சனி, 8 ஜனவரி, 2011

Abdulkalam about thirukkural: வாழ்க்கையின் வழிகாட்டியாக திருக்குறள்: அப்துல் கலாம்

இராமேஸசுவரம் : ""எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
ராமேஸ்வரம் மண்டபம் ஒன்றியம் எண் 1 நடுநிலைப்பள்ளி வந்த அவர், நூலகம், அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் அறைகளை திறந்து வைத்து பேசியதாவது:எனது மனதில் மகிழ்ச்சியான உணர்வு, பூரிப்பை ஏற்படுத்தும் இடம் ராமேஸ்வரம். இப்பள்ளியில் 1937ல் சேர்ந்து, ஆரம்பக் கல்வி முதல் எட்டாவது வரை படித்தேன். உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது. எனது ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்.

வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும். கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேல் மாணவர்களை சந்தித்துள்ளேன். நாட்டை வளமான வல்லரசாக உருவாக்க வலியுறுத்தி, மாணவர்களிடம் பேசியுள்ளேன்.அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு, ஆற்றலை பயன்படுத்தி, 2020க்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். மனதில் உறுதி இருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

C.M. about azhagiri resignation letter: அழகிரி விலகல் கடிதம் அளிக்கவில்லை: முதல்வர்

௧. மறுப்பதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டதால் அதுவரை ஏதோ நடந்துள்ளது என்றுதான் மக்கள் கருதுவார்கள். ௨. ஆ.இராசாவை  எதிர்ப்பதன் மூலம் ஊழலுக்கு எதிரானவர் என்ற முகம் கிடைத்து அப்பெயர் கட்சிக்கு உதவலாம். ௩. ஆனால் அத்தகைய சூழல் வந்தால் எதிர் அணியினர் , இவரது மற்றொரு முகத்தை வெளிப்படுத்துவர். ௪. இதனால் கட்சிக்குத்தான் இழுக்கு. ௫. எனவே, குடும்பச் சண்டையைக் கட்சிச் சண்டையாக ஆக்காமல் ஒற்றுமையாக இருந்து சமாளிப்பதுதான் நல்லது. ௬. ஊழலை எதிர்ப்பவர்கள் எல்லாம் குறிப்பிட்ட ஊழலில் பங்கு கிடைக்காத பொழுதும் அவர்களுக்கே மறைத்து ஊழல் புரிந்து பிறர் பயனடைந்த பொழுதும் மட்டுமேபேசுபவரக்ள் என்பது  உண்மையாக உள்ளதால் ஊழலுக்கு எதிரான  அரசியல் வாதிகள் பேச்சு எடுபடாது.  ௭. எனவே, குடுமபச் சண்டையைக் குடும்பத்திற்குள் மட்டும் வைத்துக் கொண்டு கட்சியைக் காப்பாற்றினால் அரசைக் காப்பாற்ற முடியும். ௮. கட்சியைக் குடும்பமாகக் கருதாமல் குடும்பத்தையே கட்சியாக எண்ணும் போக்கும் நிற்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
thingking of bird: dinamalar picture message


dinamani editorial about telungana: பிடிவாதம் சரியல்ல!

தலையங்கத்தின் முடிவு சரியாகத்தான் உள்ளது. ஆனால், மாநில எல்லைகளைக் கூட்ட, குறைக்க, மாற்ற மத்திய அரசிற்கு அதிகாரம் இருக்கும் பொழுது, பெரிய மாநிலங்களை முன்னரே மத்திய அரசு பிரித்திருக்கும் பொழுது இப்பொழுது் பிரித்தால் என்ன என்ற கேள்விதான் மேலோங்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: பிடிவாதம் சரியல்ல!

இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டபோது "இதுவெறும் கண்துடைப்பு' என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் குறை கூறினர். எப்படியும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் காலவரையறை நீட்டிக்கப்படும் என்பதுதான் எல்லாருடைய கருத்தாகவும் இருந்தது. வழக்கமாக அதுபோன்றுதான் எல்லா கமிட்டிகளிலும் நடக்கிறது. குறைந்த காலகட்டத்தில் அனைவருடைய கருத்துகளையும் அறிய முடியவில்லை என்பதால் மேலும் சில மாதங்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அக்குழு விரைவாக தனது பணியை முடித்து, அறிக்கையையும் அளித்துவிட்டது. இதற்காகவும் பாராட்ட வேண்டும்.  ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் ஆறுவிதமான யோசனைகளில் தற்போதுள்ள நிலையே நீடிக்கலாம் என்றும், மாநிலத்தைப் பிரிக்காமல், தெலங்கானா மண்டலக் குழுவை அமைத்து அதற்குப் பல்வேறு அதிகாரங்களையும் நிதியையும் அளிக்கலாம் என்றும் 6 பரிந்துரைகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை, இப்போது எதிர்த்துவரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஏற்றுக்கொள்ளுமானால், ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமலேயே தெலங்கானா மாவட்ட மக்களின் நலன் பேணப்படுவது எளிது.  தெலங்கானா போன்ற சிறு மாநிலங்கள் அமைவதால் என்ன இழப்பு நேர்ந்துவிடும்? சிறு மாநிலங்கள் தங்கள் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்துகின்றனவே என்ற எண்ணம் எழவே செய்கிறது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை அளிக்கும் முன்பாகவே, பிரதமர் இது தொடர்பாக முக்கிய அமைச்சர்களை அழைத்து சிறுமாநிலங்கள் அமைப்பது குறித்து பேச்சு நடத்தியபோது, நிச்சயமாக தெலங்கானா உருவாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆயினும், தனிமாநிலம் உருவாக்கப்படும்போது ஆந்திரம் ஒட்டுமொத்தமாகவும், குறிப்பாக தெலங்கானாவும் இழக்க நேரிடுகிற, சந்திக்க வேண்டிய இழப்புகள், பிரச்னைகள் குறித்து கிருஷ்ணா கமிட்டி அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதையும் பார்க்கும்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் கொஞ்சம் நிதானம் கொண்டுவிட்டது.  மத்திய அரசின் நிதானம் புரிந்தவுடன், ஜனவரி 6-ம் தேதிதான் அறிக்கையின் பரிந்துரைகள் பொதுமக்களுக்கு வெளியாகும் என்றும், அதற்கு முன்னதாக ஆந்திரத்தின் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்தும்கூட, ஜனவரி 5-ம் தேதியே பேருந்துகள் கொளுத்தப்பட்டன. டி.ஆர்.எஸ் கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அரசின் தயக்கம் எதுவாக இருந்தாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் நியாயத்தை வலியுறுத்தியிருக்க வேண்டும். இவர்கள் அதைச் செய்யாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்பது மட்டுமல்ல, இவர்கள் அரசியல் முதிர்ச்சி அற்றவர்கள் என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது.  கமிட்டியின் பரிந்துரைப்படி தெலங்கானா மண்டலக் குழுவுக்கு மிக விரிவான அதிகாரம் வழங்குவதுடன், அந்த அதிகாரத்தைக் கொண்டு அக்குழு தெலங்கானா பகுதிகள் அனைத்தையும் மேம்படுத்துவதற்கான நிதியையும் தனியே ஒதுக்க முடியும்.  இது ஏறக்குறைய, பிரிட்டிஷ் அரசின் கீழ் ஜில்லா பரிஷத் என்ற அமைப்பு முன்பு செயல்பட்டதைப்போலவே இருக்கும் எனலாம். இந்தக் குழு தெலங்கானாவுக்கு உள்பட்ட மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் என எல்லாரும் பங்கு பெறும் குழுவாகத்தான் அமையும். தெலங்கானா முதல்வர், அமைச்சர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாதே தவிர, இந்த மண்டலக் குழுவுக்கும் தனியான கூட்டஅரங்கு, தலைவர், துணைத்தலைவர் பதவிகள் அதிகார வரம்புகள் எல்லாமும் இருக்கும். அதிகாரங்களைச் செலுத்துவதிலும் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தங்கள் விருப்பம்போல செயல்பட முடியும்.  சீமை ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாவட்டத்தைப் பிரித்து இரண்டு தலைநகரம் உருவாக்குவதோ அல்லது ஹைதராபாத் நகருடன் சில பகுதிகளைச் சேர்த்து யூனியன் பிரதேசமாக மாற்றுவதோ, ஆந்திர மக்களுக்குப் பயனுள்ளதாக அமையுமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது.  ஹைதராபாத் நகரை எங்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் சீமை ஆந்திரம் மற்றும் தெலங்கானா இருவரும் போட்டியிடுவார்கள். பஞ்சாபும் ஹரியாணாவும் சண்டீகரைத் தலைநகராக ஏற்றுக்கொண்டதுபோல இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை பரவும். ஆந்திர மக்களின் பொதுவாழ்க்கைக்குக் குந்தகமாக அமையும்.  இப்போது ஹைதராபாத் மாநகரம், கணினி தொழில்நுட்ப மையமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு, எந்த மாநிலத்தின் தலைநகராக மாற்றப்பட்டாலும், இந்தத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்தத் தொழில்கள் பெங்களூர் அல்லது சென்னைக்கு இடம்பெயரும் வாய்ப்புகளே அதிகம். இதனால் தொழில் வாய்ப்பு மற்றும் இழப்புகளைச் சந்திக்கப்போவதும் ஆந்திர மக்கள்தான். ஹைதராபாதை யூனியன் பிரதேசமாக அறிவிப்பதை இருதரப்புமே ஏற்றுக்கொள்ளத் தயாராகவும் இல்லை.  தெலங்கானா வேண்டும் என்று கேட்போரின் குரல் வன்முறையினால்தான் ஓங்கி ஒலிக்கிறதே தவிர, ஒற்றுமையின் பலத்தினால் அல்ல. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 119 தொகுதிகள்தான் தெலங்கானா பகுதிக்குள் இடம்பெறுகின்றன. இதில் காங்கிரஸ் 50, தெலுங்கு தேசம் 38 இடங்களைப் பெற்றுள்ளன. இவர்களிடையிலும் தெலங்கானா வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. இதில் தீவிரமான ஆர்வம் காட்டுவோர் 10 பேரவை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதி மட்டுமே!.  அரசியல் ரீதியாகத் தனது பலத்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி நிரூபித்த பின்னர், தனி மாநிலம் கேட்கவும், தற்போதைக்கு தனிமாநிலத்துக்கு இணையான அதிகாரம், நிதி ஒதுக்கீடு பெறும் மண்டலக் குழுவை ஏற்று, அதையும் சோதனையடிப்படையில் முயன்று பார்ப்பதே நல்ல முடிவாக இருக்கும்.

T.N.govt. ignores thamizh dramas : தமிழ் நாடகங்களைப் புறக்கணிக்கிறது தமிழக அரசு: ஆறு. அழகப்பன் குற்றச்சாட்டு

இயல் இசை நாடக மன்றம் என்னும்  ஓர் அமைப்பு மட்டும் செயல்படுவதால் தவறுகள் பல நேர்கின்றன.  இயல் மன்றம், இசை மன்றம், நாடக மன்றம், நாட்டிய மன்றம், நாட்டுப்புறக் கலை மன்றம் என ௫ மன்றங்கள் ஆக மாற்றப்பட வேண்டும். திரைப்படத்தைத்தனியார் பார்த்துக் கொள்வாரக்ள். அது குறிததுக் கவலைப்பட வேண்டா. தேசிய நாடகப் ப்ளளியின் விழாவின் பொழுது பிற மாநில நாடகங்கள் மட்மே நடத்தப்பட வேண்டும் என்பது விதியாம். அப்படியானால்  இதற்கிணங்க எத்தனை  மாநிலங்களில் எத்தனைத் தமிழ் நாடகங்கள் நடத்தப் பட்டன என்ற விவரத்தை அரசு தெரிவிக்க வேண்டும். அறிஞர்அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு அவர் நாடகங்களைத்   தஞ்சாவூரில் நடத்த முயன்றபொழுது இயலாமல் போனதையும்  நினைவு கூர்கிறேன். சரியான கவலையை  அரசின் பாராட்டுதல்கள் பெற்ற ஆறு. அழகப்பன் தெரிவித்துள்ளார். உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ் நாடகங்களை புறக்கணிக்கிறது தமிழக அரசு: 
ஆறு. அழகப்பன் குற்றச்சாட்டு


சென்னை, ஜன. 7: தமிழக அரசு தமிழ் நாடகங்களை புறக்கணிக்கிறது என்று தமிழ்ச் சுரங்கத்தின் தலைவர் ஆறு. அழகப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் நாடகங்களை முற்றிலும் கண்டு கொள்ளவில்லை. 5 நாள் நடைபெற்ற உலச் செம்மொழி மாநாட்டில் தமிழ் நாடகங்கள் நடத்த நேரமில்லை என்று தமிழக அரசு புறக்கணித்தது.  இயல், இசை, நாடகமன்றம், கலை பண்பாட்டுத்துறை முதலிய அரசு சார்ந்த நிறுவனங்கள், கண்காட்சி, சுற்றுலா நிகழ்ச்சிகளிலும் சான்றோர் விழாக்களிலும், சென்னை சங்கம விழாக்களிலும் ஒரு நாடகம் கூட நடத்திட அரசு உதவவில்லை.  தமிழரசன் தியேட்டர் நடத்திவரும் திருவள்ளுவர் நாடகம் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது நடத்தப்பட்டது. இதே போல் சென்னையில் உள்ள 15 சபாக்கள், திருச்சி, தஞ்சாவூர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இப்போது இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.  ஆனால் திருவள்ளுவர் நாளன்று, திருவள்ளுவர் நாடகத்தை நடத்த கடந்த 3 ஆண்டுகளாக முயன்றும், நாடகத்தை அரங்கேற்றாமல் அரசு தள்ளுபடி செய்து வருகிறது.  புதுதில்லியில் இயங்கும் தேசிய நாடகப் பள்ளியும், தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத் துறையும் இணைந்து சர்வதேச நாடக விழாவை வரும் 11-ம் தேதி சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இங்குள்ள மரபு வழி நாடகக் குழுவினருக்கு ஒரு நாடகம் கூட நடத்த வாய்ப்பு அளிக்கவில்லை. திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரே இயல், இசை, நாடக மன்றத்துக்கும் தலைவராக இருப்பதால் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றப்படாமல் அழிகின்றன என்ற கருத்து நிலவுகிறது.  வரும் திருவள்ளுவர் நாளன்று வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கை திருவள்ளுவர் நாடகம் நடத்த ஒரு நாள் இலவசமாக அளிக்க வேண்டும். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிப்போன திருவள்ளுவர் நாடகத்தை நடத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்' என்று அந்த செய்திக்குறிப்பில் ஆறு. அழகப்பன் தெரிவித்துள்ளார்.T.N.government concerned about Eezham tamils: இலங்கைத் தமிழரின் நிலை: தமிழக அரசு கவலை

தாய்நாட்டு விடுதலைக்காகப் போரிடுபவர்களை அழித்து விட்டாலும் தலைவர்களைச் சிறை செய்து விட்டாலும்  அமைதி திரும்பும் என்ற நோக்கில் கூட்டுப்படு கொலைகளுக்கு உடன்பட்டு விட்டு இப்பொழுது நீலிக்கண்ணீர் விடுவதால் என்ன பயன்? தமிழ் நாட்டு மீனவர்களைக்கூடக் காப்பாற்ற வழியின்றிக் கவலைதான்  தெரிவிக்க முடிகின்றது என்றால் அதற்கொரு அரசு தேவைதானா? என்றுதான் மக்கள் உள்ளங்களில் எழுகின்றது .எனவே.  தேர்தல் நோக்கில் பார்க்காமல் மடல்கள் அனுப்பாமல் முதலைக்கண்ணீர் விடாமல் மிக மிக மிகக் குறுகியக்காலக் கெடு வைத்து அனைத்துச் சிக்கல்களையும் தீர்கக வேண்டும். இல்லையேல்அமைதி காத்தால் போதுமானது. 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இலங்கைத் தமிழரின் நிலை: தமிழக அரசு கவலை

சென்னை, ஜன.7: இலங்கையில் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அரசியல் தீர்வுக்கு ஆரம்பகட்ட முயற்சிகள்கூட மேற்கொள்ளாமல் இருப்பதும் கவலையளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பர்னாலா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை: சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் இருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல், தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருக்கிறது.  இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பகட்ட முயற்சிகள் கூட இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது தமிழக அரசுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது.  தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் துயரைப் போக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

stay order to the G.O. of employment preference to tamil medium: தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத முன்னுரிமை: அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அரசாணை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ௨௦ % தருவதன் மூலம ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ௮௦ % தரும் தவறான ஆணை. இந்த ஆணையைக் கூடத் தடை பெறாத வகையில் பிறப்பிக்க அதிகாரிகள் தவறி விட்டார்கள். நீதிபதியும் தடை விதிக்காமல் வழக்கினை மட்டும் நடத்த இசைவளித்திருக்கலாம்.  உடனே அரசு தலையிட்டுத் தடையை நீக்க வேண்டும். தமிழ் அமைப்புகளும் தங்களை இணைத்துக்  கொண்டு வாதாடி வெற்றி பெறலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத முன்னுரிமை: அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை


சென்னை, ஜன. 7: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கும் அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஆர். விஜயலட்சுமி என்பவர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடுத்திருந்தார்.  அதில் அவர் கூறியிருந்தது: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த 30.9.10-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை சட்ட விரோதமானது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்றவற்றில் ஆங்கில மொழியே பயிற்று மொழியாக உள்ளன. தவிர, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன.  இந்த நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதென்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 14, 16 ஆகியவற்றுக்கு எதிரானது.  அரசின் உத்தரவால் ஆங்கில வழியில் படித்த பலர் பாதிக்கப்படுவார்கள். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி முன்பு கடந்த டிசம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைத்திருந்தார்.  அந்த வழக்கு இப்போது நீதிபதி வினோத் கே. சர்மா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

not included the name of tamil maruthuvam: மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: தமிழக அரசு அறிவிப்பு


இந்தியா என்ற பெயரில் தமிழ் பல இடங்களில் அழிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவம் என்று சொல்லாமல் இந்திய மருத்துவம் என்று சொல்வது தவறு. பல்கலைக்கழகத்தின் பெயரில் தமிழ் மருத்துவம் என்பது இடம் பெற வேண்டும் அதுபோல் மத்திய அரசின் விளம்பரங்களில் மாற்று மருத்துவமாக ஓமியோபதி மட்டுமே குறிக்கப்படுகின்றது. தமிழ் மருத்துவத்தையும் குறிப்பிடச் செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
தமிழகம்
மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: தமிழக அரசு அறிவிப்பு


13-வது சட்டப் பேரவையின் 15-வது கூட்டத் தொடரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து உரையாற்றும் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.
சென்னை, ஜன. 7: கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  13-வது சட்டப்பேரவையின் 15-வது கூட்டத் தொடரை ஆளுநர் பர்னாலா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். முன்னதாக, அதிமுக, மதிமுக, இடதுசாரிக் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  "மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி' என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.  இதன்மூலம், தகுதியுடைய மருத்துவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.  இந்திய மருத்துவ,  ஹோமியோபதி பல்கலைக்கழகம்  சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவக் கல்லூரிகளை அரசே நடத்தி வருகிறது. பாரம்பரியம்மிக்க இந்திய மருத்துவத்தையும், ஹோமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க, இப்போதுள்ள 6 அரசு இந்திய மருத்துவ, ஹோமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி இந்திய மருத்துவ, ஹோமியோபதி பல்கலைக்கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும் என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.  புதிய கல்லூரிகள்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தருமபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 5 இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் புதிதாக விவசாயக் கல்லூரி தொடங்கப்படும்.  தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்  வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும் தோட்டக்கலைக்காக தனியே, "தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்' கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.  80 ஆயிரம் மாணவர்கள்  முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தொழிற்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 80,450 மாணவர்கள் இந்த ஆண்டு பயன்பெற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிற முக்கியத் திட்டங்கள்  கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.  மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஓசூரில் 1100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 450 கோடியில் சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் கூறினார்.  சென்னையில் அறிவியல் பெருநகரம் அமைக்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக மூலக்கடை-திருமங்கலம், மூலக்கடை-திருவான்மியூர், லஸ்-ஐய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.    ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்:   *  கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.  *  நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் திட்டம்.  அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ரத்து.   *  பஞ்சமி நில மீட்பு குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க முடிவு.   *  நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுத்திட சிறப்புத் திட்டம்.   *  பச்சிளம் குழந்தைகளுக்காக ரூ.10 கோடியில் தீவிர அவசர சிகிச்சைத் திட்டம்   *  கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம்.   *  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஒசூரில் 1,100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டம்.   *  சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நிலத்தடி நீரைச் செறிவூட்ட சிறப்புத் திட்டம்.   *  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த முடிவு.   *  சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ.450 கோடியில் சிறப்புத் திட்டம்.   *  கள்ளக்குறிச்சி, நெம்மேலி, நாகலாபுரம், அரூர், திருச்சுழி ஆகிய இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள்.   *  நாகை மாவட்டம் கீழ்வேளூரில் விவசாயக் கல்லூரி.   *  சென்னையில், மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - ஐயப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை புதிய பாதைகளில் மெட்ரோ ரயில் விடுவது குறித்து திட்ட ஆய்வு.

Top 5 readers views:முதன்மை 5 வாசகர் கருத்துகள்

வெள்ளி, 7 ஜனவரி, 2011

governor address: salient features: ஆளுநர் உரை:முதன்மைச் செய்திகள்

ஆங்கிலேய அடிமை ஆட்சியில் ஆங்கிலேய அரசு சார்பாக ஆளுநர் உரையாற்றியது சரிதான். மக்களாட்சியில் அரசின் அறிக்கையை ஆளுநர் வாசிப்பதை விட முதல்வரே வாசிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஆளுநர் பொதுவாகப் பேசிச் சட்ட மன்றத்தைத் தொடங்கி வைத்தால் போதுமானது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் உரை: முக்கிய அம்சங்கள்

சென்னை, ஜன.7: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் இன்று தொடங்கியது.ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்: அனைத்துத் தரப்பு மக்களும் மனமகிழ்வோடு தமிழ்ப் புத்தாண்டைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று கொண்டாட அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பையை அனைத்துக் குடும்பங்களுக்கும் பரிசாக வழங்கி வருவதைப் பாராட்டுவதுடன், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புகள், கடல் கொண்ட குமரி, பூம்புகார் பற்றிய ஆய்வுகள் செய்வதற்காக எடுக்கப்பட்டுவரும் தொல்லியல் ஆய்வு முயற்சிகள், மதுரையில் நூறு கோடி ரூபாய் நிதியுதவியுடன் விரைவில் தொடங்கப்பட உள்ள “உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை”, சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம், தமிழகத்தின் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில் தாவர, விலங்கியல் உயிர்ப்பன்மை மரபுரிமைச் செறிவைப் பாதுகாக்க ரூ.32 கோடி செலவில் அமையவிருக்கும் மரபணுப் பூங்காக்கள் போன்றவை தமிழரின் பாரம்பரிய அடையாளங்களை நிரந்தரமாகப் பதிவு செய்திட எடுக்கப்பட்ட பெருமுயற்சிகள். இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும்; முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பதும்; நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள்கூட இதுவரை மேற்கொள்ளப் படாமலிருப்பதும்; தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் தமிழக அரசுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.  தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வடகிழக்குப் பருவ மழை அதிக அளவில் பெய்யும்பொழுது சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆகிய உபநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.  இந்த மூன்று ஆறுகளையும் ஓர் இணைப்புக் கால்வாய் மூலம் இணைத்து வறட்சிப் பகுதிகளில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் இந்த ஆறுகள் பாய்ந்தோடும் சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலுள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு வெள்ள நீரைத் திருப்பி விட்டு, இப்பகுதிகளில் நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வகையில் ஒரு சிறப்புத் திட்டத்தைத் தீட்டி நிறைவேற்ற உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் இந்த அரசு அமைத்துள்ளது.  பனை, தென்னை விவசாயிகளின் நலன் கருதி பனை நுங்குச் சாறும்,  தென்னை இளநீரும் பக்குவப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகிற சுவைநீர், காதி கிராமத் தொழிற்சங்கங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.  தமிழ்நாட்டில் வனவளத்தைப் பாதுகாக்க ரூ. 686 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன், “ உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தினை” செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.கிழக்குக் கடற்கரை மற்றும் தென்னகச் சுற்றுலா மையங்களை அழகுபடுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் ரூ. 450 கோடி செலவில் ஒரு சிறப்புச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - ஐயப்பன்தாங்கல் வழியாக பூவிருந்தவல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும்.  காஞ்சிபுரம் மாவட்டம் - ராஜீவ் காந்தி சாலைக்கும், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் இடையில் உள்ள நெம்மேலியிலும்;  தூத்துக்குடி மாவட்டம் - நாகலாபுரத்திலும்; தருமபுரி மாவட்டம் - அரூரிலும்; விழுப்புரம் மாவட்டம் - கள்ளக்குறிச்சியிலும்; விருதுநகர் மாவட்டம் - திருச்சுழியிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படும்.  நாகை மாவட்டத்தில் உள்ள கீவளூரில் இந்த ஆண்டு புதிதாக விவசாயக் கல்லூரி ஒன்று தொடங்கப்படும்.  தோட்டக்கலைக்கெனத் தனியே “தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்” கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டில் தொடங்கப்படும்சென்னையில், அண்ணா பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற 69 க்கும் மேற்பட்ட உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உலகத்தரம் மிக்க “அறிவியல் பெருநகரம்” அமைக்கப்படும்.அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உதவியோடு ஒரு வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான“தீவிர அவசர சிகிச்சைத் திட்டம்” என்னும் புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் ரூ. 10 கோடி செலவில் அறிமுகம் செய்திட அரசு முடிவெடுத்துள்ளது.“மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி” என்னும் நோக்கத்தைத் நிறைவேற்றிடும் வகையில்; அடுத்தபடியாக ராமநாதபுரம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். தற்போதுள்ள ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும், இதுபோன்ற 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஒன்றை அமைக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.   மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட “வழிகாட்டும் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.வறுமை ஒழிப்புத் திட்டத்திலேயே ஒரு புது முயற்சியாக உலக வங்கி நிதி உதவியுடன்  “வாழ்ந்து காட்டுவோம்” என்ற திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 2,509 ஊராட்சிகளில் ரூ.717 கோடி செலவில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டம் மேலும் 10 மாவட்டங்களுக்கு ரூ. 950 கோடி செலவில் இந்த ஆண்டு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.  குடிசைகளே இல்லாத தமிழகத்தைக் காண வேண்டுமென்ற கனவு நனவாக கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகளின் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு தமிழகத்திலே உள்ள 21 லட்சம் குடிசைகளையும் ஆறு ஆண்டு காலத்தில் கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைத்திடத் திட்டமிட்டு அதற்காக அரசின் சார்பில் வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற வேண்டுகோள் எழுந்ததன் காரணமாக அந்தத் தொகையை வீடு ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் என்று அரசு உயர்த்தியது.  75 ஆயிரம் ரூபாயில் தாங்கள் விரும்புவது போல் வீடுகளை கட்டிக்கொள்ள முடியாத நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மேலும் 20 ஆயிரம் ரூபாய் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாகப் பெற்றுக் கொள்ள இந்த அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் அரசின் விருப்புரிமையில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.    இவ்வாறு ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

The party whichever in power has misused the discretionary quota in allotment of house sites and flats .Al most all the houses alltoted under this quota to those who are nearer to the people in power . All polticians who are occupied the sites or houses or flats got those under this quota only.
By A.Arumainathan
1/7/2011 2:30:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ramdoss about governor address: ஆளுநர் உரை மக்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை: இராமதாசு

இதற்குப் பிறகும் பா.ம.க.வைக் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனப் புறக்கணிப்பது சரியல்ல. அதே  நேரம் கொலைகாரக் காங்.கூட்டணியில் சேர எண்ணுவதும் சரியல்ல. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரை: ராமதாஸ்

சென்னை, ஜன.7- ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரையாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆளுநர் என்பவர் குடியரசு தலைவரின் பிரதிநிதி. அந்தப் பதவி மதிக்கப்பட வேண்டும். ஆனால், முக்கிய எதிர்க்கட்சியும் மற்றும் சில கட்சிகளும் ஆளுநரை உரையாற்ற விடாமல் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி அவையில் தர்ணா போராட்டம் நடத்தியிருப்பது ஜனநாயக வரம்பை மீறிய செயல்.ஆளுநர் உரையில் வழக்கமான அறிவிப்புகள் கொஞ்சம் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இது கனவாக முடிந்துவிடாது நனவாக வேண்டும்.நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பை நிரந்தரமாக தடுத்திட வெள்ள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி மாவட்டங்களான சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஏரி, குளங்களுக்கு வெள்ளநீரை திருப்பிவிட ஆறுகள் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க அம்சங்கள்.3 மருத்துவக் கல்லூரிகள், 5 கலை, அறிவியல் கல்லூரிகள், நாகையில் விவசாயக் கல்லூரி, கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம், குமரி மாவட்டத்தில் இந்திய மருத்துவ பல்கலைக்கழகம், சென்னையில் அறிவியல் பெருநகரம் ஆகிய அறிவிப்புகள் நிச்சயம் இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கு உதவும்.பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர அவசர சிகிச்சை திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட விஸ்தரிப்பு, பஞ்சமி நில மீட்பு, வீட்டுவசதி வாரியத்தில் நடைமுறையில் இருந்துவரும் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு ரத்து ஆகிய அறிவிப்புகளும் பொதுமக்களின் வரவேற்பை பெறும்.இவையெல்லாம் மக்களைக் கவரும் கவர்ச்சித் திட்டங்கள். ஆனால், மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கான பெரிய அளவிலான திட்டங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை ஆகியவைப் பற்றி ஆளுநர் உரையில் மேலோட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வுகாண தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த தவறியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.மொத்தத்தில், ஆளுநர் உரை மக்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உரையாகும்.இவ்வாறு ராதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Insult to Abdul kalam? : உணவு தருவதில் காலத்தாழ்ச்சி- அப்துல் கலாமுக்கு அவமதிப்பு?!

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சமையல் கிடையாது. அருகில் உள்ள உணவகங்களில் காலை 7.௦௦ மணிக்கு உணவு ஆயத்தமாக  இராது. இதனை முன்னரே அவரிடம்  தெரிவித்திருக்க வேண்டும். அல்லது தொலைவில் இருந்துவாங்கித் தந்திருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க  மேதகு அப்துல்கலாம் போன்றவர்களை அழைப்பவர்கள் பொறுப்பேற்காவிட்டாலும் வரவேற்பு வட்டாட்சியர் ஓர் உதவியாளரை அவரைக் கவனிக்கும பொறுப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தகைய சிறு நிகழ்வுகளை அவர்  பொருட்படுத்தாவிட்டாலும் மதுரை நிருவாகத்திற்கும் தமிழக அரசிற்கும் அவப் பெயர் என்பதை உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

உணவு தருவதில் தாமதம் - அப்துல் கலாமுக்கு அவமதிப்பு?!

மதுரை: இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு காலை உணவு வழங்குவதில் தாமதம் செய்ததால், அவருடைய பயண நிகழ்ச்சி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமுக்கு, காலை 7 மணிக்கு உணவு தரப்பட வேண்டும் என்று உதவியாளர்கள் நேற்றிரவே சொல்லியிருந்தனர். அதன்படி, இன்று காலை 7 மணிக்கு உணவுண்ணச் சென்றார் அப்துல்கலாம். ஆனால் உணவு தரப்படவில்லை. சிறிதுநேர இடைவெளியில் மூன்று முறை சென்று அமர்ந்திருக்கிறார். ஆனாலும் உணவு பரிமாறப்படவில்லை. சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் 7.50க்கு மேல்தான் காலை உணவு தரபட்டுள்ளது.அதனால் அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. ஒரு மணிநேர தாமதத்துக்குப் பிறகு அவர் ராமேஸ்வரம் புறப்பட்டார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சம்பவம் என்பதால், இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
கருத்துகள்

IT IS VERY INCIDENCE.
By rajasekar
1/7/2011 6:09:00 PM
Will this happen to Italy Dancekari?
By verathiveran
1/7/2011 5:44:00 PM
Karunanidhi has made most of the people in Tamilnadu drunkards ( kudi karankal) and laggards ( soamperikal). Tamilnadu is going into comotose. Within another five years, if this situation continues, Tamilnadu would be almost dead.
By annakan
1/7/2011 5:43:00 PM
டாக்டர் அப்துல் கலாம் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம்! கருணாநிதியின் கேவலமான ஆட்சியில் இந்த மாபெரும் மனிதருக்கு கூட மரியாதை கிடைக்கபெராது!
By ஸ்ரீனி ம
1/7/2011 5:40:00 PM
இதே ஒரு தி.மு.க எம்.எல்.எ க்கு ஏற்பட்டு இருந்தால் நடப்பதே வேறு.என்ன செய்வது இவர் வெறும் முன்னாள் ஜனாதிபதி மட்டுமே..
By கண்ணன்
1/7/2011 5:05:00 PM
இதுவே கருணாநிதி தங்குவதாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
By Senthilkumar
1/7/2011 4:30:00 PM
இந்திய அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அரசாங்க- இராணுவ குழுவையும்,பாகிஸ்தான் அணுஆயுதந்க்களை கட்டுப்படுத்தும் குழுவையும்( எஸ். சி.டி),அமெரிக்க - ஐரோப்பிய(ஜெர்மானிய) சக்திகளும்,அமெரிக்க- இஸ்ரேலிய- சீன,சக்திகளும் கட்டுப்படுத்த முயல்கின்றன!.திரு.அப்துல்கலாம் அவர்கள் இதுநாள் வரை ஒரு "இந்தியராகவே" செயல்பட்டுவந்தார்,பல எதிர்ப்புகளை சந்தித்து.ஆனால் நேரு -கேபி எஸ் மேனன் - எம் கே நாராயணன் - தினமலர்?,ஆகியோரின் பாதுகாப்பு கொள்கைகள் "சோவியத் சிந்தனையில்(ஊழல்)" ஊறியவை.கலாச்சாரத்தையும்,வரலாற்றையும் மறந்து பணத்தின் பின்னால் திரிந்தால் ஆப்கானிஸ்தான் நிலையே (பனானா ரிபப்ளிக்(ரத்தன் டாட்டா கூறியபடி)),இந்தியாவிலும் ஏற்படும்!.
By மோகன்
1/7/2011 3:44:00 PM
இதே மாதிரி அழகிரிக்கு நடந்திருக்குமா? அப்துல் கலாம் நல்லவர் என்பதால் பெரிது பண்ணாமல் விட்டுவிட்டார். இனியும் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக்கொண்டால் நல்லது.
By ரமேஷ் K ர
1/7/2011 3:40:00 PM
என்ன கொடுமை சார் இது !!!!
By எ.Baskaran
1/7/2011 3:30:00 PM
nallavanurukku kaalam ille....
By ram,malaysia.
1/7/2011 3:17:00 PM
ஒரு முன்னாள் ஜனாதிபதி ,ஒரு சிறந்த விஞ்ஞானி ,மிகவும் எளிமையானவர் ,அவரை தமிழக அரசும் செம் மொழி மாநாட்டில் அழைப்பு விடுக்காமல் அவமான படுத்தினர் ,அதிகாரிகளும் இன்று சாப்பாட்டிற்கு அவரை காக்க வைத்து அவமானபடுத்தி விட்டார்கள் இதற்க்கு மு க பதில் சொல்லியை ஆகவேண்டும்
By Bulletmani
1/7/2011 3:16:00 PM
RIGHT THE PERSON TO AVOID IRRESPONSIBILITY MAINTENANCE.
By PARANJOTHI
1/7/2011 3:13:00 PM
ஒரு அறிவியல் அறிஞர் முன்னால் குடியரசுத்தலைவர் அவர்களுக்கு செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை தற்போது உரிய முறையில் விருந்தோம்பல் செய்யப்பட வில்லை கற்றோரை கற்றோரரே காமுறுவர்
By அ.அருமை நாதன்
1/7/2011 2:42:00 PM
குறித்த நேரத்திற்கு உணவு தராத பணியாளர் மேலாளர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
By சுப்பன்
1/7/2011 2:32:00 PM
முன்னால் ப்ரெசிடென்ட் க சோதனை சாதாரண மனிதனின் நிலைமை யோசிக்கணும்
By babu
1/7/2011 2:28:00 PM
Any job done by all Government employees (centre and state) will be like that only. Irony is, in this case, the affected party himself is/was a Government Servant at the top most rank.
By Subramanian
1/7/2011 2:26:00 PM
good man
By gk
1/7/2011 2:23:00 PM
இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது, திரு கலாம் நம் இந்திய நாட்டின் பொக்கிஷம். தமிழக ஆட்சியாளர்கள் இதை உணரவில்லை என்றால் உணரவைக்கபடுவர்கள் சீக்கிரம்.
By Dravidan
1/7/2011 2:14:00 PM
நாங்கெல்லாம் கருணாநிதி, அழகிரி, ஜெயா மற்றும் சசிகல இவங்கலக்குதான் பயப்படுவோம்..
By இந்தியன்
1/7/2011 2:10:00 PM
எனக்கு தெரிந்து இந்திய-வில் இருந்த ப்ரெசிடென்ட்-லேயே இவர் ஒருவர் சாகிரடை அரசியல் வாசனை கிட்ட போகாமல் இருந்தவர், இவரை மாதிரி ஒரு நல்ல மனிதனை பார்க்க முடியாது இந்திய-வில், அண்ணல் இந்த முறை சோனியா என்கிற நாதரை அவர் மீண்டும் பத்வைவ்யில் இருந்தால் நாம கொள்ளை அடிக்க முடியாது அண்ட் ராணுவ ரகசியம் எல்லாம் இத்தாலி-கு விற்க முடியாது என்று அவள் அவளை மாதிரி ஈமற்றுகிற ஒரு திருட்டு நாதரி லேடி-இ ப்ரெசிடென்ட் போஸ்ட்-கு நிற்க வைத்து இருக்கிறாள் அந்த ஓடு காலி சோனியா நாதரை, பார்த்து கொண்டே இருங்கள் இந்த சோனி-வும் அண்ட் ராவுல் வின்ஷி என்கிற ராகுல் -உம இந்திய-வி விற்று விற்று பொய் விடுவார்கள் kandippaga
By ramachandran
1/7/2011 2:00:00 PM
என்ன சொல்வது . நமது கடவுள் போன்றவருக்கு நேர்ந்த அவமரியாதை . சம்பந்தப்பட்ட நபர் தன்னையே ஏமாற்றியது போல்தான் இது . இந்த நாடு எப்போதுதான் திருந்துமோ . இது எல்லாம் திமுகா வாழ் வந்த வினை
By கிட்டுசாமி
1/7/2011 1:53:00 PM
If you are good and honest person , this is what you will receive in the current society. CM will be more happy. Because thats what he expect from every lazy Tamilian after eating his free food.
By siva
1/7/2011 1:34:00 PM
Its difficult to find such a great man in our country, this all should reflect in coming election,,
By ramesh
1/7/2011 1:09:00 PM
வாழ்வில் பல துன்பம் மற்றும் கஷ்டங்கள் கண்டவர் / கடந்தவர் , இது எல்லாம் அவருக்கு பிரச்சனை இல்லை சார் !!! இந்நிகழ்வு மதுரை வீரர்களுக்கு தான் இது களங்கம் தரும்.
By சையத் நாசிருதின்
1/7/2011 12:36:00 PM
இது அரசியல் சூழ்ச்சியா? அல்லது அதிகாரிகளின் கவனக்குறைவா? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். வெட்கம் வெட்கம் வருத்தத்துடன்.
By தஞ்சை ராஜு
1/7/2011 12:17:00 PM
இது முதன்முறையல்லவே. இதுபோல் பல இடங்களில் பல முறை ஆளும்வர்க்கம் அவரை அவமானப் படுத்தியுள்ளது. ஏனென்றால், அவரது நேர்மையும், தேசப் பற்றும் இவர்களை உறுத்துகிறது. அவர் கொள்ளையர்களுக்கு துணை போவதில்லை என்பது இவர்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று. இன்னும் என்னென்ன கேவலங்களை அரங்கேற்றப் போகிறார்களோ?
By Murugadoss
1/7/2011 12:01:00 PM
அவர் இதனை எல்லாம் பெரிதுபடுத்த மாட்டார். ஆனாலும் இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாதவாறு கவனமுடன் செயல்படவேண்டும்
By deena
1/7/2011 11:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *