வியாழன், 4 பிப்ரவரி, 2010

முந்தைய ஒப்பந்தப்படி இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் ​பகிர்வு: கருணாநிதி கோரிக்கை



சென்னை, ​​ பிப்.3:​ இலங்கையில் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டவாறு தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து தரப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரினார்.சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:திமுக செயற்குழு,​​ பொதுக்குழு கூட்டங்கள் இந்த மாதம் 20}ம் தேதி நடக்கும்.​ இப்போதுள்ள அரசியல் நிலவரங்கள் குறித்தும்,​​ தேவைப்பட்டால் பென்னாகரம் இடைத்தேர்தல் குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.​ இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தியும்,​​ அதற்கு ஆவன செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.​ தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை தருவதாக காஞ்சிபுரம் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.​ மத்திய அரசும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.​ நளினி விடுதலை:​ ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.​ இப் பிரச்னையில் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துவிட மாட்டோம்.​ சோனியா காந்திக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று நான் கூறியதாக நினைவில்லை.​ இவ்வளவு பெரிய பிரச்னையில் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.​ மேனன் சந்திப்பு:​ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வந்து என்னை சந்தித்தபோது,​​ கடற்கரை பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் கருத்துகள் பரிமாறிக் கொண்டோம்.​ தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களும்,​​ இலங்கை ராணுவமும் தொடர்ந்து தாக்குவது பற்றி கவலையையும்,​​ கண்டனத்தையும் தெரிவித்தேன்.​ இலங்கையில் விரைவில் தமிழர்களுக்கு உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் அரசியல் திருத்தம் வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினேன்.​ ​​ ஆயுதங்களுடன் நுழைய எவருக்கும் அனுமதியில்லை:​ இலங்கையில் போர் முடிந்த பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தமிழகத்திற்கு வருவதாக புகார் கூறப்படுகிறது.​ விடுதலைப் புலிகளாக இருந்தாலும்,​​ அவ்வாறு இல்லாத தமிழர்களாக இருந்தாலும்,​​ யாரும் ஆயுதங்களுடன் தமிழகத்தில் நுழைந்து செயல்பட அனுமதி இல்லை என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

அரசியல் சூழ் திறன் மிக்க்வர்தான் கலைஞர் என்றாலும் தெலுங்கானா மக்களிடம் பாடம் படிக்க வேண்டும். தமிழ்நாட்டின் முசிபூர் இரகுமானாக வருணிக்கப்பட்டவர் மாநில உரிமையை அடகு வைக்கலாமா? தமிழ்த் தேசிய உணர்வைத் தாரை வார்க்கலாமா? திரைப்படத்துறையினர் ஆளும்கட்சியின்புகழ் பாடிகள் என்பது அறிந்த ஒன்று. அதனடையாளம்தான் முதல்வருக்குப பாராட்டு விழா. அறியப்பட்ட ஒன்றுக்குக் கேள்வி கேட்க விரும்புபவர் ஈழத் தமிழர் படுகொலையில் காங்கிரசின் பங்கென்ன? அவரின் பங்கென்ன? எனக் கேள்வி கேட்கச் சொன்னால் நன்றாக இருக்கும்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/4/2010 3:32:00 AM

திரு.ராஜிவ் காந்தி, திரு.ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி, தமிழர்கள் பகுதியில் முதலமைச்சர் பதவி ஏற்ற திரு.வரதராசப் பெருமாளுக்கு என்ன அதிகாரம் வழங்கப் பட்டது.இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள் இறுதியாக "இந்த மாகாண சபை முறைமை எந்தப் பயனும் அற்றது" என்று கூறி தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியவர். அப்படிப் பட்ட தீர்வுதான் கலைஞர் விரும்பிகின்றாரா? தன் இளவலை(ஸ்டாலின்) தமிழகத்தில் முடி சூட்ட எப்படியெல்லம் பேச வேண்டியுள்ளது. "ஆண்டவன் இட்ட கட்டளைக்கே காரணம் கேட்பவர்கள் நாங்கள்" எழுதியது மறந்து விட்டதா?

By அன்பன்
2/4/2010 2:24:00 AM

திரு.ராஜிவ் காந்தி, திரு.ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி, தமிழர்கள் பகுதியில் முதலமைச்சர் பதவி ஏற்ற திரு.வரதராசப் பெருமாளுக்கு என்ன அதிகாரம் வழங்கப் பட்டது.இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள் இறுதியாக "இந்த மாகாண சபை முறைமை எந்தப் பயனும் அற்றது" என்று கூறி தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியவர். அப்படிப் பட்ட தீர்வுதான் கலைஞர் விரும்பிகின்றாரா? தன் இளவலை(ஸ்டாலின்) தமிழகத்தில் முடி சூட்ட எப்படியெல்லம் பேச வேண்டியுள்ளது. "ஆண்டவன் இட்ட கட்டளைக்கே காரணம் கேட்பவர்கள் நாங்கள்" எழுதியது மறந்து விட்டதா?

By அன்பன்
2/4/2010 2:12:00 AM

Tamils are running away from the murders of Sri Lanka. They came to Tamil Nadu seeking refuge, but Tamil Nadu put them in prison for many years, and yesterday Tamil Nadu police attacked them, beat and broke their bones in Sengal Paddu jail. Is this what you call 'thopul kodi uravu'?.

By Thamizhan
2/4/2010 1:38:00 AM

Aiyo, mass murderer Karunanithy why are repeating this over over like a broken record and not acting even when you had the the opportunity. If you keep your filthy mouth shut, it will be great favour for Eelam Tamils. You do this only this because for Rajapakse to give your family free holidays in Sri Lanka with escorts for their entertainment. Whatever happens it is Eelam Tamils destiny and they don't want any favours from a traitor, who permitted his distant cousins and nieces to be raped and murdered. He is the only leader disproved that the saying "BLOOD IS THICKER THAN WATER."

By Ram Chetty
2/4/2010 1:11:00 AM

1960 இலிருந்து இந்தியா தமிழருக்குச் செய்த துரோகத்தனத்தை ஒரு முறை புரட்டிப்பாருங்கள். உங்களுக்கே அருவெருப்பாக இருக்கும். தயவு செய்து இனியாவது தமிழனைச் சிங்கவளருடன் வாழவிடுங்கள். சகோதர யுத்தத்தை உருவாக்காதீர்கள்.பட்டது போதும் உன்னாலே. சீனாவும், சிங்களவரையும் நண்பனாக்கி இலங்கையில் தமிழன் நிம்மதியுடனும், அமைதியுடனும் வாழலாம். வேண்டாம் உங்கள் ஆயுதமும், ஆயுதப்பயிற்சியும் போராட்டமும். இனியொரு தமிழனும் உங்கள் சொல்லுக்கு எடுபடமாட்டான்கள். அப்படி உடுபடும் தமிழர்களை இலங்கை அரசிடம் நாங்களே போட்டுக்குடுப்போம்.

By raj
2/4/2010 1:07:00 AM

இவர் அடுத்த கோமாளிக் குத்து ஆடி தமிழர்களை ஏமாளிகள் ஆக்கலாம் என்று நினைக்கின்றாரோ? பாவம் இந்தக்கிழட்டை ஈழத்தமிழர் யாரும் எரிமை வாங்கித்தா என்று கேட்கவில்லையே.. அவர்கள் செயல் வீரன் ராஜபக்ஷவுடன் இணைந்து செயல்படத்தொடங்கிவிட்டார்கள். தமிழ்கூட்டமைப்பு யுத்தம் நடந்தபோது இந்தியதவிற்கு வந்து பேச முற்பட்டபோது பேசமுடியாதவர்கள், தமிழன் படுகொலை செய்யப்பட்டபோது முதுவலி நாடகம் ஆடி படுத்தவர்கள் திரும்பவும் தமிழன் முதுகில் குத்த ஆயத்தமா? தயவு செய்து நீங்கள் ஈழத்தமிழனைக்கொன்று குவித்தது போதும் வாழவிடுங்கள். ராஜபக்ஷ தமிழரைக்கொல்லவில்லை. அவரின் ஒப்புதல் வாக்குமூலம் இந்தியனே தமிழனைக்கொன்றதும் தடைசெய்யப்பட்ட குண்டுகள் அடித்து நீதியற்ற போரை நடத்தியதும் இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் வெளிவரும். 1960 இலிருந்து இந்தியா தமிழருக்குச் செய்த துரோகத்தனத்தை ஒரு முறை புரட்டிப்பாருங்கள். உங்களுக்கே அருவெருப்பாக இருக்கும். தயவு செய்து இனியாவது தமிழனைச் சிங்கவளருடன் வாழவிடுங்கள். சபோதர யுத்தத்தை உருவாக்காதீர்கள். பட்டது போதும் உன்னாலே. சீனாவும், சிங்களவரையும் நண்பனாக்கி இலங்கையில் தமிழன் நிம்மதியுடனும், அமைதியுடனும் வாழலாம்

By raj
2/4/2010 1:04:00 AM

யாருடைய பரிந்துரையும் தேவையில்லையென்று ராஜபக்ஷ அன் கோ சொல்லி விட்டார்கள் அய்யா!அய். நாவே கேள்வி கேட் கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்!!விடுதலைப் புலிகள் இல்லை என்கிற தைரியம்!!!

By Yoga,France
2/4/2010 12:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக