வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பேச்சு மூலம் பிரச்னைக்குத் தீர்வு: தமிழர்களுக்கு ராஜபட்ச அழைப்பு



கொழும்பு,​​ பிப்.​ 4: பேச்சு மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமென்று தமிழர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.வேறுபாடுகளை மறந்து தமிழர்கள் இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.கண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 62 வது ஆண்டு சுதந்திர தின விழாவில் அவர் மேலும் பேசியது:​ விடுதலைப் புலிகளை இன்னமும் ஆதரிக்கும் தீயசக்திகளுடன் தமிழர்கள் சேர்ந்து விடக் கூடாது.​ உள்ளூரிலும்,​​ வெளிநாடுகளிலும் செயல்படும் பிரிவினைவாத சக்திகள் இலங்கை மக்களையும்,​​ அவர்கள் தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றையும் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது.நம்நாட்டில் உள்ள பிரச்னைகளை அரசியல் பேச்சுகள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.​ இதற்காக தமிழர்களோ மற்ற சமூகத்தினரோ வெளி நபர்களை அணுகத் தேவையில்லை.​ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவன் மூலம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க முடியும்.​ இலங்கை மக்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் சமமான வகையில் கிடைக்கும்.​ இதுதான் சமதர்மம்,​​ சமஉரிமை;​ இது எப்போதும் உறுதிபடுத்தப்படும்.​ நமது நாட்டில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை வளமானதாக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது.​ நமது மண்ணில் இனவாதத்துக்கோ,​​ பிரிவினைவாதத்துக்கோ,​​ பயங்கரவாதத்துக்கோ இடமில்லை.​ நமது நாட்டில் சிறுபான்மையின மக்கள் என்று யாரும் இல்லை.​ சில அரசியல் வாதிகள் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.​ கடந்த 30 ஆண்டுகளாக எனது மக்கள் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்தார்கள்.​ இப்போது அவர்களின் காலம் முடிந்து விட்டது.​ இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் நினைவு கூற வேண்டும்.​ நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே இப்போதுள்ள மிகப்பெரிய பணி என்றார் ராஜபட்ச.நமக்கிடையே உள்ள பிரச்னைகள் நாமே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவர் தமிழில் பேசினார்.​ ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
கருத்துக்கள்

சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்துவதையே அமைதி எனக் கூறிக் கொண்டு அரச பயங்கரவாதத்தையே தொழிலாகக் கொண்டு பன்னாட்டு நிதி உதவிக்காகப் பசப்பிக் கொண்டு இந்திய சீனத் துணையுடன் உலகை ஏமாற்றும் சிங்களம் உண்மையிலேயே தன் நாட்டு மக்கள் மீது பற்றுக் கொண்டு இருந்தால் அவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற - ஈழப் போரில் தேவையற்று உயிர் இழக்கவும் உறுப்புகள் இழக்கவும் செய்த சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க, இலங்கை மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் என்பதை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்க வேண்டும். தனித்தனி உரிமையுடைய தமிழ் ஈழ இலங்கைக் கூட்டு ஒன்றியத்தை அமைக்க வேண்டும்.பிற வெல்லாம் வழக்கம் போல நிகழ்த்தும் ஏமாற்றுக் கண்துடைப்பு வேலைகளே. மேலும் இவ்வாறு அறிவிப்பதற்கு யாரையும் பேச வாருங்கள் என்று அழைக்க வேண்டிய தேவையில்லை. இன்னும் ஏழாண்டு ஆளப் போவதாக நம்பியுள்ள் பக்சேவே அறிவித்தால் போதுமானது.

வெல்கதமிழ் ஈழம்! வளர்க ஈழ உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/5/2010 3:08:00 AM

இந்தியர்களின் ஊடுருவல்களையும், சிங்களத்திற்கு எதிராகத் தமிழர்களைத்; தூண்டி விடுவதையும் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தமிழர்களுடன் விட்டுக் கொடுப்புடனும் சம அந்தஸ்து, சம உரிமை சகோதரத்தும் என்ற பதங்களுக்கு விடைகாணுமாயின் இலங்கையில் இனிமேல் பிரச்சனை என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாது போகும். இது இலங்கை அரசின் கைகளிலே தங்கியுள்ளது. தமிழர்களையும் அவர்களது திறமைகளையும் மதித்து இலங்கை அரசு கைகோர்ர்து செல்லுமானால் இலங்கை அமைதியையும் சுபீட்;சத்தையும் விரைவில் காணலாம். அந்நிய ஊடுருவல்களுக்கும் இவர்களது அபிலாசைகளையும் புறந்தள்ளி தனிப்பட்ட இலங்கை என்ற ரீதியில் சிங்களவரையும், தமிழரையும் ஒன்றிணைத்து செல்லக்கூடிய வலு ராஜபக்ஷவிற்கு இருக்கின்றது. இதை இவர் துஷ்பிரயோகம் செய்தால் அந்நியர் மண்ணில் கால்பதிக்கும் நிலை ஏற்படும். அந்நிலைக்கு புறம் தய்ய சர்வதேசம் முயன்று கொண்டிருக்கின்றது. இதை முறியடிக்க தமிழர்களின் பிரச்சனைக்கு நியாயமான நீதியான தீர்வு அவசியம்

By Loges
2/5/2010 2:42:00 AM

Opportunity beacons for Tamils. They should use this opportunity to get equal rights and live in peace. Hope cool heads prevails.

By Truth
2/5/2010 1:19:00 AM

VERY GOOD SPEECH!WELL SAID!!COTINUE,NO BODY REMEMBER LAST YEAR GENOCIDE!!!!

By Yoga,France
2/5/2010 1:17:00 AM

First you speek with Hela Urumaya,JVP,and Budist monks,and tell ahat you are giving.u tha one told you canot do any things against the mayoraties Sinhala people.Now if you are talking something.First show your plan and as u said let the Mayoratis agreed.Dont cheat INDIA.

By Srilanka Ravi
2/5/2010 1:12:00 AM

TAMILS THEY DO NOT WANTS TO ANY ASSOCATION WITH F SINGLESS YOU TAKE YOUR SHIT PEOPLE LEAVE TAMILS ALONE AND GET THE F OUT SOON FROM EAST NORTH AND KANDY

By ddddddd
2/5/2010 1:07:00 AM

F BAST GET THE OUT FROM EAST NORTH AND KANDY WHAT THE F SINGLESS

By dddddd
2/5/2010 12:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

dinamalar seydhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக