சனி, 19 செப்டம்பர், 2009

திமுக அரசில் பங்கு கேட்பதில் தவறில்லை:
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

First Published : 19 Sep 2009 01:57:04 AM IST

Last Updated : 19 Sep 2009 11:55:08 AM IST

திருச்சி, செப். 18: "மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகிக்கிறது. அதுபோல, தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறல்ல' என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு அண்மையில் நிறைவேற்றிய தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் அமலுக்கு வந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்படும். எனவே, இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இலங்கையில் தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் பெரியார் படத்துடன் பிரபாகரன் படத்தையும் சேர்த்து வைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பணம் தமிழகத்தில் ஏராளமான தமிழ் சினிமாக்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். நதிநீர் இணைப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி கூறிய கருத்து அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். நதிநீர் இணைப்பது மூலம் ஏற்படும் பயன்களைப் போல, விளைவுகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் பிடிபட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்திருப்பது காவல் துறையின் நடவடிக்கைகளில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.


கருத்துக்கள்

1967 இல் விரட்டப்பட்ட கொலைகாரக் காங்.கை அரியணையில் ஏற்றாதது கலைஞர் செய்யும் மிக நல்ல செயலாகும். ஒரு வேளை இவர்களுக்கு அமைச்சர் பதவிகள் அளித்தால் மேலும் புதிய சண்டைக் குழுக்கள் வரும் என சோனியா தடுத்திருந்தால் அவரும் பாராட்டிற்குரியவரே! அடிமைத்தனமும் வன்முறை அரசியலும் உடைய காங். தமிழ் நாட்டில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டால் அதுவே நமது நாட்டின் பொற்காலமாகும். திராவிடநாடு திராவிடருக்கே என்றும் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்றும் புரட்சிக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஈழத்தமிழ் மக்களுக்கே தமிழ் ஈழம் எனக் குரல் கொடுத்துக் களப்போரில் இறங்கியவர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். இருவர் படத்தையும் ஒருசேர வைத்தது மிகவும் பொருத்தமான செயலே. இதற்குக் காரணமானவர்களைப் பராட்டுவோம். ஆனால் இருவரின் பெயர்களையும் உச்சரிக்கக் கூட அருகதையற்றவர்கள் இது குறித்து கூறும் தகுதயுடையவர்கள் அல்லர். எனவே, சிங்கள அரசிடம் இருந்து பணம் வாங்கும் கைக்கூலிகள் குறித்து அரசு தக்க உசாவல் - விசாரணை - மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 2:54:00 PM

Maanam Ketta SRB, JJaya-vidam soram ponavane! 8% vote vachikkittu ADMK, DMK mudugila eri savari seyya vendiyathu, appuram kalai varui vittu ethir aniyil seruvathu, Nalla Congress karanna- Mullai periyaru, Cauvery thanni vaangi kodungalendaa paarkalam.. neenga mattum unga appanukke poranthirunthaaaa?????.Nee, intha vethu vettu Junior Ramadass EVKS ELANGOVAN, Dummi Thanga balu, Thothuttu Mandiriyaana PChidambaram, 20 varusama 1991-la irunthu ADMK,DMK dayavaal jeyikkum deposit kooda vaanga mudiyaatha Vellore Gnana Sekaran ungappanukke poranthirunthaa Rameswaram meenavar pirachanayil nalla mudivai vaangi kodungada paarkalam! Keduketta Congresskaranunga! Nanum arasiyalla irukken solla enga AMMA madiri oru arikkai 3 varusathukku appuram!

By Tanjore Tamilan
9/19/2009 2:42:00 PM

who is preventing Congress from insisting on DMK to give berth in TN Ministry? The deal between Congress and DMK is very clear. DMK will rule alone in TN with the support of Congress and at the Centre, coalition government. If Congress has the guts, let them stand alone or without support of DMK or AIADMK. There are plenty of other parties in TN for congress to have alignment under Congress.

By Anbarasi
9/19/2009 12:25:00 PM

அருமைத் தலைவர் எஸ்.ஆர்.பி. அவர்களே, இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள். உங்களைப் போன்ற நேர்மையான காங்கிரஸ்காரர்கள் குறிப்பாக நெல்லைக் கண்ணன், முக்தா சீனிவாசன், தமிழருவி மணியன் போன்றவர்கள் ஒதுங்கிவிட்டதால்தான் பலர் சண்டப் பிரசண்டம் செய்கிறார்கள். காங்கிரஸ் தமிழ் நாட்டில் வளர வேண்டுமானால் நீங்கள் எல்லாம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். கூடா நடப்பை ஒழித்துக் கட்டி சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். வேலூர் ஞானசேகரன், நாகை முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் ஆகியோர் இந்தக் கருத்தை ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாததா நான் சொல்லப் போகிறேன். பெருந்தலைவரை எவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் இவர்கள். இவர்களோடு பதவிக்காக கூட்டு என்றால் அவமானம். காமராஜர் ஆட்சி அமைய வேண்டுமானால் சுயமரியாதையோடு, காங்கிரஸ் பாரம்பரியத்தைக் காத்து தனித்து நிற்க வேண்டும். அது உங்களால் முடியும், செய்யுங்கள் ப்ளீஸ்.

By Adithyan
9/19/2009 11:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிரித்தானியாவில் 3 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

19 September, 2009 by admin

சிறீலங்க அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பில் அகப்பட்டு உயிருடன் தப்பித்த போதும் தங்கள் சொந்த இடங்களில் வாழ முடியாமல் சிறீலங்க அரசாங்கத்தின் வதை முகாம்களில் அல்லல் படும் மக்களை விடுவிக்க கோரி இன்று 3 ஆவது கிழமையாக பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் மாணவர்களால் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வதைமுகாம்களின் முட்கம்பி வேலிக்குள் மக்கள் அல்லல் படும் காட்சியை அங்கு கூடியிருந்ததோர் மக்கள் தங்களை முட்கம்பிக்குள் அடைத்து வேற்றின மக்களுக்கு விவரித்தனர்.

சுற்றிவர முட்கம்பி வேலிகள் அமைத்து அதற்குள் இருந்து கொண்டு குரல் எழுப்பினார்கள் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள். வேற்று இன மக்கள் ஏராளமானோரின் கவனர்த்தை இன்றைய முட்கம்பி வேலிப் போராட்டம் ஈர்த்துள்ளது. கடந்த மூன்று கிழமையாக கலந்துகொண்ட மக்களின் கையொப்பம் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தில் மாலை 5 மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகளால் ஒப்படைக்கப்பட்டது.

பிரதி வெள்ளிகிழமைகளில் நடைபெறவிருக்கும் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொண்டு இந்த போராட்டத்திற்கு வழு சேர்க்கும் படி வேண்டுகின்றனர் தமிழ் இளையோர் அமைப்பினர்.ஓயாத துயரில் ஓய்வூதியர்வாழ்க்கையின் முதுமைக் கட்டம் மிகவும் பொல்லாதது. கோவணாண்டியிலிருந்து கோலோச்சிய அரசர்கள், அதிகாரிகள் வரை முதுமையின் கொடிய தாக்குதல்களிலிருந்து தப்புவதில்லை. முடியிழந்த பேரரசர் ஷாஜகான் தன் முதுமையைச் சிறையில் கழித்து ஏக்கத்துடன் முடிந்து போனார். முன்னாள் பிரதமர் இந்திய சுதந்திரப் போராளி மொரார்ஜிதேசாயின் அந்திக் காலம் மும்பையில் விளம்பர வெளிச்சம் படாத ஓர் அறைக்குள் அடைக்கலமாகி ஓசைப்படாமல் முடிந்திருக்கிறது. பணியிலிருந்து ஓய்வுபெறும்போது அரசுப் பணி நிழல் குடையை இழந்த அரசு ஊழியர் குடும்பப் பாரம், பொருளாதார நெருக்கடி, உடல் பலவீனம், நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகிறார். அனலில் புழுவாக வேதனைகளை அனுபவிக்கிறார். சுமைகள் துயரங்களுடன் அவரது வாழ்க்கைப் பயணம் அந்தியை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நகர ஆரம்பிக்கிறது. அரசு மூலம் முப்பதாண்டுகள் சமுதாயத்துக்குப் பணிபுரிந்த முன்னாள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆதரவற்ற எளியவர்களுக்கு கருணை ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு ஓய்வூதியர்களுக்குக் கருணை ஓய்வூதியர்களைவிட சில உரிமைகள் இணைந்திருக்கின்றன. அந்த உரிமைகளின் அடிப்படையில் அரசு ஓய்வூதியர்கள் சங்கம், இயக்கங்கள் மூலம் தங்களது குறைகளைக் கோரிக்கைகளாக அரசின் முன்வைத்து வாதாடுகிறார்கள்; களம் இறங்கிப் போராடுகிறார்கள். கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்து தகுந்த முடிவு எடுத்து உதவுவது நல்லரசுகளின் தார்மிகக் கடமையும் ஆகிறது. முதலில் மத்திய அரசின் ஆறாவது சம்பள ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் அரசு ஓய்வூதியர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பலன்கள் வழங்கப்பட்டபோது 2006-ம் ஆண்டுக்கு ரொக்க பலன் இல்லை என்றும், மீதமுள்ள ஆண்டுகளுக்கு நிலுவை கணக்கிடப்பட்டு மொத்த ரொக்கம் மூன்று தவணையாக வழங்கப்படும் என்று இறுதி செய்யப்பட்டது. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு வளர்பிறை காலம். அவர்களால் சாதிக்க முடியும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு தேய்பிறை காலம். கரைந்து கரைந்து அமாவாசையாகி காணாமல் போகும் கட்டம் ஓய்வூதியர்களுக்கு. கரையும் முதுமை காலத்தில்தான் மிகப்பெரிய குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டியிருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தால் ஓய்வுபெற்ற உடன் கிடைக்கும் சேமநலநிதி, பணிக்கொடை ஒப்படைப்புகளை ஆதாரமாக்கி ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடத்திச் சற்று இளைப்பாறலாம். அடுத்தவளுக்கு வரன் தேடும் போது மூத்தவள் தலைப்பேறு காலத்துக்கு பிறந்த வீடு வருவது சமூக மரபுகளின் கட்டாயம். அப்போதும் ஓய்வூதியருக்கு நிதிச்சுமைதான். எல்லாமே சுயநிதிப் படிப்பாகிவிட்ட காலகட்டத்தில் ஆண்பிள்ளைகளின் முற்றுப்பெறாத படிப்புக்கும், பல்லாயிரங்கள் செலவிட வேண்டிய மத்தள அடி. வீட்டின் மீது கடன், ஓய்வூதியத்தின் மீது கடன். ஸ்தாவர ஜங்கமங்களை விற்று அதன் வருவாயைக் கொண்டு மேற்படி செலவினங்களை ஈடுகட்ட வேண்டிய துயரக் காட்சிகள். ஒரு பவுன் உருப்படி தங்கம் ரூ. 15,000-ஐ எட்டி இறக்கைக் கட்டிப் பறக்கும்போது இளைய மகள் திருமணத்துக்குத் தேவையானவற்றைச் சேகரிக்க எத்தனித்து இடுப் பொடிந்து படுக்கையில் தஞ்சமாகிப் போகும் பல முதியவர்களின் துயரக்கதைகள் நல்லதங்காளை மிஞ்சுகின்றன. அல்லல்பட்டு ஆற்றாது ஊமையாய் கண்ணீர் வடிக்கும் முதியவர்களுக்கு 6-வது சம்பள ஆணையத்தின் பலன்கள் வெட்டாமல், சுருக்காமல் ஒட்டுமொத்தமாக வழங்கப்படுமானால் அமாவாசையை நோக்கி யாத்திரை செல்லும் ஓய்வூதியர்கள் தலையிலும் தோளிலும் முதுகிலும் சுமக்கின்ற குடும்ப பாரம் குறைந்து நிம்மதியாக மூச்சு விட்டு ஆனந்தப்படுவார்கள். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே. தூய தமிழ்த் துறவியின் மறைமொழி இது. மக்களின் வரிப்பணத்தை வருமான வரி கட்டுபவர்களுக்கும் இலவசங்களாய் அள்ளிக் கொடுத்து வள்ளல் பெயர் வாங்கும் சரித்திர மகா மனிதர்கள், ஓய்வூதியர்களுக்கு நியாயப்படியும், சட்டப்படியும் வழங்க வேண்டிய பலன்களை நிபந்தனை போட்டும், வெட்டியும், தட்டியும், துண்டு போட்டும், கைக்கெட்டியது வாய் கெட்டாமல் போகச் செய்வதில் சிறிதும் நியாயம் தென்படவில்லை. நிலுவை ரொக்கப் பலன் மூன்று தவணையாக வழங்கப்படுமாம். மூன்றாவது ஆண்டு தவணை ரொக்கம் வாங்குவதற்குள் 1/3 ஓய்வூதியர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். இரண்டாவது தவணை பெறுவதற்குள் 10 சதவீதம் பேர் இல்லாமல் போயிருப்பார்கள். உயிரோடு இருக்கின்ற காலத்தில் மகள் திருமணத்திற்கோ, மகன் படிப்பிற்கோ, பேரன் பேத்திகளின் பிறந்தநாள், காது குத்து வைபவங்களுக்கோ பயன்படாத ஓய்வூதிய நிலுவைப் பணம் மரணம் நேர்ந்தால் ஆகாயத்தில் பறக்கும் பஞ்சாகி வாரிசுகளுக்கும் கிட்டாமல் வங்கி, கருவூலக் கணக்குகளைத் தேடி முடங்கிப் போகும். முடங்கியதை மீட்பதற்கு வாரிசுகள் அரசு அலுவலகத் தாழ்வாரங்களிலும் வழக்குமன்ற வேப்பமர நிழல்களிலும் தவமிருந்து அதிகாரிகளின் கையெழுத்திற்காகவும் கருணைப் பிச்சைக்காகவும் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்யும் கொடுமைகள் நிகழ்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இதற்காகத்தான் முதியோரின் நிலுவைப் பணம் தவணைத் தாழிக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழாமல் இல்லை. இலவசங்கள் நாடாளலாம் என்பது தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், மத்திய அரசு ஏற்றுக் கொண்டு பாராட்டும் ஒரு ஜனநாயக அம்சம். ஒரு கோடி தமிழர்களுக்கு இலவச உயர் சிகிச்சை காப்பீடு திட்டம், மக்கள் வரிப் பணத்திலிருந்து ரூ. 517 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இலவசக் காப்பீடு பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் செலவில் நட்சத்திர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுமாம். அரசு ஓய்வூதியர்கள் மாதம் ரூ. 50 தவணை செலுத்தி காப்பீடு பலனுக்குத் தகுதி பெற்றாலும் அவர்களுக்கு உயர் சிகிச்சைகளுக்கு உதவித்தொகை ரூ. 75,000 என்று குறைவாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது கொடுமையிலும் கொடுமை. உச்சவரம்பு தொகையை ரூ. 1 லட்சமாக நிர்ணயிக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. ஓய்வூதியர்களின் அந்திக் காலத்தில்தான் இருதயம், சிறுநீரகம், மூளை, முட்டு, வயிறு, குடல், கல்லீரல் நோய்களும் புற்றுநோயும், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு பாதிப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. ஓய்வூதியர்களில் உயர் சிகிச்சைக்கு காப்பீடு தொகை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதினால் காப்பீடு திட்டம் திவாலாகி விடலாம் என்பது அரசின் கணிப்பு. காப்பீடு கட்டணம் செலுத்தும் ஓய்வூதியர்களை இலவசங்களின் பட்டியலில் சேர்த்தாவது காப்பீடு பயன் ரூ. 1 லட்சம் அடையச் செய்வார்களா? 1970 - 1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில், அஞ்சலகச் சேமிப்பு கேந்திரங்கள் பொதுமக்களின் வைப்புத்தொகைக்கு 10 முதல் 12 சதவீத வட்டி வழங்கின. ஓய்வூதியர்கள் தங்கள் சேமிப்பை வங்கிகள், அஞ்சலகச் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்து வட்டியை வாங்கி மரியாதை காத்தனர். பணவீக்கம் பத்திரிகைச் செய்தியாகிப் பரவலாகப் பேசப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில் வங்கிகள் சேமிப்புக்கும் வைப்புத்தொகைக்கும் வழங்கிய வட்டியை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் என்று குறைத்து நிர்ணயித்தன. 1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ. 1,000 வட்டி வாங்கி வாட்டம் போக்கிக் கொண்ட ஓய்வூதியர்களுக்கு ரூ. 600 வட்டி வழங்கப்பட்டபோது அது அவர்களுக்கு பேரிடியாக இறங்கியது. இதனால் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் சேமிப்பை முதலீடு செய்து ஏமாந்து போனார்கள். ஆனால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கு (வீட்டுக்கடன் - பயிர்க்கடன் - வாகனக் கடன் தவிர்த்து) 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை கூட்டு வட்டி வசூலிக்கிறார்கள். இந்த முரண்பாடான நிதி ஆதார அணுகுமுறைகளினால் ஓய்வூதியர்கள் மத்தள அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உரலில் அகப்பட்ட தலையாக இருக்கிறது ஓய்வூதியர்களின் நிலைமை. சுமார் கால் நூற்றாண்டுக் காலம் தேச சமூக நிர்மாணப் பணிகளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கும் பெருமை அவர்களைச் சாரும். தேய்பிறை சகாப்தத்தில் குடும்ப பாரம், முதுமை நோய் - வலியைத் தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். மூதுரை கேட்பது, முதியோரை மதிப்பது, முதியோரை காப்பது - தலைசிறந்த தர்மம். விருது கொடுத்து அவர்களை கௌரவிக்க வேண்டாம். இலவசங்களை வாரி இறைத்து புதுவாழ்வு கொடுக்க வேண்டாம். அவர்களின் வரவு செலவுகளை சரிபார்த்து மீதியை வாழும் காலத்திலேயே வழங்கினால் தனது வாரிசுகளுக்குச் செய்ய வேண்டிய கடன்களை பூர்த்தி செய்து கொள்வார்கள். வலி கொடுக்கும் நோய்களுக்கும் நிவாரணம் தேடிக் கொள்வார்கள். சித்தர்கள் வர்ணிக்கும் சூன்யத்திலோ, நாத்திகர்கள் குறிப்பிடும் இயற்கை மரணத்திலோ, ஆத்திகர்கள் அழைக்கும் பரம பதத்திலோ சாந்தமுடன் ஐக்கியமாவார்கள்.(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பேராசிரியர்)

கருத்துக்கள்

கட்டுரை ஓய்வூதியர்களின் சிக்கலை நன்கு எதிரொலிக்கிறது. கட்டுரையில் அந்திக் காலம் என்று குறிப்பிட்டஇடங்களில் அந்திமக் காலம் என்று இருக்க வேணடும். அந்த எண்ணத்தில்தான் கட்டுரையாளர் இதனை எழுதியிருக்கின்றார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 4:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அகதிகளாக வாழும் தமிழர்கள்?வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற தமிழர்கள் பல்வேறு காரணங்களால் தங்கள் பாஸ்போர்ட்டை இழந்து, சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக துபை, அபுதாபி, சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளனர். வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்லும் பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவர்கள் ஓரளவு நியாயமான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், உதவியாளர், தொழிலாளர், அலுவலக உதவியாளர் என பணிபுரியும் விசாவில் சென்ற அனைவரும் அங்கு பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்றால் கை நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடு பல லட்சம் செலவு செய்து செல்கின்றனர். அங்கு சென்ற பிறகு அனுபவிக்கும் இன்னல்களால் வேறுவழியின்றித் தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை. வளைகுடா நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தநிலை இப்போது இல்லை. அங்கு பெருமளவில் கட்டுமானப் பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தினர். அங்குள்ள கடுமையான வெயிலில் கட்டுமானப் பணி செய்கின்றனர். வட்டிக்கோ, நகைகளை விற்றோ பணம் பெற்று அதன் மூலம் வேலைக்குச் செல்வோர் விசாவுக்காகச் செலவு செய்த தொகை கிடைக்கும் வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், அந்நாட்டில் பணி செய்ய விசா வழங்கியவரிடமோ அல்லது அந்நாட்டு அரசிடமோ பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும். அதன் பின்னர்தான் அந்நாட்டில் பணி செய்ய அடையாள அட்டை வழங்கப்படும். பணிக்கான ஒப்பந்த காலம் முடிந்து சொந்த ஊருக்கு விடுமுறையில் திரும்பும்போது, பாஸ்போர்ட் திருப்பி வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் முதலில் மொழி பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர். ஆங்கிலம், இந்தி பேசத் தெரிந்திருந்தால் மட்டுமே வளைகுடா நாடுகளில் சாதாரணமாக வாழ முடியும். இல்லையெனில், மொழியைக் கற்கும் வரை சிரமம்தான். இருப்பினும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லும் தமிழர்கள் வேறு வழியின்றிப் பணிபுரிகின்றனர். வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரில் பலர் தங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்து விடுகின்றனர். பலர் பணியில் சேர்ந்த நிறுவனம் பிடிக்காமல் வேறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர். அவ்வாறு பணி செய்பவர்களுக்கு மன்னிப்பு அளித்து அந்நாட்டு அரசாங்கம் அவர்களை சொந்த நாட்டுக்கு, அந்த நாட்டுச் செலவில் அனுப்பி வைக்கும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது, வளைகுடா நாடுகளில் பாஸ்போர்ட் இன்றி தலைமறைவு வாழ்க்கை வாழும் இந்தியர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியால், அங்கு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலையில் கிடைத்த வருமானத்தில், தங்குவதற்கு இடம் இல்லாமல் அகதிகளாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்னையில் உள்ளவர்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டாலும், தேவையான உதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அகதிகளாக வாழும் தமிழர்களைக் காப்பாற்றவும், அவர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்கள்

அயலுறவு அமைச்சராகவும் தமிழர் வாழும் பகுதிகளில் தூதர்களாகவும் தூதரக அதிகாரிகளாகவும் உண்மையான தமிழர்களை நியமித்தால் மட்டுமே இதற்கு விடிவு காண முடியும். ஆரியமும் மலையாளமும் இருக்கும் வரை இந்த இழிநிலை தொடரத்தான் செய்யும்.தமிழக அரசின் சிறப்புச் சாரபாளர் ஒப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் இவற்றில் கருத்து செலுத்தலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 4:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-111: புலேந்திரன், குமரப்பா தற்கொலை!சிங்களக் கடற்படையினரால் ஆயுதம் கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக் கடற்படையினர் சட்டை செய்வதாக இல்லை. அவர்கள் அனைவரும் பலாலி ராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விலங்கு பூட்ட வேண்டும் என்று சிங்களத் தளபதி வலியுறுத்தினார். ஆனால் அம்முடிவை அமைதிப்படை ஏற்கவில்லை. கைதானவர்களில் புலேந்திரன் இருப்பதை அடையாளம் கண்ட இலங்கை கடற்படை பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தது. காரணம், ஏப்ரல் 1987-இல் திருகோணமலையில் நடைபெற்ற வாகனத் தகர்ப்பு சம்பவத்தில் சிங்களர்கள் இறந்ததையொட்டி, விடுதலைப்புலிகளின் திருகோணமலை தளபதி புலேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே அவரையும் மற்றவர்களையும் கொழும்புவுக்குக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை விரும்பியது. பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும் அவர்களை உடனே கொழும்பு கொண்டு வரும்படி உத்தரவிட்டார். இதுகுறித்து அறிந்ததும் மாத்தையா, இந்திய அமைதிப்படைத் தளபதிகளிடம் பேசினார். ""அனைத்துப் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் கைது செய்வது - ஒப்பந்த மீறலாகும். அவர்கள் ஆயுதம் எதுவும் கடத்தவில்லை. தங்கள் பாதுகாப்புக்கு என்று துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் கூடத் தளபதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சலுகைதான். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது அமைதிப்படையின் பொறுப்பாகும்' என்று வாதிட்டார். அமைதிப்படையினரும் சிங்களக் கடற்படையினர் செய்தது சரியில்லை என்று கூறி, அவர்களை விடுவிக்க முயற்சி எடுக்கிறோம் என்று உறுதி கூறினர். இது குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள நூலில், மாத்தையா தன்னிடம் சொன்ன தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதில் மாத்தையா சொல்கிறார்: ""நானும் நடேசனும் ராணுவ முகாமுக்குச் சென்று எங்களது தோழர்களைப் பார்த்தோம். அவர்கள் யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லாரையும் வீடியோ படம் எடுத்தோம். அவரவர் தம் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். புலேந்திரன் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "எல்லாச் சோதனைகளிலும் வென்றிருக்கிறேன். இதிலும் நிச்சயமாக வெல்வேன். இல்லாவிட்டால் லட்சியத்திற்காகச் சாவேன்' என்று எழுதியிருந்தார். குமரப்பா தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "அவர் எப்போதும் விரும்பிப் படிக்கும் பாடல் ஒன்றை நினைவுப்படுத்தி' எழுதியிருந்தார். கரன் என்ற தோழர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "மகனை ஒரு மாலுமியாக' ஆக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களை எழுதிக் கொடுத்தனர். இதற்கிடையில், இந்திய அமைதிப்படை இவர்களுக்கு உணவு கொண்டு வந்தது. அவ்வுணவை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு வெளியே இருந்து உணவு வரவழைத்துக் கொடுத்தேன். பின்னர் மேஜர் ஹர்கிரத் சிங்கைச் சந்தித்தேன். அவர் நியாயங்களை உணர்ந்து பேசினார். ஆனாலும் இந்தியத் தூதுவர் தீட்சித்திடம் இருந்து வந்த செய்தியை அவர் தெரிவித்தார். "இடைக்கால அரசை விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீட்சித் கூறுகிறார்' என்று அவர் தெரிவித்தார். எங்களை நிர்ப்பந்தப்படுத்தி இடைக்கால அரசை ஏற்கவைக்க முயலுகிறார்கள் என்பது புரிந்தது. நிபந்தனை என்றால் அது தேவையில்லை. ஒப்பந்தப்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில் கைது நடவடிக்கை அத்துமீறல் என்று சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் வசமுள்ள சிங்களக் கைதிகள் 8 பேரையும் விடுதலை செய்கிறோம். பதிலுக்கு எங்கள் தோழர்களை விடுதலை செய்யுங்கள்' என்று கேட்டோம். இதற்கும் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை. இதன்பின் பிரபாகரன் என் மூலம், ஹர்கிரத் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். "எமது பிராந்தியத் தளபதிகளையும் மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர் கைது செய்து காவலில் வைத்திருப்பது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படை அம்சத்தையே மீறுவதாக அமைகிறது. உடன்படிக்கையின்படி இலங்கைக் குடியரசுத் தலைவர் எமக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். இந்திய அரசு எமக்குப் பாதுகாப்பு தருவதென உறுதிமொழி அளித்துள்ளது. இப்பொழுது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது வீரர்கள் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யவில்லை. அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்திலிருந்த ஆவணங்களையும் புத்தகங்களையும் இங்கு கொண்டு வருவதற்காகச் சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இது தொடர்பாக இந்தியக் கடற்படையினரிடம் உதவி கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் இவ்விஷயத்தில் எதுவித முடிவும் எடுக்காத நிலையில், எமது சொந்தப்படகில் ஆவணங்களையும் புத்தகங்களையும் கொண்டுவரத் தீர்மானித்தோம். எமது தளபதிகள் சொந்தப் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை மட்டும் வைத்திருந்தனர். இப்பொழுது எமது தளபதிகளும் முக்கிய உறுப்பினர்களும் பலாலி விமான தளத்தில் அமைதிப்படையின் மேற்பார்வையுடன் ஸ்ரீலங்கா ராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அமைதிப்படையினர் இவர்களுடைய பாதுகாப்பிற்கு உறுதியளிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவர்களை ஸ்ரீலங்கா ராணுவம் கொழும்பு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா படையினர் அவர்களை பலாத்காரமாகக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால், அவர்கள் சயனைட் அருந்தி தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள். இவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவம் நிகழுமானால் அதனால் எழக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு இந்திய அமைதிப் படையே பொறுப்பேற்க வேண்டும். எமது தளபதிகளும், முக்கிய உறுப்பினர்களும் இறக்க நேரிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்த நிறுத்தத்தைத் தொடரப்போவதில்லை. தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்திய அமைதிப்படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அமைதியையும், இன ஒற்றுமையையும் நிலைநாட்டுவதில் உறுதிகொண்டிருக்கும் இந்திய அரசும், இந்திய அமைதிப் படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறுப்பினர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. இக்கடிதத்தை ஹர்கிரத் சிங்கிடம் சேர்த்தபோது அவருடன் பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி இருந்தனர். நிலைமை அவர்களுக்குக் கவலையளித்தது. இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் ஆயத்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பயிற்சிக்காக அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. நான் கோபமுற்று, "எங்கள் தோழர்களை இங்கிருந்து கொழும்பு கொண்டு போனால், அடுத்த முறை அவர்களது உடல்களை எடுத்துச் செல்லவே வருவேன்' என்று கூறினேன். தீபிந்தர்சிங் தில்லிக்குச் செய்தி அனுப்பினார். தில்லியில் ஜெயவர்த்தனாவின் செல்வாக்கே கொடிகட்டிப் பறந்தது. மறுநாள் பகல் இரண்டு மணியளவில் 17 தோழர்களுக்கு இந்திய அமைதிப்படை அளித்த பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா படையினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இது என்ன மாற்றம் என்று வினவியபோது, பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்த லெப்.கர்னல் பிரார், "இப் பிரச்னையில் நாங்கள் தலையிடக்கூடாதென தில்லியிலிருந்து ஆணை வந்துள்ளது' என்றார். அதற்குமேல் ஹர்கிரத் சிங்கால் எதையும் செய்யமுடியவில்லை. மாலை 5 மணிக்கு சிங்கள வீரர்கள் புலிகள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, 17 புலிகளும் சயனைட் குப்பிகளைக் கடித்தனர். சில விநாடிகளில் 12 பேர் உயிர்கள் பிரிந்தன. எஞ்சிய 5 பேரும் எப்படியோ பிழைத்துக் கொண்டனர். மறுநாள் மாலை 4 மணியளவில் 12 பேர் உடல்களும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன' இவ்வாறு மாத்தையா குறிப்பிட்டிருந்தார்.நாளை: எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலி!

கருத்துக்கள்

உணர்வற்ற பிண்டங்களே! இது போன்ற செய்திகளைப் படித்த பின்பும் சிங்களத்திற்கும் இந்தியத்திற்கும் கொடி பிடிக்கின்றீர்களே! மனித நேயமே இல்லையா? இராசீவ் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடுஞ் செயல்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான வஞ்சகப்போருக்கும் தொடர்பு இல்லை என்பது பு்ரியவில்லையா? எப்பொழுது உணர்வு பெறுவீர்கள்? (இனி ஈழத் தமிழர்களுக்கு எதிராக இதில் கருத்து பதிவோருக்காக முன் கூட்டியே என் பதிவு)

அறம் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 4:25:00 AM
இதனைத் தற்கொலை என்று சொல்லக் கூடாது ''இந்தியத் துரோகத்தால் தமிழ்க்காவலர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டன'' என்று உண்மையை உரைக்க வேண்டும். தொடர்ச்சியான இந்திய இரண்டகத்தால்தான் ஈழத்தமிழினம் அழிவைச் சந்திக்க நேர்ந்தது என்பதை இன்றைய தலைமுறையினரும் உணர வேண்டும். வருங்காலத் தலைமுறையினரும் அறிய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2009 2:39:00 AM

இலங்கைத் தமிழர் விவகாரம்: மத்திய அரசு தலையிட வேண்டும்- திமுக வலியுறுத்தல்புது தில்லி, செப். 18: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று மத்திய அரசிடம் திமுக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், தில்லியில் வெள்ளிக்கிழமை, தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தார். அப்போது இலங்கைத் தமிழர்கள் குறித்து திமுக கொண்டுள்ள கவலையை தெரிவித்ததுடன், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அவரிடம் வலியுறுத்தினார். இலங்கையில் உள்நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் மாறன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று பிரதமர் அவரிடம் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் உடனிருந்தார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாக கடந்த மாதம், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதல்வர். அதற்கு, "இலங்கைத் தமிழர்கள் குறித்து மத்திய அரசு கவலை அடைந்திருப்பதாகவும், அங்குள்ள தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவிகளை செய்திடுமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும்' என்று முதல்வருக்கு எழுதியிருந்த பதிலில் பிரதமர் உறுதி அளித்திருந்தார். ஆனால் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கள்

இந்த நாடகம் அரசியல் மேடையில் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? அழிப்பு வேலைக்கு உதவிக் கொண்டே கண்டன நாடகம் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? அழிக்கும் போக்கை அறிந்த பின்னும் போடும் நாடகம் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? தமிழர் யாருமில்லை என்றபின்தான் நிற்குமா அம்மா? நிற்குமா அம்மா? இவர்களை நம்பி வாழும் அவலம் எத்தனை நாளம்மா? எத்தனை நாளம்மா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 4:10:00 AM

சங்கிலியன் ஒரு ஸ்ரீலங்காவில் வாழும் சிங்களக் கைகூலி சக்கிலியன். தெற்கு ஆசிய நாடுகளைப் போல் மனிதனேயமற்ற உதவாக்கறை நாடுகள் உலகத்தில் எங்கும் இல்லை

By Thamizhan
9/19/2009 2:56:00 AM

ஆமா,அங்க காம்புல நிக்கிற சனத்தத எல்லாம் வெளிய விட்டீங்கலேண்டால் பிறகு வெளிநாட்டில் இருக்குற எங்களையெல்லாம் ஐரோப்பா காரனும்,கனடியனும் அங்க பிரச்சனை இல்லைதானே நீங்க சிறிலங்காவுக்கு போங்கோ எண்டு எங்களை கலைப்பான்.

By Sangiliyan,Canada
9/19/2009 12:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்கள் தவிப்புபொ. அழகுராஜ்தேனி, செப். 18: தமிழகத்தில் ஓவிய ஆசிரியர் பட்டம் பெற்ற 3 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்படாததால் அவர்களுடைய எதிர்காலம்கேள்விக் குறியாகி உள்ளது. சென்னை எழும்பூர், கும்பகோணம் ஆகிய இரு இடங்களில் அரசு கவின் கலைக் கல்லூரிகள் (ஓவியக் கல்லூரி) செயல்பட்டு வருகின்றன. சென்னை கல்லூரி சென்னை பல்கலைக் கழகத்துடனும், கும்பகோணம் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் இரண்டும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இவ்விரு கல்லூரிகளிலும் டி.எப்.ஏ. (Diplomo In Fine Arts) என்ற பட்டயப்படிப்பு 1988 வரை கற்பிக்கப்பட்டது. பின்னர் இப்படிப்பு பி.எப்.ஏ (Bachelor Of Fine Arts) என்ற பெயரில் பட்டப் படிப்பாக மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், பட்டயப் படிப்புக்கு இருந்த பாட திட்டம் மற்றும் 5 ஆண்டு காலமே பி.எப்.ஏவுக்கும் இருந்தது. இப்படிப்பில் சேருவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதே அடிப்படைக் கல்வித் தகுதியாக இருந்தது, 2003-க்குப் பின்பு அடிப்படைத் தகுதி பிளஸ் 2-வாக மாற்றப்பட்டு, படிப்பின் கால அளவும் 4 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பாட திட்டத்தில் மாற்றமில்லை. பணி நியமனம்: பட்டயப் படிப்பு (டி.எப்.ஏ) முடித்தவர்கள், ஓவிய ஆசிரியர் சான்றிதழ் படிப்பை (டி.டி.சி) விட கூடுதல் கல்வித் தகுதியாக கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1989-ம் ஆண்டு முதல் அரசின் உத்தரவுப்படி ஓவிய ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர். இதேபோல் அஞ்சல் வழிக் கல்வி மூலமோ அல்லது ஏதாவது ஓர் ஓவிய ஆசிரியரிடம் சென்று மனித உருவம், பூக்கள், கணித வடிவங்கள், டிசைன் ஆகிய 4 மட்டும் வரையக் கற்றுக் கொண்டு, அரசு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நடத்தும் மேல்நிலைத் தேர்வை எழுதி வெற்றி பெற்றோ, அதன் மூலம் 3 மாத கால ஓவிய ஆசிரியர் சான்றிதழ் படிப்பு (டி.டி.சி.) முடித்தவர்களும் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பணி நியமனம் இல்லை: ஆனால் ஓவிய ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டாலும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இதனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பி.எப்.ஏ பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துள்ள 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக கவின் கலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் பி.நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மற்றும் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் 225 பேர் பி.எப்.ஏ. படித்து முடித்து வெளியே வருகின்றனர். 1994 முதல் ஒருவர் கூட ஓவிய ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படவில்லை. திருச்சி மற்றும் சென்னை பல்கலைக்கழகம் இரண்டுமே ஓவியப் பட்டயப் படிப்பும் (டிஎப்.ஏ), பட்டதாரி (பி.எப்.ஏ) படிப்பும் ஒன்று தான் எனவும், வேலை வாய்ப்பு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளன. அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிஎப்.ஏ முடித்தவர்கள் ஓவிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஓவிய ஆசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் செல்லும் போது, ""டி.எப்.ஏ என்ற பட்டயப் படிப்பை பி.எப்.ஏ என பெயர் மாற்றம் செய்த பின்பு, அரசாணையை திருத்தம் செய்து, ஓவிய ஆசிரியப் பணி வழங்க ஆணை எதுவம் வரவில்லை'' என்று கல்வித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால் அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஓவிய ஆசிரியர் பட்டம் பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்க வேண்டும். இல்லையெனில் இப்பட்டம் பெற்றோர் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

கருத்துக்கள்

ஓவியம்,இசை,உடற்பயிற்சி,நூலகம் இவற்றுக்கென மாணவர்களுக்குக் கட்டாயம் நேரம் ஒதுக்கி அவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்வது அவசியம். -அரிமா இளங்கண்ணன்(US)

By P.Balakrishnan
9/19/2009 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *சென்னை, செப். 18: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளி ராபர்ட் பயஸ், ""தன்னை கருணை கொலை செய்ய உத்தரவிடுமாறு'' முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பயஸ். 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் நபர்களை, ஆலோசனைக்குழு கூடி விடுதலை செய்வது வழக்கம். ஆனால், ராபர்ட் பயஸ் வழக்கில் 15 ஆண்டுகள் கழித்துதான் ஆலோசனைக் குழு கூடியது. 26.12.2006-ல் கூடிய ஆலோசனைக் குழுவில் சிறைக் கண்காணிப்பாளர் நன்னடத்தை சான்றிதழும், உளவியல் மருத்துவர் தகுதியான சான்றிதழும் அளித்திருந்தனர். ஆனால் இலங்கையில் போர் நடைபெறுகிறது. சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று பல காரணங்களை காட்டி விடுதலை தவிர்க்கப்பட்டது. இதை எதிர்த்து ராபர்ட் பயஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ""அரசு சார்பற்ற அதிகாரிகளை நியமித்து சட்டப்படி மீண்டும் ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டும்'' என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்து ஓராண்டாகியும், ஆலோசனைக் குழு கூட்டப்படவில்லை. ஆலோசனைக் குழுவை விரைவில் கூட்டக் கோரி மாவட்ட ஆட்சியர், சிறைத்துறை தலைவருக்கு பல தடவை ராபர்ட் பயஸ் மனு செய்தும் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ராபர்ட் பயஸ் மனு அனுப்பியுள்ளார். அதில், "கடந்த 18 ஆண்டாக குடும்பத்தைப் பிரிந்து தனிமைச் சிறையில் உள்ளேன். தற்போது எனது குடும்பம் இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியாமல் தவிக்கிறேன். ஏழு ஆண்டுகள் முடிவடைந்த சிறைவாசிகளை கூட விடுதலை செய்தீர்கள். நானோ 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன்படி மாநில அரசு, மத்திய அரசிடம் விடுதலை செய்வதற்கு முன் ஆலோசனை செய்தல் வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் சாசனம் 161 பிரிவின்படி மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியதில்லை என்று கூறிய பின்னரும், மத்திய அரசிடம் தெரிவிக்காமல் விடுவிக்க முடியாது என்று மாநில அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர். இவைகளை பார்க்கும்போது அரசியல் உள்நோக்கங்கள் காரணமாகவே நியாயமும், நீதியும் மறுக்கப்படுகிறது என்பது வெளிச்சமாகிறது. எனது நீண்ட கால சிறைவாசம், குடும்ப சூழ்நிலையைக் கொண்டு விடுதலை செய்யுங்கள். இல்லையெனில் கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது பட்டினி சாவு மேற்கொள்வதையாவது இடையூறு செய்யாமல் விட்டுவிடுங்கள்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.சிறையில் எம்.ஏ. வரலாறு: இவர் சிறையில் இருந்தபடியே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு, இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சி, ஊட்டச்சத்து, தந்தை பெரியார் பாலிடெக்னிக் மையத்தின் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகளை முடித்துள்ளார்.

கருத்துக்கள்

தம்மை நாட்டுப் பற்றாளராகக் காட்டிக் கொள்வதற்காக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கையாளுவதே தமிழகத் தலைமையின் பழக்கம். எனவே, சிறையிலேயே இயல்பான முறையில் இறக்கட்டும் என எதிர்பார்க்கும் தமிழக அரசு ஒன்றும் செய்யாது. விழிப்புணர்வும் மனித நேயமும் அற்ற நம் மக்களால் எந்தப் பயனும் இல்லை. கடவுளுக்கும் காப்பாற்றும் திறன் இல்லை. இருந்திருந்தால் நூறாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை வஞ்சகமான கொடூரமான முறைகளில் சாக விட்டிருப்பாரா? பாவம் வேறு என்னதான் செய்ய முடியும்? எனவேதான் கருணைக் கொலை கேட்கின்றார். ஆட்சிப் பொறுப்பை விரும்பாத மக்கள் நலத் தலைவர் தோன்றி மக்களை விழிப்படையச் செய்து புரட்சி ஏற்படுத்தினாலன்றி விடிவு கிடையாது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 3:34:00 AM

These courts give their ruling long after all the damages are done. The justice system many times favours the countries' local ruling parties and selfish people. To give quick and right judgement, the Judges should be corrupt free and shoudn't be controlled by external forces. Else how can we expect justice for Tom, Dick and Harry. Delaying justice without trials is also big injustice. How can they allow people to suffer in jails without trials. The life imprisonment in India is 12 yrs and they release before the term due to goodfaith. How come they can keep for 18 yrs - more than the max imprisonment. Why should he go after so many people to look his case? Are other people, human-rights, politicians in India are deaf and dumb? How many people are suffering in Asian jails, without having strength to speak out?

By Human
9/19/2009 3:28:00 AM

Please Allah's Sons give lessons to India because Indians(Not TN Tamils except Karunnanidhi and his family and Congress Leaders) were supported killing innocent Tamils in Tamileelam still Indians doing. this Ramadan will Indians should learn about pain of death. If happened I will converted to Islam. All Indians Should pay for Our Eelam Tamils Death. No one can not escape. God is upthere.Remember it. All Indians should pay for Our deaths

By Eelavan
9/19/2009 1:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தில்லியில் 29 - ல் உண்ணாவிரதம்:
விஜயகாந்த் அறிவிப்புசென்னை, செப். 18: ""தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து செப்டம்பர் 29-ம் தேதி தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அரசின் அத்துமீறல் காரணமாக கடந்த 22 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகு தமிழக அரசு தலையிட்டதன் பேரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படகுகள், வலைகளை சேதப்படுத்தி, மீன்களை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். செப்டம்பர் 16-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி கடத்தியுள்ளனர். ஒரு நாட்டின் எல்லையில் இருந்து மற்றொரு நாட்டின் எல்லைக்குள் மீனவர்கள் சென்றால் அவர்களை முறைப்படி கைது செய்து சம்பந்தப்பட்ட நாட்டுக்கு தெரிவிப்பது தான் உலகம் முழுவதும் கையாளப்படும் முறையாகும். சமீபத்தில் வழித் தவறிச் சென்ற தமிழக மீனவர்களை வங்கதேச அரசு கைது செய்து விடுதலை செய்துள்ளது. ஆனால் இலங்கை அரசு எத்தகைய நாகரித்தையும் கடைபிடிக்காத அரசு என்பதை உலகம் நன்கறியும். இலங்கை அரசுடன் 1974-ல் இந்திய அரசு செய்து கொண்ட கச்சத் தீவு ஒப்பந்தமே இத்தனை சிக்கல்களுக்கும் காரணம். இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு வரை இரண்டு நாடுகளின் மீனவர்களும் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஒப்பந்தம் போடும்போது சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தறிந்து செயல்படுவதே முறையாகும். ஆனால் தமிழக மீனவர்களைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயலாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலும் அழித்து விட்டதாக இலங்கை அரசு பறைசாற்றுகிறது. ஆனாலும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துகிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பறித்துவிட்டது. முதல்வர் கருணாநிதி அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்று கண்துடைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மெத்தனப் போக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து எழும் அழுகுரல் தில்லியின் காதுகளில் விழுவதில்லை. தமிழக மீனவர்களின் அவலங்கள் தில்லியின் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே செப்டம்பர் 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தில்லியில் தேமுதிக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் தமிழக நலனில் அக்கறை கொண்டவர்களும், மீனவர்களும் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார்.

கருத்துக்கள்

விடுதலைப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒரு போர்வையே தவிர சிங்கள அரசின் நோக்கம் தமிழர்களை ஒழிப்பதே. எனவே, விசயகாந்த்தின் போராட்டத்தில் பிறரும் பங்கேற்க வேண்டும். ஆனால் இவ்வாறு எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பின்பும்தான் இந்திய அரசின் உதவியால் ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தது சிங்கள அரசு. எனவே, இதனால் பயன் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின போக்கு தொடரத்தான் செய்யும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
உறுதியான நடவடிக்கை எடுங்கள்!:
மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கைசென்னை, செப். 18: ""தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க மத்திய அரசு இப்போதாவது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி கேட்டுகொண்டார். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் வாயிலாக, இலங்கை கடற்படையினருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுதொடர்பாக, அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ""ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணிஅணியாக வந்துள்ளனர். இதைக் கண்டு அச்சமுற்ற தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை அவசரம் அவசரமாக கரைக்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசியுள்ளனர். மீனவர்களை துப்பாக்கிக் கட்டையால் தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். காற்றில் பறக்கும் உறுதிமொழி... இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச் சம்பவம் அல்ல இது. இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தமிழக அரசின் தலையீட்டின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு ஏற்படும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும், இலங்கை கடற்படையினருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இப்பொழுதெல்லாம் கலைஞர் என்ன சொன்னாலும் அதற்கு வேறு உட்பொருள் இருப்பதாகக் கருதப்படும் நிலையே உள்ளது. உறுதியான நடவடிக்கை என்பது மேலும் திமுகவிற்கு அஃதாவது தன் மகளுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு உறுதியான நடவடிக்கை எடுங்கள் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார். பதவி கிடைத்ததும் வாளா விருந்து விடுவார் என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் செய்த நலத் திட்டங்களில் நம்பிக்கை இருந்ததென்றால் உடனே மத்திய அரசிற்கு எதிரான கடுமையான போக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மத்திய அரசின் போக்கில் மாற்றம் நிகழும். இல்லாதவரை எப்பயனும் இல்லை. மீனவர்களுக்குச் சார்பாகத் தான் எடுத்த நடவடிக்கை எனக் கலைஞர் புள்ளி விவரம் தருவதற்கு மட்டுமே இந்த மடல் அல்லது அறிக்கை உதவும். பாவப்பட்ட தமிழர்கள். இந்திய நாட்டில் இருந்தும் இந்தியக் குடிமக்களாகக் கருதா மத்திய அரசு. குடும்பநலம் கருதி எதையும் பொருட்படுத்தாத ஆட்சித் தலைமை. இதன் விளைவு நாளை என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கவலையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 3:09:00 AM

TALAIVAR AVARKALE...NAMADHU MEENAVA SAMUDHAYAM PADUM ALLALKALAIYUM DHUYARANKALAIYUM KALAIYA ,,KADUMAIYANA NADAVADIKKAI EDUTHU,,,SINGALA DHROHIKALUKKU SARIYA PADAM PUKATTA VENDUM....PALLUKKU PAL...SOLLUKKU SOL....ENTRA VAKAIL PADHILADI KODUTHU NAM TAMIZH MEENAVA SAMUTHAYAM MUNNERA UDHAVA VENDUM....MELUM SINGALARKALIN VAALINAI OTTA NARUKKA VENDUM....BY TANJAI R..RAJESHKANNAN.....DUBAILIRUNDU......

By RAJESH PARIMALA..RAM
9/19/2009 12:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
"முதல்வர் மீது உலகத் தமிழர்கள் அதிருப்தி': பழ.நெடுமாறன்மதுரை, செப். 18 : ஈழத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடுவாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். "இலங்கையில் தமிழின அழிப்பு' என்னும் தலைப்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் பேசியது: 6.5 கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் ஈழத் தமிழர்கள் துயருற்று வருகின்றனர். 3.50 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் உணவு, மருந்து, சுகாதார வசதியின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உதவிட முடியாத நிலையில் நாம் உள்ளோம். இது வேதனைக்குரியது. இத்தகைய கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்படவில்லை. ஹிட்லர் ஆட்சியில்கூட முகாம்களில் யூதர்களுக்கு இதுபோன்ற கொடுமை நிகழ்த்தப்படவில்லை. ஹிட்லரைவிட மிகவும் கொடியவராக ராஜபட்ச உள்ளார். இந்திய அரசு மூலம் ரூ.500 கோடி நிதியுதவி, மாநில அரசு மூலம் ரூ.25 கோடிக்கான உதவிப் பொருள்களை இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது வழங்கப்பட்டது பற்றி அறிக்கை வேண்டும் என கருணாநிதி கேட்கிறார். ஏற்கெனவே நிவாரண உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. ஆணையம் மூலம் அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கூறினோம். மேலும், அங்கு உரிய முறையில் பொருள்கள் வழங்கப்படுகிறா என்பதை அறிய ஆன்மிகத் தலைவர்கள் அடங்கிய குழுவை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று சொன்னோம் அதற்கெல்லாம் முதல்வர் செவிசாய்க்கவில்லையே ஏன்? இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம். ஈழத் தமிழருக்கு ஆதரவாக நாம் வீதியில் இறங்கிப் போராடவும் தயங்கக் கூடாது என்றார்.

கருத்துக்கள்

நூற்றுக்கு நூறு உண்மை. இதனைக் கலைஞரும் நன்கு அறிவார். எனினும் தேர்தலில் வெற்றி பெறும் கலையும் மத்திய அரசை ஒத்துப் போகும் அடிமைத்தனமும் நன்கு அறிந்து பயன்படுத்தி வருவதால் இதைப்பற்றிய கவலை அவருக்கு இல்லை. அவர் இதுவரை செய்து வந்த அரும்பணிகள் யாவும் பயனற்றுப் போகும் வண்ணம் வரலாற்றில் பெரும் கறை அவர் மீது படிந்த பின்னும் அவர் கவலைப்படாமல் இருப்பதால் இது குறித்துப் பேசிப் பயனில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தலையங்கம்: இலங்கையின் சதிவலை!கடந்த புதன்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கிளம்பிய 543 மீன்பிடிக்கும் விசைப் படகுகளில் 538-தான் வியாழனன்று ராமேஸ்வரம் திரும்பி இருக்கிறது. ஐந்து படகுகளை இலங்கையில் கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததுடன் நில்லாமல் அதிலிருந்த மீனவர்களையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களைத் தாக்குவதும், தங்களது எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறிக் கைது செய்வதும் இலங்கைக் கடற்படையினருக்குப் புதிய விஷயமொன்றும் அல்ல. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் நான்கு பேர் மட்டுமே மன்னாரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளனர். ஏனைய 17 பேரின் கதி என்ன என்பது ராஜபட்ச அரசுக்குத்தான் வெளிச்சம். இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து மீன்பிடிப்பதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதிதான் மீண்டும் கடலுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களது 22 நாள் போராட்டம் இலங்கை அரசு தந்த உறுதிமொழியைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் முடிவுக்கு வந்தது. நான்கே நாள்களில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. தூத்துக்குடி பகுதிகளில் மீனவர்கள் அநேகமாகத் தங்களது தொழிலை நிரந்தரமாக விட்டுவிட்ட நிலைமை. ராமேஸ்வரத்திலோ, நித்திய கண்டம் பூரண ஆயுசாகக் கடலுக்குள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இந்த மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும், இவர்களைப் பிடித்து வைப்பதும் விடுதலைப்புலிகள்தான் என்று குற்றம்சாட்டித் தப்பித்து வந்தது இலங்கை அரசு. தங்கள்மீது பழி போடுவதற்காக மீனவர்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்த நிகழ்வுகள் ஏராளம், ஏராளம். போதாக்குறைக்கு, இந்திய அரசும் இந்த அப்பாவி மீனவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி செய்கிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருள்களைக் கடத்திச் சென்று கொடுக்கிறார்கள் என்றும் சந்தேகப்பட்டது. இப்போதுதான், இலங்கையில் அமைதி ஏற்பட்டு விட்டது என்று பெருமை பாராட்டிக் கொள்கிறார்களே... விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று எக்காளமிடுகிறார்களே... அப்படியானால், இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? வேண்டுமென்றே இம்சிக்கப்படுகிறார்கள்? ""மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணிஅணியாக வந்துள்ளனர். இதைக் கண்டு அச்சமுற்ற தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை அவசர அவசரமாகக் கரைக்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசியுள்ளனர். மீனவர்களைத் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச் சம்பவம் அல்ல இது. இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன~இது தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பு. அதாவது, அரசே ஒத்துக்கொண்டிருக்கும் விஷயம். தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இந்தியக் கடற்கரை ஓரமாக மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலைமை. ஆழ்கடலில் நள்ளிரவில், இது எங்கள் எல்லைக்கு உள்பட்டது என்று இலங்கைக் கடற்படை கூறும்போது அப்பாவி மீனவர்கள் என்னதான் செய்ய முடியும்? கச்சத்தீவில் வலைகளை உலர்த்தும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருக்குமானால், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும் உண்டு என்பதுதானே பொருள்? இலங்கைக் கடற்படையின் உண்மையான நோக்கம் மீனவர்களைத் தாக்குவது அல்ல. இந்த மீனவர்களைத் தாக்கும்போது, தமிழகம் கோபத்தில் கொந்தளிக்க வேண்டும். அப்போது மத்திய அரசு, அண்டை நாடான இலங்கையைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டும் காணாமலும் இருந்து தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். இதில் இலங்கை அரசுக்கு ஒரு குரூர சந்தோஷம். "உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதை நிறுத்திவிட்டு, கச்சத்தீவை மீட்டெடுக்க, நமது மீனவர்களின் உரிமையை நிலைநிறுத்த, எல்லாவற்றிற்கும் மேலாக, இந்து மகா சமுத்திரப் பகுதிகளில் இந்தியாவின் மேலாண்மையை நிலைநாட்டக் குரல் எழுப்ப வேண்டிய நேரமல்லவா இது? இது மீன்பிடிப்பதற்குப் போடப்படும் தடை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசால் வீசப்படும் சதி வலை!

கருத்துக்கள்

தமிழர்க்கு எதிராகவும் சிங்களத்திற்குச் சார்பாகவும் இந்திய அரசுப் போக்கு இருக்கும் வரையும் மத்திய அரசின்அடிமையாகத் தமிழகம் இருக்கும் வரையும் இந்நிலை தொடரத்தான் செய்யும். அவ்வப்பொழுது கண்டனம் தெரிவிப்பதால் பயன் இல்லை. அதன் உண்மையான பொருள் என்ன என்று சிங்களத்திற்கும் தெரியும். மாநிலத் தன்னாட்சி கேட்கும் திமுக அரசு, இந்தியப் படை நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகக் காவல் துறை மூலம் தமிழக அரசே நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கட்டும்; நிலைமை மாறும். எனவே, தங்களின் உண்மை நிலைப்பாட்டின் எதிரொலியான ஆசிரியவுரையால் பயன் இல்லை. வேத‌னையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 2:47:00 AM

முகவை பொறுத்தவரை அவருடைய குடும்பத்தினர் மட்டும் தான் தமிழர்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு குறை வரும்பொழுது மட்டுமே அவர் தனது பதவியை உபயோகிப்பார். மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லை. தினமணியின் தலையங்கம் செவிடன் காதில் ஊதிய சங்கு.

By GANESSIN
9/19/2009 12:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *