர் நாட்டை ஆட்சி செய்வார் என்று ராசபக்சேவின் சாதகத்தினை கணித்து சொன்ன பிரபல சோதிடரை அணுகி எமது எண்ணத்தை சொன்னவுடன் தயக்கமின்றி ஒப்புக் கொண்டு இதனை சாத்தியமாக்கியுள்ளார்.

இனிமேலும் தாமதம் வேண்டாம் நேரடியாக கேளுங்கள்... தெளிவான முடிவுக்கு வாருங்கள்... இனிமேல் எந்த குளப்பங்களிற்கு உங்கள் வாழ்நாளில் இடம் கொடுக்காது விடுதலைக்கான பணியினை ஆற்றுங்கள். விரைவில் தலைவர் தொடர்பான தகவல் உலகிற்கு கிடைக்கும்.

"ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்"
 நன்றி ஈழதேசம்