வெள்ளி, 11 அக்டோபர், 2019

உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை

அகரமுதல


திருக்குறள் உலக நூல் – மாநாட்டுக் கால்கோள் விழா
நூல்கள் வெளியீட்டு விழா
விருதுகள் வழங்கும் விழா
நிறுவனர் திருக்குறள் முனைவர் சாந்திமோகனராசு
அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள் புரட்டாசி 25, 20501 சனி 12.10.2019
காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

வியாழன், 10 அக்டோபர், 2019

குவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்


 அகரமுதல


புரட்டாசி 26, 2050 ஞாயிறு 13.10.2019 மாலை 5.00
6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை,
தியாகராயர்நகர், சென்னை
அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்

புதன், 9 அக்டோபர், 2019

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல



கீழடி குறித்த காணுரை:
இலக்குவனார் திருவள்ளுவன்
கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு

செவ்வாய், 8 அக்டோபர், 2019

குவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு

அகரமுதல

வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு
புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல்
பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது.

இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா
மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள” எனும் பாடலைக் குவைத்தினுடைய
கவிஞர் திரு.வித்யாசாகர் எழுதியுள்ளார். இப்பாடலை நமது சிறப்புக் கலைஞர்களான மண்ணிசை இணையர் திருமதி. இராசலட்சுமி -திரு.செந்தில் கணேசு இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

கவிஞர் திரு. வித்யாசாகர் ஏற்கெனவே தனது முகில் கிரியேசன்சு மூலம் பல பாடல்களையும் வெளியிட்டுப், பல புத்தகங்களையும் முகில் பதிப்பகம் வழியே அச்சிட்டுத், தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பெருமை சேர்த்தவர். இலங்கையில் ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு இலவசமாகக் கழிப்பிடம் கட்டித் தந்ததும் தமிழகத்தில் மழைநாட்களில் உதவுவதுமெனப் பல இலக்கிய-சமூகப் பணிகளிலும் மிக ஆர்வமாக பங்குகொள்வார். அண்மையில்கூட இங்கிலாந்து நாட்டில் இலண்டன் பாராளுமன்றம் கவிஞர் திரு. வித்யாசாகருக்கு “உலகத் தமிழ் அமைப்பு” சார்பாக “இலக்கியச் சிகரம்” எனும் உயரிய அருந்திறல் விருதினை வழங்கி வைத்துச் சிறப்பித்தது.
ஒரு திரைப்படப் பாடலை இத்தனைச் சிறப்போடு குவைத்தில் பல உழைக்கும் தமிழரின் முன்னிலையில் வெளியிட்டு ஒரு நல்ல படைப்பாளிக்கு அரியதொரு மேடையை அமைத்துத் தந்த குவைத்து தமிழோசைக் கவிஞர் மன்றம், அதன் பொறுப்பாளர்கள், கொடையாளர்கள், தொழிலதிபர் திரு.ஐதர் அலி (டிவிஎசு குழுமத்தின் நிறுவனர்) அனைவருக்கும் நன்றியை நல்கி விழா இனிதே நிறைவுற்றது.
கீழுள்ள தொடுப்புதனைச் சொடுக்கி இப்பாடலை முழுதாகக் கண்டு களிக்கலாம்.
நன்றிகளுடன்
சேவியர் தாசன், மேலாளர்
முகில் பதிப்பகம் / முகில் கிரியேசன்சு

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

கலைமகள் ஒளவையார் திருவிழா, திருவையாறு

அகரமுதல

புரட்டாசி 20, 2050 / 07.10.2019 திங்கள்
காலை 9.00 முதல் இரவு 8.00
ஒளவைக் கோட்டம், திருவையாறு
ஒளவையின் மின் எழில் திருத்தேர் உலா
காந்தியடிகள் கவிதாஞ்சலி, நூல் வெளியீட்டு விழா, தலைமை அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பேற்கும் விழா, ஒளவை விருது வழங்கு விழா, நாட்டுப்புற ஆடற்கலை

ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது

அகரமுதல

ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்!
ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
மேலும் பொருளாதார வசதியில்லாமல் மருத்துவம் பெறுபவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், அமீரகத்தில் பொது மன்னிப்புக் காலத்தில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோருக்கு நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவிகள் முதலான பல்வேறு பணிகளைத் தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.

இத்தகைய பணியில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அவரை உற்சாகப்படுத்தும் வகையில் சார்சா இந்தியச் சங்கம் அவருக்கு இந்தச் சிறப்பு விருதை வழங்கிச்சிறப்பித்துள்ளது. இதனைப் புகழ்மிகு மலையாளப் பாடகர் அப்சல் வழங்கினார்.
மேலும் இவர் துபாயில் செயல்பட்டு வரும் தேவிப்பட்டிணம் நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிக்கு: தொடர்பு எண் +971 52 947 1333
முதுவை இதாயத்து