சனி, 24 ஜூலை, 2021

குவிகம் இணையவழி அளவளாவல் 25/07/2021

 அகரமுதல




ஆடி 09, 2052 / 25.07.2021

ஞாயிறு மாலை 06.30

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931

கடவுக் குறி / Passcode: kuvikam123  

பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம் .

       குவிகம் இணையவழி அளவளாவல்

 நீங்களும் பேச்சாளராக....  – 

முனைவர் சி.சுந்தரராமன்

வெள்ளி, 23 ஜூலை, 2021

An Introduction To The Book ‘SCIENCE DURING THE SANGAM AGE’ By Ilakkuvanar Thiruvalluvan

 

An Introduction To The Book

‘SCIENCE DURING THE SANGAM AGE’

‘ANDRE SONNA ARIVIYAL-SANGAKAALAM’

By Ilakkuvanar Thiruvalluvan

 



4/8

 

Knowledge of marriage registration

 

In chapter No 16, the author wonders about the practice of marriage registration. The registration of marriage come to be in vogue in the year 1653, in England. In the years of 1964 and 1979, the UNO made the registration of marriage compulsory.

 

In the dim past the Tamils lay stress on the registration of marriages. The Tamil GRAMMARIAN TOLKĀPPIYAR in his book TOLKĀPPIYAM has mentioned about it. Our ancestors did things before the peoples of other lands could think of them/

DR.S.Ilakkuvanar a doyen in Tamil literature, who translated TOLKĀPPIYAM into English revealed the fact about the practice of marriage registration.

 

Science of Planets

 

The Tamils named the planets by their natural quality. But the Greeks, the Romans and others clung  to some imaginary and irrational myths about planets. For example, the author speaks about saturn in the 17th chapter.

 

 The saturn is called SANI which means a cold planet. It is called  MAIM'MĪṈ  which means black planet.

 

Another name they had for saturn is KARIYAVAṈ. It means the planet which has got a black colour.  MANTAṈ  is another name for SATURN. It means slow revolving planet.

 

So we learn that our ancestors had the knowledge of the climate, colour and the speed of Saturn.

 

The Knowledge of Comet

 

In the chapter No 18 the author  has explained the small Solar System – i.e. Comet. Its Greek name is KOMETES. It means long hair. Another meaning for kometes is tail. A Comet when passing close to the Sun, releases  gases and its trailing gases like hair or tail.

 

Nowadays, The Tamils also calls it as VĀL NAṬCATTIRAM – a star which has got a tail.

 

But the Tamils who lived 2000 years back had the knowledge of this celestral body. They never called  Comet  a Star. They called it TŪMAM and PUKAIKKOṬI  by the virtue of releasing gas and dust. the planets as follow

 

[In the poem No.117 of Puṟanāṉūṟu. Poet KAPILAR MENTIONED the planets as follows:

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

Maim'mīṉ pukaiyium tūmam tōṉṟium

te ticai maruki veḷḷi ōṭium ]

 

Swimming dress and platform

 

Swimming came under the catagory of sports only in19th century. In the year 1891, Spring Board was introduced in swimming. In the year  1901 it was included in the list of the events of Olympic games. Then Driving platforms came into use. But 2000 years back, the Tamils used NĪRAṆI MĀṬAM – Upper platform for diving into water.

 

[நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர்

Nīr aṇi kāṇpōr nirai māṭam ūrkuvōr – Paipaadal 10.27]

They called two-piece dress as Īraṇi, i.e. two wears.

In Akanāṉūṟu(166-13; 266.5), Paripāṭal(6.28; 22.18; 10.27) the poets mentioned the Īraṇi.

 

SCINECE OF COINS

 

There are many references to gold coins in Sangam literature. The author quotes the lines from  Tirumurukāṟṟuppaṭai(16), Akanāṉūṟu(315.10-13),    Kuṟuntokai  (67.1-4; 18.1-3; 274.1-2), Naṟṟiṇai(274.1-2) and Kalittokai(85.3-4) and explains the gold coins that were in use in the chapter No. 20.

 

SCIENCE OF IRRIGATION

 

The author described the science of irrigation which was in vogue  2000 yeras back in the chapter No. 22.

The author has explained about the kallaṇai - a dam built 2000 years back on river kaveri- by the Cōḻa emperor  Karikāl Peruvaḷattāṉ.

Poet Muṭattāmak kaṇṇiyār mentioned in her poem (puṟanāṉūṟu  18) that those who blocked abundant water or who created water reservoirs will control the world; those who don't control the  abundant water have not controlled this world. By this golden lines she emphasise the kings to built water reservoirs for irrigations. The author has explained this poem.

 

Prof. G.MARIA JOSEPH XAVIOR




வியாழன், 22 ஜூலை, 2021

இந்திய அரசு ஒன்றியமா மத்தியமா? – சு.குமணராசன் : 4/4

 அகரமுதல



இந்திய அரசு ஒன்றியமாமத்தியமா?

4/4

 இந்தியா என்ற நாட்டில் சமன்மை, உடன்(பிறப்பு)மை என்ற இரண்டு அடிப்படைக் கூறுகளில் முழுமையானதொரு வெற்றிடம் உள்ளது என்பதைத் தயங்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். மேலிருந்து கீழ் என்ற படிநிலைச் சமுக அமைப்பும், பெரும் பணக்காரன், வறுமையில் உழலும் ஏழை என்கிற பொருளாதார ஏற்றத் தாழ்வும் நீங்காத வரை நாம் பெற்றிருக்கின்ற இந்த அரசியல் விடுதலை என்பதற்குப் பொருளில்லை என்பதே என் கருத்தாகும்.

சாதியக் கோட்பாடு என்பது உடன்(பிறப்பு)மைக்கும் சமன்மைக்கும் எதிரானது. சாதி என்பது தேசப் பகை (விரோதம்). இதைக் கடைபிடிக்க எண்ணுகின்றவர்கள் தான் உண்மையிலே நம் தேசப் பகைவர்கள் (விரோதிகள்) என்று கருத வேண்டும்.

ஒரு நாட்டின் விடுதலை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான் என்பதை நான் இந்த அவையில் மறுக்க எண்ணவில்லை.

ஆனால் இந்திய மக்கள் (the People of India) என்று சொல்வதற்குப் பதிலாக  இந்தியத்தேசியம் ( the Indian Nation) என்று சொல்வதைச் சிலர் பெருமையாகக் கருதுகிறார்கள். நாம் இதை ஒரு தேசம் என்று நம்புகின்றோம். அப்படிச் சொல்வது ஒரு மாயை (elusion) என்பதை முதலில் நாம் உணர வேண்டும். மக்கள் பல்லாயிரக் கணக்கான சாதிகளாய் ஏற்றத்தாழ்வுடன் பிரிந்து கிடக்கையில் எங்கிருந்து வரும் இந்தத் தேசியம்?

இனியும் நம் வறுமைக்கும், வாழ்வுக்கும் ஆங்கிலேயர்கள் காரணம் என்று சொல்ல இயலாது. இனி நமது கடமைகள் காத்திருக்கின்றன. எனவே இனி வரும் காலங்களிலும் இது சரிசெய்யப் படவில்லையென்றால் இப்போது நாம் கொண்டாடும் இந்த விடுதலை மகிழ்ச்சிக் கொண்டாட்டம் பொருளில்லாத ஒன்றாகி விடும்.

1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அறிஞர் அம்பேத்துகர்

“ அரசமைப்பை நான் தான் உருவாக்கினேன் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த அரசமைப்பைக் கொளுத்தும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன் என்பதைக் கூறுவதற்கும் நான் அணியமாக உள்ளேன். என்னை ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தி என் விருப்பத்திற்கெதிராகப் பலவற்றைச் செய்ய வைத்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் பாயிரம் சொல்கின்ற செய்தியை மனப் பூர்வமாக ஏற்றுச் செயல்படத் தவறினால் நாம் சொல்கின்ற இந்த இந்தியத் தேசம் என்பது ஒரு மாயை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்  

(1955, 19th March, Dr. Ambedkar in Parliament:-

My friend says that the last time when I spoke, I said that I wanted to burn the Constitution. Well, in a hurry I did not explain the reason. Now that my friend has given me the opportunity, I think I shall give the reason. The reason is this: We built a temple for god to come in and reside, but before the god could be installed, if the devil had taken possession of it, what else could we do except destroy the temple? We did not intend that it should be occupied by the Asuras. We intended it to be occupied by the Devas. That’s the reason why I said I would rather like to burn it.

Dr BR Ambedkar in the Rajya Sabha on 19 March 1955)

எனது நண்பர் கூறுகையில், கடைசியாக நான் பேசியபோது, நான் அரசியலமைப்பை எரிக்க விரும்பினேன் என்று சொன்னேன். சரி, அவசரமாக நான் காரணத்தை விளக்கவில்லை. இப்போது என் நண்பர் எனக்கு வாய்ப்பு அளித்துள்ளதால், அதற்கான காரணத்தை நான் தருவேன் என்று நினைக்கிறேன். காரணம் இதுதான்: கடவுள் உள்ளே வந்து வசிப்பதற்காக ஒரு கோவிலைக் கட்டினோம், ஆனால் கடவுளை நிறுவுவதற்கு முன்பு, பிசாசு அதைக் கைப்பற்றியிருந்தால், கோயிலை அழிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அதை அசுரர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை. நாங்கள் அதைத் தேவர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அதை எரிக்க விரும்புகிறேன் என்று நான் சொன்னதற்கு இதுவே காரணம்.

எனவே தன்னாட்சி இல்லா ஒரு மாநிலமாக இந்திய வல்லாண்மைக்கு அடிமைப் பட்டு இருப்பதை விடத் தனியாட்சி நோக்கிப் பயணிப்பதே தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் நன்மை சேர்க்கும். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் 1938 ஆம் ஆண்டு முன்னெடுத்தார். எனவே தற்போது தமிழ்நாடு அரசின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும்  மாண்புமிகு மு.க.தாலின் அவர்கள் இந்திய அரசியலில் அனைத்து மாநில முதலமைச்சரைகளையும் ஒன்று சேர்த்து ஒன்றிய அரசின் வல்லாண்மைப் போக்கை விளக்க வேண்டும் என்பது என் கருத்து. இந்தியாவுக்கு தமிழ்நாடுதான் வழி காட்ட வேண்டும் என்று பதிவு செய்து வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

நன்றி!

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’ என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]

புதன், 21 ஜூலை, 2021

An Introduction To The Book ‘SCIENCE DURING THE SANGAM AGE’ - Prof.Xavior

 




An Introduction To The Book

‘SCIENCE DURING THE SANGAM AGE’

‘ANDRE SONNA ARIVIYAL-SANGAKAALAM’

By Ilakkuvanar Thiruvalluvan

 

- Prof. G.MARIA JOSEPH XAVIOR

 

3/8

 

SCIENCE OF WIND

 

In the year 1806 Sir Francis Beaufort differentiated the air by its speed and nature. But 2000 years back the Tamils had mentioned many types of air.

 

Piṅkala nikaṇṭu(Thesaurus) gives a list of various types of winds as Vaṅkūḻ, maruntu, calaṉaṉ,  vāṭai, vaḷi, kōtai, vātam, kūtai, vēṟṟalam, kāl, oli, uyir, kālili,viṇṭu, nīḷai,ulavai,koṇṭal,kōṭai, niḻali and uyirppu. 

 

They differenciated the air according to the directions from which they blow.

 

Air from the South is TEṈṞAL

Air from the North is VĀṬAI

Air from the West is KŌṬAI

Air frot the East is KOṆṬAL

 

According to the chillness it is differentiated as

 

Kūtir(Tholkappiyam.Porul. 6)  -  Chill wind

Ūtai  - shivery wind

kulir – air of Coldness

 

Acording to the spead and the strength air,  the Tamils differentiated them as shown below

 

Cil kāṟṟu (Maturaikkāñci line 358)   - Chill wind

Kaṭuṅkāṟṟu (Maturaikkāñci 378) - Gale-force wind

Peruṅkāṟṟu  (kalittokai 45.4)- Strong breeze

Cuḻal kāṟṟu (NaṟṟiṇaiPoem 37, line 7) - Cyclone

Kaṭuṅkāl  (Patiṟṟuppattu Poem 17, line12)  - Violent wind

Taṇkāl  (Puṟanāṉūṟu poem 396, line5) -  cool breeze

The author has explained it in the chapter No.12.

 

Knowledge of space DEVOID OF air

 

From the chapter 13, we come to know that the Tamils were well informed of the knowledge of space.

 

There are many levels of atmosphere above the earth. Atmosphere exists only upto a certain altitude. The content of air gets reduced as the altitude increases.

 

 Beyond a particular altitude there is no air but vaccum.

Modern scientists came to know this truth quite recently.

 

But Poet VEḶḶAIKKUṬI NĀKAṈĀR in the poem No.35, lines 1-5, in Puṟanāṉūṟu  pointed about the fact tha there is no air beyond a particular altitude above the earth in the space above.

 [ Poet Vellaikudi Nākanār sang to the King Chōlan KUḶAMUṞṞATTUT TUÑCIYA KIḶḶI VAḶAVAṈ as shown below:

 

In this dense world where winds cannot penetrate,

decorated with the sky, with huge ocean as its limits,

Among the three who rule over the cool Tamil land with

roaring drums and armies, your royalty alone is true !

[நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!

Nai'iru munnīr ēi yāka,

vai'iai vaakā vāam cūiya

matii kiakkait tatamik kiavar,

muracu muaku tāai mūvar uḷḷum,

aracu'eap pauvatu niatē, peruma!]

[valiyidai vazhangaa vaanam –Space devoid of air]

 

And in Puṟanāṉūṟu (Poem 365), Poet MĀRKKAṆṬĒYAṈĀR has spoken about the sky or space where there is no air as ‘NĪTTAM’ . Nīttam means the space, far above the atmosphere.

 

Knowledge of bonsai breeding

In the chapter No 14 the author has explained that Tamil people had the knowledge of the miniature trees – bonsai.

An anonymous poet in the poem No 165 in Akanāṉūṟu has mentioned about the bonsai of blue lilies as  TĀḺIKKUVAḶAI – that is blue flowers in the pot.

 

STREET NAME BOARDS

Street name boards came into use in 1870 only. Malaipaṭukaṭām is a long Tamil poem composed 3000 years back. (i.e. before Tholkappiyar period) . The author in the chapter No. 15, has revealed the fact about the name board through a line from this classical poem.

 

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த

Cellum tē'ettu peyar maruṅku aṟimār

kal eṟintu eḻutiya nal arai marā'atta - Malaipaṭukaṭām, lines 394-395

 

To know the direction of one’s destination,

It was etched on stone.

 

In many out side places they had the habit of  tying a tuft of  the grass in the juncion after cleaning the area to identify the place.

[Paṇṭu naṟku aṟiyāp pulam peyar putuvir

cantu nīvip pul muṭintu iṭumiṉ ]

Whatever our wise ancestors did was quite meaningful and useful.

- Prof. G.MARIA JOSEPH XAVIOR




செவ்வாய், 20 ஜூலை, 2021

இந்திய அரசு ஒன்றியமா ? மத்தியமா? – சு.குமணராசன்

 அகரமுதல




இந்திய அரசு ஒன்றியமாமத்தியமா?

3/4

 தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்பது என்ன? அதுவே சாதியத்தின் இருப்பிடம் அல்லவா? தீண்டாமைக்குரிய தண்டனைகள் சாதிக்கு எதிராக அல்லவா அமைந்திருக்க வேண்டும்?

மாநில மக்களின் அனைத்து உரிமைகளிலும் தலையிடுதல்.

356 ஆவது சட்டப் பிரிவு,

ஆளுநர் உரிமைகள்,

எனப் பல பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் பாயிர முன்னுரைக்கு எதிரானவை.

200 ஆண்டுக் காலம் வெள்ளையர் ஆட்சியில் கிட்டிய மாநில உரிமைகள் கூட விடுதலை பெற்ற இந்தியாவில் மாநிலங்களுக்கு இல்லை.

60 ஆண்டு காலம் மகாத்மா என்றழைக்கப்படும் காந்தியாரை வெள்ளைக்காரன் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஆனால் விடுதலைக்குப் பின் அவரை 6 மாதம் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை யென்றால் வருணாசிரம சனாதனக் கோட்பாடு எவ்வாறு இந்தியாவை ஆளுகின்றது என்பதை நம்மால் அறிய முடியும்.

தந்தை பெரியார் மட்டுமே இந்திய விடுதலை என்பது வெள்ளைக் காரனிடமிருந்து சில கொள்ளைக்காரர்களிடம் அதிகாரம் சென்று சேர்வதைத் தவிர வேறொன்றும் இல்லை. சமுக விடுதலையின்றி அரசியல் விடுதலை என்பது விடுதலை அல்ல, இது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று அறிவித்தார்.

நமது நாட்டின் இறைமை என்பது மக்களிடம் உள்ளதேயொழிய தேர்வு பெற்ற பதவிகளிடம் இல்லை என்பதைக் குடியரசுத் தலைவரும், தலைமை அமைச்சரும் உணர்வதில்லை.

மாநிலங்கள்தான் மக்களை உடைய அரசு, மக்களோடு தொடர்புடைய அரசு. அவர்கள் கல்வி, வேளாண்மை, சமுக நிலை ஆகியவற்றில் நேரடிப் பங்கு கொள்கின்றவர்கள். ஆனால் இவை மத்தியில் ஓர் அதிகாரக் குவியலிடம் இன்று இருக்கிறது.

மண்ணைக் காப்பது மட்டுமே மத்திய அரசின் பணி, மக்களைக் காப்பது மாநில அரசின் பணி. அதுதான் கூட்டாட்சியின் அடிப்படை.

இன்று உலக அளவில் கூட்டாட்சி முறையில் இயங்கும் நாடுகள் அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா, சுவிட்சர்மாந்து போன்ற நாடுகளாகும். இவை அனைத்தும் நம்மை விடப் பெருமளவில் முன்னேறிய நாடுகளாகும். இதன் கரணியம் அங்கு மக்களின் இறைமையும் தன்னாட்சிக் கோட்பாடும் பாதுகாக்கப் பட்டிருப்பதால் ஆகும்.

உலக அளவில் பயன்படுத்தப்படும் நேசனல், இண்டர் நேசனல் என்ற சொற்களும் தவறானவை என்பதே என் கருத்து.

பன்னாட்டு அமைப்பு (United Nations Organizations) என்பது (United states organizations) என்றுதான் அமைந்திருக்க வேண்டும். States என்பது நாடு, மாநிலம் என்று இரு பொருள் படும். ஆனால் ஏற்கெனவே  USA என்ற நாடு உருவாக்கப் பட்டதால் அவர்கள் UNO என்று அழைக்கின்றனர்

அம்பேத்துகர் உரை:-

26-1-1950 ஆண்டு இந்தியா ஒரு மக்கள்நாயக நாடாக மலரவிருக்கிறது. அதாவது மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்வு செய்யும் ஓர் அரசாங்கம் அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும். ஆனால் இந்த மக்கள்நாயக அரசமைப்பு என்னவாகும் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. இதை இந்திய நாடு தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் ஒருமுறை இழந்துவிடுமா? என்ற இரண்டாவது கேள்வியும் என்னுள் எழுகிறது. காரணம் இந்திய நாட்டுக்கு இந்த மக்கள்நாயகக் கோட்பாடு என்பது புதிதல்ல. ஒரு காலத்தில் மன்னராட்சி முறைமைகளில் கூட மக்களாட்சிக் கோட்பாடுகள் தெரிந்தன. நாடாளுமன்றம் அல்லது நாடாளுமன்ற விதிமுறைகள் என்பதை இந்தியா அறியாமலில்லை. ஆனால் இன்று ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகின்றோம்.

நாம் மக்கள்நாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ஓர் எழுத்து வடிவமாக இதை வைத்திருக்காமல், மனத்தில் தாங்கிச் செயல் படவேண்டும்.

அம்பேத்துகரின் மூன்று எச்சரிக்கைகள். (25-11-1949)

  1. நயனின்மை (அராசகம்) இலக்கணம் நீக்கப் படுதல்
  2. தனிமனித வழிபாடு தவிர்த்தல்
  3. அரசியல் மக்கள்நாயகம் தாண்டி சமுக மக்கள்நாயகத்தை நோக்கிப் பயணித்தல்.
  • முதலாவதாக, நம்முடைய சமுக, பொருளாதார இலக்குகளை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு எய்துவோம் என்ற உணர்வைப் பெறவேண்டும். மாறாக, புரட்சி, வன்முறை, நயனின்மை வழிகளைக் கைவிட வேண்டும்
  • இரண்டாவதாக, நாம் பெற்றிருக்கும் இந்த மக்கள் நாயக உரிமையை/ விடுதலையை இன்னொருவன் காலடியில் வைப்பது. அதாவது தலைமை வழிபாட்டை முற்றாகத் தவிர்க்க வேண்டும்
  • மூன்றாவது, நாம் பெற்றிருக்கின்ற இந்த அரசியல் மக்கள் நாயக முறைமையில் மகிழ்ந்துவிடாமல், இந்த மக்கள் நாயகக் கோட்பாட்டைச் சமுக மக்கள் நாயகமாக மாற்ற வேண்டும். சமுக மக்கள்நாயகம் என்ற அடித்தளமின்றி ஓர் அரசியல் மக்கள் நாயகம் நிலைபெற இயலாது என்பது என் கருத்தாகும்.

(தொடரும்)

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமாமத்தியமா?’  என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]