வெள்ளி, 18 டிசம்பர், 2020

தமிழ்க்கூடல், 22.12.2020

 அகரமுதல

உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரை

மார்கழி 07, 2051 செவ்வாய் 22.12.2020

முற்பகல் 11.00

உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை

கூடலுரை :

‘திருக்குறளும் திருவள்ளுவமாலையும்’ : முனைவர் மு. அருணகிரி

‘புதுநெறி காட்டிய புலவன்’ :

முனைவர் கோ.இரேவதி சுப்புலட்சுமி 


குவிகம் மின்னிதழ் – ஓர் அலசல், 20.12.2020

 அகரமுதல

மார்கழி 05, 2051 ஞாயிறு 20.12.2020

மாலை 6.30

குவிகம் அளவளாவல்

குவிகம் மின்னிதழ் -ஓர் அலசல்

கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்கோடு / Passcode: kuvikam123   

 நிகழ்வில் இணைய:

https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்

 திங்கள், 14 டிசம்பர், 2020

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், தை 2052

 அகரமுதல
தமிழ்க்காப்புக் கழகம்

தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன.

தமிழ் முதலிய தேசிய மொழிகள் நசுக்கப்படுவதால்,  தேசிய மொழியினர் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தித் தேசிய மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடவேண்டும்.  இதற்கிணங்கத் தமிழ்க்காப்புக்கழகம் தேசியமொழிகள் பாதுகாப்பு இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை வரும் தைத்திங்களில்(2052) நடத்த உள்ளது. நாள் முதலான விவரங்கள் பதிவாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப முடிவெடுத்துப் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் தமிழ்மொழியுடன் தத்தம் மாநிலத் தேசிய மொழிகளுக்கு இந்தி, சமற்கிருதத்திணிப்பால் ஏற்படும் அழிவுகளைக் குறிப்பிட்டுக் கட்டுரைகள் அளிக்க வேண்டுகிறோம். பிற நாட்டினரும் இதேபோல் தேசிய மொழிகள் உரிமைக் காப்பு குறித்த கட்டுரையை அனுப்பி வைக்கலாம்.

அகரமுதல மின்னிதழுக்குக் கட்டுரை அளிக்க விரும்புபவர்கள்/ பார்வையளார்களாகப் பங்கேற்க விரும்புபவர்கள், தத்தம், பெயர், மின்வரி, பேசி எண் முதலிய விவரங்களை உடள் 

thamizh.kazhakam@gmail.com

என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

கட்டுரை ஒவ்வொன்றும் பத்து நிமையம் வாசிக்கப்படும் அளவில் இருக்க வேண்டும்.

கட்டுரைகள் தமிழில் இருக்க வேண்டும்.

பிற மொழிச்சொற்களைத் தவிர்த்து எழுத வேண்டுகிறோம்.

கட்டுரைகள் அகரமுதல மின்னிதழில் <www.akaramuthala.in    > வெளியிடப்படும். எனினும்,  பத்து நிமையத்திற்கு மேல் அமையக்கூடிய் விரிவான கட்டுரைகளையும் அகரமுதல மின்னிதழுக்கு அனுப்பி வைக்கலாம். அஃதாவது பேசுவதற்குக் கால வரம்பு உள்ளது. இதழில் வெளியிடப் பக்க வரம்பு இல்லை.

கட்டுரைகளை,  தை 1, 2052 / 14.01.2021 ஆம் நாளுக்குள் மேற்குறித்த

thamizh.kazhakam@gmail.com

மின்வரிக்குக் கட்டுரையாளர் குறிப்புரை, ஒளிப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம். யும்thamizh.kazhakam@gmail.com

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்  thiru2050@gmail.com