சனி, 2 அக்டோபர், 2010

பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தியா? இனி எஸ்எம்எஸ் உதவும்

சென்னை, அக். 1: பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தி ஏற்படும் நிலையில், குறையைப் போக்கும் "எஸ்எம்எஸ்' சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  செல்பேசியில் "unhappy' என "டைப்' செய்து, "8008202020' என்ற எண்ணுக்கு சேவை குறைபாட்டை எஸ்எம்எஸ் செய்தால், அதிகாரிகள் உடனடியாக  வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு குறையைத் தீர்க்க உதவுவார்கள்.
  வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்கும் இத்தகைய முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ளது.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

திருப்தி அடையக்கூடிய தீர்ப்பு: முதல்வர் கருணாநிதி

சென்னை, செப். 30: அயோத்தி தீர்ப்பு இரு தரப்பினரும் திருப்தி அடையக்கூடிய வகையில் உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ள கருத்து: நாட்டில் அமைதி காண்பது என்ற அடிப்படையில், இரு தரப்பினரும் திருப்தி அடையக் கூடிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பில் குறை காண்போர், மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

முதல்வர் தெரிவித்த கருத்து மாதிரி இல்லையே!வழக்கு என்றால் மேல் முறையீடும் இருக்கத்தான் செய்யும்.அப்புறம் என்ன மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத் தக்கது எனப் புதுமைபோல் கூற்று. முத் தரப்பு இருக்கும் பொழுது இரு தரப்பினர் மட்டும் நிறைவடைவர் என்பதும் சரியல்ல. சொந்தமில்லாதவர்கள் சொத்து வேண்டி வழக்கு தொடுத்து அதில் பங்கு கிடைத்தால் மகிழத்தான் செய்வார்கள். ஏதோ மத்திய அரசை மகிழ்விக்கும் எனக் கருதி யாரோ தெரிவித்த கரு்த்தாக உள்ளது. முழுமையும் படித்துப் பார்க்காமல் அவர் எதையும் சொல்ல மாட்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (கண்ட கண்ட நரகல் நடையை யெல்லாம் அப்படியே வெளியிடும் தினமணி, கலைஞரைத்தாக்கி விட்டதாக எண்ணி இதை எடுக்க வேண்டா. )
By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 4:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மீள்பதிவு : முதல்வர் தெரிவித்த கருத்து மாதிரி இல்லையே!வழக்கு என்றால் மேல் முறையீடும் இருக்கத்தான் செய்யும்.அப்புறம் என்ன மேல்முறையீடு செய்யவும் வழி வகுத்திருப்பது வரவேற்கத் தக்கது எனப் புதுமைபோல் கூற்று. முத் தரப்பு இருக்கும் பொழுது இரு தரப்பினர் மட்டும் நிறைவடைவர் என்பதும் சரியல்ல. சொந்தமில்லாதவர்கள் சொத்து வேண்டி வழக்கு தொடுத்து அதில் பங்கு கிடைத்தால் மகிழத்தான் செய்வார்கள். ஏதோ மத்திய அரசை மகிழ்விக்கும் எனக் கருதி யாரோ தெரிவித்த கரு்த்தாக உள்ளது. முழுமையும் படித்துப் பார்க்காமல் அவர் எதையும் சொல்ல மாட்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (கண்ட கண்ட நரகல் நடையை யெல்லாம் அப்படியே வெளியிடும் தினமணி, கலைஞரைத்தாக்கி விட்டதாக எண்ணி இதை எடுக்க வேண்டா.என வேண்டியும் எடுத்துள்ளீர்களே!
அயோத்தி: நிலத்தை மூன்றாகப் பிரித்து ஹிந்து, முஸ்லிம்களுக்கு வழங்க ஆணை: அலாகாபாத் உயர் நீதிமன்றம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் ஹரித்துவாரில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடத்திய இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள்.
லக்னெள,செப்.30: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்று சமபாகங்களாகப் பிரித்து ஹிந்து மகா சபை, நிர்மோஹி அகாடா, சுன்னி வக்ஃப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும், குழந்தை வடிவில் ராமர் சிலை இருக்கும் இப்போதைய வழிபாட்டிடம் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும்; இன்னும் 3 மாதங்களுக்கு இப்போதுள்ள நிலையிலேயே இந்த இடம் பராமரிக்கப்பட வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.ராமர் பிறந்த இடம் என்று ஹிந்துக்களால் வழிபடப்படும் ஜென்ம பூமி, பாபர் கட்டிய மசூதி என்று முஸ்லிம்களால் அழைக்கப்படும் வழிபாட்டிடம் ஆகியவை தொடர்பான சுமார் 60 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட இந்த வழக்கில் மிகுந்த பரபரப்புக்கு இடையே மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது.யார் யாருக்கு இடம்?: ஸ்ரீ ராமர் குழந்தை வடிவில் அமர்ந்த நிலையில் (ராம் லல்லா விராஜ்) சிலையாக வைத்து வழிபடப்படும் மத்திய பகுதி ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.சீதா ரஸோய் (சமையல் கூடம்), ராம் சபூத்ரா (யாக வேதிகை), பண்டார் ஆகிய பகுதிகள் நிர்மோஹி அகாடா என்ற வைணவ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.எஞ்சிய மூன்றில் ஒரு பகுதி சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகளின் தீர்ப்பு கூறுகிறது.3 மாதங்களுக்கு இதே நிலைமை: சர்ச்சைக்குரிய இடத்தில் இப்போதுள்ள அமைப்பு இன்னும் 3 மாதங்களுக்கு அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அறிவுறுத்துகிறது. நீதிபதி தரம்வீர் சர்மா: சர்ச்சைக்குரியதாக்கப்பட்ட இந்த இடம் முழுவதுமே ஸ்ரீ ராமர் பிறந்த இடம் என்று வழிவழியாக ஹிந்துக்களால் நம்பப்படுகிறது. இந்த இடம் முழுக்க ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதியை கட்டக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு விரோதமாக இந்த இடத்தில் பாபர் மசூதியைக் கட்டியிருப்பதால் இது மசூதிக்குரிய இலக்கணங்களோடு இல்லை.நீதிபதி எஸ்.யூ. கான்: ஹிந்து மகாசபை, நிர்மோஹி அகாடா, சுன்னி வக்ஃப் வாரியம் ஆகிய மூன்றுமே இந்த இடத்தைக் கூட்டாக பல ஆண்டுகளாக அனுபவித்து வந்திருப்பதற்கு ஆதாரம் இருப்பதால் இவை மூன்றுமே இந்த இடத்துக்கு கூட்டு உரிமையாளர்கள். எனவே மூன்று தரப்பினரும் தங்களுடைய வழிபாடுகளைத் தொடர இந்த இடத்தைச் சமமாகப் பிரித்து ஆளுக்கொரு பகுதியை வழங்கலாம். இதற்கான ஆணை இந்தத் தீர்ப்பில் இடம் பெறுகிறது.சர்ச்சைக்குரிய கட்டடத்தின் நடுப்பகுதியில் உள்ள கோபுர அமைப்புக்குக் கீழே ராமர் சிலை வைத்து வழிபடப்படுகிறது. அந்த இடம் ஹிந்துக்களுக்கு வழங்கப்படுகிறது. சீதா ரஸோய், ராம் சபூத்ரா என்ற பகுதிகள் நிர்மோஹி அகாடாவுக்கு தரப்பட வேண்டும்.இதில் யாருக்காவது கட்டுமானத்துக்குக் கூடுதல் இடம் தேவைப்பட்டால் மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள பக்கத்து நிலத்திலிருந்து தரப்பட வேண்டும்.சர்ச்சைக்குரிய இடத்தை பாபரோ அவரது ஆணைப்படி வேறு யாரோ மசூதியைக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லை.இந்த மசூதியைக் கட்டுவதற்காக கோயிலை இடித்ததற்கான ஆதாரங்களும் இல்லை. அதே சமயம் கோயிலின் இடிபாடுகள் மீது மசூதி கட்டப்பட்டிருப்பதை தொல்லியல்துறை அளித்த ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது.நீதிபதி அகர்வால்: 3 கோபுரம் போன்ற அமைப்புள்ள இந்த கட்டடத்தின் நடு கோபுரத்துக்குக் கீழே உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று வாதிகள் கூறுகின்றனர். இதற்கு காலம்காலமாக ஹிந்துக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் ஆதாரம்.அதே சமயம் பல நூற்றாண்டுகளாக இந்த இடத்தை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே ராமர் சிலை வைத்து வழிபடப்படும் இடம் ஹிந்துக்களுக்கும் சீதா ரஸோய், ராம் சபூத்ரா, பண்டார் பகுதிகள் நிர்மோஹி அகாடாவுக்கும், எஞ்சிய பகுதிகள் முஸ்லிம்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்பட வேண்டும்.கி.பி. 1528-ல் பாபர்தான் இந்த மசூதியைக் கட்டினார் என்பதை நிரூபிக்க முஸ்லிம் தரப்பு தவறிவிட்டது.தேவேந்திர உபாத்யாய: உத்தரப் பிரதேச அரசு சார்பில் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக உதவிகளைச் செய்த தேவேந்திர உபாத்யாய தீர்ப்பின் சாரத்தை நிருபர்களிடம் வெளியிட்டு விளக்கம் அளித்தார். நிலத்தை எப்படி பங்கீடு செய்யலாம் என்பதை இதில் சம்பந்தப்பட்டுள்ள 3 தரப்பும் ஆலோசனை தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர் என்றார்.நிர்மோஹி அகாடா: நிர்மோஹி அகாடா என்பது அகில பாரத அகாடா பரிஷத் என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வைணவ அமைப்பாகும். இதன் தலைவர் மகந்த் பாஸ்கர தாஸ்.ராம் சபூத்ரா என்று அழைக்கப்படும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று பைசாபாத் சார்பு நீதிபதியிடம் இந்த அமைப்பினர் 1885 ஜனவரி மாதமே வழக்கு தாக்கல் செய்தனர்.பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் 1959 முதலே இந்த அமைப்பினர் தொடர்ந்து மனு தாக்கல் செய்து உரிமை கோரி வருகின்றனர்.ராமர் சிலையை காலகாலமாக இதே இடத்தில் வழிபட்டு வருவதால் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று 1989-ல் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.இவ்வாறு ராமர் கோயிலில் தொடர்ந்து சேவை செய்து வந்ததுடன் வழக்குகளிலும் தீவிரப் பங்கு எடுத்து உரிமை கோரி வந்தனர். எனவே இவர்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலம் தரப்படுகிறது.
கருத்துக்கள்

உரிமையாளனும் களவாளியும் சொந்தம் கொண்டாடும் பொழுது உண்மையின் பக்கம் இருப்பது நடுநிலைமை என்று இல்லாமல் இருவருக்கும் சமமாகப் பிரித்து அநீதி வழங்குவதுதானே நம் நாட்டு நடுநிலைமை! திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, கோலார், மைசூர், சித்தூர் முதலான தமிழர் நகரங்கள் யாவும் கள்ளத்தனமாகக் கவர எண்ணிய பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட வன்முறை நீதிதானே நம் நாட்டில் நடைபெற்றது.தமக்குரிய இடத்தில் மூன்றில் இரு பங்கை அடுத்தவர்க்கு வழங்கும் நீதி முறையற்றது என இரு தரப்பு முறையிட வாய்ப்பு உள்ளதே! எப்படியோ! மேல் முறை யீட்டில் இரு நூற்றாண்டுகள் செல்லட்டும்! அதற்குள் காலமே அந்த இடத்தை இல்லாதாக்கிவிடும் என்று நீதி வழங்கியோரின் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதற்கும் நீதிபதிகளின் சொத்துகளில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்து வைப்போம். என்றேனும் ஒரு நாள் வழக்கு நடத்துவதன்அடிப்படையில் நம் வழிமுறையினருக்கு அச் சொத்துகளில் பங்கு கிடைக்கும் அல்லவா! 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 4:30:00 AM
அய்யா நீதிமான்களே , கோவிலை இடித்த பாபருக்கும் , மசூதியை இடித்த கர சேவர் களுக்கும் , கோர்ட் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ,இனி ஒரு சம்பவம் நடக்காமல் ஒற்றுமை காக இறைவனை வேண்டுவோம்;
By mohammed
10/1/2010 4:08:00 AM
நீதிபதி டி.வி.சர்மா போறதுதான் போறம் நல்ல கொளுத்தி போட்டு விட்டு பொய் விட்டார் மசுதிக்கு கிழே தான் ராமர் பிறந்து இருக்கலாம் , என்ன ""லாம்"" இதல்லாம் ஒரு தீர்ப்பு , போங்கடா, இதுக்கு பெயர் தீர்ப்பு இல்லை கட்ட பஞ்சாயத்து , ரவுடிகள் நிலத்தை பிடிங்கி கொண்டு உரிமையாளரை மிரட்டி பிடிங்கியது போல் உள்ளது , எத்தணை காலம் ஏமாத்துவாய் !
By கட்ட பஞ்சாயத்து
10/1/2010 4:04:00 AM
There is fake-named terrorist calling himself "in" posting derogatory commnents. He should be traced and handed over to the police.
By vt
10/1/2010 3:44:00 AM
மசூதியின் பெயர் மட்டும் தான் பாபர் மசூதி. கட்டியது பாபரா அல்லது அவரின் ஆணைப்படி வேறு யாரோ என்பது தெரியாது. காரணம் பல நூற்றாண்டு கடந்து விட்டது. அதனால் நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதே சமயம் ஏதோ ஒரு கோயிலின் இடிபாடுகள் மீது மசூதி கட்டப்பட்டிருப்பதை, தொல்லியல்துறை அளித்த ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது. ஆகவே மசூதி கட்டும் முன்பு ஒரு கோயில் இருந்தது என்பது 100% உண்மை.100% ஆதாரம். அதனால் இடித்தாரா, பொடித்தாரா, அழித்தரா என்பது முக்கியமில்லை. பிற மதங்களின் வழிபாட்டுத் தளங்கள் இருந்த இடத்தில் அல்லது இடித்த இடத்தில் மசூதி கட்டக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. அதைப்போல் பல நூற்றாண்டுகளாக இந்த இடத்தை ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு 100% ஆதாரங்கள் உள்ளன. இனி தீர்ப்பை படியுங்கள். 100% சரியாக இருக்கும்.
By Dillu Durai
10/1/2010 3:31:00 AM
Excellent and wise justice. Hindu and Muslim brothers alike will love this justice. Victory to India.
By Srini m
10/1/2010 3:28:00 AM
(குரான்). இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமன்றி வேறொன்றுமில்லை, என்றும் பய பக்தியுடையோருக்கு நிச்சயமாக, மறுமை வாழ்க்கையே மிகவும் மேலானது. இந்த வசனத்தை அல்லாவின் வசனம் என்று நம்புகிற, உண்மையான முஸ்லீம் எல்லாரும் இந்த தீர்ப்பை மதிப்பார்கள். ஏற்ப்பார்கள். வரவேற்ப்பார்கள். மற்றவர்கள் விமர்சிப்பார்கள் அல்லது ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த தீர்ப்பை ஏற்க்காதவர்கள் குரான் வழியில் நடக்கும் முஸ்லீம்கள் அல்ல. வெறும் பெயர் அளவில் முஸ்லீம்கள். மத வழியில் வாழாத, மத போர்வை மட்டும் போர்த்திய நரிகள். உண்மையான நல்ல முஸ்லீம்கள் இவர்களை ஒதுக்கி தள்ளுங்கள். இவர்கள் அமைதியை விரும்பாதவர்கள்.
By Dillu Durai
10/1/2010 3:11:00 AM
கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மசூதிக்கு கீழே இருப்பது கோயிலும் இல்லை. அயோத்தி முன்னர் பவுத்த மையமாக இருந்தது. அதனைப் பார்ப்பனியம் கொன்றொழித்தது. அயோத்தி மட்டுமல்ல, தென்னகத்தின் கோயில்கள் அனைத்தும் பவுத்த, சமண வழிபாட்டிடங்களை ஆக்கிரமித்தும், கொள்ளையடித்தும் பார்ப்பன மதத்தினரால் உருவாக்கப்பட்டவை.. ”என்பவையெல்லாம் ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் பிறகுதான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது.
By in
10/1/2010 3:03:00 AM
பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மத்திய அரசு, உச்சநீதி மன்றத்திடம் தள்ளிவிட்ட போது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி அதனை நிராகரித்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது லக்னோ உயர்நீதிமன்றம். “அங்கே ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை” என்று ஒரு உரிமையியல் வழக்குக்கு தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல் இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள் சர்மாவும் அகர்வாலும். ”நம்பிக்கையை நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, அதனை ஆராயக்கூடாது. தீர்ப்பு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு கிடையாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் இன் வாதம். தற்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்திருப்பதால் அவர்கள் நீதிமன்றத்தைக் கொண்டாடுகிறார்கள்.
By in
10/1/2010 3:02:00 AM
வணக்கம். அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் தீர்ப்பு. இந்த தீர்ப்பின் சாராம்சத்தை அனைவரும் தெளிவாக புரிந்துகொண்டு இனிமேலாவது நம்மிடையே உள்ள பிணக்குகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் இணைந்து வாழ வேண்டும் . எந்த மதமும் வன்முறையையும் , பிற மதத்தினர் மீதான துவேசத்தையும் போதிக்கவில்லை. மாறாக அன்பையும், அமைதியையும் , சமாதானத்தையும் எடுத்து சொல்லவே மதங்களும் வழிபாடுகளும் உருவாக்கப்பட்டன. உண்மையிலே மதத்தின் மீது நம்பிக்கையும் பெரு மதிப்பும் கொண்டவர்கள் இனிமேலும் இந்த சர்ச்சையை தொடராமல் முற்றுபுள்ளி வைத்து வைத்து அமைதியை நிலை நாட்ட வேண்டும். இது இந்தியா. அடுத்த மதத்தினர் , இனத்தினர் தயவு இல்லாமல் இங்கே எதுவும் நடக்க போவதில்லை. வாழ்க நமது இந்தியா !!!.. ஜெய் ஹிந்த். !!!... அன்புடன் இராஜேசுவரன்...
By இராஜேசுவரன்
10/1/2010 2:59:00 AM
What ever who ever when ever once birth they have to DIE. So think on DEATH. Peace will with you. work and earn for your stomach.Read QURAN Chapter # 67 Verses 15 to 30 Thanks
By Syed Abid Panruti
10/1/2010 2:57:00 AM

ஒரு மசூதி கட்ட 25 சென்டே அதிகம். இவர்களுக்கு 90 சென்டுக்கு மேல் கிடைக்கிறது. தினமும் கொஞ்சம் பேர், தொழுகை மட்டும் நடத்துவார்கள். அதுவும் ஒரு தொழுகைக்கு 10 நிமிடம் போதுமானது. இப்போது கிடைக்கும் இடத்தில் பெரிய பள்ளி அல்லது பல பிரிவு பள்ளி கட்டலாம். அமைதியை வாயில் மட்டும் சொல்வதும், எழுத்தை ஏட்டில் மட்டும் வைப்பது தான் இவர்களின் பழக்கம். வாழ்க்கையில் இவர்களின் நடத்தையில் சாந்தியையும், சமாதானத்தையும் காண முடியாது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
By Dillu Durai
10/1/2010 2:47:00 AM
Long Live India! Long Live peace and Love! Live and Let Live! All religions should flourish and Humans to live as humans!
By prathip naidu
10/1/2010 2:39:00 AM
These three Judges are good for nothing
By Fowsul Ameen
10/1/2010 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மீள்பதிவு : உரிமையாளனும் களவாளியும் சொந்தம் கொண்டாடும் பொழுது உண்மையின் பக்கம் இருப்பது நடுநிலைமை என்று இல்லாமல் இருவருக்கும் சமமாகப் பிரித்து அநீதி வழங்குவதுதானே நம் நாட்டு நடுநிலைமை! திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, கோலார், மைசூர், சித்தூர் முதலான தமிழர் நகரங்கள் யாவும் கள்ளத்தனமாகக் கவர எண்ணிய பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட வன்முறை நீதிதானே நம் நாட்டில் நடைபெற்றது.தமக்குரிய இடத்தில் மூன்றில் இரு பங்கை அடுத்தவர்க்கு வழங்கும் நீதி முறையற்றது என இரு தரப்பு முறையிட வாய்ப்பு உள்ளதே! எப்படியோ! மேல் முறை யீட்டில் இரு நூற்றாண்டுகள் செல்லட்டும்! அதற்குள் காலமே அந்த இடத்தை இல்லாதாக்கிவிடும் என்று நீதி வழங்கியோரின் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதற்கும் நீதிபதிகளின் சொத்துகளில் பங்கு கேட்டு வழக்கு தொடுத்து வைப்போம். என்றேனும் ஒரு நாள் வழக்கு நடத்துவதன்அடிப்படையில் நம் வழிமுறையினருக்கு அச் சொத்துகளில் பங்கு கிடைக்கும் அல்லவா! அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 10/1/2010 4:30:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
10/1/2010 9:40:00 AM
இது எம் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி . போற்றி கொண்டாட வேண்டிய தருணம் இது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த அரசியல் வியாதிகளாலும், மீடியாக்களின் துரோகத்தினாலும் இப்படி அமைதியாக இருக்க வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளபற்றிக்குறோம். ஆனால் , நாங்கள் திருவள்ளுரில் [ தமிழ்நாட்டில்] காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி கொண்டாடினோம். ஜெய் ஸ்ரீ ராம் ! தொடர்புக்கு karateselva@hotmail.com.
By karate j selva
10/1/2010 9:29:00 AM
கோவிலை இடித்து மசூதியைக் கட்டிய பாபரின் படைத் தலைவன் ஒரு ஷியா முஸ்லீம்.அவன் நிச்சயம் ஒரு மாற்று சமய(சுன்னி வக்பு வாரியம்)பிரிவிடம் அந்த கட்டிடத்தை ஒப்படைத்திருக்கவே முடியாது! எனவே சன்னி வாரியக்காரர்கள் கோர்ட்டின் நேரத்தை வீணாக்கவே போகிறார்கள்!
By MANI
10/1/2010 9:27:00 AM
இது ஸ்ரீ ராமருக்கு கிடைத்த வெற்றி அவரின் வானர சேனைகலான கரசேவகர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி, ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி.. இது வரையில் தேச விரோத பண்பாட்டு விரோத இஸ்லாமிய கிறிஸ்தவ கம்யுனிச போலி மதசார்பின்மை பேசும் காங்கிரஸ் மற்றும் கழக வாதிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி, ராமரை இழித்தும் பழித்தும் பேசிய கருணாநிதிக்கு இந்த தீர்ப்பு ஒரு நெத்தியடி.. இனி மேலாவது ராமர் இஞ்சினீயரா ராமர் பாலம் இல்லவே இல்லை போன்ற புலம்பல்களை பேசக்கூடாது. ராம ஜென்ம பூமி எப்படி ராமர் பிறந்த இடமோ சேது பாலமும் ராமர் கட்டிய பாலம் தான் இப்படி ஒரு தீர்ப்பு கூடிய விரைவில் வரத்தான் போகிறது. கபோதி கருணாநிதிக்கு கண்திறக்க அந்த ஸ்ரீ ராமமூர்த்தி கருணை காட்ட வேண்டும் இல்லை என்றால் கருனாநிதிய்ன் கடைசி காலம் குருடன் திருதராஷ்ட்ரன் கதி தான் ஏற்படும்.
By Aravi
10/1/2010 9:15:00 AM
namaskars.it is an ideal verdict.belief and people"s sentiments has been honored.court has accepted that the mosque had been erected over a temple.we have to hail the verdict and start building unity among Indians.with namaskars.
By v.lalithakumar
10/1/2010 9:04:00 AM
i can accept this judgment but at the same time i can't accept this one இந்த மசூதியைக் கட்டுவதற்காக கோயிலை இடித்ததற்கான ஆதாரங்களும் இல்லை. அதே சமயம் கோயிலின் இடிபாடுகள் மீது மசூதி கட்டப்பட்டிருப்பதை தொல்லியல்துறை அளித்த ஆதாரங்களிலிருந்து அறிய முடிகிறது.
By vellamuthu
10/1/2010 8:57:00 AM
இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு போதாது. muslimkaluku 1/10 பகுதியே வழன்க பட வேண்டும். அது ராமர் பிறந்த‌ ராம ஜென்மபூமி.
By ajanth
10/1/2010 8:32:00 AM
தர்மம் வென்றது.கோவிலின் மீதுதான் அந்த கட்டடம் கட்டப்பட்டது என்பதை மூன்று நீதிபதிகளும் தெளிவாக கூறிவிட்டனர். தீவிரவாதத்தின் பிறப்பிடம் எது என்பதை இதன் மூலம் அறியலாம். ராமர் அங்கு தான் பிறந்தார் என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.எனவே சில அந்நிய கைக்கூலிகளின் சதிகளை முறியடித்து நாமெல்லாம் பாரத தாயின் குழந்தைகள் என்பதை உணர்ந்து ஒன்றுபடுவோம். உலகின் குருவாய் பாரதம் ஆகிட உன்னத சக்தி வளர்ப்போம் . வந்தே மாதரம். வீர ஹிந்து முத்துபேட்டை
By வீர ஹிந்து முத்துபேட்டை
10/1/2010 5:29:00 AM
ok anyway, மத பிரச்சனைகளை விட்டு விட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு இணைந்து பாடுபடுவோம்,
By mohammed
10/1/2010 4:32:00 AM