அடச்சே! இதற்குத்தானா இந்த அலபபறை எல்லாம். ஏதோ கூட்டரசு அமைப்பில் தேசிய மொழிகளுக்கான சமஉரிமை கேட்டுப் போராடி வெற்றி காண்பார் என்றால் காதில் பூ சுற்றுகிறாரே! உண்மை இதுதான் என்றால் தொடக்கத்தில் இவரது கருத்தைப் பிறர் வரவேற்ற பொழுது இவரது கருத்தை ஏற்குமாறு குமரி அனந்தன் அவர்கள் நாடாளுமன்ற அவைத்தலைவருக்கு மடல் எழுதியதாகச் செய்தி வந்த பொழுது மறுத்திருக்கலாமே! பகுத்தறிவுடன் சிந்தித்தால் கோரிக்கை தவறாகிறதே! ஏன் எனில் நாடாளுமன்றங்களில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசலாம் என்னும் பொழுது இவர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலப் பேச்சு புரியும். எனவே, இந்தி அல்லது ஆங்கில மொழி பெயர்ப்பு போதுமானது. பிற மொழிகளில் பேச உரிமை இல்லாத பொழுது பிற மொழிகளுக்கான மொழி பெயர்ப்பு தேவைப்படவில்லை. அஞ்சாநெஞ்சன் பெயரை வைத்துக் கொண்டு அஞ்சும் நெஞ்சனாகத் தடம் புரளுவது வேதனையாக உள்ளது. தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தவரின் மைந்தன் தமிழுரிமை காக்கத் துணிவார் எனக் கருதியது தவறு போலும்.மத்திய அமைச்சராக இருந்தும் மதுரை மண்டலத்தில் மட்டும் வலம் வந்துகொண்டிருப்பவரிடம் தமிழ்த் தேசிய உரிமையைக் காப்பார் என
2/6/2010 10:05:00 AM