சனி, 5 ஜூலை, 2025

111. புராண நாயகர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா? என்பது சரிதானா? -இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 110 தொடர்ச்சி)

  1. நல்லொழுக்கத்தைக் கூறுவன புராணங்கள். போற்றுதற்குரிய பெருமைக்குரியவர்கள் புராண நாயகர்கள் என்கின்றனர். ஆக இவர்கள் போற்றும் வருணாசிரமத்தை நாமும் போற்ற வேண்டாவா என்கின்றனரே!
  2. ஆரியர்கள், நல்லொழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்த பொழுது எழுதியவையே புராணங்கள். எனவே அதற்கேற்பவே நல்லொழுக்கமற்ற பாத்திரப் படைப்புகளைப் பார்க்கலாம். எனினும் தமிழர்களுடன் தொடர்பு கொண்ட பின், ஒழுக்கப் பாதைகளில் நடை போடத் தொடங்கினர். அப்பொழுது புராணங்களில் திருத்தம் வேண்டுமென்று  விரும்பிய ஒழுக்கவாணர்கள் அதற்கேற்பக் கதைகளில் மாற்றம் செய்து இடைச்செருகல்கள் மேற்கொண்டனர்; அல்லது அப்படிப்பட்ட பகுதிகளை மக்கள் பார்வையில் படாதவகையில் மறைத்தனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் சிலர்.
  3. புராணங்களில் வரும் மாந்தர்களின் பெற்றோர் யாரும் உரியவர்கள் அல்லர். தவறான முறையில் பிறந்தவர்கள் என்பதை மறைக்கத் தெய்வப்பிறவிகளாகக் கதை கட்டி விடுகின்றனர். முனிவரின் அருளாகவோ தெய்வ அருளாகவோ பிறந்தவர்களாகவும் திரித்து விடுவர். சிலரின் பிறப்புகளைப் பார்ப்போம். விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிறந்தவர் பாண்டு. பாண்டு மனைவியர் குந்தி, மாதுரி. பாண்டவர்களில் மூத்தவரான யுதிட்டிரன் என்னும் தருமன் பாண்டு – குந்தி ஆகியோரின் பிள்ளையாக வளர்ந்தவர். ஆனால், குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.  குந்திக்கு வாயுவிடம் பிறந்தவன் வீமன் /பீமன் /பீமசேனன். குந்திக்கு இந்திரனிடம் பிறந்தவன் அருச்சுனன். சரண்யூவிற்குச் சூரியனிடம் பிறந்தவர்கள் அசுவினிகள் அல்லது அசுவினி குமாரர்கள் ஆகிய நாசத்துயா-தசுரா என்னும் இரட்டையர்கள். இவர்களுடன் உறவு கொண்டு மாத்திரி/மாதுரிக்குப் பிறந்தவர்களே நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையர்கள். விசித்திரவீரியன் இறந்த பின் மனைவியரான அம்பிகாவும் அம்பாலிகாவும் வியாசரிடம் குழந்தை பெற்றுக் கொண்டனர். வேலைக்காரிக்கு வியாசரிடம் பிறந்தவன்தான் விதுரன். அதிரத நந்தனன் என்னும் தேரோட்டி – இராதை இணையரால்  வளர்க்கப்பட்ட கருணன் குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன். அஞ்சலைக்கு வாயுவிடம் பிறந்தவன் ஆஞ்சநேயர். திருதராட்டிரன் மனைவி காந்தாரி. ஆனால் காந்தாரிக்கு வியாசரால்தான் கெளரவர் நூற்றுவரும் துச்சலை என்னும் மகளும் பிறந்தனர். வைசியப் பெண்ணிடம் யுயுத்துசு என்னும் ஒரு மகன் பிறந்துள்ளமையால் இவர்களின் பிள்ளைகள் எண்ணிக்கை 102 ஆகும். (வியாசர் தந்த பிண்டத்தால் இவர்கள் பிறந்ததாகக் கூறுவது அறிவிற்கு ஏற்றதாக இல்லை.)

கிருட்டிணன் கூன்விழுந்த குப்புசாவுடன் தகா முறையில் உறவு கொண்டதாகப் பாகவதம் கூறுகிறது.

கிருட்டிணனுக்கு,  (உ)ருக்மிணி, சத்தியபாமா, சம்பாவதி, காளிந்தி, மித்திரவிந்தா, நக்குனசிதி, பத்திரா, இலட்சுமணா என்னும் முதன்மை மனைவியர் எனவும் இது கூறுகிறது. இவர்கள் வழி 80 ஆண்மக்கள் இருந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களையும் தருகிறது இப்புராணம். கிருட்டிணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை 16,108. இவர்களின் பிள்ளைகள் 1,80,000. இவ்வாறு கூறுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. எனினும் கிருட்டிணன் பல பேருடன் உறவு கொண்ட ஒழுக்கமற்றவன் என்பதில் ஐயமில்லை என்கிறது பாரதம்.

பிரம்மாவின் ஒழுக்கத்தைப்பற்றிப் பார்க்கலாம்.

1. பரமசிவன்- பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து திருமணத்திற்கு ஓமம் வளர்த்தான். பார்வதி ஓமகுண்டத்தை வலம் வருகையில் இடக் கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்து கொண்டு வந்தாள். அவ்வாறு வருகையில் அவளது இடையை ஒட்டிய தொடை பிரம்மாவின் கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்து பிரம்மா காம மயக்கம் கொண்டான். அதனால் விந்து ஒழுகியது.  அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் பிரம்மாவுக்கு அகத்தியன் பிறந்தான்.

2. பிரம்மா மீண்டும் பார்வதியின் தொடையைப் பார்க்க மேலும் விந்து ஒழுகியது. அதை விருட்சபிச்சை போன்ற செடிகளில் விட்டான்.  இதனால் பிரம்மாவிற்கு வால்கில்லியாதி முதலிய அநேக முனிவர்கள் பிறந்தார்கள்.

3. அங்கிருந்து செல்கையில் பிரம்மா ஒரு சுடலைச் சாம்பலில் தனது விந்துவை விட்டான். அதில் பூரிச்சிரவன் என்கிற அரக்கன் பிறந்தான்.

4. அதில் உள்ள எலும்புகளை பொறுக்கி அதில் விந்தினை விட்டான். அதிலிருந்து சல்லியன் என்கிற வலுவானவன் பிறந்தான்.

5. அங்கிருந்து போகையில் சிறிது விந்து ஒழுகிக் கீழே விழ அதை ஒரு பறவை உண்டது. அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

6. பிறகு தடாகத்தில் கொஞ்சம் விந்தினை விட்டான். அதைத் தவளை(மண்டூகம்) உண்டது. அதன் மூலம் மண்டோதரி பிறந்தாள்.

7. மிகுந்த விந்துவைக் குளத்தில் உள்ள தாமரையில் விட்டான். அதில் இருந்து பத்மை(சரசுவதி) என்கிற மகள் பிறந்தாள்.

8. மகளான சரசுவதியின் அழகைக்கண்டு அவளுடன் புணர வேண்டுமென பிரம்மன் கேட்டான். அதற்கு அவள் மறுத்தாள். புத்திரப் பாக்கியத்திற்காகத் தாய் தமக்கை பிள்ளை மகள் யாருடன் வேண்டுமானாலும் புணரலாம் தவறில்லை என்னும் வேதவாக்கியத்தைச் சொல்லி அவளுடன் உறவு கொண்டான்.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதியை மணந்து கொண்டார் என்றும் ஒரு கதை. அப்படிப் பார்தாலும் மகளான சரசவதியுடன் உடலுறவு கொண்டவனே பிரம்மன்.

9. சரசுவதியைக் கருப்பவதியாக்கியபின் விந்துவைச் சித்தினலிங்கத்தினால் உறிஞ்சினான்.

10. மகளான திலோத்தமை மீதும் காமமோகம் கொண்டவன்தான் பிரம்மன்.

11.  பிரம்மன் காடுகளில் அலைந்து திரிந்த போது ஒரு புதருக்குள் இருந்த கரடியைப் புணர்ந்தான். இதனால் கரடி முகத்துடன் கூடிய சம்புவந்தன் என்ற மகன் பிறந்தான்.

12. பின் விந்தினை ஊர்வசி கருப்பத்தில் விட வசிட்டன் என்ற மகன் பிறந்தான்.

இவ்வாறு முறையற்ற, அறிவிற்கு ஒவ்வாத பண்பாடற்ற செய்திகள் கடவுள், முனிவர்கள் பிறப்புகளையும் உடலுறவுகளையும் கூறுகின்றன. சோ போன்றவர்கள் இவற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டுவது உண்மையென்றால், கடவுள்களாகவும் முனிவர்களாகவும் அரம்பையர் களாகவும் கூறப்படுபவர்கள் உண்மையில் வெறும் புலனுணர்வுகளே. அவர்களை வணங்கவும் போற்றவும் வேண்டிய தேவையில்லையே.

இத்தயை அற்பத்தனத்தை விளக்கியதற்குத்தான் தொல். திருமாவளவனைக் கண்டித்தனர் சனாதனவாதிகள்.

  • (தொடரும்)

வெள்ளி, 4 ஜூலை, 2025

110. இராமன் ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்தது சனாதனத்தின் சிறப்பா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி)

  1. ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்ததாக ஒற்றை மனைவியன் (ஏக பத்தினி விரதன்) என இராமனைப் போற்றுவதன் காரணம் என்ன? கிருட்டிணன் பல பெண்களுடனும் தகா முறை உறவு முறையிலும் உறவு கொண்டவன். அவனைப் பார்க்க இராமன் பாராட்டுக்குரியவன் எனப் போற்றலாம். ஆனால், இராமனுக்கு நான்கு மனைவியர்;  அவர்கள் 1. சீதை, 2. பிரபாவதி, 3. இரதினிபா, 4. சிரீதாமா என்பவர்கள். எனவே இராமன் ஒரே ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்ததாகக் கூறுவது பொய்யன்றி வேறில்லை.
  2. இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப் பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். இதை வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்த சீனிவாசங்கையார், அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.
  3. கைகேயி நாட்டைப் பரதனுக்குக் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் செல்லுமாறு கூறும் பொழுது இராமன் அவளிடம் பரதனிடம் நாட்டை மட்டுமல்ல, சொன்னால் மனைவி சீதையையும் கொடுப்பேன் என்கிறான். ஒழுக்கமுள்ள கணவன் கூறும் கூற்றல்ல இவை.

பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த நாடு இது. எனவே, உண்மையான இராமன் வரலாறு இம்மக்களிடையே எடுபடாது என்பதால் தமிழில் அவனைக் கற்புக்கரசனாகக் காட்டியுள்ளார் கம்பர்.

  • (தொடரும்)

வியாழன், 3 ஜூலை, 2025

தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் – தமிழ்த் தாய்மையும் கன்னடச் சேய்மையும் – இணைய அரங்கம் : 06.07.2025

 




எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ – 355)

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

பொதுச் செயலர், மார்க்குசியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

பாவலரேறு பைந்தமிழ்க் கல்விக்கழகம்

மேனாள் உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்

108.இந்துமதப் பகைவர்கள்தான் சனாதனத்தை எதிர்க்கிறார்களா? ++ 109.இராமாயணம் சனாதனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறதா? – இலககுவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 106-107 தொடர்ச்சி)

  1. தீபாவளி போன்ற பண்டிகைகள் தமிழர்க்கு எதிராகக் கூறப்படுவதாலும் பகுத்தறிவிற்கு ஒவ்வாதனவாய் உள்ளதாலும் பகுத்தறிவுவாதிகளும் தமிழ் உணா்வாளர்களும் இவற்றிற்கு எதிராகவே பேசி வந்தனர், வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் இத்தகைய பண்டிகைகளுக்கு எங்ஙனம் வாழ்த்து கூறுவர்?

இது குறித்துக் குடியாத்தம் குமணன் என்னும் கவிஞர் கூறியுள்ளதைப் பாருங்கள்:

“இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத இந்துக்கள்:

சிவராத்திரிக்கும் பிள்ளையார் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லுகிற வழக்கம் இல்லாத இசுகான் அமைப்பைச் சார்ந்த தீவிர வைணவ  இந்துக்களையா….?

அதே சிவராத்திரிக்கும்  பிள்ளையார் சதுர்த்திக்கும்  வாழ்த்து சொல்ல மறுக்கும் சீயர் மட இந்துக்களையா….?

அல்லது

இராம நவமிக்கும், கிருட்டிண செயந்திக்கும் வாழ்த்து சொல்லாத காஞ்சி மடாதிபதிகளையா….?

மேற்கண்ட இவை எதையுமே எப்போதும் கண்டு கொள்ளாத சைவ மடங்களின் அதிபதிகளையா…?

அல்லது பங்குனி உத்திரத்திற்கும் தைப் பூசத்திற்கும் எப்போதும்  வாழ்த்தே  சொல்லாத மேற்கண்ட அனைவரையுமா..?”

இந்து மதத்தின் உட்பிரிவுகளிலேயே ஒரு பிரிவினர் கொண்டாடும் பண்டிகைகளுக்குப் பிற பிரிவினர் வாழ்த்து கூறுவது இல்லையே அவர்கள் இந்துமதப்பகைவா்களா எனக் கேட்பது சரிதானே. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் அல்லர். இந்து மதம் தூயதாக இருக்கவேண்டும் என்று கருதுபவர்களும் எம்மதமாயினும் மக்களை மக்களாக மதிக்க வேண்டும் என்று கருதுபவர்களும்தான்.

இராமாயண முதன்மைப் பாத்திரங்களே சிறப்பாக விவரிக்கப்படவில்லை.

  • இராமனைத் தசரதன் மகன் என்று சொல்லாமல் கோசலையின் மகன் என்கிறார் வால்மீகி. பிற இடங்களிலும் தாயின் மக்களாகத்தான் உடன் பிறந்தோர் கூறப்படுகின்றனர். குழந்தை பிறந்தவுடன் தந்தை இறந்தாலும் அல்லது குழந்தை கருவாக வயிற்றில் இருக்கும் பொழுதே தந்தை இறந்தாலும் அவனின் மகனாகக் கூறுவதுதான் உலக வழக்கம். ஆனால், வால்மீகி இவ்வாறு கூறாததற்குக் காரணம் அவரது மனச்சான்று இடம் தராமையே ஆகும். இந்நால்வரும் எவ்வாறு பிறந்தார்கள் என்பதை வால்மீகியே கூறுகின்றார்.  வேள்வி நடத்தி, அதுபோழ்து குதிரைகளுடன் பட்டத்தரசிகளை உறவு கொள்ள இசைகிறான்.

“ஓ குதிரையே! உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய குறியானது அவளது குறிக்குள் ஈர்க்கப்படட்டும்” என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன் உடலுறவு கொள்கிறாள் …  …

மக்களைப்போலவே, இராச குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்திர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்… “ஏ… இராசா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் அரசிகளையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்” என்றார்களாம்.

அதன்படியே முதல் நாள் இரவு குதிரையுடன் உறவு கொண்டவர்கள்  மறு நாள் இரவு வேள்வி  நடத்திய பிராமணர்களுடன் இருக்கிறார்கள்.

வேள்வியில் நியமிக்கப்பட்ட பிள்ளைகளைப் பெற்றுத்தர வந்த முரட்டுக் காளைகள் போன்றவர்களைத்தான் தசரதன் வணங்கி எனது மூன்று மனைவியருக்கும் பிள்ளை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டிக் கொள்ள குழந்தை உண்டாக்கித் தரவே நியமிக்கப்பட்ட பொலிகாளைகளான ஃகோதா, அதர்வயூ, உக்குதாதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தசரதனின் பட்டத்தரசிகளான யசோதா, கைகேயி, சுமத்திரை ஆகியோருடன் சேர்ந்து நான்கு ஆண் குழந்தைகளைக் கொடுக்கிறார்கள்.

கணவனே தன் மனைவிகளைக் குதிரைகளுடனும் வேறு ஆட்களுடனும் உறவு கொள்ள வைத்துக் குழந்தைகள் பெற வைக்கிறான் என்பது உயர்ந்த காப்பியமா?

அதே நேரம் அது சனாதனத்தை வெளிப்படுத்துகிறது என்பதும் உண்மைதான். எந்தச் சனாதனத்தை? பிராமணனைத் தவிர பிறரை இழிவுபடுத்தும் சனாதனத்தை. சூத்திரர்கள் என்று ஒரு பிரிவைக் கற்பித்து அப்பிரிவில் உள்ளவர்களை மிகவும் இழிவாக நடத்தும் சனாதனத்தை. எனவேதான் இராமாயணத்தை எதிர்க்க வேண்டியுள்ளது.

  • (தொடரும்)

புதன், 2 ஜூலை, 2025

நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்

 

நீயா நானாவின் தொடர்ச்சியான தனி நேருரை – இலக்குவனார் திருவள்ளுவன்



106.தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டார்கள் – சரியா? 107.சனாதன தருமத்தை ஒழிப்பது என்றால் கலாச்சாரத்தை அழிப்பதாகும் – நரேந்திர (மோடி) சரியா? இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 104-105 தொடர்ச்சி)

  1. தமிழில் நால் வேதங்களையும் நான்மறைகளையும் பாராட்டியுள்ள இலக்கிய வரிகளைக் குறிப்பிட்டுத் தமிழர்கள் சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகப் பரப்புரை மேற்கொள்கின்றனரே!
  2. உண்மையில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் வேதங்களும் மறைகளும் தமிழர்களால் தமிழில் எழுதப்பெற்ற நன்னெறி நூல்களாகும். இது குறித்துச் சிலர் எழுதியுள்ளனர். நான் ‘தினச்செய்தி’ நாளிதழில் “சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!” எனச் சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டுரை எழுதி உள்ளேன். அகர முதல மின்னிதழில் இது வெளிவந்துள்ளது.

வியாசர் என்ற செம்படவ முனிவர் வேதங்களை இரிக்கு, யசூர், சாமம் என்று முதன்முதலில் மூவகைகளாகப் பிரித்து வகுத்துள்ளார் என்கின்றனர். அதற்கு முன்னரே தமிழில் நால் வேதம்  இருந்தமையால் இவை ஆரிய வேதங்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நன்னெறியான தமிழ் வேதம் எது? தீ நெறியான ஆரிய வேதம் எது? என்பதைப் புரிந்து நாம் பயன்படுத்த வேண்டும்.  தமிழ் வேதங்களைப்

புரையில்

நற்பனுவல் நால் வேதம்”

என்கிறார் புறநானூற்றுப் புலவர் நெட்டிமையார்(பாடல் 15). குற்றமற்ற நல்லறநெறியாகிய நால் வேதம் என உரையாளர்கள் விளக்குகின்றனர். இவ்வாறு விளக்குவதன் காரணம் குற்றமுள்ள தீ நெறியாகிய ஆரிய வேதங்களை வேறு படுத்தவே. எனவே, தமிழ் மேற்கோள்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழ் வேதங்களை ஆரிய வேதமாகக் கருதித் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

திருஞானசம்பந்தருக்குப் பூணூல் சடங்கு செய்த பொழுது பிராமணர்கள் நான்மறை ஓதியதாகவும் அதற்கு எதிராக சம்பந்தர் எண்ணிறந்த புனித வேதம் ஓதியதாகவும் சேக்கிழார் கூறுகிறார்(பெரியபுராணம் பாடல் 2167) .

    “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று

      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்

      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த

      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்”

என்பதுதான் அப்பாடல்.

ஆரிய நான்மறைகளைத் திருஞானசம்பந்தர் ஏற்கவில்லை. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனப் போற்றப்படுபவர் திருஞானசம்பந்தர். எனவே, ஆரிய மறைகளுக்கு எதிராகத் தமிழ் வேதங்களை ஓதினார் என்று கருதலாம்.” (சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே!  – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி)

(நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தர் பிராமணர் அல்லர். இவரது தந்தையார் பெயர் சிவபாதவிருதயர்; தாயார் பெயர் பகவதி அம்மையார்; இவரின் இயற்பெயர்  ஆளுடையபிள்ளை; இவரின் வேறு பெயர்கள் திருஞானம் பெற்ற பிள்ளை, காழிநாடுடைய பிள்ளை; மனைவி பெயர் சொக்கியார். இப்பெயர்களைப் பார்க்கும் போது இவர் தமிழரே என நன்கு தெரிகிறது. இவரது புகழை ஆரியமயமாக்க இவரைப் பிராமணர் எனக் கற்பித்து அதற்கேற்ற கதைகளையும் கட்டிவிட்டனர்.)

  1. தேர்தலுக்கான தவறான பரப்புரை இது.

(உ)ரூப்புகுவர்பா கன்வார் (Roopkuvarba Kanwar)( 1969 – 4 செட்டம்பர் 1987) என்னும் 18 வயது இளம்பெண் இந்தியாவின் இராசசுத்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள தியோராலா என்ற சிற்றூரில் உடன்கட்டை ஏறுவதாகப் பொய்யாகப் பரப்பி, உயிருடன் எரிக்கப்பட்ட இராசபுத்திரப் பெண் ஆவார். திருமணமான 8 மாதத்தில் கணவர் மால் சிங்கு செகாவத்து இறந்த நிலையில் குழந்தையற்ற இவர் சனாதனச் சாத்திரத்தின் பெயரால் எரியூட்டப்பட்டார். இந்நிகழ்வில் பல்லாயிரவர் பங்கேற்றனர். இவர் சதி மாதா, சதி தாய், தூய தாய் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். எனினும் இக்கொலையானது நகர்ப்புறப் பகுதிகளில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

இதனால், இந்நிகழ்வில் பங்கேற்ற தியோராலாவைச் (Deorala) சேர்ந்த 45பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்பெற்றனர். பின்னர் நடந்த விசாரணையில் உடன்கட்டை ஏற்றுவித்துப் புனிதமாகப் பரப்புரை செய்த 11பேர் மீது குற்றஞ்சுமத்தி வழக்கு நடைபெற்றது. ஆனால் அனைவரும் விடுதலை செய்யப்பெற்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை அரசு உணர்ந்ததால் 1.10.1987 இல் இராசசுதான் சதி (தடுப்பு) கட்டளையம் என்னும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மத்தியச் சட்டம் வேண்டும் எனப் பல தரப்பாரும் வலியுறுத்தியதால், சதி(தடுப்பு) செயற்பாட்டுச்சட்ட வரைவம்(the Commission of Sati (Prevention) Bill, 1987) நாடாளுமன்ற ஈரவைகளிலும் நிறைவேற்றப்பட்டு 21.03.1988 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இராசசுத்தானில் சில பகுதிகளில் பரவலாக இருந்த கட்டாய உடன் கட்டை ஏறுதலை மாநில அரசும் ஒன்றிய அரசும் சட்ட முறைப்படி நிறுத்தியுள்ளனர். இதைத்தான் நரேந்திர(மோடி) இராசசுத்தான் பண்பாட்டிற்கு எதிராகப் பேராயக் கட்சி(காங்கிரசு) இருப்பதாகக் கூறிப் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

இராசசுதானில் உள்ள உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க வேண்டுவது சரிதானே. சனாதனத்தின் பெயரிலான படுகொலையை ஆதரிப்பதுதானே தவறு.

  • (தொடரும்)