வியாழன், 2 ஜூலை, 2020

குவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020

அகரமுதல

ஆனி 21, 2051 / சூலை 5 ,2020

மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

கலைமாமணி எசுஆர்சி சுந்தரம்

வாரம் ஒரு புத்தகம்
நான் என்னைத் தேடுகிறேன் – கவிதைகள்
நூல் குறித்து – கவிஞர் சுரேசு இராசகோபால்
இவ்வாரச் சிறப்பு விருந்தினர்  திரு சுந்தரம் 

63 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறார்களுக்காகக் கதைகள்கட்டுரைகள்நாடகம் எழுதி வருபவர்;   சிறுவர் சங்கம்  அமைத்து நிகழ்வுகள்,    போட்டிகள்,    கலை நிகழ்ச்சிகள்நாடகங்கள் நடத்தியவர்கலைமாமணி முதலான இருபதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர் 
000
கூட்ட எண் /  Meeting ID: 861 2388 1501   
கடவுச்சொல்குவிகம் 058 / KUVIKAM 058
 
நிகழ்வில் பங்குகொள்ள இணைப்பு :-

 https://us02web.zoom.us/j/86123881501?pwd=cFBCRXZnSmN1SjAwbE1wT0hwaVZ0QT09
 
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே எல்லோரும் நிகழ்வில் இணைய இயலும்.  
 நிகழ்வு சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்.
 
உள் நுழையும்போது  தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்
 
நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIC)  அமைதிப்படுத்திவிடவும்.
 
நிகழ்ச்சி சிறக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி


அகரமுதல

ஆனி 19 – ஆனி 21, 2051 / சூலை 3 -5 , 2020

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி


நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க: சொடுக்கவும்

முதல் நாள் வெள்ளிக்கிழமை
ஆனி 19, 2051 / சூலை 3 ,2020
கீழை நேரம் முற்பகல் 5.30-8.30 / பசிப்பிக்கு நேரம் பிற்பகல் 2.30 – 5.30

தொழில் முனைவோர் கூட்டம்
திருக்கறள் ஓதுதல்
சிறப்புச் சொற்பொழிவுகள்
கவியரங்கம்

இரண்டாம் நாள் சனிக்கிழமை
ஆனி 20, 2051 / சூலை 4 ,2020
கீழை நேரம் முற்பகல் 10.30-பிற்பகல் 1.15;  பிற்பகல் 4.00 – முற்பகல் 11.00
பசிபிக்கு நேரம் முற்பகல் 7.30- முற்பகல் 10.15 ; முற்பகல் 1.00 பிற்பகல் 8.00
சிறப்புச் சொற்பொழிவுகள்
இளையோர் கலந்துரையாடல்
திரைக்கலைஞர்கள் நிகழ்ச்சி
பட்டிமன்றம்

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஆனி 21, 2051 / சூலை 5 ,2020
கீழை நேரம் முற்பகல் 10.00- பிற்பகல் 5.30 /
 பசிபிக்கு நேரம் முற்பகல் 7.00- பிற்பகல் 2.30
மரபுக்கலை
மெல்லிசை
தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்
அன்புடன்
சுந்தர் குப்புசுவாமி
தலைவர்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

செவ்வாய், 30 ஜூன், 2020

ஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்!
கார்த்திகை 26,1970/11.12.1939

ஆனி 16, 2051/30.06.2020

தமிழறச் செம்மல் பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்!

செவ்வாய்தோறும் சென்னையில் தமிழ்க்கூடலை நிகழ்த்தி வந்த பொறியாளர் கெ.பக்தவத்சலம் இன்று(ஆனி 16, 2051/30.06.2020)காலை 8.30 மணியளவில் அயராது ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளில் இருந்து விடை பெற்றார்.
கிறித்துவ இலக்கியக்கழகத்தின் (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் என்றதும் அறியாதார் கிறித்துவ அமைப்பின் வாதுரை மன்றம் என எண்ணுவர். ஆனால் தமிழ்வளர்க்கும்  தமிழ் ஆர்வலர்களின் சங்கமம் இது என்பதைத் தமிழன்பர்கள் அறிவர். சொல்லின் செல்வர் இரா.பி.சேது(பிள்ளை) அவர்களை முதல் தலைவர்களாகக் கொண்டு 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. இதில் 1966 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயலராகத் திறம்படச் செயலாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் அமைப்பு ஒன்றின் செயலராகத் தொடர்ந்து 54 ஆண்டுகள் தொண்டாற்றுவது அருவினைச்செயலாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் முதல்நிலைத் தமிழறிஞர்களும் வளர்நிலைத் தமிழாசிரியர்களும் மலர்நிலை தமிழ் ஆய்வாளர்களும் பங்குபெற்றுள்ளனர். அவ்வாறு பங்கேற்கா அறிஞர் யாருமிலர் எனலாம். இவரது செவ்வாய்க்கிழமை நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதும் சூழலை இவர் உருவாக்கினார்.
1958இல் இளநிலைப்பொறியாளராகத் தம் பணி வாழ்வை சென்னை மாநகராட்சியில் தொடங்கினார். பொறியியல் சான்றிதழ்க் கல்வியை முடித்தவர் தணியாத் தமிழார்வத்தால் குமுகவியலில் இளங்கலைப் பட்டத்தையும் அரசறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். என்றாலும் பள்ளிப்பருவத்தில் தமிழில் மிகுதியாக மதிப்பெண் பெற்ற இவர் நாட்டம் முழுமையும் தமிழில்தான் இருந்தது.  தம் வீட்டிற்கே ‘தமிழ் இல்லம்’ என்று பெயர் சூட்டியவர் தமிழை எங்ஙனம் மறக்க இயலும்? மாணவப் பருவத்திலேயே ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தனிஅரசு, சி.பி.சிற்றரசுவின் தீப்பொறி, கவியரசு கண்ணதாசனின் தென்றல், நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடன்,  ஆனந்தபோதினி ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். பணிவாழ்க்கையில் இணைந்தாலும் தமிழ் வாழ்வாக மாற்றிக் கொண்டார்.
நித்திலக்கோ’ என்னும் புனைபெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இளந்தமிழன், தாமரை, ஓம் சக்தி வாசகர்கள் இவரை நன்கு அறியும் வகையில் அவற்றில் சிறப்பான கட்டுரைகளைப் படைத்து வந்தார்.
கி.இ.க.(ஒய்.எம்.சி.ஏ.)பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிஞர்களின் உரைகளைக் குறிப்பெடுத்து இலக்கிய இதழ்களுக்கு அனுப்பி வந்தார்.
தமிழக அரசின் திருக்குள்நெறி பரப்பு மையம் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருதும், பெரியார் நூலக வாசகர் வட்டம் ‘பெரியார் விருது’ம் வழங்கியுள்ளன. உலகத்திருக்குறள் பேரவை, வில்லிவாக்கம் திருக்குறள் வாழ்வியல் சங்கம், வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம், சென்னை நண்பர்கள் கழகம் முதலான தமிழ் அமைப்புகளும் இவருக்கு விருதுகளும் பாராட்டிதழ்களும் அளித்துச் சிறப்பித்துள்ளன. முகம்மாமணி, கவிதை உறவு முதலான இதழ்கள் இவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
வேதநாயகர், அறம் வளர்த்த ஆன்றோர்கள், புகழாளர்கள் முதலான நூல்களை எழுதித் தமிழான்றோர்களை இக்காலத்தலை முறையினர் உணரச்செய்தார். இலக்கியக்கூட்டங்களில் இவர் ஆற்றிய பொழிவுகளும் வானொலி, தொலைக்காட்சி உரைகளும் மென்மையும் நுண்மையும் மிக்கன. இச்சிறப்பின் காரணமாகத்தான் ‘சன்’தொலைக்காட்சியில் இவர் ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சியில் இருமுறை பங்கேற்றார்.
மேதை வேதநாயகம்மீது பற்று கொண்டு அவரது நினைவு மலரைச் சிறப்பாகத் தொகுத்து தந்தார். அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரைவயில் அவர் குறித்துச் சிறப்பாகப் புகழுரை வழங்கினார்.
வாசுதேவ(பிள்ளை)அறக்கட்டளையின் அறங்காவலராகத் திகழ்ந்தும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், வானவில் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பேற்றும் ‘கருணீகர் நல்வாழ்வு’ இதழின் சிறப்பாசிரியராக இருந்தும் பிற பொதுவாழ்விலும் ஈடுபடுத்திக் கொண்டவர்.
இலக்கிய உரைகள், கவிதைகள், தொடர் சொற்பொழிவுகள், இலக்கியத் திறனாய்வுகள் என அறுநூற்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளால் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்‘ எனத் தமிழன்னைக்கு வாரந்தோறும் தமிழ்மாலை அணிவித்து வந்த செம்மல் தம் பணிகளில் இருந்து விடை பெறுகிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் வாழும் கவிஞர்கள் குறித்து ஆற்றிய 128 தொடர் சொற்பொழிவுகளாகும்.
கணிணிவழிக் கிரந்தத்திணிப்பு எதிர்ப்பிற்காக “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா” என நிகழ்ச்சி நடத்தி என்னைச் சிறப்புரையாற்றச் செய்தார். என் தலைமையில் இவர் வள்ளலார்பற்றி ஆற்றிய உரை, வள்ளலார் குறித்த சிறந்த இலக்கிய ஆய்வாகும்.
ஆட்சித்துறையினர், நீதித்துறையினர், திரைத்துறையினர், இதழியல்துறையினர், கலைத்துறையினர், முதலான எத்துறையில் இருந்தாலும் தமிழ் ஆர்வலர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது இவரின் தனிச்சிறப்பு. அயல்வாழ் தமிழறிஞர்கள் இங்கு வரும்பொழுது அவர்களை அழைத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவார்.
அறிஞர்களின், கவிஞர்களின் பிறந்தநாள் விழாக்கள், நினைவு விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றைச் சிறப்புடன் நடத்துவதும் இவரின் செயற்சிறப்பு. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நடத்தியதுடன் அதற்கு முன்பும் பின்புமாகத் தொடர்ந்து 35 ஆண்டுகள் இலக்குவனார் நினைவரங்கம் நிகழ்த்தி அவர் மீதான அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தியுள்ளார். எந்த ஓர் அமைப்பும் எந்தத் தமிழறிஞருக்கும் இவ்வாறு தொடர்நினைவரங்கம் நிகழ்த்தியதில்லை!
 இவருக்குத் தோன்றாத் துணையாக விளங்கிய மனைவி திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் ஈராண்டுகளுக்கு முன்னர் மறைந்து அவருக்குப் பெருந்துயரம் தந்தார். இன்றோ இவரே மறைந்து தம் வழியில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றப்பணிகளில் ஈடுபட்டுத் துணைச்செயலராகத் திகழும் மகன் பேரா. தாமரைக்கண்ணன், பெண் மக்கள் திருவாட்டி கல்யாணி, திருவாட்டி சுமதி, பெயரர்கள், தமிழ்ச்சுற்றத்தார் துயருற நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார்
வாழும் பொழுது ஓய்வு எடுக்காமல் பணியாற்றியதால் வாழ்வில் இருந்து பெறும் ஓய்வே தமிழ்ப்பணிக்குமான ஓய்வானது.
அண்மையில் உடல் நலமுற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அலைபேசி வழி உரையாடினார். மகுடைத் தொற்றால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாதது குறித்து வருந்தினார். அவருக்கான ஓய்வுக்காலமாகக் கருதுமாறும் வரும் தைத்திங்களில் பட்டிமன்ற நிகழ்ச்சி, பட்டிமன்ற முத்துவிழா, தமிழர்திருநாள் எனச் சிறப்பாக  நடத்தலாம் என்றும்  அமைதிகாக்குமாறும் தெரிவித்தேன். திசம்பரில் வரும் அவரின்பிறந்தநாள் பெருமங்கலத்தையும் அப்பொழுது இணைத்துக் கொண்டாட வேண்டும் என்றேன். ஆனால், காலன் அதற்கான வாய்ப்பை நல்கவில்லையே!
தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், இலக்குவனார் இலக்கிய இணையம் இலக்குவனார் இலக்கியப்பேரவை, அம்பத்தூர், அகரமுதல இதழ் ஆகியவற்றின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
இனியும் கி.இ.க.பட்டிமன்றத்தில் “செவ்வாய்தோறும் செந்தமிழ்” முழங்கும். ஆனால், அங்கே தமிழ்த்தாய் இவரைத் தேடுவார்!
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல