வெள்ளி, 26 ஏப்ரல், 2019

தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்

அகரமுதல


வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30.

முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62

 தலைமை:  த.மணிசேரன்

பங்கேற்பு:

தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர்

 முழக்கம் எழுப்பல்  – தமிழ்நேயன்

சிறப்புரைகள்:
பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன்
வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன்
பெரியாரும் திருக்குறளும் – வாலாசா  வல்லவன்
பரிமேலழகர் முதல் நாகசாமி வரை
 – இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி 

இலக்கியச் சிந்தனை 586 + குவிகம் இலக்கிய வாசல் 49

அகரமுதல

சித்திரை 14, 2050 சனி  27.04.2019 மாலை 6.15

 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

மேடை தரும் உற்சாகம்:

நடிகர்,எழுத்தாளர், பேச்சாளர் தொலைக்காட்சித் தொடர் ஆசிரியர், தொகுப்புரைஞர், கவிஞர்

சி.வி.சந்திர சேகரன்

வியாழன், 25 ஏப்ரல், 2019

மடிப்பாக்கத்தில் புத்தகக் காட்சி

அகரமுதல

சென்னை மடிப்பாக்கத்தில்   புத்தகக் காட்சி

சென்னை மடிப்பாக்கத்தில்  வைகாசி 07, 2050 சனி 20.04.2019 அன்று மாலை 5.00 மணியளவில் கணேசு மகால் மண்டபத்தில் புத்தகக்காட்சி தொடங்கியது. உலகப்புத்தக நாளை முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் இதன் தொடக்க விழாவில் இதன் நிறுவனர் எழுத்தாளர் வீரபாலன் வரவேற்புரையாற்றினார்.
திரைப்பட நடிகர் அருள்மணி புத்தகக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் இராசி அழகப்பன் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
எழுத்தாளர் பசுமைக்குமார், இதழாளர் சுந்தர புத்தன், நடிகர் எழுத்தாளர் கணேசு பரபு ஆகியோர் தொடக்கத்தில் புத்தகங்கள் வாங்கினர்.
29.04.2019 வரை நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 வரை புத்தகக்காட்சி நடைபெறும்.
மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, கீழ்க்கட்டளை, மேடவாக்கம், இவற்றின் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இதன் அமைப்பாளர் இரஃபீக்கு அகமது வேண்டுகிறார்.
படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.

ஒளவை தி.க.சண்முகம் 107ஆவது பிறந்த நாள் விழா

வைகாசி 13, 2050 வெள்ளி 26.04.2019

மாலை 5.30

உருசியப் பண்பாட்டு மைய அரங்கம், கத்தூரிரங்கன் சாலை, சென்னை 600 018

சங்கரதாசு சுவாமிகள் நினைவு  மன்றம்